Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல்

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 8

அத்தியாயம் – 8

வழக்கமான காபிஷாப்தான்… ரிச் அண்ட் ரொமான்டிக்… இழையும் இசை… மிளிரும் ஒளி… மயக்கும் நறுமணம்… இவை அனைத்தையும் தாண்டி அவன் கவனத்தை ஈர்த்தது கார்னர் டேபிளில் அமர்ந்திருந்த அவள் முகம். சந்தன மஞ்சள் நிறத்தில் பளபளக்கும் நீள்வட்ட முகம், கருவண்டு விழிகள், செதுக்கி வைத்த நேர் நாசி, செக்க சிவந்த இதழ்கள், முத்துப்புன்னகை, ஒற்றைக் கன்னக்குழி, தோளில் துவண்டு விழும் கற்றைக் கூந்தல்… அழகி! – அவன் பார்வை அவள் முகத்திலிருந்து அகலவில்லை. மாயாவிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்த மதுரா, உள்ளே குறுகுறுக்க வாயில் பக்கம் பார்வையை வீசினாள். உடனே அவள் முகத்தில் சிரிப்பின் சாயல் மடிந்தது. அதையும் விடாமல் கவனித்தபடி அவர்களிடம் நெருங்கினான் தேவராஜ்.

 

“மா..ம்மி…” – அன்னையைக் கண்டதும் ஆனந்த கூச்சலிட்டபடி அவளிடம் தாவியது குழந்தை.

 

“ஹே… குட்டிமா… வந்துட்டீங்களா! வாங்க வாங்க” – குழந்தையை அள்ளி அனைத்துக் கொண்டபடி, “தேங்க்ஸ் தேவ் பாய்…” என்றாள். அவன் பதில் சொல்லாமல் முறைத்தான். அதை கண்டுகொள்ளாமல், “உட்காருங்க பாய்… ஏதாவது சாப்பிடலாம்” என்று அவனை உபசரித்துவிட்டு, “குட்டிமா நீங்க என்ன சாப்பிடறீங்க?” என்றாள் குழந்தையிடம்.

 

“எனக்கு… வந்து… அது… வந்து..” – மிகவும் யோசித்தது.

 

“சரி வா… நாம போயி கௌண்டர்ல பார்க்கலாம்…” என்று குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து நழுவினாள். மதுராவின் முகம் வெளிறியது. தன்னை இக்கட்டில் தள்ளிவிட்டு, விலகிச் செல்லும் மாயாவின் முதுகை தவிப்புடன் பார்த்தாள். தேவ்ராஜ் அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தான். அந்த மேஜை முழுவதையும்… இல்லையில்லை… அந்த காபி ஷாப் முழுவதையும் அவனே ஆக்கிரமித்துவிட்டது போல் தோன்றியது அவளுக்கு. அவனுக்கு எதிரில் தன்னை ஒரு துரும்பாக உணர்ந்தாள். அவனுடைய பார்வை அவளை துளைத்தது. அவளுக்கு கூசியது. விரல்களை பிசைந்தாள்… உதட்டைக் கடித்தாள்… நெற்றியில் சரிந்து விழும் முடியை அடிக்கடி காதோரம் ஒதுக்கிவிட்டுக் கொண்டாள்… அவனை தவிர்த்து, பார்வையை வேறு எங்கெங்கோ வீசினாள். அவளுடைய பதட்டம் அப்பட்டமாய் தெரிந்தது.

 

“டென்ஷனா இருக்கியா?” – கண்கள் அவளை ஆழ துளைத்தது.

 

“நோ…” – இயல்பாகக் காட்டிக்கொள்ள முயன்றாள். “என்னை பார்த்து பயப்படற. ரைட்?” என்றான்.

 

“இ…இ…இல்லையே!” – சற்று தடுமாறினாலும் குரலில் உறுதியைக் கூட்டி மறுத்தாள்.

 

“ரியலி?” – போலியாக ஆச்சரியப்பட்டான்.

 

“ம்ம்ம்…” – தலையை ஆட்டினாள்.

 

“குட்…” – பாராட்டினான். இந்த கண்கள்.. இந்த பார்வை.. ஏன் இப்படி பார்க்கிறான்! கடவுளே! கண்ணாடி கோப்பையில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்தாள். பதட்டம் குறையுமா! குறைய வேண்டும். ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றாள்.

 

“வாண்ட் மோர்?” – இன்னும் கொஞ்சம் தண்ணீர் வேண்டுமா? – நக்கலாக கேட்கிறானா! ஒன்றும் புரியாமல் ஓரிருநொடிகள் விழித்தவள், “நோ… தேங்க்ஸ்…” என்றாள் மெல்ல.

 

“ம்ம்ம்ம்…” என்றபடி அவளை ஆழ்ந்துப் பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான். மதுராவிற்கு சங்கடமாக இருந்தது. அவனையும் அவனுடைய பார்வையையும் எதிர்கொள்ள முடியாமல், மாயாவை கண்களால் தேடினாள்.

 

“நா உன்ன சாப்பிட போறதில்ல… காம் டௌன்…” – வைத்த கண் வாங்காமல் அவள் முகத்திலேயே பார்வையை பதித்திருந்தவனின் குரல் கரகாரத்தது. அவன் பார்வையில் வித்தியாசமிருந்தது. ஏதோ வில்லன் போல… வில்லங்கமாக…

 

அதிர்ந்து போய் அவனை பார்த்த மதுரா, சிறு தடுமாற்றத்திற்குப் பிறகு, “எ…என்ன! புரியல…” என்றாள் பதட்டத்துடன்.

 

“ஹும்ம்ம்… புரியல… குட்…” என்று பெருமூச்சுடன் தோரணையாக சாய்ந்து அமர்ந்தவன், “புரியிற மாதிரியே விளக்கமா சொல்லிடலாம்…” என்று அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு, பிறகு, “லுக்… மிஸ்… ம்ம்ம்…. வாட்ஸ் யுவர் நேம்?” என்று கண்களை மூடி யோசிப்பது போன்ற பாவனையுடன் கேட்டான்.

 

“மதுரா…” – தன்னுடைய பெயரை எப்படி அவனால் மறக்க முடியும்! சொந்த அத்தை மகள்… அதோடு தங்கையின் நாத்தனாரும் கூட… நடிக்கிறானா! என்றெல்லாம் எண்ணத்தோன்றாமல் அனிச்சையாக பெயரைச் சொன்னாள் அந்த பாவை.

 

“ஹாங்… மதூ…ரா…” என்று அவள் பெயரை இழுத்து ராகம் போட்டவன், “பாரு மதுரா… நீ நினைக்கிற மாதிரி, எனக்கு உன் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல… ஓகே? யு ஆர் ஜஸ்ட் ரியாக்டிங் டூ மச்… ரிலாக்ஸ்…” – மீசைமறைவில் ஒளிந்திருக்கும் கபட சிரிப்புடன் மெல்லக் கூறினான்.

 

‘எனக்கு உன்மேல எந்த ஈடுபாடும் இல்ல. நீ ஓவரா பண்ணிக்காத’ என்று போட்டு உடைத்தவனை முகத்தில் அடி வாங்கியது போல் அதிர்ந்து பார்த்தாள் மதுரா.

 

அவள் மீது அவனுக்கு ஈடுபாடா! அவள் எப்போது அப்படியெல்லாம் நினைத்தாள். இதை உடனே மறுக்க வேண்டுமே! – அவசரப்படுத்திய மூளை வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொடுக்க மறந்துவிட்டது. “நோ… ஐம்… ஐம் நாட்…” – தட்டுத் தடுமாறினாள்.

 

“இட்ஸ் ஓகே… காம் டௌன்… ரிலாக்ஸ்… தண்ணி குடிக்கறீயா?”

 

“நோ… நோ தேங்க்ஸ்… ஆனா… நா… உங்களை பற்றி எதுவும்… எதுவும் யோசிக்கவே இல்ல… நீங்க தப்பா… ஐம் சாரி…” – குழப்பியடித்தாள்.

 

“ரியலி?” – நம்பகமில்லாமல் பார்த்தான்.

 

அந்த பார்வை அவளை ஏளனப்படுத்தியது. எள்ளி நகையாடியது. அவள் காயப்பட்டாள். அவளுடைய முகமாற்றத்தை அவன் நன்கு கவனித்தான். முகம் சுருங்கி கண்களில் நீர் கோடிட்டது. மூக்கு நுனி சிவந்தது. உதடுகள் துடித்தன. கோபம்… அவமானம்… ஆஹா…! – அவன் மனம் திருப்தியடைந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அவனும் இப்படித்தானே அவமானப்பட்டான்.

 

‘வாசல்வரை வந்துவிட்டு, வேலைக்காரியையா அனுப்புகிறாய்!’ – வாங்கிய அடியை இருமடங்கு பலமாக திருப்பிக் கொடுக்காவிட்டால் எப்படி! இன்று நிம்மதியாக உறங்கலாம்! – அவளுடைய வலியை பரமானந்தமாக அனுபவித்தவன், “ஓகே… என்ஜாய் யுவர் காபி… ஹேவ் கிரேட் ஈவினிங்…” என்று புன்னகையுடன் வாழ்த்திவிட்டு கிளம்பினான். திகைப்புடன், செய்து வைத்த சிலைபோல் அமர்ந்திருந்தாள் மதுரா.

 

****************

 

“பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சிவமாறனின் தயாரிப்பில், ஆஷிஷ் ஷர்மாவின் நடிப்பில் இயக்குனர் அரவிந்த் குப்தா இயக்கிய, துஷ்மன் திரைப்பட வெளியீட்டில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்துக்கொண்டே வருகின்றன. ஆறு மாதத்திற்கு முன்பே படப்பிடிப்பு மற்றும் டெக்கினிக்கல் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், திரைப்படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறது படக்குழு. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்குமான கருத்து வேறுபாடே, இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் மூலக்காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது இதில் மூன்றாம் நபர் ஒருவரின் தலையீடும் இருப்பதாக கூறுகிறார் இயக்குனர் அரவிந்த் குப்தா. யார் அந்த மூன்றாம் நபர்? – இன்று இரவு எழு மணிக்கு நேர்முகம் நிகழ்ச்சியில் மனம் திறக்கிறார் இயக்குனர் அரவிந்த் குப்தா… காணத்தவறாதீர்கள்” – பின்னணி இசையோடு கணீரென்று ஒலித்தத்து, பிரபல தொலைகாட்சி தொகுப்பாளரின் குரல்.

 

“என்ன இது? ஏன் இதை ஸ்டாப் பண்ணல?” – எரிச்சலுடன் டிவியை அணைத்துவிட்டு ரகீமை பார்த்தான்.

 

“சார்… சலீம் சார் கண்டுக்காம விட்டுட சொல்லி இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருக்கார்”

 

“வாட்! ஆனா ஏன்? கால் பண்ணு அவருக்கு”

 

சலீம், தேவ்ராஜின் கேபினெட்டில் உள்ள வழக்கறிஞர்களின் முக்கியமானவன். தேவ்ராஜின் தொழில் சார்ந்த அனைத்து முடிவுகளிலும் முக்கிய பங்கு வகிப்பவன். சமயத்தில் தேவ்ராஜின் சார்பாக எடுக்கப்படும் முடிவுகளை தன்னிச்சையாகவும் எடுப்பான். அந்த அதிகாரத்தை தேவ்ராஜே அவனுக்கு வழங்கியிருந்தான். சலீமின் நுணுக்கமான அறிவின் மீதும், விசுவாசத்தின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு அது.

 

“சார்…” – போனை நீட்டினான் ரஹீம்.

 

“என்ன போயிட்டு இருக்கு சலீம். ஏன் நீ இதை நிறுத்தாம வேடிக்கை பார்த்துட்டு இருக்க?”

 

“அவன் கத்தட்டும் ஜி… அப்போதான் அவனை இன்னும் ஸ்ட்ராங்கா பிரச்சனைக்குள்ள இழுக்க முடியும்”

 

“நோ… அவனுக்கு பிரச்சனை கொடுக்கறது என்னோட நோக்கம் இல்ல. ஜஸ்ட் ஸ்டாப் ஹிம் ரைட் நௌ”

 

“ஜி… நா என்ன சொல்றேன்னா…”

 

“லிசன் சலீம். அவன் என்னோட ஃபேமிலி பிரச்சனையைப் பற்றி எதுவும் பேசிடக் கூடாது. அதை நான் விரும்பல. புரிஞ்சுதா?”

 

“ஜி…”

 

“அவனோட பேட்டி டெலிகாஸ்ட் ஆகக் கூடாது. டேக் கேர் ஆஃப் இட்…” என்று திட்டவட்டமாகக் கூறினான். கொடுத்த வேலையை சிந்தாமல் சிதறாமல் செய்துமுடிக்கும் வல்லமைப் படைத்த சலீம், தேவ்ராஜின் விருப்பம் நிறைவேற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தான்.

 
7 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  SUPERRRRRRR UD


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Ugina… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  எனக்கு உன் மேல் எந்த ஈடுபாடும் இல்ல ஆனால் அதெல்லாம் நடந்திடுமோ என்று சொல்வாரென்று பார்த்தால்,
  உன்மேல் ஆர்வமில்லை என்று சொல்லி வெறுப்பேற்றுகின்றார் தேவ்ராஜ் தனக்குள் இருக்கும் ஆர்வத்தை காட்டிக்கொள்ளத்தயாராயில்லை, சகோதரங்கள் இருவருக்கும்(மாயா தேவ்ராஜ்) ஒரே குணம்போல மற்றவர் சந்தோசமாய் இருந்தால் பிடிக்காது போல.

  நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   //உன் மேல எந்த ஈடுபாடும் இல்ல… ஆனா அதெல்லாம் நடந்திடுமோன்னு பயமா இருக்கு// – அலைபாயுதே டயலாக்…! 😀 அதெல்லாம் பிரின்ஸ் சார்ம் டைப் ஹீரோ பேசற டயலாக் தட்சயாணி… 🙂 இவன் வேற லெவல் இல்ல… அதான்… டயலாக் மாறிப்போச்சு… 😉

   நன்றி தோழி…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pons says:

  தூண்டில் வீசுறானே..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி அக்கா…

error: Content is protected !!