குற்றப்பரிகாரம் – 7
1291
0
அத்தியாயம் – 7
“இனிமே உன்னை அவ்வளவா மனசுல நினைக்க முடியாது போல வினையா!”
“ஏன் தீப் அப்டி சொல்ற!”
“பின்ன உப்பிட்டவரைத் தான் உள்ளளவும் நினைக்க சொல்றாங்க.
சாம்பார்… பொறியல் எதுலையும் உப்பக் காணோம்… அப்புறம் எப்படி உன்னை உள்ளளவும் நினைக்கிறதாம்… பேசாம அந்த கீதாக்கே நூல் விட்ருக்கலாம் போல” என்ற தீபக்கின் தலையில் ‘நங்’கென்று குட்டினாள் வினையா!
“ஏ.எஸ்.பினு தான் பேரு.,
சாப்பாடு… இத்தனை வச்சுருக்காங்களே! அதுவும் ஓரமா ஒதுக்கி வச்சுருக்காங்களேனு யோசிக்கறதில்ல… அது அத்தைக்கு… உப்பு கம்மியா தனியா எடுத்து வச்சது”
“ஹிஹி அப்டியா! அதானே பாத்தேன்! நம்ம பொண்டாட்டிதான் காரசாரமா சமைக்கறவ ஆச்சேனு ஒரு டவுட் வந்தது”
“பேச்ச மாத்தாதீங்க… நடுவுல என்னமோ கீதா சீதானு அடிபட்டதே! என்ன விஷயம்! மாமாவைக் கூப்பிடவா” என்ற வினையாவின் கேலிக்கு பதில் சொல்லத் துவங்கும் முன் தீபக்கின் செல் சிணுங்கியது…
டிஐஜி என்றது டிஸ்ப்ளே!
வேக வேகமாய் ஸ்வைப் செய்து காதிற்கு கொடுத்தவன் வாயிலிருந்து…
எஸ் சார்… ஷ்யூர் சார்… இன் பிப்டீன் மினிட்ஸ் சார்.. என வார்த்தைகள் உதிர்வதைக் கண்ட வினையா… சரி விளையாட்டு தீபக்.,
ஏஎஸ்பி தீபக் ஆயாச்சு, என தெரிந்து அவனுக்கு தேவையானதை எடுக்க ஓடினாள்.
டிஐஜி மீட்டிங்….
எஸ்பி, ஏஎஸ்பி என அதிகாரிகள் டிஐஜியின் வாய் திறப்பதற்காக காத்திருந்தார்கள்.
“குட்ஈவ்னிங் ஆபிசர்ஸ்… ஆக்சுவலி நமக்கு இது குட்ஈவ்னிங்கா பேட் ஈவ்னிங்கானு தெரியல. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்” என்று
டிஜிபி தன்னை அழைத்ததில் இருந்து நடந்தவைகளைக் கூறினார்.
“சார் அந்த லெட்டரை நாங்க பார்க்கலாமா!”
எஸ்பி கேட்டார்.
“வொய் நாட்! ஷ்யூர்” என கடிதத்தை டேபிளின் மீது போட்டார். ஒவ்வொருவராக ரௌண்ட் வர பத்து நிமிடம் ஆனது…
“முதல்ல இந்தக் கடிதத்தைப் பற்றி என்ன நினைக்கறீங்க”
டிஐஜியின் கேளவிக்கு
எல்லோரும் பொதுவாக சொன்ன பதில்…
“இதை எக்காரணம் கொண்டும் ஒதுக்க முடியாது”
தீபக் கொஞ்சம் தெளிவாய் சொன்னான்
“சார், டிஜிபி கையில் நேரடியாக கடிதத்தை சேர்த்ததன் மூலம், தன்னால் எந்த லெவலுக்கும் செல்ல முடியும் என்று கடிதம் அனுப்பியவன் காட்டியிருக்கான். அகிலா மேடத்தை ஒன் வீக்காவது ஃபாலோ செஞ்சுருக்கனும். வீரியமில்லாத விஷயத்திற்கு இவ்வளவு மெனக்கெடல் தேவை இல்லை… இதுவே ஸ்ட்ராங் பாய்ண்ட் சார். அவனை பிடிக்கிற வழியைப் பார்க்கனும்”
“வெல் செட் தீபக்.
ஆனா அவனைப் பிடிக்கறதுக்கு முன்னாடி கடித விஷயத்திற்கு முதல்ல முக்கியத்துவம் தரணும்”
அந்நிய
மண்ணில்
அமைச்சரின்
ரத்தம்….
“நம்ம மினிஸ்டர்ஸ் யார் யார் வெளிநாடு போயிருக்காங்க… யார் யார் போகப்போறாங்க.
அவங்க பாதுகாப்பு நமக்கு முக்கியம். அதுக்கு இப்ப நாம எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகள் என்னென்ன… சார்டவுட் செய்ங்க… ஆக்ஷன்ல இறங்கலாம் க்விக் கவிக்… இப் மை மெமரி இஸ் கரெக்ட் மூணு அமைச்சர்கள் அல்ரெடி அப்ராட்ல இருக்காங்கனு நினைக்கிறேன்”
“யூ ஆர் பெர்பெக்ட்லி கரெக்ட் சார்.
மூணு “மணி”க்கள் போயிருக்காங்க”
“வாட்”
“தங்கமணி ரெங்கமணி,
ஜோதிமணி… அதை சொன்னேன்சார்” என்றான் நமுட்டுச் சிரிப்பை உள்ளுக்குள் மறைத்து…
டிஐஜியே சிரிப்பை மறைக்க பெரும்பாடுபட்டார்.
அடுத்த அரை மணி (!) நேரம் போலீஸ் துறை ஜிவு ஜிவு என சுழன்றது
வெளிநாடுகளில் இருக்கும் தூதரகங்களுக்கு செய்தி போனது. அங்கு சென்றுள்ள அமைச்சர்களுக்கு, அவர்களுக்கு தெரியாமலேயே பாதுகாப்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தாயிற்று…
தூதரக அதிகாரிகளைப் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது?
என்ன செய்ய ஒரு அமைச்சருக்கு ஆபத்தென்றாலே, இந்த மீடியாக்கள், போலீஸ்த் துறையை சாட வரிந்து கட்டிக் கொண்டு வருமே! மூணுபேர் வேற!
கனகச்சிதமாக அனைத்தையும் செய்துவிட்டு போலீஸ் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் டிஐஜிக்கு கண்ட்ரோல் ரூமிலிருந்து மெஸெஜ் வந்தது…
உருகுவே
அமைச்சர்
கொலை
செய்ப்பட்டுள்ளார்
முட்டுக்காடு சரக காவல் துறை ஆய்வாளர் மூலமாக தகவல் வந்துள்ளது. கடற்கரையில் பிணம் உள்ளது.
தலவலி தொடங்கிவிட்டதா?
Comments are closed here.