Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Kutram

Share Us On


Readers Comments

Recent Updates

குற்றப்பரிகாரம் – 19

அத்தியாயம் – 19

காலை பரபரப்பாக கல்லூரி இயங்கிக் கொண்டிருந்த நேரம். சுடலையின் சம்பவம் நடந்த மறுநாள்…

“தி க்வாண்டம் தியரி இஸ், டிபைண்ட் பை…

 

” ஒரு நிமிஷம் ப்ரொபஸர்”

அருணின் கணீர் குரல் எல்லோரையும் திரும்பிப் பாக்க வைத்தது. அவன் பேசிய தோரணையே பாடத்திற்கும், விஷயத்திற்கும் சம்பந்தமில்லை எனக் கூறாமல், கூறியது.

 

“எல்லாரும் என்னை மன்னிக்கனும். மதிப்பு வாய்ந்த பாட நேரத்தை, நான் எடுத்துக்கறது தப்புதான். எனக்கு வேற வழி தெரியல. எல்லாரும் அந்த சுடலைப் பையன் உக்காந்திருந்த இடத்தைப் பாருங்க. உங்களுக்கு உறுத்தல. எத்தனை நாளைக்குத்தான் பணத்திற்கும், அராஜகத்திற்கும் பயப்படப் போறீங்க. இன்னிக்கு சுடலைக்கு நடந்தது, நாளைக்கு நம்மள்ல ஒருத்தர்க்கு நடக்காதுன்னு என்ன நிச்சயம்.

 

லேடீஸ், கொஞ்சம் நினைச்சுப் பாருங்க! நடந்ததை வெளிய சொன்னா, சுடலையோட தங்கையை ஆஸிட்ல குளிப்பாட்டுவேன்னு மிரட்றான். ஒரு நொடி  அது உங்களுக்கே நடக்கறதா நெனச்சுப் பாருங்க! இங்க இருக்கிற புரபசர்சுக்கு கூட நான் சொல்றதோட ஞாயம் புரியும். ஏன் இப்படி மௌனமா இருக்கீங்க. நாம எதிர்ப்ப காட்டாம, அடங்கிப் போக அடங்கிப் போக இன்னும் எத்தனை சுடலைகள் – வசந்திகள் பாதிக்கப் படுவாங்களோ!

 

நான் நடந்தவைகளை கம்ப்ளைண்டா எழுதி போலீஸ்கிட்ட கொடுக்கப் போறேன். யார் யார் எனக்கு கை கொடுக்கனும்னு நினைக்கிறீங்களோ, அவங்க தாராளமா, என் பின்னாடி வரலாம். வரலைனாலும் நான் கவலைப் பட போறதில்ல. என் ஒருவனுக்காவது கொஞ்சமாவது சுரனை இருக்குனு நான் சந்தோஷப் பட்டுக்கறேன். என்ன ஒன்னு, தனியா, நான் மட்டும் கம்ப்ளைண்ட் கொடுத்தா, போலீஸையும் விலைக்கு வாங்கி, அவங்கள வச்சே, என்ன லாடம் கட்டுவான்., பட் ஐ டோண்ட் கேர்”  என்றவன் விறு விறுவென எழுந்து போனான்.

 

காட்டுத் தீ போல, இது கல்லூரியில் பரவியது. ஜலாலுக்கும் சேர்த்து. உள்ளுக்குள் பொறுமினாலும், வெளியே அசட்டையைக் காட்டினான் ஜலால்.

 

கிட்டத்தட்ட மொத்த காலேஜூம் காவல் நிலையம் வந்ததைப் பார்த்து மிரண்டு விட்டார் இன்ஸ்பெக்டர்.

வேறு வழியே இல்லாமல், கல்லூரிக்கே சென்று ஜலாலைக் கைது செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தது. ஜலாலின் தந்தையும் ஒன்றுமே சொல்லாமல், மாணவர்கள் முன் நல்லவன் வேஷம் போட்டது, இன்ஸ்பெக்டருக்கே அதிசயமாய் இருந்தது.

 

அதைவிட உலக அதிசயமாய், ஜலால் ஒரு சிறு எதிர்ப்பைக் கூட காட்டவில்லை. குறைந்த பட்சம் வெறுப்பைக் கூட முகத்தில் காட்டவில்லை. லோக்கல் அரசியல்வாதி போல, சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறினான்.  எல்லாவற்றிர்க்கும், சிகரம் வைத்தது போல..

 

“ப்ரெண்ட்ஸ்… என்னை எல்லாரும் மன்னிச்சுக்கங்க. ஆத்திரம் என் கண்ணை மறைச்சுருச்சு! அநியாயமா, ஒரு நண்பனுக்கு கெடுதல் பண்ணிட்டேன். இதோட பழைய ஜலால் செத்துட்டான். இனிமே வேற ஒரு புது ஜலாலைத்தான் நீங்க பாக்கப் போறீங்க!” என சொல்லியபடி ஜீப்பில் ஏறியதுதான் ஹைலைட்டே!

 

கல்லூரியில் எல்லோரும் அருணை ஒரு ஹீரோ ரேன்ஜுக்கு புகழ்ந்தார்கள். ப்ரியாவிற்கு ஏக சந்தோஷம். கூட்டம் கலைந்து எல்லோரும் க்ளாஸுக்கு போக தொடங்கியதும் தான் மட்டும், அப்படியே பிஎஸ்சி செகண்ட் இயர் க்ளாஸ்லருந்து, எம்எஸ்சி க்ளாஸ்ல, அதுவும் அருண் பக்கத்தில் உட்கார்ந்து விட மாட்டோமா என்று ஒரே அவசரம். அவளுக்கு நன்றாக தெரிந்துவிட்டது, அவள் மனதில் அருண் புகுந்துவிட்டானென்று. அவன் மற்றவர்கள் போல் இல்லை. தன் பணத்திற்காகவும், அழகிற்காகவும் எத்தனையோ பேர் அவள் பின் சுற்றி இருக்கிறார்கள். இவ்வளவு ஏன், இதே ஜலாலே, அவளிடம் வம்பு செய்தான். தன் அப்பாவின் மூலமாக அவன் வாலை ஒட்ட நறுக்கிவிட்டாள் ப்ரியா. அவள் அப்பாவிற்கு,  சென்ட்ரல் மினிஸ்டர்ஸ் அளவிற்கு செல்வாக்கு உண்டு. ஆனால் அருண்! அன்று ஆஸ்பத்திரியில், பேசிய பிறகு அதையே சாக்காக வைத்து ஒரு முறைக் கூட அவளிடம் பேச முனைந்ததில்லை.

இதுவே, அவனை பிடிக்க பெரும் காரணமாகிப் போனது.

 

மொத்தக் கல்லூரியும் அருணையே பார்ப்பதாக இருந்தது. அய்யோ! இதுல எத்தனை பொண்ணுங்க அவனை

வலைக்குள்ள போட்டுக்க பாக்குமோ! அட!அப்ப நீ பன்றது என்னவாம் என்றது மனசு! ஹீரோனா   பொண்ணுங்க மடக்க நினைக்கிறது சகஜம்தானே! ச்சீ… மடக்கறது கிடக்கறதுனு அசிங்கமா பேசாத என் மனசே! அருணை உண்மைலையே நான் லவ் பண்ண தொடங்கியாச்சு! நீ தொடங்கிட்ட அவன்? இன்னிக்கு எப்படியாவது சொல்லிடனும்!

 

அருணின் பக்கத்துல ரெண்டு மூணு புரபசர்ஸ் செல்வது தெரிந்தது.

 

“அருண். நல்ல காரியம் செஞ்ச! பூனைக்கு யாராவது மணி கட்ட வரமாட்டாங்களானு காத்துக்கிட்டுருந்தோம்!

புரபசர்ஸா இருந்து இதை சொல்றதுக்கு எங்களுக்கே அசிங்கமா இருக்கு! என்ன செய்யறது வயித்துப் பொழப்புனு ஒன்னு இருக்கே! குடும்பம் குட்டினு ஆகிப்போச்சு. மீறி கேட்ட ரெண்டு மூணு புரபசர்ஸ வேலையவிட்டு அனுப்பிட்டாங்க!”

 

“அட! அதோட விட்டாலாவது பரவாயில்லை. அவங்க கையக்கால ஆளவச்சு உடைச்சுருக்காங்க!” என்றார் இன்னொருவர்.

 

“இந்த பாருப்பா எல்லார் சார்பாவும் நன்றி சொல்லவும், உன்னைப் பாராட்டவும் மட்டும் நாங்க வரல. எதோ பார்மலிட்டிக்காக நாங்க வந்தோம்னு நினைச்சுராத.இனி நீ எங்க பிள்ளை மாதிரி. நீ இந்த கல்லூரிக்கு புதுசு.

அதனால சொல்றோம்! எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இரு! நீ மட்டுமில்ல, அந்த வசந்தி பொண்ணையும் ஜாக்ரதையா இருக்க சொல்லு” என்று ஆதங்கத்தை தெரியப் படுத்திவிட்டு சென்றனர். யோசனையிலேயே நின்றிருந்த அருணை ப்ரியாவின் குரல் கலைத்தது!

 

“என்ன ஹீரோ சார், பயங்கர பிஸி போல”

 

“வா ப்ரியா. அதெல்லாம் ஒன்னும் இல்ல. புரபசர்ஸ் வார்ன் பண்ணாங்க அவ்ளோதான். நீ க்ளாஸுக்கு போகலையா”

 

“போனும்! சும்மா உங்களப் பார்த்துட்டு போகலாம்னு! த்ரீ அவர்ஸ் கழிச்சு ப்ரீதான். லைப்ரரி போகனும். உங்களுக்கு அங்க எதாவது வொர்க் இருக்கா, வருவீங்களா?

 

” இல்ல! நேத்துதான் புக்ஸ் எடுத்தேன்”

 

இப்போ எதற்கு இதை அவனிடம் சொன்னோம். சொன்ன வினாடிவரை அந்த எண்ணம் நமக்கே இல்லையே! வரவர உளற ஆரம்பிச்சுட்டோம். ஆனா லைப்ரரிக்கு கண்டிப்பா போகனும். வேலை இல்லை என்றாலும் வருவானா ? வந்தால்… அதுதான்!!!

குற்றப்பரிகாரம் - 18
குற்றப்பரிகாரம் - 20
Leave a Reply

Be the First to Comment!

avatar
  Subscribe  
Notify of
error: Content is protected !!