Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

kanal 1

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 62

அத்தியாயம் – 62

பாரதி இரவில் உறங்கி ஒரு வாரமாகிவிட்டது. தந்தை தவறிய தினத்திலிருந்து இன்றுவரை அவளுடைய கண்கள் மூடவே மறுக்கின்றன. மீறி மூடினாலும் கண்களுக்குள் வந்து நின்று அழுகிறார் சிவமாறன். விரண்டடித்துக் கொண்டு எழுந்துவிடுகிறவள் தூக்க மாத்திரையை போட்டுக் கொண்டு படுத்தாள் கூட பொட்டு தூக்கம் வருவதில்லை. ஒரே கேள்விதான் அவளை அரித்துக் கொண்டிருந்தது.

 

‘டாடி, தேவ் பாயை எதுக்கு பார்க்க வந்தாரு…. என்ன சொல்ல நெனச்சாரு…’ – இந்த கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை என்றால் பைத்தியமே பிடித்துவிடும் போல் தோன்றியது.

 

குடும்பத்தில் ஒரு ஜீவன் மறைந்துவிட்டது. அந்த துக்கம் யாருக்காவது இருக்கிறதா! அவரவர் தங்களுடைய வேலையை பார்க்க துவங்கிவிட்டார்களே! இவ்வளவுதானா! வாழும் போதுதான் அவரை ஒதுக்கிவிட்டார்கள்… இறந்த பிறகும் கூட இவர்கள் மனதில் அவர் மீது இரக்கம் தோன்றவில்லையா! – மற்றவர்களின் பார்வைக்கு இயல்பாக இருப்பது போல் தோன்றும் பாரதியின் மனதிற்குள் வெறுப்பு வளர்ந்துக் கொண்டிருந்தது.

 

அதை அறியாத குடும்பத்தினர் எப்பொழுதும் போல் இயங்கி கொண்டிருக்க, அவர்களிடம் தன்னுடைய மனதில் உள்ள துக்கத்தை பகிர்ந்துகொள்ள முடியாமல் தோழிகளிடம் மனம்விட்டுப் பேசினாள். ‘தன்னுடைய தந்தை எதற்காக தங்களை கடைசி நேரத்தில் தேடிவந்திருப்பார்’ என்கிற கேள்வியை அவர்களுக்கு முன் வைத்தாள். அப்போதுதான் ஒருத்தி அவளுக்கு அந்த யோசனையைக் கூறினாள்.

 

“கடைசிவரைக்கும் மோனிகா உங்க டாடி கூடத்தானே இருந்தாங்க. அவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம் பாரதி” – தன் மனதில் பட்டதை கூறினாள். ஆராய்ந்து பார்க்க வேண்டிய பாரதியோ, “ஆமாம்… எனக்கும் அப்படித்தான் தோணுது” என்று அப்படியே தன் தோழியின் கூற்றை ஏற்றுக்கொண்டாள்.

 

“அப்போ அவங்ககிட்டயே கேட்டா என்ன?”

 

“ச்சீ….” – முகம் சுளித்தாள்.

 

“ஏண்டி?”

 

“அவகிட்ட பேயி நா பேசறதா! ஹா…” – அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டாள். ‘அவளால்தானே அனைத்தும்…’ – அவள் மனம் எரிந்தது.

 

“வேற வழியில்லைலடி. அவர்களுக்குத்தான் உங்க டாடியை பற்றி நிறைய தெரிஞ்சிருக்கும். உனக்கு ஏதாவது தெரியணும்னா அவங்களைத்தான் கேட்டாகணும்” என்றாள். அவள் சொன்ன வார்த்தை பாரதியின் மனதில் விதையாய் விழுந்து வேரூன்ற துவங்கியது.

 

மறுநாள் அந்த தோழிக்கு அலைபேசியில் அழைத்துப் பேசினாள் பாரதி. “நா அந்த மோனிகாவை மீட் பண்ண போறேன்டி… என்கூட வரியா?” – முன் பின் சிந்திக்காமல் சட்டென்று முடிவெடுத்தவள் அன்றே தன் தோழியோடு மோனிகாவை சந்திக்க அவளுடைய வீட்டிற்கே சென்றாள்.

 

தான் அடிமனதிலிருந்து வெறுக்கும் ஒருத்தியை தேடி அவளுடைய வீட்டிற்கே வந்திருப்பது அவமானமாக தான் இருந்தது. ஆனால் தந்தைக்காக… அவருடைய விருப்பம் என்னவென்று தெரிந்துக்கொள்வதற்காக அதை சகித்துக் கொண்ட பாரதி அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருந்தாள். சற்று நேரத்தில் ஒரு இளைஞன் வந்து கதவைத் திறந்தான். மோனிகாவின் தம்பி… இவளை பார்த்ததும் அவன் முகம் கறுத்தது.

 

அவனுடைய பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் பாரதி முகத்தை திருப்பிக்கொள்ள, “மோனிகா மேம் இருக்காங்களா?” என்று உடன் வந்த தோழி கேட்டாள்.

 

“என்ன விஷயம்?” – எரிச்சலுடன் கேட்டான்.

 

“பர்சனல்… இவ சிவமாறன் அங்கிள் பொண்ணு…” என்று இழுத்தாள்.

 

“தெரியும். வாங்க…” – வாசலை அடைத்துக் கொண்டு நின்றவன் வழிவிட்டு உள்ளே சென்றான். தோழிகள் இருவரும் ஹாலிலேயே நின்றுக் கொண்டிருக்க, அவன் உள்ளே சென்றான். சற்று நேரத்தில் பரபரப்புடன் மோனிகா வெளியே வந்தாள். ஆளே மாறிப்போயிருந்தாள். கண்களை சுற்றி படர்ந்திருந்த கருவளையமும், குழிவிழுந்த கன்னமும், ஒட்டிப்போயிருந்த உடலுமாக களையிழந்து காணப்பட்டாள். சட்டென்று பாரதியின் சிந்தனைகள் தன் தாயை அவளோடு ஒப்பிட்டுப்பார்த்தது. இவளிடம் இருக்கும் துக்கமும் வேதனையும் தன் தாயிடம் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. அந்த ஒரு கணம் அவளுக்கு மோனிகாவின் மீது பரிதாபம் தோன்றியது. தன்னுடைய பிரியமான தந்தையின் இழப்பை எண்ணி வருதுவதற்கு தன்னை தவிர இந்த உலகில் இன்னொரு ஜீவனும் இருக்கிறது என்கிற எண்ணம் தோன்றியதும், பாரதியின் கண்களிலிருந்த வெறுப்பு கனிவாக மாறியது.

 

தன் கணவனை பிரதி எடுத்தது போன்றதொரு சின்ன உருவம் தன்னை தேடி வந்திருப்பதில், அவரே தன்னிடம் மீண்டும் வந்துவிட்டது போன்றதொரு பிரமையில் திகைத்துப் போய் நின்றாள் மோனிகா. அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்று தெரியாது… திட்டுவதற்காக வந்திருக்கலாம்… சண்டை போட வந்திருக்கலாம்… சபிக்க கூட வந்திருக்கலாம்… ஆனால் அவள் வந்திருக்கிறாள்… அவருடைய மகள்… அவருடைய ரெத்தம்… – மோனிகாவின் கண்கள் கலங்கின. உதடுகள் துடித்தன. அந்த முகத்தை… அந்த கண்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. மெல்ல பாரதியிடம் நெருங்கினாள். நடுங்கும் தளிர்விரல்களால் அவள் கன்னத்தை தொட்டு வருடினாள். ‘மா…ற…ன்…’ – அவர் பெற்ற மகளை தொடுவது அவரையே தொடுவது போலிருந்தது அவளுக்கு. கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

 

இறுகி போய் நின்றாள் பாரதி. தன்னை பார்த்ததும் அவள் ஏதாவது ஏடாகூடமாக பேசுவாள்… அல்லது முகத்தை திருப்பிக்கொள்வாள் என்றுதான் எதிர்பார்த்து வந்தாள். ஆனால் இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது! அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இதயம் வேகமாக துடித்தது. உடல் நடுங்கியது. இந்த கண்ணீர்… இந்த துக்கம்.. இந்த வேதனை…! பாரதி தன் மனம் இலகுவதை உணர்ந்தாள். தான் இங்கு வந்திருக்கவே கூடாது என்று அவசரமாக நினைத்தாள். மோனிகாவின் கண்ணீர் தன்னை பாதிக்கிறது என்கிற கசப்பான உண்மையை அவள் உள்மனம் உணர்ந்தது. தன் குடும்பத்திற்கு எதிராக செயல்படுவது போல்… செய்யக் கூடாத குற்றத்தை செய்வது போல் குற்றஉணர்ச்சியில் மனம் குறுகுறுத்தது.

 

தாயின் மீது வருத்தம் தான்… சகோதரன் மீது கோபம் தான்… அதற்காக அவர்களுக்கு பிடிக்காத மொனிக்காவுடன் இணக்கமாக போய்விட முடியுமா? பாரதியின் மனம் எச்சரித்தது. இங்கிருந்து போய்விட வேண்டும் என்று துடித்தது.

 

“அப்படியே உன் டாடி மாதிரியே இருக்க… உட்காரு…” – மோனிகாவின் குரல் கம்மியிருந்தது. அழுதழுது கரைந்திருக்கிறாள். பாரதியின் மனம் உருகியது. மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் அமைதியாக அமர்ந்தாள்.

 

“என்ன சாப்பிடற?”

 

“இல்ல… எதுவும் வேண்டாம்…” – அவசரமாக மறுக்கும் பாரதியின் முகத்தை கனிவோடு ஓரிரு நிமிடங்கள் பார்த்தவள், வேலைக்கார பெண்மணியை அழைத்து, “கல்கண்டு பால்…” என்றாள். பாரதியின் விழிகள் விரிந்தன.

 

“உன்னோட டாடி அடிக்கடி சொல்லுவார்… அவருக்கும் கல்கண்டு பால் தான் ஃபேவரெட்… தெரியும்ல?” என்றாள். பாரதியின் மனதில் ஒரு இனிமையான உணர்வு பரவியது. ‘அவளுக்கு பிடித்த கல்கண்டு பால்… அவளுடைய தந்தைக்கும் பிடித்தமானதா!’ – கலங்கிய கண்களுடன் மோனிகாவை பார்த்தாள்.

 

“உம்மேல அவருக்கு உயிரு… உன்ன பத்தி பேசாத நாளே இல்ல… அன்னைக்கு நைட் கூட கடைசியா உன்ன பத்தி பேசிட்டுதான் படுத்தார்” என்றாள் உடைந்த குரலில். அவ்வளவுதான்… பாரதி உடைந்துவிட்டாள்… விம்மி வெடித்து அழுதாள். அவளுடைய கண்ணீரை துடைத்து… முதுகை வருடி… தலையை கோதி சமாதானம் செய்தாள் மோனிகா.

 

“என்ன சொன்னாங்க?” என்றாள்.

 

“ஒரு நிமிஷம் இரு…” என்று கூறிவிட்டு உள்ளே சென்றவள் கையில் ஒரு சிறு பெட்டியோடு வந்தாள். “நீ முதல் வருஷம் காலேஜ்ல சேர்ந்த போது இதை உனக்காக வாங்கினார். ஆனா அவரால இதை உன்கிட்ட கொடுக்கவே முடியாம போச்சு… அந்த வருத்தம் அவர் மனசுல இருந்தது” என்று கூறி அந்த டப்பாவை பாரதியிடம் நீட்டினாள். அதில் ஒரு மெல்லிய தங்க சங்கிலி இருந்தது. பாரதியின் நெஞ்சில் ஏதோ ஒரு பெரியபாரத்தை ஏற்றிவைத்து போல் இருந்தது.

 

“கழுத்துல போட்டுக்க…” என்றாள். தேவ்ராஜ் பரிசளித்த சங்கிலி அவள் கழுத்தில் இருந்தது. அதை கழட்டிவிட்டு மோனிகா கொடுத்ததை அணிந்துக் கொண்டாள். “உள்ள வா… உனக்கு டாடியோட ரூமை காமிக்கறேன்…” என்று கூறி அவளை உள்ளே அழைத்தாள். தோழியோடு சேர்ந்து தன் தந்தையின் அறையை பார்க்கும் ஆவலில் மோனிகாவை பின்தொடர்ந்தாள் பாரதி. தந்தையின் அறை என்றால் அது அவருக்கு மட்டுமான அறை அல்ல என்பது அவளுக்கு உள்ளே நுழைந்த பிறகுதான் புரிந்தது.

 

உள்ளே நுழைந்ததுமே அவள் கண்ணில் தென்பட்டது அந்த பெரிய ட்ரெஸ்ஸிங் டேபிளும் அதன் மீது இருந்த பலவிதமான அலங்கார பொருட்களும் தான். அதை பார்த்த மாத்திரத்திலேயே அது அவளுடைய தந்தையின் அறை என்கிற உணர்வே போய்விட அவள் முகம் சுண்டியது. அதை கவனித்த மோனிகா சங்கடப்பட்டாள்.

 

“சாரிடா…” என்றாள் வருத்தத்துடன்.

 

“இட்ஸ் ஓகே…” என்று முணுமுணுத்துவிட்டு வெளியேற எத்தனித்தவளை, “நில்லு பாரதி” என்று தடுத்தாள் மோனிகா. தயங்கி நின்று அவளை ஏறிட்டாள் பாரதி.

 

“அவசரப்படாதடா… இந்த ரூம்ல இந்த ட்ரெஸ்ஸிங் டேபிளை தவிர வேற எந்த பொருளும் என்னோடது இல்ல.. எல்லாமே அவரோடதுதான். அதையெல்லாம் நீ பார்க்கணும். அவர் மனசுல நீங்கல்லாம் எந்த அளவுக்கு இருந்தீங்கன்னு தெரிஞ்சுக்கணும்” என்றாள்.

 

அதன் பிறகு தயக்கமில்லாமல் உள்ளே நுழைந்தவள் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் பார்த்தாள். அவருடைய வாட்ச்… பெல்ட்… போன்… பர்ஸ்… ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வந்தவளின் கண்கள் அகல விரிந்தன. காரணம் அலைபேசியின் திரையில் மாயாவின் மகள் ஆதிரா சிரித்துக் கொண்டிருந்தாள். பர்சில் அவளுடைய தாய் இராஜேஸ்வரியின் நைந்துப்போன பழைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இருந்தது. ‘என்ன இதெல்லாம்!’ – அவளுக்கு விளங்கவே இல்லை..

 

“இந்தா…” – ஒரு சாவியை நீட்டினாள். “இந்த பீரோ அவரோடதுதான். திறந்து பாரு…” என்றாள். உள்ளே அவருடைய பொருட்கள் நிறைய இருந்தன. டாக்குமெண்ட்ஸ்… பைல்ஸ் போன்ற முக்கியமான பொருட்களெல்லாம் கூட இருந்தன. அதோடு சேர்த்து அவருடைய சில டைரிகளும் ஆல்பங்களும் இருந்தன. டைரியில் நிறைய எழுதியிருந்தார். முக்கால்வாசி தொழில் சம்மந்தப்பட்ட குறிப்புகள் இருந்தன. சில இடங்களில் இராஜேஸ்வரியை பற்றி மட்டும் ஓரிரு வார்த்தைகள் எழுதியிருந்தார். ஆல்பம் எல்லாம் அவர்கள் குடும்பத்தது சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்கள் நிறைந்திருந்தன. அதையெல்லாம் பார்க்கப் பார்க்க பாரதியின் முகத்தில் குழப்பமும் வேதனையும் சூழ்ந்தது. இந்த அளவுக்கு குடும்பத்தை நேசிக்கும் மனிதர் ஏன் தடம் புரண்டார் என்னும் கேள்வி அவள் மனதில் எழுந்தது.

 

“என்ன அப்படி திகைச்சுப் போயி நிக்கிற பாரதி”

 

“ம்ஹும்… ஒண்ணும் இல்ல…” என்று தலையசைத்தவள் “இந்த போட்டோஸை எல்லாம் டாடி இவ்வளவு பத்திரமா வச்சிருக்காங்களே!” என்றாள் viyappudan.

 

“இது மட்டும் இல்ல… உங்களோட பழைய வீடு நியாபகம் இருக்கா உனக்கு?”

 

“பழைய வீடா!” – அவளுக்குத்தெரியவில்லை.

 

“ஓ… நீ அப்போ ரொம்ப சின்ன குழந்தை. உனக்கு நியாபகம் இல்லைன்னு நினைக்கறேன். நீங்க எல்லாரும் அங்கதனை முதல்ல இருந்தீங்க. அந்த வீட்ல உங்க எல்லாருடைய நியாபகங்களும் நிறைய இருக்குன்னு சொல்லுவாரு…மனசு கஷ்ட்டமா இருக்கும் போதெல்லாம் அங்க தான் போவாரு. அந்த வீட்டுக்கு போயிட்டு வந்தா உங்க அம்மாகிட்ட பேசிட்டு வந்த மாதிரி இருக்குன்னு சொல்லுவார்” என்றாள்.

 

“என்ன!” – அவளால் நம்பவே முடியவில்லை.

 

“என்ன… என்ன?” – புரியாமல் கேட்டாள் பாரதி.

 

“டாடிக்கு அம்மாவை பிடிக்குமா!” – மோனிகாவின் பார்வை பாரதியின் முகத்தில் குழப்பத்துடன் பதிந்தது.

 

“என்ன அப்படி கேட்கற?” – விளங்கவில்லை அவளுக்கு.

 

“இல்ல… அம்மாவை பிடிக்காமதானே உங்க கூட…” – இழுத்தாள்.

 

“அப்படின்னு யார் சொன்னது?”

 

“இல்ல… நானேதான்… ஆனா அப்படித்தானே இருக்க முடியும்… இல்லன்னா எப்படி!” – மேலே பேச முடியாமல் தடுமாறினாள். உள்ளே ஏதோ ஒரு உணர்வு அவளை துன்புறுத்தியது.

 

“நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க பாரதி. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தது விதி… இல்லன்னா நா செஞ்ச தப்புன்னு கூட சொல்லலாம்… அவருக்கு உங்க அம்மா மேல உயிர். அவங்களை ரொம்ப நேசிச்சார். இந்த உறவை அவங்க மன்னிச்சிடுவாங்கன்னு நெனச்சாரோ என்னவோ! ஆனா அவங்க மன்னிக்கல… உறுதியா அவரைவிட்டு விலகிட்டாங்க…” என்றவள் பார்வை எங்கோ இலக்கில்லாமல் பாய்ந்தது. அவளுடைய சிந்தனைகள் பல ஆண்டுகள் பின்னோக்கி ஓடின.

 

“எனக்கு அடிக்கடி ஒண்ணு தோணும் பாரதி… ஒருவேளை அவங்க அவரை மன்னிச்சு என்னைவிட்டு விலகி வரணும்னு கேட்டிருந்தாங்கன்னா, அவர் என்னை விட்டுட்டு போயிருப்பாரோன்னு தோணும்…” என்றவளின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

 

‘ச்சே… ச்சே… ஏன் அப்படி சொல்லறீங்க’ என்று அவளுக்கு ஆறுதல் சொல்ல வாயெடுத்த பாரதி திடுக்கிட்டாள். ‘என்ன இது! நாம எப்படி இவங்களுக்கு ஆதரவா சிந்திக்கிறோம்!’ என்று எண்ணியவளின் மனம் குன்றியது.

 

“நா… கிளம்பறேன்… டைம் ஆச்சு” என்றாள். சட்டென்று சிந்தனை களைந்து பாரதியின் பக்கம் திரும்பியவள், “போகப்போறியா!” என்றாள். அவள் முகத்தில் பதட்டமும் கவலையும் தெரிந்தது.

 

‘இவங்க ஏன் இவ்வளவு பதட்டப்படறாங்க!’ – நேற்றுவரை அவளை ஏகவசனத்தில் பேசிக் கொண்டிருந்தவள் இன்று சிந்தனையில் கூட மரியாதை கொடுத்து, “ஆமாம் கிளம்பனும்…”என்றாள்.

 

அப்போதுதான் மோனிகாவிற்கு நியாபகம் வந்தது. “நீ எதுக்கு இங்க வந்தேன்னு சொல்லவே இல்லையே!” என்றாள்.

 

‘வந்த விஷயத்தையே மறந்துவிட்டோம்’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு, “டாடி தேவ் பாயை தேடி வந்துகிட்டே இருந்தாங்க. என்ன விஷயம்னு தெரியல… உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்றாள்.

 

“கொஞ்ச நாளாவே உங்க எல்லோரை பத்தியும் அதிகமா யோசிக்க ஆரம்பிச்சு ரொம்ப கஷ்ட்டப்பட்டார் பாரதி… தேவ்ராஜை மட்டும் இல்ல… உங்க எல்லாரையுமே பார்க்கணும்னு தான் ஆசைப்பட்டார். மாயா வீட்டுக்கு கூட ரெண்டு தடவ போனாரே” என்றாள்.

 

உண்மைதான்… தனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பது போன்றதொரு உள்ளுணர்வு அவருக்கு தோன்றி கொண்டே இருந்தது. அந்த உணர்வு அதிகமாக அதிகரிக்க அவருக்கு தன்னுடைய குழந்தைகளையும் மனைவியையும் பார்க்க வேண்டும்… அவர்களிடம் பேச வேண்டும் என்கிற பேராவல் எழுந்தது. ஆனால் அவருடைய ஆசை நிறைவேறி ஆவல் அடங்குவதற்கு முன்பே அகால மரணம் அவரை தழுவிவிட்டது. – கணவனின் நினைவில் மோனிகா மௌனமாய் அமர்ந்திருந்தாள்.

 

‘டாடி வீட்டுக்கு வந்ததை பற்றி மாயா எதுவுமே சொல்லவில்லையே! ஒருவேளை அம்மாவிடம் சொல்லியிருப்பாளோ!’ – சிந்தனையோடு நின்ற மதுரா, ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு “சரி… நா கிளம்பறேன்” என்றாள்.

 

“டாடி நியாபகம் வரும் போதெல்லாம் வா…”

 

“ம்ம்ம்….” என்று முணுமுணுத்துவிட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவள் தயங்கி நின்று, “அந்த வீடு எங்க இருக்கு?” என்றாள்.

 

அவள் எந்த வீட்டை கேட்கிறாள் என்று புரிந்துக் கொண்ட மோனிகா, “ஒருநாள் உன்ன கூட்டிட்டு போறேன்” என்றாள்.

 

“நீங்க அங்க போயிருக்கீங்களா?”

 

“ம்ஹும்…” என்று மறுத்தவள், “அது அவரோட தனிப்பட்ட இடம்… அவர் குடும்பத்தோட நினைவுகளை அனுபவிக்க அவர் அங்க போகும் போது நான் எப்படி நடுவுல போக முடியும்?” என்றாள் தொடர்ந்து. பாரதி எந்த பதிலும் சொல்லவில்லை. “இன்னொரு நாள் வரேன்” என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

 

அடுத்த இரண்டு நாட்களுக்கும் பாரதியின் நினைவிலிருந்து மோனிகா அகலவே இல்லை. சதா அவளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். நம் தந்தைக்கும் அவளுக்கும் ஏற்பட்ட உறவிற்கு தான் மட்டுமே பொறுப்பு என்று பழியை தன் மீதே போட்டுக் கொண்டாளே! அவ்வளவு நல்லவளா அந்த மோனிகா! அப்படியென்றால் ஏன் அவரிடமிருந்து விலகிச் செல்லவில்லை. ஏன் ஒரு குடும்பத்தை சிதைத்தாள்! அவ்வளவு இனிமையாக பழகுகிறாளே! எதிரியை கூட வசப்படுத்திவிடும் இனிமை… அதில்தான் தந்தை மயங்கிவிட்டாரா! அப்படியென்றால் அவரையும் குற்றம் சொல்ல முடியாதே! இதோ… நாமே அவளை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோமே… அவர் கட்டுப்பாட்டோடு இல்லை என்று எப்படி அவரை குற்றம் சொல்லமுடியும்? – சிந்தித்து சிந்தித்து தலைவலித்தது அவளுக்கு. சற்று நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு வரலாம் என்று எண்ணி வெளியே புறப்பட்டாள். தனியாக செல்ல பிடிக்காமல் தோழியையும் அழைத்தாள். இருவருமாக சேர்ந்து பீச்சிற்கு சென்றார்கள். இவருடைய பேச்சும் மோனிகாவையே சுற்றி வந்தது. பாரதியை போலவே அவளும் மோனிகாவின் நற்குணங்களில் கவரப்பட்டிருப்பது தெரிந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மோனிகா பாரதியை அலைபேசியில் அழைத்தாள். ‘நல்லா இருக்கியா?’ – ‘எங்க இருக்க?’ – ‘என்ன பண்ணற?’ என்று ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தாள். வைக்கும் பொழுது அவளோடு பேசுவது மனதிற்கு ஆறுதலாக இருப்பதாகவும் தவறாக என்ன வேண்டாம் என்றும் கூறினாள்.

 

அடுத்த சில நாட்களில் பாரதி மோனிகாவை இன்னொரு முறை சந்திக்கச் சென்றாள். அப்போது, “டாடியோட கடனை அடைக்க நீங்க உங்க ப்ராப்பர்டியையெல்லாம் வித்ததா கேள்விப்பட்டேனே… உண்மையா?” என்றாள்.

 

“அப்படியா! எங்க கேள்விப்பட்ட?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

 

“ஏதோ ஒரு மேகசீன்ல படிச்சேன்…”

 

“மேகசீன்ல படிக்கிறது எல்லாம் உண்மையாயிடுமா?”

 

“வேற எப்படி அந்த பிரச்சனை முடிஞ்சுது… துஷ்மன் பெரிய தொல்லையால்ல இருந்தது டாடிக்கு” என்றாள்.

 

“எல்லா பிரச்சனையையும் சமாளிக்கற சக்தி உங்க டாடிக்கு உண்டு… துஷ்மனெல்லாம் அவருக்கு தூசு மாதிரி…” என்று பெருமையாக கூறியவள் கடைசிவரை அவருக்கு, தான் பணஉதவி செய்தேன் என்பதை ஒப்புக்கொள்ளவே இல்லை. அவள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் ஊரறிந்த ரகசியத்தை பாரதி அரியமாட்டாளா என்ன…!

 

இன்னொருநாள் இருவரும் சேர்ந்து அந்த பழைய வீட்டிற்கு சென்றார்கள். அங்கே அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் அப்படியே இருந்தன. சமையலறை பொருட்கள்… அம்மாவின் புடவைகள்… குழந்தைகளின் துணிமணிகள்… விளையாட்டு பொருட்கள் கூட இருந்ததை கண்டு பாரதி வியந்தாள். இத்தனை ஆண்டுகளாக இந்த பொருட்களெல்லாம் அப்படியே அந்த வீட்டில் இருக்கின்றன என்றால் தன் தந்தை எந்த அளவிற்கு தன்னுடைய குழந்தைகளுக்காகவும் மனைவிக்காகவும் ஏங்கியிருக்கிறார் என்பதை அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது. வெகுநேரம் அந்த வீட்டில் இருந்து பல கதைகளையும் பேசிவிட்டு அவர்கள் வெளியே வரும் போதுதான் தேவ்ராஜின் கையாள் ஒருவன் தங்களை கவனிப்பதை பார்த்தாள் பாரதி.

 
10 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sow Dharani says:

  சூப்பர்


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Deepa I says:

  Bharathi why this? Dev save ur sis . Nice ud


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  seline seline says:

  nice ud mam


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kavi Nathi says:

  Monica Maran relationship thappu thane atha yen saringra pola ezhuthreenga. Oru illegal relationship ku aduthava husband mela aasaipatathuku yen etho kaviya kadhal range ku buildup kodukreenga. May b finally ithuku nenga vera ethavathu reason vachu irkalam Aana ovoru time padikumpothum nerudala iruku.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   மோனிகாவோட கேரக்டர் அடுத்தவங்க வாழ்க்கையில குறுக்கிடற எல்லா பொண்ணுங்களும் பொருந்தாது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். நா மோனிகாவை மட்டும் எடுத்துக்கிட்டு அவளோட மனநிலை என்ன அப்டிங்கறதை மட்டும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணியிருக்கேன்.

   மனைவி இருக்கும் போது இன்னொரு பொண்ணோட தொடர்பு வச்சுக்கறது அல்லது இரண்டாவது திருமணம் செஞ்சிக்கறது இதெல்லாம் மகாபாவம்… பாதிக்கப்பட்ட பொண்ணோட மனசு எந்த அளவுக்கு பாடுபடும்ங்கறதை என்னால உணர முடியுது. அதை எழுதறது சுலபமான ஒண்ணு. ஏன்னா அது ஒரு நேர் கோடு… எல்லோராலையுமே புரிஞ்சுக்க முடியற உணர்வு.

   ஆனா தப்பு பண்ணறவங்க தப்புன்னு தெரிஞ்சும், ஏன் அந்த தப்பை பண்ணறாங்கன்னு நா யோசிக்கறேன். இதைவிட நல்ல வாழ்க்கைகிடைச்சு வசதியா வாழ அவளுக்கு வாய்ப்பு இருக்கும் போது ஏன் தப்பான வழியை தேர்ந்தெடுக்கறா? எல்லாரும் திட்டறாங்க… உலகமே அசிங்கமா பேசுது… அதையும் மீறி ஏன் அவ அந்த தப்பை செய்யறா?

   மோனிகாவோட தப்பை நான் நியாயப்படுத்த நினைக்கல… ஆனா என்னமாதிரியான மனநிலையில் அவ அந்த தப்பை செய்யறா அப்டிங்கறதைத்தான் எழுத முயற்சி பண்ணறேன்.

   நம்மளோட ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை இருக்கும் அப்டிங்கறதை நா நம்பறேன். மோனிகாவோட செயலுக்கும் எதிர்வினை இருக்கும்…

   நன்றி தோழி…


   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kavi Nathi says:

    Thanks for your reply. Nenga sollurathu puriyuthu. Aanalum thappu nu nalla therinchum atha senjuttu pinadi varuthapadurathala Enna agidapoguthu. Thanum vazhama oru familyum vazhavidama panitu irka character ava side reasons nenga justify panurathu than ennala accept panikamudila. Maana adichu sapudra puli kum oru reason irku athu nyayam. Aana ithula ethum nyayam ilaye. Nenga just ava side explain panrienga ok Aana athu sila neram antha thappa nyapaduthura maathri oru thottram. Anyways writer oda freedom la interfere agakudathu. Itha enaku thonite irunthuthu Athan sonnen. Avalavuthan.
    All the best mam.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  சிவமாறன் இறந்ததிற்கான மோனிகாவின் வருத்தம் பாரதியை இரக்கமும் கனிவும் கொள்ள வைத்துவிட்டு மோனிகா மேல்,ஆனால் இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை ,இப்போது தேவராஜ் ஆள் வேறு பார்த்தாச்சுது,வீட்டில் இது தெரிந்துவிடும் பாரதி நல்ல திட்டு வாங்கப்போகின்றார்,சிவமாறன் மனைவி குழந்தை மேல் பாசம் வைத்து என்ன பிரயோசனம் அதுதான் இவர்கள் பெரிதில்லை என்ற நினைப்பு இருந்தபடியால்தானே இன்னொரு பெண்பின்னால் போனார்,இவர்கள் பெரிது என்று நினைத்திருந்தால் மோனிகாவை திட்டவட்டமாக மறுத்திருக்கவேண்டும்,சிவமாறன் இராஜேஸ்வரிக்கும் சரி மோனிக்காவுக்கும் சரி உண்மையாய் இல்லை,இப்படிப்பட்ட மனிதனுக்கு இரக்கம் காட்டக்கூடாது.

  நன்றி


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Security tight panaduku idu Dan reason ahhhh!
  Nice epi.
  Very nice presentation of characters


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  hooooo aduthu magalai illukiraallll athuthaan devin kavalaiyaaaaaaaa


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  தேவ்யை சுற்றி துரோகங்களா….?
  வருந்துவானே