Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கனல்விழி காதல் - 67

Share Us On


Readers Comments

Recent Updates

கனல்விழி காதல்- 73

அத்தியாயம் – 73

தேவ்ராஜ் அந்த குடும்பத்திற்காக நிறைய உழைத்திருக்கிறான். மடுவாக இருந்த அவர்களுடைய பொருளாதாரம் மலையாக உயர்ந்ததற்கு அவன் ஒருவன் மட்டும்தான் காரணம். சமூகத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல அந்தஸ்தை தேடித் தந்தவன். அதுமட்டும் அல்ல… பெற்ற தந்தை விட்டுச் சென்ற கடமையை பாலக பருவத்திலேயே தன் தோளில் சுமந்து, தங்கைகள் இருவரையும் அண்ணனுக்கு அண்ணனாக… தந்தைக்கு தந்தையாக இருந்து பாதுகாத்து வளர்த்தவன். அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் ஆசையையும் அவர்கள் வாய்விட்டு கேட்பதற்கு முன்பே நிறைவேற்றிக் கொடுப்பவன். உலகத்திலேயே உயர்ந்த மகன்… உயர்ந்த அண்ணன். அப்படிப்பட்ட ஒருவனின் கண்களில் கலக்கத்தைக் கண்டால் அந்த வீட்டுப் பெண்களுக்கு எப்படி இருக்கும்! – மாயாவின் மனம் துடித்தது.

 

அன்றுதான் மதுராவுக்கும் கிஷோருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. விழாவுக்கு வந்திருந்த தேவ்ராஜின் கண்கள் அடிக்கடி மதுராவின் மீது நிலைகுத்தி நின்றதை கவனித்த மாயாவின் புருவம் சுருங்கியது. அவன் கண்களில் அடிக்கடி தோன்றி மறைந்த வலியும், முகத்தில் குடிகொண்டிருந்த கோபமும் அவள் பார்வையை கூர்மையாக்கியது. ‘தேவ் பாய்!’ – அவள் மனம் சொன்ன செய்தி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

இரவெல்லாம் அவளுக்கு உறங்க முடியவில்லை. தன்னுடைய பிரியமான தமையன் தகுதியற்ற இடத்தில் மனதை விட்டுவிட்டானோ என்கிற சந்தேகம் அவள் உறக்கத்தை தூர துரத்திவிட்டது. இதை தெளிவுபடுத்திக் கொள்ளவில்லை என்றால் தலை வெடித்துவிடும் போலிருக்க மறுநாளே அவனை சந்திக்க அலுவலகத்திற்கு வந்தாள்.

 

கேட்க வந்ததை எப்படி கேட்பது என்று புரியாமல் சுற்றி வளைத்து பேசிக் கொண்டிருந்தவளை இடைமறித்து, “பிஸியா இருக்கேன் மாயா. வந்த விஷயத்தை சொல்லு” என்றான் தேவ்ராஜ்.

 

“தேவ் பாய்… நீங்க… வந்து… உங்களுக்கு மதுரா மேல விருப்பம் இருக்கா?” – தயக்கத்துடன் ஆரம்பித்தாலும் படக்கென்று கேட்க நினைத்ததை கேட்டுவிட்டாள். சட்டென்று அவன் முகத்தில் சிறி அதிர்வு தோன்றியது. நொடி பொழுதில் அது மறைந்தும் போய்விட்டது.

 

“விளையாடற நேரமா இது. கிளம்பு முதல்ல” – எரிச்சல்பட்டான்.

 

“தேவ் பாய்… நேத்து நா உங்கள கவனிச்சேன். ஏதோ சரியில்லன்னு தோணுது. நீங்க மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ணற அளவுக்கு அவ ஒண்ணும் தகுதியான ஆள் இல்ல பாய்” – வெகு தீவிரமாக பேசிய மாயாவிற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. இறுகிய முகத்தோடு தலை குனிந்து அமர்ந்திருக்கும் சகோதரனை கூர்ந்து பார்த்தாள் தங்கை. அவன் முகத்தில் தெரிந்த துக்கம் அவளை உலுக்கியது.

 

“சாத்தியமா சொல்றேன் தேவ் பாய்… அவ வாழ்க்கை நல்லாவே இருக்காது. நா அவளை சபிக்கிறேன். உங்கள கஷ்ட்டப்படுத்தீட்டு அவ நல்லாவே இருக்கமாட்டா…” – கண்கலங்க… உடல் நடுங்க உக்கிரமாய் சபித்தாள். தன் சகோதரனைவிட, அவனுடைய நலனை விட வேறு எதுவும் பெரிதாக தோன்றவில்லை அவளுக்கு. அவனுடைய சந்தோஷத்திற்காக எதையும் செய்யலாம் என்று தோன்றியது.

 

தங்கையின் ஆவேசத்தில் அதிர்ந்து நிமிர்ந்த தேவ்ராஜ், “மாயா! என்ன பேச்சு இது?” என்று அதட்டினான் தேவ்ராஜ். அவனுடைய கோபம் அவளை இன்னும் அதிகமாக வதைத்தது. பாரதி ஒரு பக்கம் திலீப்பிற்காக உருக, தேவ்ராஜும் மதுராவிற்காக ஏங்குகிறானே என்கிற கவலை அவள் மனதை அழுத்தியது. கண்களில் கலங்கி நின்ற கண்ணீர் கன்னத்தில் வடிந்தது.

 

“மதுராவை நீ பிரபாவதியோட மகளா பார்க்காத மாயா. துருவனோட தங்கச்சியா பாரு ஷி இஸ் கைண்ட் ஆஃப் ஸ்வீட்…” – அவன் முகத்தில் படரும் மென்மையை வியப்புடன் பார்த்த மாயா, “அப்புறம் ஏன் பாய் அவளை வேண்டாம்னு சொன்னீங்க? வீட்லதான் எல்லாரும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவைக்க அவ்வளவு ஆர்வமா இருந்தாங்களே! ஏன் நீங்க வேண்டாம்னு சொன்னீங்க?” என்றாள் ஆற்றாமையுடன்.

 

தேவ்ராஜின் முகம் சிவந்தது. தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத அவமானம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதையும் மீறி அவன் தன் தங்கையிடம் மனதை திறந்தான்.

 

“ஒரே புல்லட்ல ரெண்டு பறவையை ஷூட் பண்ணலாம்னு நினச்சேன். ரெண்டும் தப்பிச்சிடிச்சு” என்று சோகமாக புன்னகைத்தவன், ‘ஆனா இன்னமும் நிறைய டைம் இருக்கு மாயா’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டான்.

 

மாயா தன் உடன் பிறந்தவனை அன்போடு பார்த்தாள். பாரதிக்காக அவன் தன்னுடைய விருப்பத்தை தியாகம் செய்துவிட்டானே என்று வருந்தினாள். தங்கைகளுக்காக எதையும் செய்ய துணியும் அவனுடைய அதீத அன்பில் கரைந்தாள். உடன் பிறந்தவன் மீது அவள் கொண்டிருந்த அன்பு இன்னும் பலமடங்கு பெருகியது.

 

“தேவ் பாய்… எனக்கு மதுராவை சுத்தமா பிடிக்காது. ஆனா உங்களுக்காக என்னோட மனச நா மாத்திக்க முயற்சி பண்ணறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

 

கிஷோர் மீது தேவ்ராஜிற்கு எந்த முன் பகையும் இல்லை. அவனை துன்பப்படுத்துவதில் அவனுக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆனால் இப்போது அவன் தேவ்ராஜின் வழியில் குறுக்கே நிற்கிறான். அவனை அப்புறப்படுத்தியாக வேண்டியது அவசியமாகிவிட்டது. எனவே வேறு வழியில்லாமல் அவன் அந்த காரியத்தை செய்ய செய்தான்.

 

திருமணத்தை நிறுத்துவதற்காக மாப்பிள்ளையை கடத்துவது, ஆக்ஸிடென்ட் செய்வது போன்ற சினிமாத்தனமான வேலைகளை செய்துவிட்டு பிறகு சர்ச்சையில் சிக்கிக்கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை. எனவே நல்ல தரமான… முறையான…. சட்ட சிக்கலில் சிக்க வைத்து சரியாக திருமண நேரத்தில் அவனை உள்ளே தள்ளிவிட வேண்டும் என்று அழகாக திட்டம் போட்டான்.

 

போட்ட திட்டத்தை நிறைவேற்றுவது ஒன்றும் அவ்வளவு எளிதாக இல்லை. கிஷோரை பொறுத்தவரை எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவன். தனிப்பட்ட முறையில் அவ்வளவு சுலபமாக அவனை எதிலும் சிக்க வைக்க முடியாது என்று தோன்றியது. ஆனால் ஒரு சின்ன வழி இருந்தது. அவன் ஒரு ஆடிட்டர். பெரிய நிறுவனங்களின் கணக்கு வழக்குகளில் தொடர்புடையவன். அலுவல் ரீதியாக அவனை சிக்க வைப்பது சுலபம் என்று தோன்றியது. எனவே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினான்.

 

அவன் எந்த நிறுவனத்தில் இருக்கிறான்… முன்பு எங்கு இருந்தான்… தனிப்பட்ட முறையில் யாரை யாருடைய கணக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டிருக்கிறான்… யாருக்காவது பினாமியாக இருக்கிறானா… அனைத்து விபரங்களையும் சேகரித்து விரல் நுனிக்கு கொண்டு வந்தான். அடுத்து யாரிடம் சிக்க வைப்பது… எப்படி சிக்க வைப்பது என்கிற திட்டமெல்லாம் பக்காவாக ரெடி பண்ணிவிட்டு, உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு என்பது போல சரியான தருணத்திற்காக காத்திருந்தான்.

 

அப்போதுதான் மாயா போன் செய்தாள். “தேவ் பாய்… மதுராவோட கல்யாணம் நின்னு போச்சு” என்றவளுடைய குரல் துள்ளியது.

 

ஒரு நொடி அதிர்ந்து போனான் தேவ்ராஜ். “ஆர் யூ சீரியஸ்?”- நம்பமுடியவில்லை அவனுக்கு.

 

“ஆமாம்… நிச்சயமா…”

 

“எப்படி? என்ன ஆச்சு?” – தான் செய்ய காத்திருந்த காரியம் எப்படி தானாக நடந்தது என்பதை தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டான்.

 

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? உங்க ரூட் க்ளீயர் ஆயிடிச்சு. க்ளீயர் பண்ணிட்டேன். இனி என்ன செய்யணுமோ செஞ்சு மதுராவை கல்யாணம் பண்ணிக்கோங்க. சந்தோஷமா இருங்க…”

 

“ப்ச்… மாயா… எங்க இருக்க நீ? தேவையில்லாம உளறி ஏதாவது பிரச்சனையில சிக்கிக்காத” – அவனுக்குள்ளிருந்த சகோதரன் தலை தூக்கி தங்கையை கண்டித்தான்.

 

“நீங்க இருக்கும் போது என்கிட்டே எந்த பிரச்சனையும் நெருங்காது தேவ் பாய்…” – அதீத நம்பிக்கையுடன் பேசினாள். தன்னுடைய பிரியமான சகோதரனுக்காக ஒன்றை செய்துவிட்டோம் என்கிற திருப்தியில் நிறைந்து போயிருந்தாள்.

 

“சரி நீ உடனே இங்க கிளம்பி வா.. நேர்ல வந்து என்னத்த பண்ணி வச்சிருக்கேன்னு சொல்லு. மத்ததெல்லாம் நா பார்த்துக்கறேன்”

 

“இல்ல பாய்… இங்க எல்லாரும் ரொம்ப டென்க்ஷனா இருக்காங்க. இப்போ நா எங்கேயும் வர முடியாது. சீக்கிரமே பார்ப்போம்… இன்னும் ஒரு வரம் தானே இருக்கு கல்யாணத்துக்கு. கல்யாணத்துல பார்ப்போம்” என்று கூறிவிட்டு அலைபேசி அழைப்பை துண்டித்தாள்.

 

அதன் பிறகு பலமுறை மாயாவிடம், என்ன செய்து அந்த திருமணத்தை நிறுத்தினாள் என்று கேட்டிருக்கிறான் தேவ்ராஜ். ஆனால் அவள் சிரித்துக் கொண்டே, “அதை தெரிஞ்சு என்ன செய்ய போறீங்க? லைஃபை என்ஜாய் பண்ணுங்க தேவ் பாய்… எப்பவும் எங்க பின்னாடியே சுத்திகிட்டு இருக்காம” என்று அலட்சியமாக கூறிவிடுவாள்.

 

மாயாவிற்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்கிற பதட்டம் அவனுக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் மதுராவின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு, இனி எந்த பிரச்சனையும் வராது என்று ரிலாக்ஸ் ஆகிவிட்டான். எட்டு மாதம் கழித்து அந்த பிரச்சனை இப்படி விஸ்வரூபமெடுத்து வந்து நிற்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

 

**********************

 

அப்பாவை கேட்டு அடம்பிடித்து ரகளை செய்யும் ஆதிராவை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தாள் மாயா. இராஜேஸ்வரியும் பாரதியும் உதவிக்கு வந்தும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களோடு சேர்ந்து குழந்தையை சமாதானம் செய்யவும் முடியாமல் ஒதுங்கி போகவும் முடியாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்றாள் மதுரா.

 

“எதுக்கு குட்டிமா அழறாங்க? என்ன ஆச்சு?” – தேவ்ராஜின் குரல் கேட்டு அனைவரும் வாசல்பக்கம் திரும்பிப் பார்க்க, ஆதிராவின் அழுகை இன்னும் அதிகமானது. கையையும் காலையும் உதறினாள். தூக்க முயலும் மாயாவிடமிருந்து நழுவி தரையில் தோய்ந்து விழுந்து உருண்டாள். அவள் கத்தும் வரட்டுக் கத்தை சமாளிக்க முடியாமல் இரண்டு போடு போட்ட மாயாவை அதட்டி அடக்கிய தேவ்ராஜ் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டான். அவனிடமும் அடங்க மறுத்தாள் அவள்.

 

“குட்டிமா… டாலி குட்டி… என்ன வேணும்… டாடி தானே… நா கூட்டிட்டு போறேன் வா” என்று அவளுடைய கவனத்தை திருப்பி சமாதானம் செய்ய முயன்றான். தந்தையிடம் அழைத்துச் செல்கிறேன் என்று அவன் கூறியதும் அவளுடைய கத்தல் தேம்பலாக மாறியது. ஆனாலும் பிடிவாதமாக தந்தையை கேட்டுக் கொண்டே இருந்தாள். அவளுடைய மனதை மாற்ற வெளியே அழைத்துச் சென்ற தேவ்ராஜ் மீண்டும் வீட்டுக்கு வரம் போது குழந்தை அவன் தோளில் உறங்கி கொண்டிருந்தாள்.

 

அவனிடமிருந்து மகளை வாங்கி கட்டிலில் கிடத்திய மாயா, உறக்கத்தில் இருக்கும் தன் செல்ல மகளின் பால் முகத்தைக் கண்டு கண்கலங்கினாள். கோபப்பட்டு அடித்துவிட்டோமே என்று உருகி, அடித்த இடத்தை தொட்டுத்தொட்டுப் பார்த்தாள்.

 

“உன்னோட டென்ஷனை எதுக்கு சின்ன குழந்தைகிட்ட காட்டற?” – எரிச்சல்பட்டான் தேவ்ராஜ்.

 

“நம்ம குடும்பத்துக்கே இது ஒரு சாபம் போலருக்கு தேவ் பாய்… நமக்கெல்லாம் கல்யாண வாழ்க்கை அவ்வளவுதான் போல… அம்மாலேருந்து ஆரம்பிச்சு பாரதி வரைக்கும் யாருக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு? நாமதான் உருகி உருகி கரையிறோம். அவங்கள்லாம் ஒரே நிமிஷத்துல நம்மள தூக்கிப் போட்டுடறாங்களே!” என்று புலம்பினாள்.

 

தேவ்ராஜ் எதுவும் பேசவில்லை. மாயா சொல்வது சரிதானோ என்று யோசித்தான். மாயா செய்தது தவறுதான். இதே தவறை மதுரா செய்திருந்தால் அவன் கொலையே செய்திருப்பான். ஆனால் ஒருநாளும் அவளை வீட்டைவிட்டு துரத்தியிருக்க மாட்டான். உறவை அறுத்துக்கொள்வது உயிரை பறிப்பதை விட கொடுமையானது என்பது அவனுடைய எண்ணம். அந்த விதத்தில் அவனுக்கு துருவன் மீதும் கோபம்தான்.

 

அண்ணன் செய்த அதே தவறுதான் மதுராவும் செய்தாள். அவளுக்கு எதிராக ஒன்று நடந்திருக்கிறது…அதுவும் மாயாவின் மூலம் நடந்திருக்கிறது என்றல் அவனிடம் தானே அவள் முதலில் முறையிட்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பிறந்த வீட்டிற்கு ஓடிவிட்டாள் என்றால் அவன் மீது அவளுக்கு என்ன பற்று இருக்கிறது… என்ன நம்பிக்கை இருக்கிறது…? – வெறுப்பாக இருந்தது.

 

உறக்கத்தில் இருக்கும் குழந்தை முகத்தையே பார்த்தபடி, “மாயா… துருவனை சமாதானம் பண்ண ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீ தேவையில்லாம டென்ஷனாகி குட்டிமாவை அடிக்காத. இன்னொரு தரம் அவ மேல உன் கை படக் கூடாது” என்று கண்டிப்புடன் கூறினான்.

 

உடனே ரோஷத்துடன் நிமிர்ந்த மாயா, “அங்க நா போக மாட்டேன் தேவ் பாய்… என்னை கழுத்த பிடிச்சு வெளியே தள்ளின வீட்டுக்குள்ள இனி நா காலடி எடுத்து வைக்க மாட்டேன்” என்றாள். அவளுடைய கண்கள் மீண்டும் கலங்கின. அன்று நடந்த அந்த சம்பவத்தை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

 

“நீ செஞ்சது தப்பு மாயா…”

 

“உங்களுக்காகத்தான் தேவ் பாய் செஞ்சேன். நீங்களே இப்படி பேசுறீங்க! உங்களைவிட அந்த கிஷோர் எந்த விதத்துல உயர்ந்துட்டான்? தெரிஞ்சோ தெரியாமலோ அவளுக்கு நா நல்லதுதான் பண்ணியிருக்கேன்” – அழுகையும் ஆத்திரமுமாக படபடத்தாள்.

 

“சரி விடு… நீ இப்படி பிடிவாதமா இருந்தா குட்டிமாவை எப்படி சமாளிப்ப?”

 

“கொஞ்ச நாள்ல பழகிப்பா…” என்று அவள் பிடிவாதமாகக் கூற, “நாம பழகின மாதிரியா?” என்றான் இறுக்கமாக.

 

கனல்விழி காதல் - 73 முன்குறிப்பு
கனல்விழி காதல் - 74
Leave a Reply

18 Comments on "கனல்விழி காதல்- 73"

avatar
  Subscribe  
newest oldest most voted
Notify of
Deepa I
Member

Photo yarodathu sis semma matching

ugina begum
Member

nice ud sis

Sow Dharani
Member

உன் அண்ணனுக்கு நீ செய்த விஷயம்…… உன் அண்ணன் அதை சொல்லி சொல்லி மதுவை குத்தி கட்டுறாரே……. அதே ஏன் புரிஞ்சிக்க மாட்டுறீங்க…… உன்னோட லவ் பத்தி புரியாம எப்படி உனக்காக வெயிட் பண்ண முடியும் தேவ்……. இப்ப அவ உன்னோட wife சோ உன்னை புரிஞ்சிக்க try பண்ணுற…..முன்ன நீ யாரோ அத்தை பையன் அவ்வுலவுதான்….

Sindu R
Member

மதுரா
தேவ் தான் தான் எல்லாம் செய்தேன் என்ற பின்பும் ஏன் அந்த வீட்டில் இருக்க
மாயாவிடம் இருக்கும் சுயமரியாதையில் பாதி கூட உன்னிடம் இல்லையா

Nataraj Nataraj
Member

கதை நன்றாக போகிறது மது தன்னோட காதலை தேவ்க்கு எப்படி புரிய வைக்க போறாள்.

Kani Ramesh
Member

Nan guess panathu crkt dev maya kaga poi solirukan… yarume avangaloda pair kita manasu vitu pesama ego va iluthu pidichikitu suthuranga… epo than elarum unarthu thiruntha poranganu therila… inum madhu pregnancy pathi solala… dev reaction pakka eagera iruku sis

tamilarasi senthilkumar
Member

eppo Dev um mathu vum purinjipanga?.vry nice epi .waiting for ur nxt epi

Pon Mariammal Chelladurai
Member

புத்தி வருதா…வாரிசை உருவாக்கியிருக்க…மண்டு.

Kavi Nathi
Member

This s the first story of you I am reading. Unga way of writing epdi nu therila Aana intha Arrogant Dev and his Idiotic sisters should get punished. How selfish all these three are. And yen heroine name thappa irunthalum bold ah irkakudatha enna. How many more episodes to get complete this story?

Suganya Samidoss
Member
Nice. மாயாவின் பேச்சு எதிர்பார்த்தது தான். மூன்று பேருமே சரியான சுயநலவாதிகள். தேவ்ராஜ்க்கு மதுரா மேல உள்ள காதலை விட தங்கைகள் மீது உள்ள பாசம் தான் அதிகம்னு தான் நடைபெறும் நிகழ்வுகள் காண்பிக்குது. பாவம் மதுரா. தேவ்ராஜூக்கு விழும் அடிதான் மாயா பாரதியின் ஆணவத்தை அடக்கும். மதுரா தன் பொறுமையை கைவிட்டு கொஞ்சம் சுயமரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரம். தேவ்ராஜ் ஒரே புல்லட்ல இரண்டு பறவையை வீழ்த்த முயற்சி செய்தான் ஆனால் இப்போ மதுராவிற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு ஒரே புல்லட்ல 3 பறவைகளை வீழ்த்த கிடைத்திருக்கிறது. பார்க்கலாம் மதுரா தன் மரியாதை காப்பாற்றிக்கொள்வாலா? அல்லது முதுகெலும்பு இல்லாமல் மீண்டும் பயந்து அடிமை வாழ்வை தொடருவாளா என்று. ஆனால் நித்யா உங்கள் கதைகளின் நாயகிகள் முன் பாதியில் எவ்வளவு அன்பாகவும் காதலாகவும் ஆரம்பத்தில் இருக்கிறார்களோ பின் பாதியில் நேர் எதிராக மாறி நாயகர்களை கலங்கடித்துவிடுகிண்றனர். இங்கே தேவ் மதுராகிட்ட மண்டி… Read more »
Deepa I
Member

Eagerly waiting for ud

vijaya muthukrishnan
Member

nice ud. eagerly waiting for your next ud

Ambika V
Member

Madhu Enna pannuran theriyalai today varalai Anna thangai renduperum panninathu unarave illai

Member

Madhurakku yaaru poruthama irupaganu mudivu panna maya yaaru… Maya annanukku gift panna madhura enna kadaila vikkura porula… Uyirulla manishi illaiya enna oru aanavam mayakku… Dev ku maya bharathi mukkiyama irukkalam avanai nambi vantha Madhu??? Ivan kitta madhura muraiyidanuma nalla niyayam than seivan😡..dev mela madhurakku nambikkai varra mathiri enna seithan dev… Mayavala madhu bathikka pattathu avanukku oru porutte illaiya Madhura va samathanam pannama thirumba avalaiye kurai solran… Selfish fellow…

Thadsayani Aravinthan
Member

Hi mam

ஓ மதுராவை காரணம் காட்டி திலீப்பை பாரதிக்கு திருமணம் செய்ய நினைத்தாரா தேவ் ,அதுதான் இரு பறவையை ஒரு எறியில் வீழ்த்தும் கதையா,தன் சகோதரிகளுக்கு என்றவுடன் தேவ்விடம் எவ்வளவு இதமும் பதமும் ஆனால் அது ஒரு துளி கூட மதுராவிடம் கிடையாது.

நன்றி

Reena thayan
Member

Nice update yeah my guessing are right

Hadijha Khaliq
Member

Appa thangaikaga dhaan appadi poi sollirukan Dev….and Dev ninaikuradhum correct maya mela dhuruvanuku evvalavu kobam irundhalum avalai naalu adikooda adichi irukalam but veetai vittu thuradhi irukakoodadhu….but adhukaga dev Madhura manam evvalavu vedhanai padum nu therinjum ava kitta thangaikaga andha poiya solliruka thevai illai…

Member

Hai nithya,yenna sollrathune theriyala,avar avarku avar avar knayam ithula pathippu?innum madhu thannoda pregnancy pathi sollave illa,yenna nadakumonu manam pathatama barama irukku waiting for your next update

error: Content is protected !!