Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

கனல்விழி காதல்-56

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 56

அத்தியாயம் – 56

இரவு வெகுநேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. இதுதான் இவனுடைய வழக்கமா! கோபம் வந்துவிட்டால் இரவெல்லாம் வீட்டிற்கு வரமாட்டேன் என்கிறானே! எங்கு சென்றிருப்பான். ரஹீம்கான் வேறு அவசரமாக ட்ரைவரை அழைத்துக் கொண்டு சென்றானே! ஏதேனும் விபரீதமாகியிருக்குமோ! – மதுராவின் கடிவாளமிடாத கற்பனை குதிரை தாறுமாறாக ஓடியது.

 

இதெல்லாம் தாங்க முடியாத சித்திரவதையாக இருந்தது அவளுக்கு… ஒவ்வொரு நாளும் நிம்மதியில்லாமல் இது என்ன வாழ்க்கை! அவளுடைய வீட்டிலெல்லாம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஒரு நாள் கூட வந்ததில்லை. இங்கு மட்டும் ஏன்! ஆத்திரம் நெஞ்சை அடைத்தது. கத்தி அழவேண்டும் போலிருந்தது. தங்களுக்குள் ஒத்துப் போகவே போகாதோ என்கிற எண்ணம் அவளுக்குள் அழுத்தமாக எழுந்தது. அவனை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவனை எப்படி சந்தோஷப்படுத்துவது என்றும் தெரியவில்லை. ஏன் தனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என்கிற கழிவிரக்கத்தில் கலங்கியவள் அவனுடைய கார் வருகிறதா என்று நூறாவது முறையாக டெரஸிலிருந்து எட்டிப்பார்த்தாள். ஏமாற்றம் மட்டும்தான் பதிலாய் கிடைத்தது. வேறு வழியின்றி கீழேச் சென்றாள்.

 

இராஜேஸ்வரியின் அரை அமைதியாய் இருளில் மூழ்கியிருந்தது. என்ன செய்வது… யாரிடம் கேட்பது… அவள் மனம் தவித்தது. எங்காவது போய் தொலைகிறான் என்று விட்டுவிட முடியவில்லை. துவாரபாலகர்களைப் போல் நின்றுக் கொண்டிருந்த பாதுகாவலர்கள் அவள் கண்ணில் தென்பட்டார்கள். இவர்களிடம் கேட்கலாமா என்று யோசித்தாள். வேண்டாம் என்று ஒரு மனமும், கேட்டுவிட்டு என்று இன்னொரு மனமும் கூறியது. என்ன செய்வது என்று புரியாமல் ஓரிரு நொடிகள் யோசித்தவள், என்ன ஏது என்று தெரியாமல் கலங்கி தவிப்பதை விட இவர்களிடம் கேட்பதே மேல் என்று கருதி, “தேவ் இன்னும் வீட்டுக்கு வரல…” என்றாள் அவர்களுக்கு அருகில் சென்று.

 

அவர்களுடைய பார்வை அவள் பக்கம் திரும்பியது. “ஏதாவது பிரச்சனையா மேம்?” என்றான் ஒருவன்.

 

“இல்ல… லேட் ஆச்சு…” என்றாள் தயக்கத்துடன். உடனே அவன் தேவ்ராஜின் டிரைவருக்கு அலைபேசியில் அழைத்து விபரம் தெரிந்துக் கொண்டு, “சார், ஸ்டார் நைட்ல இருக்கார்… ஹி இஸ் ஸேஃப்…” என்றான் மதுராவிடம். அவள் முகம் சுருங்கியது. அந்த கிளப்பை பற்றி அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். மனம் நொந்து போனது. எங்காவது போய் கெட்டு ஒழிகிறான்… நமக்கென்ன வந்தது… அவனை பற்றி நினைக்கவே கூடாது… என்று முடிவாக எண்ணி மாடிக்கு வந்து படுத்தாள். பஞ்சுமெத்தை முள்ளாக குத்தியது. கண்ணோடு கண்கொண்டு மூடமுடியவில்லை. பித்துப்பிடித்தது போல் மனம் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. யாரோடு இருப்பான்! என்ன செய்து கொண்டிருப்பான் என்று ஏதேதோ எண்ணி தவியாய் தவித்தது.

 

நேரம் கடந்துக் கொண்டிருந்தது. ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரம்… மூன்று மணிநேரம் கழிந்துவிட்டது. அவன் வந்தபாடில்லை. மீண்டும் கீழே வந்து பாதுகாவலனிடம், டிரைவருக்கு போன் செய்யும்படிக் கூறினாள். அவனும் அப்படியே செய்தான். ட்ரைவர் போனை எடுக்கவில்லை. மேலும் இரண்டுமூன்று முறை முயற்சி செய்து பார்த்தான். அவளுடைய பதட்டம் அதிகமானது. உடனே ரஹீமிற்கு கால் செய்து பார்க்கும்படி கூறினாள். உடனே அவனுடைய எண்ணிற்கு அழைப்புச் சென்றது.

எடுத்து பேசியவன், “ஸ்டார் நைட் போக சொல்லி டிரைவர்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு” என்றான்.

 

“அது எங்களுக்கும் தெரியும் சார்… இப்போ சாரோட போன் ரீச் ஆகல… டிரைவரும் போனை எடுக்க மாட்டேங்கிறான்… மேம் ஒர்ரி பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்றான்.

 

“ஓகே… நா செக் பண்ணிட்டு சொல்றேன்…” என்று கூறி அழைப்பை துண்டித்தவன், தன் பங்கிற்கு தேவ்ராஜிற்கும் டிரைவருக்கும் மாறிமாறி அழைத்துப் பார்த்தான். பலன் இல்லை என்றதும் தானே நேரடியாக சென்று பார்த்துவிடலாம் என்று எண்ணி ஸ்டார் நைட் கிளப்பிற்குச் சென்றான். அங்கு தேவ்ராஜ் இல்லை… விசாரித்ததில் இரண்டு மணிநேரத்திற்கு முன்பே அவன் கிளம்பிவிட்டான் என்று தெரிந்தது.

 

‘கிளம்பிவிட்டார் என்றால் வீட்டுக்கு போகாமல் எங்கு போயிருப்பார்!’ என்று ரஹீமும் குழம்பினான். அதற்குள் நூறு முறை போன் செய்துவிட்டான் அந்த பாதுகாவலன். மதுராவின் கெடுபிடித்தான் காரணம் என்பதை புரிந்துக் கொண்ட ரஹீம், “ட்ரைவர் போன் எடுக்க மாட்டேங்கிறான். சாரோட போன் லைன் போகவே இல்ல… மேடம்கிட்ட பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க… நான் இன்னும் ஒருமணிநேரத்துல கூப்பிடுறேன்” என்று கூறிவிட்டு, தேவ்ராஜின் டீமில் முக்கியமான ஆள் ஒருவனை அழைத்து டிரைவரின் மொபைல் இருக்கும் இடத்தை டேர்ஸ்அவுட் செய்யும்படிக் கூறினான்.

 

அவனோ, ட்ரைவர் போனை எடுத்து பேசினாலே ஒழிய வாய்ப்பில்லை என்று கூறிவிட்டான். ரஹீமிற்கு ஒரே பதட்டமாகிவிட்டது. என்ன செய்வது என்றே புரியவில்லை. தேவ்ராஜையும் கண்டுபிடிக்கவும் முடியாமல்… மதுராவின் டார்ச்சரையும் சமாளிக்க முடியாமல், தளர்ந்து போய் நடு ரோட்டிலேயே காரை நிறுத்திவிட்டு அமர்ந்துவிட்டான். அவனுக்கு அபாயமளிப்பது போல் ஒலித்தது அலைபேசி. எடுத்து பார்த்தான். ட்ரைவர்…

 

“எதுக்குயா நீயெல்லாம் போன் வச்சிருக்க? அவசரத்துக்கு கூட கூப்பிட முடியாம எங்கய்யா போயி தொலைஞ்ச?…” எடுத்ததும் சீறினான்.

 

“போனை காரிலேயே விட்டுட்டு… சாரை ரூம்ல கொண்டு விடறதுக்கு போய்ட்டேன் சார். உங்க கால் வந்ததை கவனிக்கல… என்ன சார் ஆச்சு?” என்றான் கூலாக.

 

“என்ன ஆச்சா! எங்கய்யா இருக்காரு இப்ப சார்?”

 

“கிங் டவர்ஸ்ல…”

 

“அங்க என்ன பண்ணறாரு?”

 

“ரூம் புக் பண்ணியிருக்கார் சார்… ரெஸ்ட் எடுக்கறாரு”

 

“நீ?”w

“வீட்டுக்கு கிளம்பிட்டேன்…”

 

“இல்ல இல்ல… நீ அங்கேயே இரு… இன்னிக்கு நைட் உனக்கு சாரோட இருக்கறதுதான் ட்யூட்டி…”

 

“ஓகே சார்…” – தயங்காமல் தலையாட்டினான்.

 

“போன் அடிச்சா எடுய்யா… இங்க எவ்வளவு டென்ஷன் தெரியுமா?” என்று அவனுக்கு இரண்டு பாட்டை விட்டுக்கட்டிவிட்டு மதுராவிற்கும் தகவல் தெரிவித்துவிட்டான். நேற்று இரவு அத்தனை போரையும் அவ்வளவு சுத்தலில் விட்டவன் இன்று காலை, “ஏண்டா எழுப்பல?” என்று அதட்டுகிறான். என்ன செய்வது… கணவன் மனைவி சண்டையில்… இடையில் சிக்கிக்கொண்டவர்களின் கதி சட்னி என்பது தெரிந்த கதைதானே!

 

*************

 

உறக்க கலக்கத்திலேயே தேவ்ராஜின் கைகள் மதுராவைத் தேடின. புசுபுசுவென்று ஏதோ தென்பட்டது. அறைகுறையாக விழித்துப் பார்த்தான். தலையணை! ‘எங்க போனா!’ – எரிச்சலுடன் கண்விழித்தவனை அறையின் சூழ்நிலை முகத்தில் அறைந்தது. ‘ஹோட்டல்லதான் இருக்கோமா!’ – சோர்வுடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

 

வீட்டிற்கு சென்று மூன்று நாட்களாகிவிட்டது. இந்த மூன்று நாள் விலகளில் மனம் அவளுடைய அருகாமைக்காக ஏங்க துவங்கிவிட்டது. பகலெல்லாம் வேலையில் மூழ்கி அவளுடைய நினைவுகளை ஒதுக்க பழகிக் கொண்டவனுக்கு, இரவு படுக்கையில் சாயும் பொழுதும்… காலை கண்விழிக்கும் பொழுதும் மனதில் தோன்றும் ஒருவித அழுத்தத்தை தவிர்க்க முடியவில்லை. அந்த அழுத்தம், ஆயிரம் சப்பைக்கட்டு காரணங்களை கண்டுபிடித்தது, அவள் மீது அவனுக்கு இருந்த கோபத்தையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அவளிடமிருந்து ஒரே ஒரு அழைப்பு வராத என்று ஏங்கினான்.

 

‘அவள் நம்மை பொருட்படுத்தவே இல்லையோ…! வந்தால் வா… வராவிட்டால் போ என்பது போல் அவளுடைய வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாளோ!’ என்று எண்ணி மருகினான். அவள் தன்னை தேடவில்லை… தன்னுடைய விலகல் அவளை பாதிக்கவில்லை என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாமரை இல்லை தண்ணீர் போல் ஒட்டாமல் வாழும் இந்த வாழ்க்கை அவனுக்கு போதவில்லை. மனதோடு மனம் சேரவேண்டும்… உயிரோடு உயிர் கலக்க வேண்டும். அது ஏன் அவர்களுக்குள் நடக்கவில்லை… அவளை விட்டு விலகியிருக்கும் போதெல்லாம் உள்ளே ஏதோ ஒரு வெற்றிடத்தை இவன் உணர்கிறானே! அந்த உணர்வு அவளுக்கு ஏன் இல்லாமல் போனது? இருந்திருந்தால் இந்த மூன்று நாட்களில் ஒரு முறையாவது அழைத்திருக்க மாட்டாளா! – அவன் மனம் துவண்டது.

 

‘அப்படி என்னதான் குறை நம்மிடம்…!’ – சட்டென்று எழுந்துச் சென்று கண்ணாடியைப் பார்த்தான். நல்ல ஆஜானுபாகுவான உருவத்துடன் கம்பீரமாகத்தானே இருக்கிறோம்… மீசை நுனியை முறுக்கிவிட்டுக் கொண்டான். அப்போதுதான் அந்த நினைவு வந்தது.. அந்த கிஷோர்… அவனுக்கு மீசை இருக்காதே! நன்றாக க்ளீன் ஷேவ் செய்து, மொழுமொழுவென்று… பம்ளிமாஸ் மாதிரி… ஹும்ம்… அப்படி இருந்தால்தான் பெண்களுக்கு பிடிக்குமோ! – முகம் அஷ்டகோணலாக மாறியது.

 

மீண்டும் ஒருமுறை தன்னுடைய முகத்தை கூர்ந்து பார்த்தான். ஏற் நெற்றியும், இறுகிய முகமும், அடர்ந்த மூசையும் சற்று மூப்புத்தட்டியது போல் தோன்றியது. சற்று முன் மனதில் தோன்றிய கம்பீரம் என்கிற வார்த்தை இப்போது மூப்பு என்று திரிந்துவிட்டது. அதில் சற்று மனம் சோர்ந்தவன், ஏன் நம்மால், மற்ற இளைஞர்களை போல கலகலவென்று பேசி சிரித்து வசீகரமாக இருக்க முடியவில்லை என்று யோசித்துப் பார்த்தான். முயற்சி செய்து பார்ப்போமே என்று எண்ணி சிரித்துப்பார்த்தான். கண்ணாடியில், வலுக்கட்டாயமாக பல்லைக்காட்டும் தன்னுடைய பிம்பத்தை கண்டு திடுக்கிட்டான். ‘பைத்தியமாயிட்டடா தேவ்…!’ – தலையை அழுந்த கோதியபடி தன்னைத்தானே கடிந்து கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தான்.

 

‘ராட்சசி… அழுத்தக்காரி… உன்ன என்ன பண்ண போறேன் பாரு…’ – உள்ளுக்குள் பொங்கினான். ‘ஒண்ணும் பண்ண முடியாமதானடா இங்க வந்து உட்கார்ந்திருக்க. யாருகிட்ட டபாய்க்கிற?’ என்று மனம் குறுக்கு கேள்வி கேட்டது. அதை ஓரம்கட்டிவிட்டு அவசரமாக எழுந்துச் சென்று மேஜையிலிருந்த அலைபேசியை எடுத்தான். ‘ஒருவேளை நைட் நாம தூங்கின பிறகு போன் பண்ணியிருந்தாலும் பண்ணியிருப்பாளே!’ என்று எண்ணி சோதித்துப் பார்த்தான்.

 

வீட்டிலிருந்து பலமுறை அழைப்பு வந்திருந்தது. அப்போதுதான் அவனுக்கு அந்த விஷயம் நினைவிற்கு வந்தது… ‘ப்ச்… அவ போனை இன்னும் நாம கொடுக்கவே இல்லையே! கால் பண்ண முடியாம தவிச்சுக்கிட்டுதான் இருந்திருப்பா. இதோ… லாண்ட்லைன் போனிலிருந்து கூப்பிட்டுட்டாளே!’ – துள்ளும் மனதுடன் வீட்டிற்கு அழைக்க எத்தனித்தான். அதே நேரம் ரஹீமின் அழைப்பில் வைப்ரேட் ஆனது அலைபேசி.

 

“இந்த நேரத்துல எதுக்கு கூப்பிடறான்” – எரிச்சலுடன் முணுமுணுத்து கொண்டே அழைப்பை ஏற்று “சொல்லு” என்றவன் அடுத்த நொடியே அதிர்ச்சியில் உறைந்து போனான். அந்த பக்கத்திலிருந்து ‘சார்… சார்…’ – கத்தி கொண்டிருந்தான் ரஹீம்.

 

உடைந்து போய் சேரில் பொத்தென்று அமர்ந்த தேவ்ராஜின் உடல் நடுங்கியது. கண்கள் சிவந்துவிட்டன. உணர்வுகள் உள்ளே போராடின. ‘சார்….’ – ரஹீமின் குரல் மீண்டும் ஒலித்தது.

 

“எப்…போ?” – ஒற்றை வார்த்தையில் ஓங்கி ஒலித்தது அவனுடைய துக்கம்.

 
14 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Radha Karthik says:

  Luv niraiya stock irukku but adha sollanumla….. Atleast nammakita sonnavadhu madhu kita sollalam…. Hmmm


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Mary G says:

  அவன் வீட்டுக்கு வரணும் என்று மது ஏதும் டிராமா panrala


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  NICE UD SIS


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sow Dharani says:

  சூப்பர் எபி…… டேய் தேவ் மனசு நிறைய ஆசையை வைச்சி கிட்ட வெளிய சொல்லாம நீயும் கஷ்ட பட்டு மதுவையும் கஷ்ட படுத்துற……. என்ன ஆச்சு மது க்கு உடம்பு சரி இல்லையோ…… இல்ல பாரதி எதாவது ஏடாகூடாமா செய்துவைச்சுட்டாளா


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kanimozhi Ramesh says:

  Super sis… dev madhu epo than seruvanga sikaram sethudunga sis…dev pavam…dev dadku than etho prblma ipadi suspense la mudichitingale


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Juleesakthi Julee says:

  enna aachi mam …madhuka


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Saravana Kumari says:

  Dev Un kittaa yenna kurainu yosichathu yellm crct , aana un personalityla kurai irukanu thedina paaru mudila da azhuthirven 😢 , Rahimm yenna sollirpan Madhuku yethum…. Hsptl irukalo.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  ரஹிம் அழைத்து தகவல் சொல்லிய முறையில் தேவ் வீட்டில் என்னவாச்சுது அதுவும் குறிப்பாக மதுராவுக்கு என்னவாச்சுது,தேவ் அப்பாவிற்கு பிரச்சனை எனில் இராஜேஸ்வரி அல்லது பாரதி அழைத்திருப்பார்,அழைத்தது ரஹிம் ஆச்சுதே அதுதான் யோசனையாக இருக்கின்றது.

  நன்றி


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ambika V says:

  Avanum pavam than


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  என்ன குண்டு…அவங்கப்பாவிடம் கடைசி வர பேசவே இல்லையா


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Acho Enna achi???


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Ippothan avan ok aaitan pa ninaichen… Athukkulla enna aachu… En Dev upset… Dev appakku ethuvuma??


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Uma Ratnam says:

  Nithya, is something happened to his dad? Did he passed away?


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  Dei ava phone nee vachikittu ava phone pannalanu kobama vera iruka unnalam enna panradhu….

  Ippa enna….Rahim phone la enna sonnan….Dev yen azhudhan