Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உன் உயிரென நான் இருப்பேன்-5

உன் உயிரென நான் இருப்பேன்- 5

உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் இரவு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் அபிநவ். அவனது வலது கண்ணிலிருந்து சரேலென வழிந்தது ஒற்றை துளி.

தன் மனங்கவர்ந்தளின் இந் நிலைக்கு அவன் தான் காரணம் என எண்ணி எண்ணி உள்ளுக்குள் மருகினான். அவளது ஒவ்வொரு அசைவும் தன்னை காதலிக்கிறாள் என புரிந்து கொண்ட அன்றே தன் காதலை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் அதைவிடுத்து இன்று அவன் நடந்து கொண்ட விதம் என்ன? பேசிய வார்த்தை என்ன?.

ஆம் அவன் அவளை சந்தித்த சில நாட்களிலே அவளது பார்வை மாற்றத்தை உணர்ந்திருந்தான். ஆனால் இனியா? அவன் அவளை காதலுடன் பார்த்த பார்வைகளை வைத்தே தன் மனதையும் புரிந்து கொண்டிருப்பாள் என எண்ணினானே?. அவளது மனதை கண்டு கொண்டாலும் இவன் காதலை வெளிப்படுத்தாமல் அவ்வாறு நடந்து கொண்டால் எந்தப் பெண்ணால் ஏற்றுக் கொள்ள முடியும்? எப்படிப் பார்த்தாலும் தவறு அவனது தான் என தன்னையே நொந்து கொண்டான்.

தன் உயிரானவள் குணமானதும் முதல் வேலையாக மன்னிப்புக் கேட்டு இத்தனை நாள் அவள் மீது கொண்ட காதலை, நேசத்ததை அவளுக்கு உணர்த்த வேண்டும். அவள் என்னவள். இனி எதற்காகவும் அவளை கலங்க விடக் கூடாது. அவள் உயிரென நான் இருப்பேன் என அவன் மனம் உறுதி மொழி எடுத்துக் கொண்டது.

ஆனால் இனி இனியா அவனது காதலை ஏற்றுக் கொள்வாளா? என அவன் மனம் கேள்வி எழுப்ப ஒரு கணம் இதயம் வலித்தது அபிநவ்விற்கு.

அவன் தோளில் கை வைத்து அபி என்று விக்ரம் மெதுவாக அழைக்க அவசரமாக திரும்பி பார்த்தான்.

அவனது கண்கள் கலங்கி ஒரு துளி வலது பக்கக் கண்ணத்தில் வழிந்திருப்பதை கண்டவன் ஒரு கணம் திகைத்தான். இத்தனை வருட கால நட்பில் அவன் ஒரு நாள் கூட கண்ணீர் சிந்திப் பார்த்ததில்லை. ஆரம்பத்திலிருந்தே இனியாவைக் காதலிப்பதை அறிந்திருந்தாலும் தன் நண்பன் இந்தளவு சீரியசாக இருப்பான் என்று நினைத்துக் கூட பார்க்காத ஒன்று. ஆனால் இனியாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறான் எதற்காகவும் அவளை விட்டுக் கொடுக்க மாட்டான் என்பது மட்டும் இப்போது உறுதியாகத் தெரிந்தது அவனுக்கு.

“டாக்டர் வெளியே வந்துட்டாரா? என்னாச்சு? என் இனியாவுக்கு ஒன்னும் இல்லைல? நான் போய் பார்க்கட்டுமா?” என மூச்சு விடாது கூறியவன் கேள்வியாய் விக்ரமை நோக்கினான்.

“அபி.. ரிலாக்ஸ் டா. அவளுக்கு ஒன்னும் ஆகாது. ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு. அவ ஃபிரண்ட்ஸ் அவ அம்மாக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டாங்க.” என அவனை அழைத்துச் செல்ல ஆபரேஷன் தியேட்டரில் இருந்து டாக்டர் வெளியே வரவும் சரியாக இருந்தது.

“டாக்டர் என் இனியாவுக்கு என்னாச்சு? நான் அவளை பார்க்கலாமா?” என பதற்றமாக வினவியவனின் பார்வை ஆபரேஷன் தியேட்டரிலயே நிலைத்திருந்தது.

“மிஸ்டர் அபிநவ்.. அவங்க இன்னும் மயக்கமா தான் இருக்காங்க. பலமா எந்த அடியும் இல்லை. பட் லெஃப்ட் லெக்ல ஜஸ்ட் ஒரு சின்ன போர்ண் ஃப்ராக்சர் அவ்ளோ தான். வன் மன்த் அவங்க பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கும்.” என கூறியவர் அவனது முகத்தை கூர்ந்து நோக்க எதையோ புரிந்து கொண்டர் போல தொடர்ந்து,

“அவங்களுக்கு ஒன்னுமில்லை விழுந்த அதிர்ச்சியில் இருக்காங்க. நீங்க போய் பார்க்கலாம்… ம்ம் நீங்க அவங்களோட ஃபிரண்டா இல்லை ரிலேட்டிவ்வா?” என கேட்டவரிடம்,

“இல்லை இவ நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு” என்றவன் அதற்கு மேல் அந்த இடத்தில் இருக்கவில்லை.

நிராஷாவும் ஜூலியும் ஒருரையொருவர் ஆச்சரியமாக பார்த்துக் கொள்ள அந்நேரம் அங்கு வந்து சேர்ந்திருந்த லலிதாவும் ஈஸ்வரனும் அதிர்ந்து போய் நின்றனர். ஆனால் வருண் மட்டும் எந்த வித வியப்புமின்றி சாதாரணமாகவே இருந்தான்.

மகளின் தோழிகள் இருவரையும் நோக்கி என்ன என்பது போல் பார்வையால் வினவிய லலிதாவிடம் அவர்களுக்கும் ஒன்றும் தெரியாது என்ற ஒரு தலையசைப்பே பதிலாக கிடைத்தது.

அனைவரும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்க’
“இதுக்கு தான் அப்பவே சொன்னேன். இப்போ பாரு உன் பொண்ணு என்ன காரியம் பண்ணி வைச்சிருக்கானு. எவனோ ஒருத்தன் சொல்றான் அவன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுனு. அம்மா அப்பா உயிரோட இருக்கும் போதே அவ இஷ்டத்துக்கு முடிவே பண்ணிட்டா. ம்.. உன் பொண்ணு தானே வேற எப்படி இருப்பா..” என எந்த இடத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிக் கொண்டே போனார் ஈஸ்வரன்.

தன் அப்பா எல்லை மீறி பேசுவதை புரிந்து கொண்ட வருண், “அப்பா.. இது ஹாஸ்பிடல் நம்ம வீடு இல்லை. அக்காவுக்கு எப்படி இருக்கானு இன்னும் தெரியலை. இந்த நேரத்தில்.. சீ” என எரிச்சலுடன் கூற அதற்கு மேல் ஈஸ்வரன் எதுவும் பேசவில்லை.

லலிதாவிடம் எந்த அசைவும் இருக்கவில்லை அதிர்ந்து போய் அப்படியே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

ஜூலிக்கும் நிராஷாவுக்கும் இங்கு என்ன நடக்கிறது என ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் இருவரும் லலிதாவின் அருகில் அமர்ந்து அவரின் கைகளை பற்றி,

“அம்மா ப்ராமிஸ் எங்களுக்கு எதுவுமே தெரியாது மா. நாங்களே இதை கேட்டு ஷாக்ல தான் இருக்கோம் மா” என நிராஷா அவர்களின் நிலையை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் கூறிய எதுவுமே அவர் மூளைக்குள் பதியவில்லை.
“இனியாவுக்கு என்னாச்சு மா? யாரு அந்த பையன்?” என நிராஷாவிடம் கேட்டுக் கொண்டிருக்க,

“அம்மா அவங்க என்னோட வீட்டுல பார்ட்டிக்கு வந்தவங்க. டைம்ல தான் ஏதோ நடந்திருக்கு மா. எங்களுக்கும் ஒன்னும் புரியலை. இந்த விக்ரம் எங்கே போனான்?”என்று பார்வையை சுழற்றினாள்.

அவனுக்கு அவசர அழைப்பு வர வெளியே சென்று பேசி விட்டு அப்போது தான் உள்ளே வந்தான்.

“விக்ரம் அண்ணா நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா? அக்காவுக்கு என்னாச்சு” என விக்ரம் அருகில் வந்து நின்றான்.

அங்கே இனியாவின் தாய் மற்றும் தந்தையை கண்டவன், இவர்கள் முன்னிலையில் எப்படி சொல்வது என தடுமாறினான். அபிநவ்வும் உள்ளே சென்றிருக்க புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

“ அது.. வந்து எனக்கும் சரியாக தெரியலை அபிநவ் உள்ளே போய் இருக்கான். அவன் வந்ததும் என்னனு கேட்கலாம்” என கூறிமவன் ஜூலியை பார்க்க அவள் இவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“வருண் உனக்கு விக்ரமை எப்படி தெரியும்” எனக் கேட்டவள் விக்ரமை சந்தேகமாய் பார்த்தாள்.
“தெரியும் ஜூலி அக்கா” என்றவன் அன்று நடந்த பார்க் சந்திப்பை பற்றி கூறினான். ஆனால் மறந்தும் கூட அபிநவ் இனியாவைப் பற்றி வாய் திறக்கவில்லை. அவனுக்கு அன்றே எல்லாம் தெரிந்திருந்தது.

“ஓ.. சோ இனியாவுக்கும் உன்னையும் உன் ஃபிரண்ட் அபிநவ் சாரையும் தெரியும். அப்படித் தானே?” என ஒரு மாதிரி குரலில் வினவியவளிடம்

“தெரியும்” என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான். அதற்கு மேல் அவள் பக்கம் அவன் திரும்பவில்லை.

அன்று எம்.சியில் சந்தித்தபோது கூட இருவரும் இதற்கு முன் அறிமுகமானவர்கள் என காட்டிக் கொள்ளவில்லை. வருணும் விக்ரமும் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது அபிநவ் இனியாவை காதலிக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள். ஆனால் இனியா?.. அவர்களைப் பற்றி இதுவரை மூச்சு விட்டதே இல்லையே ஏன்? ஒரு வேளை அவள் காதலிக்கவில்லையோ? இன்று பார்ட்டியில் அப்படி என்ன நடந்திருக்கும்? என எத்தனையோ கேள்விகள் அவளை குடைந்து கொண்டிருந்தன.

அங்கிருந்த லலிதாவுக்கும் ஈஸ்வரனுக்கும் ஒன்றும் புரியவில்லை. நிராஷாவின் மனதிலும் பல குழப்பங்கள் இருந்தாலும் இந்நிலையில் யாரிடமும் கேட்க முடியாமல் லலிதாவின் பக்கத்தில் இருந்தாள். ஆனால் அவளை ஒரு சோடிக் கண்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருந்ததன. அதை அவள் அறியவில்லை

வருண் விக்ரமை நெருங்கி, “விக்ரம் அண்ணா அக்காவுக்கு இது எப்படி நடந்தது?” எனக் கேட்க ஒரு நிமிடம் யோசித்தவன்,

“இங்க பாரு வருண் அவங்களுக்குள்ள என்ன நடந்துசுன்னு நிஜமா எனக்கு தெரியாது. ஆனால் இனியா அழுதுட்டே வெளியே போனதை பார்த்தேன் அவ பின்னாடியே அபியும் போறதை பார்த்து தான் என்னமோ ஏதோனு போய் பார்க்குறதுகுள்ள இப்படி ஆயிடுச்சு. பட் அவக்கு ஹெவியா அடி எதுவும் படலை.” என தனக்குத் தெரிந்தவற்றை கூறிக் கொண்டிருந்தான் விக்ரம்.

அவன் காதலை சொன்னானா? இல்லையா? என்பது இருவருக்குமே தெரியவில்லை.

“அம்மா வாங்க அக்காவை போய் பார்க்கலாம்.” என வருண் லலிதாவை உள்ளே அழைத்துச் சென்றான்.

அந்த அறைக் கட்டிலில் படுத்திருந்தவளின் ஒரு காலில் பெரிய கட்டுடன் ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. இன்னும் மயக்கம் தெளிந்திருக்கவில்லை. அவளருகில் சென்றவன் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அவளை அந்தக் கோலத்தில் பார்த்தவனுக்கு இதயமே வெடித்து விடும் போல் இருந்தது. சின்ன எலும்பு முறிவு தான். இனி அவளுக்கு எந்த ஆபத்துமில்லை என்று டாக்டர் கூறியிருந்தாலும் இந்நிலையில் அவன் முன்னால் இருக்கும் தன்னவளை பார்த்துக் கலங்காமல் இருக்க முடியவில்லை.

இன்று பார்ட்டியில் கூட எவ்வளவு அழகாக இருந்தாள். அவனுடன் சிரித்துப் பேசியது அவள் அவனைப் பார்த்த பார்வை அதனால் தானே அவனையும் மீறி அது நிகழ்ந்தது அதன் பின் நடந்த ஒவ்வொன்றும் காட்சிப் பிழையின்றி அவன் முன்னே தோன்றியது.

கண்களை மூடித் திறந்தவன் அவளை நெருங்கி அமர்ந்து மெதுவாக அவள் கையை பற்றி தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

“ஸ்வீட்டி மா..ஐ அம் ரியலி வெரி சாரி . உன்மேல நான் எந்தளவு நேசம் வச்சிருக்கேனு உனக்கு தெரியாது. இதுக்கு மேல உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். சா..ரி ஸ்வீ..ட்டி. உன்னை நான் எப்போ முதல் முதலாக பா..ர்த்தேன் தெ..ரி..” என்றவனால் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் குரல் தழு தழுத்தது.

ஒருவாறு முடிவுக்கு வந்ததவனாய் எழுந்தவன் அவள் பிறை நுதலில் இதழ் பதிக்க எண்ணி குணிந்தவனை ஏதோ ஒன்று தடுக்க அப்படியே நின்று விட்டான். காதல் கொண்டு இருவரும் இணையும் வரை அவள் மனம் விரும்பாத எதையும் செய்யக் கூடாது என வெளியேற அறை வாயிலில் லலிதாவும் வருணும் நின்று கொண்டிருந்தனர்.

அந்நேரம் விக்ரம் வந்து அபிநவ்வை பார்த்து வெளியே வருமாறு சைகை அழைக்க,

“ ஆன்ட்டி.. சீ இஸ் ஆல்ரைட் நவ். டூ டேய்ஸ்ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. அவளை பத்திரமாக பார்த்துக்குங்க.” என இனியாவையே பார்த்துக் கொண்டு கூறி இருவரிடமும் விடை பெற்றான்.
லலிதாவால் ஏனோ ஒன்றும் பேச முடியாமல் அமைதியாக நின்றார்.

“என்னாச்சு விக்கி” எனக் கேட்டுக் கொண்டே அவன் அருகே வந்தான்.

“அபி.. நாளைக்கு ஆரவ் ஸ்ரீலங்கா வரேன்னு சொன்னான்” என சிறு தயக்கத்துடன் கூறினான் .

“வாட்.. ஆல்ரெடி இங்கே… ம்ம் ஓகே வா” என எரிச்சலுடன் அவனையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

தொடரும்..
அன்புடன் அபிநேத்ரா ❤




2 Comments

You cannot copy content of this page