கனல்விழி காதல் – 24
9642
18
அத்தியாயம் – 24
கனத்த மௌனத்தில் மூழ்கியிருந்தது நரேந்திரமூர்த்தியின் அலுவல் அறை. சூழ்நிலையை விலக்கிக் கூறியாகிவிட்டது. இனி அவன் முடிவுதான். இளைய மகனின் முகத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்குவோம் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை. பாரதியைப் பற்றி தவறாக சொல்ல எதுவும் இல்லை. ஆனால் அந்த தேவ்! அவனை நினைத்தால் தான்…! – திலீப்பின் முகம் அஷ்டகோணலாக மாறியது.
“யு ஹேவ் நோ அதர் சாய்ஸ் திலீப்” – நரேந்திரமூர்த்தியின் குரல் மிரட்டியது.
“ஐ நோ டாட்… இந்த குழப்பத்துக்கு எல்லாம் நான் தான் பொறுப்பு. நான்தான் இதை சரி பண்ணனும். ஆனா மதுராவுக்கு தேவ் பொருத்தமானவன் கிடையாது”
“திலீப்…” – அதட்டினார். “ஏற்கனவே உன்னோட பேச்சை கேட்டு நிறைய அனுபவிச்சாச்சு. உன்னோட அட்வைஸ நிறுத்திக்கோ” என்றார் கடுமையாக. அதற்குமேல் அவனால் எதுவும் பேச முடியவில்லை. சற்றுநேரம் அமைதியாக இருந்தவன், “ஓகே டாட்… நா சம்மதிக்கிறேன். என் சார்பா நீங்க என்ன முடிவு வேணுன்னாலும் எடுத்துக்கோங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்றான் முடிவாக.
தேவ்ராஜின் அலுவலகத்திலிருந்து நேராக தன்னுடைய அலுவலகத்திற்கு வந்தவர் மகனை அழைத்துப் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார். அடுத்து பிரபாவதியிடம் பேச நினைத்து, உடனே வீட்டிற்கு கிளம்பினார். மனைவியையும் மகளையும் அழைத்து விஷயத்தை சொன்னார். பெண்கள் இருவருமே அதிர்ந்து போய் அவரைப் பார்த்தார்கள்.
நேற்றுவரை கிஷோர்தான் தன்னுடைய வருங்காலம் என்று நினைத்துக் கொண்டிருந்தவள், தேவ்ராஜின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே விதிர்விதிர்த்துப் போனாள். சிறிதுநேரம் அவனோடு இருந்தாலே இதயம் அடிக்கும் அடியில் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கும். வாழ்க்கை முழுவதும் எப்படி! கடவுளே! – பயந்து போய் தந்தையைப் பார்த்தாள்.
பிரபாவதியின் மனத்திலும் கிட்டத்தட்ட அது போன்ற எண்ணங்கள்தான் ஓடிக் கொண்டிருந்தன. வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையாக, அந்த கிஷோரை கெட்டவன் என்று ஒதுக்கிவிட்டு, இந்த ராட்சஸனிடம் கொண்டு போய் தள்ளப்போகிறாரே! இந்த உலகத்துலேயே அவன் ஒருவன்தான் மாப்பிள்ளையா? கல்யாணம் நின்றால் நின்றுவிட்டு போகட்டும். பொறுமையாக வேறு மாப்பிள்ளையை பார்க்கக் கூடாதா? அது இருக்கட்டும்… தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதம் பிடிக்கும் திலீப்பிடம் இது எப்படி சாத்தியமானது! – அவளுக்கு விளங்கவே இல்லை.
“மது… இந்த நேரத்துல நீ ரொம்ப தைரியமா இருக்கணும். அப்பா உனக்கு நல்லதை மட்டும்தான் செய்வேன். புரியுதா?” – நரேந்திரமூர்த்தி.
“புரியுது டாடி…” – பொங்கும் ஆத்திரத்தை விழுங்கி கொண்டு, வேகமாக தலையை ஆட்டினாள். தந்தையின் மனம் மேலும் புண்பட்டுவிடக் கூடாதே என்கிற அக்கறை.
“தேவ் ரொம்ப நல்லவன். உன்ன ராணி மாதிரி பார்த்துக்குவான். நீ எதை பற்றியும் யோசிக்காம நிம்மதியா இரு. எல்லாமே நல்லதுக்குதான்… ஓகே?”
“ஓகே டாடி” – முணுமுணுத்தாள்.
“நாளைக்கு ஈவினிங் ராஜி வீட்ல, திலீப்புக்கும் பாரதிக்கும் நிச்சயம். என்னென்ன தேவையோ எல்லாம் ரெடி பண்ணிடு” என்றார் மனைவியிடம்.
“ரொம்ப அவசரப்படறீங்க… கொஞ்சம் பொறுமையா?”
“உங்க யாரோட அறிவுரையும் எனக்கு தேவையில்லை. நா என்ன செஞ்சுகிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும். தேவையில்லாததை யோசிச்சு… பேசி… நேரத்தை வீணாக்காத. நா என்ன சொன்னேனோ அதை மட்டும் செய்” – கண்டிப்புடன் கூறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
மறுநாள் மாலை தாம்பூலத்தட்டுடன் நரேந்திரமூர்த்தியின் குடும்பம் தேவராஜ் வீட்டிற்கு வந்த போது, அங்கே இருதரப்பிரருக்கும் பழக்கமான நண்பர்களும் நெருங்கிய உறவினர்களும் கூடியிருந்தார்கள். பெரிதாக பிரபலப்படுத்தாமல், இரு குடும்பத்திற்குள் நிச்சயத்தை முடித்துக்கொள்ளலாம் என்பதுதான் பேச்சு. இவன் எப்போது இவ்வளவு போரையும் அழைத்தான்! – வியப்பை முகத்தில் காட்டாமல் இயல்பாக இருந்தார் நரேந்திரமூர்த்தி. துருவனும் மாயாவும் மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தார்கள். பிரபாவதியின் முகம் மட்டும் இறுகியே இருந்தது. திருமணப்பெண் என்பதால் மதுரா வரவில்லை.
வாசல்வரை வந்து அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்றாள் இராஜேஸ்வரி. கம்பீரப் புன்னகையுடன் அவர்களை எதிர்கொண்ட தேவ்ராஜ், ஆதிராவைக் கண்டதும் உற்சாகமாகி, “ஹேய் கியூட்டி…” என்று அவளை தூக்கிக் கொண்டான். அவளும் “மாமூ…” என்று அவனோடு ஒட்டிக் கொண்டாள். தான் மறுத்த ஒன்றையே, சூழ்நிலையின் கட்டாயத்திற்காக ஏற்றுக் கொண்டுவிட்ட சங்கடத்துடன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான் திலீப். அவனிடம் கைகுலுக்கி வாழ்த்து சொன்னார்கள் விருந்தினர்கள். இழுத்துப்பிடித்த புன்னகையுடன் அவர்களுக்கு நன்றி கூறினான்.
“உட்காருங்க… எல்லாரும் உட்காருங்க…” – அந்த பெரிய கூடம் நிறைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கைகளில் அனைவரும் அமர்ந்தார்கள்.
“பாரதி எங்கம்மா இருக்கா?” – தாயிடம் நெருங்கி கேட்டாள் மாயா.
“மேல… அவ ரூம்ல…”
“சரி… நா போயி பார்க்கறேன்”
“வெயிட் பண்ணு. தட்டு மாத்தும் போது நீ இங்க இருக்கணும்” – மகளைத் தடுத்தாள் இராஜேஸ்வரி. பண்டிதர் நிச்சயப்பத்திரிக்கையை படித்தப் பிறகு தட்டை மாற்றிக்கொண்டார்கள். இப்போது மோதிரம் மாற்றும் சடங்கு.
தாய் கண்ணைக் காட்டியதும், தங்கையை அழைத்துவர மாடிக்கு சென்றாள் மாயா. பாரம்பரிய உடையில் ரதி போல் அலங்கரிக்கப்பட்டிருந்தாள் பாரதி. தங்கையைப் பார்த்ததும், “ரொம்ப அழகா இருக்க” என்று பெருமிதத்துடன் அவளைக் கட்டிக் கொண்டாள் தமக்கை. பாரதியிடமிருந்து சிறு புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
“கங்கிராட்ஸ்… நெனச்சத சாதிச்சுட்ட… எனக்கு ரொம்ப சந்தோஷம்”
“தேங்க் யு…” – அவள் குரலில் உற்சாகமில்லாதது போல் தோன்றியது.
“டென்ஷனா இருக்கியா?”
“ம்ஹும்… ஏன்?”
“பார்க்க அப்படி தெரியுது. ரிலாக்ஸ்… ஓகே?”
“ஐம் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட்” – திடமாகக் கூறினாள் பாரதி. அவளை சற்றுநேரம் ஊன்றிப் பார்த்த மாயா, “சரி வா… கீழ எல்லாரும் உனக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்று கூறி அவள் கையைப் பிடித்து கீழே அழைத்துச் சென்றாள்.
இதுவரை மேற்கித்திய உடைகளில் மட்டுமே பார்த்திருந்த பாரதியை முதல் முறையாக புடவையில் பார்க்கிறான் திலீப். அதிலும் ஒரு நவீனம்… இப்படி ஒரு அழகு அவளுக்குள் ஒளிந்திருக்கக் கூடும் என்பதை அவன் கனவில் கூட நினைத்ததில்லை. அதுவரை வெறுமையாயிருந்த அவன் மனதிற்குள் மகிழ்ச்சி துளிர்விட துவங்கியது. அன்ன நடைபோட்டு மாடிப்படிகளில் இறங்கிவரும் அழகியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கீழே வந்ததும் அனைவருக்கும் வணக்கம் கூறினாள் பாரதி.
“இப்படி வந்து உட்காரு…” – அந்த கூடத்தில் நடுநாயகமாக போடப்பட்டிருந்த இரண்டு சிறப்பு நாற்காலிகளில் ஒன்றில் திலீப் அமர்ந்திருக்க, அடுத்ததில் பாரதியை அமரச் சொன்னாள் மாயா. அவளோ அசையாமல் நின்றாள்.
“வா…” – லேசாக அழுத்தம் கொடுத்து தங்கையை இழுத்தாள். அவள் எதிர்திசையில் இழுப்பது போல் தோன்றவே, திகைப்புடன் அவளை பார்த்தாள்.
“என்ன..! வா…” – முகத்தில் வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு, தங்கையின் காதுக்கு அருகில் சென்று முணுமுணுத்தாள்.
அவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் நாடகத்தை அனைவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள். இராஜேஸ்வரியின் இதயம் படபடக்கத் துவங்கியது. வேகமாக மகளின் அருகில் வந்தவள், மற்றவர்களுக்கு கேட்காத வண்ணம், “திலீப் பக்கத்துல போயி உட்காரு பாரதி” என்றாள்.
தாயை நிமிர்ந்து பார்த்தாள் பாரதி. மகளின் வெறுமையான முகத்தைப் பார்த்த இராஜேஸ்வரி கதிகலங்கிப் போய் மகனைப் பார்த்தாள். அவனும் தங்கையைத்தான் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது பாரதியின் பார்வை தமையனை சந்தித்தது. அடுத்து திலீப்பின் பக்கம் திரும்பினாள்.
திலீப்பின் கண்கள் பாரதியின் பார்வையை நேருக்கு நேர் சந்தித்தன. இருவரும் ஒருவரை ஒருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம், “உன்ன எனக்கு பிடிக்கல… இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்ல…” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்.
அதிர்ச்சியென்றால்… பேரதிர்ச்சி… நம்பவே முடியவில்லை அவனால். திகைப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இமைக்கக் கூட தோன்றவில்லை. உடம்பெல்லாம் நடுங்கியது. இதயம் தாறுமாறாகத் துடித்தது. ‘என்ன சொல்றா இவ!’ – மரத்துப் போன மூளையால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை. அவனுடைய கையறுநிலையை எள்ளலாகப் பார்த்த பாரதி திருப்தியுடன் மாடிக்குத் திரும்பிச் சென்றாள். சபை சலசலத்தது.
“என்ன நடக்குது இங்க?” – பெருங்குரலெடுத்து அதிகாரத்தொனியில் இராஜேஸ்வரியை முறைத்தாள் பிரபாவதி. மகனுக்கு ஏற்பட்ட அவமானத்தை ஏற்கமுடியவில்லை அவளால்.
“வாயை மூடு பிரபா…” – மனைவியிடம் சீறினார் நரேந்திரமூர்த்தி. எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழந்துவிடக் கூடாது என்பது அவர் எண்ணம்.
உறவுகளுக்குள் முட்டிக்கொள்ளும் நிலை வந்ததும், விருந்தினர்கள் நாகரீகம் கருதி ஒவ்வொருவராக வெளியேறிவிட்டார்கள். இப்போது இரு குடும்பத்தினர் மட்டுமே மிஞ்சியிருந்தார்கள். யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்காமல் இறுகிப் போய் அமர்ந்திருந்தான் திலீப்.
‘எவ்வளவு பேருக்கு மத்தியில் அவமானப்படுத்திவிட்டாள்!’ – பிரபாவதியின் உள்ளம் கொதித்தது. துருவனும் மாயாவும் திகைப்பிலிருந்து மீளவே இல்லை. இராஜேஸ்வரி பதட்டத்தின் உச்சத்தில் இருந்தாள்.
“அண்ணா… பாரதி… இப்படி பண்ணுவான்னு நா நினைக்கவே இல்ல…” – குரலே எழும்பவில்லை அவளுக்கு. நரேந்திரமூர்த்தி அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
“சாரி அண்ணா… ஐம் வெரி சாரி…” – அண்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு அழுகுரலில் பேசினாள்.
“ம்மா ரிலாக்ஸ்… இட்ஸ் நாட் எ பிக் டீல். ஏன் இவ்வளவு டென்ஷனாகுறீங்க?” – எதுவுமே நடக்காதது போல் வெகு இயல்பாக தாய்க்கு சமாதானம் சொன்னான் தேவ்ராஜ்.
குபீரென்று பொங்கிய ஆத்திரத்துடன் தேவ்ராஜை முறைத்தான் திலீப். “நீதான் இல்ல… நீதான்… வேணுன்னே பழிவாங்கிட்ட ரைட்?” – சிவந்த விழிகள் இடுங்கப்பார்த்தான்.
“ஹே…ய்…! என்ன இது சின்ன புள்ள மாதிரி… ரிலாக்ஸ் மேன்… நா ஏன் உன்ன பழி வாங்கணும்? உனக்கு பாரதியை பிடிக்காதப்போ, நீ பிடிக்கலன்னு சொன்ன. இப்போ அவளுக்கு பிடிக்கல… அதை சொல்லிட்டு போறா. சிம்பிள் ஓகே? ச்சில்… கூல்….” – விஷமப்புன்னகையை மறைக்க முயன்றபடி பேசினான். கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாதவனை அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
மாயாவுக்கும் இராஜேஸ்வரிக்கும் கூட அவன் மேல் சந்தேகம் வந்தது. இவன் சொல்லித்தான் பாரதி இப்படி செய்திருப்பாள் என்றே தோன்றியது. நரேந்திரமூர்த்தி ஆடிப்போயிருந்தார். ஊசலாடும் மகளுடைய மானத்தை காப்பாற்ற எண்ணி மகனை அவமானப்படுத்தியாயிற்று. இனி மகள் நிலை? யோசனையோடு தேவ்ராஜை பார்த்தார்.
“இந்த கல்யாணத்துல பாரதிக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா… முடிஞ்சுடுச்சு… அடுத்து மதுராவை என்ன சொல்லி தட்டிக்கழிக்க போற?” – ஆற்றாமையுடன் கேட்டார்.
“ஏன் தட்டிக்கழிக்கணும்? பாரதிக்கு திலீப்பை பிடிக்கல. அதனால இந்த கல்யாணம் நின்னுடுச்சு. இதுல மதுரா தப்பு என்ன இருக்கு? எனக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கும். நிச்சயமா…” – சிறு புன்னகையுடன் கூறினான். அதில் ஒளிந்திருந்த கபடத்தை கவனித்துவிட்ட பிரபாவதியின் உள்ளம் கலங்கியது. கணவனின் கையைப் பிடித்து, அவரிடம் அதை உணர்ந்த முயன்றாள். ஒரு பயனும் இல்லை. மகளுடைய திருமணத்திற்காகத்தான் இவ்வளவும்… அது நடந்தால் போதும் என்கிற நிலையில் இருந்தவர், வேறு எதை பற்றியும் கவலைப்படுவதாக இல்லை. சந்தோஷமாக தேவ்ராஜிடம் கைகுலுக்கினார். அதை ஆவேசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திலீப்.
***********
அன்று இரவு பாரதி தேவ்ராஜை தேடி அவனுடைய அறைக்கு வந்தாள். டெரஸில் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். சிறு தயக்கத்துடன் அவனிடம் நெருங்கி, “தேவ் பாய்….” என்றாள். சிந்தனை களைந்து தங்கையை ஏறிட்டு பார்த்தான்.
“ஐம் சாரி” என்று தலை குனிந்தாள். அவளை ஆழ்ந்து நோக்கிய தேவ்ராஜ், “என்ன ஆச்சு திடீர்ன்னு?” என்றான். அவள் பதில் சொல்லாமல் உதட்டைக் கடித்து தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர முயன்றாள்.
“அவனை நீ லவ் பண்ணறேன்னு நெனச்சேன்”
“எஸ்… நா… திலீப்பை… லவ் பண்ணினது உண்மைதான். ஆனா… என்னோட சுயமரியாதையை விட லவ் பெருசு இல்ல…” – அவள் கண்களிலிருந்து கண்ணீர் மணிகள் உருண்டன.
“ம்ம்ம்… குட்…!” – தங்கையை மெச்சுதலாகப் பார்த்தவன், “யு ஆர் ரைட். சுயமரியாதையை விட காதல்… மண்ணாங்கட்டியெல்லாம் ஒண்ணும் பெருசு இல்ல…” என்று எழுந்து அவள் தோளில் தட்டிக் கொடுத்துப் பாராட்டினான்.
“எம்மேல உங்களுக்கு கோவம் இல்லையா பாய்?”
“நிச்சயமா இல்ல. சொல்லப்போனா உன்ன நெனச்சு நான் பெருமைப்படறேன். நீ என்னோட தங்கச்சி. நீ இப்படித்தான் இருக்கணும்…” – இவனை எப்படி சந்திக்கப் போகிறோம் என்றுதான் பயந்துக் கொண்டிருந்தாள். இப்போது மனபாரம் மொத்தமாய் இறங்கிவிட்டது. இன்று இரவு அவள் நிம்மதியாக உறங்குவாள். எத்தனை நாள் அவனுடைய நிராகரிப்பை நினைத்து அழுதிருப்பாள். எவ்வளவு வலியை சந்தித்திருப்பாள். இனி அனைத்திலிருந்தும் விடுதலை. அவள் மனம் லேசானது.
18 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Bharathi really its not fair…
Dileep avan parents kita sonan athuvum marriage proposal appo..
But ne engagement day appo relatives munadi solli irukka…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi Nithya…nice epi.,..intha twist ah yedhirparkave illai….but Bharathi senjadhu romba thappu…..avaluku pidikalaiya arambathileye solli irukanum ippadhi nadu sabayil Avamaanam paduthiyadhu romba thappu..,,
Dev madhura thirumanam urudhi nu sollitan…,avan kuralil yen andha egalchi? Avanoda thittam enna?
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi Hadhija…
Thank you so much… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
started reading ur story only now…very interesting story….what baharathi did was unfair. dhileep said no only to his parents, but bharathi ?? aval unmaiya love pannalaya? ellarkum ellaraiyum pidikanuma? i didnt like this attitude. dhileep has to give back to bharathi…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi Lavanya,
Welcome to Sahaptham…. Thanks for reading and sharing your views with me… like to see you every day here… Thanks again…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
பொது சபையில் திலீபை பிடிக்கவில்லை என்று பாரதி சொன்னது எனக்கு பிடிக்கவில்லை. .அவன் அப்படியா சொன்னான்?பிடிக்கும் பிடிக்கல சொல்ல கூட உரிமை இல்லையா என்ன?பாரதி காதலிச்சே சரி..அவன் காதலிக்கலையே…
அவனை எல்லோரும் முன்பு அவமதித்ததை அனுமதிக்க முடியாது. ..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
சபையில் அவமதிச்சது தப்புதான்… மன அழுத்தம்… சான்ஸ் கிடைச்சதும் போட்டு தாக்கிட்டா…
நன்றி உமா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ஏனோ பாரதி செய்தது சரி இல்லை என்று தோன்றுகிறது.. அவள் இப்படி செய்து இருக்க வேண்டாம்.. நிச்சயம் இதற்கு திலீப் பதிலடி கொடுக்க தான் வேண்டும்..
தேவ் இவன் வில்லன் தான்..
என்ன தான் தந்தை மீது கடுப்பு இருந்தாலும் , தாய் மாமா தானே அடைக்கலம் கொடுத்து இருந்தார்.. கொஞ்சம் அதை மனதில் வைத்து, தங்கைக்கு சொல்லி புரிய வைத்து இருக்கலாம்..
மதுரா பயந்து இருக்கிறாள். அவள் பயத்தை இனி தேவ் தான் போக்கணும் .. அவன் என்ன நினைக்கிறான் என்று இப்பொழுது வரை புரியாத புதிர் தான்..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ஒருதலை காதலும் வலிக்கும்… பக்குவம் இருப்பவர்கள் ஒதுங்கி போய்விடுவார்கள். இல்லாதவர்கள் பழிவாங்க நினைப்பார்கள்…வாய்ப்பு கிடைத்தால் தவற விடமாட்டார்கள்… பாரதி இரண்டாவது ரகம்…
நன்றி உமா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi mam
இன்று மற்றுமொரு பகுதி இல்லையா.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
இன்னிக்கு ரொம்ப வேலைப்பா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi mam
குடும்பமே இப்படித்தானா அடுத்தவன் வருத்தத்தில் சந்தோசபடும் குடும்பமா,திருமணம் பேசும்போது ஒருத்தரை பிடித்திருக்கின்றது அல்லது இல்லையென்று சொல்ல ஒருவருக்கு உரிமையில்லையா,அதைதான் திலீப் செய்தார்,இதில் பாரதிக்கு சுயமரியாதை எங்கிருந்து வந்தது தெரியவில்லை,நல்ல அண்ணன் தங்கச்சிகள் நல்லா வருவார்கள்,தேவ் தன் மாமனுக்கும் திலீப்பிற்கும் பதிலடி கொடுத்தாலும் ,தன் காரியத்தில் கண்ணாக இருந்து திருமணத்திற்கு சம்மதம் கொடுத்தாச்சுது ,தேவ் வில்லாதி வில்லன்தான்.
நன்றி
இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்து
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
அவங்க அப்பா குணம்… தப்பு தன்பக்கம் இருந்தாலும் தன்னை யாரும் அவமதிக்க கூடாதுன்னு நினைக்கறாங்க. தான் என்ன நினைத்தாலும் நடக்க வேண்டும் என்கிற பிடிவாதம்… மூவருக்குமே பொதுவான குணம்…
நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
அடக் கடவுளே… அவன் ஊரை கூட்டியா பிடிக்கலைனு சொன்னான்.. பாரதி பண்ணது தப்பு னு தோணுது
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ஹாய் வத்சலா…
தப்புதான்… ஆனா ஒருதலை காதல் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது… சரி தவறை அலசிப்பார்க்க எல்லோருக்கும் முடிவதில்லை… ஆனாலும் அவள் செய்தது தவறுதான்… நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ஒவ்வொரு அத்தியாத்திலும் ஒரு குண்டு.
நடத்து நித்யா…மது ஏதாவது செய்வாளா..?????
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
செய்வாள் செய்வாள்… செய்யாமல் எப்படி…! 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
தோழமைகளுக்கு தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
கனல்விழி காதல் அத்தியாயம் – 24 பதிவேற்றம் செய்துவிட்டேன்.படித்துவிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள்…
அன்புடன்,
நித்யா கார்த்திகன்…