Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


Recent Updates

நல்லதோர் வீணை செய்தேன் டீஸர் : 3

நல்லதோர் வீணை டீஸர்:

 

“ஆரி நாங்க எல்லாரும் கல்யாணத்துக்கு முகூர்த்த புடவை எடுக்க கடைக்கு போறோம் நீ செவ்வந்திய கூட்டிட்டு வந்திரு… நாங்க முன்னவே போயி செலக்ட் பண்ணிட்டு இருக்கோம்” என கூறிய மித்ரா அனைவருடன் கிளம்பியது  அவர்கள் இருவருக்கும் தனிமை வேண்டியே…

 

ஆர்னவ் தன் அன்னை கூறியதை பல்லை கடித்துக்கொண்டு கேட்டவன் தலையை  மட்டும் ஆடியப்படி சரி என்றான்… இத்திருமணம் முடியும் வரை, தான் இதையெல்லாம் சகித்துதான் ஆகவேண்டும் என்றதோடு அவன் வரவேற்பு அறையில் செவ்வந்திக்காக காத்திருக்க…

 

அவளோ அவன் பொறுமையை சோதிக்கும் பொருட்டு அவளும் வந்தபாடில்லை மிகுந்த சினத்தோடு அவன் படக்கென்று இருகையிலிருந்து எழ அவனது வருங்கால மனைவியோ “ பெரியம்மா… நான் ரெடி போலாமா” தன் சேலையை சரி செய்துகொண்டே  வந்தவள் திரும்பி பார்க்க அங்கு ஆர்னவின்றி வேறு யாரும் இல்லாமலிருக்க  அப்படியே நின்றாள் தன் உடையை கூட சரி செய்ய மறந்தவளாக

 

அர்னாவைக் கண்டு மிரண்டவள் சுற்றும் முற்றும் தன் பார்வை சூழலவிட ஆர்னவின் பார்வை அவளை துளைத்தெடுத்து அவன் பார்வை விலகிருக்கும் அவள் மார்பு சேலை  மீது பட ஒரு நிமிடம் தள்ளாடித்தான் போனான் … அவன் பார்வை வேறெங்கோ செல்ல அதை கவனித்தவள் வேகமாக சேலையை இழுத்து மார்பை மறைத்தாள்..

 

அவளது செயல் அவனை அவமானப் படுத்தியதுப் போலிருக்கே ‘ஆமா இவ பெரிய ரம்பை, மேனகை அப்படியே இவங்க அழகுல மயங்கிட்டாலும் வேனுனே இப்படி உடம்பை காட்டுரா அப்பதானே பணக்காரனா பார்த்து வலச்சி போடமுடியும்’தன் மனதில் செவ்வந்தி மீது தப்பான எண்ணத்தை திணித்தவன்

 

கோபமாக அவளை பார்த்து“ ஏய் என்ன??? யாரை தேடுற” தான் கேட்டதற்கு அவளிடமிருந்து இன்னும் பதில் வராமலிருக்க

 

“ ஹேய் உன்னைத்தான் கேக்குறேன் இங்கிலீஷ் தான் தெரியாது தமிழும் தெரியாதா” என்க

 

அவன் அதட்டலில் நெஞ்சம் படபடக்க நின்றிந்தவளுக்கு வார்த்தை வெளியே வராமல் தொண்டைக் குழியில் சிக்கிக்கொள்ள… ஆர்னவ் தன் பொறுமையை இழந்துக் கொண்டிருந்தான்…

 

அவளோ மிக சிரமப்பட்டவளாய் “ இல்… இல்ல சார் பெரியம்மா… அப்புறம் வீட்டுல யாரும் இல்லை அதான்”….வார்த்தையை ஒவ்வொன்றாக கோர்த்து பேசியவளை  முறைத்து பார்த்தவன்  அவள் முடிக்கும் முன்பே “ ஏன் என்னலாம் பார்த்தா உன் கண்ணு மனிஷனா தெரியில்லையா” தன்னை அவள் கண்டு கொள்ளவில்லை என்ற கோபம்…

 

தன் அன்னையிடம் கோபத்தை காட்ட முடியாமல் தவித்தவன் தன்னை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியதற்கு காரணமான செவ்வந்தி மீதே அவனது முழு கோபமும் திரும்பியது“ உன்ன கடைக்கு வரசொன்னங்க கிளம்பி போ” என்றவன் முன்னே நடக்க அவளுக்கோ தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை எப்படி போறது என்று நினைத்தவள் அங்கையே நிற்க..

 

ஆர்னவ்  செவ்வந்தி வராமல் இருப்பதை  பார்த்து எரிச்சலடைந்தவன் அவளை சோடக்கிட்டு அழைத்து என்ன என்று கேட்ட

 

“இல்ல சார் பெரியம்மா கார்ல போறதா சொன்னாங்க அதான் சார் எப்படி போறதுன்னு தெரியல”ஒரு வாரு தன் தாயகத்தை விடுத்து விஷயத்தை கூறியவளைப் பார்த்தவன்

 

தெனாவட்டாக கார் மீது சாய்ந்து கையை மார்புக்கு குறுக்காக கட்டியபடி அவளை மேலும் கீழும் பார்த்தவன்  வேண்டுமென்றே“ஏன் மேடம் கார்ல தான் பொறந்து வலந்தது எல்லாம் கார்ல தான் போவீங்களா…. சோச்சோ…. ஹ்ம்ம் சாரி மேடம் கார்ளாம் வராது நீங்க நடந்து போலம் இல்ல பஸ்ல போலம்…  வீட்டு வேலைக்காரி உனக்குலாம் என்னடி தகுதி இருக்கு என்கூட கார்ல வர… உனக்குலாம்  கார் ஒன்னுத்தான் கேடு… ” கோபத்தோடு மொழிந்தவன் தன் கூல்ஸை அணிந்துக்கொண்டு காரில் ஏறி அமர…

 

செவ்வந்தியின் காதல் இதயம் கீறல் பட்டு ரத்தம் கசிய முதல் முறையாக தன் ஏழ்மையை நினைத்து வருந்தினாள்…

 

ஒரு நிமிடம் அவளை பார்த்தவன் “ பஸ்கு காசு இருக்கா…. இல்லனா நான் தரேன்” என்று தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து இருவது ரூபாயை எடுத்து கொடுத்தவன் “சீக்கிரம் பஸ் புடிச்சி போய்டு” என்றப்படி அவள் கையில் பணத்தை திணித்துவிட்டு விடைபெற்றான்…

 

செவ்வந்தியின் கண்களில் இப்பவோ அப்பவோ என விழ தயாராக இருந்த கண்ணீர் அவள் கன்னத்தை நினைக்க அவளது மனமோ அவன் இயல்பே அதுதான் விட்டுச்செல் புதிதாகவா அவமானம் படுகிறோம் என்று எடுத்துரைக்க தான் நிற்பது போது இடம் என கருத்தியவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு பேருந்து நிறுத்ததிற்கு  சென்றாள்…

 

வீணை மீட்டும்…

நல்லதோர் வீணை செய்தேன் 2
நல்லதோர் வீணை செய்தேன் 3
2
Leave a Reply

avatar
2 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
2 Comment authors
Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Member

Next epi pondunga pa

Member

Nice precap…. waiting for the next episode eagerly pa….
Sevvandhi kadaiku poyiduvala ila ottu motha family m avala theda pokutha….. ila aarnav sir avanga pora bus pinadiye poyi guard velai parka porara…..

error: Content is protected !!
Don`t copy text!