Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


நல்லதோர் வீணை செய்தேன் 4 & 5

வீணை 4

 

வேலையிருப்பதாக சொல்லி கிளம்பி வந்தவனுக்கு அரைமணி நேரம் கூட சென்றிருக்காத பட்சத்தில் மீண்டும் அவனது அலைபேசி அழைக்கப்பட்டது அவன் அன்னையிடமிருந்து தான்… அதைப் பார்த்து எரிச்சலடைந்தவன் அலைபேசியை அனைத்து தூர எறிந்தான்…

 

சூழல் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி தன்னை அசுவசப்படுத்தியும்… மனதின் புகைச்சல் தாளாமல் சிகரெட் ஒற்றைப் பற்ற வைத்து தன் ஆத்திரத்தை போக்கிக் கொண்டிருந்த சமயம்… அவனது அறையை தட்டிக் கொண்டு ஆர்னவின் செயலாளர் தீபக் உள்ளே வர… கதவு திறந்த சத்தத்தில் கண்களை திறந்தவன் ஆர்னவின் பார்வையே தீபக்கை என்ன என்பதுப் போல் கேட்க அவன் பயந்துக்கொண்டே

 

“சார் மித்ரா மேம் கம்பெனி போன்க்கு கால் பண்ணி… உங்… உங்கள சீக்கிரமே கிளம்பி சென்னை GH வர சொன்னாங்க சார்” ஆர்னவிடம் பேசவே தனி தைரியம் வேண்டுமென்று மனதில் யோசித்த தீபக் தான் கூற வேண்டியதை ஒருவாறு பேசி முடிக்க

 

தீபக் கூறியதை கேட்டு பதரியடித்துக் கொண்டு எழுந்தவன் “ யாருக்கு என்னாச்சு”என்க

 

தீபக் “ தெரியல சார்… மேம் டீட்டைலா சொல்லல” என்றவனை அற்பமாக பார்த்து சோபாவில் வீசப்பட்ட தன் அலைபேசியை ஆன் செய்து மித்ராவிற்கு அழைப்பு விடுக்க அது எடுக்கப் படாமல் இருப்பதை உணர்ந்து எரிச்சலடைந்தவன் “ச்சே” என்றப்படி கோபமாக ஸ்டாரிங்கை பிடிக்க அவன் கையில் கார் பறந்தது சென்னை பொது மருத்துவமனை நோக்கி வேகமாக வந்தவன் யாருக்கு என்னவென்று

 

பதட்டத்தோடவே தேட அங்கு Icu அறைக்கு பக்கவாட்டில் போடப்பட்டிருக்கும் இருக்கையில் செவ்வந்தி மித்ராவின் தோலில் சாய்ந்து அழுத்துக்கொண்டிருக்க அவன் சற்று மூச்சு விட்டான்… அங்கு நின்றிருந்த மற்றவர்களின் முகம் சோகத்தை தத்தெடுத்திருந்தது அவனது மனமோ ‘ எல்லாரும் நல்லாதான  இருக்காங்க அப்பறம் யாருக்கு என்னாச்சு???’

 

நேரே செவ்வந்தி அழுததைப் பார்த்து ‘ எதுக்கு இந்த பட்டிக்காடு இப்போ சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கா’ என்னத்தான் நடந்துக் கொண்டிருக்கிறது எனப் புரியாமல் தன் அன்னைக்கு அருகில் செல்ல ஆர்னவைப் பார்த்த செவ்வந்தி சட்டென்று மித்ராவின் மீது சாய்த்துக் கொண்டு அழுதவள் அவனைப் பார்த்த பின் எழுந்து ஓரமாக நின்று தலையை குனிந்துக் கொண்டு மௌனமாக அழுதாள்…

 

“ மாம்.. வாட் ஹப்பேன்…எனி திங் சீரியஸ்” மித்ராவின் தோலைத் தொட்டு  ஆர்னவ் கேட்க… அவனைப் பார்த்த மித்ரா “ ஆரி… செவ்வந்தி அப்பா…..,,, வந்து ஐஸுயுல இருக்கார்… இது செகண்ட் அட்டாக்காம்… ட்ரிட்மெண்ட் போட்டு இருக்கு… இன்னும் டாக்டர் ஒன்னும் சொல்லல…

 

உங்க அப்பா வேற என்கூட இல்ல… அதான் உன்ன வரச்சொன்னேன்” என்றபடி ஆர்னவிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே கதவை திறந்துக்கொண்டு வந்த மருத்துவர் “ மித்ராவிடம் பேசன்ட் கொஞ்சம் கிரிட்டிக்கல்  நீங்க வேற நல்ல பிரைவேட் ஹாஸ்பிட்டல்க்கு போறதுதான் நல்லது” மருத்துவர் கூறியதைக் கேட்டு அப்படியே சரிந்து தரையில் அமர்ந்து செவ்வந்தி அழ கண்ணம்மா  அவளை தூக்கசெய்து ஆறுதலாக அணைத்தார்…

 

அவருக்குமே தன் அண்ணனின் நிலைக் கண்டு கலங்கித்தான் போனார்…

 

விஷயத்தை அறிந்த ஆர்னவ் எந்த வித பதட்டமுமின்றி அமர்ந்திருந்தான்… பின்பு அனைவரும் சென்றுவிட செவ்வந்திக்கு ஒன்றும் புரியவில்லை…. தனியார் மருத்துவமனைக்கு எப்படி செல்வது யாரிடம் பணம் கேட்பது அவ்ளோ பணத்திற்கு தான் என்ன செய்வது என்று தெரியாமல் மனதில் பயம் குடிக்கொள்ள … உதவிக்கு ஒருலட்சம் இரண்டு லட்சமென்றால் பரவாகயில்லை பத்து லட்சத்திற்கு எங்கே செல்வது ஒன்றும் தெரியாமல் தவிக்க…

 

மறுநாள் காலையில் செவ்வந்தியின் தந்தை மாயாண்டி சென்னையில் புகழ் பெற்ற கார்டியோ ஸ்பெசியலிஸ்ட் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு… இருதய அறுவை சிகிச்சை (coronary bypass surgery) மேற்கொள்ள இதையெல்லாம் ஆர்னவே கூடவே இருந்து கவனித்து வந்தான்… அறுவை சிகிச்சைப் பற்றி ஆர்னவிடம் கலந்துரைத்த மருத்துவர் அர்ட்டெரி, இதய தமனி நோய் (CAD),  இதய தசைக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குவதற்கான தமனிகள் கடுமையாகவும் குறுகியதாகவும் வளருகின்றன. நீங்கள் வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள், மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற சிகிச்சைகள் முயற்சி செய்யலாம், தமனிகளை திறக்க ஒரு செயல்முறை. இந்த சிகிச்சைகள் உதவாது என்றால், நீங்கள் கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

 

அறுவை சிகிச்சை இதயத்திற்கு ஒரு புதிய பாதையை உருவாக்குகிறது. அறுவை சிகிச்சை மார்பு அல்லது மணிக்கட்டில் இருந்து கால் அல்லது தமனி இருந்து நரம்பு ஒரு ஆரோக்கியமான துண்டு எடுக்கும். அறுவைசிகிச்சை அதை சுற்றியுள்ள பகுதி அல்லது அடைப்புக்கு மேலேயும் கீழேயும், இதய தமனியில் இணைகிறது. இது இரத்தத்தை கடந்து செல்ல அனுமதிக்கிறது (சுற்றி வர). சில நேரங்களில் மக்கள் ஒரு பைபாஸை விட அதிகமாக வேண்டும்.

 

அறுவை சிகிச்சை முடிவுகள் பொதுவாக சிறந்தவை. பல ஆண்டுகளாக பல மக்கள் அறிகுறியாக இருக்கிறார்கள். தடுக்கப்பட்ட தமனிகள்(artery) அல்லது நரம்புகள் அல்லது தடுக்கப்படாத தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால் மீண்டும் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். இரத்தக்குழாய்கள் மீண்டும் அடைத்துவிட்டன என்பதால் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் தடுக்கலாம் என்னதான் மருந்துகள் வேலை செஞ்சாலும் மனசு தான் உடம்பை ஊனமாகரத்துக்கு காரணம் மிஸ்டர் ஆர்னவ் மீண்டும் கவனமாக இருக்க வேண்டும் மருத்துவர் கூறி விட மேற்கொண்டு மாயாண்டிக்கு அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்தது முடிந்தது இதையெல்லாம் அமைதியான முறையில் பார்த்துக்கொண்டிருந்தாள் செவ்வந்தி…

 

மாயாண்டி வேறு அறைக்கு மாற்றப்பட்டு உடல் நிலை நன்றாக தேரி வர…  செவ்வந்தியே மருத்துவமனையில் தங்கி பார்த்துக்கொண்டாள்… அப்பேரஷன் முடியமட்டும் கூடவே இருந்த ஆர்னவ் அதன் பின் அங்கு வருவதை நிறுதிருந்தான்…. அவனைப் பாராமல் அவள் தான் தவித்துவிட்டாள்… தினமும் கிடைக்கும் அவன் தரிசனம் இன்று இல்லாமல் போனது அவளுக்கு ஏமாற்றமே!!!

 

பின்பு வேலைகள் அவளை இழுத்துக் கொள்ள… தன் தந்தையை நன்றாக கவனித்துக் கொள்ளும் பணியை தொடர்ந்து செய்தால்… மருத்துவ செலவிற்கு உண்டான அனைத்து செலவுகளையும் மித்ரா ஏற்றுக்கொண்ட விஷயம் தெரியவந்தவள் நன்றியுணர்வோடு மித்ராவை நாடிச் சென்றவள்…

 

“பெரியம்மா” என்ற கேவளின் ஊடே அழைத்த செவ்வந்தி மித்ராவின் காலில் விழுந்து அழ அவளை எழுப்பி விட்ட மித்ரா “ என்ன செவ்வந்தி இது… காலுலலாம் வந்து விழுந்துகிட்டு எழுந்திரி!!!….இப்போ எழுந்துரிக்க போறியா இல்லையா…. எங்க இருந்து கத்துகிட்டே இந்த புது  பழக்கத்தை” மித்ரா செவ்வந்தியை கடிந்து பேச … அதையெல்லாம் உணரும் நிலையில் அவளில்லை கண்களை அழுந்த துடைத்தவள் “ நீங்க இல்லன்னா அப்… அப்பவே உயிரோடவே பாதிருக்க முடியாது பெரியம்மா… ரொம்ப நன்றி பெரியம்மா…  எனக்குன்னு இருக்குற ஒரே ரத்த சொந்தம் அவர் மட்டும்தான் பெரியம்மா… நீங்க இல்லன்னா என்னோட அப்பா… ”

 

மேலே பேசமுடியமல் அவள் அழ மித்ரா  அவளின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு ஆதரவாய் அணைக்க “அதுலாம் ஒன்னுமில்ல செவ்வந்தி…. அப்பாக்குதான்   இப்போ ஒன்னுமில்லனு டாக்டர் சொல்லிட்டாங்களே அப்புறம் எதுக்கு அழுக”

 

“உன்கிட்ட நான் முன்னாடியே சொல்லிற்கேன்…. உனக்கு ஒரு கஷ்டம்னா அது எங்களுக்கும்னு”மித்ரா கூறுவது புரிந்தாலும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் உதவும் தண்மை யாருக்கும் இல்லை என்பதை உணர்ந்தவளாய்

 

“இருந்தாலும் பெரியம்மா…. நீங்க இல்லன்னா “ இது எப்படி சாத்தியம் என்றவளைப் பார்த்து

 

“அப்படியா அப்பன்னா இந்த நன்றிய நீ எனக்கு சொல்ல கூடாது .. அத உன் புருஷன்கிட்ட சொல்லு”தன்னை புரியாமல் பார்க்கும் செவ்வந்தியின் வெள்ளந்தி மனதை உணர்ந்தவர்

 

“என்ன புரியலையா” மித்ராவின் கேள்விக்கு தெரியவில்லை என்று தலையாட்ட

 

அவளை பார்த்து சிரித்த மித்ரா “நீ நன்றி சொல்லனும்னா உன்னோட  புருஷன் ஆர்னவ்கு நன்றி சொல்லு அவன் தான் எல்லாம் பார்மல்டீசும் கூட இருந்து பாத்துக்குட்டான்” மித்ரா கூறுவதை நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் செவ்வந்தி அவள் அறிந்த ஆர்னவ்  இதையெல்லாம் செய்யமாட்டானே செய்தாலும் நமக்காக அவன் இறங்கி வந்து தானாக உதவி செய்கிறான் என்றால்

 

உண்மையாகவே தன்னை அவன் மனைவியாக ஏற்றுக்கொண்டானோ அதை நினைத்து மனம் பூரித்தவள் அவனின் மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியும் உண்டானது…

 

இருந்தாலும் தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள “பெரியம்மா உண்மை… உண்மையாவா அவரா எனக்கு உதவி”அவள் முடிக்கும் முன்னவே மித்ரா அவளை தடுத்து “உண்மையா இல்லையான்னு உன் புருஷன் கிட்ட கேட்டுக்கோ”என்று கூறிவிட்டு“இன்னும் கல்யாணத்துக்கு ஒரு வாரம்தான் இருக்கு அழுது வடியாம கல்யாண பொண்ணு மாதிரி நடந்துக்கோ”மித்ரா கூறியதைக் கேட்டு வெக்கம் மேலிட மனம் முழுவதும் அவள் காதலனே நிறைந்திருந்தான்….

 

மாயாண்டியின் உடல் நிலை சற்று தேறி வர செவ்வந்திக்கு உதவியாக அல்லியும் அங்கு வந்து சேர்ந்தாள்… மருத்துவமனைக்கு வந்து செவ்வந்தியை “ அக்கா” என்றழைத்து அனைத்துக் கொண்ட அல்லி “ அக்கா அப்பா எப்படி இருக்கு நல்லார்க்குதா” அல்லி மாயாண்டியின் நலம் விசாரிக்கும் பொருட்டு செவ்வந்தி அவளை அழைந்துக் கொண்டு தன் தந்தையை காணச் செல்ல அவரைப் பார்த்து நன்றாக இருப்பதை உணர்ந்தவள்

 

“செவ்வந்திக்கா உனக்கு கல்யாணம் முடிக்குறதா அப்பா சொல்லிட்டு இருந்திச்சி… எனக்கே உன்மேல கோவம் நீ வந்தப்பக் கூட இதப்பத்தி ஒரு வார்த்தக் கூட சொல்லையேனு… இருந்தாலும் எனக்கு சந்தோஷம் நீ நம்ப பெரியைய்யா மகனையே மணமுடிக்குறது”என்க

 

செவ்வந்தி “இல்ல அல்லி எனக்கே தெரியாது இது அவசரமா முடிவு பண்ண கல்யாணம்… பெரியம்மாவும் பெரியைய்யா தான் முடிவு பண்ணாங்க”… என்றவள் முகத்தில் ஏதோ புதிதாக மாற்றம் தெரிய அதை கவனித்த அல்லி “அக்கா இங்க பாரு… என்னைய நிமிர்ந்து பாரேன்”… அவள் தடைப்பற்றி நிமிர்த்திய அல்லி செவ்வந்தியின் முகம் அந்திவானமாய் சிவந்திருப்பதை பார்த்து “அக்கா உன்முகம் இப்போ ரொம்ப சிவந்து அழகா இருக்கு… மாமாவ பத்தி பேசுனதும் உனக்கு வெக்கம் வருதா… ஆனாலும் அக்கா நீ ரொம்ப குடுத்து வச்சவ… நீ ஆசைப்பட்ட மாதிரியே மாமாவே உனக்கு கணவரா வரபோராரு…. நீ என்கிட்ட சொன்ன மாதிரி இல்லக்கா மாமா ரொம்ப நல்லவரு”

அல்லி கூறியதை அமோதித்தவளின்  மனசாட்சி ஆம் அவர் நலவர்தான் நான் நினைத்ததுப் போலில்லை  உண்மையாகவே மாறிவிட்டார் போலும் அவள் மனம் முழுவதும் தன்னவனிடம் சிக்கிக்கொண்டது அல்லி கூறுவதும் உண்மைதான் எப்பொழுதும் தன்னை வெறுத்து ஒத்துக்குபவன் இப்போது காட்டும் கரிசனம் தான் என்ன… “ஒருவேளை கடமைக்காக செய்கிறாரோ” என்று நினைக்க தோன்றினாலும் “ இல்லையே அப்படி கடமைக்காக என்றாலும் புடவை எடுத்துக் கொடுப்பது அப்புறம் இப்படி எனக்காக லட்சம் கணக்கில் செலவு செய்வது

 

ஹும்ஹும் நினைச்சமா இது கரிசனமுமில்லை கடமையுமில்லை …. உண்மையவே அவரு என்ன பிடிச்சிதான் செய்றாரு” அவனைப் பற்றியும் அவனது செயலைப்  பற்றியும் முழுமையாக  அறியாதவள் அவன் தன்னை மனவியாக ஏற்றுக்கொண்டான் என்பதை நினைத்து அவள் மனம் தப்பாக தூபம்போட்டது… எந்த இரு காரணத்தை தவிர்த்தாலோ அதுவே அவள் வாழ்க்கையை நிர்ணயிக்கப்போவதை அறியவில்லை

 

“தனிமையில் துணைவரும்

யோசனை.

நினைவினில் மணக்குது

உன் வாசனை.

எல்லாமே ஒன்றாக மாறுதே

மனந்திட சேவல் கூவுதே”

 

 

உண்மையை அறிந்தாள் அவள் நொருங்குவதோடு மட்டுமின்றி அவளது மனமும் சேர்ந்து நொருங்குவது உறுதியாகும் பட்சத்தில்  அவள் காதல் கைசேருமா அல்லாது கானல் நீராய் கரையுமா!!

 

வீணை மீட்டும்….

 

 

வீணை5

 

வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த  சரவணன் அன்று மாலை தான் தன் குடியிருப்புக்கு வந்தான்…. வந்த அசதியில் தன்னை சுத்தப்படுத்துக் கொண்டு படுக்கையில் விழ அவனது அலைபேசி அலறியது அதனை எடுத்துப் பார்த்தவன் மிகுந்த கோபத்தோடு ஆன் செய்து காதில் வைத்து “உனக்கு சொல்லியும் புரிய வச்சாட்சி செயலிலும் புரிய வச்சாட்சி…. இன்னும் ஏண்டி வெட்கமே இல்லாம நாய் மாதிரி பின்னாடி சுத்துற” அவன் வசவை எல்லாம் எப்போதும் போல் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தாள் தாரிகா வர்ஷா மற்றும் சாதிக்கின் இளைய மகள்…

 

“நான் செவ்வந்தியே விரும்புறேன் அவளைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்… திரும்ப திரும்ப நீ கேட்டாலும் இதுதான் என்னோட ஒரே பதில்…. உனக்கு வெட்கமாவே இல்லையாடி” தன் கோபத்தை அடக்கியவன் “சா… சாரி தாரிகா என் பொறுமைய மென்மேலும் சோதிக்காத” தாரிகாவும் சரவணனும் பிணையப்பட்டது நட்பாக இருந்தாலும்  சரவணனின் பொறுமையான குணம், அவனின் ஏழ்மை எல்லாம் தாரிகாவை  நாளடைவில் காதலாக மாற்றியது

 

தாரிகாவின் ஒரு தலைக் காதல் அவளை நாளுக்கு நாள் இம்சிக்க செய்தது இருந்தும் சரவணன்  மனதில் என்றும் நல்ல நட்பு மட்டுமே அதை தாண்டி வேறெந்த தவறான எண்ணமில்லாது இருந்தான்…

 

தாரிகா சரவணனிடம் தனிமையில் ஒருநாள் காதலை யாசிக்க அதை மறுத்தவன் அவளிடம் “ தாரா… நீ சின்ன பொண்ணுயில்ல உனக்கு நான் அட்வைஸ் பண்றதுக்கு சரியா ….. இட் ஜூஸ்ட் இன்பிராச்சுவேஷன் அந்த வயசுல வரதுதான்… இனிமேட்டு இந்த பைத்தியம் மாதிரி தத்துபித்துன்னு ஒளராம போய் படிக்குற வேலைய பாரு” அவளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்க மீண்டும் அவன் பொறுமையை சோதிக்கும் பொருட்டு ஒரு சம்பவம் நடக்க சரவணனின் இன்னோரு முகத்தை தாரிகா சந்திக்க நேர்ந்தாள்..

 

அவர்கள் படிக்கும் கல்லூரி முழுவதும் தாரிகா சரவணனை காதலிப்பதாக செய்தி காட்டுத் தீயாய் பரவ பொறுமையாக இருந்தவனையே மிருகமாக மாற்றியிருந்தாள் தாரிகா…

 

கல்லூரியில் சக மாணவர்கள் இருக்கும் போது அவளது கையை தரதரவென்று இழுத்து வந்தவன் கல்லூரியின் நட்டநடுவில் நிறுத்தி அனைவரும் பார்க்குமாறு அவள் கன்னத்தில் ஓங்கி  இடியென தன் அறையை இறக்கி இருந்தான் சரவணன்… அவளோ நிலை தடுமாறி தள்ளாடிப்படியே கிழே விழுந்தாள்

 

“ ஏய் சீ  உன்ன தொடக்கூட எனக்கு கூசுது… நான் நான் உன்ன காதல் டார்ச்சர் கொடுக்குறேனா… உன் பின்னாடி நான் அலையுறனா இல்ல நீ அலையுறுயாடி… ஹ்ம்ம் பதில் சொல்லு டி

 

நான் எப்பையாவது  உன்கிட்ட காதலிக்குறதா சொலிற்கனா சொல்லுடி” அவன் அவளைப் பார்த்து உரும்ப அவளோ பயத்தில் இன்னும் அவன் அடித்த ஆடியே நினைவில் நிற்க அவன் அறைந்த கன்னத்தை தாங்கி பிடித்தபடியே தன் அதிர்ச்சியில் அப்படியே  இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்…

 

தான் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து பதில் வரவேயில்லை எனத் தெரிய அவன் கோபம் பன்மடங்காக பெருகியது “ ஏய் வாய திறந்து பதில் சொல்லுடி” அவனது கோபத்தை முதல் முறையாய் உணர்ந்து அவனின் இந்த புதிய முகம் அவளை அச்சுறுத்தியது அவன் அதட்டலில்  வேகமாக இல்லையென்று தலையாட்டியளுக்கு கண்கள் நீர் குளம் போல் காட்சியளிக்க அவளை ஏறிட்டு பார்த்தவன் கடைசியாக அவளை எச்சரித்து விட்டு செல்ல தன் விளையாட்டின் வீரியத்தை அந்த நொடி உணர்ந்தாள் தாரிகா…

 

இந்த விஷ்யமாறிந்த வீட்டினர் அனைவரும் அனைவரும் சரவணன் மேல் தப்பில்லாத காரணத்தால் தாரிகாவை மட்டுமே கண்டிக்க முடிந்தது அனைவராலும்… அதன் பிறகு அமைதியாக இருந்தவள் அவனை மௌனமாக காதலித்தால்…

 

அந்த நாளின் நினைவு அவள் நெஞ்சில் நீங்கா படமாக ஒட்டிக்கொண்டு இருந்தாலும் சரவணனின் மேல் தீரா காதல் தன் உயிர் உள்ளவரை மாறாது என்பது எத்தனை நிச்சயமோ அதேப் போல் இந்த எட்டு வருடத்தில் தன்னை அவன் ஏற்றுக்கொள்ள வில்லை என்பதும் நிதர்சனம் இனியும் அதற்கு ஆசைப்படுவது அற்பமாக எண்ணினால்….

 

வெறுப்பது யாராகினும் காதலிப்பது நாமாகட்டும்!!!

 

“ஒரு நிமிஷம் நான் சொல்றது கேளுங்க உங்… உங்க நல்லத்துக்குத்தான் நான் இப்போ உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன் மத்தப்படி என் மனசுல எந்த தப்பான எண்ணமுமில்ல ஒரு வாரமா உங்க போனுக்கு ட்ரை பண்ணேன் பட் அவுட் ஆஃ ஸ்டேஷன் வந்துச்சு இப்பதான் லைன் கெடச்சிது” நட்பை கோச்ச படுத்தியவளிடம் பேச அவனுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை போலும்…. நட்புக்குள் காதலை திணித்தவளை அவனால் மன்னிக்க முடியாமல் போனது…

 

“ ஹாஹா நல்ல காமெடி நீ எனக்கு நல்லது பண்றியா… நான் இத நம்பனும் நீ எனக்கு பண்ண நல்லது போதும்… மேலும் பேசி வாங்கி கட்டிக்காம போன வையு நான் உன்கிட்ட சொன்னதுதான் செவ்வந்தியதான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் இந்த ஜென்மத்தில் அவதான் யென் மனைவி….எவ்ளோ தல போற விஷயமா இருந்தாலும் பரவாயில்லை   ரொம்ப நன்றி உங்க நல்ல உள்ளத்திற்கு” என்றவன் அவளிடமிருந்து எந்த பதில் எதிர்பாராது அழைப்பை துண்டித்து இருந்தான்

 

மனம் வெறுத்து அவனுக்கு  என்ன பெண் இவள் எவ்ளோ கூறினாலும் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறாளே…

 

தான் என்ன பேச வருகிறோம் என்றுக்கூட காதுக் கொடுக்காமல் அழைப்பை துண்டிக்க அவள் மனம் என்றும் போல் ஊமையாய் அழுதது ஒரு நிமிடம் கூடவா என்னிடம்  பேச அவருக்கு மனதில்லை அவள் கண்களில் கண்ணீர் கூட வற்றி விட்டது இதனை வருடத்தில் அவனிடம் மாறாத தன்மை உதாசீனம் , மரியாதை இல்லாத பேச்சு அவளுக்கு என்றும் போல் பரிசாக கிடைத்தது …

 

 

அவள் அவனிடம்  மீண்டும் காதலை யாசிக்கவென்று அழைக்க வில்லை… மறுநாள் செவ்வந்தியின் திருமண விஷியத்தை கூறுவதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் அவள் அவனை அழைத்தது வாட்ஸப், குறுந்செய்தி என்று அனைத்திலும் அவளை தடுத்தியிருந்தான் எந்த வகையிலும் அவனை அவள் அணுகாமலிருக்க…

 

தன் காதல்  கைசேர முடியாமல் போனதுக்கூட கவலைக் கொள்ளாமல் அவனது காதலை காப்பற்றத்தான் கடைசி வரை தாரிகாபோராட… இதை யாவும் அறியாத அறிவிலியாகிப் போனான் அவன்…

 

விதியின் கணக்கை யாரால் மாற்ற முடியும்!!!

 

 

வீணை மீட்டும்

 

 

 

 

 

 

 
Comments are closed here.

error: Content is protected !!