Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

kanalvizhi 37

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 37

அத்தியாயம் – 37

அன்று வழக்கத்தைவிட தாமதமாக வீட்டிற்கு வந்த தேவ்ராஜ் மிகவும் இறுக்கமாக இருந்தான். யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தான். மதுரா பொதுவாக பேச்சு கொடுத்துப் பார்த்தாள். அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவளுடைய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்துவிட்டு பேச்சை முடித்துக் கொண்டான். இரவு உணவின் போது கூட அவனிடம் இளக்கம் இல்லை. மகனுடைய மனநிலை மாற்றத்தை கண்டுகொண்ட இராஜேஸ்வரி, “ஏதாவது பிரச்சனையா தேவ்?” என்றாள். அவன் தாயை நிமிர்ந்து பார்த்தான். ஆழமான பார்வை.

 

“என்ன ஆச்சு?” என்றாள் இராஜேஸ்வரி. இப்போது மதுராவிடம் இடம்மாறிய அவன் பார்வை அவளை கடுமையாக குற்றம்சாட்டியது. திகைப்புடன் அவனை நோக்கினாள் மதுரா.

 

அவன் மதுராவின் மீது ஏதோ கோபத்தில் இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்ட இராஜேஸ்வரி “ஏதாவது பிரச்சனையாப்பா…?” என்றாள் பதட்டத்துடன். இப்போதுதான் வாழத் துவங்கியிருக்கிறார்கள். அதற்குள் என்ன பிரச்சனை முளைத்துவிட்டது என்கிற தவிப்பு அவளுக்கு.

 

மனைவியின் மீது பதித்த பார்வையை விளக்கிக்கொள்ளாமல், “ம்ஹும்… ஒண்ணும் இல்ல…” என்று தலையை குறுக்காக அசைத்தான் தேவ்ராஜ். அவனுடைய அமைதியும் குரலிலிருந்த அழுத்தமும் ஆபத்தின் அறிகுறியாக்கப்பட்டது. கண்களில் பயத்துடன் மதுரா அவனைப் பார்க்க, நடந்து கொண்டிருக்கும் நாடகத்தை சுவாரஸ்யமாக வேடிக்கைப் பார்த்தாள் பாரதி.

 

உணவுவேளை முடிந்ததும் நேராக தன்னுடைய அறைக்கு வந்தவன், மடிக்கணினியோடு டெரஸிற்கு சென்று அமர்ந்துவிட்டான். அவனுடைய வித்தியாசமான நடவடிக்கையில் கலக்கமுற்றாள் மதுரா. அவனிடம் நெருங்கி, பிரச்னையை தெரிந்துக் கொண்டு, விளக்கம் கூறியபடி அவன் மார்பில் சாய்ந்துகொள்ள தோன்றியது. அவனிடமிருந்து விலகியிருப்பது பெரிய பாறையை விழுங்கியது போல் கனத்தது.

 

ஒரு பக்கம் ஆசை அலைமோத, மறுபக்கம் பயம் பின்னோக்கி இழுத்தது. இருவேறுபட்ட உணர்வுகளுக்கிடையே சிக்கிக் கொண்டு போராடியவள், “இப்போது பேசலாமா… அப்போது பேசலாமா’ என்கிற சிந்தனையுடன் அறையிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.

 

கண்கள் கணினியில் இருந்தாலும் கவனம் முழுவதும், குட்டிப்போட்ட பூனைபோல் சுற்றிக் கொண்டிருக்கும் மனைவியின் மீதே இருந்தது தேவ்ராஜிற்கு. அவள் தன்னிடம் வந்து பேச வேண்டும் என்று காத்திருந்தான். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் வரவில்லை… தன்னுடைய முகத்திலிருக்கும் கடுமைதான் அவளை தள்ளி நிறுத்துகிறது என்கிற உண்மையை அவன் உணர்ந்து கொள்ளவில்லை. எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் கோபமாய் மாறி அவனுக்குள் அழுத்தத்தை அதிகரிக்க… சட்டென்று கணினியை மூடிவிட்டு, “மதுரா…” என்று உரக்க அழைத்தான்.

 

அவன் குரலிலிருந்த ஆக்ரோஷத்தில் அரண்டு போன மதுரா, நடுக்கத்துன் ஓடிச் சென்று அவன் எதிரில் நின்றாள். அவளை முறைத்துப் பார்த்தவன், “உட்காரு” என்று எதிரில் கிடந்த பிரம்பு நாற்காலியை சுட்டிக் காட்டினான். தயக்கத்துடன் அமர்ந்தாள்.

 

“என்கிட்ட ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறியா?” என்றான் அவளை கூர்ந்து பார்த்து. அவளுடைய புருவம் சுருங்கியது. எதை நினைத்து கேட்கிறான் என்று யோசித்தாள். அவளுக்கு புரியவில்லை. ஒருவேளை கிஷோரை பற்றி கேட்கிறானோ! – கணவனின் முகத்தை கூர்ந்து பார்த்தாள். ஆம்… அந்த விஷயம்தான் அவனை உறுத்தக் கூடும். நின்று போன திருமணத்தை தவிர அவளிடம் வேறு என்ன குறை காண முடியும்! அவனுடைய கோபத்திற்கான காரணத்தை ஊகித்தவள் இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.

 

“பதில் சொல்லு மதுரா…” – அடிக்குரலில் எச்சரித்தான் தேவ்ராஜ்.

 

“இல்ல… எதுவும் இல்ல…” – முணுமுணுத்துவிட்டு எழுந்தாள்.

 

“உக்காரு…” – முகம் சிவக்க அதட்டினான். சட்டென்று மீண்டும் சேரில் அமர்ந்துக் கொண்டாள். அவனுடைய அதட்டலும் மிரட்டலும் அவளுக்குள் கிளியை ஏற்படுத்தியது.

 

“திமிரு?” என்று அவளை கூர்மையாக பார்த்தவன், “எப்பவும் ஒரே மாதிரி இருக்கமாட்டேன். உனக்கு நல்லாவே தெரியும்… பேசிக்கிட்டிருக்கும் போதே எழுந்திருக்கிற?” என்றான் கடுங்கோபத்துடன். அவள் அமைதியாக தலைகுனிந்துக் கொண்டாள். கடந்த சிலநாட்களாக அவன் காட்டிய அன்பிற்கு அர்த்தமே இல்லாதது போல் தோன்றியது. எல்லாம் கனவோ என்று எண்ணினாள். கண்கள் சிவக்க அவள் முகத்தையே உறுத்துப் பார்த்தவன், “சோ… என்கிட்ட சொல்லறதுக்கு உனக்கு எதுவுமே இல்ல?” என்றான். அவன் குரலிலிருந்த ஏளனம், சுருக்கென்று அவள் மனதில் தைத்தது. பல்லைக்கடித்து அந்த வலியை பொறுத்து கொண்டு மேலும் கீழுமாக தலையை அசைத்து ஆமோதித்தாள்.

 

“குட்… வெரி குட்…” கோச்சில், நன்றாக சாய்ந்து அமர்ந்து, கால்களை எதிரில் கிடந்த டீப்பாயில் வசதியாக நீட்டி கொண்டான்.

 

“திலீப்புக்கு கல்யாணமாமே! தெரியுமா உனக்கு?” ஏறி இறங்கிய அவன் குரலில் விரவியிருந்த விஷம் அவள் கருத்தில் பதியவில்லை. அவன் கிஷோரை பற்றி பேசவில்லை என்பதே அவளுக்கு பெரிய விடுதலையாக இருந்தது.

 

‘இவ்வளவுதானா!’ – இறுக்கம் தளர்ந்து ஆசுவாசமான மதுரா, அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் நிம்மதி மீண்டிருந்தது. “இதை பற்றிதான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தீர்களா?” என்றாள் சிறு புன்னகையுடன்.

 

அவனுடைய முகம் மேலும் இறுகியது. மலர்ந்த அவள் முகம் மீண்டும் சுருங்கியது.

 

“வேற எதை பற்றி பேசறேன்னு நெனச்ச?” – குதர்க்கமாகக் கேட்டான். அவள் தடுமாறினாள்.

 

“இல்ல… நா… ஐம் ஜஸ்ட்…”

 

“மழுப்பளெல்லாம் தேவையில்லை… ஒழுங்கான பதிலை மட்டும் சொல்லு…” – அவனுடைய அலட்சிய தொனியில் அவள் மனம் மிகவும் காயப்பட்டது. உதட்டைக் கடித்துக் கொண்டு, “நீங்க கிஷோர் பத்தி பேசறீங்கன்னு நெனச்சேன்” என்றாள் மெல்லிய குரலில்.

 

“ஓ! அவன் இன்னும் உன்னோட மைண்ட்ல இருக்கான்! மறக்கவே முடியலையோ!” – குத்தினான். சட்டென்று அவள் கண்களில் கண்ணீர் திரண்டது. அவளை முறைத்துப் பார்த்தவன், “சரி சொல்லு… திலீப் கல்யாணத்தை பத்தி தெரியுமா?” என்றான்.

 

அவன் விசாரிக்கும் விதத்தில், தன்னை ஒரு கொலை குற்றவாளி போல் உணர்ந்த மதுராவின் இதயம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. பதில் சொல்ல பயந்து அமைதியாக இருந்தாள். “தெரியுமா…? தெரியாதா…?” – அழுத்தம் திருத்தமாகக் கேட்டான்.

 

ஆத்திரம் தொண்டையை அடைக்க பேசமுடியாமல் தடுமாறியவள், தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள். “குட்…” – பாராட்டியவன், கைவசம் வைத்திருந்த டின்னை எடுத்து தொண்டையில் சரித்துக் கொண்டான். அதை பார்த்ததுமே மதுராவிற்கு பகீரென்றது. குடித்திருக்கிறானா! மேலும் குடிக்கிறானே! சென்றமுறை பட்ட அனுபவம் அவளுக்குள் கிளியை பரப்ப அச்சத்துடன் அவனை பார்த்தாள்.

 

“எப்போ தெரியும்?” – புருவம் உயர்த்தினான். சிவப்பேறியிருந்த விழிகள் நெருப்புப் பிழம்பை நினைவுறுத்தின.

 

“அன்… அன்னைக்கு… துருவன் பாய்… வந்தி…ருந்திருந்த…ப்போ…” – சிக்கல் விழுந்த நூல் போல் திக்கித் திணறினாள். மூச்சுவிடுவதற்குக் கூட சிரமமாக இருந்தது.

 

“ம்ம்ம்ம்… டின்னர் நைட்…! அன்னைக்குதானே?” – குறுகுறுப்பாக அவளை பார்த்தவன், “தட் வாஸ் எ பியூட்டிஃபுல் நைட்… நா ரொம்ப என்ஜாய் பண்ணினேன். நீ எப்படி?” என்றான் கோணல் புன்னகையுடன். அந்த புன்னகையும் பார்வையும் அவளை அவமதித்தது. கத்தி அழ வேண்டும் போல் தோன்றியது. கன்னத்தில் வடியும் கண்ணீரை துடைக்கக் கூட தோன்றாமல் அவனை வெறித்துப் பார்த்தாள்.

 

“சொல்லு… என்ஜாய் பண்ணுனியா…? இல்லையா?” – குரூரமாகக் கேட்டான். இதெல்லாம் என்ன கேள்வி! இதற்கு எப்படி பதில் சொல்வது! சொல்லவில்லை என்றால் விடமாட்டான். இனிமையாய் கழிந்த அன்றைய இரவு இன்று கசந்தது. துக்கத்துடன் மேலும் கீழும் தலையை ஆட்டினாள்.

 

சட்டென்று நிமிர்ந்து அமர்ந்து, அவள் முகத்துக்கு நேராக முகத்தை கொண்டு வந்து, “எப்படி? எப்படி உன்னால முடிஞ்சுது! உறுத்தல?” என்றான் கொடூரமாக. கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். உடம்பெல்லாம் கூசியது. வெகு சிரமப்பட்டு உள்ளே பொங்கும் கேவலை கட்டுப்படுத்திக் கொண்டாள். கண்ணீர் ஆறாக பெருகியது. அவமானத்தில் குற்றி போய் அமர்ந்திருந்தாள். அவளுடைய அவஸ்த்தையை நிதானமாக உள்வாங்கி கொண்டவன், “என்னை நம்பல… என்கிட்ட உண்மையா இல்ல… அப்புறம் எப்படி..?” என்று அவளை அருவருப்பாக பார்த்தான். துடித்துப் போனாள் மதுரா.

 

“ப்ளீஸ்… டோன்ட் டாக் லைக் தட்… ஐ… ஐ… காண்ட் டேக் இட் எனிமோர்… ப்ளீஸ்…” வெடித்து கதறிவிட்டாள்.

 

கூனி குறுகி அமர்ந்து, காதை மூடிக் கொண்டு குலுங்கும் மனைவியை வெறித்துப் பார்த்த தேவ்ராஜ், “ஏன் என்கிட்ட சொல்லல?” என்றான் அடங்கிய குரலில்.

 

பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை… பதில் சொல்லாமல் இருக்கவும் பயம்… “உங்க…ளுக்கும்… திலீ…ப்… பாய்…க்கும்… பிடி… பிடிக்காது…ன்னு… பய.. பயந்து… சொல்…ல… சொல்லல…” – நடுங்கும் அவள் மென்குரலில் குறுக்கிட்ட தேம்பல்கள், அவளுடைய மனப்போராட்டத்திற்கு சாட்சி கூறின.

 

“எதுக்கு அழற?” – போதையில் மிதக்கும் கண்களை உருட்டினான்.

 

சட்டென்று மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். இன்னொருமுறை அந்த கொடுமையை அனுபவிக்க அவள் தயாராக இல்லை. கடவுளே! அவனுடைய கோபம் அதிகரித்துவிடக் கூடாது… அழாத… அழாத… தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். அவளை விசித்திரமாக பார்த்தவன், “தூள்! வாட் ஆன் ஆக்ட்டிங்!” என்றான் போலி பிரம்மிப்புடன்.

 

அவன் சொன்னது எதுவும் அவள் காதில் விழவே இல்லை. ‘இங்கிருந்து சென்றுவிட்டால் போதும்… இவனிடமிருந்து விலகிவிட்டால் போதும்… கடவுளே! அழக்கூடாது… அழக்கூடாது…’ – உருப்போட்டது அவள் உள்ளம். அச்சத்தில் கலங்கிப் போயிருந்தவள், துடிக்கும் இதழ்களை பற்களால் கடித்து உணர்வுகளை வெளிக்காட்டாமலிருக்க முயன்றாள்.

 

அவள் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன், “ப்ரிட்டி…!” என்று மனதில் நினைத்ததை வெளியில் கூறிவிட்டு, தலையை உலுக்கிக்கொண்டான். ‘போதை ஏறிட்டாலே மனசு கண்டதையும் ரசிக்கும்…’ – தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டவன், சற்று நேரம் அமைதியாக கண்களை மூடி… சாய்ந்து அமர்ந்தான்.

 

‘தூங்கப் போறானா!’ – புரிந்துகொள்ள முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா.

 

“ஹும்ம்ம்…! திலீப்புக்கும் எனக்கும் பிடிக்காது… உண்மைதான். அதனாலதான் அவனோட கல்யாண விஷயத்தை பத்தி நீ என்கிட்ட பேசல… தப்பில்ல…” – கண்களை மூடியபடியே சத்தமாக சிந்தித்தவன் சட்டென்று கண்களைத் திறந்து,

 

“கரெக்ட் மதுரா… உம்மேல எந்….த தப்பும் இல்ல… நீ செஞ்சதுதான் சரி. ஏன் பயப்படற? இதுதான் காரணம்னு தைரியமா சொல்ல வேண்டியதுதானே?” என்று அவளுக்கு ஆதரவாக பேசினான்.

 

அவளால் நம்பமுடியவில்லை. நிச்சயம் நம்ப முடியவில்லை. ‘ஏதோ குதர்க்கமாக சொல்லப்போகிறான்’ – அவள் மூளை அறிவுறுத்தியது. அதே போல்தான் அவனும் பேசினான்.

 

“எப்பவும் இதே…. மாதிரி இருக்கணும். திலீப் பத்தி என்கிட்ட நீ பேசவே கூடாது. புரியுதா? எனக்கு அவனை பிடிக்காது… நீ அவனை பத்தி பேச கூடாது… ஓகே?” – இதை எதற்காக இவ்வளவு அழுத்தமாக சொல்கிறான் என்பதை பற்றி சிந்திக்கும் நிலையில் மதுரா அப்போது இல்லை. அவன் என்ன சொல்கிறானோ அதற்கு தலையாட்டி தப்பித்துக்கொள்ள வேண்டும். அதுமட்டும்தான் அவள் நினைவில் இருந்தது.

 

“ஓகேவா… இல்லையா?” – அவள் பதில் சொல்வதற்குள் பொறுமையிழந்து அதட்டினான்.

 

“ஓ…ஓகே… ஓகே…” – பதட்டத்துடன் ஒப்புக்கொண்டாள்.

 

“போ…” – ஒற்றை வார்த்தையில் அவளுக்கு விடுதலை கொடுத்தான். உடனே எழுந்துகொள்ள பயமாக இருந்தது. ‘போகலாமா!’ – பயத்துடன் யோசித்தாள்.

 

“ப்போ….” – தடுமாற்றத்துடன் டீப்பாயை காலால் உதைத்தபடி கத்தினான். போதை நன்றாக ஏறிவிட்டது… சட்டென்று எழுந்து அறைக்குள் ஓடினாள். இங்கிருந்து எங்கே செல்வது! இந்த நிலையில் கீழேச் சென்றால் வேலைக்காரர்கள் உட்பட அனைவரும் அவளுடைய நிலையை தெரிந்துக் கொண்டுவிடுவார்கள். எங்கே செல்வது… எங்கே செல்வது… தவித்தவள் கடைசியாக உடைமாற்றும் அறைக்குள் நுழைந்து கதவை இறுக்கமாக சாத்தி பூட்டிக்கொண்டு, தரையில் சரிந்து அமர்ந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு குலுக்கினாள்.

 

 
7 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  admin says:

  ரமா அக்கா, பொன்ஸ் அக்கா, லட்சுமி, ஹதிஜா, உகினா, தாட்சாயணி… எல்லோருக்கும் மிக்க நன்றி… தொடர்ந்து படிச்சிட்டு கமெண்ட் கொடுத்து ஊக்கப்படுத்துங்க… நன்றி தோழிகளே…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  நேற்றுத்தான் தேவை பற்றி கொஞ்சம் நல்லதாய் நினைத்தேன் ,அதற்குள் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது,மதுரா பாவம் தேவ் முன்னால் போனாலும் முட்டுகின்றார் பின்னால் போனாலும் உதைக்கின்றார்,மதுரா என்ன செய்யணும் செய்யக்கூடாது என்று ஒரு பட்டியல் தாயாரித்து கொடு முட்டாளே,திலீப்பைதான் பாரதி வேண்டாமென்று சொல்லிவிட்டாரே,அண்ணனுக்கும் தங்கைக்கும் திலீப்பிற்கு திருமணம் நடந்தாலென்ன நடாக்காவிட்டால்தான் என்ன,குடும்பமே வில்லங்கம் பிடித்த குடும்பம் போல,மாயா தேவ் பாரதி யாருமே சரியில்லை,அடுத்தவன் வருத்தத்தை ரசிக்கும் குணமுடையவர்கள்,திலீப்பை பற்றி எப்பவுமே என்கிட்ட பேசாதே என்று அவ்வளவு அழுத்தமாக தேவ் சொல்கின்றார் அதற்கு என்ன காரணம்,திலீப்பிற்கு என்ன கெடுதல் செய்யப்போகின்றார்.

  நன்றி


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  HAYO IPPO YENNA PLAN PANDRANOOOOOOOOO


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha khaliq says:

  திலிப் பற்றி சொல்லாதற்கு இவன் உன்மையில் பாராட்டினானா இல்லை குத்திகாட்டுறானா? இவன எந்த வகையில் சேர்க்கிறதுனு தெரியலையே? இவன வச்சி மது பட்ற பாடு இருக்கே…..அய்யகோ🤕


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi says:

  Adappavi Ivan enna loosa … Ippadi panren .. Haiyooo enna panna porano theriyalaiye …


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pons says:

  லூசாடா …நீ…
  மறுபடி…மறுபடி பேசுற மொமண்ட்
  அவளை விரட்டிட்டு….அழப்போற…போடா


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ரமா says:

  அச்சோ இப்போ என்ன குண்டு போட போரானோ தெரியலியெ..சான் ஏருனா முழம் சருக்குரான்…முள்ளு மேல இருக்க பபோலவெ மதுரவா வச்சுருக்கான் இந்த தேவ்..