Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கனல்விழி காதல் - 20

Share Us On


Readers Comments

Recent Updates

கனல்விழி காதல் – 47

அத்தியாயம் – 47

மணமக்களை பற்றியும் திருமணத்திற்கு வந்திருந்த ஸ்மார்ட்டான இளங்காளைகளை பற்றியும் கதைகதையாகப் பேசிக் கொண்டிருந்த சுமி மதுராவின் பெரியம்மாள் மகள். அவளை சுற்றி அமர்ந்திருந்த மூன்று பெண்களில் மதுராவை தவிர மற்ற இருவரும் அவளுடைய மாமன் மகள்கள். சிறு வயதிலிருந்தே நால்வரும் நெருக்கமான தோழிகள். அவர்களோடு கழிக்கும் நேரம் எப்பொழுதுமே சிறப்பானது என்று எண்ணுவாள் மதுரா. ஊர் கதையெல்லாம் பேசி சிரித்து ஓய்ந்த பிறகு பேச்சின் திசை மதுராவிடம் திரும்பியது.

 

“அப்புறம்… தேவ் பாய் எப்படி…? கல்யாணத்துக்கு வரவே மாட்டேன்னு இருந்தாராம். எப்படிடீ கூட்டிட்டு வந்த” – சுமி.

 

“வந்தது மட்டும் இல்லடி. சாயங்காலம் வரைக்கும் இருந்துட்டுதான் போனாரு கவனிச்சியா?” – சக்தி.

 

“கவனிச்சேன்… கவனிச்சேன்… நம்ம மது ஃபுல் கண்ட்ரோல்ல வச்சிருக்காடி…” – சுமி.

 

“ஹேய்… யாரு… யாரை கண்ட்ரோல்ல வச்சிருக்காது! நீ வேற… ஹி இஸ் எ மான்ஸ்டர்…” – அசுரன் என்று சொல்லும் போதே அவள் முகம் பூரிப்பில் மலர்ந்தது.

 

“ஹோய் டோலி… யார்கிட்ட காதுகுத்தற… எங்களுக்கு தெரியும். நீ ஸ்டேஜ்லேருந்து நூல் விட்டது அவர் கீழேருந்து பட்டம் விட்டது எல்லாத்தையும் நாங்க கவனிச்சோம். சுமி… யு நோ… மண்டபத்துல செம்ம லவ் சீன் போயிட்டிருந்தது” – அபி.

 

“அட கடவுளே! நா திலீப் பாயை ஓட்டறதுல… இந்த மேட்டரை கவனிக்காம விட்டுட்டேனே… என்ன நடந்துச்சு சொல்லு சொல்லு…” – சுமி ஆர்வமாக கேட்க, நடந்ததோடு நடக்காத சில கிளுகிளுகளையும் இட்டுக்கட்டி கூறினாள் அபி.

 

“அடிப்பாவி…! எந்த சினிமாவை பார்த்துட்டு வந்து இதெல்லாம் பேசிகிட்டு இருக்க நீ?” – முகம் சிவக்க தோழியை நறுக்கென்று கிள்ளினாள்.

 

“ஆவ்… எல்லாம் நீங்க ஒட்டின சினிமாவை பார்த்துட்டுதான் பேசறேன்” – வம்பிழுத்தாள் அபி. மூவரும் சேர்த்துக் கொண்டு அவளை கிண்டலடிக்க, அடிக்கடி வெடித்தெழுந்த சிரிப்பொலி வெளியே உறங்கி கொண்டிருக்கும் பெரியவர்களின் உறக்கத்திற்கு இடையூறு செய்தது.

 

“பொண்ணுங்களா… இன்னும் என்ன சத்தம்… பேசாம தூங்குங்க…”- கணவரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு படுக்கைக்கு வந்த பிரபாவதி போகிற போக்கில் மகளின் அறையை எட்டிப்பார்த்து எச்சரித்துவிட்டுச் சென்றாள்.

 

தோழிகளோடு கொண்டாட்டம் போட்டுவிட்டு படுக்கையில் சாய்ந்த மதுராவை தேவ்ராஜின் நினைவு உறங்கவிட மறுத்தது.

 

‘இந்நேரம் என்ன பண்ணிட்டு இருப்பான்! தூங்கியிருப்பானா! நம்ம வரலன்னு ஆண்ட்டி சொன்னதும் என்ன சொல்லியிருப்பான்! திட்டியிருப்பானோ! ம்க்கும்… தொல்லை விட்டதுன்னு ஜாலியா தூங்கியிருப்பான்…’ – பைத்தியம் போல் ஏதேதோ யோசித்தபடி விழிமூடாமல் கிடந்தாள்.

 

“என்ன மது… தூக்கம் வரலையா? மான்ஸ்டர் மேன் டிஸ்டர்ப் பண்ணறாரா?” – மீண்டும் வம்பிழுத்தாள் சுமி.

 

“ஹேய்… பேசாம படுடீ… அம்மா திரும்ப வந்துட போறாங்க”

 

“உனக்கு ஏன் தூங்க முடியல? அதை சொல்லு முதல்ல…”

 

“நீ மட்டும் தூங்கீட்டியா?”

 

“நா தூங்கீட்டா உன்ன யாரு வேவு பார்க்கறது”

 

“கடவுளே!”

 

“இந்த நேரத்துல அவரை ஏன் டிஸ்டர்ப் பண்ணற? மான்ஸ்டர் மேன் உன்ன என்ன டிஸ்டர்ப் பண்ணினாரு? அதை சொல்லு…”

 

“அதெல்லாம் உனக்கு கல்யாணம் ஆகும் போது தானா தெரிஞ்சுக்குவ. இப்போ தூங்கு” – பட்டென்று மதுரா சொன்னதும் களுக்கென்று மீண்டும் ஒரு சிரிப்பொலி அறையை நிறைத்தது.

 

மதுராவிற்கு தேவ்ராஜிடம் பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால் இந்த சைத்தான்களுக்கு நேராக பேசினால் அவ்வளவுதான். சும்மாவே ஓட்டித் தள்ளுகிறவர்கள், இந்த நேரத்தில் அவனோடு பேசுவதை பார்த்துவிட்டால் விடமாட்டார்கள் என்று நினைத்து அமைதியாக உறங்குவது போல் படுத்திருந்தாள். ஒரு மணிநேரத்திற்கு பிறகு அவர்களெல்லாம் நன்றாக உறங்கிவிட்டார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகு மெதுவாக எழுந்து தன்னுடைய அலைபேசியை தேடி எடுத்து பார்த்தவள் அதிர்ந்து போனாள். பத்துமுறை அவனுடைய அழைப்புகள் தவறிப் போயிருந்தன.

 

‘கடவுளே!’ – மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு, எப்போது அழைத்திருக்கிறான் என்று பார்த்தாள். ஒன்பது மணிக்கு அழைத்திருந்தான். இப்போது மணி இரண்டு… ‘தூங்கியிருப்பானா! கூப்பிட்டு பார்க்கலாமா… வேண்டாம் வேண்டாம்… தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணின மாதிரி ஆயிடும்… ஒருவேளை முழிச்சிருந்தா! இந்த நேரத்துல எப்படி முழிச்சிருப்பான்…’ – யோசனை பல திசைகளில் ஓடியது.

 

“மதூஊ… மான்ஸ்டருக்கு போன் பண்ணலாம்னு யோசிக்கிறியா?” – போர்வைக்குள்ளேயிருந்து ராகம் போட்டாள் சுமி. ‘வாட் த ஹெல்…!’ – திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மதுரா. ‘இது இன்னும் தூங்கலையா!’ – “என்னடீ?” – எரிச்சலுடன் கேட்டாள்.

 

“போன் கைல வச்சிருக்க! யாருக்கு…” – பல்லை இளித்துக் கொண்டு புருவம் உயர்த்தினாள்.

 

“மணி பார்த்தேண்டி…”

 

“நம்பிட்டேன்…”

 

“நம்பாத… ஹும்…” என்று முகத்தை திருப்பி பழிப்புக்காட்டியவள் அலைபேசியை ஓரம்கட்டுவிட்டு படுக்கையில் வந்து சாய்ந்தாள். இரவெல்லாம் அவன் நினைவில் வாடி வதங்கிவிட்டு காலையில் தாமதமாகத்தான் கண்விழித்தாள். எழுந்ததும் முதல் வேலையாக அலைபேசியை எடுத்து அவனை அழைத்தாள். அவன் எடுக்கவில்லை.

 

அடுத்து வந்த இரண்டு நாட்களும் பெண் வீட்டு மாப்பிள்ளை வீட்டு விருந்தில் பிஸியாக இருந்த மதுரா பலமுறை கணவனுக்கு தொடர்புகொள்ள முயன்றாள். அவன் போனை எடுக்கவே இல்லை. விருந்திற்கு வந்திருந்த இராஜேஸ்வரியிடம் பேச்சுக் கொடுத்துக் கேட்டு பார்த்தாள். திருப்திகரமாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. முதல்நாள் சற்று இயல்பாக தான் இருந்தாள். ஆனால் இரண்டாம் நாள் அவளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவனோடு பேச முடியவில்லை என்பது ஒரு பக்கம் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது.

 

விழாவில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. தோழிகளோடு சந்தோஷமாக சிரித்துக் களிக்க முடியவில்லை. பெரிய மனஉளைச்சலோடுதான் அன்றைய நாளை கடத்தினாள். எப்போதடா இந்த விருந்தெல்லாம் முடியும் வீட்டிற்கு போய் சேரலாம் என்று காத்துக் கொண்டிருந்து அன்று இரவே கிளம்பினாள். ‘நாளைக்கு போகலாம்’ என்று பிரபாவதி எவ்வளவோ வற்புருத்திப் பார்த்தாள். நாங்களெல்லாம் இருக்கிறோம்! நீ மட்டும் போகிறாய் என்று தோழிகளும் பிடிவாதம் செய்து பார்த்தார்கள். முடியவே முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் மதுரா.

 

இரண்டு நாட்களாக அவனிடம் பேசக் கூட முடியவில்லை… என்ன மனநிலையில் இருக்கிறானோ என்பது ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் அவனை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம்தான் அவளை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததும் ஹாலில் இருந்த இராஜேஸ்வரியிடம் ஒப்புக்கு இரண்டு வார்த்தை பேசிவிட்டு ஆசையாக மாடிக்கு ஓடிவந்தாள். திட்டினால்… இரண்டு திட்டு திட்டிவிட்டு போகட்டும். வாங்கிக்கொள்வோம் என்கிற மனநிலையில் அறைக்குள் நுழைந்தவள் அவனை காணாமல் ஏமார்ந்து போனாள்.

 

‘எங்க போய்ட்டான்!’ – டெரஸ், கிளோஸ்ட், குளியலறை என்று அனைத்து இடங்களிலும் அலசிப் பார்த்துவிட்டு அலுப்புடன் வந்து மெத்தையில் அமர்ந்தாள்.

 

‘ப்ச்… எங்க போயிருப்பான்! வெளியே எங்கேயும் போயிட்டானா! இந்த நேரத்துல எங்க போயிருப்பான்!’ – யோசனையுடன் கைபேசியை எடுத்து அவனுடைய எண்ணை அழுத்திவிட்டு காத்திருந்தாள். வழக்கம் போல் அவன் எடுக்கவில்லை.

 

*********************

 

காத்திருத்தல் சுகமென்று எவன் சொன்னான்! அது எவ்வளவு பெரிய கொடூரம் என்று தேவ்ராஜிடம் கேட்டால் கதைக்கதையாக சொல்வான். இரண்டு நாட்களாகிவிட்டது அவளை பார்த்து. திருமணத்திற்கு போனவள் அப்படியே தங்கிவிட்டாள். நினைத்தாலே இரத்த அழுத்தம் சல்லென்று ஏறுகிறது. இருக்கட்டும்… எத்தனைநாள் அங்கேயே இருப்பாள்! எப்போது வரவேண்டும் என்று தோன்றுகிறதோ வரட்டும். – எரிச்சலுடன் கையிலிருந்த அலைபேசியை மேஜையில் விட்டெறிந்துவிட்டு, சூழல் நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி, தலையை அழுந்த கோதினான்.

 

‘போனோமா… வந்தோமான்னு இல்லாம, அங்க போயி டேரா போட்டுட்டு இப்ப எதுக்கு போன் பண்ணறா?’ – பற்களை நறநறத்தான்.

 

“சார்… இன்னைக்கு செடியூல்டு ஒர்க் எல்லாம் முடிஞ்சிடிச்சு. இனி மீட்டிங் கூட எதுவும் இல்ல. நாளைக்கு என்ன செடியூல்ங்கறதையும் வெரிஃபை பண்ணியாச்சு” – ரஹீமின் குரல் அவனுடைய சிந்தனையில் இடையிட்டது.

 

“சோ?”

 

“டைம் ஆச்சு சார்…” – அவன் தயக்கத்துடன் கூற, தேவராஜ் கடிகாரத்தை பார்த்தான். “ஓ…! ஒன்பது மணி ஆச்சா! சரி நீ கெளம்பு…”

 

“சார் நீங்க?” – ‘நானா! வீட்டுக்கு போயி என்ன செய்ய போறோம்’ – யோசித்தான். எதுவுமே இல்லாதது போல் தோன்றியது.

 

“ப்ச்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நா பார்த்துக்கறேன். நீ கிளம்பு” – வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை அவனுக்கு. முடிந்த அளவிற்கு அலுவலகத்திலேயே நேரத்தைக் கடத்திட்டு நள்ளிரவில்தான் புறப்பட்டான்.

 

 

கனல்விழி காதல் - 46
கனல்விழி காதல்- 48
Leave a Reply

14 Comments on "கனல்விழி காதல் – 47"

avatar
  Subscribe  
newest oldest most voted
Notify of
Riy Raj
Member

சும்மாவே சாமியாடுவான்….. இப்ப கேக்வே வேணாம்…… வந்து எப்படியெல்லாம் ரிவன்ஞ் எடுப்பானோ….. பேசியே கொல்ற தேவ் பாய் பேசாம கொல்ல திட்டமிருக்கா…??????

Member

When can I read the next episode I just joined recently so far read 16 episodes very interesting

Meena PT
Editor

மதுரா வந்ததை சந்தோசமாக/சண்டையாக எதிர்க்கொள்வானா?

Pon Mariammal Chelladurai
Member

திக்..திக்..எபியா…ன்னு பயந்துட்டே படிக்கிறேன். எப்ப இராட்ச்சன் வருவானோ?

Thadsayani Aravinthan
Member

Hi mam

இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் காணவேண்டுமென்று ஆர்வத்துடன் இருக்கின்றனர்,ஆனால் இந்த காத்திருப்பின் பலன் சந்தோசத்தில் முடியுமா சண்டையில் முடியுமா,தேவ் பற்றி தேவ்வுக்கே ஒரு முடிவுக்கு வரமுடியல்ல இதில் நாங்கள் எம்மாத்திரம்,எதற்கும் மதுரா காதில் பஞ்சடைத்து வைத்திருந்தால் நன்று என்று தோன்றுகின்றது ,தேவ்வின் நடவடிக்கையை பார்த்தபின் அதனை எடுத்துக்கொள்ளலாம்,வேறு என்னதான் செய்ய முடியும் ஆ ஊ என்றால் திட்டும் புருசனை வைத்துக்கொண்டு.

நன்றி

vijaya muthukrishnan
Member

very very super update, eagerly waiting for your next ud

ugina begum
Member

ha ha nice epi sis

Kayalvizhi Ravi
Member

காத்துயிருப்பின் பயன் காதலா? ஊடலா?

Guest
admin
Admin

enna pa issue… Login pannina padikkalaam…

Guest

sis ennala ulla pooi padikkave mudiyala

Mercy Aruna
Member

Acho Mathu nee innaiku avlo than

Hadijha Khaliq
Member

காத்திருப்பின் கொடுரத்தை அனுபவச்சுட்டு சந்திக்கும் தேவ் என்ன செய்வான்?

Member

Achcho madhu romba aasaiya vanthu itukka monster ah pakka … Dev kathal mannana varuvana illa. Monster ah vaa

error: Content is protected !!