Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Veppangulam

Share Us On


Readers Comments

Recent Updates

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 3

அத்தியாயம் : 3

“நல்ல தரிசனம் அம்மா… அம்மன் முழுக்க வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்ததை காண இரு விழி போதவில்லை” என்று மரிக்கொழுந்திடம் அளவளாவிக் கொண்டிருந்தாள் ரம்யா.

 

கையில் இருந்த வெங்கலத் தட்டில் இரண்டு இட்லிகள் சாம்பார் சட்னியுடன் இருந்தன.

 

“அப்படியா கண்ணு?அந்த அம்பாளிடம் எது வேண்டினாலும் பலித்து விடுமாம். ஐதீகம் : முக்கியமாக திருமணம்.நல்ல. குணமா ஒரு பிள்ளை வரனும்னு வேண்டிக்கம்மா” என்று பெரியவர் கூற, உடனே முகம் வெளிரி  விட்டது ரம்யாவிற்கு இதயத்தில் நெறிஞ்சி  முள் குத்தியது.

 

நல்ல வேளை இவளது முக வாட்டத்தைப் பார்க்கவில்லை மரிக்கொழுந்து. அதற்குள்  அய்யாக் கண்ணு கண்ணில் படவும்,

 

“அய்யாக் கண்ணு செத்த  இரு (சற்று பொறு)  உம் பொஞ்சாதிக்கு உடம்பு சுகமில்லன்னு சொன்னியே, இந்தா, நாலு இட்லி கட்டியிருக்கேன் எடுத்துட்டுப்போ, உம் புள்ளைங்க என்னத்தை சாப்பிடும்” என்றவள் ஒரு தூக்கு நிறைய இட்லிகளை அடுக்கி சாம்பார் சட்னி என எல்லாம் கட்டி கொடுத்து விட்டு,

 

“மங்கா கிட்ட சுக்குக் கசாயம் வெக்க சொன்னேன், வா கொடுத்து விடுறேன். கசப்பா இருந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு குடிச்சிர சொல்லு அப்பதான் சுகமாகும்” என்று அய்யா கண்ணுடன் மரிக்கொழுந்து நடக்க, அங்கே தனித்து விடப்பட்டனர் தோழிகள் இருவரும். ஏதோ குதூகலமாய் பேசி சிரித்த படி இருந்த சுகுணா சட்டென விழி விரித்தாள்.

 

“அண்ணா வந்திட்டியா? எல்லாரையும் நேர்ல பாத்து கொடுத்தியா? ”

 

குதித்துக் கொண்டு எழுந்தோடினாள். அவளின் பின்னோடு சென்ற பார்வை ஒரு ஜீன்ஸ் போட்ட மனிதனிடம் சென்று நின்றதுமே அவள் புரிந்து கொண்டாள். இது காளிதாசனாகத்தான் இருக்குமென்று.

 

அதற்குள் சுகுணா “இவள் தான் என் தோழி ரம்யா அண்ணா, காலேஜில ஒன்றாக படித்தோம்”

 

தெரியுமே ஓயாமல் புலம்புவாயே, அவளுக்கு  மட்டும் எப்படித்தான்  ஒரு தரம் படித்ததும் எல்லாம் மண்டைக்குள் ஏறிவிடுகிறதோ” என்று சொல்லி சிரித்துவிட்டு கண்ணடித்தான்.

 

அண்ணனுக்கும் தம்பிக்கும் இத்தனை வேறுப்பாடு இருக்குமா, சிரிக்கவே சிரிக்காத அண்ணன் சிரித்த முகத்துடன் தம்பி. கூடச்சேர்ந்து ரம்யாவும் சிரித்துவிட,அவனைஎரித்து விடுவது போல் முறைத்தாள் சுகுணா

 

“சரி….சரி …..என்னை  எரிப்பது இருக்கட்டும் தங்கையே, என்ன சிலுக்குவார் பட்டி காற்று வேப்பங்குளத்தை நோக்கி வேகமாக வீசுகிறது.”

என்றான் கேலிக்குரலில் அவ்வளவுதான் சுகுணாவின் முகம் சிவந்து விட்டது. என்னவாக இருக்கும் என்று ரம்யா யோசிக்கையில்,அதற்கான பதில் பாஸ்கரனிடமிருந்து வந்தது.

 

“அந்தக் காற்று கோவிலை சுற்றிச் சுற்றி  அடித்ததை நானும் தான் பார்த்தேனடா” என்று தடித்த மீசையின் இடையே பளீச் பற்கள்  ஒளி வீச அவன் சிரித்ததை தன்னையும் மறந்து  ரசித்தாள் ரம்யா.இவருக்கு சிரிக்கவும் தெரியுமா? அப்படி சிரித்தால் இத்தனை கம்பீரமாக இருக்குமா?

 

“அப்படியா அண்ணா அவ்வப்போது இப்படி காற்றடித்துக்கொண்டே இருக்கிறதே சூறாவளியாவதற்கு சாத்தியக்கூறு இருக்கிறதா?” விடாமல் கதைகேட்டான் தம்பி.

 

“ம்… பலமாக இருக்கிறதடா, இன்னொன்று தெரியுமா?  அதன் செல்போனில் இருக்கும் ரிங்டோனை கேட்டால் அவ்வளவுதான்” – பீடிகையுடன் நிறுத்தினான்.

 

“அண்ணா வேண்டாமண்ணா” என்று கீச்சுக்குரலில் சுகுனா மன்றாடிக்கொண்டிருக்கும் பொழுதே, “ஏன்… என்ன ரிங்டோன் அண்ணா?” ஆர்வமானான் காளிதாசன்.

 

தங்கையின் மன்றாடலுக்கு துளியும் செவிசாய்கவில்லை தமயன் குரலை இருமுறை செருமிவிட்டு,

 

“வேப்பங்குளத்து கிளியே…

என் வயச ஒடச்ச உளியே…

பாரடி எந்தன் கதியே

நீ ஓடி வாடி வெளியே ” – அழகாகவே பாடிக்காட்டினான்.

 

அதற்கு மேல் சுகுணாவால் முடியவில்லை வெட்கம் மேலோங்க “போங்கள் அண்ணா நீங்கள்  இருவரும் மோசம்” என்று விட்டு படிகளில் ஓடி மறைந்தாள்  அவளைப் பார்த்து சகோதரர்கள் இருவரும் கைகொட்டி சிரித்தனர்.மனதிலிருந்து வரும் சிரிப்பிற்கு தான் எத்தனை அழகு என்று நினைத்தவள் கண்கள் பாஸ்கரனிடம் நிலைத்திருப்பதை அவனது புருவ ஏற்றம் புரிய வைக்க உடனே தலை கவிழ்த்தவள் சுகுணாவை பின் தொடர்ந்து உள்ளே ஓடினாள்.

 

“ஏய், கள்ளி….!!” என்று சுகுணாவின் காது பிடித்து திருகியவள், “இதற்கு தான் கோவில்,கோவில்  என்று அழைத்துச் சென்றாயா? அங்கேஅம்பாளை பார்த்தாய் என்று நினைத்தால்,உன் தேவனை பார்த்துக் கொண்டு நின்றாயாக்கும்”

 

“……..” வெட்கத்தோடு சிரித்த சுகுணாவை மேலும் சீண்ட நினைத்து,

 

“எனக்கும் காட்டியிருக்கலாமே அவரை, நானும் உன் துணை  உயரமா, குட்டையா, கருப்பா, சிவப்பா என்று  பார்த்திருப்பேனே”

 

“அடிப் போடி அவர் எப்படி இருந்தால் என்ன?”

 

“இங்க பாருடா கோபத்தை! இல்லை  தாயே! இனி அவரை பற்றி நான் எதுவும் பேச மாட்டேன் போதுமா? சரி  வா கீழே சாப்பாடு பாதியிலேயே நிற்கிறது, உண்டு விட்டு வந்து உறங்குவோம்” என்றுவிட்டு சுகுணாவின் கரம் பற்றி கீழே அழைத்துச்சென்றாள்.

வேப்பங்குளத்தில் ஒரு காதல் - 2
வேப்பங்குளத்தில் ஒரு காதல் - 4
Leave a Reply

1 Comment on "வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 3"

avatar
  Subscribe  
newest oldest most voted
Notify of
Member

Superppa koncham periya epiya potungapa

Don`t copy text!