Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


Readers Comments

Recent Updates

கனல்விழி காதல்- 86

அத்தியாயம் – 86

“சாரி பேட்டா… வெரி சாரி… தெரியாம நடந்துடுச்சு… ப்ளீஸ் டோண்ட் லூஸ் யுவர் ஹோப்… எதுவும் ஆகாது…” என்ற நரேந்திரமூர்த்தியின் வார்த்தைகள் அவன் செவிகளில் ஏறவே இல்லை. மதுராவின் வெறுப்பும் நிராகரிப்பும் தந்த வலியை கண்மூடி அனுபவித்தபடி தலைகுனிந்து அமைதியாக அமர்ந்திருந்தான். சற்று நேரம் கழித்து அவரை நிமிர்ந்து பார்த்தவன், “மதுராவ கூட்டிட்டு போறேன்” என்றான்.

 

உடனே படமெடுக்கும் நாகம் போல் சீற்றத்துடன் நிமிர்ந்தாள் பிரபாவதி. “அதெப்படி! இவ்வளவு தூரம் வந்த பிறகு எதை நம்பி என் பொண்ண அந்த வீட்டுக்கு அனுப்பறது!” என்றாள் ஆங்காரத்துடன்.

 

“ஹௌ டேர் யூ…” – எரிமலை போல் பொங்கி எழுந்த தேவ்ராஜ் அடுத்த வார்த்தை பேசுவதற்குள், “பிரபா…!!!” என்கிற நரேந்திரமூர்த்தியின் கணீர் குரல் அந்த அறையையே அதிர செய்தது.

 

பிரபாவதி திடுக்கிட்டுப் போய் கணவனைப் பார்க்க, குறையா கோபத்துடன் அவளை முரைத்துக் கொண்டு நின்றான் தேவ்ராஜ். அவன் மனம் எரிந்தது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு எப்படி அவள் தன் எதிரில் நின்று பேசுகிறாள் என்று கொதித்தது அவன் உள்ளம். அவளை பார்க்கவே வெறுப்பாக இருந்தது.

 

“தேவ்… உட்காரு… உட்காருன்னு சொல்றேன்ல்ல… ப்ளீஸ்… உட்காருப்பா…” – பெரும்பாடுபட்டு அவனை இருக்கையில் அமர வைத்தார் நரேந்திரமூர்த்தி.

 

“கருவில் இருக்க குழந்தைக்கு கூட உங்க வீட்ல பாதுகாப்பு இல்ல. எந்த நம்பிக்கையில என் மனைவியை நா இங்க விட்டுவைக்க முடியும்?” – இறுகியிருந்த அவன் குரலில் தெரிந்த எஃக்கு உறுதியில் பதட்டமானார் நரேந்திரமூர்த்தி.

 

“அது தெரியாம நடந்த தப்புப்பா…”

 

“இல்ல… உங்க சம்மதத்தோட… நால்லா தெரிஞ்சே நடந்த கொடுமை… இல்லைன்னு சொல்லுங்க…” – நேருக்கு நேர் அவர் கண்களை பார்த்தான். அந்த பார்வையை சந்திக்க முடியாமல் தலைகவிழ்ந்தார் பெரியவர்.

 

“இதுக்குமேல ஒரு நிமிஷம் கூட என்னோட மனைவியை நா இங்க விடமாட்டேன். நா கூட்டிட்டு போறேன்…” – அவளுடைய அறையை நோக்கி நடந்தான்.

 

“தேவ் அவசரப்படாத…” – பரபரப்புடன் வெளிப்பட்ட அவர் குரல் தேவ்ராஜின் வேகத்திற்கு தடைபோட்டது. அவன் நின்று அவரை திரும்பிப் பார்த்தான்.

 

“உம்மேலையும் தப்பு இருக்குப்பா… நீ நடந்துகிட்டு விதம் சரியில்ல. அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு…”

 

“ஐ நோ… நா நடந்துகிட்டவிதம் சரியில்லதான். ஆனா நா ஏன் அப்படி நடந்துக்கிட்டேன். எதுக்கு எனக்கு அவ்வளவு கோபம் வந்தது… இதெல்லாம் எங்க ரெண்டுபேருக்கும் மட்டுமே தெரிஞ்ச விஷயங்கள். அதெல்லாம் நாங்க பேசினாத்தான் சரியாகும்… விலகி போய்ட்டா எதுவுமே மாறாது… நீங்க எல்லாரும் இதுல தலையிடாம இருக்கறது நல்லது” என்று கூறிவிட்டு மனைவியின் அறைக்குள் நுழைந்தான். அடுத்த சில நொடிகளிலேயே, “மதூ…” என்ற அவனுடைய அலறலில் வீடே கிடுகிடுத்தது.

 

நாசியில் கசியும் குருதியோடு சுயநினைவிழந்து மரக்கட்டைப்போல் கிடந்த மதுராவின் உடல் சில்லிட்டுப்போயிருந்தது. சர்வமும் ஒடுங்கிப்போன தேவ்ராஜ் பதட்டத்துடன் அவளை தூக்கி உலுக்கினான். தட்டி எழுப்பினான். ‘மது… மது…’ என்று பிதற்றினான். அவள் அசைவற்றுக் கிடக்கவும் பயந்துப் போய் அலறினான். நொடியில் வீடே அங்கு கூடிவிட்டது.

 

“என்ன முடிவு பண்ணியிருக்கீங்க சார்?” – மருத்துவரின் பார்வை தேவ்ராஜின் முகத்தில் பதிந்தது.

 

“புரியில. நான் என்ன முடிவு பண்ணறது?”

 

“குழந்தையை பற்றி…”

 

“எனக்கு என்னோட குழந்தை வேணும். பத்திரமா வேணும்” – இப்போது அவருடைய பார்வை நரேந்திரமூர்த்தியின் முகத்தில் அழுத்தமாக பதிந்தது.

 

“அவங்க சாப்பிட்ட மாத்திரை ரொம்ப வீரியமானது. குழந்தைக்கு முப்பதுலேருந்து நாற்பது பர்சன்ட் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கு. அப்புறம் நாளைக்கு ஏதாவது பிரச்சனைன்னா என்னை குறை சொல்லக் கூடாது” – அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

 

“என்ன பேசற நீ! நீதானே அந்த மாத்திரையை கொடுத்த.. நீயே அதை சரி பண்ணறதுக்கும் மருந்து கொடு… இல்ல… நீ என் குழந்தைய சேதப்படுத்தின அதே வழியில உன்னையும் நா சேதப்படுத்துவேன் ” என்று மருத்துவரிடம் ஆவேசமாக உறுமினான். அவருடைய பார்வை மீண்டும் நரேந்திரமூர்த்தியிடம் பாய்ந்து அவரை குற்றம் சொன்னது.

 

பின்னாளில் இது போல் பிரச்சனை வந்தால் தானே பொறுப்பெடுத்துக்கொள்வதாகக் கூறித்தான் அன்று கருக்கலைப்பிற்கு மருத்துவரை சம்மதிக்க வைத்தார் நரேந்திரமூர்த்தி. அதை இப்போது நினைவுகூர்ந்து,

 

“தேவ்… ப்ளீஸ் அமைதியா இரு… இவருக்கும் அந்த டேப்ளெட்ஸ்சுக்கும் சம்மந்தம் இல்ல…” என்று கூறி மருத்துவரை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கில் அவனை திசைதிருப்பினார்.

 

கொலைவெறியுடன் அவரை முறைத்த தேவ்ராஜ், “இவரு கொடுக்கலைன்னா! வேற எங்க போயி வாங்கிட்டு வந்தீங்க? யாரு ப்ரிஸ்கிரைப் பண்ணினது?” என்றான் ஆத்திரத்துடன்.

 

“அதை அப்புறம் பேசிக்கலாம். இப்போ இங்க ஆகவேண்டியதை பார்ப்போம். நீ கொஞ்சம் அமைதியா இரு” என்று அவனை சமாதானம் செய்ய முயன்றுவிட்டு மருத்துவரிடம் திரும்பி, “குழந்தையை சேவ் பண்ண என்ன செய்யணுமோ அதை செய்ங்க… எங்களுக்கு அந்த குழந்தை பத்திரமா வேணும்” என்றார். மருத்துவர் நெற்றியை நீவினார்.

 

“மதுரா ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்கா. வீரியமான மாத்திரையையும் சாப்பிட்டிருக்கா. எந்த நேரத்துலேயும் எதுவும் ஆகலாம். ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். ஒரு சின்ன டென்ஷன் கூட அவளை நெருங்க கூடாது. ரெத்த அழுத்தம் கண்டிப்பா சீரா இருக்கணும் இல்லன்னா எந்த நேரத்துலேயும் மிஸ்கேரேஜ் ஆயிடலாம். சத்தான உணவையும், நா எழுதித்தர்ற மருந்தையும் சரியான நேரத்துல கொடுங்க. மைண்ட் ஸ்ட்ரெஸ் இருக்கக் கூடாது. அதுக்கு இப்போ பார்த்துட்டு இருக்க சைக்கியார்ட்டிஸ்ட்டை தொடர்ந்து பாருங்க. அவங்க என்ன சொல்றாங்களோ அதை கட்டாயமா ஃபாலோ பண்ணுங்க. கடவுள் கைவிடமாட்டார்…” – கடைசியாக கடவுள் மேல் பாரத்தை போட்டார் மருத்துவர். கலங்கிப்போய்விட்டான் தேவ்ராஜ், “எந்த நேரத்துலேயும் மிஸ்கேரேஜ் ஆயிடலாம்” என்ற மருத்துவரின் கூற்று அவனை அச்சுறுத்தியது. அசைவற்று அமர்ந்திருந்தவனை நரேந்திரமூர்த்திதான் வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்.

 

திகிலடைந்தது போல் பேச்சற்று மெளனமாக ஒரு மூலையில் வந்து அமர்ந்துவிட்ட மருமகனை ஆதுரத்துடன் பார்த்த நரேந்திரமூர்த்தி, அவனிடம் நெருங்கி “கவலைப்படாத தேவ். எதுவும் ஆகாது” என்று அவனுடைய தோளை ஆதரவாக பற்றினார்.

 

அதே நேரம் சூறாவளியின் சீற்றத்துடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இராஜேஸ்வரி மகனைக் கண்டதும் அவனிடம் பாய்ந்து வந்து அவன் சட்டையை பிடித்து இழுத்து உலுக்கி, “என்னடா பண்ணி தொலைச்சிருக்க… என்ன பண்ணி தொலைச்சிருக்க? என் வாழ்க்கைதான் வீணா போச்சு… நீங்களாவது குடும்பம் குழந்தைகுட்டி சந்தோஷமா வாழ்வீங்கன்னு பார்த்தா நீங்களும் இப்படி வாழ்க்கையை நாசம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறீங்களே! ஏண்டா இப்படி இருக்கீங்க?” என்று ஆத்திரப்பட்டாள். அவள் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் உகுந்தது. பிரபாவதி மேல் கொட்ட முடியாத அத்தனை கோபத்தையும் தன் மகன் மீது கொட்டித்தீர்த்தாள்.

 

தாயின் கோபத்திற்கு அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. நெஞ்சிலும் தோளிலும் அவள் அடிக்கும் அடிகளை வாங்கி கொண்டு சிலை போல் அசையாமல் அமர்ந்திருந்தான்.

 

“ராஜி… விடு… அவனை விடு ராஜி… அவனே உடைஞ்சு போயிருக்கான். அவன்கிட்ட போயி சத்தம் போடற” – தங்கையை அனைத்துப் பிடித்தார் நரேந்திரமூர்த்தி. சட்டென்று அவரை உதறித்தள்ளினாள் தங்கை.

 

“உங்களுக்கு கூட இதை தடுக்கணும்னு தோணலையா? எப்படி மனசு வந்தது உங்களுக்கு?” – ஆற்றாமையுடன் கேட்டாள். அவர் பதில் சொல்ல முடியாமல் சங்கடத்துடன் நிற்க, “எல்லாம் என்னோட விதி. இதையெல்லாம் பார்த்து சகிக்கணுங்கறது என்னோட தலையெழுத்து. எனக்கு பிறந்த மூணும் மூணு திசைக்கு இழுத்துகிட்டு போகுது… உங்களையெல்லாம் குறை சொல்லி என்ன பண்ண முடியும்?” என்று முணுமுணுத்தபடி அவரிடமிருந்து விலகி மருமகளின் அறையை எட்டிப் பார்த்தாள். பிரபாவதி உள்ளே இருப்பதை கண்டுவிட்டு உள்ளே செல்ல விரும்பாமல் வெளியே கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

 

இப்போது இருக்கும் மனநிலையில் அவள் முகத்தில் விழிப்பதைக் கூட விரும்பவில்லை இராஜேஸ்வரி. வாய்திறந்து பேசவே பயந்தவளாக அமைதியாய் பூனை போல் மெதுவாக வந்து தாய்க்கு அருகில் அமர்ந்தாள் மாயா. இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது. எதுவும் தன்னுடைய கவனத்திற்கு வரவே இல்லை என்பதில் மாயாவின் மீதும் அவளுக்கு கோபம் இருந்தது. எனவே மகள் பக்கமும் திரும்பாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.

 

தங்கையின் கலங்கிய முகத்தைக் காண நரேந்திரமூர்த்திக்கு என்னவோ போல் இருந்தது. “உள்ள வா… மது முழிச்சிகிட்டுதான் இருக்கா. பார்க்கலாம்…” என்று அழைத்தார். அவள் அசையவில்லை. பிரபாவதி இருப்பதால்தான் இவள் உள்ளே வர மறுக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவர், உடனே உள்ளே சென்று மனைவியை வெளியே அனுப்பிவிட்டு, தங்கையை உள்ளே அழைத்தார். நாத்தனாருக்கு கொடுக்கப்படும் முன்னுரிமையை கடுப்புடன் பார்த்தபடி ஒதுங்கி நின்றாள் பிரபாவதி.

 

அனைவரும் அவ்வப்போது மதுராவை உள்ளே சென்று பார்ப்பதும் வருவதுமாக இருக்க தேவ்ராஜ் மட்டும் அமர்ந்த இடத்திலிருந்து அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கு ஆதரவாக அருகில் வந்து நின்றார் நரேந்திரமூர்த்தி.

 

“மதுக்கு ஒண்ணும் இல்ல தேவ்…”

 

“நா அவளை பார்க்கணும்…” – தவிப்புடன் கேட்டான்.

 

உடனே, அருகில் நின்ற பிரபாவதி, “ஒரு சின்ன டென்ஷன் கூட அவளை நெருங்க கூடாதாம்…” என்றாள் குத்தலாக.

 

அந்த வார்த்தை சுருக்கென்று அவன் மனதில் தைத்தது. அவள் அவனை குறிப்பிட்டுத்தான் கூறுகிறாள் என்று ஆண்கள் இருவருக்குமே புரிந்தது. நரேந்திரமூர்த்தி மனைவியை முறைத்தார். இப்போது தேவ்ராஜ் பிரபாவதியோடு சண்டை போடும் மனநிலையில் இல்லை. மனம் மனைவியின் அருகாமைக்காக ஏங்க மாமனை பரிதாபமாகப் பார்த்தான்.

 

“என்னோட ப்ரசன்ஸ் மதுக்கு டென்ஷனா இருக்க முடியாது மாமா… அவளால என்னை வெறுக்க முடியாது… ஒதுக்க முடியாது… நிச்சயம் முடியாது. என்னாலதான் இது எல்லாமே… என்னாலதான் அவ நொறுங்கிப்போய்ட்டா… நான்தான் அவளை பிரேக் பண்ணினேன். இது எல்லாமே உண்மைதான்… ஆனா இது எல்லாத்துக்கும் மேல இன்னொரு உண்மையும் இருக்கு… என்னாலதான் அவளை பிக்ஸ் பண்ண முடியும். என்னால மட்டும் தான் முடியும். அவ என்னை தேடுவா… என்னோட பிரசன்ஸ் அவளுக்கு தேவைப்படும்… என்னால அவளை விட்டுப் போக முடியாது மாமா…” – தவிப்புடன் கூறினான்.

 

பரிவோடு அவனை பார்த்தவர், “உன்ன யாரு விலகிப் போக சொன்னா? வா… உள்ள அவனது உன் மனைவியை பாரு… எல்லாம் சரியாயிடும்…” – அவன் கையை பற்றினார்.

 

“கூட்டிட்டு போங்க… போயி ஒரேடியா அவளை மேல அனுப்பிவச்சுட்டு வாங்க” – பிரபாவதியின் குரோத குரலில் அடிவாங்கிய தேவ்ராஜ், “நோ…” என்று அவர் பிடியிலிருந்து தன் கையை உருவிக் கொண்டான்.

 

உடம்பெல்லாம் நடுங்குவது போலிருந்தது. ‘தாய்தானே இவள்! எப்படிப்பட்ட வார்த்தையை சொல்லிவிட்டாள்!’ – அவன் இதயம் தடதடத்தது.

 

“ஏய்…! அறிவில்ல உனக்கு? என்ன பேச்சு பேசற?” – நரேந்திரமூர்த்தி மனைவியை அதட்டுவது அவன் காதில் கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் கேட்டது. தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

 

“இவ இப்படித்தான் ஏதாவது உளறிக்கிட்டு இருப்பா. நீ எழுந்து வா…” – மருமகனின் கையைப் பிடித்து அழைத்தார். இல்லை என்பது போல் தலையசைத்தவன், “என்னால் முடியாது …” என்றான். ‘எப்போ வேணுன்னாலும் மிஸ்கேரேஜ் ஆகலாம்…’ – மருத்துவரின் குரல் அவன் செவியில் எதிரொலித்தது. முகமெல்லாம் சூடாகி வியர்த்தது.

 

“இவ பேச்சையா பெருசா எடுத்துக்கற?” – வியப்புடன் கேட்டார் நரேந்திரமூர்த்தி. அவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஆனால் தான் மதுராவை பார்ப்பது அவளுக்கு ஆபத்தாக முடிந்துவிடுமோ என்கிற பயம் மேலெழுந்தது.

 

“தேவ்… தேவையில்லாம உன்ன குழப்பிக்காத. மதுராவுக்கு ஒண்ணும் இல்ல… அவளுக்கு எதுவும் ஆகாது. நீ பயப்படாத…” – அவனுடைய முகமாற்றத்தைக் கண்டு பரபரப்புடன் இதை சொன்னார் பெரியவர். அவருடைய பேச்சு அவன் மனதில் பதியவில்லை. அவனை ஆட்கொண்டிருந்த பெரும்பயம்… குழப்பம்… மதுராவிடம் அவனை நெருங்கவிடாமல் துரத்தியது. மனதில் கொள்ளை பிரியம் இருந்தும், மாமனார் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் அவளை பார்க்க உடன்படவில்லை.

 

“மாயா…” – தங்கையை அழைத்தான். நொடிப்பொழுதில் தமையனின் எதிரில் வந்து நின்றாள்.

 

“பாய்?” – நெஞ்சுக்குழியிலிருந்து பொங்கிவந்த ஓர் உணர்வு தொண்டையை அடைத்துக்கொள்ள பேசமுடியாமல் சற்றுநேரம் மெளனமாக நின்றான். பிறகு,

 

“மதுரா உனக்கு இன்னொரு ஆதிரா… பார்த்துக்க…” என்றான் கரகரத்த குரலில். உயிரை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு வெறும் கூடாக வெளியேறும் தமையனை இயலாமையுடன் பார்த்தாள் மாயா.

 

கனல்விழி காதல் - 85
கனல்விழி காதல் - 87
Leave a Reply

19 Comments on "கனல்விழி காதல்- 86"

avatar
  Subscribe  
newest oldest most voted
Notify of
Member

nice

Member

Aattha prabhavathi nee thaiya illa peiya nee vaaya thrirakkaama irunthale pothum ellam nallatha natkkum .thozhi nithya antha prabhavathiya annkuttu poka sollunga. Enakku kova kovama varuthu aama sollipputten.

Thadsayani Aravinthan
Member

Hi mam

இராஜேஸ்வரியின் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பாசமானவர்கள்தான்,அதுதான் தேவ் தன் தங்கையுடன் மதுரா இன்னொரு ஆதிரா என்று கூறி விலகி செல்கின்றார்,ஆனால் மதுராவுக்குக்கும் குழந்தைக்கும் ஏதாவது நடந்துவிடுமோ என்ற தேவ்வின் பயம் மதுராவை எங்கு கொண்டுபோய்விடுமோ தெரியவில்லை ,ஏனெனில் நிச்சயம் மதுரா தேவ்வை தேடுவார்.

நன்றி

Member

good update

Yazhvenba M
Member

Sema dialogues…

Member

super update, eagerly waiting for your next update

ugina begum
Member

hooooo pothumay madhukku ivllooo kastammmm
devum pawampaaaaaa

Member

Romba feelinga eruku nithya
Super wordings 💖

Member

தேவ் சொன்ன ஒரு வார்த்தை…
.மது இன்னொரு ஆதிரா!இப்போ மாயாவுக்கு புரிஞ்சுருக்கும்,மது எவ்வளவுமுக்கியம்ன்னு!இனி அவள்பார்த்துக்குவாபிரபாவதி. யாருக்கும் அடங்க மாட்டா போலிருக்கே!

Member

Nithyaaa … Pothum pa… Ithukku mela azhavaikathiga… Kuzhanthai madhu renduperum nallabadiya dev kitta varanum

Kani Ramesh
Member

Super sis…dev madhura mela vachirukura luv epic😍😍…intha prabhavathy thirunthave matala madhu Deva sikarama sethu vavhidunga sis…baby ku onum agathula

Dhivya Bharathi
Member

Sister mudila… kalailaiye aluga vachitinga😂😭😭😭😭😱😱😱😱😰😰😰😰

Pon Mariammal Chelladurai
Member

சொந்தங்களில் கல்யாணம் வேண்டாமென்பது அறிவியல் காரணம் இருந்தாலும்…பெரியவர்கள் இருபுறமும் இழுத்து….தவளை, எலி நட்பு போல் ஆகிடும்.

Member

Dev deserves it not Madhura. Idiot Dev panna thappuku ellam madhura than suffer agura.

Member

நித்யா வைய்மா வைய்? அழுதுட்டேன்….மதுராவையும் குழந்தையும் தேவ்கிட்ட நல்லபடியா சேர்த்திருங்கமா…

Member

Dev un amma solvathu pol ungalukku vaala teriyalai.praba unga maga mulitaal mutalil veliyetrum aal neengalaa than irupienga.raji unga melum tapirukku

Member

So sad

Member

😭

Vinayagam Subramani
Member

‘மாயா ,மதுரா உனக்கு இன்னொரு ஆதிரா”….எவ்வளவு காதல் தேவ்க்கு..மாயா என்ன மாதிரியான தங்கை..தன் அண்ணன் முன்னால் அனைவரும் மாயாவுக்கு ஒன்றுமில்லை.. அற்புதமான பதிவு..தேவாவின் காதலை ,பாசத்தை,தவிப்பை,வேதனையை தெளிவாக விளக்கி தேவாவின் மேல் எனக்கிருந்த வெறுப்புணர்வை மாற்றியிருக்கிறார் நித்யா மேம்..
மதுரா சாப்பிட்டது வீரியமான மாத்திரை என்பது தான் இன்றைய பதிப்பின் வலிநிறைந்த பகுதி…பார்ப்போம்… என்ன நடக்கும் என்று…

Very emotional,touchy episode… another outstanding work from Nithya Mam..

Don`t copy text!