Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இரும்பின் இதயம் – 3

அத்தியாயம் – 3

“சொல்லுங்க அறிவழகன்….” ஜெயச்சந்திரன் முன் அவனுடைய அலுவலக அறையில் அறிவழகன் திருவெரம்பூர் இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்.

 

“சார்… இதுவரைக்கும் எட்டு கேஸ் பதிவாகியிருக்கு சார்… திருவெரம்பூர்ல ரெண்டு, இந்திரா நகர்ல  ரெண்டு… அப்புறம் கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், அரியமங்கலம் ஏரியா, பொன்மலை இங்கெல்லாம் ஒன்னு ஒன்னு…”

 

எல்லாமே சின்ன பிள்ளைங்களா?”

 

“ஆமா சார்… எல்லாமே பத்து வயசுக்குள்ள தான். எல்லாமே பூங்கால, கோவில்ல, ஸ்கூல்ல… இப்படி பொது இடத்தில தான் சார் நடந்திருக்கு. ”

 

“சரி என்ன action எடுத்துரிக்கீங்க…?”

 

“விசாரிச்ச வரைக்கும் எல்லாமே ஒரே ஆள் தான் சார் பண்ணியிருக்கான். எல்லாமே பத்துநாள் பதினைந்து நாள் வித்தியாசத்துல நடந்திருக்கு. அதனால ஒவ்வொரு பிள்ளையா சிட்டிய விட்டு வெளியே கொண்டு போயிருக்கலாம்ன்னு சந்தேகப்படுறேன் சார்..”

 

“ட்ரேஸ் அவுட் பண்ண முடிஞ்சதா…?”

 

அவர் தலை குனிந்தார்.

 

“சரி மிஸ்டர் அறிவழகன். அவன் இந்த வேலையை தொடர்ந்து செய்வான். போலீஸ் அலர்ட் ஆனது தெரியாமல் குழந்தைகள் சம்பந்தப்பட்ட எல்லா பொது இடங்களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்ங்க… உங்களுக்கு உதவியா ஒரு டீம் ஏற்பாடு செய்றேன். ஆறு பேர் டீம். நம்ப ஏழு பேர் தவிர விஷயம் வெளியே போகக் கூடாது. இதை பற்றி நாளைக்கு பேசலாம் இப்போ நீங்க கிளம்புங்க. ”

 

“ஓகே சார்…” விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு அகன்றார்.

 

____________________________________

 

“என்ன பெரியப்பா நாலு நாள் தான் ஆகுது… ”

 

“நாலு நாள் தான் ஆகுது போயி… அதுக்குள்ள வந்து நிக்கிரியேன்னு கேக்குறியா?”

 

“அய்யய்யோ… என்ன பெரியப்பா நீங்க… கல்யாணத்துக்கு பெண் பார்க்க போறேன்னு சொல்லிட்டு போனிங்க. உடனே வந்துட்டிங்களே… ஒருவேள எனக்கு கல்யாணம் பண்ணிவைக்கிற முடிவ மாத்தீட்டிங்கலோன்னு கேட்டேன்…” அவன் சிரித்துக் கொண்டே பதில் சொன்னான்.

 

“அப்புடி போடு… கல்யாணமுன்னு சொன்னோன ‘சோக்கெல்லாம் (ஜோக்)’  அடிச்சு சிரிக்கிறியே…” என்று அவனை மேலும் பேச்சுக்கு இழுத்தார்.

 

அவன் அதற்க்கு லேசாக சிரித்தான் அவ்வளவு தான்.

 

“இந்தாப்பா இதுதான் பொண்ணு போட்டோ… புடிச்சிருக்கா பாரு…”

 

அவன் படத்தை வாங்கி பார்த்தான். பெண் மிக அழகாக இருந்தாள். அவன் மனதிற்குள் ஒரு நிம்மதி தோன்றியது. போன முறை பெரியப்பா கேட்ட போது சொல்லத் தெரியாமல் விட்ட விஷயம் இது தான். பெண் அழகாக இருக்க வேண்டும் என்பது. அது கேட்காமலே கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில்

 

“பிடிச்சிருக்கு பெரியப்பா…”என்றான்.

 

“என்னப்பா.. எந்த விவரமும் கேட்காம புடுச்சுருக்குங்குற… பொண்ணு பேரு, படிப்பு எல்லாம் தெரிய வேண்டாமா…?”

 

அவனுக்கு அதெல்லாம் தேவைப்படவில்லை. பெண்ணை பார்த்ததும் பிடித்துவிட்டது அதை மறைக்காமல் சொல்லிவிட்டான். ஆனால் அதை அவரிடம் காட்டிக் கொள்ளாமல்

 

“பேர் என்ன? படிப்பு பற்றி கவலை இல்லை… எழுத படிக்க தெரிந்தால் போதும்…”

 

அவர் அவனை விசித்திர பிறவியை பார்ப்பதுபோல் பார்த்தார். “ஏம்பா… நீ கல்யாணத்துக்குத் தானே பொண்ணு பார்க்க சொன்ன…? வீட்டு வேலைக்கு எதுவும் ஆள் பார்க்க சொன்னியா…?”

 

“எ.. என்ன பெரியப்பா…?”

 

“இல்ல… உனக்கு சமமா பொண்ணு பார்க்காம, அடி மட்டமா பார்க்க சொல்றியே… அதான் கேட்டேன்”

 

“என்ன பெரியப்பா இப்படி சொல்லிட்டிங்க? என்னோட மனைவிக்கு என் வீட்டில் முழு உரிமையும் சுதந்திரமும் இருக்கும். அவள் படித்தவளாக தான் இருக்கணும் என்று அவசியமில்லை என்று தான் சொன்னேன். ஆனால் படித்திருந்தாலும் நல்லதுதான்”

 

ஒரு வழியாக அவர் சமாதானம் அடைந்து

 

“பொண்ணு பேரு சாருமதி, படிப்பு Bsc , ஊரு நம்ம ஊருதான். நல்லா வாழ்ந்த பாரம்பரியமான குடும்பம். இப்போ நொடிச்சிருச்சு…” என்று பெண்ணை பற்றிய விபரம் சொன்னார்.

 

அவனுக்கு முழு திருப்த்தியாக இருந்தது.

 

_____________________________________________

 

“இப்போ கல்யாணத்துக்கு என்னம்மா அவசரம்? நம்மகிட்ட என்ன இருக்குன்னு கல்யாணத்துக்கு அவசரபடுற?”

 

“ஒன்னும் இல்லைன்னு தான்டி அவசர படுறேன். உங்க அப்பாவை நம்பி உன்னை நான் வச்சுகிட்டு இருக்க முடியுமா…? நல்லா வாழ்ந்த குடும்பம் என்கிற பெயர் மட்டும் தான் இருக்கு. அதை வைத்துக் கொண்டு தான் உன்னை கரை ஏத்தணும். ஏதோ நல்ல காலம் வந்து உனக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு… அது உனக்கு புடிக்கலையா?”

 

“என்னம்மா இப்படி சொல்ற? நல்ல வரனா வந்தா மட்டும் போதுமா? அவங்களுக்கு சமமா நாம செய்ய வேண்டாமா? ஏம்மா… இப்படி பேராச படுற? நாளைக்கு அவங்க வந்து பார்த்துட்டு நம்மளால ஒன்னும் செய்யமுடியாதுன்னு தெரிஞ்சு அவங்களாவே வேண்டாம் என்று சொல்லிவிட்டு போறதுக்கு பதில் நாமே இப்போ வேண்டாம் என்று சொல்லிவிடுவது மரியாதையா இருக்கும்”

 

“ஐயோ குட்டிமா… உனக்கு தெரியாதுல்ல… அவங்களுக்கு ஒண்ணுமே வேண்டாமா… பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும்ன்னு சொல்றாங்கடி…”

 

இதை கேட்டதும் சாருமதியின் முகம் சுருங்கியது. எதுவும் வேண்டாம் என்று சொல்லி ஒரு பிச்சைக்காரன் வந்து கேட்டாலும் என்னை தள்ளிவிட்டுடுவியாம்மா…?” கலங்கிய குரலில் கேட்டாள்

 

“என்னடி பெரும்பேச்சு பேசுற? அவங்க பிச்சகாரவங்கன்னு உனக்கு எப்படி தெரியும்? ”

 

“ஆமாம் இப்படி எதுவும் வேண்டாம் என்று நம்மகிட்ட வந்திருக்காங்கன்னா நம்மளவிட மோசமான நிலமையில்தான் இருக்கணும். நம்மளவிட மோசமான்னா அது பிச்சைகாரன் தான். இதில் என்ன சந்தேகம்.”

 

தாயும் மகளும் பேசிக்கொண்டிருக்கும் போது தந்தை உள்ளே தள்ளாடிக் கொண்டு வந்தார். சாரு முகம் சுழித்தாள்.

 

“பார்த்துக்கோடி… இந்த மனுஷன்கிட்ட உன்னை எத்தனை நாள் வச்சு ஊறுகாய் போடா சொல்ற? பையன் போலீஸ்சாம். திருச்சியில வேலையாம். அரசாங்கத்திலேயே வீடு கொடுத்துருக்காங்கலாம். ” அப்புறம் உனக்கு என்னடி கவலை.

 

சாருமதிக்கும் உவப்பாக இருந்தது. சரி நம்ம நிலைமைக்கு இதுக்கு மேல ஆசைப் படக் கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.

 

“அப்பாவுக்கு சாப்பாடு போட்டுவிட்டு பையனோட போட்டோவ காட்டுறேன். இப்போ அந்த பையனோட விவரத்தை எல்லாம் அவங்க பெரியப்பா அந்த நோட்டுல எழுதி வச்சிருக்காரு… பாத்து படுச்சுக்கோ….”

 

சாருமதி கூடத்து சுவரில் இருந்த அலமாரியிலிருந்து அந்த நோட்டை எடுத்து பார்த்தாள்… அதிர்ந்தாள்…..

 

வேலை ASP என்று இருந்தது. அவளுக்கு கனவா அல்லது நினைவா என்றே தெரியவில்லை. சாதாரண ‘கான்ஸ்டபில்’ அல்லது ‘ஹெட் கான்ஸ்டபில்’ தான் மாப்பிள்ளையின் வேலையாக இருக்கும் என்று பார்த்தவளுக்கு, படிப்பு IPS வேலை ASP என்றதும் வானத்தில் மிதப்பது போல் இருந்தது. “ஆஹா… கடவுள் எவ்வளவு நல்லவர்… என்னை கைவிடவில்லையே…. நானே படிச்சு முன்னேறனும் என்று நினைத்துக் கொண்டிருந்தால்… எதிர் பாராமல் இப்படி ஒரு அதிர்ஷ்ட்டமா…?” இளமையின் வேகத்தில் மேலோட்டமாக சிந்தித்தாள்.

 

மாப்பிள்ளையின் படத்தை பார்க்காமலே IPS என்றதும் அவள் மனம் ‘காக்க காக்க’  சூர்யாவை கற்பனை செய்துகொண்டது. அவள் மனம் அவள் சொன்ன பேச்சை கேட்க்க மறுத்து கற்பனை வானில் சிறகடித்தது. மகிழ்ச்சி பெருங்கடலில் திக்குமுக்காடினாள்.  ஆனால் அந்த மகிழ்ச்சி மாப்பிள்ளையின் படத்தை பார்க்கும் வரைதான் இருந்தது.

 

அம்மா போட்டோவை கொடுத்ததும் மீண்டும் அதிர்ந்தாள். அந்த படத்திலிருப்பவனுக்கும் ‘காக்க காக்க’ சூர்யாவுக்கும் சம்பந்தமே இல்லை… மீசையை தவிர.

 

கடுமையான முகமும், விடைத்த மூக்கும், கூர்மையான விழிகளும்… “ஐயோ இந்த முகத்தை பாத்தால் ‘லவ்’ வராது போலருக்கே… பயம் தானே வருது…” அவள் வாய்விட்டே புலம்பினாள். ஆனாலும் கிடைக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை இழக்கலாமா…? அவளுக்கு குழப்பமாக இருந்தது.




Comments are closed here.

You cannot copy content of this page