கனல்விழி காதல் – 51
8531
20
அத்தியாயம் – 51
மதுரா ஜிம்மிற்குள் நுழையும் பொழுது கண்களை மூடி… தலையை பின்னால் சாய்த்து அங்கே கிடந்த ஒரு பீன் பால் ஒன்றில் சரிந்து அமர்ந்திருந்தான் தேவ்ராஜ். ‘உறங்குகிறானோ…!’ – பூனை போல் அவனருகில் சென்றவள் திடுக்கிட்டாள். கைகள் இரண்டிலும் காயம்… இரத்தம் காய்ந்துபோயிருந்தது. சுரீரென்ற வலியை அவள் நெஞ்சில் உணர்ந்தாள். என்னவாயிற்று! அவள் பயந்தபடி வண்டியை எங்கேனும் கொண்டு சென்று விட்டுவிட்டானா! சட்டென்று மண்டியிட்டு கீழே அமர்ந்து, அவனை தொடாமல்… அவனுடைய உறக்கம் கலைந்துவிடாமல்… அவன் உடம்பில் வேறெங்கும் காயமிருக்கிறதா என்று கண்களால் ஆராய்ந்தாள். இல்லை… சிறு கீறல் கூட இல்லை. பிறகு எப்படி கையில் மட்டும்! – சட்டென்று மின்னல்வெட்டியது… ‘பஞ்சிங் பேக்…!’ – கடவுளே! கையில் காயம் படும் அளவிற்கு இந்த பையை குத்திக் கொண்டிருந்தானா…! அப்படி என்ன கோபம் என்று நினைத்தவள், மெசேஜ் அனைத்தையும் படித்திருப்பான் என்கிற நினைவில் முகம் வாடினாள். அவனுடைய செயல் அவள் மனதை சுட்டது.
அவள் செய்தது தவறுதான்… அந்த புகைப்படங்களை அவள் அழித்திருக்க வேண்டும். மறந்துவிட்டாள்… அதற்காக குப்பையை கிளறுவது போல் பழைய கதைகளையெல்லாம் கிளறி கொண்டிருக்க வேண்டுமா? இப்படியே சென்றால் வாழ்க்கை நரகமாகிவிடாதா? இதோ இரத்தக் காயத்துடன் அமர்ந்திருக்கிறானே… இது போல் வாழ்க்கை முழுக்க இரத்தக்கரையோடுதான் பயணிக்க வேண்டுமா! – இவனுடைய இந்த குணத்தை எப்படி கையாண்டு வாழ்க்கையை ஓட்டப் போகிறோம் என்கிற கவலை நெஞ்சை கவ்வியது.
நீண்ட பெருமூச்சுடன் எழுந்து கீழே சென்று முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தாள். ஜிம்மிற்குள் நுழைவதற்கு முன் ஒருமுறை உள்ளே எட்டிப்பார்த்தாள். நல்லவேளை அவன் இன்னும் விழிக்கவில்லை. மெல்ல அடியெடுத்து வைத்து அவனை நெருங்கியவள், அவனுடைய காயத்திற்கு மருந்திடலாமா வேண்டாமா என்று மீண்டும் ஒருமுறை யோசித்தாள்.
விழித்துவிடுவானோ… விழித்துவிட்டால் சண்டை போடுவானோ என்று எண்ணி பயந்தாள். ஆனால் வசமான காயம்… உடனே மருந்திட்டால் ஆறிவிடும். இல்லையென்றால் நாள்பிடிக்கும். மேலார்போல் அவன் உணராத வண்ணம் மருந்தைமட்டும் பூசிவிட்டுவிடலாம்… சற்று நேரத்திலேயே மருந்து இருந்த இடம் தெரியாமல் கரைந்துவிடும்… அவனுக்கும் சந்தேகம் வராது என்று பலவற்றையும் யோசித்து, தரையில் மண்டியிட்டு அமர்ந்து அமர்ந்து மெல்ல மருந்தை பூசிவிட்டாள். அப்பாடா…! வெற்றிகரமாக ஒரு கை முடிந்துவிட்டது… இன்னும் ஒரு கைதான்… என்று நினைத்தபடி நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.
தேவ்ராஜின் சிவந்த விழிகள் கூர்மையான ஈட்டி போல் அவளை துளைத்தன. பாறை போல் இறுகியிருந்த முகம் அவளை அச்சுறுத்தியது. பயத்துடன் பின்வாங்கியவள், இன்னொரு கைக்கு மருந்திடவில்லையே என்கிற எண்ணத்தில் சற்று தயங்கினாள். அவன் எதுவுமே சொல்லவில்லை… பார்வையை அவளிடமிருந்து விளக்கவும் இல்லை… உள்ளுக்குள் அவளுக்கு நடுக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அதையும் தாண்டி எப்படியாவது அவனுக்கு மருந்தை பூசிவிட வேண்டும் என்கிற எண்ணம் அவளை உந்தியது. மெல்ல… தயங்கித் தயங்கி அடுத்த கைக்கும் மருந்திட்டாள்.
“அக்கறை?” – அவனுடைய முரட்டுக் குரலில் விரவியிருந்த நக்கல் அவளை பலமாகக் தாக்கியது. கல்லடிபட்டது போல் துடித்துப் போனவள் பதில் சொல்லாமல் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
“எதுக்கு நடிக்கிற?” – மீண்டும் குத்தினான். அவன் பேசும் வார்த்தைகளையெல்லாம் அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அபாண்டமாக பழி சுமத்துகிறான். அவள் எதற்காக நடிக்க வேண்டும்…? ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது.
“நா எதுக்கு நடிக்கணும்?” என்று கேட்டுவிட்டாள். அவள் கேட்டது அவளுக்கே காதில் விழுந்திருக்காது… அவ்வளவு மெதுவாகத்தான் முணுமுணுத்தாள். ஆனால் அந்த ராட்சசன் கேட்டுவிட்டான் போலும்… அவள் மருந்து பூசிக்க கொண்டிருந்த அவனுடைய கை முஷ்ட்டி இறுகியது.
“போ இங்கேருந்து…” – சட்டென்று தன் கையை அவளிடமிருந்து உருவிக் கொண்டு அடிக்குரலில் உறுமினான். திகைப்புடன் அவனை பார்த்தாள் மதுரா. “போன்னு சொன்னேன்” – அழுத்தமாக கூறினான். அவள் முகம் கூம்பியது. வாடிய மனதை வெளிக் காட்டிக்கொள்ளாமல்,
“எத்தனை மணிக்கு வந்தீங்க? உங்களை காணாம வீட்ல எல்லாரும் பயந்துட்டாங்க” என்றாள் மெல்லிய குரலில்.
“நா என்ன பச்சக் குழந்தையா… தொலைஞ்சு போறதுக்கு… அப்படியே தொலைஞ்சு போனாலும் உனக்கு சந்தோஷம் தானே!” – எறிந்துவிழுந்தான். அவளுக்கு வலித்தது… கலங்கிய கண்களுடன் நேருக்கு நேர் அவன் பார்வையை சந்தித்தாள். அவளுடைய அடிபட்ட பார்வை அவனை என்னவோ செய்தது. சட்டென்று முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
“நா என்ன தப்பு பண்ணினேன்? எதுக்கு இப்படி டார்ச்சர் பண்ணுறீங்க?” – நொந்துபோய் கேட்டாள்.
“நீ ஒரு தப்பும் பண்ணல… எல்லாம் என்னோட மிஸ்டேக் தான்… இப்போவாவது என்னை தனியா விடறீயா?”
“யு ஆர் சோ ரூட்…”
“ஐ… ஆம்… நௌ லீவ் மீ அலோன்…” – ‘ஆமாம்… நா அப்படித்தான்… இங்கிருந்து போயித்தொல’ என்பது போல் வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.
முணுக்கென்று கோபம் வந்தது மதுராவிற்கு. “உங்களுக்கு குற்ற உணர்ச்சி… நீங்க செய்றது எல்லாம் தப்புன்னு உங்களுக்கே தெரியுது… அதனாலதான் இவ்வளவு டிஸ்டர்ப் ஆகுறீங்க”
“குற்ற உணர்ச்சியா! எனக்கா! அதெல்லாம் உனக்கு இருக்கணும்…”
“நானா என் ஹஸ்பண்டோட போனை கொண்டு போயி அடுத்தவங்ககிட்ட கொடுத்து, அவரோட எக்ஸ் ஹிஸ்டரி எல்லாம் படிச்சுட்டு வந்தேன்?” – நறுக்கென்று கேட்டாள்.
“ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் அண்ட் கெட் லாஸ்ட் யு ப்ளடி ………….” என்று உக்கிரமாகக் கத்தினான். விட்டால் அடித்துவிடுவான் போலிருந்தது.
அரண்டு போய் பின்வாங்கிய மதுரா மிரட்சியுடன் அவனை பார்த்தாள். கோப பெருமூச்சுடன் அவளை பயங்கரமாக முறைத்து கொண்டிருந்தான் தேவ்ராஜ்.
‘ஹி இஸ் எ பீஸ்ட்… சிக் மேன்…’ – விருட்டென்று எழுந்து அங்கிருந்து வெளியேறினாள். அவள் உருவம் கண்ணிலிருந்து மறையும் வரை அவள் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தேவ்ராஜ், பிறகு முழங்கையை காலில் ஊன்றி கைகள் இரண்டாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டான் . தலை இரண்டாக பிளந்துவிடுவது போல் வலித்தது.
‘மது….ரா…!!!’ – பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. ஏன் இவ்வளவு யோசிக்கிறோம்… ஏன் இப்படி நம்மை நாமே வருத்திக்கொள்கிறோம் என்று எதுவும் புரியாமல் விழி பிதுங்கினான்.
அவளுடைய பழைய குறுஞ்செய்தி உரையாடல்கள் அனைத்தையும் மீட்டெடுத்து படிக்க வேண்டும் வேண்டும் என்கிற முடிவோடுதான் நேற்று இரவு அவளுடைய அலைபேசியோடு அலுவலகத்திற்கு சென்றான். அவன் அழைத்திருந்த ஹேக்கரும் சரியான நேரத்துக்கு வந்து வேலையை துவங்கிவிட்டான். அனைத்தும் நன்றாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் என்னதான் ஆனதென்று தெரியவில்லை… அவன் அலைபேசியை கேட்ட போது இவனுக்கு கொடுக்க மனம் ஒப்பவில்லை. மதுராவின் அலைபேசியை அவன் தொடுவதா… என்பது போன்றதொரு எண்ணம் அவனை ஆட்கொண்டுவிட்டது.
“சார்… மொபைல்” – மீண்டும் ஒருமுறை கேட்டான் ஹேக்கர்.
“ஆங்?”
“மொபைல்…” – அவன் முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தான். “சார்?”
“மொபைல் இல்லாம ஏதாவது செய்… மெசேஜஸ் மட்டும் ரெட்ரைவ் பண்ணு…”
“டைம் ஆகும் சார்…”
“தட்ஸ் ஓகே…”
“நம்பர் சொல்லுங்க சார்…” என்று அவன் கேட்டதும் இவன் சற்று நேரம் யோசித்தான். என்னதான் ஆயிற்று… அவளுடைய அலைபேசி எண்ணை கூட இவனிடம் ஏன் சொல்ல முடியவில்லை! தன் மனம் பேசும் மொழி அவனுக்கு புரியவே இல்லை… தலை வலித்தது. நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகமாகிக் கொண்டே சென்றது. என்ன நினைத்து இங்கு வந்தானோ அதை தன்னால் செயல்படுத்தவே முடியாது என்று உறுதியாக உணர்ந்து கொண்டான்.
“நீ கிளம்பு” என்றான் அந்த ஹேக்கரிடம். தேவையில்லாமல், உறங்கி கொண்டிருந்தவனை எழுப்பி அலுவலகத்திற்கு வர சொல்லிவிட்டோமே என்கிற குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லை அவனிடம்.
“சார்!” – திகைத்தான்.
“லீவ்…” – அவன் குரல் இறுகியிருந்தது. இப்படி ஒரு குழப்ப நிலையில் அவன் இதற்கு முன் இருந்ததே இல்லை என்கிற நினைவில், “சார்… ஆர் யு ஆல்ரைட்?” என்றான் அந்த விசுவாசி. தேவ்ராஜ் அவனை நிமிர்ந்து பார்த்தான். இவனை போன்ற ஊழியர்கள்தான் அவனை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் துணை நிற்பவர்கள்… பெருமையோடு நினைத்தவன், “எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்… தேவையில்லாம உன்ன வர சொல்லிட்டேன்… நீ கிளம்பு” என்றான்.
“எந்த நேரத்துல வேணுன்னாலும் எனக்கு கால் பண்ணுங்க சார்…” என்று கூறி தேவ்ராஜிற்கு தனிமையைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.
தேவ்ராஜ் விரும்பிக் கேட்ட தனிமை அவனுக்கு சிறிதும் அமைதியைக் கொடுக்கவில்லை. மாறாக மனப்போராட்டத்தைத்தான் அதிகரித்தது. ‘பேபி… ஹனி…’ என்கிற கிஷோரின் வார்த்தைகளும்… அது மதுராவிற்காக பயன்படுத்தப்பட்டவை என்பதும் அவன் மனதை வதைத்தது. அதெல்லாம் பழைய சமாச்சாரம் ஒதுக்கித்தள்ளிவிடு என்று மூளை அறிவுறுத்தத்தான் செய்தது… ஆனால்… ‘அவனுடைய படங்களை எப்படி அழிக்காமல் இருந்தாள்! ஏன் அழிக்காமல் இருந்தாள்!’ என்கிற கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்து அவன் மனதை குடைந்தது. மதுராவின் மீது ஆத்திரம் பொங்கியது. நல்லவேளை அவள் அருகில் இல்லாமல் போனாள்… இல்லையென்றால் இந்த இரவுதான் அவர்களுடைய திருமண வாழ்க்கையின் கடைசி இரவாக இருந்திருக்கும்.
வீட்டிற்கு செல்லக்கூடாது என்று பிடிவாதமாக அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை… அவளிடம் நான்கு கேள்வியாவது கேட்டால்தான் மனம் ஆறும் என்று தோன்றியது. உடனே கிளம்பிவிட்டான். வீட்டிற்கு வந்து பார்த்தால், முழங்காலைக் கட்டிக்கொண்டு சிட்டுக்குருவி போல் தரையில் குறுகி அமர்ந்திருந்தாள் அந்த பாவை. பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவனால் அவளை எழுப்ப முடியவில்லை… தொந்தரவு செய்ய முடியவில்லை… காயப்படுத்தமுடியவில்லை. அமைதியாக அவளை பார்த்துக் கொண்டே நின்றான்.
இந்த இளக்கம் வெகு நேரம் தாக்குப்பிடிக்காது என்று அவனுக்குத் தெரியும். ‘ஹனி… பேபி…’ – மீண்டும் மண்டையை குடைய ஆரம்பித்தது. இந்த குடைச்சல் தரும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது. உறங்குகிறவளை எழுப்பிவிட்டு வம்பிழுக்கவும் தயங்கமாட்டோம் என்று எண்ணியவன், சட்டென்று அறையிலிருந்து வெளியேறி ஜிம்மிற்கு ஓடினான். அவனை வதைக்கும் மன அழுத்தத்திற்கு வடிகால் தேவைப்பட்டது. பஞ்சிங் பையை பயன்படுத்திக் கொண்டான்.
மனைவியின் மீதிருக்கும் கோபத்தையெல்லாம் பஞ்சிங் பையிடம் காட்டினான். அவனுடைய மூர்க்கத்தனத்தினால் கைகளின் மேல் தோலெல்லாம் பிய்த்துக் கொண்டு இரத்தம் கசிந்தது. அவன் அதை உணரவே இல்லை. மனமெல்லாம், அவளிடமே சிக்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து வெளியே வரமுடியவில்லை. சக்தியெல்லாம் வடிந்து… ஓய்ந்து போய் அமர்ந்தான். உடம்பெல்லாம் தளர்ந்து போய் கண்களில் ஆவி பறந்தது. இமைமூடி அமர்ந்தவன் எப்போதென்று தெரியவில்லை, உறங்கிப் போனான். திடீரென்று கையில் சில்லென்ற உணர்வு… விலகவிரும்பாத இமைகளை முயன்று பிரித்தான். மெல்ல கண்விழித்துப் பார்த்தான். அவன் காலடியில் அவள்!
திகுதிகுவென்று எறிந்த கண்களில் குளிர் பரவியது போலிருந்தது. அவள் முகத்தை பார்த்த நொடியிலேயே தன் மனம் மலர்வதை ஆச்சர்யத்துடன் உணர்ந்தவன், அவள் நலுங்காமல் தன் கைக்கு மருந்திடுவதை கவனித்தான். உண்மையில் அவள் அவனுடைய கைக்கு மருந்திடவில்லை… மனதிற்கு மருந்திட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவளுடைய கரிசனம் அவனுடைய மனபாரத்தை குறைத்து ஆறுதல் அளித்தது. அவளுடைய இந்த கரிசனமும் அன்பும் எப்போதும் வேண்டும்… தனக்கு மட்டுமே வேண்டும் என்கிற தீவிரத்துடன் அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவனை நிமிர்ந்து பார்த்த மதுரா அதிர்ந்துபோய் பின்வாங்கினாள். அனிச்ச மலர் போல் அவன் மனம் சட்டென்று வாடியது…
இன்னொரு கையும் அடிபட்டிருக்கிறதே! அது என்ன பாவம் செய்தது என்று எண்ணி அவன் வருந்திய பிறகு… நீண்ட யோசனைக்கு பின், போனால் போகிறது என்று அடுத்த கைக்கும் மருந்தை பூசிவிட்டாள். முசுமுசுவென்று எரிச்சல் மண்டியது அவனுக்குள்.
“அக்கறையா?” என்றான் நக்கலாக. ‘ஆமாம்… அக்கறைதான்’ என்று சொன்னால்தான் என்ன? முத்து உதிர்ந்துவிடுமா? அப்படியே முகத்தை தூக்கி வைத்துக் கொள்கிறாளே! – அவனுடைய கோபம் அதிகமானது. “நடிக்கிறியா?” என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டான். அமைதியாக இருந்து தொலைத்தால்தான் என்ன…? வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசியே ஆக வேண்டுமா? இவன் ஒன்று சொல்ல… அவள் ஒன்று சொல்ல… வாக்குவாதமாகி… கடுப்படித்து விரட்டிவிட்டுவிட்டான். அதுவும் இம்சையாகத்தான இருக்கிறது. இவளை என்னதான் செய்வது அவனுக்கு புரியவில்லை. தலைவலியை இழுத்துக் கொண்டதுதான் மிச்சம்…
20 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
super ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Eargerly wait for next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Super madam
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ithuthan kathala
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
போடாங்….உன்னை பஞ்ச் பண்ணிருக்கணும்ல …தப்புச்சிட்ட.
எங்க ஊர் போல வீரமான பொண்ணை கட்டியிருக்கணும்..கோவை சரளா போல உன்னை புரட்டி போட்டிருப்பா….பொண்டாட்டி போனை செக்கப் பண்ணப்போறானாம்…செக்கப்ல.
கூமுட்டை….
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi mam
மதுராவை வருத்தப்படுத்துவதும் சொல்லக்கூடாது எல்லாம் சொல்லி புண்படுத்துவதும் பின் மதுராவின் வலியை பார்த்து தான் வருத்தப்படுவதும் என்று இதுதான் தேவ் திருமணமான நாள் இன்று வரை செய்கின்றார்,மதுரா வாய் திறந்து ம் பிரச்சனை திறக்கவில்லை என்றாலும் பிரச்சன என்னதான் மதுரா செய்யணும்,அது உங்களுக்காவது தெரிந்தால் அதை கொஞ்சம் மதுராவிடம் சொல்வது, தேவ் கொஞ்சம் மாற்றி யோசியுங்களேன் மதுரா மேல் அதே அன்பு இருக்கட்டும் ஆனால் நிறைய புரிதல் கொஞ்சம் சண்டை கொஞ்சம் உரிமையுணர்வு என்று இருந்து பாருங்களேன்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Waiting for the next episode eagerly.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vera level.. love u Dev
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
When is the next episode?
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ll be posted tomorrow…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thanks mam
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
கொஞ்சம் பெரிய யு டியா தாங்க நித்யா
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ஸ்டோரி முடிய போகுது க்கா… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
இவனை என்னதான் செய்வது…..பழைய குப்பையை கிளரிட்டு இருக்கான் மடையன்
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Dev konjam self analysis panna unaku nallathu
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ada loose…kandippa mental than
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நல்ல பெயர் சுதா
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Romba nalla van da nee
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nallavan than pa nee
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Enna than pa venum unakku .. Unakkavathu theriyuma 😨