Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

இல்லறம் இதுதான்

Share Us On

[Sassy_Social_Share]

இல்லறம் இதுதான் – 13

அத்தியாயம் – 13

“அதுக்கப்புறம் என்னாச்சு?” கண்களில் கண்ணீர்மல்க லட்சுமியும் கவிதாவும் ஒன்றாகக் கேட்டார்கள்.

 

“அதுக்கப்புறம் சாரதியோட குணம் கொஞ்ச கொஞ்சமா ஸ்ருதியை மாத்திடிச்சு. அவளும் அவனை மனசார ஏத்துகிட்டா. ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தாங்க. அந்த வாழ்க்கைக்கு கிடச்ச பரிசுதான் அவங்க மகன் கமல். சாரதி ரொம்ப சந்தோஷமா இருந்த காலம் அது. அவனோட சந்தோஷத்தை நீடிக்க விடாம அவங்க வீட்டுக்கு பக்கத்திலேயே குடிவந்தாங்க ஸ்ருதியோட பழைய காதலனான கணேஷும் அவன் மனைவியும்”

 

“ஐயோ” – கவிதா பதறினாள்.

 

“ஸ்ருதியும் முதல்ல இப்படித்தான் பதறினா. ஆனா அந்த கணேஷ் என்ன மாய மந்திரம் போட்டானோ… இவ கொஞ்ச கொஞ்சமா அவன் பக்கம் சாய ஆரம்பிச்சுட்டா. குழந்தையைக் கூட சரியா கவனிக்கறது இல்ல. சாரதி கண்டிச்சா வீட்டுல பெரிய ரகளை நடக்கும். இவனுக்கு நிம்மதியே  போயிடிச்சு.”

 

“இந்த சச்சரவு நடந்துட்டு இருந்த சமையத்திலேயே சாரதியோட அம்மாவும் இறந்துட்டாங்க. அவங்களுக்கு பிறகு குழந்தையை பார்த்துக்க ஆள் இல்லாம காப்பகத்துல விட்டுட்டான்”

 

“அந்த ஸ்ருதி பெத்த குழந்தையை பற்றி கூட யோசிக்காம நேத்து அந்த கணேஷ் கூட ஓடி போய்டா. அவனோட மனைவி இவன்கிட்ட வந்து கத்தியிருக்கு. இவன் அவமானம் தாங்காம கண்டபடி தூக்க மாத்திரையை முழுங்கிட்டான். இப்போ உயிருக்கு போராடிகிட்டு ஐ.சி.யூ ல போயி படுத்து கெடக்குறான்”

 

“அப்போ  அந்த குழந்தை?”

 

“அது காப்பகத்துல தான் இருக்கு. இவன் மீண்டு வந்த பிறகு தான் மத்ததையெல்லாம் யோசிக்கணும்”

 

“சரி அப்போ நான் கிளம்பறேன்” – லட்சுமி எழுந்துக் கொண்டாள்.

 

“என்ன உடனே கிளம்பிட்டிங்க. ஏதாவது சாப்பிட்டுவிட்டு போகலாம்” கவிதா உபசரித்தாள்.

 

“இல்ல… இன்னொரு நாள் சாவகாசமா வந்து சாப்பிடறேன். இப்போ கிளம்பறேன்” – விடைபெற்றுச் சென்றாள்.

 

***

லட்சுமியின் வாயையே பார்த்துக் கொண்டிருந்தாள் சிவா. பிரம்மித்துவிட்டாள். அனைத்தையும் கூறி முடித்துவிட்டு அவளை உலுக்கினாள்.

 

“ஏய்… என்ன ஆச்சு?”

 

“படத்தோட முடிவு ரொம்ப ட்ராஜிடியா இருக்குக்கா” சகஜ நிலைக்கு வந்தாள்.

 

“படம் முடிந்துவிட்டதுன்னு யார் சொன்னது”

 

“பின்ன?”

 

“இதனால் பாதிக்கப்பட்ட நம் அத்தானை ஒரு வழிக்குக் கொண்டு வந்தால் தான் இந்த படம் முடியும்”

 

“அப்ப கூடிய சீக்கிரம் கொண்டு வந்துடுவோம்” டேபிளை தட்டியபடி எழுந்தாள் சிவா.

 

 

சாலையில் கவனமாய் வண்டியை செலுத்திக் கொண்டிருந்த மோகனின் செல் போன் ஒலித்தது. போகிற போக்கிலேயே போனை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

 

“ஹலோ”

 

“மோகன்…  நான் விஜய்… ஹாஸ்பிட்டலெருந்து…”

 

“சொல்லுடா… சாரதி எப்படி இருக்கான்?” – கவனம் சற்று பிசகியது.

 

“போயிட்டாண்டா…” – கதறினான்.

 

“என்னது!!!” கைகள் ஹேன்பாரிலிருந்து நழுவியது. வண்டி அவன் கட்டுப்பாட்டை இழந்தது. எதிரில் வந்த லாரியின் மீது மோத அது அவனை சாலையில் தூக்கி எரிந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்தான் மோகன்.

 

 

அடுத்த பத்து நிமிடத்தில் லட்சுமியின் செல் போன் அலறியது. எடுத்துக் காதுக்குக் கொடுத்தவள் விஷயம் கேட்டு பதறி துடித்தாள். என்ன செய்வது என்று புரியாமல் உறைந்துவிட்டவள் சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு சிவாவின் செல் போன் நம்பரை அழுத்தினாள்.

 

“என்னக்கா?”

 

“ஐயோ சிவா… நான் என்ன செய்வேன்” – கூக்குரலிட்டாள்.

 

“என்னாச்சுக்கா”

 

“உங்க அத்தானுக்கு ஆக்ஸிடென்டாம் சிவா… ஹாஸ்பிட்டல் கொண்டு போயிருக்காங்க”  அழுகையினுடே கூறினாள்.

 

“எப்போ? எங்கே?” அதிர்ச்சியோடுக் கேட்டாள்.

 

“இப்போ தான்… சாந்தி ஹாஸ்பிட்டல்..”

 

“சரி சரி… இப்போ உங்க கூட யாரு இருக்கா?”

 

“நான் மட்டும் தான்”

 

“ஓகே… ஒன்னும் பதட்டப் படாதிங்க. நான் கிளம்பிட்டேன். வந்துட்டே இருக்கேன். அத்தானுக்கு ஒன்னும் ஆகாது… இன்னும் பத்தே நிமிஷத்துல அங்க இருப்பேன்.” பேசிக் கொண்டே அலுவலகத்திலிருந்தே வெளியேறி வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு போனை வைத்தவள் சொன்னபடியே பத்து நிமிடங்களுக்குள்ளாகவே வந்து சேர்ந்தாள்.

 

நிலைக்கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த லட்சுமியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தாள். மோகன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தான்.

 

லட்சுமியின் பதட்டம் அதிகமானது. மீண்டும் ஓவென்று அழத் துவங்கிவிட்டாள். அப்போதுதான் விஜயும் அங்கு வந்து சேர்ந்தான். அவன் வந்த பிறகு தான் சாரதியின் மரணம் பற்றியும் அவர்களுக்கு தெரிந்தது. லட்சுமியின் பதட்டம் ஒவ்வொரு நொடியும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

 

மோகனின் பெற்றோரும் வந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய மருத்துவமனையே அல்லோகலப்பட்டது. இரண்டு மணிநேரம் அனைவரையும் ஆட்டிப் படைத்துவிட்டு உயிர் பிழைத்து மீண்டு வந்தான் மோகன்.

 

“இனி அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஒவ்வொருத்தரா போயி சத்தம் போடாம பார்த்துட்டு வாங்க” மருத்துவர் கூறியதும் அனைவருக்குள்ளும் அமைதி படர்ந்தது.
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    நன்றாக இருந்தது இப்பகுதி.

    நன்றி