Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

கனல்விழி காதல் 39

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 39

அத்தியாயம் – 39

அன்று இராஜேஸ்வரி மிகவும் பதட்டமாகவே காணப்பட்டாள். தொண்டையில் சிக்கிக் கொண்ட எதையோ விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவஸ்த்தைப்படுவது போல் நிலைகொள்ளாமல் இருந்தாள். “ம்மா… எனி ப்ராப்லம்?” – மதுரா கேட்க நினைத்த கேள்வியை பாரதி கேட்டாள்.

“நத்திங்… சாப்பிடு…” – மகளை அதட்டிவிட்டு சாப்பிடுவது போல் நடித்தாள். அவளால் முடியவில்லை. உணவு உள்ளே இறங்க மறுத்தது. ஏதோ சிந்தனை அவளை குடைந்து கொண்டிருந்தது. இராஜேஸ்வரியின் பதற்றத்தை, குழப்பமும் வருத்தமுமாக மதுராவும் பாரதியும் பார்த்துக் கொண்டிருக்க, தேவ்ராஜ் எதையும் கண்டுகொள்ளாமல் உணவில் கவனமாக இருந்தான். அவனுக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டும் என்று ஊகித்தாள் மதுரா.

காலை உணவு முடிந்த பிறகு கூடத்து சோபாவில் டிவியை போட்டுக் கொண்டு அமர்ந்துவிட்டான் தேவ்ராஜ். மாடிக்கு செல்ல படிக்கட்டில் ஏறிய மதுராவையும், “எங்க போற? இப்படி வந்து உட்காரு” என்று அழைத்து அருகில் அமர வைத்துக் கொண்டான். இராஜேஸ்வரி அவளுடைய அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். செல்ல நாய்க்குட்டி போல் வீட்டை சுற்றி வந்த பாரதி சற்று நேரத்தில் வெளியே செல்ல தயாராகி வந்தாள்.

“எங்க?” – தேவ்ராஜின் குரல் அவளை இடைமறித்து.

“கிராஸ் கேட் மால்… காலேஜ் ஃபிரண்ட்ஸ் கூட ஒரு கெட் டு கெதர்…”

“ம்ம்ம்… டைம்கு வந்துடனும்…” – கண்டிப்புடன் கூறினான்.

“ஓகே தேவ் பாய்” – புன்னகைத்துவிட்டு வெளியே சென்றாள்.

“வீட்ல ஃபுல் டே நீ என்ன பண்ணுவ?” – டிவியில் பார்வையை பதித்தபடி மதுராவிடம் கேட்டான். நினைத்த நேரத்திற்கு தங்கை வெளியே செல்கிறாள். சுதந்திரமாக இருக்கிறாள். இவள் என்னசெய்வாள் என்கிற சந்தேகம் எழுந்தது அவனுக்கு.

“பெருசா ஒண்ணும் இல்ல. அம்மா கூட… ஃபிரண்ட்ஸ் கூட போன்ல பேசுவேன். அப்புறம்…. கார்டன்… வீடியோ கேம்ஸ்.. இல்லன்னா ஆண்ட்டி கூட ஏதாவது பேசிட்டு இருப்பேன்” – எதையும் அவள் சுவாரஸ்யமாக சொல்லவில்லை.

“இங்க போரா ஃபீல் பண்ணுறீயா?” என்றான். அவன் என்னவோ அக்கறையோடுதான் கேட்டான். இவள் பயந்துவிட்டாள். குதர்க்கமாக பேசுவதுதான் இவன் வழக்கம். பயப்படாமல் என்ன செய்வாள்!

“இல்ல… அப்படிலாம் எதுவும் இல்ல…” – உடனடியாக மறுத்தாள்.

அவள் மறுத்த விதத்திலேயே பொய் சொல்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன் பல்கலைக் கடித்தான். ‘திருந்தவே மாட்ட…’ – மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டு, “ஜூஹூல இருக்கும் போது என்னல்லாம் பண்ணுவ?” – திருமணத்துக்கு முன் அவளுடைய தினசரி நடைமுறைகள் என்னவென்பதை தெரிந்துக்கொள்ள விரும்பினான்.

“லைப்ரரி, ஷாப்பிங், ஏரோபிக்ஸ், ஃபிரண்ட்ஸ் அப்புறம் ஆதிரா குட்டி… ஒண்ணு ரெண்டு தடவை சமைக்கக் கூட செஞ்சிருக்கேன்” – விழிகள் மகிழ்ச்சியில் மின்னின.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, பதைபதைப்புடன் மீண்டும் உள்ளே வந்தாள் பாரதி.

“என்ன உடனே வந்துட்ட?” – தேவ்ராஜ்.

“தேவ் பாய்… வெளியே..” – ஏதோ சோலா வந்தவள் மதுராவை பார்த்துவிட்டு தயங்கினாள்.

“சொல்லு…. என்ன?” – தேவ் தூண்டினான்.

“இல்ல… ஒண்ணும் இல்ல பாய்… நா அம்மாவை பார்த்துட்டு வர்றேன்” – மதுராவை பார்த்தபடியே அங்கிருந்து நழுவ முயன்றவளை தடுத்தான் தேவ்ராஜ்.

“பாரதி இங்க வா… உட்காரு…” – தங்கையை அதட்டி அழைத்தான். அவள் அமைதியாக வந்து அவன் எதிரில் அமர்ந்தாள்.

“சொல்லு என்ன விஷயம்?” – அவன் கேட்டதும் அவளுடைய பார்வை மீண்டும் மதுராவிடம் சென்றது.

தன்னை வைத்துக் கொண்டு அவள் பேச விரும்பவில்லை என்பதை புரிந்துக் கொண்ட மதுரா எழுந்துச் செல்ல எத்தனித்தாள். அவள் கையை பிடித்து இழுத்து, “உட்கார்” என்று மீண்டும் தன் அருகில் அமரவைத்துக் கொண்டவன், “நீ சொல்லு…” என்றான் தங்கையிடம். அவள் என்ன சொல்லவருகிறாள் என்பதை பற்றி அவனுக்கும் ஒரு ஊகம் இருந்தது.

மதுராவிற்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவம் பாரதிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவளை எதிரில் வைத்துக் கொண்டு இந்த விஷயத்தை எப்படி பேசுவது என்று ஓரிரு நொடிகள் யோசித்தவள் வேறு வழியில்லாமல், “உங்களை பார்க்கறதுக்காக வெளியே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு பாய்…” என்றாள் இறங்கிய குரலில்.

“ஓ…!” – தேவ்ராஜின் புருவம் உயர்ந்தது. நிமிர்ந்து மணியை பார்த்தான். பதினோரு மணியென்று காட்டியது. விடியற்காலையில் அவன் உறங்கி கொண்டிருக்கும் போதே வந்தவர். செக்யூரிட்டி இண்டர்காமில் அழைத்து அனுமதி கேட்ட போது, “நோ” என்று ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான். இன்னமும் காத்திருக்கிறாரா! அவன் புருவம் சுருங்கியது.

“தேவ் பாய்… அவருக்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன்…” – தயக்கத்துடன் கூறினாள்.

“பேசுனியா?” – இறுகிய குரலில் கேட்டான். அவனுடைய மனநிலை மாற்றத்தை புரிந்துக் கொண்டவள் அமைதியாக தலைகுனிந்தாள். இதற்குத்தான்… இதற்குத்தான்… அவள், மதுராவை வைத்துக் கொண்டு இந்த விஷயத்தை பற்றி அவனிடம் பேச விரும்பவில்லை.

“ஆன்சர் மீ…” – கட்டளையிட்டான்.

“பாய்… அவர் காலையிலிருந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காராம்…” – கெஞ்சுதலாக கூறினாள்.

“இப்போவே விரட்ட சொல்றேன் ” – அதீத கோபத்துடன் எழுந்துச் சென்று இண்டர்காமை எடுத்தான்.

“தேவ் பாய் ப்ளீஸ்… என்ன இருந்தாலும் அவர் நம்ம அப்பா…” – பாரதியின் கிரீச்சிடலில், “நோ…” என்று கையிலிருந்த ரிசீவரை டேபிளில் ஓங்கி அடித்தான் தேவ்ராஜ். திடுக்கிட்டு எழுந்தாள் மதுரா. பாரதி அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

“நோ… அவர் என்னோட அப்பா இல்ல… நம்மளோட அப்பா இல்ல…” – உறுமினான்.

“இல்ல தேவ் பாய்… அவர் நம்ம அப்பாதான். அவர் என்ன சொல்ல வர்றார்னு நீங்க கேட்டுத்தான் ஆகணும்” – தேவ்ராஜ் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான்.

“வளர்ந்துட்ட…? பெரியவளா ஆயிட்ட…! எனக்கே அட்வைஸ் பண்ணற!” – என்றான் கண்களில் ஜுவாலையுடன்.

“இல்ல தேவ் பாய்… அந்த மாதிரி இல்ல…” – விளக்கம் சொல்ல முற்பட்டாள்.

“பேசாத…” – அதட்டினான்.

“பாவமா இருக்கு தேவ் பாய்… ப்ளீஸ்…” – பாரதியின் கண்கள் கலங்கின. வீட்டில் எல்லோரும் அவரை வெறுக்கும் போது தனக்கு மட்டும் ஏன் இந்த பாசம் என்று அவளுக்கு புரியவில்லை. அவள் மனம் தவித்தது.

“என்னோட அப்பா செத்து போயி இருவது வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்போ வெளியே நிக்கிற ஆளை யாருன்னே எனக்கு தெரியாது. எனக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. இந்த வீட்டுக்குள்ள வர்ற உரிமையும் அவருக்கு இல்ல. பெரிய மனுஷிக்கு புரியுண்ணு நினைக்கிறேன்” என்று அழுத்தமாக கூறி முடித்துவிட்டான். சகோதரனின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத பாரதி தாயிடம் ஓடினாள்.

இராஜேஸ்வரியின் மனம் ஊமையாய் அழுதுகொண்டிருந்தது. அவர் செய்த துரோகங்களை மன்னித்து மறக்கும் மனப்பான்மை அவளுக்கில்லை. அவள் பட்ட கஷ்ட்டங்களையெல்லாம் நினைத்து அவள் மனம் வெந்து தணிந்தது. தன்னோடு சேர்ந்து தன் பிள்ளைகளும் அனுபவித்தார்களே என்று எண்ணும் பொழுது அவர் மீது எல்லையில்லா வெறுப்பு பொங்கியது. அதே சமையம், அவரோடு வாழ்ந்த இனிமையான நாட்களையும் அவளால் மறக்க முடியவில்லை. இப்போது அவர் யாசகன் போல் வாசலில் காத்துக் கிடக்கிறார். அவரை உள்ளே அழைக்கவும் முடியாமல் வெளியே விரட்டவும் முடியாமல் வேதனையில் புழுங்கியபடி அறையிலேயே அடைந்துக் கிடந்தாள்.

கவலை தோய்ந்த முகத்துடன் கட்டிலில் கண்மூடி படுத்திருந்த தாயை பார்த்ததுமே, அவளுக்கும் விஷயம் தெரிந்திருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டாள் பாரதி. காலையிலிருந்து அவள் வாட்டமாக இருந்ததற்கும் காரணம் விளங்கிவிட்டது.

“ம்மா…” – மெல்ல அழைத்தாள். பழைய நினைவுகளில் சஞ்சரித்திருந்த இராஜேஸ்வரிக்கு மகள் அழைத்தது காதில் விழவில்லை. மீண்டும் ஒருமுறை அழைத்தாள் பாரதி. மெல்ல கண்திறந்து பார்த்தாள் தாய்.

“காலையிலிருந்து வெளியே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரும்மா…”

“என்னை தனியா விடு…”

“ம்மா… ப்ளீஸ்… அவருக்கு ஏதோ பிரச்சனை… என்னன்னு கேட்க சொல்லுங்க… இல்ல நீங்களாவது கேளுங்க… பாவமா இருக்கும்மா…” – தவிப்புடன் கூறினாள். மகளுக்கு பதில் சொல்ல முடியாமல் உணர்ச்சிப் பிழம்பில் பேச்சிழந்துக் கிடந்தாள் தாய்.

பெற்றோருக்குள் பிரச்சனை ஆரமித்த சமயத்தில் தேவ்ராஜும் மாயாவும் விபரம் தெரிந்த குழந்தைகள். மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் பாரதி சிறு குழந்தை. அவளுக்கு விபரம் தெரிந்த சமையத்திலெல்லாம் பிரச்சனை ஓய்ந்து விட்டது. தேவ்ராஜும் மாயாவும் பஞ்சு மெத்தையிலிருந்து கட்டாந்தரைக்கு தூக்கியெறியப்பட்டவர்கள். ஆனால் பாரதியோ ஆரம்பத்திலிருந்தே எளிமையான சூழ்நிலையில்தான் வளர்ந்தாள். அதனால்தானோ என்னவோ… மற்ற இருவர் அளவிற்கு தந்தையின் மீது அவளுக்கு வெறுப்பு இல்லை.

அதோடு, அவர் அடிக்கடி குழந்தைகளை பார்க்க பள்ளிக்கு வருவார். மற்ற இருவரும் அவரை பார்ப்பதை தவிர்த்துவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால் இவளுக்கு ஓட தோன்றாது. அவர் வாங்கி கொடுக்கும் பண்டங்களை அவர் மடியில் அமர்ந்தே பல சாப்பிட்டு முடித்திருக்கிறாள். அந்த பாசம் அவளை விட்டுப் போகவில்லை. வளர வளர தாயின் மனம் கோண கூடாதென்றுதான் அவரை தவிர்க்க ஆரம்பித்தாள். ஆனால் உள்ளுக்குள் தந்தை பாசம் இருந்துக் கொண்டுதான் இருந்தது. அது இன்று வெளிப்பட்டுவிட்டது.

“ம்மா…” – மீண்டும் தாயை அழைத்தாள்.

“பாரதி… இதை பத்தி நா பேச விரும்பல… இங்கேருந்து போ நீ” – கண்டிப்புடன் கூறி மகளை விரட்டிவிட்டாள்.

தன்னுடைய அறைக்கு வந்த பாரதி மனம் கேட்காமல் ஜன்னல்வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள். தோட்டத்தையும், பெரிய மதில் சுவர் கேட்டையும் தாண்டி வெளியே, சாலை ஓரத்தில் அந்த கார் தெரிந்தது. சற்று நேரம் அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் மாயாவிற்கு அழைத்துப் பேசினாள். அவளும் தேவ்ராஜை போல அவர் மீது வெறுப்பைத்தான் கொட்டினாள். எல்லா கதவுகளும் அடைபட்டுவிட்டது. இனி தன்னால் எதுவும் செய்ய முடியாது…. அவருக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்! – கவலையுடன் மெத்தையில் சாய்ந்தாள்.

35 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  suja says:

  read all.Eager to read next

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Meena PT says:

  Nice update.
  what Bharathi is going to do next

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you so much Meena PT… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Uma Ratnam says:

  Holy Crap Nithya!! You are keeping me at the edge of the seat for each and every episode. A simple plot with everyday characters, yet with your narration the story lifts to the next level! A perfect example would be Monica’s love/relationship with Dev’s dad. I’ve a hard time accepting this, however due to your convincing narration, part of me wants her to have a standard life with him – not every author can do this! Too good Nithya!

  Another example: episode 35, paragraphs 10 & 11 – Dev’s unsaid feelings and thoughts about Mathura. Just a few sentences though you accounted them beautifully.

  In saying this, I sincerely hope you complete this story unlike “கவியோ! அமுதோ”. Please don’t have NYPD charging me with stocking (you)!😊

  Of note, how far are we with this story? Will you complete it online before publishing?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Hey Uma,
   Thanks a lot… I really have no words to express my happiness… I’m just flying like a butterfly after reading your comments seriously… Thank you so much…

   Haha… No worries… Definitely NYPD is not gonna charge you because I’m not gonna a disappoint my best reader… 😀

   about 20 more episodes are there to complete this story… 🙂 Everyday updates will be posted except weekends…

   Thank you so much my friend…

   Anbudan,
   Nithya

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  uma manoj says:

  இப்ப எதுக்கு வந்தாராம் அவங்க அப்பா?
  தேவையேயில்லை. .
  தேவ்..நீ எக்காரணம் கொண்டும் உள்ளே விடாத. .

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   மிக்க நன்றி உமா…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sumi Rathinam says:

  மதுரா தன் தயக்கம் மற்றும் பயத்தை விட்டு தேவ் வின் மன வலியை நீக்க முயற்சிப்பாளா?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you so much Sumi Rathinam… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sugakumar Thamilselvi says:

  Üppu thinraal thannee r kudikkaththaan veendum

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you Sugakumar…. 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  அவனோட அப்பா வா…
  பாவம்னு சொல்ல மனசில்லை.
  இங்கே நான் தேவ் பக்கம் தான்.
  துரோகியை மன்னிக்க முடியாது.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you ka… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  nice ud sis

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you Ugina… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  நானும் மதுரா குடும்பத்திற்கு பிரச்சனை என்று நினைத்துவிட்டேன்,அதனால்தான் தேவ் அதனை அசட்டை செய்கின்றார் என்று,சில நினைவுகளும் காயங்களும் காலம் கிடந்தாலும் மாறாதது ,அதுபோல்தான தேவ்வுக்கும் மாயாவுக்கும்போல,அதீத வெறுப்பு தகப்பன் மேல்,மதுரா பாரதிக்காக தேவ்விடம் பேசினால் தேவ்விடம் மதுரா வாங்கிகட்டிக்கொள்வது உறுதி,ஆனால் வெளியில் இருப்பவரும் கொஞ்சம் பாவம்தான் ,இராஜேஸ்வரியாலேயே உள்ளே வரச்சொல்ல முடியவில்லை ,தேவ்வை தவிர வேறு யாரால் அவரை உள்ளே கூப்பிட முடியும்,அப்பாடா இன்று தேவ்வின் கோபம் எல்லாம் தந்தை மீது திரும்பிய படியால் இன்று மதுரா தப்பித்துவிட்டார்.

  நன்றி

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Hi Thadsayani,
   Thank you so much for your continuous support… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Priya says:

  Nice ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you Priya… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sudha Ravi says:

  அவர் செய்த தப்பிற்கு அனுபவிக்கிறார்..அனால் அவனோட இந்த கோபத்தை எல்லாம் பார்த்திட்டு அவ இன்னும் தனக்குள்ளேயே சுருக்கிக்க போகிறாள்…இவன் அவளை மிரட்டாம பேசினாலே அவ கூட்டுக்குள் இருந்து வெளியே வருவா…இவனுக்கு அது புரியலையே…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you Sudha… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  அவர் செய்தது தவறு தான். சூழ்நிலை கைதி…. அடுத்தது என்னவோ?!

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you Vatsala… Next naalaikku theriyum… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Dev kovam niyayamanathu …

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you Lakshmi Narayanan… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rama karupasamy says:

  Wow…அப்பாவா..நான் கூட திலீப்போனு நினைச்சேன்..நீ நடத்துடா தேவ்

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Hi ka,
   Hmmmm… Appa thaan… yaaraa irundhaalum ore niyaayam… ore theerppu… 😀

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  இவருக்கு தான் நோ சொன்னானா தேவ்…..தேவும் மாயாவும் அப்பாவை அழைக்க மறுத்துட்டாங்க இப்ப பாரதி மதுகிட்ட உதவி கேட்பாளா அண்ணனை சமாதானப்படுத்த

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Yes… Eppavum avanai thappaave nenachchaa enna pannuvaan paavam… 🙁

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Deepika Balan says:

  Superb update

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you Deepika Balan… Thodarndhu padinga… comments share pannunga…. 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  barathy ruban says:

  Nice ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you Barathy Ruban

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vijaya lakshmi Jagan says:

  Nice ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya karthigan says:

   Thank you Vijaya Lakshmi… 🙂