Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


Readers Comments

Recent Updates

ப்ரியசகி-18

அவள் உடைந்து அழுவதைக் காணாமல் தன் மார்பிலிருந்து அவள் முகத்தை நிமிர்த்தி ‘குட்டிமா இப்ப என்னாச்சினு இப்படி அழற விடுடா அழதமா’ என்றான் ‘சரி மாமா உனக்கு கிஸ் குடுத்தேன்ல’ எனக்கு எங்கே என்றான்…

 

அப்போது முடிவு செய்தாள், தன் கடைசி நாள் வரை, அவனது மகிழ்ச்சி கலையா வண்ணம் பார்த்துக் கொள்ள முடிவெடுத்தாள், அவன் கழுத்தில் தன் கைகளால் மாலையிட்டு ‘என் மாமாவுக்கு இல்லாததா’ என்று எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட…’ நோ நோ இது சீட்டிங்’ என்றான்… ‘மாமா வெளில நின்னுட்டு அங்கலாம் குடுக்க முடியாது’ என்றாள் ‘ஹோ மேடம் என்ன கட்டி புடிச்சதுக்கெல்லாம் பார்க்கல, நான் ஒரு முத்தம் கேட்டா மட்டும் யாராவது இருக்காங்களா’ என்றான்…

 

‘அவளை சீண்டும் வண்ணம் குட்டிமா ஒன் வீக் ஆச்சிடா, நான் பாவுமில்ல’ என அவளோ அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ‘ மாமா நேத்து நைட் கூட’ என்று ஆரம்பிக்க அவனின் நக்கல் சிரிப்பும் விஷம பார்வையை தாங்க முடியாமல்… அவன் மார்பில் ஆழ்ந்துப் புதைந்தாள்..

 

பின்பு அவனுடன் உணவு உண்ண வருகையில் அவனுடன் அமர்ந்து அவனுக்கு மட்டுமின்றி எல்லாருக்கும் பரிமாறினால்… இவர்கள் இருவரின் காதல், அன்பு அன்யோனியத்தைப் பார்த்து  கௌரியும் அவளது கணவர் சுந்தரமும் அக மகிழ்ந்து அவர்களை வாழ்த்தினர்..

 

மற்றோரு ஜீவன் மையூரிக்கோ இவர்கள் காதல் பார்வை தாங்காமல் உள்ளே புகைந்தது…

 

மறுநாள் கார்த்தி திவியை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு செல்ல ஆயுத்தமானான் .ஆனால் அவளோ ‘மாமா போயே ஆகனுமா’ என

 

‘குட்டிமா இப்படி பயந்துக்கிட்டே இருந்தா ப்ராப்ளம் எப்படி சால்வ் ஆகும்’ என்றான்

 

‘ பச் …. பயம் இல்ல பட் கில்டியா இருக்கு… அவங்க என்ன ஏதாவது சொன்னா கூட பரவலை மாமா ஆனா உங்கள ஏதாவது சொல்லிட்டா… என்னால தாங்க முடியாது மாமா’ என்று கூறி அவனைக் கட்டிக்கொண்டாள்…

 

‘மை டியர் குட்டிமா அப்படிலாம் நடக்காது… அப்படி நடந்தாலும் பரவாலடா…ஐ நோடா குட்டி நம்ப மேல கோபம் இன்னும் போயிருக்காது… பட் நீயும் அவங்க சிட்டிவேஷன்  புரிஞ்சிக்கணும்… ஓகே ‘ என இருவரும் கிளம்பி சென்றனர்…

 

முதலில் அவர்களின் வருகை திவ்யாவின் அம்மா லட்சுமிக்கு பிடிக்காமல் இருக்க… வீடு தேடி வந்தவர்களை உபசரிப்பது தான் முறை துரோகியே வீடு தேடி வந்தாலும் வா என்று அழைத்து உபசரிப்பது தான் முறை அதுவே நம் தமிழர் பண்பாடு… என நினைத்து அவர்களை வரவேற்க… லட்சுமின் கண்கள் திவியை ஆராய்ந்த வண்ணம்…

 

கழுத்தில் தாலிச் சங்கலி நெற்றியில் குங்குமம் மிளிர கைகளில் தங்க வளையலுடன் சேர்த்து கண்ணாடி வளையல் மற்றும் அவள் உடுத்திருந்த பட்டு புடவை தலையில் வைத்திருந்த மல்லிகை சரம்…. இவை அனைத்திற்கும் மேலாக கார்த்திக்கின் அனுசரிப்பு அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கும் குணம் பார்க்க நிறைவாக இருக்க… அவள் முகத்தில் அதிமிகுந்த மகிழ்ச்சியை கண்டார்…

 

தாங்கள் தேடி வைக்க நினைத்த வாழ்க்கையில் கூட இவள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பாள் என்றாள் சந்தேகமே… திவ்யா தன் தாயிடம் மன்னிப்பு வேண்டினாள்… கார்த்தியும் மன்னிக்க வேண்ட… ஐயோ பரவால மாப்பிள்ளை என திவிக்கு குளிர்ந்து விட்டது… அவரோ ஆரம்பத்தில் உங்கள் இருவர் மேல் கோபம் கொண்டிருந்தாலும் … நீங்கள் அவளை நன்றாக பார்த்துக் கொண்டு அவளுக்கு பார்த்து பார்த்து செய்வது காணுகையில் எங்கள் கோபம் சற்று மட்டடைந்தது…

 

கார்த்தியிடம் அவனின் பெற்றோர் பற்றி விசாரித்தார்… மேலும் சற்று நேரம் பேசிவிட்டு… திவ்யா தன் தந்தையின் நலம் விசாரித்தாள்…

 

பின்பு ‘அம்மா அப்பாக்கு என் மேல கோபம் போய்டிச்சா’

 

கொஞ்சம் இருக்குமா ஏதோ அக்கம் பக்கதுல நல்ல அபிப்பிராயம் இருக்கிறதால தல நிமிர்ந்து நடக்குறாரு…இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகிடுவாரு ‘ என்றார்…

 

‘சரிமா நீ உடம்ப பாத்துக்கோ தம்பி தங்கச்சிலாம் நல்லா படிக்கிறாங்களா’ என்று அவர்களையும் விசாரித்து விட்டு ‘அப்பாவ கேட்டதா சொல்லுமா’என்று தான் வாங்கி வந்ததை கொடுத்துவிட்டு இருவரும் கிளம்ப… லட்சுமியோ’ மாப்பிள ஒரு நிமிஷம் என்று தன் மகளை அழைத்து ஏதாவது விசேஷமா’ என்றார்…

 

‘இன்னும் தெரியலமா இருந்தா நான் கண்டிப்பா சொல்றேன் அம்மா என்றாள்.

 

கார்த்தி திவி இருவரும் வருகிறோம் என்று விடைப்பெற்றுச் சென்றனர்…

 

வீட்டில் நுழைய கார்த்திக் தனக்கு கொஞ்சம் வேலையிருப்தாக கூறி வெளியில் செல்ல… தக்க சமயம் எதிர்பார்த்து… திவ்யா இருக்கும் அறைக்கு சென்றாள் மையூரி

 

‘ என்ன திவ்யா உங்க வீட்டுக்கு போயிட்டு வந்தியா, சரி என்ன கொடுத்தாங்க உங்க வீட்டுல, அவள் கேட்டவிதம் ஏதோ நக்கலாக இருக்க’ அவளோ அப்பாவியாக அவளைப் பார்த்து ‘எனக்கு புரியல’ என்றாள்…

 

‘ஹோ புரியலையா புரியுர மாதிரி சொல்லட்டா’ என திவ்யாவை பார்த்து ‘ஒன்னுமே இல்லாத அன்னக்காவடி நீ, என்கிட்ட இல்லாதது என்ன உன்கிட்ட இருக்குனு கார்த்திக் உன்ன மேரேஜ் பண்ணிக்கிட்டாரு, உனக்கெல்லாம் பேக்கிரௌன்டே இல்ல, எங்களோட ஸ்டேடஸ் என்ன, ஏன் மாமாவோட ஸ்டேடஸ் என்ன… எங்களுக்கு  ஈக்வளா நீ வரகூட முடியாது மைண்ட் இட்…. ஏணி வச்சாகூட எட்டாது , உனக்கு சுகபோக வாழ்க்கையா,  உன்ன கார்த்திக்கிட்ட இருந்து பிரிக்கிறேன்டி ‘ என்று அவளிடம் சவால் விட்டு செல்ல, அவளோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்…

 

திவ்யா மையூரியின் எண்ணத்தை தன் கணவனிடம் இருந்து மறைத்து வைத்தாள்…

 

மையூரியின் பழிவாங்கும் வன்மம் கொழுந்து விட்டு எரிய… அவளின் திட்ட படி தடயம்மில்லாமல் இருக்க வேண்டும் யாருக்கும் சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நிதானமாக திட்டம் தீட்டினாள்… வழியில் வழுக்கி விழும்மாறு செய்ய வேண்டும்… என்று வழியில் எண்ணையை ஊற்றினாள்…

 

கார்த்திக்  இரவு வெகு நேரம் கழித்து வந்ததால் இரவு உணவு உண்ணாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்க… அவனுக்காக தானும் உண்ணாமல் இருக்க, வேலை வேலை என்று இருப்பவனிடம் கோபம் கொள்ளாமல், ‘மாமா சாப்பிட்ட பிறகு வேலை செய்யலாம்… உங்ளால நானும் இன்னும் சாப்பிடல’ என ‘குட்டிமா இவ்ளோ நேரம் சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருந்த உரிமையாய் அவளிடம் கோபித்துக் கொள்ள அவளோ தன் இதழ்களில் மென்னகை புரிய’மாமா நீங்க சாப்பிடாம நான் எப்ப சாப்பிட்டிற்கேன்’ என அவள் கண்களில் வழிந்த காதலை அவன் கண்டான் ‘அப்போ நீ நான் சொல்றத கேட்கனும் ஓகேவா’ என என்ன என்று கேட்க ‘நீ எனக்கு ஊட்டி விட்டா நான் சாப்பிட்றேன்’ என ‘ஏன் மாமா நான் என்ன உங்களுக்கு புதுசா ஊட்றேனா என்ன, ஊட்டி விடுனு சொன்னா ஊட்டி  விடபோறேன்’ என்று கூறியவளை இமைக் கொட்டாமல் பார்த்து அவளை தன்னுடன் இருக்கி அணைத்து இதழ்களில் முத்தமிட்டான்…

 

நீண்ட நேரம் தொடர்ந்த முத்த யுத்தத்தில் அவனே வெற்றி பெற்றான்… ‘மாமா போதும் நான் போய் சாப்பாடு கொண்டு வரேன்’ என துள்ளலுடன் கீழே சென்றாள்… அவனுடன் தனக்கும் சேர்த்து எடுத்து செல்லுமாறு கீழே இறங்கினாள்…

 

அப்பொழுது எண்ணை மீது காலை வைக்க… நீலை தடுமாறி விழும்முன் தன் வயிற்றை முதலில் இறுகப் பிடித்துக் கொண்டு படியில் உருள தொடங்கினாள். தட தட வென்று சத்தம் கேட்க கார்த்தி தன் அறையிலிருந்து வெளியில் ஓடி வந்தான் வில்லில்லிருந்து புறப்படும் அம்புப்போல் பாய்ந்து அவளை தூக்கினான்…

 

அவளை நிலைக்கொள்ளச் செய்து அவள் கன்னத்தில் தட்ட அவள் மயக்க நிலைக்கு சென்றாள்… இவையாவும் மையூரி பார்த்துக் கொண்டிருக்க தான் நினைத்ததை நடத்தி விட்டோம் என்று மகிழ்ச்சியில் இருந்தாள்… கார்த்திக் அவளை எழுப்பினான், ஆனால் அவளிடம் அசைவின்றி போக பயப் பந்து தொண்டை அடைக்க,  பயம் தொற்றிக் கொள்ள இந்த பதட்டத்தில் வீட்டில் இருப்பவர்களை அழைக்கும் எண்ணம் வராமல்….

 

அவளை கையில் ஏந்திச் சென்று போர்டிகோவில் நிற்கும் தன் காரில் அவளைக் கிடத்தி மருத்துவமனைக்கு சென்றான்…

 

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மருத்துவனான தன் நண்பன் தர்ஷனின் மனைவி வர்ஷாவிற்கு தொடர்புக் கொண்டு தன் மனைவி மயக்கமடைந்த தாகவும், மருத்துவமனைக்கு வந்துக் கொண்டிருப்பதாகவும் கூறினான் ‘வர்ஷா ஐம் கார்த்திக், பீ ரெடி வித் ஸ்டேர்க்சர், ஐம் கமிங்’ என்று தொடர்பை துண்டித்தான்….

 

மையூரிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியளித்தாலும் மறுபக்கம் திகில் பரவியது… அவள் தன்னைக் கண்டுக் கொண்டாள்,  என்ன நடக்கும் கார்த்திக்ற்கு தெரிந்தாள் தன் நிலைமை அம்பேல் என மனதில் நினைத்தால்… மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது அவள் மயங்கிச்சரிந்ததில் சற்று பயம் எட்டிப் பார்க்க… அவர்கள் வரவிற்காக காத்திருந்தாள்…

 

திவியை எமர்ஜின்சி வார்டில் அனுமதித்து தலையை தன் இருகைகளால் தாங்கிப்பிடித்து வெளியில் அமர்ந்திருந்தான் …. ஒரு அரை மணி நேரம் கழித்து வர்ஷா கார்த்திக்கை தன் அறைக்கு வருமாறு அழைத்துச் சென்றாள்….

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி

ப்ரியசகி-17
ப்ரியசகி-19
Leave a Reply

3 Comments on "ப்ரியசகி-18"

avatar
  Subscribe  
newest oldest most voted
Notify of
Member

Enna rakasiyam vacchirukkinga dozhi .kathai viruvorupa pokuthu

Don`t copy text!