Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

கனல்விழி காதல்-56

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 3

அத்தியாயம் – 3

மஹாராஷ்டிராவில் இயங்கும் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜூம் டிவியின் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தது இராஜேஸ்வரியின் சில்வர் நிற ஆடி. காரிலிருந்து அவள் இறங்கியதும் வாயில் காவலன் வணக்கம் வைத்து அவளை மரியாதையுடன் விலகி நின்றான்.

 

“வெல்கம் மேம். சார் உங்களை கெஸ்ட் ரூம்ல வெயிட் பண்ண சொன்னாங்க. ஃபைவ் மினிட்ஸ்ல வந்து பார்ப்பாங்க” – ரிசப்ஷனில் இருந்த பதுமை பெண், அவளை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்று அமரவைத்து, அருந்துவதற்கு பழச்சாறும் கொடுத்து உபசரித்தாள்.

 

அவள் சொன்னது போலவே சரியாக ஐந்து நிமிடங்கள் கழிவதற்குள் அங்கே வந்து சேர்ந்தார் நரேந்திரமூர்த்தி.

 

“வெல்கம் ராஜி”

 

“மார்னிங் அண்ணா…” – இருவரும் முகம்கொள்ளா புன்னகையுடன் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்.

 

“சாரி… கொஞ்சம் லேட் ஆயிடிச்சு. நீ வர்றதுக்குள்ள மீட்டிங் முடிச்சுடலாம்னு நெனச்சேன். முடியில” என்றபடி தங்கைக்கு எதிரில் வந்து அமர்ந்தார்.

 

“சொல்லும்மா. என்ன விஷயம்? ஆபீஸ் வரைக்கும் வந்திருக்க!”

 

“உங்களுக்கு தெரிஞ்ச விஷயம்தான். பாரதி அவசரப்படறா. திலீப் என்ன சொல்றான்?” – தங்கை பேச வந்த விஷயம் இதுவாகத்தான் இருக்கும் என்கிற ஊகம் இருந்தாலும், அதை அவள் வாய்வழிக் கேட்ட போது நரேந்திரமூர்த்தியின் முகம் சுருங்கியது.

 

“ஐம் சாரி ராஜி. ஹி மேட் ஹிஸ் பாயிண்ட் வெரி க்ளீயர். பாரதிக்கு நானே ஒரு நல்ல வரனா பார்க்கறேன்” என்றார்.

 

சற்றுநேரம் இராஜேஸ்வரி எதுவுமே பேசவில்லை. பிறகு, “அவ திலீப்பை விரும்பறா அண்ணா” என்றாள்.

 

“அவன் விரும்பலையே ராஜி”

 

“என்னால எப்படி அவளை சமாதானப்படுத்த முடியும்?”

 

“பாரதி சின்ன குழந்தை இல்ல ராஜி. அவ புரிஞ்சுப்பா”

 

“நீங்க திலீப் மனச மாத்த முயற்சி பண்ணியிருக்கலாமே”

 

“நா செஞ்சிருக்க மாட்டேன்னு நீ நெனக்கிரியா?”

 

“இல்ல… அப்படி இல்ல… ஆனா…”

 

“மாயாவுக்கு முன்னாடி நடந்த பேச்சுவார்த்தை மட்டும்தான் உனக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா திலீப்பை தனியா கூப்பிட்டு நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் ராஜி. பட் ஹி இஸ் வெரி அட்மென்ட். ஐம் சாரி…” – வருத்தத்துடன் கூறினார்.

 

இராஜேஸ்வரி மீண்டும் மௌனமானாள். பிறகு, “பாரதி கல்யாணம் திலீப் கூட நடக்கலைன்னா மதுரா-தேவ் கல்யாணத்தையும் மறந்துட்டு வேண்டியதுதான் அண்ணா” என்று மெல்ல கூறினாள்.

 

“மறந்துடணும்னு நீ விரும்புரியா ராஜி?” – சட்டென்று நிமிர்ந்து அண்ணனின் பார்வையை சந்தித்தவள், “கண்டிப்பா இல்ல” என்றாள்.

 

“அப்போ தேவ்கிட்ட பேசு”

 

“தேவ்கிட்ட… நானா! நா எப்படி..!” – தயங்கினாள்.

 

“நீ மட்டும்தான் அவன்கிட்ட பேச முடியும் ராஜி” – அவள் சிந்தித்தாள். அவனுடைய மனதை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை துளியும் வரவில்லை. ஆனாலும் முயன்று பார்க்கலாம் என்று எண்ணினாள்.

 

*******************

 

‘இதை எப்படி அவளிடம் சொல்வது. அவள் மனம் என்ன பாடுபட போகிறதோ!’ – கனத்த மனதோடு மகளை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் இராஜேஸ்வரி.

 

“மா… என்ன ஆச்சு? டல்லா இருக்கீங்க?” – தன்னைப் பற்றிய கவலைதான் அவளை கொன்று கொண்டிருக்கிறது என்பதை அறியாமல், தாயிடம் வந்து அமர்ந்தாள் மகள்.

 

“தூங்கலையா?”

 

“தண்ணி எடுக்க வந்தேன். உங்க ரூம்ல லைட் எரிஞ்சது. அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றாள்.

 

“சரி… போயி படு” – மகளுக்கு அன்றைய இரவு தூக்கம் கெட்டுவிடக் கூடாதே என்கிற அக்கரையில் பேச்சை தள்ளிப் போட நினைத்தாள். ஆனால் பாரதியின் ஆர்வம் விடவில்லை.

 

“ம்ம்ம்… மா…. இன்னிக்கு அங்கிள் ஆபீஸ்கு போனீங்கள்ல?” என்றாள் நைசாக. இராஜேஸ்வரிக்கு தூக்கிவாரிப் போட்டது.

 

“ஆமாம்… அதுக்கு என்ன?” என்றாள் சிடுசிடுப்புடன்.

 

“இல்ல… ஒண்ணும் இல்ல…” என்று அரைகுறை மனதோடு எழுந்தவள், சட்டென்று மீண்டும் தாயிடம் அமர்ந்து, “என்னம்மா சொன்னாங்க?” என்றாள் கட்டுப்படுத்த முடியாத ஆசையுடன்.

 

சற்றுநேரம் மகளை கூர்ந்து நோக்கினாள் தாய். எவ்வளவு ஆசை! எவ்வளவு எதிர்பார்ப்பு! அனைத்தும் நொறுங்கிச் சிதரப்போகிறதே! நேரம் கடக்கக்கடக்க அவளுடைய ஆசையும் நம்பிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் செல்லும். உண்மையை உடைத்துப் பேசிவிட வேண்டும். அதையும் இப்போதே பேசிவிட வேண்டும். ஒரே நொடியில் முடிவெடுத்தாள்.

 

“பாரதி… திலீப் இஸ் நாட் ஃபார் யு” என்றாள். அதிர்ந்து போய் அன்னையின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் மகள்.

 

“சூழ்நிலையை நீ புரிஞ்சுக்கணும். நிர்பந்தப்படுத்தி அமைச்சுக்கற எந்த உறவும் நிலைக்காது” என்றாள்.

 

பாரதியின் கண்களில் கண்ணீர் கசிந்தது. “திலீப்புக்கு என்னைய பிடிக்கலையாம்மா?” என்றாள். மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்தாள் தாய்.

 

“நா… நா… ஏம்மா…? அழகா இல்லையா?” – நொருங்கிப் போய்விட்ட மகளின் நிலையை காண சகிக்காமல் அவளை தன்னோடு சேர்ந்து அனைத்துக் கொண்டாள் தாய்.

 

“இப்படிலாம் யோசிக்கக் கூடாது. அவனோட விருப்பம்… குறிக்கோள் எல்லாம் வேற மாதிரி இருக்கு. தனிச்சு நிக்கனும்னு நினைக்கறான். இருந்துட்டுப் போகட்டும். நீ ஏன் உன்ன குறைச்சு மதிப்பிடற?” – மகளுக்கு தைரியம் கொடுக்க முயன்றாள். ஆனால் அவளுடைய பேச்சு எதுவும் பாரதியின் செவியில் ஏறவே இல்லை. அவளுக்குள் ஒரே கேள்விதான் ஒலித்துக் கொண்டே இருந்தது. – ‘நம்மள ஏன் பிடிக்கல!’

 

************************

 

அன்று ஞாயிற்றுக் கிழமை. தேவ்ராஜ் வீட்டில் இருக்கும் நாள். தன்னுடைய படுக்கையறையோடு கூடிய அட்டாச்ட் டெரஸில் போடப்பட்டிருக்கும் வெண்ணிற மெரிடியன் லெதர் கோச்சில் கால்களை நீட்டி வசதியாக சாய்ந்து அமர்ந்திருந்தவனின் மடியில், மடிக்கணினி இருந்தது. எப்போதாவது உதவும் என்று எண்ணி அவ்வப்போது சில மந்தமான கம்பெனிகளில் தன்னுடைய ஷார்ஸை இன்வெஸ்ட் பண்ணி வைப்பது அவனுடைய வழக்கம். பெரிய முதலீட்டாளர்களின் முதலீடு கொடுக்கும் நம்பிக்கை ஷார்ஸின் டிமாண்டை அதிகரிக்கச் செய்து, மதிப்பை ஏற்றிவிடும். சரியான நேரத்தில் விற்றுவிட்டு வெளியேறிவிட்டால் கொழுத்த லாபம் பார்க்கலாம். போட்டு வைத்திருக்கும் தூண்டிலை சரியான நேரத்தில் தூக்க வேண்டும் அவ்வளவுதான். இதோ… இப்போது கூட அப்படி ஒரு வேலையில்தான் இறங்கியிருந்தான். ஷார்ஸின் மதிப்பு ஏறி கொண்டே இருந்தது… அவனுடைய கவனம் முழுவதும் கணினியிலேயே இருந்தது.

 

“பிஸியாப்பா” – அருகில் வந்து நிற்கும் தாய் குரல் கொடுக்கும் வரை அவன் கவனிக்கவில்லை.

 

“ம்ம்ம்… பிஸிதான்… பட் நீங்க சொல்லுங்கமா”

 

“பேசணும்ப்பா”

 

“ம்ம்ம்… பேசுங்க”

 

“உன்கிட்ட…”

 

“ஐம் லிசனிங்…” – கணினியிலிருந்து பார்வையை விளக்காத மகனை பார்த்து பெருமூச்சு விட்டபடி அங்கே கிடந்த சேர் ஒன்றில் அமர்ந்தாள் இராஜேஸ்வரி.

 

“வாட்ஸ் த மேட்டர்?”

 

“பாரதிக்கு கல்யாணம் பண்ணணும்ப்பா”

 

“ஓகே… பண்ணிடலாம்…”

 

“அதுக்கு முதல்ல மாப்பிள்ளை பார்க்கணும்”

 

“ஏன்…? திலீப்புக்கு என்ன ஆச்சு?”

 

“அவனுக்கு பிடிக்கல”

 

“என்ன பிடிக்கல?”

 

“உன் தங்கச்சியை பிடிக்கல”

 

“ரியலி?” – கணினியை மூடிவிட்டு தாயின் பக்கம் திரும்பினான். முகம் மகிழ்ச்சியாக இருந்தது. செய்து கொண்டிருந்த வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்பதை ஊகித்துக் கொண்டாள் தாய். வேலையில் கெட்டிக்காரன்தான். ஆனால் வாழ்க்கையில்?

 

“நா பாரதிகிட்ட எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லிட்டேன். அவ ரொம்ப மனசொடஞ்சுப் போயிருக்கா. உடனே அவளுக்கு ஒரு நல்ல வரனா பார்த்து கல்யாணம் பண்ணிடனும். இல்லன்னா அவளோட மனக்காயம் அவளை கொஞ்சக் கொஞ்சமா கொன்னுடும்பா” என்றாள்.

 

“இந்த பிரச்னைக்கு இவ்வளவு டென்ஷன் தேவையில்லம்மா. ஐ வில் ஹாண்டில் இட்” என்றான் இலகுவாக. இதை தன்னம்பிக்கை என்பதா… தன்னகங்காரம் என்பதா!

 
9 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dhivya bharathi says:

  Super


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha khaliq says:

  Nice ud…..pidikatha oruvamai ezhuthu vaika ninaikiranga annanumbthangaiyum..,..mudiyuma avangalala


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  தேவ் என,ன செய்யப்போகின்றார்,பாரதியின் மனம் புரிகின்றது,அதே நேரம் திலிப்பையும் பாரதி புரிந்துகொள்ளவேண்டும்,ராஜேஸ்வரி பாரதியிடம் உண்மையை கூறியது நல்லதுதான் ஆனால் தேவிடம் கூறி விட்டார்,பெத்த தகப்பனுக்கே இந்த நிலையெனில் திலீப்பின் நிலை,தன் மாமன் குடும்பத்திற்கு பணத்தை வைத்து அல்லது பங்குகளை வைத்து அல்லது மதுரைவந்த வைத்து ஏதாவது அவர்களின் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுத்தப்போகின்றாரா,அப்படி செய்து அவர்களைஅடிபணிய வைக்கப்போகின்றாரா.

  நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி தோழி…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  சுதா ரவி says:

  சுத்தம்! பாரதியும் புரிஞ்சுக்கல இவனும் புரிஞ்சுக்கல…விரும்பாத ஒன்றை விரும்ப வைக்க முடியாதென்று…வாழ்வே நாசமாகிடும்…ஆனால் தேவ் ஷேர்ஸ்ல விளையாடுகிற மாதிரி வாழ்க்கையில் விளையாட போறானா?..சூப்பர்..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி தோழி…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pons says:

  தேவ் வின் உடனடி ஏற்பு…திலீபனுக்கு நல்லதா…..கெடுதலா…அவங்கப்பா விசயம் வைத்து…பயமிருந்தது…அது வீணா…ஆவலுடன்


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி அக்கா…