Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


Readers Comments

Recent Updates

நல்லதோர் வீணை செய்தேன் 1

நியூயார்க் விமானம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தளம் இறங்கிய நொடி… கம்பிரத்தோடும் ஆறடிக்கும் சற்று குறையாமல் மூன்று அங்குலமாக சிவந்த நிறத்தோடு தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் உடற்பயிற்சியினால் நன்றாக மூருக்கேறியிருந்த உடல் அகன்ற மார்பும் கூறான நாசியும் பெண்களே பொறாமை கொள்ளும் ஆண்மை நிறைந்த அழகுடன் வந்து தளம் இறங்கிய ஆர்னவ் வர்மனை சென்னை மாநகராட்சி வரவேற்றது….

 

அவனை வரவேற்க ஜெகதீஷ் மற்றும் ஹேமாவின் மகன் ஜெயவர்மனும் ஆர்னவின் சகோதரன் ஆதவ் வர்மனும் வரவேற்பு பலகையுடன் வரிசையில் ஆர்னவிற்காக காத்திருந்தனர்…

 

ஆர்னவ் செல்லும் வழியெங்கும் பெண்கள் கூட்ட கூட்டமாக  வைத்தக்கன் வாங்காமல் தன்னை ரசித்துக்கொண்டிருக்கும் பெண்களை கண்டு தன் சன் க்ளாஸை அணிந்து கொண்டவனுக்கு என்றுமே தன் அழகிலும் தன் ஆளுமையிலும் அவனுக்கு கர்வம் உண்டு…. ஆனால் அவனுக்கு தெரியவில்லை இந்த கர்வமே தன் வாழ்க்கைக்கு எதிரியாகிப் போவதை…

 

 

ஆர்னவ் வருவதை முதலில் கண்ட ஆதவ் “ ஏய் மச்சான் அங்க பாரு எங்க அண்ணன எவ்ளோ மாஸா வந்து இறங்குறான் பாத்தியா” ஜெயவர்மனை  விட இரண்டு வயது சிறியவனான ஆதவ் ஒருமையில் அவனை அழைப்பது புதிதில்லை இருவரும் சகோதரன் என்று பழகாமல் நண்பன் என்ற முறையில் பழகியதால் வந்த நெருக்கம்… ஆதவ் ஜெயவர்மனை அழைத்து சொல்ல ஜெயவர்மன் “ வாவ் …. என்னடா என்னோட மச்சான்…. சும்மா பிகர் மாதிரி வந்து இறங்குறான்… இன்னக்கி எத்தினி பொண்ணுங்கள சுத்த விட்டானோ” ஆதவ் அவன் கூறியதை  ஆமோதிக்க இருவரின் நெற்றியில் ஒரு சேர முடிச்சி விழுந்து முகம் அருவரிப்பில் சுளிந்தது ஆர்னவின் அருகில் அவனை ஒட்டிக்கொண்டு அபாயகரமாக உடையணிந்து  வெளியே வருபவளின் உடல் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்க உடல் பாகங்கள் அனைத்தும் அங்குலம் அங்குலமாக ஆபாசமாக தெரிந்தது…

 

ஆர்னவ் அந்த அழகியை தன்னிடமிருந்து விடுத்து கொண்டு கிளம்ப அந்த அழகியோ அவனை கட்டியணைத்து அவன் இதழில் முத்திரையை பதித்து விலகினாள் அந்த மாடல் அழகி…

 

இந்த காட்சியை பார்த்த ஜெயவர்மன் “ டேய் ஆதவ் இவதான் உன் வருங்காள அண்ணியோ இருப்பாளோ” பதில் வராமல் போக அவனை திரும்பி பார்த்த ஜெயவர்மன் தனது கைகுட்டையால் அவன் வாயை துடைத்து விட்டு “ரொம்ப வழியுதுடா தொடச்சிக்க”

 

“ டேய் மச்சான் என்னடா”ஆதவ் அவன் கையை தட்டிவிட

“இல்லடா ஷோ முடிஞ்சி ரொம்ப நேரமாச்சு நீ இன்னும் உத்து உத்து பாக்காத… சீன் முடிஞ்சிறிச்சி… எத்தினி தடவ இங்கிலீஷ் படம் பாத்திருப்ப… ஆனாலும் உன் அண்ணனுக்கு இவ்ளோ தைரியம் கூடாது”- ஜெயவர்மனை முறைத்த ஆதவ் “ யாரு இவ என் அண்ணியா நம்ப குடும்பத்துக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு மச்சி … நீ எல்லாம் பேசாத மச்சி நீயும் சம்மாளவும் செய்யாத அலும்பா… நீங்க ரெண்டு பேரும் கோவா போய் என்ஜாய் பண்ண பிஸ்னஸ் ட்ரிப்னு சொல்லி ஒரு பச்ச புள்ளைய கூட்டிட்டு போய் கதற கதற என்னைய ஜோக்கராகி நல்லா என்ஜாய் பண்ணிங்களே அத விட இது மோசமா தெரியலையா” ஆதவின் கூற்றில் அசடு வழிய நின்றிருந்தான் ஜெயவர்மன்

 

வர்ஷா மற்றும் சாதிக்கின் மூத்த  மகள் சாம்மளா இளைய மகள் தாரிகா சிறுவயது முதல் சாம்மளாவும் ஜெயவர்மனும் உயிருக்கு உயிராக நேசித்து வந்ததை அறிந்த குடும்பம் அவர்களுக்கு திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர்…

 

அந்த திருமண விஷேஷத்திற்கு தான் ஆர்னவ் சென்னைக்கு வருகை தந்தது தன் அன்னை மித்ராவின் பிடிவாதத்தாள்…

 

“மச்சி எங்களுக்கு கல்யாணம் ஆகப்போதுடா” என்ற ஜெயவர்மனைப் பார்த்த ஆதவ்

 

கிண்டல் தோனியில் “ பாத்துடா அதுக்கு முன்னாடியே ப்ரெக்ஞண்ட் ஆக்கிடாத அவள” ஆதவ் கூற ஜெயவர்மனோ “ டேய் அருமையான ஐடியா டா இதப் பத்தி நான் இன்னும் யோசிக்கவே இல்ல… இப்ப நீ சொன்னதும் நான் பராஸஸ்ல இறங்குலாம்னு முடிவு பண்ணிட்டேன்”

 

“ நீ அடங்க மாட்டாடா ஏதோ பண்ணிதொலை” கடுப்புடன் ஆதவ் கூற…. அவனைப் பார்த்து சிரித்தவன் “இதுதான் ட்ரெண்டு மச்சி”

 

“உன் ட்ரெண்ட்ல தீய வைக்க” ஆதவ் அவனை விளையாட்டிற்கு வெறுப்பேற்றினான்…

 

“சரி… சரி  உன் அண்ணன் வரான் மூஞ்சிய சிரிச்சாபுல வையு.. இல்ல கேள்விமேல் கேள்வி கேட்டு அப்பப்போ மித்ரா ஆதியோட வாரிசுன்னு ப்ரூவ் பண்ணிட்டே இருப்பான்” ஜெயவர்மன் உரைத்தபடி ஆதவ் தன் புகத்தை புன்னகையோடு வைத்திருக்க…

 

 

அவர்களை நெருங்கிய ஆர்னவ்  “ஹாய்” என்றபடி கையசைத்து அவர்களை நோக்கி நடந்து வந்தவன்… ஜெயவர்மனை கட்டிக்கொண்டு “காங்கிராட்ஸ் புது மாப்பிள்ளை…” அர்னவைப் பார்த்து பெருமூச்சு விட்ட ஜெயா “நானானடா புது மாப்பிள்ளை நீதான் புது மாப்பிள்ளை கணக்கா இருக்க… நீதான் கல்லக்குற மாப்பிள்ளை… உன்ன பாத்தாலே எனக்கே ஏதோ தோணுதுடா” ஆர்னவின் தோற்றத்தை கண்டு சிறு பொறாமையோடு கேட்ட… ஆர்னவ் சிரித்துக்கொண்டே அவன் தோலில் செல்லமா அடித்தான்… பக்கத்தில் பவ்வியமாக நின்றுக் கொண்டிருந்த தன் சகோதரன் ஆதவைக் கண்டு “எப்படி இருக்க ஆதவ்” நலம் விசாரித்தவன் சகோதரத்தோடு  அணைத்தும் கொண்டான் மூவரும் கிளம்பி ஊர் சுற்றி கோட்டம் அடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்…

 

******************************************

 

“ இந்தா புள்ள செவ்வந்தி… இங்கன வேரசா வா… உன் மாமன் வந்திருக்கு பாரு” செங்கல் சூளையில் வேலை செய்துக்கொண்டிருந்த பூவம்மா உரக்க அழைக்க…

 

“ என்ன பூவக்க… மாமனா… இங்க எதுக்கு வந்தாரு… அதுவும் இவ்ளோ காலையிலையே வந்திருக்கு” செவ்வந்தியின் முறை மாமன் தான் சரவணன் கண்ணாமவானின் மகன் மற்றும் செவ்வந்தியின் தந்தை மாயாண்டியுடன் உடன் பிறந்த தங்கை தான் கண்ணம்மா …. பூவம்மாவோ “மச மசன்னு பேசிட்டு நிக்காத புள்ள… ஏதாவது செய்தியா இருக்கப்போது…  உன் அப்பனோட செய்தியாதான் இருக்கும்…. நீ போய் உன் மாமான கேளு”

 

இருவரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அல்லி “ ஆமா அக்கா இன்னைக்கு அப்பா என்னத்த பண்ணி  எழரைய கூட்டி வச்சிருக்குன்னு தெரியலை நீ போ” அல்லியை பயத்தோடு பார்த்த செவ்வந்தி “ அல்லி மேஸ்திரி திட்டுவாறு… ஏற்கனவே அப்பா கந்துவட்டில காசு நிறைய வாங்கிருக்கு… நான் இப்போ பாதிலையே வீட்டுக்கு போனா வையுவாறு” தயக்கமாக நின்று பேசிக்கொண்டிருந்தவளைப் பார்த்த அல்லி “ அக்கா நம்ப மேஸ்திரி தான சொன்னா கேட்டுப்பாரு நீ வா… நான் பேசுறேன்” அல்லி செவ்வந்தியை அழைத்துக்கொண்டு மேஸ்திரியிடம் செல்ல முதலில் செவ்வந்தியை கண்டவர் முகம்  கடுகடுக்க அவளுக்கு அருகில் வந்த அல்லியை கண்டு வாயெல்லாம் பல்லாக இளித்தவன் “ என்ன அல்லி காலையுலையே உன் தரிசனம் எனக்கு இவ்ளோ சீக்கிரம் கிடைச்சிருக்கு”    விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் செங்கல் சூளை தொழில் மற்றும் கந்துவட்டி தொழிலையும் சேர்த்தே செய்பவர் ஆறுமுகம் …

 

கந்துவட்டி என்ற பெயரில் நூத்துக்கு இருவது வட்டி விகிதத்தில் கடனாய் கொடுத்து இருமடங்காக இரக்கமின்றி வசூலிக்கும் மோசமான தொழிலை நடத்தி கடனை அடைக்க முடியவில்லை வில்லையென்றால் பிஎஸ்கே என தனது சொந்த செங்கல் சூளையில் சம்பளமே கொடுக்காமல் கடன் அடைக்கும் வரை அங்கு வேலை செய்தே தீரக்க வேண்டும் கொத்தடிமைகளாக இதுவே கந்துவட்டியின் காலக்காலமான நியதி…

 

அல்லிக்கு தந்தையில்லாத காரணத்தாலும் அன்னை கனகம் உடல் நிலை சரியில்லாததால் வேறுவழியின்றி இங்கு செவ்வந்தியோடு வேலைக்கு வருபவள் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் உயிரை கொள்ளும் கத்துவட்டியில் இதுவரை மாட்டியதில்லை….

 

“ மேஸ்திரி உன்னைபாத்து ரொம்ப நாலாச்சில அதான் விசாரிச்சிட்டு போலாம்னு வந்தேன்” அறுமுகத்திற்கு இரண்டி பிள்ளைகள் மனைவி என்று குடும்பம் இருந்தாலும் ஊர் பெண்களை பார்த்து வழிவது அவர்களை ரசிப்பது வலியே சென்று பேசுவது என்று பெண்களின் மேல் தீரா மோகம்  உடையவன்…

 

ஆனால் செவ்வந்தி வளர்ந்த விதம் அப்படி, அவள் மித்ரா ஆதித்யவர்மனின் வளர்ப்பு அல்லவா மற்ற ஆண்களிடம் காரியதுக்கூட சிரித்து பேச அவளுக்கு பிடிக்காது… அல்லி வளர்ந்த விதம் சூழல் அப்படி அமைந்ததால்…. தன்னை காத்துக்கொள்ளவும் தெரியும் காரியத்தை சாதிக்கவும் தெரிந்தவள்…. செவ்வந்தியை விட மூன்று வயது இளயவளாக இருந்தாலும் அதிக துணிச்சல் பெற்றவள்….

 

 

அல்லியை ஒரு மாதிரியாக பார்த்த மேஸ்திரி “காரணமில்லாம நீ வலியே வந்து பேசமாட்டியே உனக்கு என்ன வேணும்” ஆறுமுகம் பேச்சில் ஒரு குட்டுவைக்க அதில் சமாலித்த அல்லி “ பரவாயில்லை மேஸ்திரி உனக்கு கற்பூர புத்திதான் ” தன்னை அவள் புகழ கர்வம் கொண்டவர் “ கற்பூர புத்தி இல்லனா… இதோ இப்படி ஏமாத்ரவங்கல கையும் களவுமா புடிச்சி தொழில் பண்ண முடியுமா” அவர் கூற்றில் செவ்வந்தி மேலும் கூனி குறிகி தலையை தாழ்த்திக் கொண்டாடு நின்றாள் …

 

“சரி சரி வந்த விஷியத்த சொல்லி அல்லி” என்றவர் அல்லியை பார்வையால்  விழுங்க அதைப் பார்த்தவள் “ உன் கண்ணுல கொள்ளிகட்டைய சொருக…. ஆளும் மூஞ்சியும் பாரு…. பாக்குற இந்த கண்ண நோண்டுநா என்ன?” அல்லி மனதில் ஆறுமுகத்தை வசைபாடினாலும் வெளியில் சிரித்த முகமாகவே நின்றிருந்தாள்…

 

“ மேஸ்திரி செவ்வந்தியோடு மாமன் வந்திருக்கு ஏதோ செய்தியாம் ஒரு எட்டு வீட்டுக்கு போட்டு வந்திடடும்” என்க அவனோ “ எத நம்பி அனுப்புறது இவ இப்படியே ஓடிப்போய்ட்டானா… இவன் அப்பன் மாயாண்டி பத்தாயிரம் கடன் வாங்கிருக்கான் குடிக்கார பைய அது வட்டி குட்டி போட்டு இப்போ ரெண்டு லட்சம் வர நிக்குது….இந்த கடனையெல்லாம் யாரடைப்பா” முகம் கோபத்தில் சிவக்க பேசியவரை பார்த்து

 

செவ்வந்தி “ இல்ல மேஸ்திரி பத்திரம் உங்க கிட்ட தானே இருக்கு அப்புறம் எப்படி நான் போவேன்… அப்பா வீட்டுல இல்லப்போல அதான் மாமா என்ன தேடி வந்திருக்கு” அவள் தயக்கத்தோடும் பயத்தோடும் பேசிக்கொண்டிருக்க

 

அவனோ “ ஆமா இது என்ன உன் அப்பனுக்கு புதுசா எங்கையாவது ரோட்டுல விழுந்து கிடப்பான் போய் தூக்கிட்டு வந்து போடுங்க… கடனை அடைக்காம ஏமாதனும்னு நினைச்ச”

“ அய்யோ இல்ல மேஸ்திரி அப்படியெல்லாம் எதுவும் பண்ணமாட்டேன்” என்றவளை நம்பி “ சரி போ” என அனுப்பிவைக்க…

 

தன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தவள்  வாயிலை நோக்கி நடக்க அங்கு நின்றிருந்த சரவணனை கண்டு புன்னகையோடு “ வாங்க மாமா நல்லார்கிங்களா… வந்ததும்  வீட்டுக்கு போகாம இங்க வந்திருக்கிங்க அப்பா எங்கையாவது உளுந்து கிடைக்கா” பதடத்தோடு வினவியவளை கண்டு “ எனக்கென்ன நான் நல்லார்கேன் …அதுலாம் ஒன்னுமில்ல நீ ஏன் யார்கிட்டையும் என்ன பிரச்னைன்னு சொல்லாம வந்த …. சரி வந்து பத்து நாள் மேல ஆச்சே வீட்டுல தேடுவாங்க சொல்லணும்னு தோணலையா” அதில் தலை குனிந்தவள்

 

“ நான்… என்ன மாமா பண்ணட்டும் உண்மைய சொன்னா மித்ரா பெரியம்மா விட மாட்டாங்க…. அவங்க பணம் கொடுத்து உதவுறது வேறு விஷயம் இன்னும் அவங்க கையவே எதிர் பாத்துட்டு இருந்தா நல்லாவா இருக்கும் அதுவும் இல்லாம அப்பாவ வேற வீட்டுக்கு விடாம இங்கையே வச்சிடாங்க அதான் அப்பாவுக்கும் ஒடம்பு சரில்லனு சொல்லிட்டு வந்துட்டேன் ” தன்னிடம் அனைத்தையும் கூறியவளின் கையில் ரெண்டு லட்சம் பணத்தை எடுத்து வைத்தவன் “ இத அந்த கந்துவட்டி காரன்கிட்ட கொடுத்துட்டு வீட்டு பத்திரத்தையும் உன்ன அடமான வச்ச பத்திரத்தையும் வாங்கிட்டு வா”தன் கையிலிருந்த பணத்தைப் பார்த்தவள்

 

“ இவ்ளோ பணம் ஏது” அவனை கேள்வி கேட்டக

“ அதுலாம் உனக்கெதுக்கு… நீ போறியா நான் போகவா” அவளை மிரட்ட

 

“ இல்ல மாமா எனக்கு வேணாம்” நான் பார்த்துக் கொள்கிறேன் என்றவளைப் பார்த்து “ சரி நான் குடுத்தா வேணாம் மித்ரம்மா கொடுத்தாக்கூட வேண்டாமா” அவன் கூற அதில் ஆச்சிரியத்திலும் மகிழ்ச்சியிலும் முகம் புன்னகைக்க “ பெரிய…. பெரியம்மாவா கொடுத்தாங்க”

 

சரவணன் “ ஆமா பணத்தை கொடுத்திட்டு உன்னைய வீட்டுக்கு வர சொன்னாங்க… நீ வரலன்னா அவங்களே வந்து கூட்டிட்டு போவங்களாம்” என்றவனைப் பார்த்து முறைக்க “ சரி மாமா நான் பணத்தை கொடுத்திட்டு வரேன்” என்று கூறிச் சென்றவளை பார்த்துக் கொண்டு நின்றவனின் நினைவு பத்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றது

 

பத்து வயது நிறைந்த செவ்வந்தியே தான் இன்னமும் அவன் கண்ணுக்கு தெரிந்தாள் அதே செங்கல் சூளையில் செவ்வந்தி தன் அன்னை பஞ்சவரணத்தோடு அந்த சிறியவதில்  வீட்டு சுமையை  சுமந்தவள் இன்னமும் சுமக்கிறாள் சிரியவயத்தில் செங்கல் சூளையில் தீ விபத்தில் தன் அன்னை பஞ்சவர்ணத்தை பறிகொடுத்ததுக் கூட தெரியாத அறியா பிள்ளையாக இருந்தவளை  தன் அன்னை கண்ணம்மா மட்டுமே ஆதரவாக குடியும் குடுத்தனமாக இருந்த தன் அண்ணன் மாயாண்டியை நம்பி ஒரு பெண் பிள்ளையை தனியே விடுவது சாதியாகப்படாததால்  அவருடனே அழைத்து வந்துவிட்டார்….

 

கண்ணம்மா முதல் அவரது குடும்பமே கே.கே குரூப்ஸ் இல்லத்தில்  பரம்பரை பரம்பரமாக வீட்டு வேலை செய்துகொண்டு வருபவர்கள்…

 

செவ்வந்தியை பார்த்ததும் மித்ராவிற்கு மிகவும் பிடித்துவிட்டது… அன்றிலிருந்து இன்று வரை செவ்வந்தி மீது மட்டும் தனி பிரியதோடு நடந்து கொள்ளுவது அனைவருக்கும் பிடித்தமே என்றாலும் ஆர்னவ் முற்றிலும் வெறுத்தான் செவ்வந்தியை…

 

ஆதிரா, ஆதவ்,ஜெயவர்மன், சாம்மளா,மற்றும் தாரிகா அனைவருக்கும் செவ்வந்தியை பிடித்து விட ஆர்னவ் மட்டும் அவளிடமிருந்து ஒதுக்கம் காட்டுவான்… ஒருநாள் விளையாட்டிற்கு அவன் பொருளென்று தெரியாமல் எடுத்து விளையடியவளின் கையிலிருந்ததை வெடுக்கென்று பரித்தவன் “ ஏய் சீ என் திங்ச எடுக்காதனு எத்தினி தடவ உன்கிட்ட சொலிர்க்கேன்…. உனக்கு அறிவில்லை போடி” என்றவன் அவளை கீழே பிடித்து தள்ளிவிட அவளது நெற்றி அருகில் போடப்பட்டிருந்த மேசையில் இருக்கும் கம்பி அவள் நெற்றியை பதம் பார்த்து விட ரத்தம் கசிய ஆரம்பித்தது…

 

அதை பார்த்த ஆதிரா வேகமாக ஓடிச் சென்று தன் அன்னையிடம் புகாரை ஒப்பிக்க அதை கேட்ட மித்ரா ஆர்னவை அடித்து வெளுத்து விட்டார்…

 

 

அதிலிருந்து செவ்வந்தியை கண்டாலே ஒதுக்கம் காட்டுபவன் முற்றுலுமாக அவளை ஒதுக்க ஆரம்பித்தான் அவன் அழகு, அவன் அந்தஸ்திற்கு முன் செவ்வந்தியையும் சரவணனையும் ஆர்னவ் கேவலமா பார்த்து வைப்பது சரவணன் அறிந்துக் கொண்ட முதல் அவன் அங்கு வருவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டான்… வெளியில் விடுதியில் தங்கி படிப்பவன் தேவை என்றால் மட்டுமே அங்கு செல்வது உண்டு மித்ரா பல தடவை கேட்டும் இல்லை வேலை இருக்கிறது தனியே இருப்பதுதான் பிடித்தம் என்று பல காரணம் கூறி நாசுக்காக தடுத்திவிடுவான்…

 

 

இன்றும் செவ்வந்தியை கண்டாள்  ஆர்னவிற்கு வேப்பங்காய்யை திம்பதுப் போல் மூஞ்சியை சுளிப்பான் காரணம் அவள் உடை அவளின் கிராமத்து பாஷை படிப்பில் என்று அனைத்திலும் அவளை ஒத்துக்கிவைத்தான்… ஆனால் செவ்வந்திக்கோ ஆர்னவ் என்றால் கொள்ள பிரியம்…  அன்றைய சம்பவத்திற்கு பிறகு அவள் அவனை பார்க்க கூட பயந்தாள்…

 

 

மேஸ்திரியிடம் பணத்தை கொடுத்தவள் வீட்டு பத்திரத்தையும், தன் அடமான பத்திரத்தையும் வாங்கி வந்தவள் அல்லியிடம் கூறி கொண்டு செல்ல அல்லி அவளை அணைத்துக் கொண்டு அழுதாள் “ செவ்வந்தி அக்கா என்ன விட்டுட்டு போகதா”

 

செவ்வந்தியோ “ அல்லி இப்போ எதுக்கு அழகுற இந்தா இதுல வீட்டு பத்திரம் இருக்கு கனகம்மாட்ட கொடுத்து பத்திரமா வச்சிரு அப்பா கேட்டா இல்லன்னு சொல்லிரு…. நீயும் என்கூட வந்துரு இங்க வேனா”ஆறுமுகத்தின் நடவடிக்கை சரியில்லை என்று கூறியவள்

 

“ வீட்டுல அங்க சின்னய்யா மகனுக்கு  கல்யாணம் வேலை போய்டு இருக்கு நான் போய் மித்ரம்மாட்ட கேட்டுட்டு உனக்கு சொல்லி அனுப்புறேன் வந்துரு” என கூறியவள் விடை பெற்று சென்றாள்…

 

தன் நினைவில் இருந்த சரவணனை செவ்வந்தியின் குரல் கலைத்தது “ மாமா… மாமா” இருமுறை அழைத்த பின்பே அவன் தன்னிலை உணர்ந்தான் “ சொல்லு செவ்வந்தி” போகலாமா என கேட்டவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்…

 

திண்ணையில் அமர்ந்திருந்த தன் தந்தையை பார்த்துக்கொண்டே கோபமாக வீட்டினுள் நுழைய அவள் பின்னே சரவணனும் நுழைந்து செல்ல… மாயாண்டி தன் மகளை “ செவ்வந்திப் பாப்பா” என்று நா…. குழற கூச்சலிடவரின் அழைப்பில் வெளியே வந்தவள் தன் கையிலிருந்த பணத்தை திண்ணைமேல் டம்மென்று வைக்க அதில் நிமிர்ந்து பார்த்த மாயாண்டி “ பாப்பா நீ என்கிட்ட பேச மாட்டியா… நீ என்கூட பேசி வருஷம் ஆச்சு பாப்பா… நான் வேணா குடி பழக்கத்தை விட்டுடறேன்… இது சத்தியம்” என்றவரை கொலை வெறியோடு பார்க்க “ இதோட ஆயிரம் சத்தியம் பண்ணிட்டீங்க… நீங்க மாறவே வேண்டாம்… உங்க கடனை பெரியம்மா அடைச்சிட்டாங்க இன்னும் முடிஞ்சா ஊரெல்லாம் கடன் வாங்கி குடிங்க… என்னையும் ஏலத்துக்கு விடுங்க” ஆதங்கத்தோடு கூறியவள் தூணில்  சாய்ந்து கொண்டு அழுதாள்…

 

“ செவ்வந்தி  இந்த அப்பாவ மன்னிச்சிரும்மா… உனக்கு ஒரு  கல்யாணம் கட்டிப் பாக்கணும் ஒரு ஆசைம்மா  ஏனா என்னோட கடமை ஒன்னு இருக்குல” என்று கூறிய தன் தந்தையைப் பார்த்து “ அது ஒன்னுத்தான் உங்க கடைமியுல விட்டு போச்சா மீதி எல்லாம் சரியா செஞ்சி முடிச்சிட்டீங்க… செத்த பொண்டாட்டிக்கு  கூட கொல்லி வைக்க சுயநினைவு இல்லாம இருந்த நீங்க கடமைய பத்தி பேசாதிங்க” என்றவள் சரவணனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட தயராகினாள்….

 

 

மாயாண்டி “ சரவணா நீயாவது கொஞ்சம் சொல்லுப்பா… ஒரு அப்பாவா என் கடமைய நான் செய்யணுமில்லையா” மாயாண்டியை பார்த்த சரவணன் ஒன்றும் பேசாமல் செவ்வந்தியோடு புறப்பட்டு விட்டான்…

– வீணை தொடரும்

நல்லதோர் வீணை செய்தேன் டீஸர்
7
Leave a Reply

avatar
6 Comment threads
1 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
6 Comment authors
Dhivya BharathiNithya KarthiganNithya Karthigan Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Member

Good start Don’t keep us waiting fast fast

Member

Super starting. Mullodu mutthangal 2va.

Nithya Karthigan
Admin

spellings mattum konjam paarththukko da… maththabadi super…

Nithya Karthigan
Admin

அடப்பாவி… விஜய் தேவரகொண்டாவை ஃபவாட் கானுக்கு அப்பாவாக்கிட்டியே!!! 😀 😀 😀 பட் ஃபவாட் கான் சூப்பர் ஹான்ஸம் மேன்… சோ மன்னிக்கலாம்…

Nithya Karthigan
Guest
Nithya Karthigan

Best wishes Divya… good start…

Member

Hi
MM 2 va….. aarnav and sevvandhi nice name selection…. aathi xerox ila athukum melaya nu ini poka poka than theriyum…. aadhi and mithra 2 jodiyoda romance ku waiting pa…. waiting for the next episode eagerly pa…. but antha story mathiri ilama konjam seekiramave epi kudutha happy a irukum….. congrats for the next story…..

error: Content is protected !!
Don`t copy text!