Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


Readers Comments

Recent Updates

முள்ளோடு முத்தங்கள் 45

மித்ராவின் பிரசவ நாள் நெருங்க… நெருங்க ஆதிக்கு சற்று அட்சமாகவும் பதட்டமாகவும் இருந்தது… அவளைவிட அவன் தான் நாளுக்கு நாள் பயத்தை சுமந்துக் கொண்டிருந்தான் ஏனனில் முதல் தலை பிரசவம் பெண்களுக்கு மறு பிறவி என அனைவரும் கூறி கேட்டுருக்கிறான்… ஆனால் தன்னவளிடம் பயத்தை காட்ட அவன் விரும்பவில்லை… தன் மன ஆறுதல் வேண்டி கடவுளிடம் பிராதிக்க மனைவியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றான்… பிராகரத்திற்கு வந்தவன் கடவுள் முன் கைகூப்பி நின்று மனமுருக வேண்டிக் கொண்டான் அவன் செயல் அவளுக்கு புன்னகையை தோற்றுவிக்க சிரித்த முகத்தோடு தன்னவனைப் பார்க்க….

 

கடவுளிடம் தனது பிராத்தனையை வைத்தவன் தன்னையே புன்னகையோடு பார்த்திருந்த மனைவியை கண்டு “ என்ன பேபி… பார்வையெல்லாம் பலமா இருக்கு” என்றவனைப் பார்த்தவள் “ ஹ்ம்ம் பின்னே பிஸ்னஸ் மேன் கோவிலுக்கு வராறு…. கண்ண மூடி சாமி கும்பிற்றாறு என்ன பக்தி… என்ன பக்தி” தன்னைப் பார்த்து கேலி பேசியவளை கண்டு கண்ணில் காதலாய் “ என்னப் பண்றது பேபி… காதல், பொண்டாட்டி, குழந்தைங்கனு வந்துட்டா எவ்ளோ பெரிய பிஸ்னஸ் மேனா இருந்தாலும் குடும்பஸ்தான் பேபி அதுவும் இல்லாம கொஞ்சம் பொறுப்பு கூடுதில்ல அதான்” என்றவன் தன் மனதின் பயத்தை அவளிடம் கூறாமல் மறைத்து புன்னையித்தான்…

 

அவளோ சரிதான் என்றவள் பேசிக்கொண்டே வர கீழே  இருக்கும் கற்கலில் கால் தடுக்கி கீழே விழ போனவளை “ பேபி” என ஓடிச் சென்று தாங்க அதே சமயம் பக்கவாட்டில் “ மித்ரா பாத்தும்மா” என்று ஒரு பெண்ணின் குரல் ஒலிக்க, முதலில் திரும்பிப் பார்த்த ஆதிக்கு சர்வமும் அடங்கி உடல் இறுக கோபத்தில் முகம்  சிவக்க நின்றிருந்தான்…

 

தன்னை சரி செய்துக்கொண்டு நிமிர்ந்தவள், தன் கணவனின் அமைதியும் கோபத்தையும் கண்டவள் எதனால் என்று திரும்பி பார்த்தவள் அதிச்சியாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது அவன் கோபத்தில் நின்றிருந்த காட்சி எதனால் என்பது நன்கு புரிய “ அத்தை” என்றவள் அவர் அருகில் செல்ல சிலையாய் நின்றுந்தவனுக்கு அப்பொழுது தான் உயிர் வந்தது “ மித்ரா” ஆதி உரத்த குரலில் அழைக்க அவளோ அவனிடம் திரும்பி “ உங்களால பேச முடியாது இல்லையா பாவா… ஆனா என்னால் அப்படி இருக்க முடியாது ஏனா என்னோட மருமகள் என்ற உறவு மனைவி  ஒன்றுக்கு மட்டும் அடக்கமில்ல… சகோதரி, நாத்தனார்,தோழி, மருமகள்னு இருக்கு… என்னோட கடமையை செய்ய விடுங்க” என்று கூறி சென்றவளைப் பார்த்து அமைதியாக நின்றிருந்தவன் கார் நிறுத்தம் செய்திருக்கும் இடத்திற்கு சென்று தன்னவளுக்காக காத்திருந்தான் இங்கு நின்றாள் ஏதாவது பேசி விடுவோமோ என்று அஞ்சியே அவன் அகன்று சென்றது….

 

ஆம் ஆதி சந்தித்தது தன் அன்னை சாந்தியைத்தான் அதுவும் பலவருடங்கள் முன் தன் காதலன் தர்மராஜை நம்பி ஓடிச் சென்ற அதே சாந்தி இன்று ஆஷ்ரமத்து ஒன்றை நிர்வாகித்து வருகிறார் தான் தன் பிள்ளைக்கு செய்த கொடுமையின் பாவத்தை கழிக்க பல பிள்ளைகளை தத்தெடுத்து குன்றத்தூரில் இருக்கும் அன்னை இல்லத்தை தான் அவர் நடத்தி வருகிறார்…

 

தர்மராஜை நம்பி வந்தவர் காதல் அவரது கண்ணை மறைத்திருக்க…. தர்மராஜ் சாந்தியை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி கூட்டி சென்ற இடம் விலை மாந்தர்கள் இருக்கும் சந்தை அங்கு தர்மராஜ் சாந்தியை பணபோதியாக மாற்றி நல்ல லாபத்திற்கு விற்று பணத்தை வாங்கிக்கொண்டு தலை மறைவாக சென்று விட்டார்….

 

இந்த செய்தியாவும் அறியாத பேதையாக இருந்தவரிடம் இங்கையே இருக்க சொல்லி திருமணத்திற்கான ஏற்பாட்டை செய்து வருகிறேன் என்று கூறிய கயவனின் சூழ்ச்சி தெரியாமல் சிக்கியவர் அவனை மனதார நம்பி சம்மதித்தார்…

 

அவன் சென்ற சில நொடிகளில் கதவை திறந்துகொண்டு ஒருவன் உள்ளே வந்ததை பார்த்து அச்சமயம் கூச்சலிட்டவர் அவனை எதிர்க்க அவனோ போதை நிலை உச்சக்கட்டத்தில் இருந்தவன் தர்மராஜின் செய்யலை கூற சாந்தி அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை…. அந்த முகமறியா கார்மூகனிடம் தன் கற்பை காப்பாற்ற தன் முழு பலத்தைக்கொண்டு வீழ்த்த அந்த நொடி தன் பாதுகாப்பையும் இழந்து தான் கணவனுக்கு செய்த துரோகம் கண் முன் வந்து விரிய… மேலும் தன் கணவனுக்கு மட்டுமே சொந்தமான பெண்மையை கண்டவனுக்கு இறையாக போவதை நினைத்து மனதில் ஐயம் எழ அந்த இழிநிலைக்கு ஆளாகாமல் இருக்க தன் முழுபலத்தை திரட்டி அவனை கிழே தள்ளியவர் அருகிலிருந்த பூஜாடியை எடுத்து அவள் தலையில் ஓங்கி அடித்தார், பூஜாடி நன்றாக அவன் தலையை பதம்பாத்திருக்க அந்நிலையில் அவன் மயங்கி விழுந்தான்….

 

இதுதான் சமயமென்று நினைத்த  சாந்தி அங்கிருந்து தப்பித்தவர் அருகிலிருந்த கோவிலுக்கு சென்றார்… சாந்தியின் மனம் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை, தான் செய்த வினை தன்னையே சுட்டுவிட்டதை அறிந்து கவலையில் இருந்தவர்… பசியின் கொடுமையால் அப்படியே மயங்கினார்…

சாந்தியின் முகத்தில் நீரை வாரி அடித்த வயது முதிய பெண்மணி ஒருவர் சாந்தியை மடி தாங்கிக்கொண்டு “ என்னம்மா ஆச்சி  இங்க பாரு கண்ணை திறந்து பாரு…. யாரம்மா நீ”அவர் கேள்விக்கு என்ன பதில் கூறுவது தான் பெற்ற பிள்ளையையும் தன் மேல் உயிரையே வைத்திருக்கும் கணவனை விட்டு ஒரு அய்யோக்கியனை நம்பி வந்து சீரழிந்ததை எங்கனம் சொல்ல கூடும் என்று எண்ணியவர்….

 

மீண்டும் தன் குடும்பத்திடம் செல்ல அவர் மனம் அருவருத்தது வேண்டாம் இந்த பாவப்பட்டவளின் கால் மீண்டும் அந்த புனித இடத்தை அசுத்தப்படுத்த வேண்டாம் என்று தீர்மானித்தவள் அந்த முதிய பெண்மணியை பார்த்து அம்மா … நான்…. நான் ஒரு அனாதை… எனக்கு போக்கிடம் இல்லாமல் இங்கு வந்தேன் சாந்தி கூறியதை வைத்து அந்த முதியவர் சந்தேக கண்ணோடு பார்க்க அதில் மேலும் கூனி குறுகியவர் அழுகையை அடக்க முடியாமல் விம்பி அழுதார்…

 

அவரோ “இங்க பாருமா கடவுளின் பிள்ளைகள் என்றும் அன்னதையல்ல” என்று கூறியவர் சாந்தியை அவருடனே அஷ்ரமத்திற்கு அழைத்து சென்றார்… அங்குள்ள சின்னச்சிறு பிள்ளைகளை கண்டவர்… தான் பெற்ற பிள்ளையின் நினைவில் கண்கள் கலங்கியது அந்த நொடி புரிந்தது  தான் எத்தகைய பாவத்தையும் எத்தகைய சொர்கதையும் இழந்துள்ளோமென்று…

 

இவை அனைத்தும் மித்ராவிடம் கூறிமுடித்தவர் கண்கள் தன் கணவன் மற்றும் தன் அண்ணன், அண்ணி இறப்பில் வந்து நின்றது…. மேலும் வாயும் வையுறுமாக இருக்கும் பெண்ணை சாங்கடப்படுத்தாது “ மித்துமா… இந்த அத்தையை நியாவது மன்னிப்பியா” தன் கைகூப்பி கேட்க  “அய்யோ அத்தை என்ன  வார்த்தை பேசுறீங்க” கூப்பிய கையை இறக்கிவிட்ட மித்ரா  “நீங்க செய்த தப்பை உணர்ந்துட்டீங்க… அதுவே போதும் அத்தை… மன்னிப்பெல்லாம் தேவையில்லாதது” என்று கூறிய தன் அண்ணன் மகள் குணத்தில் உயர்ந்துவிட்டதுப் போல் உணர்ந்தார்  உருவத்தில் தன் அண்ணனைப் போல் இருந்தாலும் குணத்தில் தன் அண்ணி சாரதாவை பிரதிபலித்திருந்தாள்…

பின்பு தன் மகன் நினைவு வந்தவராக  “ மித்துமா ஆதி என்ன மன்னிக்க மாட்டானா… நான் செஞ்சதும் கொஞ்சமில்லையே” இருப்பினும் அவர் மனது மகன் தன்னை அம்மாவாக ஏற்றுக்கொள்ள மாட்டானா என்று நப்பாசையும் கொண்டது…

 

“நீங்க கவலை படாதீங்க அத்தை நான் அவங்க கிட்ட பேசுறேன்” என்க சாந்தியோ தெளிந்த முகத்தோடு மகிழ்ச்சி பொங்க “ இது போதுமா…. சரிம்மா… ரொம்ப நேரமாச்சு நீ கிளம்பு  ஆதி வெயிட் பண்ணிட்டு இருப்பான்…

 

“அத்தை நீங்களும்” என்றவளை பார்த்தவர் “ இல்லடா எனக்கு ஆஸ்ரமம் தான் வசதி… என்னால அந்த பிள்ளைகளை விட்டு வர முடியாதுமா” என மேலும் அவரை குற்றவுணர்வு படுத்தாமல் சாந்தியின் மன நிலையை புரிந்துக் கொண்டவள் சரி என்றதோடு திரும்பி சென்றாள்…

 

தன்னை நோக்கி வரும் மனைவியை பார்த்து… அவள் ஏறுவதற்கு கார் கதவை ஏதுவாக திறந்து வைத்தவன் மனைவி ஏறியதும் காரை கிளப்பிபான்… கணவன் பேசாமல்  வருவதை உணர்ந்தவள் அவன் மனதை அறிந்து அவளும் அமைதிக்காத்தாள்…

 

வீட்டிற்கு வந்தவர்கள் காரை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடக்க… மித்ரா தோட்டத்தில் இருள்வானில் ஒலித்திருக்கும்  நிலவினை பார்த்திருந்த ஜெகதீஷை கண்டு தன் கணவனிடம் திரும்பி “ பாவா நீங்க ரூம்க்கு போங்க… நான் பத்து நிமிஷத்துல வரேன்” மனைவியை புரியாமல் பார்த்தவன் அவளது கண்ணசைவில் எந்த ஒரு மறுபேச்சுமின்றி தங்களது அறைக்கு சென்றான்…

 

ஏதோ நிழல் படுவதுப் போல் யாரோ வருவதுப் போல் தோன்ற …  யாரென்று பார்த்தவன் மித்ராவை பார்க்க முடியாமல் குற்றவுணர்வில் தலையை தாழ்த்திக் கொண்டான்….

 

“ ஜெகதீஷ் அத்தான்” மித்ராவின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவன்… உண்மையாகவே குற்றவுணர்வில் தவித்துக்கொண்டிருந்தான்… அதன் தாக்கத்தில் அவனுக்கு பேச்சு வர மறுத்தது…

 

“ ஜெகதீஷ் அத்தான் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”

 

“ சொல்லு மித்ரா” என்ற ஒற்றை சொல்லொடு அனுமதிக்க அவளோ “அத்தான் உங்களுக்கு ஒரு விஷியத்தை நான் தெளிவுப் படுத்த விரும்புறேன்… நான் “ உங்கள அந்த மாதிரி நினைச்சதில்ல அத்தான் ஆனா ஏதோ ஒரு வகையில் உங்க சங்கடமான சூழ்நிலைக்கு நானும் ஒரு காரணம் என்கிறப்போ என்ன மன்னிச்சிருங்க”….

 

அதில் தன் தப்பை உணர்ந்த ஜெகதீஷ் “ இல்ல மித்ரா எல்லா தப்புக்கும் நான் தான் காரணம்” அவன் எதை கூறுகிறான் என்பதை ஊகித்தவள்…

 

“ இருந்தும் அத்தான் விருப்பம் என்பது ஒரு தனிப்பட்ட மனிஷனோட விருப்பம்… அதை நான் அமோதிக்குறேன் ஆனால் அதில் சமந்த பட்டவங்களுக்கு விருப்பம் இருக்கணும்…நான்  எதை சொலவரேணு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்… நீங்க பாவாவ என்ன வேணாலும் சொலிர்க்கலாமே ஆனா அவரை போயி நீங்க அப்படி கேட்டிருக்க கூடாது… சொந்த பந்தம் நீங்களே அவரை அனாதைன்னு சொன்னா… பாவும் அவரு மனசு என்னப் பாடுபடும்” தன் தவறை உணர்ந்தவன் மௌனமானான்…

“ வார்த்தைய மட்டும் என்னைக்கும் விடக்கூடாது அத்தான்… அது அவங்கள மட்டும் பாதிக்கிறது இல்லாம சுத்தி உள்ளவங்களுக்கும் மனஸ்தாபம் தானே” அதை அமோதித்தவன் தன்னை மன்னிக்குமாறு கேட்டான்

 

அவனைப் பார்த்து சிரித்தவள் “ தெரியாம செய்தா… மன்னிக்கலாம்…. ஆனா தெரிஞ்சி செய்யுறது” குற்றம் குற்றம் தானே

 

“பாவாக்கு உங்க மேல துளியும் கோபமில்ல… நீங்க அவர்கிட்ட வந்து பேசுங்க” அவள் கூறிக்கொண்டு முன்னே செல்ல… அவளை அழைத்தவன் “ மித்து… எனக்காக நீ ஒரு உதவி செய்யணும்”

 

“சொல்லுங்க அத்தான்” – மித்ரா கேட்க

 

“அது வந்து பழைய படி ஆதி கே.கே குரூப்ஸ் கம்பெனி MD பொறுப்பை ஏதுக்கணும்” அவன் கூற மித்ரா அமைதியாக இருக்க ஜெகதீஷ் “ ப்ளீஸ் மித்ரா எனக்காக நீ ஆதி கிட்ட பேசணும்” அதில் முடியாது என்று தலை யாட்டியவள்

 

“ இல்லத்தான் அவரு கரணமில்லாம எதுவும் செய்யமாட்டாரு அவருக்கு  எது விருப்பமோ” அதுவே என் விருப்பம் என்ற ஆதியின் மனையாள் தன் கணவனை தேடிச் சென்றாள்…

 

ஜெகதீஷ் மனம் கணக்க அவனோ மனம் ஒத்த தம்பதியர் என மெட்சியும் கொண்டான்..

 

இங்கே நடப்பதையெல்லாம் மேல தங்களின் அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆதி என்றும் போல் மனைவியின் காதலில் கரைந்ததும் போனான்… தன் மனதை புரிந்து நடந்துகொள்ளும் மனைவி உண்மையாகவே கடவுள் கொடுத்த வரம் மென்றுதான் கருதினான்…

 

தன் மனைவிக்காக காத்திருந்தவன் அவள் அறைக்குள் நுழைந்த வேலையில் அவளை ஓடிச்சென்று கட்டியணைத்தவன் தன்னவளோடு கட்டிலை நெருங்கி அவளை அமரசெய்து அவள் மடியில் சுகமாக கண்களை மூடி தலை சாய்த்துக் கொண்டான்…

 

அவள் கண்களுக்கு கணவன் ஒரு சேயாய் மாறிபோக அவனது தலையை தன் மென்காரத்தால் வருடியவள்… தன்னவனின் மனது புரியாமல் ஒன்றுமில்லை அவன் மனது வேதனைக்கொள்ளும் போது இப்படி மடியை தேடுவது ஒன்று வழக்கம் அதை உணர்ந்தவாளாய் அவளும் அவனை அன்போடு அரவனைத்துக் கொள்வாள் “ பாவா… நான் உங்கள ஒன்னு கேட்கவா” தன்னவளின் மீது பார்வையை செலுத்தியவன் “ சொல்லு பேபி” என்க

 

தன் வருடலை நிறுத்தாமல்  தன்னவனின் தலையை கோதியப்படி “ பாவா அத்தை செய்தது தப்புதான்… இருந்தாலும் அவங்க செய்தது தவருன்னு திருந்தி வரப்போ மன்னிச்சி  ஏதுக்கறது நல்லது பாவா” தன்னவனின் மடியிலிருந்து எழுந்து அமர்ந்தவன் அவள் முகத்தை தன் கரத்தில் ஏந்தி “ பேபி … நான் பண்ணது தவருனு சொல்றியா” அவன் கண்களில் அலைப்புறுதலை உணர்ந்தவள் அவன் வேதனை கொள்வது பொருக்காமல் “ அச்சச்சோ பாவா உங்கள அப்பிடி சொல்வேனா இருந்தும் அத்தை பாவும் தானே நம்மல விட்டா அவங்களுக்கு யாரு இருக்கா” அமர்ந்திருந்தவன் எழுந்து ஜன்னல்  பக்கம் சென்று ஜன்னல் கம்பியை இறுக பிடித்து தன் கோபத்தை கட்டுக்குள் அடக்க முயன்றான்…

 

“ இதே நிலையுல தான் பேபி என்ன பட்ச குழந்தைனு கூட பார்க்காம  என்ன கதரவிட்டு எங்க அப்பாவுக்கு துரோகம் பண்ணிட்டு போனாங்க… நான் மன்னிச்சாலும்… எங்க அப்பா அவங்க மேல உயிரையே வச்சிருந்தாங்களே அவருக்கு என்ன பதில் சொல்றது  சொல்லு… அப்படி பட்டவங்களுக்கு துரோகம் பண்ண எப்படி மனசு வந்தது” தன் கணவன் கூறுவது அனைத்தும் உண்மைதான் அந்நிலையில் அவன் மனது பெரிதும் பசத்திற்காக எங்கிருக்குமே அவன் கவலை அவளை தக்க ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் தன்னவனை…

 

அவளை அணைத்தவன் “ கவலைப் படாத பேபி… ஒரு அம்மாவா அவங்க கடமையிலிருந்து தவறிர்களாம் ஆனா அவங்களுக்கு ஒரு மகனா நான் என்னோட கடமையிலிருந்து தவரமாட்டேன்” என்னை நம்பலாம் என்று கூறியவன் மௌனமானான்…

 

இதற்குமேல் இதைப்பற்றி கணவனிடம் விவாதிக்க விரும்பாதவள் அமைதியாக இருந்தாள்… இருவரிடமுன் நிசப்தமான நிலை தொடர… தன் நினைவிலிருந்து முதலில் வெளி வந்த ஆதி திரும்பி பார்க்க அங்கு மித்ராவோ செய்வதரியாத சிறுப்பிள்ளைப் போல் நிற்கும் தன் மனைவியின் கோலம் அவனுள் பல கதைகள் பேசியது… தன்னவளை நொடி பொழுது இழுத்து தன்னுடலோடு இருக்கியவன் “சாரி பேபி… நான் உன்கிட்ட ஒருவிஷயம் சஸ்பென்ஸ் வச்சிருந்தேன் அந்த ஜெகா சஸ்பென்ஸ ஓடச்சிட்டான்” என்றவன் மனைவியை பற்றி உடும்பு பிடியாக இருக்கியவனின் அணைப்பில் அடங்கியவள் “ ஆமா பெரிய சஸ்பென்ஸ் நீங்க புது தொழில் ஆரம்பிக்க போறது முன்னவே எனக்கு தெரியும் சரி நீங்க சொல்லாதப்போவே எனக்கு தெரியும்” என்க அவளை ஆச்சிரியதோடு பார்த்தவன் “ எப்படி பேபி” கண்ணில் குறும்பும் ஆச்சரியம் பொங்க கேட்ட கணவனை கண்டு அவன் நின்றிருந்த அழகில் மயங்கியவள் அவன் கன்னத்தில் எம்பி முத்தம் வைக்க அவனோ “ நீ முதல சொல்லு பேபி… இதுக்கான வேலையை அப்புறம் ஆரம்பிக்கலாம்” அவன் கூற அதில் வெட்கம் கொண்டவள் அவன் மார்பில் தன் முகத்தை புதைக்க அவன் விடா பிடியாக அவளிடம் கேட்டான் “ ஹ்ம்ம்… இது மட்டுமில்ல எல்லா விஷயமும் தெரியும் வீட்டுல நடந்தது….. எல்லாம் நான் வந்ததும் வர்ஷா என்கிட்ட சொல்லிட்டா” தன் கடைக்குட்டி நாத்தனாரை பாவம் என்று கூட பாராமல் கணவனிடம் மாட்டிவிட்டால் அவன் மனைவி….

 

ஆதியோ “ ஹும் வந்ததும் அந்த சிஐடி வாலு எல்லாத்தையும் சொல்லிட்டாளா… வேறு எதுவும் சொல்லலையே” என கேட்ட கணவனை பார்த்தவள் “ வேற என்ன இருக்கு சொல்லுங்க பாவா” என்றபடி அவன் சட்டை பட்டனை திருகியப்படி கேட்க அதில் கிறங்கி நின்றவன் “ அது நாளைக்கு திறப்பு விழாவுக்கு நீயே வந்து தெரிஞ்சிக்க”

 

“என்ன நாளைக்கேவா” – மித்ரா வாயை பிலந்துக்கொண்டு அச்சரியத்தோடு கேட்க

 

“ஹ்ம்ம் ஆமா பேபி” – என்று ஆதி கூற

 

“ரொம்ப சப்ரைஸ் வைகுறிங்க பாவா” என்றவள் உதட்டை பிதுகியப்படி நின்றிருந்தாள்…  அவளது செய்கை மேலும் அவனுக்கு தாபா தூண்டில் போட தன்னை  அடக்கும் வழியரியாது அவசரமாய் அவள் இதழில் முற்றுகையிட்டான்…

 

அவளோ தன்னவனை தன்னிடமிருந்து தள்ளியவள் “ இஸ்ஹ்ஹா…. பாவா வலிக்குது இப்படியா கடிச்சி வைப்பிங்க” என்றபடி தன் உதட்டை தேய்த்துக் கொள்ள…. அவனோ சலலித்தப்படி  “ பச்…. பேபி ஏன் இப்படி பூஜை வேலை கரடி மாதிரி பிஹவ் பண்ற” அவளை நாசுக்காக கலாய்த்தவன் மீண்டும் அவள் இதழை நோக்கி குனிய… அவன் தலையை தன் ஒற்றை விரல் கொண்டு தடுத்தவள் நான் கேட்டத்திற்கு பதிலென்றவளை கண்டு “ என் செல்ல பேபி சஸ்பென்ஸ ஓடச்சிடா அதுக்கு பேரு சஸ்பென்ஸ் இல்லடி…. நாளைக்கு நீயே பாத்து தெரிஞ்சிக்கோ” பாவம் அவனுக்கு தெரியவில்லை நாளை நடக்கவிருக்கும் அசம்பாவிதம்….

 

“ நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்லை பாவா நானா தெரிஞ்சிகுறேன்” தன் கையை சுடக்கிட்டு கொட்டாவி ஒன்றை வெளியிட்டவள் “ எனக்கு டையர்டா இருக்கு பாவா நான் தூங்குறேன்” உறங்க செல்பவளை கண்டு அவளை தடுத்தவன் “ காரியம் கேட்டுச்சு போ” வாய் விட்டபடி முனகியவனைப் பார்த்து “ என்ன காரியம் கெட்டுச்சு” அவன் எதற்கு அடித்தளம் போடுகிறான்  என தெரிந்தும் அவள் அவனை சீண்டி விளையாடினாள்…

 

“ பேபி… இன்னைக்கு கோவில்ல  ரொம்ப நேரம் நின்னல்லையா… ஹாட் வாட்டர் போட்டு ஒத்தடம் கொடுப்போம்”

 

“இல்லை வேண்டாம் பாவா எனக்கு கால் நல்லார்க்கு” மித்ரா மறுக்க அவனோ “ ஹமக்கும் முடியாது பேபி அது அப்படித்தான் இருக்கும் நம்பத்தான் நம்ப உடல் ஆரோகியத்த பாத்துக்கணும்” என்றவன் விடாப்பிடியாக அவளை அமர வைத்து வெந்நீரில் ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தான் இது ஒன்றும் ஆதிக்கு புதிதல்ல இது தொடர்ச்சியாக நடைபெறுவது ஆதி தன் மனைவிக்காக செய்து வந்தான்… கர்பிணி என்றதால் காலில் நீர் இறங்கி வீங்கிவிட அதற்கு தினமும் தனக்கு எத்தனை வேலையிருந்தாலும் மனைவிக்காக இதனை தினமும் செய்து வந்தான்…

 

அவள் எவ்ளோவோ தடுத்தும் அவன் கேட்காமல் அவள் காலை பிடித்துவிட்டவன் அவள் அணிந்திருக்கும் செயர்கை கால் கருவியை அவிழ்த்து சற்று வெந்நீர் கலந்த நீரைக்கொண்டு ஒத்தடம் கொடுக்க அவனது செயலில் அவள் கண்கள் கரிக்க அவனையே பார்த்திருந்தால் “பேபி…. இப்போ வலி இல்லையே இன்னும் கொஞ்சம் பிடிச்சி விடவா” தன் கேள்விக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை என்று நினைத்தவன் அவளை நிமிர்ந்து பார்த்த மறுநொடி

 

பதரியவனாய் “பேபி என்ன செய்து ரொம்ப வலிக்குதா…. வயிறு ஏதும் வலிக்குதா ஹாஸ்பிட்டல் போலாமா”…. அவன் கேட்ட கேள்வியில் தன்னுணர்வு பெற்றவள் தனக்காக அவன் துடிக்கும் துடிப்பை கண்டு கண்களால் அவனை விழுங்கிக்கொண்டு “பாவா உங்களுக்கு கஷ்டமா இல்லையா” பேபி நீ என் சுகமான வலி இதில் கஷ்டம் ஏன் என்று உணர்த்தியவனை கண்டவள் அவனை நெருங்கி சென்று கட்டிக்கொண்டாள்….

 

“பாவா ஐ லவ் யூ” என்க அதில் அவன் கண்கள் ஆட்சிரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஒருங்கே விரிந்து “பேபி ரியலி ” முதல் முறையாக மனைவியின் வாய் மொழியாக கேட்டவன் இன்னும் நம்ப முடியாமல் அவளை பார்த்து கேட்க அவளோ அவன் முகத்தை கையில் எந்தியவள் அவன் கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்து உறுதிபடுத்தினாள்…

 

அவளது ஒற்ற இதழ் ஒற்றலை அனுபவித்து மயங்கியவன் “பேபி உனக்கு எவ்ளோ சொல்லிக்குடுத்தாலும் புரியல பேபி” என்றவன் அடுத்த நொடி அவள் இதழை சிறை செய்திருந்தான் தாபத்தோடு….

 

இதழ் முத்தம் அடுத்த கட்டத்திற்கு தூது போட அவன் அவளை முழுதாய் ஆக்ரமித்து இருந்தான் அவனது வேகம் அவள் அறிந்தது தான் என்றாலும்  அவள் உடலில் விளைந்த சில  மாற்றங்களினாள் “பாவா மூச்சு முட்டுது… கொஞ்சம் பொறுமையா நான் எங்கையும் போய்ட மாட்டேன்….  இப்ப நான் மட்டுமில்ல உங்க குழந்தைகளும் இருக்காங்க அப்புறம் உங்கள பாத்து பேட் அப்பான்னு சொலிற போறாங்க”

 

அவள் கூறியதை கேட்டு சத்தமாக சிரித்தவன் ” பேபி நமக்கு எப்பவும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ரொம்ப முக்கியியம்… இப்பக்கூட பாரு கணவன் என்ற கடமையை சரியா செய்யுறேன் இல்லையா” அவனது கடமை, கண்ணியம் பற்றி அறிந்தவள் முகம் வெட்கம் கொண்டாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை அவள் சிரிப்பை அடக்கும் பொருட்டு மீண்டும் அவள் இதழை முற்றுகை இட்டான் சிறு அழுத்ததோடு அதில் பாவையவள் கண்கள் மூடி சுகமாக அனுபவித்தாள்….

 

****************************************

 

மறுநாள் காலையில் விழா நடக்கும் இடத்திற்கு அனைவரும் குடும்பமாக கிளம்பிக்கொண்டிருக்க ஆதியோ தன் மனைவி பின்னால் அலைந்துக் கொண்டிருந்தான் “ பேபி… இந்த புடவைய கட்டு… இந்த நேக செட்டை போடு” என்க அவளுக்காக தேடி கடைகடையாக ஏறி அலைந்து  தன்னவளுக்காக அவள் மேனிக்கு பொருத்தமாக தங்க நிறத்தில் பட்டு ஜரிகை போட்டு புடவை எடுத்தவன் அதற்கு ஏற்றார் போல் நகையும் வாங்கி கொடுத்திருந்தான்…

 

அவனது மனைவியோ விடாப்பிடியாக மறுத்து “ பாவா கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா ஏன் நம்ப கல்யாண புடவை கட்டுனா என்ன அதுக்கு என்ன கொரச்சல் நல்லதான் இருக்கு” இதுதான் விஷயம் அவன்  வாங்கி வந்ததை அவன் மனைவி மறுத்து அவர்களது திருமண புடவையை அணிய வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தால்…

 

அவளது பிடிவாதத்தை முதன் முதலில் பார்த்த ஆதி “ பேபி என்னதிது… புதுசா பிடிவாதம் எப்பவும் நான் தான் அடம்பிடிப்பேன்… இப்ப வர வர நீ குழந்தையா மாறிட்டு வர பேபி… இது கொஞ்சம் கூட சரியில்லை”  அவளைப் பார்த்து புசு புசு  வென்று மூச்சிறைத்து செல்ல கோபம் கொண்டு முறைக்க…

 

ஆதியின் அருகில் சென்றவள் “ பாவா ப்ளீஸ்… என்ன புரிஞ்சிக்கோங்க… எனக்கு எனக்கு என்னனு தெரியல இன்னைக்கு இந்த புடவை கட்டணும்னு  தோணுது… ப்ளீஸ் பாவா” அவன் தடையைப் பற்றி அவள் கெஞ்ச அவனுக்கும் அந்தநேரமிருந்த இணக்கம் முற்றும் தளர…. பிரசவ நாள் நெருங்குவதை அடுத்து இன்னும் பத்து நாட்களே இருக்க அவன் மனம் இனம் புரியாத பயத்தை பிரதிபலித்தது… தன்னவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டவன்… தன்னவளை விட்டு ப்ரியாதபடி இருந்தது அந்த இறுகிய அணைப்பு “ பேபி நீ… நீ… இந்த சாரீயே கட்டிக்கோ பேபி… உனக்கு எது விருப்பமோ அதுவே செய்” தன் விருப்பத்தை நிறைவேற்றிய கணவனை கண்டவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்து “ சோ ஸ்வீட் பாவா” என்று கூறிக் கொண்டு வேகமாக கிளம்பி வந்தவளை ஆதி திறப்பு விழாவிற்கு அழைத்து சென்றான்…

 

பூஜை புபஸ்கரங்கள் முடிய….  ஆதி தன் மனைவியை அழைத்து திறப்பு விழாவை சிறப்பிக்குமாறு கூற அதில் அதிர்ந்து “ பாவா… நான் நான் எப்படி” தன் கண்ணசைவால் மனைவியை சமாதான அடையசெய்தவன் அவள் கையில் திரை சீலை நீக்கும் ரிமோட் கருவியை கொடுக்க அவளோ “ பாவா வீட்டு பெரியவங்க இருக்கும் போது நான் எப்படி” மீண்டும் தயங்கியவளை ஆதரிக்கும் பொருட்டு வெங்கட்ராமனும் தீபாவும் “ மித்து அதுலாம் ஒண்ணுயில்லடா… ஆதி ஆசை படி நீயே ஓபன் பண்ணு” கமலம்மாளும் சேர்ந்தே ஆதரிக்க சங்கோஜப்பட்டவள் தன்னவனைப் பார்க்க அவனோ அங்கு பார்த்து திறக்குமாறு செய்கையால் உணர்த்த அவள் திரையை நீக்கும் பொழுது மித்ராவின் கண்கள் சாஸர் போல் அச்சிரியத்தில் விரிந்து நின்றது….

 

அவளது கணவனோ அழகுற நின்றவளை தன் மன பெட்டகத்தில் பத்திரமாக சேமித்து வைத்தான்… ஏனனில் ஆதி புதிதாக ஆரம்பித்திருக்கும் தொழிலுக்கு மித்ராவின் பெயரை வைத்திருந்தான் அவள் காதல் கணவன் மித்ரா ஆதித்ய வர்மன் co pvt. Ltd என்று பெயர் சூட்டிருந்தான்…

 

அவளோ கண்களில் நீர்த்துளிர்க தன் கணவனை காதலோடு பார்த்து தான் கூட்டத்தில் இருப்பதை கூட மறந்து தன்னவனை அணைத்துக் கொண்ட நேரம் திடீரென்று எழுந்த துப்பாக்கி குண்டு சத்தத்தில் கூட்டங்கள் ஆளுக்கொரு திசையாக அலைபாயந்தது… துப்பாக்கியால் சுட்ட குண்டு ஆதியை தாக்குவது பதில் மித்ராவின் இடது பக்கம் தோலை துளைத்துக்கொண்டு சென்றது…  இந்த காட்சியை கண்ட அனைவரும் உறைந்து போய் நிற்க கீழே விழப்போன தன் மனையாளை தாங்கி பிடித்தவன் “ பேபி…. பேபி”… என்று எழுப்ப அவன் பற்றிருந்த இடத்தில் வேகமாக ரத்தம் கசிந்துக் கொண்டு வெளியே வந்தது…. அதில் திகைத்தவன்  சுற்றி முற்றிப் பார்க்க… விழா நடைபெற்ற இடத்திற்கு எதிரில் புதிதாக அதுவும் பாதியே கட்டப்பட்டிருக்கும் கட்டத்திலிருந்து கருப்பு நிற உடையோடும் முகத்தில் அதே நிறத்தில் முகமூடி அணிந்து கையில் துப்பாகியோடு நின்றிருந்தவன் குறி தப்பியதால் மீண்டும் ஆதிக்கு குறிவைக்க அதை கண்டவன் அருகிலிருக்கும் பாதுகாவளரை அழைத்து….  ஆதி தன்னை கண்டு கொண்டதை உணர்ந்த அந்த கருப்பு உருவம் தான்னை காத்துக்கொள்ள அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியது…

 

ஆதியின் ஆணைப்படி பாதுகாவலர்கள் அந்த முகம் தெரியா உருவத்தை துரத்திக்கொண்டு ஓடினர். ..

 

திக்பிரமையில் இருந்த ஆதியை ஜெகதீஷ் அழைத்து “ இட்ஸ் டூ லேட் சீக்கிரம் மித்ராவ ஹாஸ்பிட்டல சேக்கனும்… பிளட் லாஸ் ஆகிட்டு இருக்கு” என கூறியவன் “ஆதி நீ இப்போ இருக்குற கண்டிஷன்ல டிரைவ் பண்ண முடியாது …. நான் டிரைவ் பன்றேன் நீ சீக்கிரம் அழைச்சிட்டு வா” என்றவன் முன்னே செல்ல ஆதி ஜெகதிஷின் தோலை சகோதரத்தோடு அணைத்துக்குள்ள அவனை தட்டி கொடுத்த ஜெகதீஷ் சீக்கிரம் ஆதி என்றான்….

 

தன்னவளை கையில்  தாங்க அவன் கைமேல் ஏதோ பிசுபிசுப்பாக இருப்பதை உணர்ந்தான்… அதை உணர்ந்தவனுக்கு புரிந்தது பனிக்குடம் உடைந்திருப்பதென்று மேலும் தாமதிக்காது மித்ராவை கார் சீட்டில் கடத்திய நொடி கார் புயல் வேகத்தில் சீறி பாய்ந்தது…

 

தன் மடியில் சாய்துக்கொண்டு கைகுட்டையால் ரத்தம் வாழ்ந்துகொண்டிருக்கும் குண்டு பாய்ந்த தோலை அனைத்து பிடித்துக் கொண்டவன் “ ஏன்???? பேபி இப்படி பண்ண… நீ எதுகுடி நடுவுல வந்த… என்ன காபாத்திட்டு நீ இப்படி ஏண்டி” ஆற்றமையோடு கலங்கியவன் “ நீ இல்லாம நான் எப்படி பேபி”

 

 

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டிருந்த ஜெகதிஷோ “ ஆதி லேட் மேக் ஹேர் அவேக்…. அவ முழிக்கும் வர தட்டி எழுப்பு” ஆதியோ அவளது கன்னத்தில் தட்டி எழுப்பியவன் “ பேபி…. பேபி…. இங்க பாரு… என்னைப்பாரு உ… உன்… பாவா குப்பிடறேன் டி”

 

தன்னவனின் அழுகை குரல் ஒலிக்க லேசாக கண்விழித்தவள் பாவா என்றழைத்து உதட்டில் சிறு கீற்றுப் புன்னகை பூக்க ஆதியோ “ பேபி உனக்கு ஒன்னுமில்லை” என்றவனை ஆதாரத்துடன் பார்த்தவள்….

 

அவன் கையை பிடித்துக் கொண்டு “ பாவா நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்… கடைசியா” அவள் வாய் மீது கைவைத்தவன் “ வேண்டாம் பேபி எதுவும் பேசவேண்டாம்” என்று தடுத்தவனைப் பார்த்து அவன் கையை விலகியவள்….

 

“பாவா நான் உங்க….. உங்களுக்கு வேண்டாம் பாவா…. நா….. நான்…. உங்க நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்டேன்ல பாவா”….

 

“ஆஹ்ஹ்ஹா…. அம்மா” பல்லை கடித்துக்கொண்டு வலியை பொறுக்க முடியாமல் பிதற்ற இதனுடன்  பிரசவ வலியும் சேர்ந்து வந்துவிட  இரு வலிகளோடு போராடிக்கொண்டிருந்தாள் மித்ரா….

 

“பே… பேபி இங்க …. என்ன பாரு டி… கொஞ்சம் நேரம் பேசாம வாடி” ரத்தம் ஆறாய் ஓட வலிமைகொண்ட ஆண்மகனே கதிக்கலங்கி விட்டான்….

 

ஆதியின் மேல் சட்டை, கை என்று முற்றிலும் தன்னவளின் குருதி  உடல் எங்கிளும் பரவி இருந்த நிலையில் அவன் கண்கள் கண்ணீரை தத்தெடுத்தது …

 

தன்னவள் படும் வேதனையை பொறுக்க முடியாமல்“ஜெகா…. ப்ளீஸ்டா கார்…. கார கொஞ்சம் வேகமா டிரைவ் பண்ணு… ஜெகா ஐ ஜஸ்ட் புல் ஸ்கேரேட்” ஆதியின் நிலைகண்டு ஜெகதீஷ் கலங்கிக்கொண்டிருந்தான்…. எதையும் துணிச்சலோடு எதிர் கொள்பவன் இன்று இப்படி பதறும் நிலையில்…. காதல் வந்தால் இரும்பு நெஞ்சம் கொண்ட மனிதன் கூட கசிந்து விடுகிறானே இதுதான் காதலின் சிறப்போ…

 

ஆதி விடாது மித்ராவின் கன்னத்தை தட்டி விழித்துக் வைத்துக்கொண்டிருந்தான்… அவன் கண்களில் நீர் கசிந்து உருண்டோடி மித்ராவின் முகத்தில் பட்டு தெரிக்க பாவா…. என்றவள் அவனை அழைக்க கையை தூக்கிய மறுநொடி… ரத்தம் வெள்ளமாய் பொங்கி வழிந்தது……

 

“பேபி”….,,, என பதரியவனாய் அவளது இடது புறம் துப்பாக்கி குண்டு நன்றாக துளைத்திருந்த இடத்தை ரத்தம் வராமல் அழுத்தி பிடித்தவன் “பேபி…. உனக்கு ஒன்னும் ஆகாது பேபி…. உனக்கு ஏதும் ஆக விடமாட்டேன் பேபி…என்ன நம்பு” அவன் வாய் மீது தன் ரத்தம் தொய்த கையை வைத்து தடுத்தவள் தன்னவனின் கண்ணீரையும் சேர்த்தே  துடைத்தாள்…

 

“பாவா…. நான் ஒன்னு கேட்கவா” அவன் பதில் பேசாமல் தலையை மட்டும் ஆட்டியவனை பார்த்தவள் “பாவா…. என்ன…. உங்களுக்கு பிடிக்குமா…. அதுக்கு முன்னாடி நீங்க… நீங்க என்ன மனிச்சிட்டீங்களா” தன்னவளின் பதிலில் ஒருநிமிடம் அப்படியே உறைந்து விட்டான்….

 

“பேபி…. இப்போ எதுக்கு டி இதுலாம்… அப்புறம் பேசிக்கலாம் பேபி… ப்ளீஸ் டி நான் சொல்றத கேளு” அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே மருத்துவமனை வந்து வீட தன்னவளை கைகளின்  விரைவாக ஏந்தி சென்றவன் ஏற்கனவே முன்னேற்பாடு செய்யப்பட்டு வைத்திருந்த அறையில் அனுமதித்தான்

 

 

பாவா என்றவள் அவன் கையை விடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டு “நான்… நான். கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லல பா…வ்…வாவா”

 

“சார் ..,,,,, யூர் வைப் இன் கிரிட்டிக்கல் ஸ்டேஜ்… ப்ளீஸ் அஸ்க் ஹேர் டு கோப்ரேட்” மருத்துவர் கூறியதை கேட்டவன் உள்ளுக்குள் பயம் தத்தெடுக்க இருப்பினும் தன்னவளை சமாதானம் செய்யும் பொருட்டு

 

“பேபி… டாக்டர்…. சொல்றத கேளுடி…. அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்”தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான் ஆதித்யவர்மன்…

 

“பாவா… ப்ளீஸ் பாவா…. இப்ப.. இப்போ பேசுனாதான் உண்டு அப்…. அப்புறம் கடைசி வரைக்கும் பேசமுடியாம போய்ட போது பாவா அம்…மா…ஆஹ்ஹ்ஹா…. பாவா நீ… நீங்க என்ன மன்னிச்சிட்டீங்களா… நான் உங்கள நம்பாம உங்கள விட்டுட்டு போன பாவி இல்லையா….” ஒரு பக்கம் குண்டடி பட்டது வலியென்றால் தன்னவனின் பிள்ளைகள் வெளியுலகத்திற்கு வருவது அதைவிட  உயிர் போகும் வலியாக இருந்தது பெண்ணவளுக்கு….

 

தன்னவளின் வார்த்தை ஆதியை உயிரோடு சாய்க்கச்செய்தது…

 

“அப்படிலாம் பேசாத பேபி… உனக்கும் ஒன்னும் ஆக நான் விடமாட்டேன் டி….. அப்படிலாம் ஏதும் இல்லை பேபி… உண்மையா சொல்லப்போனா உன் மேல எனக்கு கோபமே இல்லடா… நீ நல்லப்படியா குணமாகி நம்ப குழந்தையோடு இந்த பாவா பாக்க வரணும்”….  கடைசியில் உடைந்துப் போய் அவன் கலங்கி நிற்க…

 

அவனை அழைத்தவள் “நான்.. ட்ரிட்மெண்ட்கு ஒத்துக்குறேன் ஆனா அதுக்கு பதில் நீங்க நான் சொல்றது  செய்யணும்”தனது இயலாத நிலையை பயன்படுத்தி தன்னிடம் இப்படி பேரம் பேசுபவளை கன்னம் கண்ணமாக அறைய அவனின் கோபம் பன்மடங்காக ஏறியது ஆனால் தன்னவளுக்காக அதையும் பொறுத்துக்கொண்டான்…..

 

“பாவா எனக்கொரு சத்தியம் பண்ணி கொடுத்திற்கிங்க நியாபகம் இருக்குனு நினைக்குறேன்…. அதை நீங்க நிறைவேதனும்… என்னோட ரெண்டாவது ஆசைகாண சத்தியம் இதுதான் எனக்கு பிரசவம் ஆகும் போது ஏதாவது ஆச்சினா… நீ” நீங்க மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறிய மனைவியை ஆயாசத்துடன் பார்த்தான் அவளது நிலையில் அவள் பிடிவாதமாக நிற்பதை கண்டு உண்மையாகவே அவன் பயந்துதான் போனான்…

ஆனால் அவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை தன்னவளை சரிசெய்ய மிக  கடினமோடு “ச… சரி பேபி…. நான் பண்ணிக்குறேன்…. ஆனா நீ ட்ரீட்மெண்ட்கு ஒதுக்கணும்” என்க அவளோ கலங்கிய விழியோடு சரி பாவா என்றவளை ஆப்பேரஷன் த்யேடர்கு ஸ்டேச்சரில் அழைத்து செல்ல தன் கணவனிடம் திரும்பி “பாவா ஒரு நிமிஷம் இங்க வாங்க” என அழைத்தவளின் அழைப்பிற்கு அவளது அருகில் சென்றவனை தன் கைகளால் அவனது தேகத்தை தடவி கொடுத்தவள் “ தப்பா எடுத்துக்காதீங்க பாவா… உங்… உங்கள இதுக்கு அப்புறம் பாக்கவே முடியாத தூரத்துக்கு நான் போயிடுவேன் இல்லையா…

 

 

அவள் வாய் மீது தன் கை வைத்து தடுத்தவன் “ ப்ளீஸ் டி என்ன உயிரோடு கொள்ளாத பேபி”…. தன்னவனின் கையை தன் வாய் மீதிருந்து விலக்கியவள் “ பாவா கடைசியா ஒன்னே ஒன்னு எனக்கு உங்க முத்த… முத்தம் வேணும் ப்ளீஸ் “ என்க

 

கேட்ட மறுநொடி அவள் இதழை தன் வலிமை வாய்ந்த உதட்டால் சிறை செய்திருந்தான் ஆதி…. அவள் உயிரை பத்திரமாக தனக்குள் பூட்டி வைக்கை அவன் தன் உயிர் ஆவியை அவளுள் நிரபிக் கொண்டு அவளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்தான்… அவளுக்கோ விலகும் மனமே இல்லாமல் தன்னவனின் இதழில் இன்னும் இன்னும் புதைந்துக் கொண்டிருக்க மருத்துவரோ அவர்களின் ஆர்த்மாத்தமான காதலை கண்டு பிரமிக்க….ஆதி தன்னவளிடமிருந்து மூச்சு வாங்க விலகியவன் “ பேபி…. நீ… இப்போ ஆப்பேரஷன்கு போட்டு வா… பேபி… உன் பாவா உனக்காக  காத்திருப்பேன்” என்றவனை பார்க்காது கண்களை மூடிக் கொண்டவள் அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்து செல்லபட்டாள்…

 

ஆதியின் அருகில் வந்த மருத்துவரோ “ கவலை படாதீங்க உங்க காதல்…. உங்க மனைவிய மீட்டு உங்களிடம் கொடுக்கும்” தனக்கு நம்பிக்கை ஊட்டும் மருத்துவரை கண்டு நன்றி உணர்வோடு தலையசைத்தான் …

 

இரண்டு மணி நேரம் அறுவை சிகிக்சை முடிந்து விட மித்ராவின்  இடது பக்க தோலில் துளைக்கப்பட்ட குண்டு அகற்றப்பட்ட சிறிது நேரத்தில்   பிரசவ அறுவை சிகிச்சையும் முடிந்த வேலையளில் செவியிலியர் கையில் அழகிய மலர் பூச்செண்டுப்போல்  வெண்ணிற தவலில் சுற்றி கையோடு அனைத்து வெளியில் வர பின்னொடு அதே போல் மற்றொரு செவிலியர் வேறொரு வெண்ணிற தவலில் மற்றொரு குழந்தையை கொண்டு வந்தார்….

 

ஆதியோ வெளியில் போடப்பற்றிருந்த இருக்கையில் கண்களை மூடிக்கொண்டு தன்னவளுக்கு ஒன்றும் ஆகிவிட கூடாதென்று மனமுருக கடவுளை பிராதித்துக் கொண்டிருந்தான்….

ஆதியை தவிர வெளியில் வந்த செவிலியர்களை பார்த்த மற்ற அனைவரும் கண்கள் மின்ன மகிழ்ச்சி கடலில் ஆழ தீபாவும் வெங்கட்ராமனும் ஓடிச்சென்று அந்த சின்னஞ்சிறு மலர்களை கைகளில் வாங்க சொல்ல முடியாத உவகையை அந்த இரு செண்டுகள் நிரப்பியது…

 

துரு துரு வென்று கவிதை படைக்கும் கண்கள் ரோஜா பூ போன்ற செப்பு இதழ்கள் கூரான மூக்கு அழகிய கூர்வால் விழிகள் என்று பேரழகோடு இருந்த அந்த மலர்களை கண்ட தீபா “வெங்கட் பையன பாருங்களேன் அப்படியே  ஜாடை ஆதி மாதிரியும் கண்ணு மட்டும் மித்ராமதிரி…. இல்லையா”…

 

வெங்கடோ “ ஹ்ம்ம் ஆமா தீபா…. ஆனா என் கையுல இருக்குற பொண்ணு பாரேன் அப்படியே அச்சு அசல் ஆதியேதான்… அப்படியா” என்றவர் பெண் குழந்தையை பார்த்து பூரித்து போனார்…

 

கமலம்மாளும்  ஆர்வத்தோடு “ அப்படியா எங்க காமிங்க என் செல்லங்கள…. வாடா வாடா தங்க குட்டீங்களா இந்த கொள்ளுப் பாட்டிக்கிட்ட வங்க வைரங்களா” என்க மொத்த குடும்பமும் புது வரவுகளை கொண்டு ஆர்பரிக்க ஆதியோ தன் பிள்ளைகள் இந்த பூமியை தரிசித்த வேளையில் அவர்களை வரவேற்க முடியாமல் தன்னவளின் நினைவில் ஆழ்ந்தான் அவள் கடைசியாக கொடுத்த இதழ் முத்தம் இன்னும் அவனுள் தித்திக்க தன் உதட்டை நாவால் தடவிகொடுத்தவன் அதன் சுவையை எண்ணி கலங்கியவன் “ பேபி… உன்னோட பாவா உனக்கு ஒரு முத்தம் இல்லடி ஓராயிரம் முத்தம் கொடுக்க தவமிருக்க என்னோடு வந்துவிடு பேபி” அவன் நினைவுகளை தன்னவளோடு முழுக சென்றது…

 

தீபாவின் குரல் ஆதியை நினைவிலிருந்து கலைக்க அவரை திரும்பி பார்த்தவன் கண்களால் என்ன என்று கேட்ட அவரோ அவன் அருகில் வந்து “ ஆதி உன் குழந்தைகள்…. பாருடா” என்று அவன் கையில் கொடுக்க முயல

 

அவனோ அதை தடுத்தவனாய் “ வேண்டாம் சித்தி… நான்… நான் மித்ராவ பாக்கணும் அவளோட ஒரு வார்த்தையாவது பேசணும் அப்… அப்புறம் நான் என்… என் குழந்தங்களை” அதன் அன்னையோடு சேர்ந்து பார்ப்பதாக கூறியவன் தனது மக்களை பார்ப்பதை தவிர்த்தான்…

 

தீபா அவனது மனநிலையை புரிந்துகொண்டு இருமலர்களை மனமெயின்றி செய்விலியரிடம் திருப்பி கொடுத்தார்…

 

 

 

 

வெளியில் அமர்ந்திருந்த  ஆதியின் நிலையோ நெருப்புமேல் நிற்பதுப் போல் உணர்ந்தான் ஒவ்வொரு நிமிடமும் கடக்க அவன் உயிர் தன்னவளின் பால் உருகி நின்றது… அதன் படி வெளியே வந்த மருத்துவரை பார்த்து வேகமாக அவர் அருகில் சென்றவன் “ டாக்டர் ஹௌ இஸ் ஷி… அவங்க நல்லார்க்காங்களா ப்ளீஸ் ஏதாவது சொல்லுங்க” மருத்துவர் முகத்தில் தெளிவில்லாமல் இருப்பதை உணர்ந்த ஆதியின் முகத்தில் தீவிரம் கூடியது….

 

 

“வி ஆர் சோ….. சாரி ஆதி சார்…. அவங்க மனசு வச்சாதான் எதுவுமே நடக்கும்” முதன் முதலில் துவண்டு போய் தொப்பென்று அமர்ந்தான் அங்கு போடப்பட்டிருக்கும் இருக்கையில்…..

 

எதனாள் அவள் அவனை பிரிய எண்ணுகிறாள் ஒருவேளை ஏமாற்றியதனாலா இல்லை அவன் காதலில் ஆழம் கடவுளுக்கு தெரியவில்லையா….

 

 

“கடவுளை நம்புவோம் உங்க மனைவியை icu அறைக்கு மதியாச்சு… நீங்க போய் பார்த்து பேசுங்க… வி ஹோப் உங்க ப்ரெசென்ஸ் உங்க மனைவியை காபாத்தும்” என்று கூற சிறிது நேரம் கூட தயங்காமல் அறைக்குள் சென்றவன் அங்கு வாடிய கொடிப்போல் கிடக்கும் தன்னவளின் அருகில் சென்று அவள் நெற்றியை வருடி “ பேபி… நீ ஆசைப் பட்டமாதிரி குழந்தைங்க பிறந்திரு க்காங்கா… பிரட்டர்னல் ட்வின்ஸ் பேபி என்கூட சண்டை போடுவியே இப்போ நீயும் ஜெய்கல நானும் ஜெய்கல… ரெண்டுபேருமே சேர்ந்து  ஜெய்சிற்கோம்… நீ எனக்கு வேணும்  டி…. என் பொண்டாட்டியா… என் பிள்ளைகளுக்கு அம்மாவா” தன்னவளின் ஊசி குற்றிய கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டவன் கண்களில் இடைவிடாமல் கண்ணீர் கரைபுரண்டது…

 

“ பேபி… அம்மாயில்லாம  வளர குழந்தைகள் கஷ்டம் என்னான்னு எனக்கும் உனக்கும் தெரியும் பேபி…..நம்ப குழந்தைகளுக்கு அந்த நிலைமை வரக்கூடாது  பேபி… என்..  என்ன ஏமாத்திடாத பேபி” வந்துவிடு என்றவன் தன்னவளின் கைகளை பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்க அவனின் ஸ்பரிசத்திற்கு அத்துணை சக்தி என்பதுப் போல் சிரமப்பட்டு கண்விழித்தவள்  “ பாவா” என்ற ஈன சுவரத்தில் அழைக்க… அவனோ மகிழ்ச்சியில் கண்களை துடைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து “ பேபி…. ஐ லவ் யூ பேபி” வார்த்தைக்கு வார்த்தை பேபி பேபி என அழைத்து அவளை அனைத்து மீண்டும் ஒரு முறை அவள் நெற்றியில் இதழ் பதிக்க மித்ரா மீண்டும் மயக்க நிலைக்கு சென்றால்…

 

அதில் பதரியவனாய் “ பேபி… பேபி” என கன்னம் தட்டி பெருங் குரலெடுத்து அவன் கத்தி கூப்பிட சத்தத்தில் மருத்துவரின்றி அனைவரும் சூழுந்து நிற்க… மித்ராவை பரிசோதித்த மருத்துவர் ஆதி “ டோன்ட் ஒரி… ஷி இஸ் ஆல்ரைட்… ஜூஸ்ட் மயக்கமா இருக்காங்க ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்க அவன் பயம் அடங்கியவனாய் மனைவி பக்கத்தில் இருந்தான்….

 

சாதாரண மயக்கம் என்று மருத்துவர் கூறிவிட அவனது மனதுகேத்த மகராசியோ அவனை ஒருவழி படுத்திய பின்பே கண்விழித்தாள்….

 

மித்ரா கண்முழித்ததை அடுத்து அனைவரும் மகிழ்ந்து போய் நலம் விசாரிக்க….. ஆதி மட்டும் கண்களால் தன்னவளை நலம்விசாரித்தான் மித்ராவின் மனதில் வெறுமை சூழ்ந்தது தன்னைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் அவன் ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லையே என்று நினைத்தவள் ஒன்று மட்டும் தெள்ள தெளிவாக புரிந்தது அவன் அவளிடம் காட்டும் ஒதுக்கம் அது தன்னால் தானே என்று உணர்ந்தவலாள் தன்னவனிடம் வலியே சென்று சகமாக உரையாட முடியவில்லை…

 

மித்ரா கண்விழித்த முதல் வேலையாக ஆதி செய்தது தன்னவளை யார் துப்பாக்கியாள் சுட்டது என்பதை கண்டுபிடித்தவனின் ரத்தழுத்தம் ஏகுறியது அந்நேரம் ஒரு அழைப்பு புது எண்ணிலிருந்து வர அதை ஏற்றவன் “ ஹலோ… ஆதி எப்படி இருக்க… சாரி தெரிஞ்சிட்டே கேக்குறேன் நீ நல்லார்க்க மாட்டதானே… உன் பொண்டாட்டி வேற சாக நிலமையுல கடக்கா… உன் ஆருயிர் பொண்டாட்டி உயிர் இப்படி அனாமத்தா போயிடிச்சே…உனக்கு வச்ச குறி அது இலக்கு மாறி உன் பொண்டாட்டிய பதம் பாதிரிச்சி… நீ சொல்லுவியே என்னோட உயிர் உன் பொண்டாடின்னு… இரு இரு ச்சே நான் சரியாதன் ஷூட் பனிருக்கேன் உன்னோட உயிர் உன் மனைவினா அப்போ உனத்தான் நான் ஷூட் பனிருக்கேன் என்ன ஆதி இப்படியா கன்பூஸ் பண்றது… சந்தேகமே வேண்டாம் நான்தான் உன் மனைவியே சுட்டேன் உன்னால என்ன ஒன்னும் பண்ண முடில பாத்தியா ஐ லைக் டிஸ் ஆஃப்ரோச்சி” அனைத்தும் தெனாவட்டாய் கூறிய தினேஷ் பலமாக சிரிக்க

 

ஆதி “ தினேஷ் நீ ரொம்ப தப்பு பண்ற… நீ மட்டும் என் கையுல கிடைச்சா”

 

“கிடைச்சா உன்னால் முடிஞ்சத பாத்துக்கோ…. யூ ப்ளடி” உன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்றதோடு அழைப்பை துண்டித்திருந்தான் தினேஷ்…

 

மித்ரா மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகும் ஆதியின் மௌனம் தொடர்ந்தது ஒரு கணவனாய் மற்றுமில்லாமல் ஒரு தந்தையாகவும் அவன் தன் கடமையை செய்தான்…

 

அவன் அமைதியை தாங்க முடியாத மித்ரா தனக்கும் அவனுக்குமான மௌனத்தை உடைத்தாள் “ பாவா… நான் செய்தது தப்புதான் என்ன மன்னிக்க கூடாதா” தான் பேசியும் தன்னை கண்டு கொள்ளாமல் நிற்கும் கணவனின் கையை பற்றியவள் தன்னை மன்னிக்குமாறு வேண்ட அவனோ வீம்பாய் நின்றான்…

 

“ பாவா… என்ன பார்க்கூட உங்களுக்கு பிடிக்கலையா… நான் சொன்ன மாதிரி உங்கள விட்டு விலகி போயிருக்கணும்” உங்கள் பாரா முகத்திற்கு நான் இரந்திருப்பதே மேல் என்று கூறியவளை கண்களால் எரிப்பதைப் போல் பார்த்தவன்…

 

“ அப்படியே ஓங்கி ஒரு அறை விட்டேன் அந்த  பக்கம் இருக்கும் காதும் சேவுடாகிரும்… என்ன திமிரா… பேசிட்டியா இவ்ளோ தானா இல்ல  இன்னும் இருக்கா… உன்ன நான் என்னடி பண்ணேன் முன்ன ஒரு தடவ இப்படித்தான் என்னவிட்டுட்டு போன இப்பவும் என்ன விட்டுட்டு ஒரேடியா போக முடிவு பண்ணிட்டேன்… ஏன் ???? டி ஏன்??? பதில் சொல்லு” என்க

 

அவளோ “ஏன்னா நான்  உங்கள அளவுக்கு அதிகமா காதலிக்குறேன் பாவா… உங்க உணர்வுகளை என்னால புரிஞ்சிக்க முடியும்… நான் இந்த முடிவுக்கு வர காரணம் நீங்க உங்க உண்மையான காதல்… ஆனா நான் உங்கள நம்பாமதானே போனேன்” அவள் பேசுவது அவனுக்கு விசித்திரமாக இருக்க “ என்ன பேபி சொல்ற நான் காரணமா” என்க

 

மித்ராவும் “ ஆமா பாவா அன்னைக்கு அத்தைய நீங்க பாத்தப்போ உங்க கோவம் கொஞ்ச கூட குறையுல…. ஏனா அவங்க உங்கள விட்டு போனதுனால… அப்பிடி பார்க்கும் போது நானும் அதே தப்பதானே பாவா செய்திருக்கேன் அப்போ அதுகுறிய தண்டனைய அனுபவிக்கனுமே பாவா” அவள் கூற வருவதை இப்போது புரிந்துக் கொண்டவன்…

 

“பேபி சத்தியமா நீ லூசு டி” என்றவனை திருத்திருத்து முழித்து பார்த்தால்… “ நீ ஹப்பிட்டல கேட்டியே… என்ன மன்னிப்பிங்களான்னு உண்மையவே  நீ என்னை புரிஞ்சிகல பேபி… உன் மேல் எனக்கு கோவமிருந்தா நான் உன்னை தனித்தன்மையா அழைக்கும் பெயருக்கும் உரிமையோடு அழைக்கும் பெயருக்கும் இருக்கும் வித்தியாசத்தை நீ உணரலையா” அவனை பார்த்தவள் “ பாவா”

 

ஆமாம் பேபி என்றவனை அமோதித்து நான் நான் எப்படி இந்த வித்தியாசத்தை உணராமல் போனேன் மீண்டும் பாவா என்றவளை இறுக்கமாக அனைத்து கண்களில் நீர்கோர்க்க “ ஏண்டி ஹாஸ்பிட்டல வச்சி அப்படி சொன்ன இதுதான் கடைசினு என் உயிர் என்கிட்ட இல்ல பேபி…. என்ன உயிரோடு கொன்னுட டி” அவன் அணைப்பு இறுக அவளுக்கு வலித்தது அவன் இறுகிய அணைப்பில் இருந்தவள் அவனின் வலியை உணர்ந்தாள்….

 

அவர்கள் இருவரின் இணக்கம் உணர்ந்து உறங்கிக்கொண்டிருந்த மகள் வீலென்று அழுக… தன் சகோதரி அழுவதை தொடர்ந்து அவர்களது மகனும் சேர்ந்தே அழ தொடங்கினான்…. இரு பிள்ளைகளின் குரல் கேட்டு மித்ரா அருகிலிருந்த வாக்கிங் ஸ்டிக்க்கை எடுத்து நடக்க முயல அவளை தடுத்த ஆதி எழுந்து சென்று ஒன்றன் பின் ஒன்றாய் அவர்களது பிள்ளைகளை கொண்டு வந்தான் தாய் பாலமுதம் வழங்கினாள் என்றால் அவர்களது தந்தையோ பாசமுதத்தை வழங்கினான்…

 

அவன் மார்போடு அனைத்து தூக்கி வரும் அழகில் சொக்கித்தான் போனால் அவனின் மனையாள்….

 

மித்ரா மகனுக்கு பாலை புகட்ட ஆதி தன் மகளை நெஞ்சோடு அனைத்து உறங்க வைத்துக் கொண்டிருந்தான்….

 

செல்வ மகள் அழுகை போல்

ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை

பொன் மகளின் புன்னகைப்போல்

யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை

என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த

இலக்கணக் கவிதையும் நடந்ததில்லை

முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு

முன்னூறு மொழிகளில் வார்த்தை இல்லை

 

தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா

என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

 

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

பிள்ளைகள்  உறங்கிய பின் மித்ரா “ பாவா யாரு பாவா அது உங்கள சுடற அளவுக்கு.. நான் மட்டும் குறுக்க வரலேன்னா” என்றவளை இழுத்து அணைத்தவன் எதுவும் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க அவன் உடல் வெளிப்படையாக நடுங்குவதை உணர்ந்தவள் அவனை சாமதனப் படுத்தும் பொருட்டு “ பாவா அதான் எனக்கு ஒன்னுமில்லையே அப்புறம்  ஏன் இவ்ளோ பயம்” அந்நிகழ்வு இன்றும் அவன் கண் முன் படமாக ஓட  “ பேபி என்னால முடியல டி நீ குண்டடி பட்டு கிடகுறப்போ ஒரு மூத்தம் கேட்டியே நான் மொத்தமா அவுட் டி “ என்க அவனைப் பார்த்து சிரித்தவள்

 

“அதுதான் தெரியுமே முத்தம் வைக்குறேன்டு வாய விட்டு எடுக்கவே இல்ல… என்ன ஒரு மரணம் முத்தம்  பாவா” தன்னை களைத்தவளை மீண்டும் அவள்  இதழை சிறையெடுத்தவன் அவளைப்பார்த்து “நீங்க மட்டும் என்னவாம்” அவளுக்கு சலிக்காமல் பதில் கொடுத்தவன் மீண்டும் அவன் இதழை நோக்கி குனிய …..

 

 

“ போதும் பாவா மிச்சம் இருக்கட்டும்” என்று கண்சிமிட்டியவளை “ எனக்கு போதாதே” என்றவன் மீண்டும் குனிய “ ஹ்ம்ம் ஷூட் பண்ண ஆளு யாருனு கண்டு பிடிச்சிங்களா” அவன் மனைவி விடா பிடியாக கேட்ட

 

“ அத நான் பாத்துக்குறேன் பேபி… அத பத்தி உனக்கு எதுக்கு கவலை….. இப்போ உன்னோட கவலை நான் மட்டும்தான் பேபி…. என்ன முதல கவனி டி” என்க அவளோ சிரித்தபடி அவனை கவனிக்க ஆரம்பித்தாள்….

 

 

மித்ரா கண்விழித்த அடுத்த நாள் ஆதியின் தீவிர தேடலில் தினேஷே தன்னை காட்டி கொடுத்துக் கொண்டான் ஒரு போன் காலில் அந்த என்னை ட்ரெஸ் செய்த பத்து நிமிடத்தில் அந்த பேசி முற்றுமாக அணைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து ஆதி தன் ஆட்கள் பலத்தால் தினேஷ் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தவன்…. தினேஷை தான் ரகசிய இடத்திற்கு கொண்டுவருமாறு தன் ஆட்களை பணித்தான் ….

 

 

தினேஷை கொண்டு வந்து குவிக்க அங்கு ஆதியை பார்த்த தினேஷ் “ வெல்கம் ஆதி பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படி இருக்க… ஆதி திரும்பவும் நீ தப்பு பண்ற… திரும்பவும் என்ன சீண்டாத ஆதி “ அவன் பேசுவதை அமைதியாக  கேட்டுக்கொண்டிருந்தான் “ என்னோட பிஸ்னெஸ ஒன்னுமில்லாம பண்ணின… எங்க அப்பாவ நோயாளியா படுக்க வசிட்ட… உனக்கு நான் செஞ்சது பாத்தது ஆதி இன்னும் செய்யணும்… நீ போதும் போதும்னு சொல்ற அளவுக்கு நான் உனக்கு செய்யணும்” என்றவனை பார்த்து

 

“ தினேஷ் நான் என்ன பொண்ணா இல்ல உன் பொண்ணாட்டியா நீ செய்யுறதுக்கு” ஆதி தன் மனைவியைப் பற்றி கூற அதில் சற்று பயந்தவன் தன் மனைவி மாத பரிசோதனைக்கு  சென்றுள்ளதை நினைத்தவன் எச்சிலை விழுங்கிக்கொண்டு “ என்ன ஆதி என்ன பயமுறுத்தி பாகுறியா என்னடா சொல்ற” பரவாகயில்லை புத்திசாலிதான் என்றவன்

 

தன் சுட்டு விரலால் தான் காதை குடைந்துக் கொண்ட ஆதி “ பச்… கத்தாத தினேஷ் எக்கோ அடிக்குது பாரு….. நீயும் உங்க அப்பாவும் செஞ்சத நான் உனக்கு அப்படியே  செஞ்சிற்கேன் சரியா உனக்கு சந்தோஷம் தானே குறை இல்லையே” என்ற ஆதியை பார்த்தவன் “ ஆதிதிதிதி”

 

“ ரொம்ப கத்தாத தினேஷ் கணக்கு சரியா முடிஞ்சிற்ச்சி இதுக்கு மேலையும் உன்ன விட்டு வைக்க நான் ஒன்னும் முட்டாளில்லை” என்றவன் தன் அடியாட்களுக்கு என்ன செய்தி என்றதை உணர்த்தி அந்த இடத்தை விட்டு அகன்று வந்துவிட்டான்..ம்

 

“ஆதி என் மனைவிய என்ன பண்ண”- தினேஷ் கேட்க

 

ஆதி கண்ணடித்து “ சஸ்பென்ஸ்” என்றதோடு திரும்பி சென்றுவிட்டான்…

 

வீடே பரபரப்பாக காட்சியளித்தது ஆம் இன்று ஆதி மித்ரா தம்பதியினரின் இரட்டை பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் விழா குடும்ப பெரியவர் கமலம்மாளின் முன்னிலையில் அனைத்தும் நன்றாக நடந்துக் கொண்டிருக்க தீபா, வெங்கராமன்,வர்ஷா, சாதிக் மற்றும் ஜெகதீஷ் என்று மொத்த குடும்பமும் ஆரவாரத்தோடு  சின்ன சிறு மொட்டுகளை வரவேற்க மித்ரா மகனோடு அமர அதற்கு அருகில் கையில் தன் பெண்ணாரசியோடு ஆதி தன் மனைவியை இடித்துக் கொண்டு அமர்ந்தான் “ என்ன பாவா இது ஒழுங்கா உட்காருங்க… பாபாவ என்கிட்ட கொடுங்க” அவளை முறைத்தவன் “ அதுலாம் கொடுக்க முடியாது பாப்பா என்கூடத்தான் இருப்பா” என்க

 

மித்ராக்கு சிறு பொறாமை உண்டானது அதில் “ ஹ்ம்ம் உங்களுக்கு மகனும் இருக்கான் மறக்க வேணாம்” என்றவளைப் பார்த்து “ எப்பவும் பொண்ணுதான் அப்பாக்கு புள் சப்போர்ட் உனக்கு ஏண்டி பொறாமை” என அவளைப் பார்த்து சிரித்தவன் மகளிடம் பூகாரை ஒப்பித்தான் அதில் மித்ரா நொடித்துக் கொள்ள “ நைட் ரூம்க்கு பேபி… என் கண்ணு அப்பிடின்னு கொஞ்சிட்டு வருவிங்கல அப்போ நான் யாருனு காட்டுறேன்” என்றவளை கண்ணாடித்து பறக்கும் முதத்தைக் கொடுத்தான்….

 

விழா நேரம் நெருங்க சீனி தண்ணியை தன் கொள்ளு பேரன் வாயில் வைத்து அவன் காதில் கமலம்மாள் ஆர்னவ் வர்மன் என்று பெயரிட்டு மூன்று முறை கூற அதையே மற்றவர்களும் பின்பற்றி கூறினர்… பின்பு பெண்ணரசிக்கு ஆதிரா என்ற பெயரை ஆதி தான் தேர்ந்தெடுத்திருந்தான் தன் பெயரில் முதல் இரு எழுதும் தன் சரி பாதியான தன்னவளின் கடைசி எழுத்தையும் இணைத்து தன் பெண்ணரசிக்கு பெயர் சூட்டினர்…

 

விழா அமோகமாக முடிய அன்று இரவு ஆதி தன் மனைவியை எதிர் பார்த்துக் காத்துக்கொண்டிருக்க அவனது மனையாள் வேண்டுமென்றே நேரம் கடத்தி கொண்ட பின்பே தங்கள் அறைக்கு வர்ஷாவின் உதவியோடு வருகை தந்தாள் …

 

அவனோ தன்னவளுக்காக காத்திருந்தவன்  நேரம் போகம இருக்க செய்தித்தாளை புரட்ட அதிலிருந்த செய்தியில் தன் கண்களை பதித்து வாசித்துக் கொண்டிருந்தான்… தான் வந்ததுக்கூட தெரியாமல் அப்படி என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என்றவள் அருகில் சென்று பார்வையிட நம்ப முடியாமல் “ பாவா” என தன் கணவனை அழைத்து “ தினேஷ் இறந்துட்டாரா” எப்படி என்ற சந்தேகத்தோடு கேட்டவள் தன் கணவனை முறைத்தாள்..

 

“ பாவா உங்க வேலையா” என்க அவனோ “ ஏன் பேபி ஊர் உலகத்துல எவனாவது மண்டைய போட்டா நான்தான் காரணம்னு சொல்வ போல” வெள்ளந்தியாய் பேசும் கணவனைப் பார்த்தவள் “ ஊருலகத்துல யாருக்கு எதாவதுனா நான் கவலைப்படமாட்டேன் ஆனா தினேஷ் மரணம்தான் சந்தேகமா இருக்கு…. இது அச்சிட்டேன்ட் இல்ல என் புருஷனோட வேலையுனு எனக்கு தெரியம்” என்று கூறியவளைப் பார்த்தவன் தன் மனைவிக்கு கற்பூர புத்தி என்பதை நினைத்து சிலாகித்துக் கொண்டான்…

 

“அப்படியா சொல்ற பேபி” என்றவனின் காதை பிடித்து திருக அவனோ சடுதியில் மித்ராவின் கட்டைக்காலில் எட்டி உதைக்க அவன் மீதே பூமாலையாக  சரிந்தாள்….

 

மித்ரா “ விடுங்க பாவா பிள்ளைங்க எழுந்திருக்க போறாங்க”

 

நைசாக அவளது ஹியரிங் பவர் கருவியை அவள் காதிலிருந்து கழட்டி “ இனி நோ டிஸ்டர்பன்ஸ்” அவனை முறைத்தவள் “ ஆனா நீங்க ரொம்ப மோசம் பாவா” என்க

 

“ ஹெய் இன்னும் நான் ஒன்ன ஒன்னும் பண்ணலடி அதுக்குள்ள மோசம் சொல்ற … மாமனோட பேர்பார்மன்ஸ பாத்துட்டு அப்புறம் சொல்லு” என்றவன் தன்னவளின் இதழை ருசித்த வண்ணம் அவன் கைகள் அவள் மேனியில் அத்துமீற தன்னவனை தனக்குள் இன்னும் புதைக்க அவனும் ஆழ் கடலில் முழுகி முத்தெடுத்தான்….

 

 

சுபம்

 

 

 

 

முள்ளோடு முத்தங்கள்-44
முள்ளோடு முத்தங்கள் epilogue
1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Member

Story is too good. But I am feeling too much of emotional scenes while going for operation and when returning from orphanage.
while asking sorry also. over all nice story, pls reduce emotional scenes.

error: Content is protected !!
Don`t copy text!