Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 24

அத்தியாயம் – 24

அந்த பிரம்மாண்டமான, பலநூறு ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்த எஸ்டேட். பச்சை பசேலென்று கிடந்த டீ செடிகளும், குட்டி குட்டி மரங்களும் இயற்கை நம்மீது இன்னமும் இரக்கம் வைத்துள்ளதைக் காட்டியது.

 

வளைந்து வளைந்து செல்லும் பாதையில், அந்த வெள்ளை நிற ஸ்கார்பியோ வந்து கொண்டிருந்தது.

மூன்றாவது பூச்செடி வைப்பதற்கு குழித் தோண்டிக் கொண்டிருந்த சுலைமான், வண்டியைப் பார்த்தபடி சொன்னார்…

 

“என்ன ரெட்டி! புதுசா வேலைக்கு ஆள் வருது போலருக்கு”

 

மண், சாணி, உரமண் எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து கொண்டிருந்த ரெட்டி கடுப்பாய் சொன்னார்…

 

” யோவ்… நம்ம பொளப்பே இங்க நாறுது. எவன் வந்தா என்ன?”

 

“அலுத்துக்காத ரெட்டி அங்க பாரு ரஹீம! பரம்பரை மரம் வெட்டி மாதிரி விறக பொளக்கறாரு”

 

“சே! நம்ம நிலமை இப்படி ஆகும்னு கனவுலயாவது நெனச்சுருப்பமா? பேசாம செத்தே போயிருக்கலாம்”

 

“நமக்காவது காத்தோட்டமா இங்க வேலை. அங்க அறிவும் மாணிக்கமும் என்ன கஷ்ட  படறாங்களோ”

 

“ஆமாய்யா, அவங்க தப்பிக்க பாத்துருக்காங்க. எப்பேற்பட்ட ஆளுங்க நாம. நம்மள இந்த அளவுக்கு கொண்டுவந்து வேல வாங்கறான்னா அவன் எத்தனை உஷாரா ப்ளான் பண்ணியிருப்பான். அறிவு கட்சி தாவுற மாதிரி ஈஸினு நினைச்சுட்டாரு. இங்க பாத்த  எந்த மனுசனும் நம்ம கூட ஒரு வார்த்த கூட பேச மாட்டேங்கறான்னா! இவங்களல்லாம் கட்டி மேய்க்கிற ஆள் எவ்வளவு புத்திசாலியா இருப்பான். அது தெரியாம, ரெண்டும் தப்பிக்க நினச்சு டீ பாக்டறில சூட்டுல காயுதுங்க”

 

“அதான் நமக்கு வேல கொடுத்தவன் சொன்னானே! தப்பிக்க முயற்சி பண்ணாத வரை காத்தோட்டமா, தோட்ட வேல பாக்கலாம். இல்லனா சூட்லதான் காயனும்,

ஜாக்கிரதைனு”

 

“சரி சரி வண்டி கிட்ட வருது! வேலையப்பாரு. எத்தன டிமிக்கி கொடுத்தாலும் முடிச்சாதான் சோறு”

 

“நம்ம நிலமைய பாத்தியாயா! ஏன்டா பாவம் பண்ணோம்னு தோணுது”

 

“ஆனா, ஒன்னு கவனிச்சியா, நம்மை மாதிரி சிலபல கேஸுங்க இருக்கு! ஆனா வேற மாநிலம் போல!”

 

“போய்யா! நீயே இப்ப எங்க இருக்கனு உனக்குத் தெரியாது. யார் உங்கிட்ட பேசினா? எங்கப் பாத்தாலும் பச்சை பசேல்னு, ஒரு பில்டிங் கூட கண்ணுக்கு தெரியல! காட்டுல வந்து விட்டாப்ல இருக்கு!”

 

“என்னய்யா பயமுறுத்தற… சரி சரி விடு.. ஆள் வரான்”

 

“என்ன போலீஸ்கார் வேலைலாம் ஜரூரா செய்றீங்களா? நீங்க டிப்பார்ட்மெண்ட்ல இருக்கும்போது கைதிங்களுக்கு கொடுத்த வேலைதான்.

நல்ல விஷயந்தான்! என்ன சொல்றாரு ரெட்டி, புலம்பறாரா?

 

“இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்”

 

“வரட்டும் வரும்போது பாத்துக்கலாம். ஏன் இப்படி வச்சுக்கங்களேன்! நீங்க பண்ண அட்டகாசங்களுக்கு, கொள்ளைங்களுக்கு இதை பதில் சொல்ற காலமா வச்சுக்கலாமே!”

 

என்ன சொல்வதென்றே ஒருவருக்கும் புரியவில்லை. அவன் பக்கத்தில் நின்றிருந்த

வக்கீல் மட்டும் சுலைமானை உற்று உற்று பார்த்துவிட்டு சொன்னார்…

 

“உங்களை மாதிரியே சென்னைல ஒரு போலீஸ் அதிகாரியைப் பாத்துருக்கேன். ஆனா இப்ப அவர் போஸ்ட்ல இல்ல”

 

“நாந்தாய்யா அது” னு வடிவேலு குரலில் சொன்னார் சுலைமான்.

 

“என்ன நடக்குது இங்க! அப்படீனா இவங்கள்லாம்… தொடர விடாமல்  இவர்களைக் கூட்டி வந்தவன் சொன்னான்…

 

” வக்கீல் சார் இங்க வந்துட்டீங்கள்ல. போங்க ஜோதில ஐக்கியமாகுங்க! நிதானமா போலீஸ் சார் உங்களுக்கு க்ளாஸ் எடுப்பாரு” என்று வாசுவையும், இவர்களுடனே அழைத்துவந்த, பாண்டிச்சேரி கோர்ட்டில் ஜாமீன் வாங்கிய ரௌடிகள் இருவரையும், அவருடன் சேர்த்து ஜோதியில்  தள்ளினான்.

 

“பேசக் கூடாதுனு சொல்லல. பேச்சுனால வேல கெடக் கூடாது. பேசிக்கிட்டே வேலை செய்யனும். வேலை செஞ்சுக்கிட்டே பேசனும்” என்று திரும்பப் போனவனை ரெட்டியின் குரல் தடுத்தது….

 

” ஒரு நிமிஷம். நான் சுகர் பேஷண்ட்….

 

“சூ… ஷட் அப். சுகர் பேஷண்ட், ப்ரெஷர் பேஷண்ட் எல்லாம் எங்களுக்குத் தெரியும். நாங்க என்ன உங்களை அடிமையாவா வச்சுருக்கோம். உங்களுக்கு செக்கப் நடக்கறதில்ல! தேவையான மெடிசன் தர்றது இல்ல! சத்தான சாப்பாடு தர்றதில்ல! வெளில இருந்ததுக்கும் இங்க இருக்கறதுக்கும் ஒரே வித்யாசம். அங்க நீங்க ஊர்காசுல அனுபவிச்ச வசதி கிடையாது. பஞ்சுமெத்த, பாட்டில் ட்ரிங்ஸ், வித விதமா பொண்ணுங்க, இதுதான் கிடையாது. போதும்! அனுபவிச்ச வரைப் போதும். இப்படியே இருங்க. உங்க ஆயுசு கூடும். சுருக்கமா சொன்னா நீங்க உள்ள இருந்தீங்கன்னா எப்படி இருப்பீங்களோ அப்படித்தான் இங்கையும். இன்னும் சொல்லப் போனா அதைவிட வசதி, இயற்கையான சூழல் அதை நெனச்சு சந்தோஷப்படுங்க” படபடவென பொறிந்துவிட்டு சென்றான்.

 

அவன் போனதும் வாசு வாயைத் தொறந்தான்…

” யோவ் (!) வக்கீலு ஏன்டா உன்னான்ட ஜாமீன் வாங்கச் சொன்னோம்னு மொத மொத தடவையா வருத்தப்படறேய்யா! நீ ஜொள்ளுவிட்டு காரை நிறுத்தப் போகும்போதே என் வாய்ல வந்துச்சு, ஏதோ வில்லங்கமா இருக்கப் போகுதுனு… இப்ப உன்னால, நானும் பட வேண்டியிருக்கு. பேசாம உள்ளயே இருந்திருக்கலாம். தண்ணி, கஞ்சானு சகல சௌகர்யத்தோட இருந்திருக்கலாம்…

 

ரப்…. ஒரே அறை…

சுலைமான்தான் அறைந்தார்…

“நாயே, உங்களுக்கெல்லாம் அந்தமாதிரி வசதி கிடைச்சும் கண்டுக்காம இருந்த பாவத்தை செஞ்சதாலத்தான், நான் இந்த நிலமைல இருக்கேன்”

 

“போடுங்க சார் இன்னும்

சார் சார்னு குழைஞ்சவன் யோவ் வக்கீலுங்கறான்… எல்லாம் நேரம்”

 

அதேக் கோபத்துடன் வக்கீலை சுட்டெரிப்பது போல பார்த்தார் சுலைமான்…

” யோவ் வக்கீல்… வாய மூடு. இங்க வந்துட்டல்ல இனிமே நாங்க நினைக்கிற மாதிரி எண்ணம் உனக்கே வரும். என்னைப் பாத்ருக்கேன்னுதான் நீ சொன்ன. ஆனா நீ யாரு எப்படீனு எனக்கு நல்லாவேத் தெரியும். போலீஸ்ல நான் கான்ஸ்டபிளா இருந்து ரிடையர் ஆகல… எந்த போஸ்ட்ல இருந்தேன்னு உனக்கே தெரியும்” தட் தட் தட் என கை தட்டும் ஓசைக் கேட்டது. அனைவரும் அதிர்ந்து திரும்பினார்கள், மரத்தின் பின்னாலிருந்து வந்தபடியே அவன் சொன்னான்…

 

“இத இத இதைத் தான் சுலைமான் சார் நாங்க எதிர்பாக்கறது. கொஞ்ச நாள் நிலமையே உங்களை மனமாற்றத்தைப் பத்தி யோசிக்க வைக்குது. இன்னும் கொஞ்சநாள் இருந்தா, நான் பணம் பிடுங்க வேணாம். நீங்களே செஞ்ச பாவத்துக்கு புண்ணியம் தேடிக்குவீங்க”

 

என்னவோ அவன் கூப்பிட்ட அந்த “சார்”ல் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார் சுலைமான்.

 

அவன் தொடர்ந்தான்.,

” வக்கீல் சார், இங்க இருக்கிற வரை வாசுவும் ஒண்ணுதான். நீங்களும் ஒண்ணுதான்.  இன்னொன்னு சொல்லவா இங்கிருந்து போனதற்குப் பிறகும், உங்க எல்லார் மனசுலையும், எல்லோரும் ஒன்னுதான்ங்கற மனநிலை வரும். ஆனா அது வேற மாதிரி. அந்த நிலை வர்றது உங்க கையிலதான் இருக்கு! வரும்! நிச்சயம் வரும்! நம்பிக்கை இருக்கு!

சீக்கிரம் கையைக் கழுவிட்டு சாப்பிடப் போங்க., இது சாப்பிடற நேரம்” என்றான்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *