Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Veppangulam

Share Us On


Readers Comments

Recent Updates

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 5

அத்தியாயம் 5

பொங்கல்  பண்டிகை :

முந்தைய   நாள் விடியுமுன் எழுந்து போகிப் பண்டிகை  கொண்டாடி விட்டு வீட்டை சுத்தப்படுத்தி  சந்தைக்குச் சென்று பொங்கலுக்கு  தேவையானவைகளை பார்த்து, பார்த்து வாங்கி வந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு நடு இரவில் தூங்கிய பெண்களெல்லாம் இப்போது விடியக்காலையில் எழுந்து வாசல் தெளிப்பதும் அரிசி மாவுக் கோலம் போடுவதும் என்று மும்முரமாக இருந்த காட்சி ரம்யாவை  ஆச்சர்யப்பட வைத்தது. ஒன்றுமில்லாததற்கெல்லாம் “ஐ ஆம் வெரி டயர்ட் “என்று சொல்லும் நகரத்து விசேசமான வாக்கியம் தான் நினைவிற்கு வந்தது.   இவர்களுக்கு அந்த டயர்ட் இருக்காதா? அல்லது அசதி இருந்தாலும் பாரம்பரியத்தை காப்பதற்காக பல்லை கடித்துக் கொண்டு  செய்கிறார்களா?

 

இதை அறிந்துக் கொள்ள எதிர் வீட்டில் கோலம் போட்டுக்   கொண்டிருந்த மல்லிகாவை கவனிக்கலானாள். அவளது முகத்தில் சந்தோஷம் தான் மேலோங்கி இருந்ததே தவிர துளியும் சோகமில்லை, நடு தெருவில்  கோலம் போடுபவர்கள்  ஏதேதோ, பேசிக் கொண்டு் ரகளை செய்து கொண்டார்கள். மைக்ரோஸ்கோப் போட்டு பார்த்தாலும் சிறிது கூட எரிச்சல் இல்லாமல்   எல்லோரும் குதூகலத்துடனே தான் வேலை செய்தார்கள். மண்மனம், மண்மனம் என்று பாரதிராஜாவும், பாலச்சந்தரும் இதைத் தான் கூறினார்களோ என்று உள்ளுக்குள் வியந்து கொண்டாள் ரம்யா!

 

“என்னடி! ஆ……ஆன்னு ” வேடிக்கை பார்த்துக் கிட்டு? இந்தா பிடி மாவை இங்கே  ஒரு பொங்கல் பானையை போடு அது பொங்கி வருவது போல் இருக்க வேண்டும். அப்போது தான் நம் குடும்பத்தில் சந்தோஷமும், செல்வமும் பொங்கி வழியும் சரிதானா? ” என்றபடி இவள் கைகளில்  அரைத்த அரிசி மாவை கொடுத்து விட்டு ஓர் இடத்தையும் காட்டி விட்டு அகன்றாள் சுகுணா!

 

வீட்டில் கற் கோலமாவில் மட்டுமே கோலம் போட கற்றிருந்தாள் ரம்யா அவளிடம் ஒரு கின்னத்தில் தண்ணீர் போன்ற அரிசி மாவையும் அதில் நனைத்து போட ஒரு வெண்துணியையும் கொடுத்தால் அவள்என்ன செய்வாள், பாவம் கிண்ணத்தையும் தரையையும் மாற்றி மாற்றி பார்த்தவள் கேள்வியும் குழப்பமுமாக பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்தா பாஸ்கரன்  வெளியே கிளம்ப வேண்டும்.

 

“வாழத்தாரும் ,கரும்பும், தாம்பூலமும் வாங்கப் போகிறேன்.சுகுணா உனக்கு  ஏதேனும் வேண்டுமா?  கேட்டுக் கொண்டே வாசலில் இருந்த காலணியை மாட்டிக் கொண்டு நிமிர்ந்தவனது பார்வை வட்டத்துக்குள் விழுந்தாள் ரம்யா. அரிசி மாவை கையில் வைத்துக் கொண்டு விழிபிதுங்க உட்காந்திருந்த ரம்யாவை பார்த்ததும் அடக்கமாட்டாமல்  சிரிப்பு வந்தது பாஸ்கரனுக்கு இருப்பினும் அதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு ஒற்ரை புருவத்தை ஏற்றி என்ன என்பது போல கேட்டான்,அவள் மலங்க மலங்க விழித்தாள். உடனே பாஸ்கரனின் இமைகள் ஒரு முறை மூடித் திறந்தன (நான் இருக்கிறேன் என்பதாக) .அடுத்தது அவனது கண்கள் சுகுணாவின் கோலம் போடும் விரல்களின்  மேல் கூர்மைப் பெற்றது. அவன் விழிப்பாதையில் சென்ற ரம்யாவின் பார்வையும் சுகுணாவின் விரல்களில் நிலைத்தது. உடனே அவன் கூறவந்தது புரிந்து விட்டது. கண்களில் மலர்ச்சியும், இதழ்களில் புன்னகையுமாக அவனுக்கு சொல்லாமல் நன்றி  சொல்லி,மறுபடியும் சுகுணாவின் விரல்களை உற்று நோக்கலானாள்.தன் வேலை முடிவடைந்து என்பது போல அவ்விடத்தைவிட்டு நீங்கினான் பாஸ்கரன்.

 

சுகுணாவின் கைகள் எப்படி இயங்குகின்றன என்று கவனித்தாள், அரிசிமாவில் நனைந்த துணியை சுருட்டி எடுத்து கையில் வைத்து விரல்களை ஒன்றாக சேர்த்து மோதிர விரலின் நுணியை தரையில் பதித்து பின் மெல்ல மெல்ல. கட்டவிரலில் அந்தத் துணியைமெல்ல மெல்ல அழுத்தி கோலம் வரைவதை பார்த்தவள்  அதை அப்படியே தானும் செய்ய முயன்றாள். ஓரளவு அதில் வெற்றியும் பெற்று விட்டாள்.மற்ற வீடுகளில் வரையப்பட்ட. கோலங்களைப் பார்த்தவள். மீண்டும் தன்னதை பார்த்தாள் மாவு ஆங்காங்கே ஒழுகி ஒரு மாதிரியாய் இருந்தது .இருப்பினும் ஏதோ புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டோம், அதில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டோம் என்கின்ற பெருமிதம் அவள் முகத்தில் தெரிந்தது.

 

திடீர் என பெண்களின் சலசலப்புச் சத்தம் கேட்டது.”நாட்டாமை ஐயா வாராக எல்லாம் பெண்களும் அவுக, அவுக கோலத்துல நில்லுங்க “ஒரு ஆண் எல்லோருக்கும் சத்தமாக அறிவுறுத்தியபடி முன்னே வந்தான்.

 

“கோலத்துல நின்னா அழிஞ்சிடாதா “சுகுணாவின் காதோரம் கிசுகிசுத்தாள் ரம்யா.

 

“கொஞ்சம் அடங்குரியா,உன் இம்சை பெரும் இம்சை, பேசாம உன் கோலத்தின் பக்கத்தில் நில் ”

 

“எதற்காம் ?”

 

“உனக்கு விஷயமே தெரியாதில்ல?   அட நான் ஒருத்தி அதைகூட உன்னிடம் சொல்லலை பாரேன் ”

 

இன்னமும் சொல்லவில்லை தான்  பெருமூச்செறிந்தாள் ரம்யா.

 

“சொல்கிறேன் ……அப்பா  அதாவது நாட்டாமை இந்த ஊர் பெண்கள் போடும் கோலத்தை பார்வையிடுவார். அவருக்கு பிடித்தமான கோலத்திற்கு ரூ.1,000 /- வழங்கப்படும். இன்றிலிருந்து மூன்றாவது நாள் அதாவது  கரிநாள் என்று நாங்கள் கூறுவோம். அந்த நாள் அன்று முடிவுகளும் பரிசுசுகளும் வழங்கப்படும்.

 

“ஓ….என்று தன் அலங்கோலத்தை பார்த்து உதட்டை பிதுக்கினாள். பரிசா? ஏதேனும் மண்டகப்படி வாங்காமல் தப்பித்தாலே சரி தான்.

 

மகன்கள் புடை சூழ நடு நாயகமாக மணிவண்ணன் வந்து கொண்டிருந்தார் எல்லோரும் வணக்கம் கூறிய கைகளும், சிரித்த உதடுளும், கம்பீரபார்வையுமாக அவர் நடந்து வருவதே ஏதோ ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது.பெரிய மனிதன் என்றால் பெரிய மனிதன் தான்.

 

எல்லா கோலங்களையும் முப்பது நொடிகள் நின்று நிதானமாக பார்வையிட்டவர், சுகுணாவதை முடித்துக் கொண்டு ரம்யாவினதற்கு தன் பார்வையை திருப்பினார்.மேலே ஒரு சூரியன் தன் கதிர்களை  பரப்பிக் கொண்டிருந்தான்,கீழே பொங்கல் பானை பொங்கி வழிந்தது,பானையின் கழுத்தில் இஞ்சிகொத்தும், மஞ்சள் கொத்தும்வரையப்பட்டிருந்தது.        அடுப்பு  எரிவது   போல் வரையப்பட்டிருந்தது . இருப்பக்கமும் கரும்பு பின் ஒரு தட்டில்  வெற்றிலை பாக்கு, வாழைப்பழம்,  ஊதுப்பத்தி, கற்பூரம் என்று ஒரு முழு பொங்கல் காட்சியை வரைந்திருந்தாள். ஆனால் ஆங்காங்கே அரிசி மாவு ஒழுகி வைத்து அந்த கோலத்தை கெடுத்துவிட்டது.இருப்பினும் நாட்டாமையின் பார்வை பாராட்டுதலாகவே ரம்யாவின் முகத்தில் படிந்து மீண்டது. அவர் பின்னால் வந்த பாஸ்கரனின் புருவம் வில் போல் ஒரு முறை ஏறி இறங்கியது.

 

“ம் …….என்று உதடு குவித்து நன்றாக இருப்பதாக ஜாடை காட்டினான்.ஏதோ ஒரு இமை புரியாத மகிழ்ச்சி  தன்னுள் பரவுவதை ரம்யாவால் தடுக்க முடியவில்லை.

வேப்பங்குளத்தில் ஒரு காதல் - 4
வேப்பங்குளத்தில் ஒரு காதல் - 6
Leave a Reply

Be the First to Comment!

avatar
  Subscribe  
Notify of
error: Content is protected !!