கனல்விழி காதல் – 23
8983
17
அத்தியாயம் – 23
நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டது. குறைவான சத்தத்தில், டிவியில் ஏதோ ஒரு பழைய ஹிந்தி படம் ஓடிக் கொண்டிருந்தது. மகனுக்காகக் காத்துக்கொண்டிருந்த இராஜேஸ்வரி அவனிடம் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்கிற யோசனையில் அமர்ந்திருந்தாள். அவனுடைய மெர்சிடிஸ் பூனைபோல் போர்டிகோவில் வந்து நின்றது. சற்று நேரத்தில் உள்ளே வந்த தேவராஜ், சோபாவில் அமர்ந்திருக்கும் இராஜேஸ்வரியை கவனிக்காதது போல் மாடிப்படியில் ஏறினான்.
“தேவ்…” – அவள் அழைத்தாள்.
“ம்ம்ம்… எஸ் மாம்…” – அவனுடைய பேச்சில் வித்தியாசம் இருந்தது.
“உன்கிட்ட பேசணுன்னுதாம்பா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்”
“ம்மா… ஐம் வெரி டயர்ட்… மார்னிங் பேசிக்கலாம்… ஓகே…?” – மகனின் மிதக்கும் கண்களை நேருக்கு நேர் பார்த்த தாய் புரிந்துக் கொண்டாள். அவன் நிதானத்தில் இல்லை. இது போன்ற நேரங்களில் இராஜேஸ்வரியிடம் பேசுவதை அவன் தவிர்த்துவிடுவான். இன்றும் அதைத்தான் செய்ய முயன்றான். ஆனால் அவள் பிடித்துவிட்டாள். இப்போது அவளுக்கும் சங்கடமாகத்தான் இருந்தது. சோஸியல் ட்ரிங்கிங் தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால் இப்படி மொடா குடிகாரன் போல குடித்துவிட்டு வருவதை எந்த தாய்தான் விரும்புவாள்.
“சரி நீ போப்பா…” என்று அவனை அனுப்பிவிட்டு, மீண்டும் சோபாவிலேயே அமர்ந்துவிட்டாள். உறக்கம் வரவில்லை. நினைத்த காரியம் நிறைவேறுமா என்கிற ஏக்கம் அவள் மனதை அழுத்தி உறக்கத்தைக் கெடுத்தது.
இரவு வெகுநேரம் விழித்திருந்தும் கூட மறுநாள் அதிகாலையிலேயே விழிப்புத்தட்டிவிட்டது இராஜேஸ்வரிக்கு. படுக்கையிலிருந்து எழுந்து குளித்து முடித்து பூஜையெல்லாம் செய்துவிட்டு மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்துவிட்டாள். மகன் எப்போது கீழே இறங்கி வருவான் என்று எதிர்பார்ப்போது அடிக்கடி மாடிப்படியை நோக்குவதும் கையிலிருக்கும் புத்தகத்தை புரட்டுவதுமாக நேரம் கழிந்தது. எப்போதும் மணியடித்தது போல் எட்டுமணிக்கெல்லாம் உணவு மேஜைக்கு வந்துவிடுகிறவன் இன்று மட்டும் ஏனோ இன்னமும் கீழே இறங்கி வரவில்லை. அவளுடைய பொறுமை தேய்த்துக் கொண்டே சென்றது. புத்தகத்தை டீப்பாயில் போட்டுவிட்டு எழுந்து மாடிக்குச் சென்றாள்.
கையில் கடிகாரத்தை காட்டியபடி ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கு முன் நின்றுக் கொண்டிருந்தான் தேவ்ராஜ். கருப்பு நிற கோட் சூட்டில் கம்பீரமாக ராஜா போல் இருந்தான். அருகில் வண்ணமயில் போல் மதுரா இருந்தால் எப்படியிருக்கும்! இராஜேஸ்வரியின் மனம் ஏக்கத்தில் விம்மியது.
“என்னம்மா… காலையிலேயே! ஏதாவது முக்கியமான விஷயமா?” – பாடி ஸ்ப்ரேயை பறக்கவிட்டபடி கேட்டான்.
“நேத்தே உன்கிட்ட பேசணும்னு இருந்தேம்ப்பா…” – நேற்றைய நினைவில் சங்கடப்பட்டு சட்டென்று ஒரு நொடி அமைதியானவன், “சொல்லுங்க…” என்றான் மொபைலை கையிலெடுத்தபடி.
அவள் எதுவுமே சொல்லவில்லை. ஏதோ யோசனையோடு நின்றுக் கொண்டிருந்தாள். கைபேசியில் கவனமாக இருந்த தேவ்ராஜ் தாய் எதுவுமே சொல்லவில்லை என்றதும் நிமிர்ந்து பார்த்தான். அவளுடைய கண்கள் ஓரிடத்தில் நிலைக்கவில்லை. ஏதோ பதட்டமாக இருக்கிறாள் என்று தெரிந்தது.
கைபேசியை அணைத்துவிட்டு தாயிடம் நெருங்கி, “எனி ப்ராப்லம்?” என்றான்.
அவள் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள். அவனுடைய முகபாவம் தீவிரமாக மாறியது. “என்ன?” என்றான்.
சற்றுநேரம் பதில் சொல்ல தயங்கி தமாதித்த இராஜேஸ்வரி, “மதுராவோட கல்யாணம் நின்னுடுச்சு” என்றாள் மெல்ல. அவன் முகத்தில் சட்டென்று ஒரு அதிர்வு வந்து போனதை அவள் கவனித்தாள். ‘உள்ளே ஈரம் இருக்கிறது…’ – அவளுக்குள் சிறு நம்பிக்கை வந்தது. தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த தேவ்ராஜிற்கு அவள் சொன்னதை நம்ப முடியவில்லை.
“ஆர் யு சீரியஸ்?” என்றான் முற்றிலும் குழம்பிப் போனவனாக.
“ம்ம்ம்…” – தலையசைத்தாள் அவன் தாய்.
“என்ன ஆச்சு?”
“எனக்கும் தெரியாதுப்பா.. ஆனா நிச்சயமா தப்பு மதுரா மேல இருக்காது” என்றாள் உறுதியாக. அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.
“தேவ்..”
“ம்ம்ம்…”
“…………….” – அவனிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் தயங்கினாள்.
“சொல்லுங்கம்மா”
“மதுரா… ரொம்ப நல்ல பொண்ணு” – தாய் என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்துக் கொண்ட தேவ்ராஜின் முகம் இறுகியது.
“உனக்கு… நம்ம குடும்பத்துக்கு…” அவள் முடிப்பதற்குள் அவனுடைய பார்வை அவளை எரித்தது.
“நா உன்னோட அம்மா… உனக்கு கெடுதல் செய்வேனா? யோசிப்பா…”
“உங்ககிட்ட இதை பற்றி பேசினது யாரு?” – கண்டிப்புடன் கேட்டான்.
சற்று தயங்கினாலும், “உன் மாமா…” என்று உண்மையைக் கூறினாள் தாய்.
“அவருக்கு போன் பண்ணி, என்னை ஆபீஸ்ல வந்து பார்க்க சொல்லுங்க” என்றான் அழுத்தமாக.
தேவ்ராஜ் அலுவலகத்தின் கலந்தாய்வு அறை எப்படி இருக்கும் என்பதை இன்றுதான் பார்த்தார் நரேந்திரமூர்த்தி. அதோடு அவர் இங்கு வந்து ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. இன்னமும் தேவ்ராஜை பார்க்க முடியவில்லை. இந்த அலுவலகத்தில் அவர் இவ்வளவு நேரம் காத்திருப்பது இதுதான் முதல் முறை. எல்லாம் புதிதாக இருந்தது. எதிரிலிருந்த ஜூஸ் கிளாஸை எடுத்து ஒரு மிரடு குடித்தார். கதவை திறந்துக் கொண்டு தேவராஜ் உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததும் எழுந்து கட்டித் தழுவச் சென்றார் நரேந்திரமூர்த்தி. அவரை முந்திக்கொண்டு தேவ்ராஜ் அவர் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
“உட்காருங்க மாமா… கொஞ்சம் பிஸி… அதான் நீங்க வெயிட் பண்ணற மாதிரி ஆயிடிச்சு. சரி சொல்லுங்க… என்ன விஷயம்?” – கொஞ்சம் கூட பற்றுதலே இல்லாமல் பேசினான்.
ஆலோசனை குழு அமரும் அந்த நீளமான மேஜையின் ஒருபுறம் அவனும் மறுபுறம் அவரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குள் இருந்த இடைவெளி, மறைமுகமாக அவரிடம் எதையோ சொல்வதாகத் தோன்றியது. அவனிடம் பேசவே தயக்கமாக இருந்தது. ஆனால் பேசித்தானே ஆகவேண்டும்.
“ராஜிகிட்ட சொல்லியிருந்தேனேப்பா…” என்றார் மெல்ல.
“ம்ம்ம்… அவங்க சொன்னாங்க… அரைகுறையா… நீங்க சொல்லுங்க. என்ன ஆச்சு?” – அவன் கேட்ட விதமும் அவனுடைய பாவனையும் அவரை காயப்படுத்தியது. மகளை நினைத்து சகித்துக் கொண்டார்.
“என்ன பிரச்சனை… எதனால இந்த கல்யாணம் நின்னுச்சு… இதையெல்லாம் நா இப்போ உடைச்சு பேச விரும்பலப்பா. மதுரா மேல எந்த தப்பும் இல்ல. அவ பாதிக்கப்படக் கூடாது” என்றார்.
பிரச்சனை என்னவென்பதை ஒரு நொடியில் உடைத்துவிடலாம். ஆனால் அது உண்மையா பொய்யா… யார் மீது குற்றம் என்றெல்லாம் பேசி… சின்னதை பெரிதாக்கி, பெரியதை சின்னதாக்கி காலம் கடத்த இப்போது நேரமில்லை. காதும் காதும் வைத்தது போல் மதுராவின் திருமணத்தை தேவ்ராஜோடு முதலில் முடித்துவிட வேண்டும் என்பது மட்டுமே முக்கியமானது. நரேந்திரமூர்த்தியின் வணிக புத்தி வேலை செய்தது.
“ம்ம்ம்ம்! மதுரா நல்ல பொண்ணு… பாதிக்கப்படக் கூடாது… வெரி ட்ரு!” – புருவம் உயர்த்தினான். உண்மையைத்தான் பேசுகிறானா அல்லது இகழ்ச்சியாக பேசுகிறானா! உணர்வுகளற்ற அவனுடைய குரலிலிருந்து அவரால் எதையும் ஊகிக்க முடியவில்லை.
“நா என்ன பண்ணனும் மாமா?” – மேஜையில் முழங்கையை ஊன்றி சற்று முன்பக்கம் சாய்ந்து அவரின் கண்களை பார்த்துக் கேட்டான்.
“மதுராவை கல்யாணம் பண்ணிக்கணும்” – அவர் சொன்னதும் இவன் மேஜையிலிருந்து விலகி சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு, “ஆக… கிஷோரோட இடத்தை நான் ரீப்ளேஸ் பண்ணனும்… ரைட்?” – அவனுடைய வார்த்தையிலும் கண்களிலும் அனல் பறந்தது. அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை. வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தார்.
“ஆல் ரைட்…” என்று மெல்ல தலையை மேலும் கீழும் ஆட்டியவன், “மாமா… நான் ஏன் உங்களை ஆபீஸ்க்கு வர சொன்னேன்னு தெரியுமா? நாம ஏன் மீட்டிங் ரூம்ல உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கோம்னு தெரியுமா?” என்று அவரை ஆழ்ந்துப் பார்த்தான். அவர் குழப்பத்துடன் அவனைப் பார்த்தார்.
“நா இதை ஒரு பிசினஸாதான் கையாள விரும்பறேன்” என்றான் தீர்மானமாக.
“என்ன!” – அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார் நரேந்திரமூர்த்தி.
“எஸ்… ஐ வாண்ட் டு மேக் திஸ் அஸ் எ பிசினஸ்…” மீண்டும் சொன்னான். சிறு தடுமாற்றம் கூட இல்லாத உறுதியான அவன் குரல், உன்னைவிட தேர்ந்த வணிகன் நான் என்று அடித்துக் கூறியது.
“சரி… என்ன வேணும் உனக்கு?”
“லாபம்…” – நச்சுப்புன்னகை அவன் இதழ்களில் தவழ்ந்தது. முதல் முறையாக அவருக்குள் அச்சம் பிறந்தது. இவன் சரியானவன்தானா என்கிற சந்தேகமும் நூல் நுனியளவு தோன்றி மறைந்தது.
“என்ன லாபம்?”
“இந்த கல்யாணம் நடந்தா உங்க பொண்ணு சந்தோஷமா இருப்பா. என் தங்கச்சியும் சந்தோஷமா இருக்கணும்ல?” புருவம் உயர்த்தினான். அவர் அசந்து போய் அமர்ந்துவிட்டார். அங்கே இங்கே சுற்றி கடைசியில் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கிறோமே என்று ஆயாசமாக இருந்தது. ஆனால் தேவ்ராஜ்! வளைக்கவே முடியாத இரும்பு மனிதன் என்று நினைத்தார்.
“யோசனையா இருக்கா மாமா? ஒண்ணும் பிரச்சனை இல்ல. வீட்டுக்கு போங்க. எல்லோர்கிட்டையும் கேளுங்க. திலீப்கிட்ட பேசுங்க. அவங்க எல்லாரும் சம்மதிச்சதுக்கு பிறகு உங்க முடிவை சொல்லுங்க. நா வெயிட் பண்ணறேன்” என்றான் நக்கலாக. இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது! இன்னும் ஐந்தே நாட்கள்தான். திருமணம் நடந்தாக வேண்டும். இல்லையென்றால் ஊர் சிரித்துவிடும். சட்டென்று பதட்டமான நரேந்திரமூர்த்தி, “அதுக்கெல்லாம் அவசியம் இல்ல தேவ். திலீப் பாரதியை கல்யாணம் பண்ணிக்குவான்” என்று உறுதிக்கு கொடுத்தார்.
“குட்… வெரி குட்…” – வெற்றி புன்னகை மலர்ந்தது அவன் முகத்தில்.
“நாளைக்கே குடும்பத்தோட வீட்டுக்கு வாங்க. பாரதியை பொண்ணு கேளுங்க. உடனே நிச்சயதார்த்தம். ரெண்டு கல்யாணமும் ஒரே நேரத்துல நடக்கணும். ஓகேவா மாமா?”
“சரிப்பா…” – சாவி கொடுத்த பொம்மை போல் அவன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டினார் நரேந்திரமூர்த்தி.
இனி அவன் கொடுக்கும் சாவிக்கெல்லாம் அவர் மட்டுமென்ன… அவருடைய குடும்பமே ஆடித்தானே ஆகவேண்டும்!
17 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi Nithya….nice epi….Dev oru therndha business man nu prove pannitan….sandarpatha upagoyichi thanaku saadhagama maatitan….idhuku dilip and madhura reaction enna?
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
வணக்கம்
எல்லோருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்து உரித்தாகட்டும்.
நன்றி
தட்சாயணி
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
மிக்க நன்றி தாட்சாயணி… உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Semma paraparapu today’s epi, Dev has proved that he is a great Business man. Dileep is going to be cornered by his dad , Eager to read the reaction of Madhura, Dileep and Bharathi. Story is moving fast and interesting.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi Aruna, Very happy to see you here everyday…. really happy… Thank you so much… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
கமுக்கமாக செஞ்சுட்டான்…
இவன் தான் காரணம்னு உள் மனசு சொல்லுதே…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
உல் மனசு சொல்றது உண்மையாவும் இருக்கலாம்… இல்லாமலும் இருக்கலாம்… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
இரு பெண்களும் பாவம்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi Vatsala… Thank you so much… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
டேய் தேவ் செய்றது எல்லாம் செய்துட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி ஷாக் ரியாக்ஷன் கொடுத்தா நாங்க நம்பிடுவோமா .. டேய் நீ வில்லன் டா.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் உமா.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Pons akka… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Uma Deepak… just two lines… but very impressive… Thank you so much… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi mam
தேவ் தான் ஒரு தேர்ந்த வணிகன்தான் என்று எப்பவுமே நிரூபித்துக்கொண்டு இருக்கின்றார்,இப்போ இருக்கும் சூழலை தன் தங்கைக்கு சாதகமாக்கி திருமணமும் பேசிவிட்டார்,மதுராவுக்கு கிஷோரை பார்த்து நிச்சயம் செய்தது தேவ்வுக்கு பிடிக்கவில்லை,தேவ் மறுத்தபடியால்தான் மதுராவுக்கு வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்க்கும் சூழல் வந்தது,இந்த இரு திருமணத்தாலும் மதுராவும் சரி பாரதியும் சரி தங்கள் கணவன்மாரால் காயப்படப்போகின்றார்கள் என்று புரிகின்றது.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Thadsayani… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
WOW SEMA DEVV SUPERRRRRRRRR
BUT MADHUMAA VA KODUMAY PADUTHEEDAATHAAAAAA
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Ugina… 🙂