Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


Readers Comments

Recent Updates

நல்லதோர் வீணை செய்தேன் 2

 

 

நல்லதோர் வீணை செய்தேன்

 

வீணை 2

ஓம் லெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லிம்

க் லெளம் லெளம் நமஹ

ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த

 

மனமுருக கண்களை மூடிக்கொண்டு முருகனின் மூல மந்திரத்தின் துதியை பாடியப் படி மித்ரா பூஜை செய்துகொண்டிருந்தாள்… இன்று தன் மகன் வருகிறான் என்ற செய்தி அறிந்ததும் வீடே பரபரப்போடு காட்சியளித்தது… பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்து முடித்த செவ்வந்தி மித்ராவின் அருகிலே நின்றுகொண்டிருக்க… மித்ரா அவளை சிறிதும்   கண்டுகொள்ளாது தன் வேலையை பூஜையை செய்துகொண்டிருக்க …அங்கு மித்ராவிற்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஹேமாவுக்கு செவ்வந்தியை பார்க்கவே பாவமாக இருந்தது….

 

இன்னும் மித்ராவின் கோபம் சிறிதும் குறையவில்லை செவ்வந்தியின் செயலால்….

 

செவ்வந்தியும் இன்றைய சூழ்நிலை மிக மோசமாக இருப்பது புரிய அவளுக்கு அடிவயிற்று பயத்தில் பிசைந்துக்கொண்டே இருந்தது…. ஆர்னவ் வருகிறான் என்ற செய்தி அறிந்ததில் இருந்து இன்னும் மயக்கம் வராத குறைதான்… அவள் மனம் ஒருநிலையில் இல்லை தன்னை கண்டாலே அவனுக்கு பிடிக்காது என்றெண்ணியவள்  இத்திருமணம் முடியும் வரை நம் அவன் கண்ணில் படாமல் இருப்பது நல்லதே என்று தோன்றியது…

 

ஆனால் விதியாரை விட்டது… யாரை விட்டு தள்ளிநிற்க வேண்டுமென்று எண்ணினாலோ அவனுடனே தன் வாழ்க்கை முடியுமென்று அவள் கனவில் கூட நினைத்ததில்லை…

மித்ரா பூஜையை முடித்த வெளியில் கார் நிறுத்தம் சத்தம் கேட்டதும் மித்ரா கண்ணம்மாவை அழைத்து கரைத்து வைத்திருந்த ஆலத்தை எடுத்துவர உத்தரவிட்டாள்… முழுசாக ஐந்து வருடம் கழித்து தன் மகனை சந்திக்கும் மித்ரா ஆவலில் பூரித்தே போனாள்… கோபித்துக் கொண்டு சென்ற மகன் இத்தனை வருடம் கழித்துக் திரும்பியுள்ளதை நினைத்து அந்த தாய் உள்ளம் மகிழ்ந்து போனது…

 

ஆர்னவிற்கு அன்னை என்றால் உயிர் அதேப் போல் தான் மித்ராவிற்கு ஆதிராவை திருமணம் செய்து வைத்த பின் ஆர்னவுக்கு திருமணம் செய்ய எண்ணிய மித்ராவிடம் ஆரி திருமணத்தை மறுத்துவிட்டு சென்றவன் ஐந்து வருடம் கழித்து இப்போதுதான் மனமிறங்கி வந்திருக்கான் அதுவும் ஜெயவர்மனின் திருமணத்திற்காக…  ஆலம் சுற்றி தன்னை வரவேற்ற அன்னையை கட்டியணைத்தவன் “ ஹவ் ஆர் யூ மாம்” என்க அதில் மித்ராவின் கண்கள் கலங்கிவிட்டது… அவனை கட்டியணைத்து உச்சி முகர்ந்தவர் “ ஆரி உனக்கு வீட்டுக்கு வர இப்போதுதான் வழி செரிஞ்சதா” என அழுத

 

தன் அன்னையின் கண்ணீரை துடைத்து விட்டவன் “ கம் ஆன் மாம் நான்தான் வந்துட்டேன்ல” ஆர்னவ் தன் அன்னையை சமாதானம் செய்ய மகன் மற்றும் மனைவியின் பாசத்தை கண்ட ஆதிக்கு கண்கள் லேசாக கலங்கிப் பார்த்திருக்க அருகிலிருந்த தன் தந்தையைப் பார்த்தவன் “ டாட்… ஐ மிஸ் யூ சோ மச்” என்ற ஒற்றை வார்த்தையோடு நிப்பாட்டியவன் தன் தந்தையை ஆர்த்தழுவிக் கொண்டான் ஆதியும் தன் மகனை தழுவிக்கொண்டு “ மீ டூ ஆரி” என்றபடி உள்ளே அழைத்து வர…

 

வீட்டிலிருக்கும் எல்லாரும் ஆர்னவை விசாரித்த வண்ணமிருக்க சந்தோஷத்தோடு காட்சியளித்த திருமண வீடு சற்று கலகலப்பாக மாறியது….

 

அவனைப் பார்க்க வேண்டாம் என்று என்ன தான் மனதிற்கு கடிவாளம் போட்டுக்கொண்டாலும் அவளால் அவனை பார்க்க முடியாமல் மனம் தவித்தது… அவனை உனக்கு கண்டாலே பயம் அவனுக்கும் உன்னை பார்த்தால் பிடிக்காது இதில் வேறு நீ அவனை பார்க்க வேண்டுமா என்று அவள் மனது எடுத்துறைத்தாலும் மற்றோரு மனமோ ‘ நான் என்ன அவர கிட்டப் போய்யா பாக்க போறேன் ஒரு ஓரமா’ தன் மனதில் நினைத்து அவளுக்கு சற்று நேரம் கழித்தே புரிய “ ஐயோ நானா இப்படி நினைச்சேன் அவங்களுக்கு தெரிஞ்சது என்னைய கொன்னு புதச்சிருவாக” அவளது மனது அவளுக்கே புரியவில்லை அவன் மீது அவள் காதல் கொண்டிருப்பதை…

 

பின்பு மனம் உந்த சமையல் கட்டில் நின்றிருந்த செவ்வந்தி மறைவாக ஆர்னவின் வருகையை பார்த்துக் கொண்டிருந்தாள் தனக்கு பதினைந்து வயது இருக்கும் போது ஆர்னவை பார்த்தவள் இப்போதுதான் காண்கிறாள் அவனைப் பார்த்து ஸ்தம்பித்து அப்படியே சிலையாகினாள் அதே வசீகரிக்கும் பார்வை ஏற்கனவே சிவந்த நிறம் கொண்டவன் இப்போது இன்னும் கூடுதல் நிறத்தோடு கட்சியளித்தான்…

 

அவனை பிரமித்து பார்த்தவள் “ ஆத்தி என்ன கலரு… என்ன அழகு… இவருக்கு போயி  எப்படி நான் பொருத்தமா இருப்பேன்” சட்டென்று தன் கருமை மாநிறத்தை கண்டு கவளையுற்றவளுக்கு நிதர்சனம் உரைக்க “ அய்யோ கடவுளே இது என்ன முட்டாள் தனமான போக்கா இருக்கு அவரு எங்க நான் எங்கே” என்று நினைத்தவள் தன் பின்னந்தலையில் தட்டிக் கொண்டு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்….

 

இரவு சாப்பாட்டை தயார் செய்து முடிக்க தன் அத்தை கண்ணம்மாவின் உதவியோடு அனைத்தையும் சாப்பாடு மேஜையில் அனைவரும் வரும் முன்பே எடுத்து வைத்தவள் மறந்தும் கூட அவன் கண்ணில் படவில்லை… இன்னும் பத்து தினத்தில் திருமணம் என்பதால் அதற்குரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரவாரங்கலேன்று சூழல் அழகாக செல்ல அதனுடனே இரவு உணவும் சென்றது…

 

கிச்சனில் தன் வேலையை முடித்துக் கொண்டவள் தயக்கத்துடனே மித்ராவின் அறைக்கு சென்றாள் “ பெரியம்மா” என்ற அழைப்போடு உள்ளே வந்தவளை மித்ரா திரும்பிக்கூட பார்க்காமல் ..

 

ஆதியைப் பார்த்து “பாவா நான் யார்கிட்டையும் பேசுறதா இல்ல அவள போக சொல்லுங்க… மேடம் இப்போ ரொம்ப பெரியாளாகிட்டாங்க நம்ப கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு சுயமா முடிவெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க” மித்ரா கோபாமாக ஆதியிடம் பேசுவதுப் போல் செவ்வந்தியை கடிந்துக் கொண்டிருக்க

 

செவ்வந்தியோ மனம் பாதைத்தவளாய்“அச்சோ பெரியம்மா… அப்பா அந்த கந்துவட்டிகிட்ட கடன் வாங்கிருந்தாரு… அப்பாவ வீட்டுக்கு விடாம அங்கனே கட்டிப்போட்டு வச்சிட்டாங்க… நான் போனாத்தான் விடுவேணு சொல்லிட்டாங்க அதான் பெரியம்மா நான் உங்ககிட்ட கூட சொல்லாம போயிட்டேன்” செவ்வந்தியை அழுத்தமாக பார்த்த மித்ரா “ பாவா… நான் யார்கிட்டையும் விளக்கம் கேட்குறதா இல்ல… அவள போக சொல்லுங்க”

 

ஆதியோ “ உங்க அன்பு சண்டைக்கு நான் வரலப்பா” என்று நாசுக்காக விலக  செவ்வந்தி மீண்டும் தன் காரணத்தை கூற “அப்படி சொல்லாதீங்க பெரியம்மா… நீங்க எனக்கு எவ்ளோவோ பன்னிற்கிங்க… அதுக்கே நான் என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல்ல அதான்… மேலும் உங்கள கஷ்டப்படுத்த என் மனசு கேட்கள… உங்கள பாக்க முடியாம போய்டுமோன்னு ரொம்ப பயந்துட்டு இருந்த சமயத்துலதான்  சரவணன் மாமா நீங்க பணம் கொடுத்ததா சொல்லி மேஸ்திரி கிட்ட பணத்த கொடுத்து கூட்டி வந்துச்சு” அவளின் கள்ளமற்ற அன்பு பேச்சும் என்றும் போல் மித்ராவை நெகிழ வைக்க அவள் தலையை தன் மடியோடு சாய்த்து “ என்ன விட்டுட்டு உன்னால இருக்க முடியுமா என்ன???” மித்ராவின் கேள்விக்கு இல்லை என்று தலையடிவளை அணைத்துக்கொண்டு “ உனக்கு ஏதாவது ஒண்ணுனா நாங்க இருக்கோம் சரியா எதுவா இருந்தாலும் தயங்காம கேளு” என்று மித்ரா கூற அதற்கும் செவ்வந்தியிடம் தலையசைப்பு மட்டுமே பதிலாக வந்தது…

 

அவளது தலையை நிமிர்த்தியவள் “அப்புறம் சொன்னியே எனக்கு கைமாறு செய்யணும்னு… அது நான் உன்கிட்ட கேக்கும் போது நீ மாட்டேன்னு சொல்லாம செஞ்சா போதும்” சரியா என்க செவ்வந்தியும் என்கிட்ட நீங்கள் கேட்டும் அளவிற்கு என்ன இருக்கிறது என்று மனதில் நினைத்தாலும் வெளியே மித்ராவிடம் சரி என்க அவள் தலையை தடவிக்கொடுத்த மித்ரா “ அத நான் காலையில கேக்குறேன் இப்போ போய் நீ தூங்கு சரியா”

 

தன் அறைக்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்தவளை ஆர்னவின் பட்டிக்காடு என்ற அழைப்பு தடுத்தி நிறுத்தியது “ ஏய் பட்டிக்காடு” என சொடக்கிட்டு அழைக்க அவளோ பயத்தில்  திரும்பி பார்க்க கூட பயந்தவளாக அப்படியே பயந்து நின்றுந்தவளின் அருகில் வந்தவன் தன் ஏலனப் பார்வையை அவள் மீது சுழலவிட்டு

 

அவளுக்கு அருகில் இன்னும் நெருங்கி “ உன்கிட்ட நான் என்ன சொல்லிட்டு போனேன்… நான் திரும்பி வரும்போது நீ இங்க இருக்க கூடாதுனு எவ்ளோ தூரம் சொன்னேன்… ஒரு விஷயம் சொன்னா அது உன் மண்டையில் ஏறாதா” வேண்டுமென்றே அவளிடம் வழியே சென்று வம்பிழுத்தவன் அப்பொழுதான் அவளை கவனித்தவனாய் அவள் அணிந்திருக்கும் உடையை சுட்டிக்காட்டி “ ஹ்ம்ம் பட்டிக்காடுன்னு நான் சொல்றதுல தப்பே இல்லடி நீயும் உன்னோட ட்ரெஸ்ஸும்” என்றவன்… “ஓகே அதுலாம் உன்னோட விருப்பம்… லிசன்  நான் இங்கிருந்து திரும்பி ஊருக்கு போறவரைக்கும் உன்ன இந்த ரூம் பக்கமோ… இல்ல இந்த வீட்டுல வேற எங்கையாவது என் கண்ணுலப் பட்ட தொலச்சிருவேன்” அவன் போட்ட  “டி”யில் ஏற்கெனவே நடுங்கிக்கொண்டிருந்தவள் மேலும் அவனது் மிரட்டலில் பயந்து உடலும் உள்ளமும் வெளிப்படையாகவே  நடுங்கிக் கொண்டிருக்க“ச…சரி சார்” என்றவள் அவனை நிமிர்ந்தும் பாராமல் அங்கிருந்து விட்டால் போதுமென்று ஓடிச் சென்றுவிட்டாள்….

 

“ பேபி நீ தெரிஞ்சிதான் இந்த முடிவை எடுத்திருக்கியா தலைக்கும் காலுக்கு முடிச்சு போடுற மாதிரி இருக்கு உன்னோட முடிவு….. இதுக்கு ஆர்னவ் சமதிப்பானா அவன பத்தி தெரிஞ்சும் நீ இப்படி முடிவூப்பன்னிருக்க… இது சரியா வருமா… ஆர்னவ் வாழ்கையுல செவ்வந்தி மட்டுமில்ல நிறையா பொண்ணுங்க எதுக்கும் யோசிச்சி முடிவு பண்ணு இதுல ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கை அடங்கி இருக்கு” ஆதி சந்தேகத்துடனும் கவலையுடனும் தன் மனையளிடம் வினவியவன் தன் மகனின் பிடிவாத குணத்தை அறிந்த ஒரு தந்தையாக கவலையும் கொண்டான்…

 

“இல்ல பாவா ஒண்ணுக்கு நூறு தடவ யோசிச்சி நிதானமா எடுத்த முடிவுதான்… அவன இப்படியே விட்டா சரிவராது பாவா… தலைக்கு மேல வெள்ளம் போன பிறகு யோசிச்சாதான் தப்பு… சொன்னிங்களே பெண்கள் விஷயம்னு அவங்கள கல்யாணம் பண்ணி வச்சா அவன் வாழ முடியாது தினமும் பார்லையும், போலீஸ் ஸ்டேஷன்லதான் குடும்ப நடத்தலாம்… இதுலாம் யோசிச்சிதான் நான் சொல்றேன்…

 

செவ்வந்தி கிட்ட பொறுமை இருக்கு பக்குவம் இருக்கு அதைவிட பாசம், அன்புனு அவகிட்ட கொட்டிக்கிடக்கு  செவ்வந்தி மாதிரி பொண்ண தேடுனாலும் கிடைக்காது” ஆதி தன் மனைவியை பார்த்து “ அதேதான் நானும் சொல்றேன் ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கைய” கெடுப்பானேன் என்ற தன் கணவனைப் பார்த்து “ ஹ்ம்ம்” என தலையாட்டி “ செவ்வந்தியோடு குணம் கண்டிப்பா ஆர்னவை மாத்தும் நான் நம்புறேன்” தன் மனைவி கூறுவது ஒரு விதத்தில் சரியாகப் பட்டாலும் ஆர்னவின் கோபம் அவன் இதற்கு சமதிப்பானா என்பது கேள்விக்குறியே???….

 

அவர்கள் அறைக் கதவு தட்டப்படுவதை அறிந்தவர்கள் அறை வாயிலைப் பார்க்க ஆர்னவ் தான் வந்துக்கொண்டிருந்தான் ஆதிக்கு மித்ராவிற்கும் ஆச்சரியம் விவரம் தெரிந்த பிறகு தங்களின் அறைக்கு வருகை தந்திருக்கும் தன்மகனை கண்டு மகிழ்ந்தனர்…

 

அவனோ “ உள்ளே வரலாமா…. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” இவ்வாறு கேட்க ஆதி “ வா ஆரி… இது உன்னோட ரூம்…. இதுக்கு எதுக்கு பெர்மிஸ்ஸின்”

 

“தேங்க்ஸ் டாட்” என்றவன் சிறுதும் யோசியது “ஐ மிஸ் போத் ஆஃ யூ டாட் அண்ட் மாம்”தன் பெற்றோருடன் முதல் முறை மனதிலிருப்பதை கூறி தந்தையை கட்டியணைத்து தன் அன்னையின் மடியில் தலை வைத்துக் படுத்துக்கொண்டான்….

 

தன் மடியில் படுத்திருந்த மகனின் தலையை பரிவோடு தடவிக் கொடுத்தாள்.. ஆர்னவ் மித்ராவின் கையை எடுத்து தன் கைகளுக்குள் அடக்கி வைத்தவன் “ அம்மா சாரி… உங்கள புரிஞ்சிக்காம நான் அவசரப்பட்டு அப்ரோட் போயிட்டேன் நௌ ஐம் ரியலைசிங் மை மிஸ்டேக்” தான் முன்னே அன்னையிடம் கோபித்துக்கொண்டதை நினைத்து வருந்தியவன் மன்னிப்பும் கேட்டான்…

 

“பரவாயில்லை ஆரி… உன் கோபம் இப்போ போய்டிச்சு இல்லையா.. இப்ப அம்மா சொல்றத கேட்பியா” மீண்டும் மித்ரா தன் மகனிடம் கல்யாணத்தைப் பற்றி பேச அமைதியாக இருந்தவன்…

 

தனது முகத்தையே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அன்னையை பார்த்து அவர்களின் எதிர்பார்ப்பை வீணாக்காதவாறு “ ஓகே மாம்… வாட்ஸ் யூர் விஷ் நீங்க பண்ணுங்க” என்றவனைப் பார்த்து “ நீ யாரையாவது காதலிக்குறியா” தன் அன்னை கேட்டதற்கு

 

தன் அன்னையின் சூழ்ச்சியைப் பற்றி அறிந்தவன் சிரித்துக்கொண்டே “ வெல் உங்க பையன் மேல எவ்ளோ நம்பிக்கை… நோ மாம் நன் ஆஃ தெம் இன் மை லைப்” மித்ராவின் கன்னத்தை தட்டிச் சென்ற  ஆர்னவைக் கண்டு ஆதிக்கு சற்று இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது மித்ராவிற்கு அதே அதிர்ச்சிதான்…

 

மித்ரா ஆதியைப் பார்த்து “நீங்கதான் புரியாத புதிர்நா… உங்க பையன் உங்களுக்கு மேல இருக்கான்… ஆனா உங்களுக்கும் உங்க பையனும் ஒரு வித்தியாசம் நீங்க என்ன நினைக்குறிங்கன்னு உங்க மூஞ்சி காமிச்சு கொடுத்திரும் ஆனா உங்க பையன் கிளீன் போல்ட் ஒரு வித்தியாசமும் தெரியமாடேந்து” மித்ரா கூறியதை ஒப்புக்கொண்டாலும் ஆதி ஆர்ன்விடமிருந்து ஒரு வித்தியாசத்தை கவனிக்க தவறவில்லை..

 

“ பேபி ஆர்னவ்கிட்ட ஒரு வித்தியாசத்தை நீ கவனிச்சியா” என்க அவளோ இல்லையே பாவா  ஆதியே கூறினான்  என்றும் அவனிடமிருக்கும் பிடிவாதம் கர்வமும் கொண்ட ஆர்னவை பார்த்திருந்த இருவருக்கும் இந்த மாற்றம் புதியதாய் இருந்தது…

 

மீண்டும் ஆதி நம்பாமல் “ பேபி இதுலாம் சரியா வருமா” என்க

 

மித்ரா “ பாவா அதுலாம் சரியா வரும்… நான் பாத்துக்குறேன்” தன் கணவனை சமாதானம் செய்தவள் மனதில் ‘அவன் சமதிச்சிதான் ஆகணும் பாவா கண்டிப்பா அவன் சமதிப்பான் ஏன்னா அவனுக்கு வேற ஆப்ஷன் இல்ல பாருங்க’ என்ற மித்ரா  தனக்கு தானே சவாலும் விடுத்துக் கொண்டாள்….

**************************************

ஆர்னவ் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து இருவரும் மறுநாள் காலையில் தங்களின் குடும்பம் ஒன்று கூடி இருக்கும் தருணத்தில் “ எல்லாருக்கும் ஒரு முக்கியமான விஷயமும் சந்தோஷமான விஷயத்தை சொல்லிக்க விரும்புறோம்” ஒரு பாதியை ஆதி கூற  மீதி பாதியை மித்ரா கூற “ நம்ப ஆர்னவ் கல்யாணத்துக்கு சமதிச்சிட்டான்… அதுவும் இந்த கல்யாணத்தோட ஒரே மேடையில் ரெண்டு கல்யாணம் வச்சிக்கலாம்னு முடிவு” அனைவரும் ஆர்னவை அதிர்ச்சியாக பார்க்க.. அவனோ சாதாரணமாக இருந்தான்… அங்கு ஓரமாக நின்றுக் கொண்டிருந்த செவ்வந்தியும் ஆர்னவின் திருமண செய்தியை கேட்டு மகிழ்ந்தாள்..

 

“ இருங்க இன்னும் நான் முடிக்கால… ஆர்னாவுக்கு பொண்ணும் பார்த்திருக்கோம்  உங்க எல்லாருக்கும் பிடிக்கும்” என்க அனைவர் முகத்திலும் சுவாரசியம் கூட… யாரென்று தெரிந்துக் கொள்வதற்கு அனைவரும் ஆவலே உருவாக காத்திருக்க ஆர்னவ் மட்டும் முகத்தில் எந்த ஒரு எதிர் பார்ப்புமில்லாமல் அமர்ந்திருந்தான்… அவனுக்கு நன்கு பரிச்சயம் தன் அன்னை  யாரை கூற போகிறாரென்று…

 

ஆர்னவிற்கு பார்த்திருக்கும் பெண் செவ்வந்தி தான் என்று மித்ரா கூறியப்பின் அனைவரின் முகமும் பிரகாசமாய் எரிந்தது என்றால் ஆர்னவ் வெகு சாதாரணமாக சிறிது கீற்றுப் புன்னகையை சிந்த செவ்வந்தியின் நிலை கூறவே வேண்டாம் அதிர்ச்சின் உச்சியில் நின்றிருந்தவளுக்கு  உலகமே தட்டமாலையாக சூழன்றது….

குடும்பமும் ஒரு சேர “ வாவ்… செம்ம ஜோடி அருமையான சேலெக்க்ஷன்” என்று சிலாகிக்க அனைவரும் ஆர்னவிற்கு வாழ்த்துக் கூற தவறவில்லை… அன்று மாலையே இந்த செய்தியை தன் தொழில் வட்டாரத்திற்கு தெரிவிக்க திருமண வேலைகள் தங்கு தடையின்றி விருவிருப்போடு சென்றது…

 

ஆதவ் ஜெயவர்மனை அழைத்து “ டேய் மச்சான் என்னடா நடக்குது இங்க… ஆர்னவ் அண்ணனுக்கு செவ்வந்திய சுத்தமா பிடிக்காது… செவ்வந்தி சொல்லவே வேணாம் அண்ணன் இருக்கும் பக்கம் தலைய வச்சிக்கூட படுக்க மாட்டா…. இதுல கல்யாணம் வேலங்கிரும்… நீங்க ஷாக் ஆகுனிங்களோ இல்லையோ எனக்கு படும் ஷாக்” தன்னிடம் புலம்பியவனைப் பார்த்து “ உனக்கு பிடிக்கலையா செவ்வந்தி உனக்கு அண்ணியா வரது …..ஓஹோ நீ சொன்னியே ஸ்டேட்டஸ் அது தடுக்குதா” ஆதவ் அவனை முறைக்க

 

“ டேய் மாங்கா நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா… செவ்வந்திக்கு அண்ணனப் பத்தி எதுவும் தெரியாதுடா தெரிஞ்சா பாவும் அவ எவ்ளோ கஷ்டப்படுவா” என்க

 

ஜெயவர்மன் “ மச்சான் ஈசி கல்யாணம் பண்ண போறது உன் அண்ணன் அவனே இதப் பத்தி பேசிகள அவங்க லைப் அவங்களுக்கு தெரியும் அப்ஸ் அண்ட் டௌன்ஸ் இருந்தாலும் அவங்க பாதுப்பாங்க டோன்ட் ஒரி” ஆதவிடம் பேசிக்கொண்டிருந்த ஜெயவர்மனை சாம்மளா அழைக்க அவனோ “ ஓகே மச்சி என் ஆளு குப்பிடுது பாய்” என்றவன் எழுந்து சென்றிட ஆதவிற்கு இதத்திருமணத்தை பற்றி சந்தேகமாகவே இருந்தது தன் சகோதரனைப் பற்றி நன்கு அறிந்தவன் காரணமின்றி அவன் எந்த ஒரு செயலிலும் இறங்கமாட்டான் என்பது புரிய ஏதோ ஒரு காரணம் இருப்பதை அறிந்தான்…

 

செவ்வந்தி கிச்சனில் வேலைசெய்துக் கொண்டிருந்தவளுக்கு சதா ஆர்னவின் நினைவே ஆர்னவ் இத்திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட விஷயம் வியப்பாகவே இருந்தது அதை விட தன்னை அவன் மணக்க வேண்டி என்ன அவசியம்… அவளால் கற்பனைக் கூட பண்ணிப்பாற்க முடியவில்லை.. தன் சிந்தனையில் இருந்தவளை மித்ராவின் குரல் அழைத்தது “ பெரியம்மா… ஏதாவது வேணுமா சொலிருந்தா நானே கொண்டு வந்திருப்பனே நீங்க எதற்கு இவ்ளோ தூரம்” என்றவளின் கையை பிடித்து “ இந்த பெரியம்மா மேல உனக்கு கோபமாயிருக்கா செவ்வந்தி… உன்னோட முடிவு இல்லாம சம்மந்தம் பேசுனதுல” அதில் பதறிய செவ்வந்தி “ அயோ பெரியம்மா… என்ன பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க… நான் உயிர் வழுறதே நீங்க போட்ட பிட்சை… நான் இந்த அளவுக்கு இவ்ளோ பாதுகாப்பா இருக்கென்ன அதுக்கு காரணம் நீங்கதான்… என் நலத்தை மட்டும் யோசிக்கும் நீங்க  எது செய்தாலும் சரியா இருக்கும்”  தன் மீது அளவுக்கடந்த நம்பிக்கையை வைத்துள்ள அந்த சிறிய பெண்ணை அணைத்துக் கொண்ட மித்ராக்கு சற்று பயமாகவும் கலக்கமாகவும் இருந்தது… தன் மகனை நம்பி அப்பாவி பெண்ணை திருமணம் செய்து வைக்கிறோமோ இது கைக்கூடுமா என்று நெருடலாகவே இருந்தது…

 

 

ஆர்னவ் செவ்வந்தியின் திருமண விஷயம் தெரியாத சரவணன் அன்று இரவே செவ்வந்தியை சந்திப்பதற்காக கே.கே இல்லத்திற்கு வருகை தந்திருந்தான்… பணியாளர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு பின் கட்டிற்கு சென்றவன் செவ்வந்தியின் அறையை தட்டியப்படி “ செவ்வந்தி… இந்தா புள்ள செவ்வந்தி” இருமுறை அழைத்த பின்பே கதவு திறக்கப்பட… சரவணனைப் பார்த்தவள் “ மாமா… நீங்களா உள்ள வாங்க என்ன இந்நேரத்திற்கு வந்திருக்கிங்க முக்கியமான விஷயமா” என்க

 

அவனும் “ ஆமா” என்றவன் சற்று இடைவெளி விட்டு தான் அவளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமர்ந்திருக்க

 

“ என்ன மாமா… கல்யாணத்துக்கு ஆளு கேட்டிருந்தாகள பெரியம்மா… அதுக்கு சொல்ல வந்தீரா” செவ்வந்தி அவனிடம் கேட்க சரவணனும் கல்யாண விஷியத்தைப் பற்றி சொல்வது இது நேரமில்லை என்று எண்ணியவன்…

 

“ஆ…ஆமா செவ்வந்தி அது இந்த வாரம் அல்லயும் வருது வீட்டு வேலைக்கு அப்புறம் எனக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்கு நான் வேலை விஷயமா போனும் பாத்து இருந்துக்க” என்றவனை பார்த்து மகிழ்ச்சியோடு “ ரொம்ப சந்தோசம் மாமா அத்தை கிட்ட சொல்லிடீரா வேலை விஷயம்” என்க அவனோ “ ஹ்ம்ம்” என மட்டும் தலையாட்டியவன்

அவளிடம் “ ஆர்னவ் உன்கிட்ட எதுவும் பிரச்சன பண்ணலல” சரவணன் ஆர்னவை நியபகப் படுத்த அதில் மிரண்டவளைப் பார்த்து “ என்ன செவ்வந்தி அப்படி பாக்குற அவன் ஏதாவது பிரச்னை பண்ணானா சொல்லு அவன நான் பாத்துக்குறேன்” சரவணன் பதிலில் அவளுக்கு மேலும் கிலி வர “ இல்…. இல்லமாமா அவரு பிரச்னைல்லாம் ஏதும் பண்ணல” அவளை சந்தேகத்துடன் பார்த்தவன் “ அப்புறம் ஏன் அவன் பேர சொன்னாலே பயப்படற” என்றவனைப் பார்த்து ஒன்னுமில்லை என்று கூற சரவணனும் நம்பி அவளிடமிருந்து விடைபெற்றான்…

 

வந்த விஷயத்தை கூற நினைத்த சரவணனுக்கு ஏதோ தடுக்க இப்போது வேண்டாம் வேளையில் சேர்ந்த பின்பு திருமணத்தை பேச வேண்டும் என்று முடிவெடுத்தவன் மனதில் ‘ செவ்வந்தி நீ இதுவரை பட்டது போதும்… இனிமே நீ சந்தோஷத்தை மட்டும் தான் அனுபவிக்கணும்… உன்னைய தாங்க நானிருக்கேன் நீ கவலைப்படாத… உன்னைய ராணி மாதிரி வாழவைக்க நானிருக்கேன்” என்று நினைத்தவனுக்கு தெரியவில்லை தான் சென்னைக்கு திரும்பும் போது சூழ்நிலை கைமீறி போகுமென்று…. இன்னதென்று முன்னவே தெரிந்திருந்தால் தன் மனதையாவது அவளிடம் உணர்த்திவிட்டு சென்றிருப்பான்…

 

இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கணவுக்குள் வழக்கு

– கடவுளின் கணக்கை யாரால் மாற்ற முடியும்

வீணை மீட்டும்…

 

நல்லதோர் வீணை செய்தேன் டீஸர்
நல்லதோர் வீணை செய்தேன் டீஸர் : 3
5
Leave a Reply

avatar
3 Comment threads
2 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
4 Comment authors
Dhivya BharathiNithya R Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Guest
Vathany

Nice eb sister waiting next eb

Dhivya Bharathi
Guest
Dhivya Bharathi

Thanks sis

Member

Aarnav sammatham sollitana…. mithra miratti sammatham vangitalo…. saravanan next saathik a….. sevvandhi epadi aarnav a samalika pora……Nice epi pa….. waiting for the next episode eagerly pa…..

Dhivya Bharathi
Guest
Dhivya Bharathi

Thanks sis… Teaser pottuten padichitu sollunga

Rajalakshmi P
Member

Nice

error: Content is protected !!
Don`t copy text!