Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 10

அத்தியாயம் – 10

நியூட்டன்ஸ் எனர்ஜி ஈக்வேஷன் பற்றிய குறிப்புகளை எழுதச் சொல்லிவிட்டு புரபசர் காணமல் போய்விட்டார்.

“யாருப்பா இங்க அருண்”

அட்டெண்டரின் அழைப்பிற்கு புருவத்தை சுருக்கிய ஆச்சர்யத்துடன் எழுந்தான் அருண்.

‘நாந்தாங்க”

“உன்ன பிரின்ஸிபல் வரசொல்றார்பா”

என்னவா இருக்கும்… அநேகமாய் ஸ்காலர்ஷிப் விஷயமாக இருக்கும்…

என எண்ணமிட்ட படியே அட்டன்டரைத் தொடர்ந்தான் அருண்.

அந்த அமைதியைக் குலைத்தபடி திடீரென

திமுதிமுவென வந்தது ஒரு கூட்டம். பிரதானமாய் இருந்த ஜலால், நேரே சுடலையிடம் வந்தான். அப்போது கூட கொஞ்சமும் பயமின்றி, கிராமத்திற்கே உரிய மதப்பில் சுடலை உட்கார்ந்திருந்தான். அந்த தெனாவட்டு ஜலாலை இன்னும் உசுப்பேற்றியது. சடாரென்று நாலு பேர் சுடலையைப் பிடித்தனர். எழுந்து திமிறியபடி கத்தினான் சுடலை…

“பொட்ட  மாதிரி அடியாட்கள கூட்டியாந்துருக்கையே..

அடத் தூ… உன் வீரம் இவ்வளவுதானா! ஒனக்கா இந்த காலேஜே பயந்து நடுங்குது. கருமம்டா சாமி”

சுற்றிலும்  அமர்ந்திருந்தவர்கள் வாய்க்குள் சிரித்தாலும், அது துல்லியமாய்க் கேட்டது ஜலாலுக்கு. வெறுப்பின் உச்சியில் தான் அறை வாங்கிய  அந்தக் கையை இழுத்து,  இந்த கைதானே… இந்த கைதானே…. என்று மேற்கொண்டு தான் அறை வாங்கியதைச் சொல்ல பிடிக்காமல்… அல்லக்கைகள் பக்கம் கையை நீட்டினான்…  எதுவோ விபரீதம் நடக்கப் போகிறது என்று உணர்ந்த மற்ற மாணவர்கள் தங்களுக்குள் அலறியபடி இடத்தைக் காலி செய்தனர்.

அல்லக்கை கொடுத்த பாட்டிலைத் திறந்த ஜலால், ஏதோ ஒரு திரவத்தை, சுடலையின் கையில் கடகடவென ஊற்றினான். ஆவென அலறப் போனவனின் வாயை, கப்பென்று இரண்டு பேர் மூடினார்கள். அலறவும் விடாமல், அவன் கை எரிய எரிய, கண்கள் புடைத்துக் கொண்டு வெளிவந்தது.  அவன் துடித்த துடிப்பை ரசித்தான் ஜலால். அடப்பாவி! என்ன ஒரு கொடூரம்… சேடிஸ்ட்…

வந்த வேலை முடிந்தவுடன், திரும்பிய ஜலால், தன் அடிதடி ஆட்கள், அருணை வாயைப் பொத்தி இறுக பிடித்தபடியிருப்பதைப் பார்த்தான்.

அதைக் கண்டு கொள்ளாமல் சுடலையைப் பார்த்து…

“ச்சு.. ச்சு… ஆஸிட்டைக் கைதவறி இப்படி கொட்டிக்கலாமா! ஜாக்கிரதையா இருக்க வேணாம். லேபிலிருந்து இதை எல்லாம் க்ளாஸுக்கு கொண்டு வரலாமா? எப்படி லெக்சரர்ஸ் அலவ் பன்றாங்க… பாவம்டா நீ” என்றவன் அவனை நெருங்கி சொன்னான்…

“புரிஞ்சுச்சா நான் சொன்னது… மாத்தி எதையாவது சொன்ன..

உன் தங்கச்சி, உடம்புல ஒட்டுத் துணியில்லாம இதே ஆஸிட்ல குளிக்க வேண்டி வரும்”

என்றவன் அருணைப் பார்த்தான்..

“சார் யாரு… அத்தனை வீர வீராங்கனைகளும் அலறி அடிச்சுட்டு ஓடுனதை பாக்கலியா…

வீராவேசமா துள்றாரு…

தொலைச்சுருவேன்”னு ஆள்காட்டி விரலை ஆட்டிவிட்டு, விடுங்கடா அவனை,  எனக் கத்தியபடி வாசலை நோக்கி நகர்ந்தான்.

விடுபட்டதும் பதபதைத்து அருண், சுடலையிடம் ஓடினான்  வலி, எரிச்சல், தோல் வழண்டு, அங்கங்கே சில இடங்களில் எலும்பு தெரிந்தது. வேதனையில் அரைமயக்கமாகிவிட்ட அவனை அலேக்காக தூக்கவும், வாசலில் நாலைந்து புரபசர்களுடன் ஓடிப்போன வீரர்கள் வரவும் சரியாக இருந்தது.

“என்னப்பா ஆச்சு”  எனப் பதறிய புரப்பசர்களிடம்  திமிராக சொன்னான் ஜலால்…

“ம்….ஒன்னுமில்லை சார்… பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டான். அசிங்கம் கைல பட்ருச்சு. அத இங்க வந்து ஆஸிட்ல கழுவி சுத்தம் செஞ்சுக்கிட்டாரு சாரு”  என நக்கலாக கூறியபடி வெளியே நகன்றான். அவன் பின்னாலேயே இத்தனை நபர்கள் செல்வதையும், அதில் பாதிபேர் ஊர் ரௌடிகள் போல் இருந்ததை பார்த்தும் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் உள்ளே பார்த்தனர் புரபசர்களும், நிர்வாக ஊழியர்களும்.

கைகளில் அவனை தூக்கியபடி வாசலை நோக்கி விரைந்த அருண்….

“வழிவிடுங்க! ப்ளீஸ்… ஆம்புலன்ஸ் கொண்டு வர ஏற்பாடு பண்ணுங்க” என கத்தினான்.

கத்த கத்தவே வாசலில் அந்த வெளிநாட்டு இறக்குமதி கார் வந்து நின்றது… ட்ரைவர் இருக்கையில் அவள் இருந்தாள். படக்கென பின் கதவைத் திறந்து சுடலையைக் கிடத்தியவன், முன் பக்கம் அவள் அருகினில் அமர்ந்து கத்தினான்…

“ம்… சீக்கிரம்., போங்க போங்க” என அவளை கிட்டத்தட்ட விரட்டினான் அருண்.
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    என்ன கொடூரம்! ஜலாலுக்கு தக்க தண்டனை கிடைக்கனும்