Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kanalvizhi 38

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 53

அத்தியாயம் – 53

சூரியவெளிச்சம் முகத்தில் குத்த, விழிப்புத்தட்டி எழுந்து அமர்ந்தான் தேவ்ராஜ். இமைகளை மூடி மூடி திறந்து திகுதிகுவென்று எரியும் கண்களை சரிக்கட்டியவன், நேற்று இரவும் டெரஸிலேயே உறங்கிவிட்டதை உணர்ந்து எழுந்து உள்ளே வந்தான். உடலைக் குறுக்கி நத்தை போல் மெத்தையில் சுருண்டு கிடந்தாள் மதுரா. பார்வையால் அவளை வருடிய தேவ்ராஜின் உதடுகள் அழுந்த மூடின. கன்றிப் போயிருந்த அவள் கன்னமும், பிடிங்கிப் போட்ட கொடிபோல் அவள் தளர்ந்துக் கிடந்த விதமும் அவன் மனதைப் பிசைந்தது. உள்ளே வலித்தது… இறுகிப்போன சிலைபோல் அவளை பார்த்துக் கொண்டே நின்றவன், ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு கனத்த மனதுடன் குளியலறைக்குள் நுழைந்தான்.

 

முழு வேகத்தில் ஷவரைத் திறந்துவிட்டு, திமுதிமுவென்று கொட்டும் குளிர்ந்த நீருக்கு அடியில் சிலை போல் நின்றான். ஒரே அரையில் அவள் சுருண்டு விழுந்த அந்த காட்சி படம் போல் அவன் மனதில் ஓடியது. கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான்.

 

‘பிடிக்கலைன்னா விட்டுடுங்க. உங்க திறமைக்கும் தகுதிக்கும் ஏத்த மாதிரி பொண்ணு யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிகோங்க’ – அவனை மிருகமாக்கிய வார்த்தைகள் மீண்டும் அவன் செவிகளில் எதிரொலித்தது. அவன் உடல் இறுகி விறைத்தது.

 

அவள் தன்னிடமிருந்து நூல்நூணியளவு விலகுவதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாதவனுக்கு, அவளை எப்படி தன்னோடு இணக்கமாக வைத்துக்கொள்வது என்கிற நுட்பம் துளியும் தெரியவில்லை.

 

அவளுடைய அழுது வீங்கிய முகமும் கன்றிப்போன கன்னமும் அவன் மனதிலிருந்து அகல மறுத்தது. தன் கையை பார்த்தான். வலுவான கை… பூ போன்றது அவள் முகம்… எத்தனை மிருகத்தனம்! எப்படி தங்கினாள்! – வண்டு குடைவதுபோல் மனசாட்சி அவனை குடைந்தது. தன் செயலை வெறுத்தான்… தன் கோபத்தை வெறுத்தான்… தன் அகம்பாவத்தை வெறுத்தான்… ஆனால் அவையனைத்தும் அவனைவிட்டு அகல மறுத்தன.

 

விறுவிறுவென்று குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தான். இரவெல்லாம் உறங்காமல் அவனோடு போராடியவள் அசந்துக் கிடந்தாள். அவன் அலுவலகத்திற்கு தயாராகி முடிக்கும் வரைக் கூட அவளிடம் எந்த அசைவும் இல்லை. வருத்தத்தோடு அவளை பார்த்துக் கொண்டே நின்றவன் மெல்ல அவளிடம் நெருங்கி நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். நல்லவேளை… பயந்தது போல் காய்ச்சல் ஏதும் இல்லை… பெருமூச்சுடன் அறையிலிருந்து வெளியேறினான். வேலைக்கார பெண் எதிர்பட்டாள்.

 

“எங்க போற?”

 

“ரூம் கிளீன் பண்ண போறேன் சார்…”

 

“இல்ல… மதுரா தூங்கறா… அப்புறம் பண்ணிக்கலாம்… நீ கீழ போ…” – அவளுடைய உறக்கத்திற்கு குந்தகம் வந்துவிடக் கூடாதென்கிற அக்கறையோடு கூறிவிட்டு கீழே வந்தவன், காலை உணவை புறக்கணித்துவிட்டு அலுவலகத்திற்குச் சென்றான்.

 

*********************

மனதை மயக்கும் மாலை நேரத்தில், பசுமையான புல்வெளியை அலங்கரித்த இரண்டு பிரம்பு நாற்காலிகளில் ஒன்றில் தேவ்ராஜும் மற்றொன்றில் அந்த நவ நாகரீக யுவதியும் அமர்ந்திருந்தார்கள். அவனுடைய கை அவள் கரங்களுக்குள் சிக்கியிருந்தது. இவருடைய பார்வையும் ஒன்றோடொன்று பின்னியிருந்தது. மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல், சொக்கும் புன்னகையுடன் அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தலையாட்டி பொம்மை போல் ஆமாம்சாமி போட்டுக் கொண்டிருந்தான் தேவ்ராஜ்.

 

தன் கண்ணெதிரிலேயே அரங்கேறிக் கொண்டிருக்கும் கண்றாவியைக் கண்டு மதுராவின் மனம் பற்றி எரிந்தது. கால்கள் வலுவிழந்து துவண்டன. உடல் நடுங்கியது. இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது. டெரஸில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புக்கு கம்பியை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள். அவளுடைய இளிப்பையும்… இவனுடைய மண்டையாட்டலையும் சகிக்க முடியவில்லை. அவர்களிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள்.

 

அவன், அவளோடு முகம் பார்த்து பேசி இன்றோடு மூன்று நாட்களாகிவிட்டது. அன்று இரவு நடந்த சண்டைக்குப் பிறகு அவளை ஏறிட்டுகூட பார்ப்பதில்லை. மாலை அலுவலகத்திலிருந்து வரும் பொழுதே அந்த சூனியக்காரியோடுதான் வருகிறான். இரண்டு மணிநேரம் அவளோடு தனியாக தோட்டத்தில் அமர்ந்து கடலை வருகிறான். பிறகு அவளை அனுப்பிவிட்டு இவனும் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிடுகிறான். மீண்டும் எப்போது வீட்டிற்கு வருகிறான்… எப்போது அலுவலகத்திற்குச் செல்கிறான்… எதுவுமே அவளுக்கு தெரிவதில்லை… கோபத்தில் தான் சொன்ன வார்த்தைகளை உண்மையாக்கப் போகிறானோ! – தவிப்பும் பயமும் நெஞ்சை அடைக்க, மெல்ல தோட்டத்துப் பக்கம் திருப்பினாள்.

 

அவள் அவனை தொட்டுத்தொட்டுப் பேசினாள். பதிலுக்கு அவன் முகத்திலும் புன்னகை கீற்றாகத் தோன்றியது. இவளோடு பேசும் பொழுதெல்லாம் ஓடி ஒளிந்துக்கொள்ளும் இந்த புன்னகை இப்போது மட்டும் எப்படி தோன்றுகிறது! – மனம் துடித்தது… கண்ணீர் குளம்கட்டியது. ஓடிச்சென்று அவளை அடித்துவிரட்டிவிட்டு இவனை இழுத்துக் கொண்டு வரவேண்டும் போல் இருந்தது.

 

‘அவனோட அப்பா புத்தியில கொஞ்சம் அவனுக்கும் இருக்கும்… டாடிகிட்ட இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிடு…’ – திருமணப்பேச்சு ஆரம்பித்த போது யாருக்கும் தெரியாமல் தன்னை தனியாக அழைத்து, தாய் சொல்லிக் கொடுத்த ரகசிய அறிவுரை இப்போது அவள் மனதை உறுத்தியது. அன்று தந்தையின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாமல் அமைதியாக இருந்துவிட்டது தவறோ என்கிற எண்ணம் தோன்றியதும் ஆத்திரம் தொண்டையை அடைத்தது.

 

துன்பமும் கோவமும் கலந்த கலவையான இந்த உணர்வு அவளுக்கு புதிது… கையாள முடியவில்லை. சட்டென்று திரும்பி அறைக்குள் வந்தாள். ‘யார் அவ? இவங்களுக்குள்ள என்ன பழக்கமா இருக்கும்! வீட்டுக்கு எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்! எல்லாரும் பார்க்கறாங்களே… பார்க்கட்டும்னுதான் கூட்டிட்டு வந்திருக்கானா! என்ன காரணமா இருக்கும்… நம்மளை அசிங்கப்படுத்தவா! அவனுக்கும் அசிங்கம் தானே!’ – அதிவேகமான எண்ணவோட்டம் அவளை நிலைகொள்ளவிடவில்லை. குறுக்கும் நெடுக்குமாக அறையை அளந்தாள்… பிறகு மெத்தையில் அமர்ந்தாள்… பிறகு மீண்டும் எழுந்து நடந்தாள்… மனம் பரபரத்தது.

 

‘தேவ்….!!!’ – தலையைப் பிடித்துக் கொண்டு உச்சகட்ட டென்ஷனில் அமர்ந்திருந்தாள்.

 

சற்றுநேரத்தில் உள்ளே வந்த தேவ்ராஜ் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் மனைவியை பார்த்தான். முகமெல்லாம் சிவந்து… கடுகடுவென்று இருந்தது. ஓரிரு நொடிகளை அவளை பார்த்துக் கொண்டே நின்றுவிட்டவன் பிறகு தலையை உலுக்கிக் கொண்டு பிரிட்ஜை திறந்து வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தான். மீண்டும் அவனுடைய பார்வை அவள் பக்கம் திரும்பியது. அவளுடைய இயல்பற்றத்தன்மை அவனை உறுத்தியது. மூன்று நாட்களாக அவளிடமிருந்து விலகியிருந்தவனுக்கு இன்று இப்போது முடியவில்லை.

 

“என்ன ஆச்சு? ஏன் என்னவோ போல இருக்க?” – மிருதுவாகக் கேட்டான். அந்த குரலில் சீற்றமடைந்தவள் சட்டென்று நிமிர்ந்து அவனை உக்கிரமாக முறைத்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவாயிற்று இவளுக்கு! குழப்பத்துடன் பார்த்தான்.

 

“ஏதாவது பிரச்சனையா?” – புரியாமல் கேட்டான். மதுராவின் முகம் அஷ்டகோணலாக மாறியது.

 

“மதுரா… ஐம் அஸ்கிங் யு சம்திங்… வாயத் தெறந்து பதில் சொல்லு…” – கோபத்தை மென்று விழுங்கி கொண்டு… அழுத்தமாகக் கேட்டான்.

 

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல… போதுமா?” – எறிந்துவிழுந்தாள். அவனுடைய புருவம் சுருங்கியது.

 

“இது சரியான பதில் இல்ல…”

 

“என்னை கேள்வி கேட்கறதுக்கு நீங்க சரியான ஆள் இல்ல…” – பட்டென்று சொல்லிவிட்டாள். தேவ்ராஜின் முகம் பயங்கரமாக மாறியது.

 

“என்ன சொன்ன?” என்று ஆதி குரலில் உறுமினான்.

 

அந்த குரல் விடுத்த எச்சரிக்கையை மதுரா அமைதியாகிவிட்டாள். கோபத்தை மீறிய பயம் அவளை அடங்கிவிட்டது. சற்று நேரம் அவளை முறைத்துப் பார்த்தவன் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

மறுநாளும் அந்த பெண் தேவ்ராஜுடன் வீட்டுக்கு வந்தாள். வழக்கம் போல இருவரும் சேர்ந்தே மாலைநேரத்தை தோட்டத்தில் கழித்தார்கள். மதுராவின் அடிவயிறு தீ வைத்தது போல் எரிந்தது. அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தடதடவென்று படிக்கட்டில் இறங்கி கீழே வந்தாள். ரஹீம் எதிர்பட்டான்.

 

“யார் அது?” – முகத்தை சுளித்துக் கொடுக்க கேட்டாள்.

 

“யாரை கேட்கறீங்க மேம்?”

 

“தேவ்கூட பேசிட்டு இருக்கறது…” – அவனுடைய பார்வையை சந்திப்பதை தவிர்த்துவிட்டு கூறினாள்.

 

“மிஸ் மேதா சௌத்ரி…”

 

“இங்க என்ன வேலை? டெய்லி பார்க்கறேன்…” – ரஹீமின் விழிகளில் சின்ன அதிர்வு தோன்றி மறைந்தது. பிறகு, “பிஸினெஸ் மேம்…” என்றான் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல்.

 

“பிசினஸ் எல்லாம் ஆஃபீஸோட முடிச்சுக்க மாட்டீங்களா?” – சம்மந்தமில்லாமல் அவனிடம் கடுப்படித்தாள்.

 

“சாரோட டிஸிசன் மேம்… யாரும் கேள்வி கேட்க முடியாது” – மதுராவின் மூக்கு நுனி சிவந்தது. முகத்தில் கடுமை கூடியது. விறுவிறுவென்று தோட்டத்திற்குச் சென்றாள்.

 

“எக்ஸ்கியூஸ் மீ….” என்று அவர்களுடைய பேச்சில் குறுக்கிட்டாள். மனைவியின் பக்கம் திரும்பிய தேவ்ராஜின் பார்வையில் அலட்சியம் இருந்தது. அந்த அலட்சியம் அவளுடைய ஆத்திரத்தை பலமடங்கு அதிகரித்தது.

 

“என்ன…?”

 

“பேசணும்…”

 

“பிஸியா இருக்கேன். லேட்டா பேசிக்கலாம்…” – முகத்தில் அடித்தது போல் கூறினான். சட்டென்று கண்களில் கண்ணீர் திரையிட்டது. அவமானத்தில் முகம் கன்றி சிவந்துவிட்டது. அதை கவனித்த மேதா, “தேவ்… போய் பேசிட்டு வாங்க…” என்றாள் கண்டிப்புடன். அது மதுராவில் வெறியை இன்னும் அதிகமாக்கியது.

 

‘என்னோட தேவ் என்கூட பேசறதுக்கு இவை என்ன பர்மிஷன் கொடுக்கறது’ – முசுமுசுவென்று கோபம் உச்சிக்கு ஏற, “தேவையில்லை… நீங்க உங்க வேலையையெல்லாம் முடிச்சுட்டு வாங்க. நா வெயிட் பண்ணறேன்” என்று அவளுடைய பிடியில் சிக்கியிருக்கும் கணவனின் கையை பார்த்தவாறு கூறிவிட்டு, வெடுக்கென்று திரும்பி நடந்தாள். அவளுடைய பேச்சும் தோரணையும் மேதாவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

 

“ஷி இஸ் எ பொஸசிவ் வைஃப்…” – அவள் சொன்னதைக் கேட்டதும் தேவ்ராஜிற்கு குளுகுளுவென்று இருந்தது.

 

“நோ வே…” என்றான் சிரித்துக் கொண்டு.

 

“நா நிச்சயமா சொல்லுவேன்” என்று புன்னகையுடன் கூறியவள், “சரி… நா கிளம்பறேன்… தீங்கை போயிட்டு உங்க பாருங்க… நியாபகம் வச்சுக்கோங்க… ஷி இஸ் பொஸசிவ்…” என்று கூறிவிட்டு புறப்பட்டாள்.

 

நம்ப முடியவில்லை என்றாலும் மேதா சொல்லிவிட்டுச் சென்ற விஷயம் உண்மையாக இருக்குமோ என்கிற எண்ணத்தில் தேவ்ராஜின் இதழ்கள் மெல்ல விரிந்தன. மீசையை முறுக்கிவிட்டபடி தன்னுடைய அரைப்பக்கம் பார்வையை திருப்பினான். எங்கேயாவது அவள் தென்படுகிறாளா என்று பார்வை ஆராய்ந்தது. ம்ஹும்… எங்கேயோ ஓடி ஒளிந்துக் கொண்டாள் போலும்… ஆள் அரவரமே இல்லை…

 

‘பொஸசிவ்!’ – மனமெல்லாம் ஏதோ பூ பூப்பது போல் ஆனந்தமாக இருந்தது. நெஞ்சில் கைவைத்து கண்மூடி அந்த உணர்வை அனுபவித்தான். எங்கோ பறப்பது போல் இருந்தது. ‘ஸ்ட்ராபி…’ – மனம் முணுமுணுத்தது. ஆசையோடு அவளை தேடி வந்தான்.

 

எதிர்பார்த்தது போலவே கடுகடுவென்று அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகே உரசிக் கொண்டு அமர்ந்து, “என்ன விஷயம்? ஏதோ பேசணும்னு சொன்னியே!” என்றான் சரசமாக. சட்டென்று எழுந்து அவனை முறைத்தாள் மதுரா. எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.

 

‘என்ன…?’ – புருவம் உயர்த்தினான்.

 

“வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா?” – பல்கலைக் கடித்தாள். அவன் விழிகளில் சுவாரசியம் கூடியது. உண்மைதானோ! இவளுக்கு நம் மீது ஏதோ இருக்கும் தான் போலிருக்கே! அவளை மேலும் கோபப்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தது.

 

“எங்க முடிஞ்சுது… நீதான் இடையில வந்து தொந்தரவு பண்ணிட்டியே” என்றான். அவ்வளவுதான். மதுரா பொங்கிவிட்டாள்.

 

“அசிங்கமா இல்ல…?” – ஒரே வார்த்தையில் தேவ்ராஜின் மனநிலை அந்தர்பல்டி அடித்துவிட்டது. என்னதான் அவளுக்கு அவன் மீது ஒரு இது இருந்தாலும் இந்த வார்த்தையை எப்படி அவள் பயன்படுத்தலாம். கடுப்பாகிவிட்டான். ஆனாலும் எதுவும் பேசவில்லை. பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

“என்னை இரிட்டேட் பண்ணறதுக்காக தான் இதெல்லாம் செய்யறீங்களா? இல்ல உண்மையாவே அந்த பொண்ணுமேல இன்ட்ரெஸ்ட்டா?” – பேசமுடியாமல் ஆத்திரம் தொண்டையை அடைத்தது அவளுக்கு.

 

“நீ நினைக்கற மாதிரி எதுவும் இல்ல…” என்றான்.

 

“வேற எப்படி? எனக்கு புரியவே இல்ல… நீங்க செய்ற தப்பை எல்லாம் செய்வீங்க. ஆனா என்கிட்ட ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் குறை கண்டு பிடிப்பீங்க… அப்படித்தானே?” – நரம்பு புடைக்கும் அளவிற்கு அவனுடைய கை முஷ்ட்டி இறுகியது.

 

“நா என்ன இப்போ தப்புப் பண்ணிட்டேன்”

 

“அந்த லேடி கூட இப்படி… எல்லாருக்கும் முன்னாடி… அசிங்கமா…” – முகத்தை சுளித்தாள்.

 

“இடியட்… ஏன் உன் புத்தி இப்படி போகுது?” – கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கடுப்புடன் கேட்டான்.

 

“என்னோட புத்தி நல்லாத்தான் இருக்கு… உங்க புத்திதான்…” – அவள் முடிப்பதற்குள் மேஜையிலிருந்த பொருட்களெல்லாம் கீழே உருண்டன. அவளை அடிக்க முடியாமல் பொருட்களை சிதறவிட்டான். திடுக்கிட்ட மதுரா சற்று விலகி நின்றுக் கொண்டு, “இப்படி கோவப்படா… நீங்க செய்றதையெல்லாம் நா கண்டுக்காம இருப்பேன்னு நினைச்சீங்களா?” என்று எகிறினாள். பல்லை கடித்தான் தேவ்ராஜ். “எங்க அம்மா அப்போவே சொன்னாங்க… நீங்களும் உங்க அப்பா மாதிரிதான்னு… நாந்தான் கேட்கல…” என்று கண்ணீருடன் நெற்றியில் அறைந்து கொண்டாள்.

 

நொறுங்கி போய்விட்டான் தேவ்ராஜ். இடி விழுந்தால் கூட அசாராதவன் அவளுடைய ஒரு வார்த்தையில் ஒடுங்கிவிட்டான். இதே வார்த்தையை எத்தனையோ பேர் சொல்லி அவன் கேட்டு புழுங்கியிருக்கிறான். விடலைப் பருவத்தில் கூட பெண்களின் மீது எந்த ஈடுபடும் வராததற்கும்… அவன் இயல்பாய் வளராததற்கும், அவனை சுற்றிச்சுற்றி அடித்த இந்த ஒரே வார்த்தைதான் காரணம்.. அந்த வார்த்தையை இன்று மதுராவும் பிரயோகித்துவிட்டாள்… சந்தோஷம்… ஒரு வார்த்தை கூட அவளிடம் பதில் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான்.

 

 
16 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sharmila Natarajan says:

  Ivanga sandaiya konjam theerthu veyunga, Nithya! They are complicating it. Dev is muradan, so he can change only slowly, but what happened to Madhura? When he is fine, she is fine, but when he is angry and upset, she moves away from him. She should not think about her parents and her past when she is with him. Hope they understand each other deeply.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Skanatharajah Sutha says:

  Very nice…….


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  hooooo vaarthayaa veettutaiya madhu


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Jaya Bharathi says:

  Devkku madhuva handle panna theriliya… ..soooo sad…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Juleesakthi Julee says:

  Yen madhu yen ippadi..neeiye vaaiya vittu vangi kattikkara….


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Mary G says:

  கொஞ்சம் பெரிய ud ah தாங்க mam


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  Madhu enna vartha sollita avvalavu Dev adhaye pidichi aaduvane


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ishitha S says:

  Devvvv… ena da ipdi sothappura… analum pavam dev… madhu ipdi pesi nogadichuruka koodathu


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kanimozhi Ramesh says:

  Super ud sis cha madhu ipadi panitiye.. dev ini ena panuvan.. rendu perum epo manasu vitu pesuvanga


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kayalvizhi Ravi says:

  மது அதிகமாக வார்த்தை விட்டுவிட்டாள், இனி தேவ் நடவடிக்கை எப்படி இருக்குமோ?


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Uma Deepak says:

  டேய் அறிவு நீ மதுராவை இப்படி கேள்வி கேட்கும் பொழுது உனக்கு குளுகுழுன்னு இருந்துச்சு ல.. இப்போ அனுபவி டா ராசா.. நல்லா இப்போ தான் சரியா கேட்ட மதுரா.. ஆனா அந்த ராட்சசன் இனி என்ன செய்ய போறானோ..
  நித்யா சிஸ் இன்னும் எத்ததனை எபி இருக்கு ஸ்டோரி முடிய.. சீக்கிரம் ரொமான்ஸ் ஓட வாங்க..


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Suji Anbu says:

  Hi sissy nice ud
  I think antha lady metha psychologist ah sissy.
  Madhu than dev vera ponnu mrg pannika sonnala apporam dev yaru kuda pesana enna
  Madhu ennor ponnu dev kuda pesa kudathu kastapadum pothu namaa dev appadi madhu sollum pothu dev eppadi hurt aagum irupan.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Achchooo … Madhu en ippadi … 🙁🙁


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  மதுரா தேவ்வை பார்த்து கேட்பதில் என்ன தப்பு ,மதுராவிடம் ஒரு புன்னகைக்கு பஞ்சம்,ஆனால் தோட்டத்தில் இருந்து பேசும் பெண்ணிடம் புன்னகை மன்னன் போல் இருந்து பேசினால் எந்தப்பெண்ணிற்கும் இப்படி ஒரு எண்ணம் வரும் அதனால்தான் உன் அப்பா மாதிரித்தான் நீ இருப்பதாய் என்று அம்மா சொன்னார் என்பதை கூறிவிட்டார்,தேவ்விற்கு எதனால் இப்படி ஒரு குணம் மதுரா சந்தோசமாய் இருந்தாலும் பிடிக்கவில்லை வருத்தமாக இருந்தாலும் பிடிக்கவில்லை ,எல்லாமே தேவ்தான் ஆரம்பிக்கின்றார் ஆனால் பழி மதுராவில் விழுகின்றது,நீ எனக்கு பொருத்மில்லாதவள் என்று கூறிவிட்டு வீட்டுத்தோட்டத்தில் நவநாகரீக நங்கையுடன் நெருக்கமாக பேசுவதுபோல் பேசினால் மதுரா இதை தவிர வேறு எதை நினைக்கமுடியும்.

  நன்றி


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ambika V says:

  Enna pa anathu evanga renduperum eppo than manasuvittu pesuvangala theriyalai


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  அச்சோ…சொதப்பிட்டியே மது.
  ப்ரியா…வாபஸ் டா…

error: Content is protected !!