Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

kanal 1

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 1

அத்தியாயம் – 1

பிரபல திரை நட்சத்திரங்களும், தொழிலதிபர்களும் வசிக்கும் மும்பை ஜூஹூ பகுதியில், வானளவு உயர்ந்து நின்றது ‘சில்வர் பீட்ச் அப்பார்ட்மெண்ட்ஸ்’. அதை சுற்றிலும், சீராக பராமரிக்கப்பட்ட புல்வெளி பச்சைபசேலென்று படர்ந்திருந்தது. பூந்தோட்டமும் நீச்சல் குளமும் ஒருபக்கம் ஒதுங்கியிருக்க, சிறியவர் மற்றும் பெரியவர்களுக்காக தனித்தனியே அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டுப் பகுதி மறுபுறம் அமைந்திருந்தது. செயற்கை நீரூற்று நடுவில் வீற்றிருக்க, சோடியம் விளக்குகள் அங்கங்கே ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அழகுக்கோ வசதிக்கோ குறையவேதும் இல்லா அந்த குடியிருப்பின், முதல் தளத்தில் உள்ள இரண்டாவது வீட்டின் உணவுக்கூடத்தில் கூடியிருந்தது நரேந்திரமூர்த்தியின் குடும்பம்.

சென்னையிலிருந்து மும்பைக்கு புலம்பெயர்ந்து, உழைத்து தொழிலதிபராக உயர்ந்துக் கொடிநாட்டிய நரேந்திரமூர்த்தி, உணவுமேஜையை சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகளில் நடுநயமாக அமர்ந்திருந்தார். மேஜையின் வலதுபுறம் அவருடைய மூத்த மகன் துருவனும் அவனுடைய மூன்று வயது மகள் ஆதிராவும் மனைவி மாயாவும் அமர்ந்திருந்தார்கள். இடதுபுறம், அந்த குடும்பத்தின் தலைவி பிரபாவதி அவளுடைய மகள் மதுரா மற்றும் இளைய மகன் திலீப் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள்.

பரிமாறப்பட்டிருந்த உணவில் ஒருவருடைய கவனமும் இல்லை. கீழே குனிந்தபடி கையிலிருக்கும் ஸ்பூனால் உணவை அளந்து கொண்டிருக்கும் திலீப்பின் முகத்திலேயே அனைவருடைய பார்வையும் நிலைத்திருந்தது. ஓரிரு நிமிட சிந்தனைக்குப் பிறகு நிமிர்ந்து தந்தையின் பார்வையை சந்தித்த திலீப், “சாரி டாட்” என்றான். அவர் முகத்தில் சிறு அதிர்வு தெரிந்தது.

“ஏம்ப்பா…? பாரதி நல்ல பொண்ணுதானே!” என்றார் மகனை ஆழ்ந்துபார்த்து..

“இருக்கலாம், ஆனா என்னோட எதிர்பார்ப்புக்கு பொருந்துற பொண்ணு இல்ல” -தோள்களை குலுக்கிவிட்டு உணவில் கவனமானான். மாயாவின் விழிகள் அவனை எரித்தன.

“உன்னோட முடிவுல மதுராவோட வாழ்க்கையையும் சம்மந்தப்பட்டிருக்குப்பா” – நரேந்திரமூர்த்தி.

“டாட், இது பிசினஸ் டீல் இல்ல. ‘திஸ் ஃபார் தட்’ னு சொல்றதுக்கு. லைஃப்…!!! தேவ்ராஜ்க்கு உண்மையாவே மதுரா மேல விருப்பம் இருந்தா, எந்த கண்டிஷன்ஸும் போடாமலேயே அவளை கல்யாணம் பண்ணிக்குவார்” – உறுதியாகக் கூறினான்.

“நடக்காத காரியம்…” – நிராசையுடன் கூறினார்.

“அப்போ விட்டுடுங்க. மதுரா நம்ம வீட்டு இளவரசி. அவளுக்கு தகுந்த இளவரசனை என்னால கொண்டுவர முடியும்” என்றான். நரேந்திரமூர்த்தியின் முகம் சுருங்கியது. மகனுடைய பேச்சில் அவருக்கு உடன்பாடில்லை என்பதை அது தெளிவாகக் காட்டியது.

“தேவ் ஒரு பிசினஸ் டைக்கூன்! ஜாம்பவான்! அவனை மாதிரி ஒரு மாப்பிள்ளையை உன்னால மதுராவுக்கு கொண்டுவர முடியுமா?” என்றார்.

திலீப் மௌனமானான். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. நரேந்திரமூர்த்தி மனைவியைப் பார்த்தார். நெற்றிப்பொட்டில் இருக்கும் பழைய தழும்பை நீவியபடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் அவள்.

“நீ என்ன நினைக்கிற பிரபா?” – கணவனின் இடையீட்டால் சிந்தனையிலிருந்து மீண்டவள் மகளை பார்த்தாள். அவளிடம் எந்த சலனமும் இல்லை. தனக்கும் அங்கு நடக்கும் பேச்சுவார்த்தைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் உணவில் கவனமாக இருந்தாள் மதுரா.

“பிசினஸ் வேற வாழ்க்கை வேற. சதோஷமான வாழ்க்கைக்கு பணம் மட்டும் இருந்தா போதாது” – பிரபாவதியின் மெல்லிய குரல் நரேந்திரமூர்த்தியை எரிச்சல்படுத்தியது.

“ஆனா, தேவ்கிட்ட என்ன இல்ல? ஏன் மதுரா சந்தோஷமா இருக்க மாட்டா?” – கணவனை குழப்பத்துடன் பார்த்தாள் பிரபாவதி. ‘இவருக்கு உண்மையாகவே புரியவில்லையா…. அல்லது புரியாதது போல் நடிக்கிறாரா!’

“தேவ்ராஜ்கிட்ட எல்லாம் இருக்கலாம். ஆனா கண்டிஷன் போட்டு கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு எம்பொண்ணு ஒண்ணும் ‘சீப்’பா போயிடல. அவளும் ஒரு மல்ட்டி மில்லீனியரோட பொண்ணுதான்” – கர்வத்துடன் கூடிய கோபம் தெரிந்தது அவள் குரலில்.

நரேந்திரமூர்த்தி எதுவும் பேசவில்லை. பலம் பொருந்திய தேவ்ராஜை இழக்க அவர் விரும்பவில்லை. தன்னுடைய சமூகத்தில்… பிசினஸ் வட்டாரத்தில் அவனை, தங்கை மகன் என்று சொல்வதைவிட தன் மருமகன் என்று சொல்லவே விரும்பினார்.

“தேவ்வோட நோக்கத்துல எந்த தப்பும் இருக்கறதா எனக்குத் தோணல. திலீப்புக்கு தன்னோட தங்கச்சியை கொடுக்கத்தான் அவன் விரும்பறான். ஹி இஸ் எ ஜெம்” – பெருமைப்பட்டவரின் குரலில், திலீப் மனம் மாறவேண்டும் என்கிற ஆசை தெரிந்தது.

“நோ டாட்… ஹி இஸ் டூயிங் மனி லாண்டரிங்… ஷேர் மார்க்கெட் ஃபிஷ்ஷிங்…! சின்னதை விட்டு பெருசை பிடிக்கிறவரு. அவரோட நோக்கத்தை யாராலயும் கெஸ் பண்ண முடியாது” – அவன் ஒரு மோசடிக்காரன், அவனுடைய பணமும் அதிகாரமும் குறுக்கு வழியில் சம்பாதிக்கப்பட்டது. அவனை நம்ப கூடாது என்பதை பட்டென்று போட்டு உடைத்தான் திலீப். விருட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்தாள் மாயா.

“ஹௌ டேர் யு டாக் அபௌட் மை பிரதர் லைக் தட்!” – என்னுடைய அண்ணனை பற்றி பேசுவதற்கு உனக்கு எவ்வளவு தைரியம் என்று ஆவேசப்பட்டவளின் உடல் கோபத்தில் நடுங்கியது.

“மாயா!!!” – மனைவியின் கையைப் பிடித்தான் துருவன்.

“போதும்…” என்று கூறி அவனுடைய கையை உதறியவள் அங்கிருந்த அனைவரின் மீதும் பார்வையை ஓட்டினாள். யாரும் எதுவும் பேசவில்லை. அனைவரும் அதிர்ச்சியிலிருந்தார்கள்.

“கிரேட்! இவனை கண்டிக்க இங்க யாருமே இல்ல…” என்று கூறி சற்று நிறுத்தியவள் பிறகு, “தேவ் பாய் பண்ணறது மனி லாண்டரிங் இல்ல. இன்வெர்ஸ்ட்மென்ட்… ஃபைனான்சிங்… எங்க எவ்வளவு இன்வெர்ஸ்ட் பண்ணனும் யாருக்கு எவ்வளவு ஃபைனான்ஸ் பண்ணனும்னு தெரிஞ்சு பண்ணறாங்க… ஜெயிக்கிறாங்க. உனக்கு விருப்பம்னா பாரதியை கல்யாணம் பண்ணிக்கோ. இல்லன்னா முடியாதுன்னு சொல்லிட்டு போ. தேவையில்லாம பேசாத” என்று திலீப்பை கடுமையாக எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

திலீப் சங்கடத்துடன் துருவனை பார்க்க அவனோ, ‘என்னடா இது!’ என்பது போல் அவனைப் பார்த்தான்.

“ஐம் சாரி டாட்…” என்று முணுமுணுத்த துருவனுக்கு உணவு உள்ளே செல்ல மறுத்தது. பெற்றோர்முன் தன் உணர்வுகளை முயன்று மறைத்துக் கொண்டவன், தனியறையில் மனைவியிடம் சீறினான்.

“பெரியவங்க முன்னாடி இப்படித்தான் நடந்துப்பியா? அவ்வளவு ரூடா எழுந்து வர்ற? எல்லாரும் என்ன நினைப்பாங்க?” – அதீத கோபத்துடன் கைவிரல் நகங்களைக் கடித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்த மாயா சட்டென்று நிமிர்ந்து கணவனை முறைத்தாள்.

“அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்ல. என்னோட அண்ணனை பற்றி பேசும் போது, நா என்ன நெனப்பேன்னு உங்க தம்பி யோசிச்சானா? அவன் என்ன பெரிய ஹீரோவா! இடியட்…” – பல்கலைக் கடித்தாள்.

“ஜஸ்ட் ஷட் அப் மாயா…”

“முடியாது. நா ஏன் வாய மூடனும்? அவன் என் தங்கச்சியை வேண்டான்னு சொல்றான். என் அண்ணனை தப்பா பேசுறான். எவ்வளவு திமிர் அவனுக்கு!”

“அவன் தேவ் பற்றி பேசினது தப்புதான். ஆனா பாரதியை வேண்டாம்னு சொல்றதுக்கு அவனுக்கு உரிமை இருக்கு. அதை ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்கிற?”

“எனக்கு எல்லாம் புரியாது. உங்களுக்குத்தான் ஒரு விஷயம் புரியல. தேவ் பாய், பாரதியை உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணிட்டார். உங்க தம்பி வேண்டான்னு சொன்னா மட்டும் இந்த கல்யாணம் நடக்காம போயிடுமா!” – ஏளனமாகக் கேட்டாள்.

“மை காட்! கல்யாண விஷயத்துல யாரையும் கட்டாயப்படுத்த முடியாது மாயா! ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்”

“ஓகே! பார்க்கலாம்… இந்த விஷயம் எந்த அளவுக்கு போகுதுன்னு நானும் பார்க்கறேன். தேவ் பாய்-யா இல்ல திலீப்பா! ம்ம்ம்… இன்னொரு விஷயம்… உங்க பிசினஸ்ல தேவ் பாய், செவண்டி பர்சன்ட் ஷேர் ஹோல்டர். கம்பனியை டேக் ஓவர் பண்ணிட்டா அடுத்து என்ன செய்றதுன்னு யோசிச்சு வச்சுக்கோங்க. பின்னாடி உதவும்”

“மெரட்டுறியா?”

“பயப்படறேன்… உங்களோட சேர்ந்து கஷ்ட்டப்பட போறது நானும்தானே!” என்று கூறி கணவனை சிந்தனையில் ஆழ்த்திவிட்டு, கைபேசியுடன் பால்கனிக்கு வந்தாள்.

“சொல்லு மாயா” – எதிர்முனையிலிருந்து ஒலித்தது அவள் தாய் இராஜேஸ்வரியின் குரல்.

“மா… பாரதிக்கிட்ட சொல்லி அவ மனச மாத்திக்க சொல்லுங்க. இந்த திலீப்பெல்லாம் ஒரு ஆளா! தேவையில்லாம அவனுக்கு வெயிட் கொடுத்துட்டா…”

“என்ன ஆச்சு?”

“அவனுக்கு நம்ம பாரதியை பிடிக்கலையாம்… தேவ் பாய் மோசடிக்காரனாம்! மதுராவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கணுமாம். ரொம்ப ஓவரா பேசறான். இங்க யாருமே அவனை கண்டிக்கல. சொல்லப்போனா… அவன் சொல்றதுதான் சரிங்கற மாதிரி அமைதியா இருக்காங்க…”

“அண்ணன் என்ன சொன்னாரு?”

“எதுவுமே சொல்லல”

“மதுரா?”

“அவ என்ன சொல்லுவா? தேவ் பாய் மேல அவளுக்கு எந்த அபிப்பிராயமும் இல்ல. ஷி வாஸ் கூல்”

“ரியலி?”

“எஸ்…”

“ஓகே. நா அண்ணன்கிட்ட பேசிக்கறேன்”

“மா ப்ளீஸ்… பாரதிகிட்ட பேசுங்க… தேவ் பாய்கிட்ட சொல்லுங்க… திலீப் ஒண்ணும் பெரிய கொம்பன் இல்ல. நாம எதுக்காகம்மா அவன் பின்னாடி போகணும். ஜஸ்ட் லீவ் ஹிம்… தேவையில்லாம எதுக்கு அவமானப்படணும்” – படபடத்தாள்.

“மாயா… நா உன்னோட அம்மா. உனக்காக எதையும் செய்வேன். அதே மாதிரிதான் பாரதிக்கும். புரியுதா?” – கண்டிப்புடன் கூறினாள்.

“ஆனா மா…” – ஏதோ சொல்லவரும் மகளை இடைவெட்டி, “மாயா… நீ அமைதியா இரு. இந்த பிரச்சனையை நா பார்த்துக்கறேன்” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் இராஜேஸ்வரி.

– தொடரும்
19 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  chitra ravi says:

  super epi aarambame anal parakuthey.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  thiru says:

  Nice

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  julee says:

  hi mam

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Hi Julee… Welcome to Sahaptham… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha khaliq says:

  Hi Nithya….welcome back….we missed you….
  Nalla aarambam….dilip ku Bharathi ya kalyanam panna istham illai pin yen avanai varpurthanum….Dev ivanga kalyanathai business maadhiri dealing pesran….parpom yaar jeykiranganu…..Dilip or Dev?

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  ராஜேஸ்வரி என்ன செய்யப்போகின்றார்,இரண்டு திருமணம் அதுவும் சம்மந்தப்பட்ட வர்களுக்கு அதில் அவ்வளவு ஈடுபாடு இல்லைபோல,இதனால் மாயா துருவன் இருவரும் தங்கள் வாழ்க்கையை சிக்கலாக்கிகொள்ளப்போகின்றனர்,திருமணப்பேச்சு ஆரம்பித்ததிற்கே இங்கே இவர்களுக்குள் சண்டை,இரு குடும்பமும் பணபலம் வாய்ந்த குடும்பமாக தெரிகின்றது ,பார்ப்போம் யார் கை ஓங்குகின்றது என்று.

  நன்றி

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya Karthigan says:

   நன்றி தோழி… எதார்த்தம் குறையாமல், விறுவிறுப்பாக கதையை கொண்டுசெல்ல முயன்றிருக்கிறேன். இன்னும் கதாப்பாத்திரங்கள் வரவிருக்கின்றன. பிறகு கதையின் முழுவடிவம் கிடைக்கும். விறுவிறுப்பைவிட உணர்வு போராட்டங்கள் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். படித்து பார்த்துவிட்டு கூறுங்கள்.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  INDIRA SELVAM says:

  Great start nithya…. happy to see ur novel after a long time

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya Karthigan says:

   Thank you Indira… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya says:

  Supera eruku update.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya Karthigan says:

   Thank you Priya… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  pons says:

  அதிரடி ஆரம்பம்.
  இந்திக்கும் தமிழுக்கும் சண்டை …யார் வெற்றி பெறுவார்கள்

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   INDIRA SELVAM says:

   ரெண்டு பேருக்குமே sis

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya Karthigan says:

   ஹாய் அக்கா… ஹிந்திக்கும் தமிழுக்கும் சண்டையா! இது என்னக்கா புது கதை! தேவ் தமிழன்தான்… 😀

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  SUPER UD SIS

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya Karthigan says:

   நன்றி சகோதரி… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  சுதா ரவி says:

  சூப்பர் ஆரம்பமே அதிரடியாக இருக்கு நித்யா….தேவை சந்திக்க ஆவலாக இருக்கிறோம்..மாயா தேவ் பற்றி கொடுக்கும் பில்ட் அப் பார்த்தால் செம terror ஆக இருப்பான் போல இருக்கு….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya Karthigan says:

   நன்றி சுதா. தேவ் அடுத்த அத்தியாயத்தில் வருவான்… ரகளை செய்வான்…. 😀

error: Content is protected !!