உன் உயிரென நான் இருப்பேன்-1
5223
7
அத்தியாயம் – 1
அவன் விழிகள் இரண்டும் அவன் அறியாமலே தூக்கத்தை தழுவிக் கொண்டிருந்த வேளை அது. அவனது ஐஃபோன் அலறியது. சத்தம் வந்த திசையை நோக்கி கண்களை திறக்காமல் மெதுவாக திரும்பியனது கை கைப்பேசியை தேடி அலைந்தது. திரையில் விழுந்த ‘விக்கி’ என்ற பெயரைப் பார்த்தவனது கண்கள் பளிச்சிட்டன. இந்த அழைப்புக்காகவே காத்திருந்தவனாய் அப்படியே எழுந்து அமர்ந்து விட்டான். ஆம் அவனை அழைத்தது அவனது ஆறுயிர் நண்பன் விக்ரம்.
“ஹலோ விக்கி. என்னாச்சு? இஸ் எவ்ரிதிங் ஓகே? அங்கே ஒரு பிரச்சினையும் இல்லையே.. நான் சொன்ன வேலை எல்லாம் ஓகே தா..தானே…?” என்று கூறி முடிக்கும் போதே அவன் குரல் தடுமாறியது.
நண்பனின் தற்போதைய மனநிலையை அறிந்திருந்த விக்ரம் சிரித்தபடியே அவனை அழைத்த காரணத்தை கூறலானான்.
“டேய் மச்சி.. நீ லண்டன் போனது பிஸ்னஸ் மீடிங்காக அதாவது ஞாபகம் இருக்காடா? நீ சொன்ன மேட்டர் எல்லாம் ஓ….கே…. … என்று புன்னகைத்தபடி ஒரு தாளத்துடன் கூறும் போதே கோடி பூக்களை அவன் தலையில் கொட்டிய உணர்வு அபிநவ் ஆதித்யனுக்கு ஏற்பட்டது.
“தாங்க்ஸ் மச்சிஈஈஈஈ…… இதுக்காகவே நாளைக்கே வரனும். வந்ததும் உனக்கு ஸ்பெஷல் ட்ரீட் இருக்குடா”
“அபி எப்படியும் நாளைக்கே நீ கட்டாயம் வந்தாகனும். உன்னோட இந்த சந்தோசமான சமயத்துல இன்னும் ஒரு நியூஸ் டா. நாம மூனு மாதமா தேடிக்கிட்டு இருந்த அந்த ரிப்போர்ட்டர் இப்போ நம்ம கையில்.” இதை கேட்டதுமே தி கிரேட் பிஸ்னஸ்மேன் அபிநவ் ஆதித்யனின் முகம் கறுத்து கழுத்து நரம்புகள் புடைத்து கைமுஷ்டி இறுகியது.
அடுத்த நாளே லண்டனில் இருந்து இலங்கை நோக்கி பயணமானான். விமான நிலையத்தில் வந்து இறங்கியவன் தன் வருகைக்காக காத்திருந்த விக்கியுடன் காரில் ஏறி அமர்ந்தவன் அந்த ரிப்போர்ட்டரை அடைத்து வைத்திருந்த விக்கியின் ப்ளாட்டுக்கு போகுமாறு கூறினான்.
“என்ன அபி.. நீ வந்தும் வராதுமா அவனை பார்க்க போகனுமா? அதான் நம்ம ஆளுங்க அவனை பார்த்துப்பாங்க. வா வீட்டுக்கு போய் ஃப்ரஷ் ஆகிட்டு போகலாம்.”
“நோ விக்கி.. அவனை பார்த்தே ஆகனும்.. நீ போ..
“அபி வழியில தானே வீடு. அங்கே போ…” என்று கூற வந்தவனிடம் கடுமையாக
“டூ வாட் ஐ சே..” என தன் உச்ச தொனியில் கத்தி விட்டான்.அதற்கு மேல் அவனிடம் பேசி பயனில்லை என அறிந்திருந்த விக்கி காரை ஓட்டுவதில் கவனமாக இருந்தான்.
அபிநவ்வின் கண்கள் இன்னும் கடுமையையே காட்டின.
விக்கி காரை பார்க் செய்து விட்டு வருமுன்னரே அபிநவ் விக்கியின் ப்ளாட்டை நோக்கி விரைந்து சென்றிருந்தான்.
கதைவை திறந்தவன் அங்கே ஒரு நாற்காலியில் அமர வைத்து கட்டப்பட்ட நிலையில் இருந்தவனை வந்த வேகத்திலேயே ஒரு உதை விட்டான். உதைபட்ட வேகத்தில் நாற்காலியுடன் உருன்டு விழுந்தவன் அருகில் சென்று அவனது சட்டை காலரை பிடித்து உலுக்கியபடி
“உனக்கு என்ன தைரியம் இருந்தா என்னையே ப்ளாக் மெயில் பன்னுவ? நான் எப்படி இருந்தா உனக்கென்னடா.. எனக்கே தெரியாம என்னையே வீடியோ எடுத்து அதை எனக்கே சொல்லி நீ பெரிய தப்பு பன்னிட்ட.” என்று முகத்துக்கே ஒரு குத்து விட்டான்.
அவன் அடித்த வேகத்தில் அவனது மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது.
அந்த நேரத்தில் விக்கியும் வந்து சேர்ந்திருந்தான். அபிநவ்வின் கோபம் அவன் அறியாததல்ல. அவனுக்கு பிடிக்காத எதையும் அவன் கண்ணெதிரில் கூட விட்டு வைக்க மாட்டான். அவனுக்கு பிடித்த எதையும் எளிதில் விட்டு கொடுக்கவும் மாட்டான். அவனது விருப்பங்களுக்கு தடையாக இருக்கும் எதையும் அவன் அனுமதிப்பதில்லை. யாருக்கும் அடங்காதவன். எதற்கும் அசராதவன். நினைத்ததை முடிப்பவன்.
“என்னை வி..விட்டுடுங்க சார்.. இனி இப்படி பண்ண மாட்டேன் சார். ப்ளீ….ஸ் சார்.. வலிக்குது ஆ..ஆஆஆ.. என்று அவன் அடித்த அடியின் வீரியம் தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தவனை முறைத்துப் பார்த்தவாறே சுற்றிலும் தேடியவன் கண்களில் ஓர் இரும்புக் கம்பி தென்பட்டது. சற்றும் பொறுமையின்றி எடுத்த எடுப்பிலேயே ஓங்கி விட்டான் அபிநவ் ஆதித்யன்.
இதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருந்தால் அசம்பாவிதம் நடந்து விடக்கூடும் என்று ஒர் எட்டில் நண்பன் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான்.
“டேய் அபி விடு டா போதும் நீ என்ன பண்ணிட்டு இருக்க..அதான் வார்ன் பண்ணிட்டோம்ல. இனி எதுவும் பண்ணாம நான் பார்த்துக்குறேன். நம்மாளுங்க தான் இருக்காங்களே. காம்டவுன் அபி நீ போ..” என தன் ஆறுயிர் நண்பனை அங்கிருந்து அனுப்ப முயன்றான்.
தரையை காலால் உதைந்தவன். தன் சட்டை மேல் இரண்டு பட்டன்களையும் திறந்து தன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டான். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அந்த ப்ளாட்டின் பால்கனியை நோக்கி நடந்தவன் கீழே பார்க்கிங் ஏரியாவில் இருந்து கண்ணாடி உடைந்து நொருங்கும் சத்தம் கேட்டு பால்கனி வழியாக கீழே சத்தம் வந்த திசையை பார்த்துக் கொண்டே “விக்கி.. கீழே ஏதோ கார் கண்ணாடி உடைஞ்ச மாதிரி சத்தம் வந்துச்சு வா என்னனு பார்க்கலாம்” .
விக்ரம் ஒரு கனம் அப்படியே உறைந்து தான் போய் விட்டான். ‘
“இது மட்டும் அபி கார் கண்ணாடியா இருக்க கூடாது. நானும் அவ்ளோ தான். இந்த நிலையில இது வேறயா.. மை காட் ப்ளீஸ் ஹெல்ப் மீ” என மானசீகமாக கடவுளை வேண்டியடியே அவன் பின்னாலேயே நடந்தான் விக்ரம்.
அங்கே அபியின் அதி நவீன Audi A8 கார் சைட் மிரர் உடைக்கப்பட்டிருந்தது. விக்ரமிற்கோ மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. இந்த கார் கண்ணாடியை உடைச்சவன் செத்தான் என்று அபிநவ்வின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவனும் இவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏகத்துக்கும் பல்ஸ் எகிர சுற்றிலும் பார்த்தவன் ஒரு காரின் பின்னால் மறைந்திருந்த பெண்ணின் துப்பட்டா தென்பட்டது.
“ஹேய்.. யாரு இந்த வேலையை செய்தது? இந்த கார் எவ்வளவு எக்ஸ்பென்சிவ்னு தெரியுமா? இடியட்..என்னோட கார் சைட் மிரரை உச்சவன் இப்போ வெளியே வரல கொன்னுடுவேன்.”என மிரட்டிக் கொண்டிருக்க அந்தக் கார் பின்னால் இருந்து ஒரு பெண்ணின் குரல் வந்தது.
“சாரி..அ..அங்கிள்.. இந்தக் குட்டிப் பையன் தெரியாம கல்லை வீசினான் அது உங்க கார் சைட் மிரர்ல பட்டு உடைஞ்சிருச்சு. சா..சாரி அங்கிள் வெளியே வந்தா எங்களை கொ..கொலை பன்னிட மாட்டீங்களே..?”
இந்தக் குரல் ஏதோ அவனுக்கு பரிச்சயமான ஒன்றாய் தோன்ற சட்டென நிமிர்ந்து “ஐ சே கம் அவுட்.. இப்போ வெளியே வரலை.. “ என சத்தம் வந்த திசையை நோக்கி கத்தினான்.
ஓடி வந்த இருவரும் முழங்காலிட்டு காதுகள் இரண்டு காதையும் பிடித்தபடி கண்களை மூடிக்கொண்டு இருவரும் கோரசாக ” ரியலி வெரி சாரி அங்கிள். எங்களை கொலை பன்னிட வேணாம்.” என்று கெஞ்சினர்.
அவனது தோற்றத்திலும் பார்வையிலும் கன்னக்குழி சிரிப்பிலும் ஆயிரம் இளம் பெண்கள் மயங்கி அவனது ஒரு தலையசைப்புக்காக காத்துக் கிடக்க தி கிரேட் பிஸ்னஸ் மேன் அபிநவ் ஆதித்யனை அதுவும் ஒரு இளம்பெண் அங்கிள் என்று சொல்வதா?
“ஹேய் இங்கே பாரு உன்னைத் தான்..என்னை பாரு.. ” என்று கூறிக் கொண்டிருந்தவனை நோக்கி மெதுவாக தலையை உயர்த்தி பார்த்தாள்.
‘இவனையா அங்கிள்னு சொன்னேன்’ என எண்ணி கண்களை அகல விரித்து அவள் பார்த்த பார்வை அவனுள் ஒரு கனம் மின்சாரமாய் தாக்கிச் மறைந்திருந்து.
தன் நண்பனின் முகத்தில் ஆயிரம் வால்ட் பல்ப் எரிவதை கண்டவன் வெளிவந்த சிரிப்பை அடக்கியபடி “என்ன அபி.. இவங்கள எப்படி பனிஷ் பன்றது? என நண்பன் முகத்துக்கு நேரே சொடக்கு போட நடப்புக்கு வந்தவன் அவளை அருகில் அழைத்தான்.
“ஐயோ.. நம்மல என்ன பன்ன போறானோ… இனியா சமாளி..சமாளி..” என்று எண்ணியபடியே அவன் அருகே சென்றாள் .
அவளது ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தவன் “இதுக்கு உனக்கு தான் தண்டனை கொடுக்கனும். அவன் சின்னப் பையன் உன்னைத் தான் பனிஷ் பன்ன போறேன்” என அவளைப் பார்க்க அவளோ பயத்துடன் கேள்வியாய் இவனை நோக்கினாள்.
அவன் மேலும் தொடர்ந்து கூறினான்.
“இங்கே பாரு இந்தக் கார் ஒன்னும் டப்பா கார் இல்ல. இப்போ இதுக்கு நீ தான் நஷ்ட ஈடு கொடுக்கப் போற. உன்னால கொடுக்க முடியுமா?”
“காசு தானே கையில இருக்கிற காசை கொடுத்து எஸ் ஆகிட வேண்டியது தான். என மனதில் எண்ணியடி தன் கைப்பையிலிருந்த வாலட்டை எடுத்தவள் தன்னிடமிருந்த இரண்டாயிரம் ரூபாயை எடுத்தவள் அதை அபிநவ்விடம் நீட்டினாள்.
“இந்தாங்க சார். இரண்டாயிரம் ரூபா என்னோட பாலன்ஸ் காலி இவ்வளவு தான் இருக்கு” என்றவளை அபியும் விக்கியும் மாறி மாறி பார்க்க விக்கிக்கு சிரிப்பே வந்து விட்டது.
“என்னம்மா உனக்கு இந்தக் காரோட மதிப்பே தெரியாதா? இதை இப்போ ரிப்பயர் பன்னனும்னா தர்ட்டி தௌசன்ஸ் வேணும். பாலன்ஸ் இருபத்தெட்டாயிரம் எப்போ கொடுப்ப மா? “விக்கி அவளைப் பார்த்துக் கேட்க அவளுக்கு பக்கென்றது.
“அண்ணா அவ்வளவு காசு இல்லையே வீட்ல கொடுக்க மாட்டாங்களே. நான் வேலைக்கு போய் ஒரு மாதம் தான். எனக்கு சம்பளமே இருபத்தைந்யாயிரம் தான். அப்பாகிட்ட சொன்னா என்னை தொலைச்சிடுவார்” என விக்கியை அழுவது போல பார்த்தாள்.
“ஓ அப்படியா அப்போ இவளை.. என அவளை நோக்கி ஒவ்வொரு எட்டாக எடுத்து வைக்க அவள் பயத்தில் பின்நோக்கிச் செல்ல அதற்கு மேல் அவளால் பின்நோக்கி நகர முடியாமல் ஒரு காரின் பின்பகுதியில் மோதி நிற்க இவள் கண்களை மூடிக்கொள்ள அவன் மேலும் முன்னேறிக் கொண்டிருக்க விக்ரமின் கைப்பேசிகு ஓர் அழைப்பு வந்தது.
அபி என்று அழைக்க இவன் திரும்பி பார்க்க தன் ப்ளாட்டை கையால் காட்டி ஏதோ கூற கைமுஷ்டி இறுக அந்தக் காருக்கு ஒரு குத்து விட்டான். அந்த சத்தத்தில் கண் திறந்து பார்த்துவள் அபிநவ்வின் கோபத்தில் சிவந்திருந்த கன்களை கண்டு நடுங்கிப் போனாள்.
அவளை விட்டும் விலகி வந்தவன் காதில் விக்ரம் ஏதோ கூற இனியாவைப் பார்த்தவன் கண்களை மூடித் திறந்து அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு விக்கியின் ப்ளாட்டை நோக்கி ஓடினான்.
தொடரும்.
அன்புடன் அபிநேத்ரா..❤

7 Comments
Hi, i can’t read this. it shows “Sorry, you must login to view this content” even though I am already logged in.
This story is currently suspended… Sorry for the inconvenience
👌👌
very very nice ud Abinethra. eagerly waiting for your next ud
Thanks pa
Superb…….
Thank u