Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

kanalvizhi 36

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 36

அத்தியாயம் – 36

மொட்டைமாடியில் அமைக்கப்பட்டிருக்கும் அழகிய பூந்தோட்டம் இன்று ஏராளமான மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் மிளிர்ந்தது. ஒளிரும் பௌர்ணமி நிலவு அவள் அழகிற்கு மேலும் மெருகூட்ட. இமைக்கவும் மறந்து பார்வையால் அவளை பருகினான் தேவ்ராஜ். குளிர்தென்றல் காற்று சுகமாய் வருட, அவளோடு நெருங்கி நின்று கரம்பற்றிக் கொண்டான். அவள் மறுக்கவில்லை. அந்த சூழ்நிலை அவளையும் சற்று மயக்கியிருந்தது. அதோடு கடந்த சில நாட்களாய் அவனிடம் தெரியும் மாற்றமும் அவள் மனதை தொட்டிருந்தது.

 

“பிடிச்சிருக்கா?” – அவன் கண்களில் தெரிந்த நெருக்கமும் குரலிலிருந்த கிரக்கமும் அவளுக்குள் வெட்கத்தை உண்டாக்க சட்டென்று குனிந்துக் கொண்டாள். உதட்டில் புன்னகை தவழ்ந்தது.

 

“பதில் சொல்லமாட்ட… ம்ம்ம்?” – செவியில் தீண்டிய அவன் மூச்சுக்காற்றில் சிலிர்த்துப்போனவள் சட்டென்று தலையை சரித்து, நாணத்துடன் விலகினாள். மறு நொடியே அவன் கரம் அவளை தோளோடு வளைத்தது… அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

 

“பதில் சொல்லு….” – அணைப்பை இறுக்கினான்.

 

“இதெல்லாம் உங்களோட ஏற்பாடா?” – இருபொருள்பட அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வெட்கி, அவள் வேறு ஒரு கேள்வியை கேட்டாள்.

 

அதில் சிறிது ஏமாற்றம்தான் அவனுக்கு. ஆனாலும் அதை ஒதுக்கிவிட்டு அவளுக்கு பதிலளித்தான். “உன்னோட அண்ணனும் என்னோட தங்கையும் சேர்ந்து செஞ்ச ஏற்பாடு…”

 

இந்த ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று துருவன் விரும்பியிருக்கலாம். ஆனால் செய்து முடித்தது மாயாவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினாள் மதுரா. ஏனென்றால், எதை செய்தாலும் அதை முழு ஈடுபாட்டோடும் நேர்த்தியாகவும் செய்வதில் மாயா கெட்டிக்காரி. இன்றும் இந்த கேண்டில் லைட் டின்னரை மிக அருமையாக ஏற்பாடு செய்திருந்தாள்.

 

“என்ன யோசிக்கற?”

 

“ம்ஹும்…” – எதுவும் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

 

“ஹங்ரி?”

 

“ம்ஹும்…” – புன்னகையுடன் தலையை குறுக்காக ஆட்டினாள்.

 

“சரி வா… சாப்பிடலாம்”

 

“பசிக்கலன்னு சொன்னேன்”

 

“சாப்பிட உட்கார்ந்தா பசி தானா வரும். வா…” – விளக்கொளிக்கு மத்தியில் அழகாய் அரேஞ் செய்யப்பட்டிருந்த டின்னர் டேபிளுக்கு அவளை அழைத்துச் சென்றான். அவளுக்காக சேரை இழுத்து அமரச் சொன்னான். அவள் அமர்ந்த பிறகு தனக்கான இருக்கையில் வந்து அமர்ந்தவன், அவளுக்காக பரிமாறவும் செய்தான்.

 

கண்முன் நடப்பதெல்லாம் கனவு போல் தோன்றியது மதுராவிற்கு. ஆரம்பத்தில் அவளை எவ்வளவு அலட்சியமாகப் பார்த்தான்… எவ்வளவு விறைப்பாக இருந்தான்! இப்போது நேர் எதிராக மாறிவிட்டானே! – வியப்புடன் பார்த்தாள்.

 

“என்ன யோசிச்சிட்டு இருக்க… என்னை பத்தி?” – புன்னகையுடன் புருவம் உயர்த்தினான்.

 

“நீங்க யாருன்னு யோசிக்கறேன்”

 

“பதில் கிடைச்சதா?”

 

அவள் இல்லை என்பதுபோல் தலையசைத்தாள். “அப்போ நீ இன்னும் என்னை பத்தி அதிகமா யோசிக்கணும். எனக்குள்ள ஆழமா இறங்கி ஆராய்ச்சி பண்ணனும்… ஒருவேளை பதில் கிடைக்கலாம்…” – உதட்டில் தோன்றிய புன்னகையை மறைத்துக் கொண்டு மீசை நுனியை மேல்நோக்கி உயர்த்திவிட்டான்.

 

அவள் சிரித்துக் கொண்டே, “நீங்க சொல்ல மாட்டீங்களா?” என்றாள்.

 

மறுப்பாக தலையசைத்தவன், “நா யாருன்னு நீதான் கண்டுபிடிச்சு சொல்லணும்” என்றான். அதை சொல்லும் பொழுது அவன் கண்களில் நொடியில் தோன்றி மறைந்த வலியை அவள் கவனித்தாள். ஆனால் காரணம் புரியவில்லை. கேட்டாலும் சொல்ல மாட்டான்.

 

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா. அவனுக்குள் ஏதோ ஒரு மனச்சிக்கல் இருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு. அவனுடைய கடுமையான கோபத்துக்கு கூட அதுதான் காரணமாக இருக்கக் கூடும் என்று எண்ணினாள். அதை எப்படியாவது களைந்து அவனுக்குள் நிம்மதியை கொண்டு வரவேண்டும் என்று ஆவல் கொண்டாள்.

 

உண்மையில் அந்த விருந்தை ஏற்பாடு செய்வதில் மாயாவிற்கு சிறிதும் விருப்பம் இல்லை. பல காரணங்களுக்காக அவள் மதுராவின் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள். இப்போது திலீப்பும் சந்தோஷமாக திருமணம் செய்துக்கொள்ள போகிறான். ஆனால் பாரதி! – தன் கணவனைத் தவிர, அந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் அவள் வெறுத்தாள். அதிலும் மதுரா! ஊமை கோட்டான் போல் இருந்துக் கொண்டு, தேவ் பாயையே வளைத்துவிட்டாளே என்று கருவினாள். மனைவியின் மனவோட்டத்தை அறியாத துருவன், புதுமண தம்பதிக்கு டின்னர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்பினான். சிம்பிளாக ஹோட்டலில் டேபிள் புக் செய்துவிடலாம் என்று கூறினாள். அந்த திட்டத்தை அவன் விரும்பவில்லை.

 

“தேவ்தான் நம்ம வீட்டுக்கு வரல. நாம அவங்க வீட்டுக்கு போயி விருந்து கொடுப்போம். என்ன இருந்தாலும், ரெண்டு வழியிலேயும் தேவ் என்னோட மச்சான் இல்லையா! அதோட மதுராவும் சந்தோஷப்படுவா…” என்றான்.

 

அது மாயாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பாரதியின் துன்பத்தை அதிகப்படுத்துவது போல் அந்த வீட்டில்தான் விருந்து கொடுக்க வேண்டுமா என்று புகைந்தாள். கணவனிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவனை மறுக்க முடியாமல், விருதுக்கான ஏற்பாடுகளை செய்தாள். ஆனால் அந்த இரவு விருந்தும், அது கொடுத்த தனிமையும்… ரம்யமான சூழ்நிலையும் அவர்களுடைய உறவு பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

அந்த விருந்துக்கு பிறகு அவர்களுக்குள் அன்யோன்யம் அதிகமானது. எந்த சலசலப்பும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தார்கள். அவளோடு தன்னை நெருக்கமாக பிணைத்துக்கொள்ள தேவ்ராஜ் பிரயத்தனப்பட்டான். அவனை முழுவதுமாக புரிந்துக்கொள்ள மதுரா முயற்சி செய்தாள். அவன் நினைத்ததை சாதித்தான். ஆனால் அவளுக்கு பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. அவன் மிகவும் அழுத்தமாக இருந்தான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவனைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று அவனிடம் பேச்சுக் கொடுப்பாள். ஆனால் அந்த பேச்சை, சீண்டலாகவும் கேலியாகவும் மாற்றி சுலபமாக சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்றி, நினைத்ததை சாதித்துக்கொள்வான். அதில் அவளுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் அவள் நினைத்தது நிலுவையிலேயே நிற்கிறதே!

 
6 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  VILLANGUMEENAA NALUVARAANAY
  MAYA UNAKKU BUNNAAAAA


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி தோழி…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pons says:

  வழிக்கு வர்றானா..?


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி தோழி…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  தேவ்வுக்கு என்னதான் பிரச்சனை,இப்போது தான் விரும்பும் தன் மனைவியிடமாவது மனம் விட்டுப்பேசலாம்தானே,அதில் என்ன கௌரவக்குறைவு,ஒருத்தரை ஒருவர் புரிந்து கொள்ள முயல்வதே நல்ல அறிகுறிதான், இனிமேல் தேவ் மதுராவை காயப்படுத் விரும்பமாட்டார்.

  நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி தோழி…

error: Content is protected !!