Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Veppangulam

Share Us On


Readers Comments

Recent Updates

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 4

அத்தியாயம் – 4

போகிப்பண்டிகை :

 

தமிழர்களால்     கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கிய பண்டிகை, பொங்கல் அல்லவா? நகரத்தில் தன் பொலிவை இழந்தாலும் கிராமத்தில் களைகட்டும் பண்டிகையாகும். எல்லோர் வீடுகளும்  சுத்தப்படுத்தப்பட்டு  பளிச்சென்றிருந்தது. வசதி   உள்ளவர்கள்   புது  சுண்ணாம்பு   அடித்து வீட்டை பள பளப்பாக்கிக்   கொண்டிருக்க, வசதியில்லாதவர்கள் தத்தம் வீடுகளை துடைத்து,  ஒட்டடை அடித்து அழகு படுத்தினர்.அவர்கள் சுத்தம் செய்த போது தேவையில்லாத குப்பைகளை, கிழிந்த பாய்,   உடைந்த முறம்,    தேய்ந்து   கட்டையான துடைப்பம்  இவைகளை ஊரின் எல்லையிலிருக்கும் அய்யனார் கோவிலருகில் இருந்த பொட்டல் நிலத்தில் கொட்டி குவித்திருந்தனர்.

 

சுமார் அதிகாலை மூன்றறை  மணிகெல்லாம் அறை கதவு தட்டப்பட்டது, ஏதேதோ நினைவுகள் அலைக்கழிக்க, விடியலின் பொழுதுதான் ரம்யா சற்று கண்ணயர்ந்தாள். உடனே கதவு தட்டப்பட்டு தன் தூக்கம் கலைந்ததில் எரிச்சல் ஏற்பட சிடு சிடுப்புடன்தான் கதவைத் திறந்தாள். எதிரில் சுகுணா எங்கோ செல்லத் தயாராகி நிற்பது போல்  நின்று கொண்டிருந்தாள். அப்போதுதான் நினைவிற்கு வந்தது, இன்று நேரத்திலேயே  ‘போகிப்பண்டிகை’ கொண்டாட கிளம்ப வேண்டும்மென்று சுகுணா இரவே சொல்லியிருந்தாள். நுனி நாக்கைக் கடித்தவள்.

 

“சாரி  சுகுணா …… மறந்தே     போயிட்டேன்” அவளது  வீக்கமான கண்களைப் பார்த்தவள்.

 

“சரி, பரவாயில்லை,  சீக்கிரம்  கிளம்பி வா, நா கீழே காத்திருக்கிறேன்” அறக்க பறக்க கிளம்பி கீழிறங்கினாள் ரம்யா.

 

அங்கே கோபமான பாஸ்கரனின் கண்களை பார்க்க தவறவில்லை. என்னால் அதிக தாமதமாகி விட்டதோ!  மனம் உறுத்த நடந்து செல்லும் வழியில்  எதேச்சையாகப் பேசுவது போல் அவனிடம் மன்னிப்புக் கோரினாள்.

 

“பெண்கள் அதிகமாக தூங்குவது நல்லதல்ல….அதுவும் பண்டிகை யென்றால் முதலில் விழிக்க வேண்டும்  என்ற உந்துதல் தானாக வரவேண்டும்” என்று கறார் குரலில் பேசியவன், சற்று நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அந்த நிலவொளியில் அவள் முகத்தில் எதைப் படித்தானோ உடனே,

 

“ஆன …..ஆனால் நீ தூங்கியது போலவும் தெரிய வில்லையே! …..ஏதேனும்  வசதி குறைவாக இருகிறதா எங்கள் வீட்டில்?” சட்டென குரல் இளகி விருந்தோம்பலில் ஈடுப்பட்டவனை என்னவென்று நினைப்பது.வைத்தால் குடுமி சிறைத்தால் மொட்டை  என்கின்ற பழமொழிக்கு தக்க எடுத்துக் காட்டு இவன்தான் என்று  உள்ளுக்குள் நினைத்தவள்.

 

“அதெல்லாம் ஒன்றுமில்லை சார், நேற்று ஒரு புத்தகம் படித்தேன். கீழே வைக்க. மனமேயில்லை. அதனால் அதை முடித்து விட்டுத்  தூங்க நேரமாகிவிட்டது” பொய் சரளமாக வந்தது.

 

“ஓ…….புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளதா?  இந்த ஒரு விஷயத்திற்காக உன்னை பாராட்ட வேண்டுமென்று தோன்றுகிறது இந்த காலத்தில் எழுத்து கூட்டி ,ஒரு வார்த்தை படிக்கக்கூட யாருக்கும் நேரமில்லை என்று பீற்றி கொள்கிறார்கள். .நல்ல வேளை அதற்கு விதிவிலக்காய் நீ இருக்கிறாய். நேரம் கிடைத்தால்,என் புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களை நீ பயன்ப்படுத்தி கொள்ளலாம்.எல்லா தரப்பு புத்தகங்களும் அங்கே இருக்கும்.உனக்குப் பிடித்ததை எடுத்துப் படி” என்றவன் முன்னே சென்ற தம்பியின்  தோள் பற்றி அவனிடம் ஏதோ பேசிக்கொண்டே  முன்னேறினான்.

 

ஆஹா, இது என்ன அதிசயம்,கோபக்காரர் வாயால் பாராட்டை வாங்குவதா… அட இன்னமும் அவர் பாராட்டவே இல்லையே.பாராட்ட வேண்டும் என்று கூறியதே பாராட்டியதைப்போல தோன்றுகிறதே,அதற்காகவேனும் புத்தகம் வாசிக்க பழக வேண்டும். வீட்டிற்குச் சென்றதும், அந்த அலமாரியில், ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டியேனும் பார்க்க வேண்டுமென்று தீர்மானித்தவள், அந்த வீட்டின் வாண்டுகளோடு சேர்ந்து பேசி சிரித்துக் கொண்டு நடக்கலானாள்.

 

இந்த இரண்டு  நாட்களிலேயே வீட்டிலிருக்கும் அத்தனை பேரிடமும் நட்பு கொண்டு விட்டாள் ரம்யா. நாட்டாமை  அவர்களைத் தவிர.அவரிடம் அதிகம் பேசும் வாய்ப்பு அவளுக்கு  கிடைக்கவேயில்லை அவர் வீட்டில் இருக்கும் நேரம் மிக மிக குறைவே .ஒன்று அரிசி ஆலையில் இருப்பார்,அல்லது கிராமத்துப் பணியில் இருப்பார் மரிக்கொழுந்தை பார்க்கையில் தான் அதிசயமாக இருக்கும்.கணவர் தன்னுடன்அதிக நேரம்இல்லை என்பதை யோசிக்க கூட முடியாத அளவில் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.இவள் பார்த்த.  நகரத்துப் பெண்கள், கணவன் சீக்கிரம் வீடு திரும்ப வில்லை, தன்னுடன் அதிக நேரம் செலவிடவில்லை, இப்படி ஏகப்பட்ட குறைகளுடன் வாழ்கையில், இவர் மட்டும் புன் சிரிப்பு மாறாமல் வளைய வருவது கண்களுக்கு குளிர்ச்சியாய் இருக்கும் இது பற்றி  அவரிடம் கேட்டால்,

 

“அட, என்ன கண்ணு  ஏதேதோ பேசுற …..அவுக கண்ணாலம்  ஆன நாள் புடிச்சே இப்படித்தான்.அதுவுமில்லாம அஞ்சு நிமிசம் ஒன்னு மன்னா  பேசுனா, சண்டதான்  முந்திகிட்டு வருது….அதுனால இப்படியே இருக்கிறதுதான் எல்லாத்துக்கும் நல்லது” என்று மிகப்பெரிய சித்தாந்தத்தை மிக எளிதாகக் கூறி விட்டு, முந்தாணையை இழுத்து சொருகிக் கொண்டு அடுத்த வேலையில் ஈடுப்பட்டார். இதுதான் வாழ்க்கையோ? இதுதான் சரியோ? இது புரியாததால் தான் நகரத்தில் அதிக விவாகரத்துக்கள் நடக்கிறதோ? கிராமத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம்தான் என்று  நினைத்துக் கொள்வாள், சுகுணாவின் பெரிய அண்ணனும்  எதிர்படும் பொழுது சிறு முகமன்தான் குசலம் விசாரிப்பதோடு சரி .இரண்டாம் அண்ணன் ஓரளவு பேசுவார்,மூன்றாவது அண்ணன் சொல்லவே வேண்டாம். எப்போதும் சுருக்கப் பார்வை,கடின பேச்சு. நான்காம் அண்ணன் தான் தன் கருத்தை ஒத்த நிலையில் இருக்கும் ஆண் என்று அவ்வப்பொழுது ரம்யா நினைத்துக் கொள்வதுண்டு  பெண்கள் எல்லோரும் வெகுளியாய் இருப்பது போல தோன்றியது. ஆனால் அது தான் அவர்கள் சந்தோஷமாக வாழ ஆதாரமாக இருக்கிறதோ?  ஒருவேளை தானும் அதே போல் வெகுளியாய் இருந்து விட்டால் தன் வாழ்க்கை இனிமையாய் இருந்திருக்குமோ? என்று யோசிப்பவள்,உடனே  ச்சீ…..ச்சி….இது என்ன அருவருப்பான சிந்தனை. இங்கே இருப்பவர்கள் நல்லவர்களாய் இருக்கிறார்கள், அதனால் இந்த வெகுளி தனம் நன்மையை மட்டுமே கொடுக்கும்.

 

ஆனால் அங்கே,எல்லாம் வெறிபிடித்தவர்கள், பணவெறி சொத்துவெறி, பெண்வெறி இப்படி பல வெறிப்பிடித்தவர்கள் மத்தியில் வெகுளியாய் வாழ்வது மதியீணம். அதுவும் தன் இதயத்திற்கும் அதன் ஆசைக்கும் எதிராக எது நடந்தாலும் அதை ஏற்பதற்கல்ல,அதனால் தான் எடுத்த முடிவு சரியானதே என்று முடிவிற்கு வருவாள்.

 

எல்லோரையும் விட, அந்த வீட்டிலேயே ரம்யாவிற்கு பிடித்தவர்கள் என்றால் அங்கிருக்கும் வாண்டுகள் தான். முதலாமவருக்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இரண்டாமவருக்கு இரண்டு பெண்களும் என்று அந்த நாலு  சிறுவர்கள் போதாதென்று அக்கம் பக்கத்தில் இருக்கும் வாண்டுகள் எல்லாம்  சேர்ந்தால் வீடே அல்லோல கல்லோலப்படும்.அப்படி தான் இப்போதும் போகி பண்டிகை  கொண்டாட எல்லோரும் ஊர் எல்லைக்கு செல்லும் வழியில், சிறுவர்களிடம் விளையாடிக் கொண்டே முன்னேறினாள் ரம்யா.

 

அங்கே ஒரு மலையளவு குப்பை கொட்டி வைக்கப்பட்டிருந்தது .பக்கத்தில் ஒரு லாரியும் நின்றது.அதில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன.அதை விழி விரித்து பார்த்த ரம்யா,இது பற்றி சுகுணாவிடம் விசாரித்தாள்.

 

“இப்பொழுது இருக்கும் நிலையில் பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்க முடியாது, என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை. ஆனால் எங்கள் கிராமத்தில் அவசியமானவற்றிற்கு மட்டுமே பிளாஸ்டிக்  பயன்படுத்தப்படும். அதாவது கடைக்குச்  செல்லும் பொழுது,எல்லோரும் நிச்சயமாய் கூடை எடுத்துச் செல்ல வேண்டும். அல்லது கடைக்காரரே தன் வீட்டு கூடையை கொடுத்து விட்டு பிறகு பெற்றுக் கொள்வார்.கறிக்கடைக்கு, மீன் கடைக்கு செல்லும் பொழுது,  நிச்சயம் தூக்குவாளி எடுத்துச் சென்று  அதில் தான் வாங்கி வர வேண்டும்.தண்ணீர் பாக்கெட்டும் பாட்டிலும் விற்க தடை செய்யப்பட்டிருக்கிறது.தாகம் என்று கேட்டால் எல்லோர் வீட்டிலும் தண்ணீர் கிடைக்கும் .சில அத்தியாவசிய பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் உபயோகப்படுத்தப்படும்.அதுவுமே இங்கே நிற்கும் லாரியில் கொட்டப்பட்டு மாதம் ஒரு முறை ரீசைக்கிளிங்கிற்கு அனுப்பப்படும்,இது நாட்டாமையின் உத்தரவு.

 

அடேங்கப்பா! என்றிருந்தது ரம்யாவிற்கு குக்கிராமத்தில் இத்தனை பகுத்தறிவா? இது பற்றி இன்னமும் தெரிந்து கொள்ள உள்ளம் பரபரத்தது.

 

“சூப்பர் டி….இதற்கெல்லாம் உன் காளிதாசன் அண்ணன் தானே காரணம்” நகரத்தில் படித்தவன்தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டுமென்பது அவளது கனிப்பு.

 

“அது தான் இல்லை இதற்கு காரணம் பாஸ்கர் அண்ணா” அந்த சிடுமூஞ்சியா என்று ரம்யா யோசிக்கையில்,

 

“இதுப் போன்ற பொது நலத்தில் அப்பாவிற்குப்  பின் பாஸ்கர் அண்ணனுக்குத்தான் அக்கறை அதிகம். இதே போல், எங்கள் ஊரில் யாருடைய நிலத்திலும்  சவுக்குமரக் கன்றும் ,தைலமரக் கன்றும் நடக்க கூடாது என்ற உத்தரவு உண்டு. இரண்டும் நிலத்தடி நீரை உறிஞ்சிவிடக் கூடியவை என்று அண்ணா படித்ததும் உடனே அப்பாவிடம் எப்படி எப்படியோ பேசி இந்த உத்தரவை பிறப்பித்தார். பிறகு ஒரு முறை,இங்கிருந்து நகரத்தில் சென்று ஐக்கியமாகிவிட்ட ஒரு சில குடும்பத்தாரை தேடிப்பிடித்து, கண்டுபிடித்து, அவர்களது நிலத்தை குத்தகைக்கு எழுதி வாங்கிக் கொண்டு வந்தார். இதில் அப்பாவிற்குத்  தான் கொஞ்சம் வருத்தம் நம்மிடமிருக்கும் நிலத்தை உழுது பயிர் செய்யவே நேரம் போதவில்லை இதில் குத்தகைக்  கெல்லாம் எதற்கு என்று “ம்…..அப்புறம்” கதை சுவாரஸ்யம் பிடிக்க விழி விரித்து கேட்டாள் ரம்யா.

 

பேச்சில் அண்ணனை மிஞ்ச யார் இருக்கிறார்கள். அவர்களின் நிலத்தில்  விளையும் கருவேலஞ்செடி ,இந்த மண்ணை மலடாக்குகிறது, அது  நடக்கக் கூடாது. அதனால் தான் இப்படி  என்று அப்பாவிற்கே ஒரு மணி நேரம்  கிளாஸ் எடுத்து  விட்டார் தெரியுமா? பிறகு, ஏது தடை,அண்ணா ஒரு விஷயம் பேசினால்,அதற்கு இல்லை என்பது போல் யாராலும் தலை கூட அசைக்க முடியாது, அதுதான் எங்கள் அண்ணா. என்று  இல்லாத காலரை தூக்கிவிட்டு  பெருமை பீற்றிக்கொள்ளும் சுகுணாவை பார்க்கையில் பொறாமையாக இருந்தது.

 

நான் ஏன் ஒற்றைப் பிள்ளையாய் பிறந்து தொலைந்தேன். இன்பத்தையும் சரி, துன்பத்தையும் சரி பகிர்வதற்கு, ஆளில்லை என்பது எத்தனை பெரிய இழப்பு. அவளது சிந்தனை அங்கே ஆரவாரமாக எழுப்பிய சத்ததால் கலைக்கப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரவார ஓசை எழுப்பினர்.

 

நாட்டார் மணிவண்ணன் கையில்  ஒரு தீப்பந்தம் இருந்தது.அதை, அவர் அங்கே மலைபோல் குவிந்து கிடந்த குப்பையில் வைத்தது தான் தாமதம்,புசு புசுவென எரியத் தொடங்கி விட்டது,உடனே அங்கே பறை ஓசை உச்சக்கட்டத்தில் ஆரம்பித்து விட்டது.சிறுவர்கள் எல்லோரும் அந்த நெருப்பைச் சுற்றி ஆடஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் பெற்றோரும் சொந்தங்களும் அவர்களை உற்சாகப்படுத்துவதில் மும்முரமாகிவிட்டனர். எலும்பை உறைய வைக்கும் அளவில் இருந்த குளிர்க்கு, அந்த நெருப்பு இதமாய் தோன்றியது ரம்யாவிற்கு. இரு கைகளையும் நெருப்பில் காட்டி தன் கன்னங்களில் வைத்துக் கொண்டாள். அங்கே திரண்டிருந்த கூட்டம் அப்படியே ஆங்காங்கே தரையில் தாட்டு என்று சொல்லப்படும் பெரிய சாக்கு விரிப்பை விரித்து அதில் அமர்ந்து கொண்டனர். நாட்டாமை குடும்பத்திற்கும் அப்படி ஒரு தாட்டு விரிக்கப் பட்டு அதில் ரம்யாவின் கைப்பற்றி  அமர வைத்தாள் சுகுணா.

 

“என்னடி பேன்னு பார்த்துகிட்டு  இருக்க? இது எல்லாமே உனக்கு புதுசா  இருக்கா, இந்த ஆட்டம்  பாட்டத்தை விட இங்கே இன்னமும் சுவாரஸ்யமா நிறைய விஷயம் இருக்கிறது. சட்டென்று பார்க்காதே இதோ நம் பக்கத்தில் நான்காவதாய் அமர்ந்திருக்கிறாளே நீல தாவணி அவளது பார்வையை மட்டும் கவனி” என்று   கூறி  விட்டு ஒன்றும் தெரியாதது போல் ஆட்டம் பாட்டத்தை கவனிப்பது போல் பாவனை செய்தாள்.

 

சற்று நேரம் பொறுத்து ஏதேச்சையாக பார்ப்பது போல் அந்தப் பெண்ணின் பார்வையை தொடர்ந்தவளுக்கு அது ஒரு ஆணின் கண்களை சென்று கலக்கிறது என்பது புரிந்தது. அவர்கள் கண்கள் பேசும் காதல் மொழியை பார்க்கையில் அவளுக்கே வெட்கம் வந்து விட்டது.

 

“அடிப்போடி, இதையெல்லாமா பார்ப்பார்கள்?” சுகுணாவை செல்லமாக அடித்தாள்.

 

“இதையும் பார்க்கவேண்டும் தான்….பின் நாட்டு நடப்பு தெரிவது எப்படி.அடுத்த தைக்குள் இவர்களது திருமணம் நடந்துவிடும் பார்?” என்று சவால் விடுவதாக பேசினாள் சுகுணா.

 

“எப்படி,எப்படி……அப்படியானால் போன போகிப் பண்டிகைக்கு தாங்களும் தங்கள் வருங்காலக் கணவரும் இப்படித்தான் காதல் பேசினீர்களாக்கும்” கண்களைச் சிமிட்டி கிண்டலாக ரம்யா கேட்டதும்,

 

“சரி தான் போடி” என்று நாணத்தில் சிவந்தாள் சுகுணா.

 

அதன் பிறகு தன்னையும் மீறி ஒன்று இரண்டு முறை அந்த ஜோடியை ரம்யா கவனிக்கத் தவறவில்லை.மனதின் ஓரத்தில் ஏக்கம் எழுந்தது,  காதல் எத்தனை அழகானது. வாழ்க்கையில் மனதார காதலிப்பது கூட ஒரு வரம் தான். எத்தனை பேருக்கு அது கிடைக்கிறது. நெஞ்சில் நெரிஞ்சிமுள் பதிந்தது.

வேப்பங்குளத்தில் ஒரு காதல் - 3
வேப்பங்குளத்தில் ஒரு காதல் - 5
Leave a Reply

4 Comments on "வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 4"

avatar
  Subscribe  
newest oldest most voted
Notify of
Nataraj Nataraj
Member

Aaaka arumaiyana sinthanai plastic matrum nilatthati neer partti. Orttai kulainthayaka iruppathu evalavu pirachchanai

Vatsala Mohandass
Member

என்ன பிரச்சினை இவளுக்கு?! பிளாஸ்டிக் அவார்னஸ் அருமை!

error: Content is protected !!