Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 30

அத்தியாயம் – 30

திருமணமாகி இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது. இன்னும் ஒருமுறை கூட மதுரா தன் பெற்றோர் வீட்டிற்கு செல்லவில்லை. பிரபாவதி, தினமும் போனில் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். மதுராவிற்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் தேவ்ராஜ் இசைய வேண்டுமே! இதுபற்றி இராஜேஸ்வரி எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்துவிட்டாள். அவன் காதுகொடுத்து கேட்பதே இல்லை. வாரம் முழுக்க பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறான் என்பது உண்மைதான். ஆனால் உலகமே தலைகீழாய் புரண்டாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் அலுவலகத்திற்கு செல்ல மாட்டானாம். அன்றைக்காவது தன் பெற்றோரை சந்திக்க அவளை அழைத்துச் செல்லலாம் அல்லவா? – மதுராவின் மனம் கவலை கொண்டது.

 

இன்று சனிக்கிழமை. அலுவலகத்திலிருந்து வந்ததும் நாமே பேசிப் பார்த்துவிடலாம். நாளை நிச்சயம் ஜூஹூ சென்றே ஆகவேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் தேவ்ராஜின் வருகைக்காக காத்திருந்தாள்.

 

‘மைல்ஸ்டோன்’ சென்று வெகுநாட்களாகிவிட்டது. நாளை ஞாயிற்றுக் கிழமைதான். சிறிதுநேரம் நீந்திவிட்டு வரலாம் என்று நினைத்து அலுவலகத்திலிருந்து நேராக ‘ஃபிட்னெஸ் சென்டரு’க்கு சென்றான் தேவ்ராஜ். மனதில் சேர்ந்திருக்கும் அழுத்தத்தை நீந்திக் கரைக்கலாம் என்கிற அவனுடைய எண்ணம், மைல்ஸ்டோன் கேம்பஸிற்குள் நுழைந்ததுமே காற்றில் கரைந்த கற்பூரம் போல் காணாமல் போனது. அவன் உள்ளே ஒதுக்கி வைத்திருந்த பழைய நினைவுகள் ஆழிப்பேரலைபோல் மேலே பொங்கியெழுந்தன.

 

இதே இடத்தில்தான் சில நாட்களுக்கு முன் மதுரா, கிஷோரோடு நெருக்கமாக இருந்தாள். அவனோடு சிரித்துப் பழகினாள். அன்று அவள் முகத்திலிருந்த பூரிப்பையும் நாணத்தையும் நினைக்கும் போதே உள்ளம் எரிந்தது. மனபாரம் இருமடங்காக பெருகிவிட, இறுகிய முகத்துடன் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, ஸ்டியரிங் வீலிலேயே தலை கவிழ்த்து படுத்துவிட்டான்.

 

‘அதெல்லாம் திருமணத்திற்கு முன் நடந்தது. அதை பற்றி யோசிக்கக் கூடாது. அவள் மீது எந்த தவறும் இல்லை. நடந்ததை விட்டுவிடு…’ என்று அறிவு அடித்துக் கொண்டாலும் மனம் குமுறிக் கொண்டுதான் இருந்தது. அவனால் மறக்க முடியவில்லை அன்றைய நினைவிலிருந்து வெளியே வரமுடியவில்லை. மனம் புழுங்கியது. கோபம் பொங்கியது. இதற்கு மேல் இங்கு இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று அஞ்சி, காரை வீட்டிற்குத் திருப்பினான்.

 

அவன் வீட்டிற்கு வரும் பொழுது மதுரா தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். அவனுடைய காரை கண்டதும் ஆர்வத்துடன் முன்னோக்கி வந்தவள், கடுகடுவென்றிருக்கும் அவன் முகத்தைக் கண்டதும் சற்று தங்கினாள். போதா குறைக்கு, அவளை பார்த்தாலே ஏதாவது பேச்சு கொடுக்கும் தேவ்ராஜ், இன்று கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றான். மதுராவின் புருவம் சுருங்கியது. அவன் கோபமாக வந்திருக்கிறான் என்பது புரிந்தது. சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டால் சாதாரண மனநிலைக்கு வந்துவிடுவான். அதற்கு பிறகு நாம் பேசிக்கொள்ளலாம் என்று எண்ணி தோட்டத்திலேயே சற்று நேரம் இருந்தாள்.

 

அவனிடம் பேச வேண்டும். எப்படி ஆரம்பிப்பது! – யோசித்த யோசனையில் கைவிரல் நகங்களெல்லாம் கதறின. மூளையை கசக்கி, என்ன பேச வேண்டும், எப்படி பேசவேண்டும் என்பதையெல்லாம் மனதில் உருப்போட்டு தன்னை தயார்படுத்திக் கொண்டு மாடிக்கு வந்தாள்.

 

‘எங்கே போனான்!’ – பளிங்கி போல் உருண்டு அறையை வட்டமிட்டன அவள் விழிகள். டெரஸிலும் அவனை காணவில்லை. குளியலறைக்கு அருகில் சென்று நின்று தண்ணீர் சத்தம் கேட்கிறதா என்று கவனித்தாள். இல்லை… ஒரு சத்தமும் கேட்கவில்லை. கதவு குமிழில் கைவைத்து மெல்ல திருகிப் பார்த்தாள். திருக முடிந்தது… ‘இங்கேயும் இல்லை போலிருக்கிறதே!’ – சந்தேகத்துடன் கதவை லேசாக தள்ளிப்பார்த்தாள். அவள் நினைத்தது சரிதான்.

 

‘எங்க போயிருப்பான்!’ – சிந்தனையுடன் வெளியே வந்தவளின் கண்ணில், ரெஜினா தென்பட்டாள்.

 

“ரெஜினா… தேவ்… ம்ம்ம்… எங்கன்னு… தெரியுமா?” – தயக்கத்தை மறைக்க முயன்றபடி கேட்டாள்.

 

“சார் ‘ஜிம்’ல இருக்காங்க மேம்”

 

“ஜிம்!!!” – புரியாமல் பார்த்தாள்.

 

“எஸ் மேம்… செகண்ட் ஃபிலோர்” – ‘இந்த வீட்டில் இரண்டாம் தளம் இருக்கிறது என்பதே இப்போதுதான் தெரிகிறது! என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!’ – எதிரிலிருப்பவளிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல், “தேங்க்ஸ்” என்று முணுமுணுத்துவிட்டு மேலே வந்தாள்.

 

அவ்வளவு பெரிய ஜிம்மிற்குள் நுழைந்ததுமே அவளுடைய பார்வையை காந்தம் போல் ஈர்த்தது, ‘பஞ்சிங்’ பையோடு மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டிருந்த தேவ்ராஜ்தான். இறுக்கமான பனியனும் பர்முடாஸும் அணிந்திருந்தான். நெற்றி நரம்பு புடைத்திருந்தது. உடல் வியர்வையில் குளித்திருந்தது. முகம் இருகியிருந்தது. ஏதோ ஜென்ம எதிரியை தாக்குவது போல் ‘பஞ்சிங்’ பையை துவம்சம் செய்து கொண்டிருந்தான். அவனுடைய தாக்குதலில் குறுக்கிடவே மதுராவிற்கு பயமாக இருந்தது. திரும்பிச் சென்றுவிடலாமா என்று கூட நினைத்தாள். ஆனால் பேச வேண்டுமே… எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக.

 

தொண்டையை செருமி அவனுடைய கவனத்தை ஈர்க்க முயன்றாள். தூங்குபவனை எழுப்ப முடியும். ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்ப முடியும்? மதுராவின் வரவை இவ்வளவு நேரம் அவன் உணராமல் இருப்பானா என்ன! அவ்வளவும் அழுத்தம்…

 

அவனுடைய குத்துக்களின் வேகம் இன்னும் அதிகமானது. அவன் ஏதோ கோபத்தில் இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்ட மதுரா அங்கிருந்து சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தாள். ஆனால் உள்ளுக்குள் ஒரு சின்ன தைரியம். ‘அப்படி ஒன்றும் நம்மை காயப் படுத்திவிடமாட்டான்’ – நம்பிக்கை கொடுத்த தைரியத்தில், “கொஞ்சம் பேசணும்” என்றாள்.

 

“பிஸியா இருக்கேன்” வேகமான மூச்சுகளுக்கு இடையில் அழுத்தமாக கூறிவிட்டு தன் வேலையில் கவனமாக இருந்தான்.

 

“ப்ளீஸ்…” – தழைத்தது அவள் குரல். சட்டென்று பஞ்சிங் பையை பிடித்து நிறுத்தினான். ஆனால் அவளை பார்க்கவில்லை.

 

“என்ன வேணும்?” – எரிச்சலுடன் வெளிப்பட்டது அவன் குரல்.

 

“நாளைக்கு நீங்க ஃப்ரியா?” – இதே கேள்வியை அவள் நேற்று கேட்டிருந்தால் பதில் வேறுமாதிரியாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய மனநிலை அவனுடைய கட்டுக்குள் இல்லை.

 

“உனக்கு என்ன வேணுமோ அதை மட்டும் சொல்லு?” – சட்டென்று அவள் பக்கம் திரும்பி கடுமையாக முறைத்தான்.

 

பயத்தை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு, “நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஜுஹு போயிட்டு வரலாம். அம்மா கேட்டுட்டே இருக்காங்க. டாடி கூட ஆசைப்படறாங்க” என்றாள்.

 

“எனக்கு வேலை இருக்கு”

 

“கல்யாணம் ஆனதுலேருந்து நாம அங்க போகவே இல்லை”

 

“உனக்கு வேணுன்னா நீ போயிட்டு வா” – மீண்டும் பஞ்சிங் பையை கவனிக்க துவங்கினான்.

 

“ரெண்டு பெரும் சேர்ந்துதான் போகணும்” – சிறு பிடிவாதம் தெரிந்தது அவள் குரலில். வியப்புடன் அவளை திரும்பிப் பார்த்தான். ஆதிரா பிடிவாதம் பிடிக்கும் பொழுது எப்படி இருப்பாளோ அதே போல் தோன்றினாள்.

 

‘இன்று நம் கண்களுக்கு குழந்தை போல் தெரிகிறவள் அன்று எப்படி அவனோடு குழைந்தாள்!’ என்கிற எண்ணம் சட்டென்று தோன்ற அவன் நெஞ்சம் பற்றி எரிந்தது.

 

“டோன்ட் ஆக்ட் லைக் எ பேபி ஓகே. நா ஒண்ணும் முட்டாள் இல்ல” – ‘குழந்தை மாதிரி நடிக்காத. உன்னை நம்பறதுக்கு நான் ஒண்ணும் மடையன் இல்ல…’ என்றான் முகத்தை சுளித்துக் கொண்டு.

 

அவளுடைய உதடுகள் துணித்தன. கண்கள் கலங்கின. அவனுடைய சுடுசொல் அவளை ஆழமாகக் காயப்படுத்தியது. அதை ஜீரணிக்க சற்று அவகாசம் எடுத்துக் கொண்டவள், “நமக்கு கல்யாணம் ஆயிடிச்சு. என்னோட அப்பாம்மா வீட்டுக்கு நீங்க வந்துதான் ஆகணும். உங்களுக்கு பிடிச்சாலும்… பிடிக்கலானாலும்…” – மெல்லிய குரலில்தான் என்றாலும் அவனுடைய வார்த்தையை அவனுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டாள்.

 

குத்திக் கொண்டிருந்த பையை சட்டென்று பிடித்து நிறுத்திவிட்டு அவள் பக்கம் திரும்பினான் தேவ்ராஜ். சற்று முன் பேசியது தானே அல்ல என்பதுபோல் தலைகுனிந்து பாந்தமாக நின்றுக் கொண்டிருந்தாள். ‘உனக்கு இப்படிக்கு கூட பேசத் தெரியுமா!’ – அவளை பற்றிய தன்னுடைய ஒவ்வொரு கணிப்பும் தவறாகி கொண்டிருக்கும் கோபத்தில், “நா விரும்பி இந்த கல்யாணத்தை பண்ணிக்கல. கடமைக்காக உன் கழுத்துல தாலி கட்டினேன். கடமைக்காக வாழ்ந்துட்டு இருக்கேன். புரியுதா?” என்றான்.

 

உள்ளுக்குள் சுருக்கென்றது. தெரிந்த விஷயம்தான். ஆனால் அதை அவன் வாயால் கேட்கும் பொழுது ஏன் இப்படி வலிக்கிறது! – துடிக்கும் கீழுதடை கடித்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டவள், “எனக்கு அப்படி தோணல” என்றாள்.

 

அவன் அவளை கூர்ந்து பார்த்தான். “நீ உண்மையா உணர்ந்துதான் சொல்றியா?” என்றான்.

 

அவள் ஆம் என்பது போல் தலையசைத்தாள். சற்றுநேரம் அவள் முகத்தை பார்த்தபடியே யோசித்தவன், “எப்ப போகணும்?” என்றான்.

 

‘என்ன!’ – என்ன சொல்கிறான் என்பதை உணர்ந்துகொள்ளவே ஓரிருநிமிடங்கள் பிடித்தது. ஆனால் புரிந்துகொண்ட கணமே குபீரென்று பொங்கிய ஆனந்தத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகமெல்லாம் பரவசம்… மகிழ்ச்சி… “ஆர் யு சீரியஸ்?” – நேர்மறையான பதிலைத்தான் கொடுப்பான் என்கிற நம்பிக்கையுடன் கேட்டாள். அவளை ஏமாற்றாமல், ஆமோதிப்பாக தலையசைத்தான் தேவ்ராஜ். புன்னகையில் மலர்ந்தது அவள் முகம். ஒரே நொடியில் எத்தனை பெரிய மாற்றம் அவளிடம்! – ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“நாளைக்கே போகலாமே… ஞாயிற்று கிழமைதானே…” – துள்ளியது அவள் உள்ளம்.

 

“ஆல் ரைட். ப்ரோக்ராம் பிக்ஸ் பண்ணிடு” – அலட்டிக்கொள்ளாமல் கூறினான்.

 

‘ஒத்துக்கிட்டான்! ஒத்துக்கிட்டான்! ஹேய்…’ – மனம் கூக்குரலிட்டது. எதையோ சாதித்துவிட்டது போல் கொண்டாட்டம் போட்டது. ஆயிரம் முறை அவனுக்கு நன்றி கூறிவிட்டு கீழே வந்து, அலைபேசியில் பெற்றோரை அழைத்து விஷயத்தை சொன்னாள். மருமகன் விருந்துண்ண வரப்போகிறான் என்கிற ஆனந்தம் அவர்களையும் தொற்றிக்கொள்ள ஏற்பாடுகள் தடபுடலாகின.

 

 
15 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Umamanoj says:

  கிஷோரிடம் பேசியது தேவ்க்கு பொறாமையா இருக்கு..என்ன ஒரு கோபம். .இருந்தாலும் அவ மேல மென்மையும் இருக்கு..கோபத்தில் கடமைக்காக வாழுறேனு சொல்றான்..மென்மையான உணர்வு இருந்தாலும் ஒத்துகிட்டா தேவ் கெத்து என்னாகிறது!!!😀😀😀


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   ஆமாமாம்… அவன் கெத்து என்ன ஆகிறது…. எல்லாம் கடைசில தெரியும்… 😀


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pons says:

  ஏதேனும் உள்குத்து இருக்கா…டேய் மதுவை அங்கே வருத்தப்பட வச்ச…இருக்கு


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   வருத்தப்பட வைக்கிறது தானே அவன் வேலை… அவன் வேலையில நீங்க ஏன் குறுக்கிடறீங்க ??? 🙂 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Mercy Aruna says:

  Dev heart is full of jealousy and possessiveness.
  Happy to know that Madhura is able to find out his liking over her.Give updates in your convenience Nithya, we will wait and read.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Hi Aruna,
   Happy to see you again… Thank you so much… share your comments with me often… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  wowwwwww superrrrr ud sis


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Hi Ugina, Thank you so much pa… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha khaliq says:

  அம்மாடியோ யார் மேல் உள்ள கோபத்துல அதை இந்த குத்துகுத்துறான்…..அவன் உண்மையாக சொன்னானா நம்பமுடிநவில்லையே இல்லை எதாவது திட்டம்போட்டு வைத்திருக்கானா?


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   ஹா ஹா… எல்லாம் மதுராமேல உள்ள கோவம் தான்… அவளை குத்துனா செத்துடுவா… அதான் பஞ்சிங் பேகை குத்தறான்… 😀


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  என்ன மதுரா ஓரளவு தன்னை உணர்ந்திருக்கின்றார் என்று புரிந்ததால்தான் இப்போது மதுரா வீட்டிற்கு போவதற்கு சம்மதம் சொன்னாரா தேவ்.

  நன்றி

  நீங்கள் உங்களுக்கான நேரத்தை எடுத்து எழுதியபின் எங்களுக்கு தாங்க mam,நாங்க ஆர்வக்கோளாறில் புரியாமல் கேட்டுவிட்டோம்,sorry mam.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   அட கடவுளே! இன்னமுமா நீங்க அவனை நம்பறீங்க. மதுராவுக்கு மேல அப்பாவியா இருப்பீங்க போலருக்கே!!!

   நன்றி தாட்சாயணி.. 🙂

   சாரிலாம் வேணாம் ப்ளீஸ்… 😀


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya says:

  Super. Aana eipatum DAV athavathu twist vaichce erupan.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you so much Priya… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  admin says:

  கமெண்ட் கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் மனமார்ந்த நன்றி… சாரி ஃபிரண்ட்ஸ்… டெய்லி 2 எபிஸோடு கொடுக்கணும்னு எனக்கும் ஆசைதான்… கெபாசிட்டி இருக்கணும்ல… முடியல… ஸ்பீடா எழுதினா திரும்ப படிச்சு பார்க்கும் திருப்தியா இருக்க மாட்டேங்குது… நிறைய மிஸ்டேக்ஸ் தெரியுது… முடிஞ்ச அளவுக்கு நிறைய கொடுக்க முயற்சி பண்ணறேன்.நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத ஆரம்பிச்சதால இந்த தடுமாற்றம் இருக்கும்னு நினைக்கறேன். போக போக இன்னும் இம்ப்ரூவ் பண்ணிக்க பார்க்கறேன். தொடர்ந்து எனக்கு அழுத்தம் கொடுத்து அதிகமா எழுத தூண்டற அனைத்து தோழிகளுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்லிக்கறேன்… நன்றி தோழிகளே…

  தனித்தனியா ரிப்ளை பண்ண முடியாத அளவுக்கு எபிஸோடு டைப் பண்ண சொல்லி விரட்டுறீங்க… மதியத்துக்கு மேல இன்னொரு எபிஸோடோட எல்லா கமெண்ட்ஸுக்கும் ரிப்ளை பண்ணறேன். பை ஃபிரண்ட்ஸ்…