Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 21

அத்தியாயம் – 21

வீட்டில் கல்யாணக் கலை கட்டிவிட்டது. தன் செல்ல மகளின் திருமணத்தை ஊரே மெச்சும் அளவிற்கு நடத்த வேண்டும் என்று விரும்பிய நரேந்திரமூர்த்தி, மும்பையிலேயே மிகச்சிறந்த ஈவண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை தேர்வு செய்து அவர்களிடம் முழு பொறுப்பையும் ஒப்படைத்தார். பத்திரிகை அடிப்பதிலிருந்து, கேட்டரிங், மேடை அலங்காரம், மண்டப அலங்காரம், இசை குழு, மங்கள வாத்திய குழு என்று சகலமும் அவர்களுடைய பொறுப்பின் கீழ் வந்துவிட்டது. தங்களுக்கு எப்படிப்பட்ட ‘தீம்’ வேண்டும் என்று சொல்வது மட்டும்தான் இவர்களுடைய வேலை. அவர்களுடைய விருப்பத்தை அச்சு பிசகாமல் நிறைவேற்றிக் கொடுப்பது வல்லுனர்களின் திறமை.

 

அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வந்துவிட்டது. முக்கியமானவர்களுக்கு குடும்பத்தினரே நேரில் சென்று அழைக்க வேண்டும். மற்றவர்களுக்கு அழைப்பிதழோடு சேர்த்து முகவரியையும் கொடுத்துவிட்டால், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் உரியவர்களிடம் கொண்டு சேர்த்துவிடும். அந்த நிறுவனத்தோடு சேர்ந்து துருவன் திருமண வேலைகளில் ஈடுபட்டிருக்க, திலீப் பத்திரிகை கொடுக்கும் வேலையை கையிலெடுத்திருந்தான். திருமணத்திற்குத் தேவையான ஆடை அணிமணிகள் மற்றும் இதர சாமான்களை வாங்கி குவிப்பதில் முனைப்பாக இருந்தாள் பிரபாவதி. அவளுக்கு துணையாக மாயா சுழன்றுக் கொண்டிருந்தாள். வீட்டில் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கின்றன என்னும் நிலையில், செய்வதற்கு ஏதாவது ஒரு வேலை அவர்களுக்கு இருந்துக் கொண்டே இருந்தது.

 

மதுரா மட்டும் ஏதோ குழப்பத்தில் இருப்பவள் போன்றே சுற்றிக் கொண்டிருந்தாள். புத்தகத்தை தலைகீழாக படித்துக் கொண்டிருந்தாள். டிவியை போட்டுவிட்டு சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உணவின் முன் அமர்ந்து கனவு கண்டாள். அடிக்கடி அலைபேசி சரியாக வேலை செய்கிறதா என்று பரிசோதித்துக் கொண்டே இருந்தாள். என்னவாயிற்று இவளுக்கு! – அவளிடம் தெரிந்த மாற்றத்தை கவனிக்க அந்த வீட்டில் மாயாவை தவிர வேறு ஆளில்லை. அவரவர் அவரவருடைய வேலைகளில் மும்மரமாக மூழ்கியிருந்தார்கள்.

 

மதுராவின் பிரச்சனை என்னவென்று கேட்க வேண்டும் என்பதுதான் மாயாவின் விருப்பம். ஆனால் கேட்டால் அவள் சொல்ல மாட்டாள். எனவே, தனக்கென்ன என்று ஒதுங்கி கொண்டாள். நாட்கள் செல்லச் செல்ல மதுராவின் குழப்பம் கலவரமாக மாறியது. அடிக்கடி யாருக்கோ அலைபேசியில் டயல் செய்வதும், குறுஞ்செய்தி அனுப்புவதும், பதிலை எதிர்பார்த்து காத்திருந்து பதட்டமடைவதும் அதிகமாகிக் கொண்டே போனது. அவளுடைய குணத்தில் கூட மாறுபாடு தெரிந்தது. அதிர்ந்துக் கூட பேசாதவன் இப்போதெல்லாம் எரிந்து விருந்தாள். அதற்குப் பிறகுதான் பிரபாவதியின் கவனம் மகள் பக்கம் திரும்பியது. இரண்டு நாட்கள் பொறுமையாக அவளுடைய நடவடிக்கைகளை கவனித்துவிட்டு மூன்றாவது நாள் தனியாக அழைத்துப் பேசினாள். ஆரம்பத்தில் மழுப்பிய மதுரா இறுதியில், “கிஷோர் என்கிட்ட பேசி பத்து நாளைக்கு மேல ஆச்சும்மா…” என்று உண்மையைப் போட்டு உடைத்தாள்.

 

“என்ன!” – அதிர்ச்சியோடு மகளை பார்த்தாள் பிரபாவதி. தலை குனிந்தபடி நின்றிருந்தாள் மகள்.

 

“உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா?”

 

“ம்ஹும்… இல்ல…” – தலையை குறுக்காக ஆட்டினாள்.

 

“வேற என்ன?”

 

“தெரியல…”

 

“தெரியலையா! அவன் ஏன் பேச்சை நிறுத்தினான்னு உனக்கு தெரியவே இல்லையா?”- ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

 

“ம்ம்ம்… தெரியலம்மா. எனக்கு தெரிஞ்சு நா எதுவும் பண்ணல. வேற என்னன்னு புரியல…” – சொல்லும் பொழுதே மதுராவின் குரல் நடுங்கியது.

 

“ஏன் நீ இதை முதலிலேயே என்கிட்ட சொல்லல?”

 

“வெயிட் பண்ணி பார்க்கலாம்னு நெனச்சேம்மா. இவ்வளவுநாள்… இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல…” – கலங்கினாள்.

 

“சரி சரி… பயப்படாத…. ஐ வில் கால் ஹிஸ் பேரண்ட்ஸ்…” – மகளுக்கு நம்பிக்கைக்கு கொடுக்க முயன்றாள்.

 

“நா முயற்சிப் பண்ணி பார்த்துட்டேம்மா… அவங்களும்… போன் அட்டென்ட் பண்ண மாட்டேங்கிறாங்க” – இதை கேட்டதும் பிரபாவதியின் தாயுள்ளம் பதறியது.

 

“மது… என்ன…! என்னடி சொல்ற!” – பயத்துடன் மகளைப் பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது. மகளின் கண்ணீரைக் கண்ட பிரபாவதி கொதித்துப் போனாள்.

 

‘இது என்ன சோதனை! கடவுளே! அவன் ஏன் இப்படி பண்ணறான்! எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாமே! கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. அதுக்குள்ள இப்படியெல்லாம் நடக்குதே’ – பயத்துடன் கணவனுடைய அலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லி, அவரை உடனே வீட்டிற்கு வர சொன்னாள்.

 

மனைவியிடமிருந்து அழைப்பு வந்ததும் அலுவலகத்திலிருந்து உடனே கிளம்பிவிட்டார் நரேந்திரமூர்த்தி. உள்ளே பயம் இருந்தாலும் அவர் அதை வெளிகாட்டிக் கொள்ளவில்லை. நடந்தது என்ன என்பதை மக்களிடம் தெளிவாகக் கேட்டார். தாயிடம் சொன்னதையே மீண்டும் தந்தையிடம் கூறினாள் மதுரா. முதல்நாள் இரவு நன்றாக பேசிக் கொண்டிருந்துவிட்டு போனை வைத்தவன் மறு நாளிலிருந்து இவளுடைய அழைப்பை ஏற்பதில்லை, குறுஞ்செய்திக்கு பதிலளிப்பதில்லை என்றால், ஏதோ சரியில்லை என்றே தோன்றியது. ஆனால் என்னவென்று ஊகிக்க முடியவில்லை. பிரச்னையை போனில் பேசுவதைவிட நேரில் சென்று பேசித் தீர்த்துக்கொள்வதே சரியாக இருக்கும் என்று எண்ணினார்.

 

“ஏதாவது சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்காதான் இருக்கும். நா கிஷோர் வீட்டுக்கு போயி பார்த்து பேசிட்டு வர்றேன். நீ பயப்படாத” என்று மகளுக்கு தைரியம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

 

“நானும் வர்றேன்” என்று பிரபாவதியும் உடன் புறப்பட்டாள். அவர் மறுத்துப் பார்த்தார். அவள் கேட்கவில்லை. சரி வரட்டும் என்று அழைத்துச் சென்றார்.

 

அழைப்புமணி ஒலி கேட்டு கதவைத்திறந்த கிஷோரின் தாய், நரேந்திரமூர்த்தியையும் அவர் மனைவியையும் கண்டதும் ஒரு கணம் திகைத்தாள். பிறகு சமாளித்துக் கொண்டு “உள்ள வாங்க” என்று அழைத்தாள். உள்ளே சோபாவில் அமர்ந்து ஏதோ நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த கிஷோரின் தந்தை இவர்களுக்கு பெரிதாக மதிப்புக் கொடுக்காமல் சற்று ஆடம்பரமாகவே, “உக்காருங்க” என்றார். அவர்களும் அமர்ந்தார்கள்.

 

“சொல்லுங்க… என்ன விஷயம்?” – அவர் கேட்ட விதமே உதாசீனப்படுத்துவது போல்தான் இருந்தது. பிரபாவதியின் முகத்தில் கலவரம் சூழ்ந்தது.

 

“கிஷோர் எங்க? போன் பண்ணினேன் எடுக்கல. பிஸியா இருக்காரா? – அமைதியாகக் கேட்டார்.

 

“ம்ம்ம்… பிஸியாதான் இருக்கான்” – பட்டுக்கொள்ளாமல் பேசினார்.

 

“கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. இங்க வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?” என்றார் சூசகமாக. அதற்கு கிஷோரின் தந்தை எந்த பதிலும் சொல்லவில்லை. இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார்.

 

“என்ன ஆச்சு?” – நரேந்திரமூர்த்தி.

 

“இந்த கல்யாணம் நடக்காதுங்க. சாரி…” – சற்றும் தயக்கமில்லாமல் பட்டென்று கூறினார்.

 

அதிர்ச்சியும் கலவரமுமாக கணவனின் கையைப் பிடித்தாள் பிரபாவதி. ‘மது…! என் மகளே…!’ – பெற்ற வயிறு எரிந்தது. நரேந்திரமூர்த்தியும் கலங்கிப்போனார்.

 

அதிர்ச்சியும் கோபமும் அவரை ஆட்கொண்டது. அவரால் நம்பவே முடியவில்லை. ‘என்ன தைரியம் இவனுக்கு!’ – அவர் உள்ளம் கொதித்தது. ஆனால் கோபப்பட்டு காரியத்தை கெடுத்துவிடக் கூடாதே என்று அமைதியாகப் பேசினார்.

 

“என்ன சொல்லறீங்க?” – கண்கள் கோவத்தில் சிவந்திருந்தாலும் குரல் அடங்கியே இருந்தது.

 

“எங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல…”

 

“என்ன திடீர்ன்னு!” – கண்கள் இடுங்கக்கேட்டார். எதிரிலிருந்தவர் அதற்கு பதில் சொல்லவில்லை.

 

“கிஷோர் எங்க?”

 

“இங்க இல்ல…”

 

“அது எனக்கே தெரியும். எங்க போயிருக்கான்?” – மரியாதை தேய்ந்துவிட்டது. ஒரு வாரத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு ஓடிப் போன பேடிக்கு மரியாதை என்ன வேண்டிக்கிடக்கிறது.

 

“……………..” – அதற்கும் அவரிடம் பதில் இல்லை.

 

“நீங்க பதில் சொல்லியாகணும்” – நரேந்திரமூர்த்தியின் குரலில் கடுமை ஏறியது.

 

“நா எதையும் பேச விரும்பல மிஸ்டர் நரேந்திரமூர்த்தி. மீறி பேசினா நஷ்ட்டம் உங்களுக்குத்தான். தயவுசெஞ்சு இந்த கல்யாண பேச்சை இங்கேயே முடிச்சுக்கிட்டு கிளம்புங்க” – முகத்திலடித்தது போல் பேசினார். ‘இவ்வளவு தைரியம் இவனுக்கு எங்கிருந்து வந்தது!’ என்று யோசித்த நரேந்திரமூர்த்தியின் புருவம் சுருங்கியது.

 

அதுவரை பொறுமையாக அமர்ந்திருந்த பிரபாவதி பொங்கியெழுந்தாள். ‘எங்களுடைய நஷ்டத்தை பற்றி நீ கவலைப்படுகிறாயா! சண்டாளா! உன் மகன் ஒரு கோழை. நிச்சசயித்த பெண்ணை விட்டுவிட்டு ஓடிவிட்டான். நீ அவனுக்கு வக்காலத்து வாங்கி கொண்டிருக்கிறாய். நீயெல்லாம் ஒரு தந்தையா! திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. எங்கள் மகளை பற்றி யோசித்தீர்களா? ஊருக்கெல்லாம் பத்திரிகை கொடுத்துவிட்டோம். அனைவருக்கும் நாங்கள் என்ன பதில் சொல்வோம்!’ என்று பொரிந்துக் கொண்டினாள். அவளுடைய பதட்டம் சற்றும் குறையவில்லை. மகளை எண்ணி கண்ணீர்விட்டாள். அவளிடம் இதை எப்படி சொல்லப் போகிறோம் என்கிற கலக்கம் அவளை ஆட்டிப்படைத்தது.

 

நரேந்திரமூர்த்தி மனைவியை அதட்டினார். அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட எத்தனித்தார். ஆனால் பிரபாவதி அவரை எதிர்த்தாள். “எங்க கிளம்புறீங்க? உங்க பொண்ணுகிட்ட போயி என்ன சொல்லுவீங்க! அந்த நாயி எங்க போயி ஒளிஞ்சுக்கிட்டு இருக்கான்னு கேளுங்க…” கணவனை பிடித்து உலுக்கினாள்.

 

“கேட்டு? அவன் எங்க இருக்கான்னு கேட்டு கண்டுபிடிச்சு என்ன செய்ய போற?கால்ல விழுந்து கெஞ்சினாலும், இனி என்னோட பொண்ண அவனுக்கு கொடுக்க மாட்டேன். அவனை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும். நீ பேசாம வா” என்று அவளை அடக்கி அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

 

இது சாதாரண விஷயமல்ல. திருமணத்திற்கு ஒரே வாரம்தான் இருக்கிறது என்னும் நிலையில், எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தப் பிறகு, ஒருவன் திருமணத்தை நிறுத்த துணிகிறான் என்றால்! அதுவும் சிறிதும் குற்ற உணர்ச்சியில்லாமல்! உங்களுக்குத்தான் நஷ்ட்டம் என்று வேறு கூறுகிறான்… – நரேந்திரமூர்த்தியால் என்ன விஷயம் என்பதை ஊகிக்க முடியவில்லை என்றாலும் ஏதோ ஒரு முக்கியமான சங்கதி அவர்களிடம் சிக்கியிருக்கிறது என்பதை மட்டும் புரிந்துக் கொண்டார். அதை மனைவியின் முன்பாக வெளிப்படுத்திக் கேட்க விரும்பாமல்தான் அவளை அங்கிருந்து கிளப்பிக் கொண்டு வந்துவிட்டார்.

 

ஆனால் கிஷோரின் தந்தை மறைத்த விஷயம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற முடிவில் மட்டும் உறுதியாக இருந்தார். எனவே அன்றே மீண்டும் ஒருமுறை கிஷோரின் வீட்டுக்கு தனியாக வந்தார். அவனுடைய தந்தையிடம் பேசினார். அவர் கூறியதைக் கேட்கக்கேட்க அவருடைய முகம் சிவந்தது… உடல் நடுங்கியது… ஆத்திரமும் கோபமும் நெஞ்சை அடைத்தது. யார் முகத்திலும் விழிக்கப் பிடிக்காமல் கரை எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்றார். சூரியன் சாய்ந்து இருள் சூழ்ந்தது. அவர் மனம் வலித்தது. வேதனையில் துடித்தது. இப்படி ஒரு துரோகத்தை அவர் நினைத்துக் கூட பார்த்ததில்லை. கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது. போன் வேறு ஒருபக்கம் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது. எங்கோ தூரத்தில், ஊர் பேர் தெரியாத ஒரு இடத்தில் வந்து காரை நிறுத்தினார். மனம் வெகுவாய் காயப்பட்டிருந்தது. ஸ்டியரிங் வீலில் தலையை சாய்ந்து படுத்துவிட்டார். அவருடைய உணர்வுப் போராட்டங்கள் மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்து, அவர் தலை நிமிரும் போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது.

 

 
14 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha khaliq says:

  Hi Nithya….nice epi…..eppa idhu thideer twist….Kishor yen kalyanathai niruthinaan?…oruvelai idhu dev oda velaiya irukumo?


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  கிஷோரை பின்னின்று இயக்குவது தேவ்தானே,தேவ் விரும்பிய மாதிரி குழப்பத்தை உருவாக்கியாச்சுது,இந்த குழப்பத்தை பயன்படுத்தி இனி திலீபன் பாரதி திருமணமும் நடக்கும்.

  நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Thadsayani… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Mercy Aruna says:

  Unexpected twist, what makes Kishore to stop the wedding? Story is going super fast.
  Expecting 3 ud s tomorrow . Thank you Nithya


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Welcome to Sahaptham Mercy Aruna… Thank you so much… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya says:

  Si story supera eruku, you don’t worry. Happya storya contenew painuinga. Anaiku Englishla sareya type Panna varathu. Athanalthan comment sareya poturathu ella. Sorry., Ana continueva uinga storya pateikern.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Priya… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ugina says:

  Yenna aachu
  Interesting ud


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Ugina… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  என்னாச்சு..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   பேக்கப் கொறஞ்சிடிச்சு… 😀


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  admin says:

  இன்னைக்கு ஒரு எபிசொட் தான் போட முடிஞ்சுது ஃபிரண்ட்ஸ்… படிச்சு பாருங்க. பிடிச்சிருந்தா கமெண்ட்ல சொல்லீட்டு போங்க… நாளைக்கு பார்க்கலாம்…

  அன்புடன்,
  நித்யா கார்த்திகன்.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Umamanoj says:

   அச்சோ சோ. ..ஒரு எபிசொட் தானா…இப்படி சஸ்பென்ஸ்ல நிறுத்துறீங்க. ..
   தேவின் கலாட்டா தொடங்கிடுச்சா. ..
   என்னையா செஞ்சு வைச்ச😈


   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    admin says:

    Thank you Uma Manoj… 🙂