Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

கனல்விழி காதல்

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 65

அத்தியாயம் – 65

மதுராவின் கெட்ட நேரமோ அல்லது பாரதியின் கெட்ட நேரமோ… அவர்கள் நுழைந்த காபி ஷாப்பில், முகேஷ் ஏற்கனவே ஒரு கார்னர் டேபிளில் அமர்ந்திருந்தான். பாரதியை பார்த்ததும் அவனுடைய கண்கள் பளபளத்தன.

“ஹேய் பாரதி!” என்று உற்சாகமாக குரல்கொடுத்தபடி அவளிடம் நெருங்கினான். எதிர்பாராத நேரத்தில் அவனை பார்த்ததோடு, மதுரா வேறு அருகில் இருக்கிறாளே என்கிற எண்ணத்தில் பதட்டமானாள் பாரதி. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “ஹா…ய்…” என்றாள் கட்டாய புன்னகையுடன்.

“மே ஐ ஜாயின் வித் யு லேடீஸ்?” என்று விரிந்த புன்னகையோடு கேட்க, பாரதி மறுக்க முடியாமல், “ஏன் கூடாது… நிச்சயமா…” என்றாள்.

“தேங்க் யு…” – அந்த டேபிளில் இருந்த மூன்றாவது சேரை ஆக்கிரமித்தான் முகேஷ்.

கிஷோரை பார்த்துவிட்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் உழன்றுக் கொண்டிருந்த மதுரா அந்த புதியவனை பாரதியின் நண்பன் என்று நினைத்தாள். அவனுடைய முகம் பரிட்சயமானதாக தோன்றினாலும் அவன் யார் என்பதை சரியாக அவளால் ஊகிக்க முடியவில்லை. அவள் இருந்த மனநிலையில் அதை பற்றி சிந்திக்கவும் அவளுக்கு தோன்றவில்லை.

“அப்புறம்… எப்படி இருக்க?” – “போன் என்ன ஆச்சு?” – “டைரி படிச்சியா?” – “இப்போ எங்க போயிட்டு வர்ற?” என்று அவன் அடுக்கும் அத்தனை கேள்விகளுக்கும் அலுக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்த பாரதி அடிக்கடி மதுராவை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டாள்.

தன்னுடைய சிந்தனைகளிலேயே சுழன்றுக் கொண்டிருந்த மதுராவிற்கு அவர்களுடைய பேசசு எதுவும் காதில் விழவில்லை. அதோடு தன் எதிரில் அமர்ந்திருப்பவன் மோனிகாவின் தம்பியாக இருக்கக் கூடும் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவன் எப்படி இவ்வளவு இலகுவாக வந்து பேசுவான்! அதுவும் மதுரா உடன் இருக்கும் போது. அதுமட்டும் அல்ல… மோனிகாவின் தம்பியை சிவமாறன் இறந்த அன்று ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறாள். அதுவும் தூரத்திலிருந்து… கூட்டத்திற்கு நடுவில் பார்த்தது. முகம் கூட சரியாக நினைவில் இல்லை. இப்போது இவனுடைய முகம் பரிட்சயமானதாக தோன்றியதற்குக் கூட மோனிகாவின் சாயல் அவனிடம் இருப்பதுதான் காரணம். ஆனால் அதையும் அவள் உணரவில்லை. உணர்ந்திருந்தால் ஊகித்திருப்பாளோ என்னவோ!

முகேஷ் வெகுநேரம் பாரதியோடு பேசிக் கொண்டிருந்தான். இடையில் ஒருமுறை “அக்கா ட்ரை பண்ணிகிட்டே இருந்துச்சு” – “இப்போல்லாம் ஏன் வீட்டுக்கே வர்ரதுல்ல?” என்றான். என்னதான் சிந்தனைகள் வேறு இடத்திலிருந்தாலும், அருகிலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, அவளே வேண்டாம் என்று நினைத்தாலும் சில விஷயங்கள் காதில் விழத்தானே செய்யும். அப்படித்தான் ‘அக்கா’ மேட்டரும் அவள் காதில் விழுந்தது.

‘அக்கா’ என்கிற வார்த்தையை கேட்டதுமே மதுராவிற்கு பொறிதட்டிவிட்டது. அவனுடைய முகம் யாரை ஒத்து இருக்கிறது என்பது மூளையில் ஃபிளாஷ் ஆகிவிட்டது. வெடுக்கென்று நிமிர்ந்து பாரதியை வெறித்துப் பார்த்தாள். அவளுடைய பார்வையிலேயே புரிந்துவிட்டது இளையவளுக்கு… ‘கண்டுபிடிச்சுட்டா..’ – அவள் கண்களை சந்திக்காமல் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

“ஓகே முகேஷ்… டைம் ஆச்சு. அப்புறம் பார்க்கலாம்…” – ‘அப்புறம் பார்க்கலாமா! இன்னொரு தரம் வேற இவனை பார்ப்பியா நீ! எவ்வளவு தைரியம்’ – டென்ஷன் எகிறியது மதுராவிற்கு. இறுகிய முகத்தோடு வெளிய வந்தாள்.

“அவன் வருவான்னு தெரிஞ்சுதான் இங்க வந்தியா?” – கார் பார்க்கிங்கில் நுழைவதற்கு முன்பே கேட்டுவிட்டாள்.

“இதை அப்படியே போயி தேவ் பாய்கிட்ட சொல்லிடு. அவர் இன்னும் என்னை திட்டி கார்னர் பண்ணட்டும்” – கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வெடுவெடுத்தாள்.

“பாரதி!” – அடி குரலில் அதட்டிய மதுராவை முறைத்துப் பார்த்தாள் பாரதி.

“நா என்ன கேட்கறேன் நீ என்ன சொல்ற?”

“கேள்வி ஒழுங்கா கேட்டிருந்தா, நா பதில் சொல்லியிருப்பேன். என்னை ஜட்ஜ் பண்ணற மாதிரி பேசினா வேற எப்படி நா ரியாக்ட் பண்ணுவேன்?” என்று எரிந்து விழுந்தாள் இளையவள்.

“நா உன்ன ஜட்ஜ் பண்ணல. உனக்கு எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாதேன்னு பயப்படறேன்”

“உன்னோட அக்கரைக்கு ரொம்ப நன்றி”

“இதெல்லாம் தேவ்க்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சியா?”

“நீ சொல்லலைன்னா தேவ் பாய்க்கு எப்படி தெரியும்?”

“என்ன இப்படிபேசற நீ?”

“எப்படி பேசறேன்? என்னை அசிங்கப்படுத்தணும்னு ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்த. இப்போ அந்த ச்சான்ஸ் கிடைச்சிருக்கு. நல்ல யூஸ் பண்ணிக்க…” வெறுப்பை உமிழ்ந்துவிட்டு காரை நோக்கி நடக்காத துவங்கினாள். அவளை திகைப்புடன் பார்த்தபடி நின்றுவிட்டாள் மதுரா.

********************

“ஈவினிங் தான் வருவேன்னு சொல்லிட்டு போன! சீக்கிரமே வந்துட்டீங்களாம். என்ன ஆச்சு?” – டிவி சேனலை மாற்றியபடி கேட்டான் தேவ்ராஜ். அவன் முகத்தை பார்க்கவே பயமாக இருந்தது மதுராவிற்கு.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது. மனைவியிடமிருந்துendha பதிலும் வராததையடுத்து, திரும்பி அவள் முகம் பார்த்தான் தேவ்ராஜ். அவள் முகத்தில் சூழ்ந்திருந்த குழப்பத்தை கண்டு புருவம் சுருக்கினான்.

“எனி ப்ராப்லம்?”

“இல்லையே…” – அவசரமாக மறுத்தாள். அவள் கண்களில் தெரிந்த கலவரம் அவனுடைய பார்வையை மேலும் கூர்மையாக்கியது.

“எப்படி இருந்தது பங்ஷன்?”

“குட்…” – அதற்குமேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதற்கே தொண்டைக்குள் ஏதோ சிக்கிக் கொண்ட உணர்வு.

“பாரதி எப்படி நடந்துக்கிட்டா? சொல்லி அனுப்பியிருந்தேனே” என்றான்.

“ம்ம்ம்… நல்லா நடந்துக்கிட்டா…” – கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஓ! அதுசரி… ஏன் சீக்கிரம் வந்துட்டீங்கன்னு கேட்டேனே!” என்று அவளை கேள்வியாக நோக்கினான்.

“ஆங்… கொஞ்சம் தலைவலி… அதான்… சீக்கிரம்… கிளம்பிட்டோம்”

“தலைவலியா! யாருக்கு?”

“எ.. எனக்குதான்…” – அவனுடைய கேள்விக்கணைகளை மதுராவை ஆட்டம்காண வைத்தன. அவனுடைய பார்வையை அவளால் சந்திக்க முடியவில்லை. இதற்கு மேல் சமாளிக்க முடியாது… ஒருவேளை உளறிவிட்டால் அதன் பிறகு! கடவுளே! – நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது.

“நா போயி படுக்கறேன் தேவ்…”

“டைம் ஆகளையே! டின்னர் முடிச்சிட்டு போ”

“பசிக்கல… தலைவலின்னு சொன்னேனே… மேல போறேன்… குட் நைட்…” – நழுவி மாடிக்குச் சென்று கட்டிலில் விழுந்தாள். பெரிய பாறையை சுமந்துக் கொண்டிருப்பது போல் மனம் பாரமாக இருந்தது. கிஷோரை பார்த்துவிட்டு வந்த விஷயம் தெரிந்தால் என்ன செய்வானோ என்கிற ஒருபக்கம்… பாரதி என்ன செய்ய காத்திருக்கிறாளோ என்கிற கவலை இன்னொரு பக்கம் என்று மதுரா நிலைகுலைந்திருந்தாள். அவள் ஏதோ பதட்டத்தில் இருக்கிறாள் என்று தெரிந்தும்… தன்னிடம் எதையோ மறுக்கிறாள் என்று புரிந்தும்… அவளை கட்டாயப்படுத்தி எதையும் கேட்காமல், அவளுக்கு தேவைப்பட்ட தனிமையையும்… அவகாசத்தையும் கொடுத்து பொறுமைகாத்தான் தேவ்ராஜ்.

14 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  இந்த தேவ் பொறுமை காட்ட வேண்டிய இடங்களில் எல்லாம் எகிறி குடித்துவிட்டு இப்போது அமைதியாக இருக்கின்றாரே,ஐயோ மதுரா பாவம்,தேவ் கொஞ்சம் மிரட்டி கேட்டால் மதுரா எல்லாம் சொல்லிவிடுவார் பிரச்சனை இன்றுடன் முடிந்துவிடும் ,பின்பு தேவ்விற்கு தெரியவரும்போது மதுரா மறைத்ததிற்கும் சேர்த்து சண்டைபோடுவாரே.

  நன்றி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  kumudha devi says:

  Today only started reading your story… Romba nallaa irukku….

  End of this episode la… Thonina ore vishaiyam… Paarudaaa…. Idhu eppo la irundhu…. Sir ku porumaikku spelling kooda theriyumaa… Nu dhaan

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Deepa I says:

  பொறுமை வேண்டாம். Hurryup save ur sis. Nice ud nithya

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  seline seline says:

  very nice ud

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jayashree swaminathan says:

  super narration.thanks

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Wowww dev .. Eppola irunthu ippadi porumaiya irukka … Nice

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vijaya muthukrishnan says:

  very nice ud.eagerly waiting for your next ud

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Ivala share panalame… Avana kandupidicha tholachiduvan 🙁

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  முட்டாள்.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Hadijha Khaliq says:

   Yaarai titreenga? Madhura or Bharathi?

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    மதுராவைத்தான்…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  Madhura ippadi melum melum pirachanaiyai izhuthu vacchirukiye….unna enna seiradhu

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  IPAVAY AVAN KITA UNMAYA SOLIIRUKALLAMAYYY MATHU

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Priya says:

  Super ud

error: Content is protected !!