Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


Readers Comments

Recent Updates

முகங்கள் பிளூபர்ஸ்

அப்பாடி முகங்கள் கதையை ஒருவழியா  முடிச்சாச்சு, இந்த கதையை எழுதும்போது நடந்த லூட்டியைத்தான் இந்த பிளுபர்சில் எழுதப்போறேன், அதுக்கு முன்னாடி சில நன்றிகளை சொல்லிடுவோம் , முகங்களுக்கு ஆதரவு கொடுத்த அத்தனை தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  ஒவ்வொரு அத்தியாயத்திற்கு வரும் கமண்ட்ஸ் வெச்சுதான் கதையை எளிமையா நகர்த்த முடியும், அதற்கு உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். முகங்கள் கதையை ஓரளவுக்கு சஸ்பன்ஸ் மெயின்டெயின் பண்ணி கடைசிவரை எடுத்து வர பெரிசாய் உதவி செஞ்சது நம்ம சைட்டோட அட்மின் அன்ட் மை டியர் ஃபிரண்ட் நித்யா தான் அவங்க இல்லாம முகங்கள் கதை இல்லை. ஆரம்பத்திலிருந்தே என்னை ஊக்கப்படுத்தி ஒவ்வொரு எபிசோடையும் பொறுமையா படிச்சு அதில் ஏதாவது லாஜிகல் மிஸ்டேக் இருந்தா அதை சுட்டிக்காட்டி, இப்படி இன்னும் நிறைய. (தேங்க்ஸ் சொன்னா அடிப்பாங்க ,அதனால ஐ லவ்யூ சொல்லிடலாம் ) ஐ லவ்யூ சோமச் நித்யா ,அப்புறம் மீனா, இவங்களோட பங்கும் மிக முக்கியம் தான் , நித்யாவை தாண்டி இரண்டாம் கட்ட ஃபில்டர் இவங்க , ஏகப்பட்ட கேள்வி கேட்டு என்னை அதிகம் சிந்திக்க வெச்சவங்க (இவங்களுக்கும் தேங்க்ஸ் கேன்சல்) ஒரு ஹக் மட்டும் ,சஸ்பன்ஸ் கதையை எழுதும் போது பல விஷயங்களை நியாபகம் வெச்சு எழுதனும் , நான் எங்கயாவது சருக்கினாலும் இவங்க சுட்டிக்காட்டிடுவாங்க, இந்த இரண்டு பேருடைய லென்ஸ் பார்வையை தாண்டித்தான் முகங்கள் உங்களிடம் வந்தது,

 

இந்த கதை எழுத ஆரம்பிச்சதிலிருந்தே ஒரே அமர்களம் தான், ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி வேறு ஒரு தளத்துல முகங்கள் பத்து எபிசோட் அப்ளோட் பண்ணினேன், அப்போ கதை முற்றிலும் வேறாக இருந்தது ரொம்ப சிம்பிள், நந்தினி குகைக்குள்ள இறந்திடுறாங்க சந்தனாவை நந்தினியாவே மாத்தி எல்லாரையும் நம்ப வச்சிடுறான் ருத்ரன்,

 

பட் ஏதேதோ காரணங்களால கதையை தொடர முடியல கொஞ்ச கேப் விழுந்து மறுபடியும் சகாப்தத்துல போடலாம்னு ஆரம்பிக்கும் போது நித்யாவும் நானும் பேசி பேசி கதையையே மாத்திட்டோம், ஒரு கதாநாயகன் ஆள்மாறாட்டம் பண்ணக் கூடாதுன்னு நித்யா சொல்ல, ஒரு பொண்ணோட வாழ்கையை நல்லவிதமா மாத்த ஏன் செய்ய கூடாதுன்னு நான் விவாதிக்க ஒரே வாக்குவாதம்தான், ஒருவழியாய் நித்யா என் கதைக்கு கண்வின்ஸ் ஆகும்போது நான் கதையை மாத்திட்டேன்,  நித்யா ஆசைபட்டது போல ஆள்மாறாட்டம் செய்யாமல், இப்படி பத்து எபிசோட் முடிஞ்சதும் கதையையே மாத்திட்டோம், இப்போ கடைசியா நான் கொஞ்சம் எழுத தடுமாறினேன், சஸ்பென்ஸ் கிரியேட் பண்ண ரொம்ப ஈசியா இருந்தது பட் அதை ரிவீல் பண்ண ரொம்ப கஷ்டப்பட்டேன் அப்போ தான் நித்யா சைட்ல “மன்டே எபிசோட் போடுவாங்கன்னு ” என்னை கேக்காமலே போஸ்ட் போட்டு எனக்கு ஷாக் டிரீட்மென்ட் கொடுத்துட்டாங்க, ஆனா அவங்க அப்படி போடலைன்னா இந்த கதை இப்போ முடிஞ்சிருக்காது, ராத்திரி ரெண்டு மணிவரை முழிச்சிருந்து எழுதி முடிச்சிட்டேன், இதுக்கு ஒரு பெரிய ஹக் நித்யா,

 

ஃபேஸ்புக்ல என்னோட முக்கியமான கருத்தான “ஆண்களின் கற்பை சோதிக்க சோதனை உண்டா? “வை ஷேர் செய்த Jasha தோழிக்கு என் ஸ்பெஷல் தேங்க்ஸ், தொடர்ந்து என் கதைக்கு கமண்ட் கொடுக்கும் அத்தனை தோழிகளுக்கும் நன்றிகள்.

 

நன்றி –

அன்புடன்

இந்திரா செல்வம்.

முகங்கள்-50(2) Final
5
Leave a Reply

avatar
5 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
5 Comment authors
Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Member

Nice story. I like all characters Especially hero character.i like twist at the end.

Member

Nice

Member

அற்புதமான சஸ்பென்ஸ் நிறைந்த அழகிய கவிதை…. இந்த கதை…. ருத்ரபிரதாப் பிரகாஷ் நந்தினி சந்தனா எல்லோரும் ஒவ்வொரு விதமான ரசனைகளை விதைத்துவிட்டனர்…. வாழ்த்துக்கள் தோழி…..

Member

arumai
Sis

ugina begum
Member

ARUMAYAANA VITHIYSAMNAA STORY SIS
CONGRATS SIS

Don`t copy text!