Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


Readers Comments

Recent Updates

நிழல்நிலவு – 32

அத்தியாயம் – 32

மிராஜ்பாடாவிற்கு வந்ததிலிருந்து டேவிட்தான் சமைக்கிறான். எந்த சிரமமும் இல்லாமல் மூன்று வேளையும் முறையாக உண்டு கொண்டிருந்த மிருதுளாவிற்கு வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அவன் பிரியாணி செய்தால் “களி கிண்டியாச்சா?” என்பாள். ரொட்டி செய்தால் “வரட்டி ரெடியா?” என்பாள். குருமாவை குழம்பு என்பாள், குழம்பை ரசம் என்பாள், ரசம் வைத்தால், “ஐயோ! தண்ணியில தக்காளி நசுங்கி கிடக்கு” என்பாள்.

 

பொறுத்துப்பொறுத்துப் பார்த்தவன் அன்று அவளை சமையலுக்குப் போட்டுவிட்டான். மிருதுளாவும் ஒன்றும் பெரிய செஃப் இல்லை… ஹாஸ்ட்டலில் இருந்தவரை சமையலறையின் திசை கூட தெரியாமல் இருந்தவள், இப்போது கல்லூரி தோழிகளுடன் அறை எடுத்து தங்கிய பிறகுதான் சில இன்ஸ்டெண்ட் உணவுகளை சமைக்கப் பழகியிருந்தாள்.

 

டேவிட், “இன்னைக்கு நீதான் சமைக்கிற” என்றதும் திருத்திருத்தவள், “மேகி பாக்கெட் இருக்கா? சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு… சூப்பரா இருக்கும்” என்றாள்.

 

“மேகி பாக்கெட்டா!” என்று வாயைப் பிளந்தவன் “சாப்பிட மட்டும் தான் தெரியுமா!” என்றான்.

 

அவனிடம் வீம்புப் பேசி சமைத்துக் காட்டுவேன் என்று களமிறங்கினாள் மிருதுளா. என்னதான் செய்கிறாள் என்று அவனும் வேடிக்கை பார்த்தான்.

 

முட்டை பிரியாணி செய்யப் போவதாக அறிவித்துவிட்டு, சமையலறையை பயங்கரமாக செட் செய்தாள். அவனுடைய அலைபேசியை பிடுங்கி அதில் பாட்டு போட்டு பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஹெட் போனை மாட்டிக் கொண்டாள். பாட்டின் ரிதத்திற்கு காலாலும் கழுத்தாலும் தாளம் போட்டபடி தக்காளி வெங்காயத்தை கழுவி நறுக்கினாள்.

 

அவளுடைய அசைவுகளை ரசித்தபடி கிட்சன் கௌண்டரில் ஏறி அமர்ந்து, கேரட்டை எடுத்துக் கடித்தான் டேவிட்…

 

“டேவிட்… பிட்ஜ் மேல முட்டை இருக்கு… நாலு எடுத்து இந்த பக்கம் போடு” – காதுக்குள் ஒலிக்கும் பாடலை மிஞ்சிவிடும் வகையில் சத்தம் போட்டாள்.

 

“கத்தாத…” என்று கடிந்து கொண்டே முட்டையை எடுத்தவன், “மிருதுளா…” என்று அழைத்து, அவள் திரும்பியதும், “கேட்ச்” என்று அவளிடம் தூக்கிப் போட்டான். அது நச்சென்று அவள் மீது விழுந்து தெறித்தது.

 

“ஆவ்….!!!” – அதிர்ச்சியும் அருவருப்புமாக முகத்தை சுளித்தாள் மிருதுளா.

 

“சா…ரி…!!!” – பல்லை காட்டினான். உண்மையில் அவள் பிடித்துவிடுவாள் என்று தான் நினைத்தான்.

 

“வொய் டிட் யு டூ திஸ்???” – ஹெட்போணை பிடிங்கி எறிந்துவிட்டு அவனிடம் சண்டைக்கு நின்றாள்.

 

“தூக்கிப் போட சொன்னியே! அதுவும் நாலு முட்டையை…” – அவன் அப்பாவியாக விளக்கம் கேட்டான்.

 

“அதுக்கு?”

 

“நா ஒன்னை தானே போட்டேன்… நீ ஏன் பிடிக்கல?”

 

“உன்ன… மகனே செத்த இன்னைக்கு…” என்று கத்திக்கொண்டே நறுக்கி வைத்திருந்த தக்காளிகளை எடுத்து அவன் மீது சரம்வாரியாக வீச துவங்கினாள்.

 

அவன் எத்தனுக்கு எத்தன்… ஜித்தனுக்கு ஜித்தன்… நறுக்கிய தக்காளியைக் கூட கச் கச்சென்று கேட்ச் பிடித்து அவள் மீதே திருப்பி வீசிவிட்டு பயங்கரமாக சிரித்தான்.

 

அவள் அதீத கோபத்திற்கு ஆளானால். சட்டென்று பக்கத்திலிருந்த ஜக்கை எடுத்து தண்ணீரை அவன் மீது விசிறி ஊற்றினாள். தக்காளியை பிடித்தது சரி… தண்ணீரை பிடிக்க முடியுமா? குபீரென்று முகத்தில் வந்து மோதிய தண்ணீரில் மூச்சுமுட்டி தலையை சிலுப்பினான் டேவிட்.

 

“எப்புடி…???” – ஜம்பமாக புருவம் உயர்த்தினாள். அடுத்த கணம் யோசிக்காமல் அவளை துரத்தத் துவங்கினான் டேவிட்… கையில் கரண்டியோடு சமையலறையை வட்டமடித்து, “ஹேய்… நீதானே… ஃபர்ஸ்ட்… நோ…” என்று கத்திக் கொண்டே ஹாலுக்கு ஓடினாள்.

 

அவள் ஓட… இவன் துரத்த.. இவன் துரத்த… அவள் ஓட… இருவருக்கும் மூச்சு வாங்கினாலும் அவனுக்கு திண்மையிருந்தது. அவள்தான் சோர்ந்து போய் அவனிடம் அகப்பட்டுக் கொண்டாள். அப்போதும் கூட கரண்டியால் அவனை தாக்க முற்பட்டாள். சிங்கத்திடம் சிக்கிய எலிக்குஞ்சு போல் அவளால் அந்த கரண்டியை வைத்துக் கொண்டு அவனை என்ன செய்துவிட முடியும்? வெகு சுலபமாக அவளை ஒரு கையிலும், கரண்டி பிடித்திருந்த கையை மறு கையிலும் சிறை செய்துவிட்டான்.

 

அப்போது அவளுடைய பேண்ட் பாக்கெட்டில் சைலன்ட் மோடிலிருந்த டேவிட்டின் அலைபேசி ஒளிர்ந்தது. அவனிடமிருந்து தப்பிக்கும் உத்வேகத்திலிருந்தவள் அதை உணரவே இல்லை. டேவிட்டிடம் இருந்து தப்பித்து அவனை ஒரு அடியாவது அடித்துவிட வேண்டும் என்று முரண்டு பிடித்தவள், அவனை இழுத்துக் கொண்டு சோபாவில் விழுந்துவாரினாள். அப்போதுதான் எங்கோ இடிபட்டு அழைப்பு தானாகவே ஏற்கப்பட்டுவிட்டது.

 

“ஹேய்…!!! ஆவ்… ஐயோ…!!! விடு… டே…வி…ட்…!! ப்ளீஸ்… ஹா ஹா…” – அவனை பிடித்து தள்ளிவிட்டு எழ முயன்றாள்.

 

அவளுடைய குறிக்கோள் புரிந்து, “விட்றதா? என்ன பண்றேன் பாரு உன்ன… ஹா ஹா… எங்க… இப்போ எப்படி… அட… ஏய்… ஹா ஹா…” என்றபடி கரண்டியை அவளிடமிருந்து பிடுங்கியெறிந்தான்.

 

“நோ-நோ-நோ… ஹேய்…!!! கைய விடு… ஹா ஹா…” – கரண்டி கைநழுவி போய்விட்ட துக்கத்தில் கூக்குரலிட்டவள் பிறகு சிரித்துக் கொண்டே அவனை கையால் சாத்தினாள்.

 

இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த பாபிம்மா, “அய்யே… என்ன சண்டை இது… சின்ன புள்ளைங்க மாதிரி… விடுங்க… விடுங்க…” என்று விலகிவிட்டார்.

 

“பாருங்க பாபிம்மா… என்னோட ட்ரெஸ்ஸெல்லாம் போச்சு… இப்போ நா எந்த ட்ரெஸ்ஸை மாத்திக்குவேன்…” – சிணுங்கினாள்.

 

“பாருங்க பாபிம்மா… என்னோட முட்டையெல்லாம் போச்சு… இப்போ நா எந்த முட்டையை சாப்பிடுவேன்…” – அவளை போலவே பேசி நடித்துக் காட்டி அவளை இன்னும் வெறுப்பேற்றி அடிவாங்கி கொண்டான்.

 

“இனி நா ஒன்னும் செய்ய மாட்டேன்… நீயே சமைச்சுக்க… நா குளிக்க போறேன்… பே…” – பழிப்புக்காட்டி முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

 

“ம்கூம்… அப்படியே சமச்சுட்டாலும்…” – டேவிட்டின் கிண்டல் குரல் அவளை துரத்திக் கொண்டு வந்தது.

 

“போ… போ… போயி… கிச்சனை க்ளீன் பண்ணு…” – திட்டிக் கொண்டே போனாள் மிருதுளா.

 

அவளுடைய கோபத்தையும்… உரிமையையும் ரசித்து அசைபோட்டபடி, உதவிக்கு வந்த பாபிம்மாவை ஒதுக்கிவிட்டு, அவள் குளித்துவிட்டு வருவதற்குள் சமையலறையை சுத்தம் செய்து கலக்கலான மதிய உணவை தயார் செய்து முடித்தான் டேவிட்.

 

***********************

துறுதுறுப்புதான் அவளுடைய அடையாளம். எதற்கும் கவலைப்படமாட்டாள். பட்டாம்பூச்சி போல் சிறகடித்துக் கொண்டே இருப்பாள். சிரிப்பற்ற அவள் முகத்தை அவன் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போதெல்லாம் அவள் சிரிப்பதே இல்லை. சுமனுடைய இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று எண்ணி சங்கடப்பட்டான் மாலிக். அவளை பார்க்கும் பொழுதெல்லாம் மனசாட்சி குத்தியது.

 

பூஜாவிடம் சென்று உதவி கேட்டான். சுமனுக்கு தைரியம் கொடுக்கச் சொன்னான். அவளோடு நல்ல முறையில் நேரம் செலவழிக்கச் சொன்னான். சுஜித்தை சென்று பார்த்து வர சொன்னான். அவன் எப்போது மீண்டு வருவான்… எப்போது அவனுடைய மனநிலை இயல்பாகும் என்று அவளை கேள்வியால் துளைத்தான்.

 

சுஜித் பூஜாவிற்கும் நல்ல நண்பன். அதோடு மாலிக்கின் மனநிலையும் அவளுக்கு நன்றாக புரிந்தது. எனவே தன் சக்திக்கு உட்பட்டு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்தையும் நேர்மையாக செய்தாள். அதன் பலனாக சுமனை மன அழுத்தத்திற்குள் செல்லாமல் பாதுகாக்க முடிந்தது. அவளை சில வேலைகளில் ஈடுபடுத்தி அவளுடைய நேரத்தை பயனுள்ளதாக்க முடிந்தது.

 

அதோடு நிற்கவில்லை மாலிக். அர்ஜுன் வந்ததும் அவனிடம் பேசி சுமனுக்கு, அவளுடைய பழைய வேலையையும் கோர்த்தாவில் அவளுடைய உரிமைகளையும் திருப்பிக் கொடுக்கும் படி செய்ய வேண்டும் என்று எண்ணினான்.

 

************************

 

டின்னர் டேபிளை நேர்த்தியாக செட் செய்து கொண்டிருந்தான் டேவிட். மதிய உணவு சமைக்கும் பொழுது ‘மேகி’ பிடிக்கும் என்று மிருதுளா குறிப்பிட்டதை மனதில் வைத்துக் கொண்டு முறையான சைனீஸ் நூடுல்ஸ் ரெசிபியை முயற்சி செய்திருந்தான். அதை அவளுக்கு அழகாக ப்ரெசென்ட் செய்ய வேண்டும் என்பதற்காக உணவு மேஜையை, பூஜாடி வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அலங்கரித்துக் கொண்டிருந்தான்.

 

“வரே…வா!!! அற்புதம்… அற்புதம்! யாருக்காக இதெல்லாம் செஞ்சுக்கிட்டிருக்க?” – மிருதுளாவின் வருகை அவனை உற்சாகப்படுத்தியது.

 

“நிச்சயமா உனக்காக இல்ல…” என்றான் சிரித்துக் கொண்டே.

 

“ஹேய்… உண்மையை சொல்லு… வரட்டியா? கலியா? எதை கவர் பண்ண இதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்க?” என்றபடி மேஜையிலிருந்த பீங்கான் பாத்திரங்களை திறந்து பார்த்தாள். சைனீஸ் நூடுல்சும் பொரித்த கோழியும் கமகமத்தது.

 

“அடப்பாவி! ரெகுலர் ரெசிப்பியே கொடுமையா செய்வ… இதுல சைனீஸ் வேறயா!!! உண்மையை சொல்லு… என்னை கொலை பண்ண எதுவும் திட்டம் போட்டுட்டியா?”

 

“ஆமான்னு சொன்னா சாப்பிடாம போய்டுவியா?”

 

“ஹிஹி… அப்படியெல்லாம் போயிட முடியுமா? கொலையே பண்ணினாலும் நீ என் நண்பேன்டா…”

 

“நம்பிட்டேன்… உட்கார்ந்து கொட்டிக்க…” – வாய் மொழியில் மட்டும் தான் அலட்சியம்… விருந்தோம்பலில் சேவகனாக மாறி அவளை மகாராணியாக பாவித்தான்.

 

டேவிட்டை மிருதுளாவிற்கு மிகவும் பிடித்திருந்தது… நல்லவன்… பாதுகாப்பானவன்… பழக எளிமையானவன்… அவள் மீது அன்பு கொண்டவன்… அவனோடு கழியும் தருணங்கள் மிகவும் லேசானவை… இனிமையானவை…

 

அர்ஜுன் அப்படி அல்ல… அவனோடு இருப்பதும், பசித்த புலிக்கு பக்கத்தில் இருப்பதும் ஒன்று தான்… அவ்வளவு பயமாக இருக்கும். எந்த நேரத்தில் கடித்துக் குதறுவான் என்றே தெரியாது. எதையும் வெளிப்படையாக பேச மாட்டான்… முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது… எப்போதும் கடுகடுவென்றுதான் இருப்பான். ஆனாலும் அவனிடம் கனிவை உணர்ந்திருக்கிறாள் மிருதுளா… அவன் காட்டும் அக்கறையில் கரைந்திருக்கிறாள்… அவன் பார்வையின் ஈர்ப்பை அவளால் முறிக்க முடிந்ததில்லை. கடுமையாய் கழியும் பொழுதில் கூட அவன் அருகாமை அவள் அடிவயிற்றில் பட்டாம்பூச்சியை பறக்கவிடும்… எப்போதாவது லேசாக வளையும் அவன் உதட்டுச் சிரிப்பில் அவள் உள்ளம் துள்ளிக் குதிக்கும். இந்த அனுபவங்கள் வயது கோளாறாக இருக்கலாம்… ஆனால் இந்த வயது கோளாறை அவள் வேறு யாரிடமும் உணர்ந்ததில்லை… இப்போது கூட அவன் நினைவாகவே உள்ளது… எப்போது வருவான்?

 

“டே…விட்…” – பாதி உணவில் இருக்கும் போது ஜவ்வு மிட்டால் போல் அவன் பெயரை இழுபறி செய்தாள்.

 

அந்த குரல் மாடுலேஷனை கேட்டதுமே அவனுக்கு புரிந்துவிட்டது. சொல்லித்தொலை என்பது போல், “ம்ம்ம்ம்” என்றான்.

 

“அர்ஜுன்கிட்டேருந்து… மெசேஜ்… கால்… ஏதாவது?”

 

“ஏன்? ஏற்கனவே வாங்கினது பத்தலையா?” – வெடுக்கென்று கேட்டான்.

 

“என்ன…? என்ன வாங்கினேன்… அதெல்லாம் ஒன்னும் இல்லையே” – சமாளிக்க முயன்றாள்.

 

“தெரியும் தெரியும் சாப்பிடு…” – அவளுடைய முயற்சியை அசால்டாக முறியடித்துவிட்டு உணவில் கவனமாக இருப்பது போல் குனிந்து கொண்டான். அர்ஜுன் பெயர் அவள் வாயில் வந்தாலே எதையோ பறிகொடுக்கப் போகும் பயம் அவனை ஆட்கொண்டுவிடும். அதிலிருந்து மீண்டுவர சில நிமிடங்கள் கூட பிடிக்கும். இருந்தும்கூட தன்னுடைய மனப்போராட்டத்தை இதுவரை அவளிடம் அவன் காட்டியதே இல்லை.

 

“என்ன தெரியும்? அர்ஜுன் ஒன்னும் உன் அளவுக்கு மோசம் இல்ல… உன்கிட்ட வாங்கற முட்டையடியை விட அர்ஜுனோட முசுட்டுத்தனம் எவ்வளவோ பரவால்ல…” – உதட்டை சுழித்தாள். உடனே டேவிட்டின் முகம் சிரிப்பில் மலர்ந்தது.

 

“நீ ரொம்ப ஒழுங்கு… உன்கிட்ட வாங்கின கரண்டியடி எனக்குத்தானே தெரியும்”

 

“ஏய்.. பொய்… பொய்… ஒரு அடி கூட வாங்கல… வேணுன்னா இப்போ கொடுக்குறேன்…” என்று கையிலிருந்த குத்துக்கரண்டியை அவன் முகத்துக்கு நேராக நீட்டினாள்.

 

இம்மியளவும் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்த டேவிட் அவள் நீட்டிய கரண்டியில் ஒட்டியிருந்த ஒரு துண்டு நூடுல்ஸை வாயில் எடுத்துக் கொண்டான். அந்த ஒரு கணத்தில் அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தை இனம் கண்டுகொண்ட மிருதுளா அதிர்ந்தாள். அவளுடைய தடுமாற்றத்தை டேவிட்டும் புரிந்துக் கொண்டான்.

 

திட்டமிட்டு செய்யவில்லை… மனமெங்கும் வியாபித்திருந்த காதல் அவனை தடுமாறச் செய்துவிட்டது. ஒரு சின்ன தடுமாற்றம் அவர்களுக்குள் உள்ள இயல்புத்தன்மையையே மாற்றிவிடுமோ என்று பயந்துவிட்டான். உடனே அதை சரி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில், “குத்த வந்தியா!!! ஊட்டிவிடரியோன்னு நெனச்சேன்… சாரி…” என்றான் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு. முரட்டு முகத்தில் அப்பாவி பாவம்… கொஞ்சமும் பொருந்தாத அந்த முரண்பாடு மிருதுளாவின் முகத்தில் புன்னகையை கொண்டுவந்தது.

 

“ஆசைதான்… இந்தா உன் எச்சியை நீயே வச்சுக்கோ… நா வேற ஃபோர்க் எடுத்துக்கறேன்” என்று விளையாட்டாக கூறுவது போல் கரண்டியை மாற்றிக் கொண்டு உன்ன துவங்கினாள். ஓரிரு நிமிடங்கள்தான் கழிந்திருக்கும்… அழுத்தமான காலடி ஓசை அவர்கள் கவனத்தை ஈர்த்தது. இருவரும் ஒருசேர திரும்பிப் பார்த்தார்கள். அர்ஜுன் ஹோத்ரா அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

 

நிழல்நிலவு - 31
நிழல்நிலவு- 33
24
Leave a Reply

avatar
14 Comment threads
10 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
14 Comment authors
Lathaadmin Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Latha
Guest
Latha

Next ud plse

Member

Inaiku ud iruka madam

Kurinji
Guest
Kurinji

Innum site work mudiyalaiyaa nityaa

Guest
UmaManoj

Update podunga Nithya…4 days agiduchu…epavum surprise Thana..

admin
Admin

Sorry Uma… Site la work poyittu irukku… post poda mudiyaadhu… plz wait one more day…

Member

h h superrrrrrrrrr

Member

Nithu….
Thank you so much for ur frequent updates…
So sweet….
Thank you😘😊😊😊

Member

ayyayo ivan yerkanave korangu.. innum etha paathano ennatha ketano…. mukayama david thadumarina antha sec aju kanula irunthu thapikarathu kashtamache….

Mrithu vera vazhiye ila. Odi poi takunu katipudichiru…. appavachu nambrana papom..

Guest
Afrin Zahir

Haha … correct ah sonneenga sis 😂😂😁

Member

Ivana vechitu vera enna sis panrathu

poonguzhali
Guest
poonguzhali

Ada Kadavule… Muirdhu… engeyavadhu odi poyidu… villan vandhuttaan…

Kavi Swami
Guest
Kavi Swami

Devid Semma cute… Mirudhula kum avana pidikkudhu… But Arjun nai Romba pidikkudhu pola… ;p aduththu enna nadakkumo!!!

Member

Mrithu ku david mela ulathu natpum, mariyathayum. Aju mela ullathu paasamum kadhalum. Ithu david ku purithu. Intha aju epo puri jipan than therila sis

Member

Nice ud sis👌👌👌👌

Guest
Daisy Mary

யெஸ்…யெஸ்… இதை தான் எதிர்பார்த்தேன்….
அதே வேகம்… அதே டென்ஷன்…. அதே சந்தோசம்…. அதே உற்சாகம்…
இனி என்ன அப்டிங்கிற ஒரு மனவோட்டம்?!
ஐ லவ் யு டேவிட்…. உம்மமா……
யு ஸ்டோல் மை லிட்டில் ஹார்ட் …..
நவ் ஐ பீல் த ஏனெர்ஜிடிக் லவ்…
இதுவும் ஒரு விதத்துல நல்லா தான் இருக்குல்ல….

Member

Little heart a thirudan kuduthutu neenga ena pana poreenga pa…

Guest

Ammadi enna vegam enna vegam😉😉😉😁 sis avanga sanda mudunchu fresh aagi saptumpothu vanthutana? 😅😅 Avan enemies ah kollum pothu kuda evlo fast ah move aagala Pola…. Payyan air ah Vida fast ah vandurugan Yara purati eduka porano? Devid miru relationship “kavithai”Pola Azhagu😘😘😘😍😍😍 miru Ku devid oda life amancha Ava epavum happy girl than…. Mmm nenga enna mudivu pannirkingalo ungaluku tha velucham…. But sis devid Sujith Malik suman Pooja arju miru Ella character s um remba azhaga kondu poringa… Surprise ud ah pottu thakki enga eye la happy water vara vaikiringa superb 👏👍 keep rocking 👍

Member

Na manasula nenachatha apadiye solliteenga pa….

Vare va…. vandhutanda villan vandhutanda….. david enga suthal vida porano theriyalaye…. atha vida miru kuttiya kaduchu thuppa poran….. but conform a oru adithadi irukku miru n aju ku. Love solrana ila thookki podurana theriyala. But enna nadanthalum miru david oda friendship a miss panakoodathunu thonuthu….

Guest
Afrin Zahir

Avanga fresh aahitu saaptadhu lunch sis … Arjun vandhadhu dinner appo!!

Guest

Oh😁

Guest
Afrin Zahir

Nalla point la mudicheenga sis … can’t wait for next ud .. please seekrama potrunga

Member

Mmm.ssss …. surprise epi kuduthu semma shock athoda mukiyama edathula epi ya mudichu m shock tharanga. But nithya ji ku theriyum late aana epi kete nama aluthuduvomnu athunala seekirama next epi kuduthuru vanga….

Kurinji
Guest
Kurinji

Yaar mokarai kiliya pogutooooo…surprise epi

Guest
Afrin Zahir

😂

error: Content is protected !!
Don`t copy text!