Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kanalvizhi kaadhal 34

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 2

அத்தியாயம் – 2

“துஷ்மன்” – ஆறடி வளர்ந்த ஆஜானுபாகுவான மனிதன்… கையில் உயர்த்திப் பிடித்த வாள்… கண்களில் வெறி… அடர்ந்த தாடிக்கும் மீசைக்கும் இடையே வெடிக்கும் வெற்றிச் சிரிப்பு… ஆஷிஷ் ஷர்மாவின் உருவத்தில் அற்புதமாய் பொருந்தியிருந்தான் அந்த அசுரன். ‘துஷ்மன் கம்மிங் சூன்…’ என்கிற டிஜிட்டல் ஃபிளஸ்களும் வால் போஸ்ட்டர்களும் மும்பை மாநகரின் மூலைமுடுக்கெல்லாம் ஆக்கிரமித்திருந்தன.

 

மிகப்பெரும் பொருட்செலவில் அந்த பிரம்மாண்டமான வரலாற்றுப் படம் தயாராகி ஆறு மாதங்களாகிவிட்டன. இன்னும் வெளியிட முடியவில்லை. ஒவ்வொரு பிரச்சனையாக சமாளித்து இதோ, இந்த வாரத்தில் வெளியிட்டுவிடலாம் என்று எண்ணி ஊரெங்கும் விளம்பரமும் கொடுத்தாகிவிட்டது. ஆனால் திரையரங்கம் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் அலுவலகத்தில் கூடியிருந்தது படக்குழு.

 

“அபி க்யா மஸ்லா ஹை சாப்?” – ‘இப்ப என்ன பிரச்சனை சார்?’ அலுப்புடன் கேட்டான் படத்தின் நாயகன் ஆஷிஷ் ஷர்மா.

 

“ஒண்ணுமே புரியல. நானும் சார் கூட சேர்ந்து பத்து படத்துல ஒர்க் பண்ணியிருக்கேன். இந்த படத்துக்குத்தான் இவ்வளவு பிரச்சனை வருது” அசோசியேட் டைரக்டர் வருத்தத்துடன் கூறினான்.

 

“நா வாழ்க்கை முழுக்க சம்பாதிச்சதை இந்த படத்தை நம்பித்தான் போட்டிருக்கேன். என்னைய எப்படியாவது காப்பாத்திவிடுங்க சார்…” – கலங்கினார் கோ புரடியூசர்.

 

அடுத்தடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்லிக் கொண்டிருந்தார்கள். எதற்குமே பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த இயக்குனர் அரவிந்த் குப்தா, இறுதியாக தயாரிப்பாளர் சிவமாறனை பார்த்துக் கேட்டார்.

 

“உங்க பையனோட காண்டாக்ட் நம்பர் சொல்லுங்க”

 

“………………” – சிவமாறன் சிந்தனையிலிருந்து மீளவில்லை.

 

“இந்த படத்துல ஐயாயிரம் பேர் ஒர்க் பண்ணியிருக்கோம் சார். இதோ… இந்த ஆஷிஷ், ரெண்டு வருஷமா வேற எந்த படத்துலயும் கமிட் ஆகாம மீசையும் தாடியுமா சுத்திகிட்டு இருந்தான். இவரு… பொன்னாட்டி பிள்ளைங்க நகையைக் கூட வித்து இந்த படத்துல போட்ருக்காரு. இவன்… துஷ்மனோட டயலாக்ஸை தூக்கத்துலக் கூட புலம்பிகிட்டு இருந்திருக்கான். அஞ்சு வருஷமா, ராத்திரியும் பகலும் தூங்காம இந்த படத்துக்காக உழைச்சிருக்கேன் சார். இந்த படம் எங்களோட அடையாளம்…! கனவு…! ஏன் சார் சொல்லல…? உங்க பையன்தான் இதுக்கெல்லாம் காரணம்னு ஏன் மறைச்சீங்க?” – உணர்ச்சிவசப்பட்டு படபடத்தான் அரவிந்த் குப்தா. அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் சிவமாறனை பார்த்தார்கள்.

 

“குப்தா… புரொடக்ஷன்ல செவன்ட்டி பர்சன்ட் நா இன்வர்ஸ்ட் பண்ணியிருக்கேன். படம் ரிலீஸ் ஆகலைன்னா எனக்கும் பெரிய அடித்தான். எழுந்திருக்கவே முடியாது. ப்ளீஸ் கிவ் மீ ஸம் டைம். ஐ கேன் ஹாண்டில் இட்” – சங்கடத்துடன் கூறினார்.

 

“இந்த பிரச்னையை உங்களைவிட பெட்டரா என்னால ஹாண்டில் பண்ண முடியும். நீங்க உங்க பையனோட காண்டாக்ட் நம்பர் மட்டும் கொடுங்க” – அழுத்தமாகக் கூறினான் குப்தா.

 

சிவமாறன் வேறு வழியின்றி தன்னுடைய கைபேசியிலேயே நம்பர் டயல் செய்து குப்தாவிடம் நீட்டினார். அதை வாங்கி ஸ்பீக்கரில் போட்டு மேஜையின் மீது வைத்தான். ரிங் சொன்றுக் கொண்டே இருந்தது. கடைசி தருணத்தில் அழைப்பு ஏற்கப்பட்டது. ஆனால் யாரும் பேசவில்லை.

 

“ஹலோ…” – குப்தா குரல் கொடுத்தான். மறுமுனையில் எந்த எதிரொலியும் இல்லை.

 

“நீ யாரு… எதுக்காக இதெல்லாம் பண்ணற… உன்னோட நோக்கம் என்ன… எதை பற்றியும் எனக்கு கவலை இல்ல. இது என்னோட படம். என்னோட அஞ்சு வருஷ உழைப்பு. இருவது வருஷ கனவு. என்னோட வாழ்க்கை முழுக்க இந்த ஒரு படக் கனவோடையே வாழ்ந்திருக்கேன். நீ என்னோட வழியில குறுக்கிடற. விலகிப் போயிடு. இல்ல… நா சினிமாக்காரன். மீடியா அட்டேன்ஷன் இருக்கு. அசிங்கப்படுத்திடுவேன்…” – குப்தாவின் கடுமையான குரல் அறையெங்கும் எதிரொலித்தது. அனைவரும் பதிலுக்காக காத்திருந்தார்கள். குண்டூசி விழுந்தால் கூட கேட்டும் அளவிற்கு அறை அமைதியாய் இருந்தது. நொடிகள் கழிந்துக் கொண்டிருந்தன.

 

“குட் லக்…” – காரிருளில் பாய்ந்த மின்னல் போல கனத்திருந்த அமைதியை கிழித்தெறிந்து அந்த குரல். குப்தாவின் நம்பிக்கை நிலைகுலைந்து போனது. அவர் நம்ப முடியாமல் சிவமாறனைப் பார்த்தார்.

 

“அவன் என்ன நடிகனா… இல்ல உங்க அசிஸ்டென்ட்டா! சத்தமா பேசியதும் பயப்படறதுக்கு! தேவ்ராஜ்! மேரா பேட்டா! மை சன்! ஐ கேன் ஹாண்டில் ஹிம். ஐ ஒன்லி கேன்…” – பெருமையாக மார்தட்டிக் கொண்டார்.

 

“என்னால நம்ப முடியல. அவர் உங்களை ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டுருக்கார். உங்களோட சேர்ந்து நாங்களும் அவஸ்த்தை படறோம். ஆனா நீங்க! உங்க பையனை நெனச்சு பெருமை படறீங்க. வாட்ஸ் ராங் வித் யு மிஸ்டர் சிவமாறன்? ப்ளீஸ் மேக் மை ரூட் கிளீயர்” என்றார் ஆற்றாமையுடன்.

 

“ஒரு வாரத்துக்குள்ள படம் ரிலீஸ் ஆகுது. அதுக்கு நா பொறுப்பு” என்று உறுதிக்கு கொடுத்து அனைவரையும் அனுப்பியவர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார். கருப்பு நிற ஜாகுவார் ரெடியாக இருந்தது. ட்ரைவர், பின் இருக்கையின் கதவை திறந்துவிட, உள்ளே ஏறி அமர்ந்தார் சிவமாறன்.

 

“ஆப்கோ கஹான் ஜானா ஹை சாப்?” எங்கே போக வேண்டும் என்று கேட்டான்.

 

“பாலி ஹில்…”

 

“சாப்?” – சற்று தயக்கத்துடன் வெளிப்பட்டது டிரைவரின் குரல்.

 

“சொன்னதை செய்” – இந்தியில் சிடுசிடுத்தார்.

 

“ஜி சாப்…”

 

நவீன கட்டிடங்களும், பழம்பெருமை வாய்ந்த பங்களாக்களும், மாளிகைகளும் நிறைந்த ‘பாலி ஹில்’ பகுதியில் நுழைந்தது சிவமாறனின் ஜாகுவார். அது ஒரு மாலை நேரம்… ஜாகிங் மற்றும் சைக்ளிங் செல்லும் பல பாலிவுட் பிரபலங்களை சாதாரணமாக சாலையோரங்களில் காண முடிந்தது. அவர்களிடமெல்லாம் தன்னுடைய கவனத்தை சிதறவிடாமல் சரியான பாதையில் வண்டியை செலுத்தி, அந்த பெரிய கேட்டிற்கு முன் வந்து நிறுத்தினான் ட்ரைவர்.

 

செக்யூரிட்டி தன்னுடைய அறையிலிருந்து எட்டிப் பார்த்தான். பரிச்சயமான அந்த காரை அடையாளம் கண்டுகொண்டவன் கதவைத் திறக்க தயங்கினான்.

 

“ஓபன் தி கேட் மேன்…” – அதட்டினார். அவருடைய ஆளுமையான குரல் அவனை அடிபணிய செய்தது. மறு பேச்சின்றி கேட்டை திறந்துவிட்டான். கார் உள்ளே வழுக்கிக் கொண்டுச் சென்றது. அருமையாக பராமரிக்கப்பட்டிருக்கும் புல்வெளியும் தோட்டமும் அவர் மனதை தொட்டது.

 

அந்த பிரம்மாண்டமான மாளிகைக்கு முன் வந்து நின்றது கார். ட்ரைவர் தன் இருக்கையிலிருந்து இறங்கி அவருக்கு கதவை திறந்துவிட்டான். கீழே இறங்கியவர் மாளிகையின் வாயிலில் நிற்கும் துவாரபாலகர்களை கவனித்தார். எத்தனை பேர் வந்தாலும் சமாளிப்போம் என்று உறக்கக் கூறும் கட்டுமஸ்தான தேகம், அவர்கள் நன்கு பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் என்பதைக் காட்டியது. அவர்கள் அணிந்திருந்த கருப்பு நிற சஃபாரி, இறுக்கமான அவர்களுடைய முகத்திற்கு வெகுவாய் ஒத்துப் போனது. அதுவரை உயிரற்ற சிலை போல் நின்றுக் கொண்டிருந்தவர்கள் அவர் அருகில் வந்ததும் தடுத்தார்கள்.

 

“சாரி சார்… உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது” – தெளிவான இந்தியில் ஒருவன் மட்டும் பேசினான்.

 

“வாட்!” – ஒரு நொடி அதிர்ந்தவர் மறுகணமே, “உனக்கு எவ்வளவு தைரியம்!” என்று சீறினார்.

 

“அப்கோ இஸ்ஸே ஆகே செல்னே கே லியே இஜாசத் நஹி ஹை. க்ரிப்பயா வாபஸ் ஜாயியே…” – ‘நாங்கள், உங்களை தடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். அதனால் இங்கிருந்து செல்லுங்கள்’

 

“யார்? யார் உன்னோட இன்ஸ்ட்ரெக்டர்? தேவ்ராஜ்? அவன் யாரு தெரியுமா? ஹி ஐஸ் மை சன். மேரா பேட்டா! யு அண்டர்ஸ்டாண்ட்? என்னை உள்ள போக விடு…” கடுங்கோபத்துடன் கத்தினார்.

 

“சாரி சார்” – அவருடைய கோபமோ கத்தலோ எதுவும் அவர்களை பாதிக்கவில்லை. வெகு சாதாரணமாக அவரை எதிர்கொண்டார்கள்.

 

“உன்ன மீறி நா உள்ள போனா என்ன மேன் பண்ணுவ? உன்னால என்ன பண்ண முடியும்? ஷூட் பண்ணுவியா? காமன்… ஷூட் மீ…” – மல்லுக்கு நின்றார். சத்தம் மாளிகைக்குள்ளேயும் எதிரொலித்தது. “கார்ட்ஸ்… என்ன சத்தம்?” என்றபடி வெளியே வந்த இராஜேஸ்வரி கணவனைக் கண்டதும் திகைத்தாள். உணர்வுகள் உள்ளே போராடின. கட்டுப்படுத்திக் கொண்டு இறுகி போய் நின்றாள். முகம் சிவந்தது… கைவிரல் நகங்கள் உள்ளங்கையில் ஆழப்பதிந்தன.

 

“மேம்… நாங்க எங்க கடமையை செய்யறோம்” – இயந்திரம் போல் சொன்னான் பாதுகாவலன்.

 

“அவருக்கு வழி விடுங்க” – கட்டளையிட்டாள் இராஜேஸ்வரி. மறுகணமே இருவரும் விலகி நின்றார்கள்.

 

உச்சத்திலிருந்த சிவமாறனின் கோபம் மனைவியைக் கண்டதும் சல்லென்று வடிந்தது. செல்லப்பிராணி போல் இராஜேஸ்வரியைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.

 

முறையாக பராமரிக்கப்படும் இத்தாலியன் மார்பில் பளபளத்தது. முரானோ கிளாஸினால் செய்யப்பட்ட சாண்டிலியர் விளக்கின் ரம்யமான ஒளியும், இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஃபாபியோ லெதர் சோபாவின் அழகும், சுவரை அலங்கரிக்கும் அனிஷ் கபூர் மற்றும் ரவீந்தர் ரெட்டியின் அசல் ஓவியங்களும் அந்த வீட்டின் செழிப்பை பறைசாற்றின.

 

சிவமாறனின் உள்ளம் பெருமிதத்தில் பொங்கியது. ‘மேரா பேட்டா…! மை சன்..!!’ – கர்வத்துடன் வந்து சோபாவில் அமர்ந்தார். மாடிப்படியில் அரவரம் கேட்டது. திரும்பிப் பார்த்தார். பாரதி! அமைதியாக வந்து தாயோடு சேர்ந்து நின்றுகொண்டாள்.

 

‘மை ஸ்வீட் லிட்டில் ஹனி!’ – அவர் உள்ளம் கனிந்தது. கண்கள் கலங்கின.

 

“கம்…” – மகளை தன்னிடம் அழைத்தார்.

 

“இட்ஸ் ஓகே” – அவள் வர மறுத்தாள். ஆனால் அவளுடைய தந்தை பாசம் கண்களில் தெரிந்தது.

 

“எப்படி இருக்க கண்ணா?” – அன்போடு கேட்டார்.

 

“குட்” – ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு தலைகுனிந்துக் கொண்டாள் மகள்.

 

மனைவியிடம் சகஜமாக பேச முடியாமல் சற்று தடுமாறியவர், “ம்ம்ம்… தேவ்… எங்க?” என்றார் தயக்கத்துடன்.

 

“தேவ் ஆஃபீசிலேருந்து வர்ற நேரம். என்ன விஷயம்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்ப சொல்லு பாரதி” – வெடுவெடுத்தாள்.

 

“ராஜீ… நா உன்கிட்ட பேசணும்” – தன்னுடைய பெயரை அவர் உச்சரித்ததும், கோபமா வேதனையா என்று இனம்காணமுடியாத உணர்வு அவள் உள்ளத்தைத் தாக்க, கண்களை இருக்க மூடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

அவளுடைய போராட்டத்தை அவர் கவனித்தார். “ஐம் சாரி… ரியலி சாரி…”

 

சட்டென்று அவர் கண்களை நேரடியாக சந்தித்தவளின் பார்வை அவரை எரித்தது. “பாரதி… வந்த விஷயத்தை மட்டும் சொல்ல சொல்லு” – அவள் குரலில் கடுமை கூடியிருந்தது.

 

‘சரி’ என்பது போல் தலையசைத்துவிட்டு சற்று நேரம் அமைதியாக இருந்தவர், பிறகு வாய் திறந்தார். “தேவ்ராஜ்! – இந்த பேருக்கு, இந்த ஊர்ல…. இல்ல இல்ல… இந்த ஸ்டேட்ல என்ன மதிப்புன்னு தெரியுமா உனக்கு? எனக்கு தெரியும். இப்போ கொஞ்ச நாளாதான் பார்க்கறேன். எவ்வளவு பெரிய ஆளுங்கள்லாம் அவனுக்காக வேலை பார்க்கறாங்க! எவ்வளவு பவர்! செல்வாக்கு! பெருமையா இருக்கு… மனசு அப்டியே பூரிக்குது! எம்பையன்… எம்பையன்னு கத்தனும் போல இருக்கு!” – உணர்ச்சிவசத்தில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.

 

“எம் படத்தை ஹோல்டு பண்ணி வச்சிருக்கான்! நம்ப முடியுதா உன்னால? ஒருநாள் ரெண்டுநாள் இல்ல… ஆறு மாசமா ஹோல்டு பண்ணி வச்சிருக்கான். ஒவ்வொரு ஸ்டேஜிலேயும்… ஒவ்வொரு கௌன்ஸில்லேயும்… எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் புடிச்சுப் போட்டுட்டான்”

 

“ஐம்பது வருஷமா ஃபீல்டுல இருக்கேன். ஒரு பயலும் அசைக்க முடியாது. ஆனா… மை சன்…! தேவ்ராஜ்…! ஹி மேட் இட்… நா எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமா உனக்கு? யாராலயும் யூகிக்க முடியாது. அவ்வளவு சந்தோஷம்… இதுவரைக்கும் அறுபது கோடி லாஸ்… மேரா பேட்டா… மை சன்… ஹி மேட் மீ லாஸ். ஐம் ஹாப்பி அபௌட் இட்”

 

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் இராஜேஸ்வரி. தேவ் இவ்வளவையும் செய்தானா! ஆனால் ஏன்? எதற்காக? எல்லாம் முடிந்துபோன பிறகு இனி எதை சாதிக்கப் போகிறான்! – வேதனைப்பட்டாள்.

 

“யு நோ வாட்! நா இங்க என் பையனை பார்க்கத்தான் வந்தேன். அவன்கிட்ட நா பெருமையா சொல்லணும். என்னை நீ ஜெயிச்சுட்டேன்னு சொல்லணும். உன்கிட்ட நா தோத்துட்டேன்னு சொல்லணும். இனி என்னால சண்டை போட முடியாதுன்னு சொல்லணும்… என்னோட தோல்வியை நான் என் மகன்கிட்ட பகிரங்கமகா சொல்லணும்” – அவர் குரலிலிருந்த பெருமிதம் அவருடைய கண்ணீரை ஆனந்த கண்ணீர் என்று பறைசாற்றியது.

 

வெளியே அந்த சத்தம் கேட்டது… மெர்சிடிஸ் பென்ஸ்… பாதுகாப்பிற்கு உகந்த கார்… தேவ்ராஜின் கார்…! ராஜேஸ்வரியின் முகம் வெளிறியது. பாரதி அச்சத்துடன் தாயின் கையைப் பிடித்தாள். சிவமாறனின் பார்வை ஆர்வத்துடன் வாயிலை நோக்கியது.

 

ஆறடி உருவம், அகண்ட தோள்கள், அடர்ந்த மீசை, அழகாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி, இறுகிய தாடை, விடைத்த நேர்நாசி எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய கண்களை நேருக்கு நேர் சந்திக்கும் உக்கிர பார்வை… ‘துஷ்மன்!!!’ – அவர் உள்ளம் உறக்கக் கூவியது. மனதில் சிறு பயம் தோன்றியது.

 

கையில் வாள் மட்டும்தான் குறை… அதுவும் இருந்திருந்தால், அவர் தயாரித்த படத்தின் நாயகன்… மாவீரன்… வெறிபிடித்த போர்வீரன்… துஷ்மனேதான் இவன்…! அப்போதும் கூட மகனின் பெருமையை எண்ணி அவர் மனம் பூரிக்கத்தான் செய்தது.

 

இறுகிய முகத்தோடு அவரிடம் நெருங்கினான் தேவ்ராஜ். அவர் கண்களில் பதித்த பார்வையை விலக்காமல், கைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்து, “உள்ள வா” என்றான் அதிகாரமாக. அவன் யாரை அழைத்தான் என்பது அடுத்த சில நிமிடங்களிலேயே, கேட்டிலிருந்த செக்யூரிட்டி “சார்…” என்றபடி அவன் எதிரில் வந்து நின்ற போது தெரிந்தது.

 

“ஐடியை கழட்டி வச்சுட்டு வெளியே போ” – இறுகியகுரலில் கூறினான்.

 

“சார்!” – அவனுக்குப் புரியவில்லை.

 

“கெட்… அவுட்…” – குரலை உயர்த்தாமல் அழுத்தமாகக் கூறினான்.

 

“சார் நா…” – “யு ஜஸ்ட் கெட் அவுட் ஃப்ரம் ஹியர்… யூஸ்லெஸ் டாமிட்…” – வீடே அதிரும்படி கத்தினான். மிரண்டு போன செக்யூரிட்டி அடையாள அட்டையை கழட்டிவைத்துவிட்டு ஓடியேவிட்டான். வேலைக்காரர்களெல்லாம் எட்டியெட்டிப் பார்த்தார்கள். சிவமாறன் அவமானத்தில் குன்றிப்போனார்.

 

கத்தியது செக்யூரிட்டியிடம் என்றாலும் அவனுடைய பார்வை அவர் மீதுதானே இருந்தது. அவன் கக்கிய ஒவ்வொரு வார்த்தையும் தனக்கானதுதான் என்பதை புரிந்துக் கொண்ட சிவமாறனின் மனம் வலித்தது.

 

‘மேரா பேட்டா…!’ – தடித்த இதழ்கள் மென்மையாய் முணுமுணுத்தன. சீருடை அணிந்த பாதுகாவலன் அவரை கையை பிடித்து வெளியே அழைத்துச் சென்றான். உள்ளே வரும் பொழுது அவனிடம் சீரியவர் இப்போது மறு பேச்சின்றி அமைதியாக வெளியேறினார்.

 

“அவர் உன்னோட அப்பா!” – நடுங்கும் குரலில் கூறினாள் இராஜேஸ்வரி. அலைபாய்ந்தது அவள் மனம்.

 

“இது என்னோட வீடு” – எச்சரித்தான் தேவ்ராஜ்.

 
11 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Yazhvenba says:

  Hmm en guess sarina… he might have illegal relationship …


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha khaliq says:

  Dev appa shivamaran sariyana komaliya irukaru my son my beta nu…..avarai kazhuthai pidichi thalladha kuraya thurathuran appavum my son my son nu….avar appadi enna seidhar Dev ku yedhuku avar mael appadi oru kobam?


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  சிவமாறனுக்கு அவரது குடும்பத்தாருடன் அவ்வளவு சுமூகமான உறவு இல்லைப்போல ,எதனால் அவர் தனித்து இருக்கின்றார்,மகனே தந்தையின் தொழிலை சரிவடைய செய்ய முயறசிக்கின்றார்,தகப்பனை தன் வீட்டிற்குள் உள் நுழைய அனுமதித்த வாயில் காப்பாளரின் வேலையை பிடுங்கும் அளவிற்கு அப்படி என்ன கோப வெறி தேவராஜிற்கு.

  நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி தோழி… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  WOW SEMAAAAAAA UD SIS


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி தோழி…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  pons says:

  வில்லன் ..அப்ப துருவன் கதி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி அக்கா…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  pons says:

  வந்துட்டேன்


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   வாங்க வாங்க… 🙂

error: Content is protected !!