Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

கனல்விழி காதல் - 66

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 66

அத்தியாயம் – 66

மதுரா இயல்பு நிலைக்கு மீண்டு வர முழுதாக இரண்டு நாட்கள் பிடித்தது. அவளுக்கு என்ன பிரச்சனை… அந்த திருமணத்திற்கு போய்விட்டு வீடு திரும்புவதற்குள் அப்படி என்ன நடந்திருக்கக் கூடும் என்பதை பல கோணங்களில் யோசித்துப் பார்த்த தேவ்ராஜ், பாரதியை அவளோடு அனுப்பியிருக்கக் கூடாது என்கிற முடிவிற்கு வந்தான். அவள்தான் கோபத்தில் ஏதாவது சொல்லியிருக்கக் கூடும் என்பது அவனுடைய ஊகம். அவனுடைய தங்கையைப் பற்றி அவனிடமே குறைகூற மனமில்லாமல் தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணி மனைவிக்காக வருந்தினான். இன்று எங்கேயாவது அவளை வெளியே அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம் என்கிற எண்ணத்தில் வழக்கத்தைவிட விரைவாகவே வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று திட்டமிட்டான். அந்த நேரம் பார்த்து மாயா அவனை சந்திக்க வேண்டும் என்று கூறினாள்… அதுவும் உடனடியாக சந்திக்க வேண்டும் என்றாள்.

 

மனைவிக்காக ஒதுக்கிய நேரத்தில் தங்கையை சந்திப்பது என்று முடிவு செய்து அவளை அலுவலகத்திற்கு வர சொன்னான். வரும் பொழுதே விறைப்பாக இருந்தாள் மாயா. அவளை பார்த்த மாத்திரத்திலேயே அவனுடைய புருவம் சுருங்கியது. பெரிய பிரச்சனையோடு வந்திருக்கிறாள் என்று யூகித்தான்.

 

“என்ன இவ்வளவு டென்ஷன்?”

 

“நீங்க எப்படி இவ்வளவு கூலா இருக்கீங்க தேவ் பாய்?” – வியப்புடன் கேட்டாள் மாயா.

 

“ஏன்… என்ன ஆச்சு?”

 

“தெரியாதா உங்களுக்கு!”

 

“என்ன விஷயம்னு சொன்னாத்தானே தெரியுமா தெரியாதான்னு சொல்ல முடியும்…?” – இலகுவாகவே பேசினான்.

 

“ரெண்டு நாள் முன்னாடி மதுராவோட பாரதியை எங்க அனுப்புனீங்க?”

 

“ஒரு முக்கியமான மேரேஜ். மதுரா தனியா போக முடியாது. அதான் பாரதியையும் கூட அனுப்பினேன். ஏன்… அதுல என்ன பிரச்சனை?”

 

“கல்யாணத்துக்கு போயிட்டு நேரா வீட்டுக்கு வந்திருந்தா எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா நடுவுல ரெண்டு பேரும் யாரை பார்த்துட்டு வந்தாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?” – தேவ்ராஜின் முகம் சட்டென்று தீவிரமானது. ஏனென்று தெரியவில்லை… அவள் கேட்ட உடனே அந்த முகேஷின் முகம்தான் அவன் மனதில் தோன்றியது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. மதுரா உடன் இருக்கும் பொழுது எப்படி அது நடந்திருக்க முடியும்! வேறு யாரை சந்தித்திருப்பார்கள்! – மனம் குழப்பத்திலிருந்தாலும், முகம் துணி கொண்டு துடைத்து போல் உணர்வுகளற்று வெறுமையாக இருந்தது.

 

“இவதான் சின்ன பொண்ணு. அறிவுகெட்ட தனமா நடந்துக்கறா. அவளுக்கு என்ன வந்தது? சொல்லி திருத்த மாட்டாளா?” – கோபத்துடன் பேசிக் கொண்டிருந்தாள் மாயா.

 

“அவளை நம்பித்தானே பாரதியை அனுப்புனீங்க… இப்போ இப்படி செஞ்சுட்டு வந்திருக்காளே… இதுக்கு என்ன பண்ண போறீங்க?”

 

“எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு. என் தங்கச்சியோட வாழ்க்கையை கெடுக்கணுங்கறது தான் அவளோட எண்ணம். இல்லன்னா இவளோட சேர்ந்து அவளும் அந்த முகேஷை திருட்டுத்தனமா சந்திச்சிட்டு வந்திருப்பாளா?” – சுரீரென்றது தேவ்ராஜிற்கு. அவன் உள்மனம் உரைத்தது சரிதான். மதுராவும் சேர்ந்து இந்த வேலையை செய்திருக்கிறாள்! ஏமாற்றுக்காரி! – அவன் முகம் பாறை போல் இறுகியது.

 

“அவளுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுத்துட்டீங்க தேவ் பாய்… கொஞ்சம் தட்டி வைங்க. இல்லன்னா உங்க மரியாதையை கெடுத்துடுவா…” – வெறுப்புடன் கூறினாள்.

 

அவளை ஆழ்ந்து பார்த்த தேவ்ராஜ், “அவ என்னோட வைஃப். அவகிட்ட என்ன பேசணும்… எப்படி நடந்துக்கணுங்கறது எனக்கு தெரியும். யு பெட்டெர் ஸ்டே ஆன் யுவர் லிமிட்…” – அழுத்தம் திருத்தமாகக் கூறினான். அவனுக்கு அவள் மீது கடுமையான கோபம்தான்… அதற்காக மற்றவர்கள் அவளை மட்டம் தட்டுவதை அனுமதித்தால் அவன் என்ன கணவன்! தன்னையே உறுத்துவிழித்து முரைத்துக் கொண்டிருக்கும் தமையனை திகைப்புடன் பார்த்த மாயா,

 

“லிமிட்…? உங்ககிட்ட எனக்கு லிமிட் இருக்கா தேவ் பாய்…?” என்றாள் தொண்டை கரகரக்க.

 

“ஏன் இருக்காது?” கடுமையாகக் கேட்டான்.

 

“பா…ய்…!!!” – அதிர்ந்துவிழித்தாள் மாயா. அவமானத்தில் அவள் முகம் கன்றி சிவந்துவிட்டது. உள்ளே பொங்கும் கோபம் அவள் கண்களில் தெரிய, அங்காரமாக வாய்திறந்தாள்.

 

“அவ கிஷோரை கல்யாணம் செஞ்சுக்க இருந்தவ…” – “ஷட் அப்… ஜஸ்ட் ஷ…ட் அ…ப்…” – ஆக்ரோஷமாகக் கத்தினான் தேவ்ராஜ். அவன் கத்தியவிதம் எழுந்து அடித்துவிடுவான் போலிருந்தது. திகைப்புடன் அவனை நோக்கிய மாயா,

 

“எப்போலேருந்து… இது எப்போலேருந்து தேவ் பாய்!” என்றாள் சிறிதும் நம்பமுடியாமல்.

 

“லுக் மாயா… மதுரா என்ன செஞ்சிருந்தாலும் ஷி இஸ் மை வைஃப். உனக்கு அண்ணி… அவளுக்கான மரியாதையை நீ கொடுக்கணும்… கொடுத்துதான் ஆகணும்” – தங்கையின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து குரலை தாழ்த்தினாலும் வார்த்தை உச்சரிப்பில் அதீத அழுத்தமிருந்தது.

 

“ஆனா அவ பாரதியோட லைஃபை ஸ்பாயில் பண்ண நினைக்கறா…”

 

“அது உன்னோட கற்பனை…”

 

“அப்போ அந்த முகேஷ் பாரதியை சந்திச்சது? அதுவும் என்னோட கற்பனையா? சரி நான்தான் தேவையில்லாம கற்பனை பண்ணிக்கறேன். ஆனா என்னோட ஃபிரண்ட் ஏன் கற்பனை பண்ண போற? அவளோட போன் கேமரா ஏன் கற்பனை பண்ண போகுது? இதை பாருங்க… இந்த போட்டோவை பார்த்துட்டு அப்புறம் பேசுங்க” என்று அவன் முகத்துக்கு நேராக தன்னுடைய அலைபேசியை நீட்டினாள். திரையில் தெளிவாக தெரிந்தார்கள் மூவரும். தேவ்ராஜின் இரத்த அழுத்தம் கூடியது. முகத்தில் கடுமை ஏறியது. கைமுஷ்ட்டி இறுகியது. கண்களை இறுக்கமாக மூடி ஆழ மூச்செடுத்துவிட்டு தங்கையை ஏறிட்டான். கோபத்தில் சிவந்திருந்த அவள் கண்களை கூர்ந்து பார்த்து, “எனக்கு தெரியாம எதுவும் நடக்கல… என் தங்கச்சியோட லைஃப் ஸ்பாயில் ஆகா நான் விடமாட்டேன். இப்போ நீ கிளம்பு” என்றான் தீவிரமாக. ஓரிரு நிமிடங்கள் அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்த மாயா பிறகு எதுவும் சொல்லாமல் அங்கிருந்துச் சென்றாள்.

 

மாயாவிடம் அடித்துப் பேசி அவள் வாயை அடைத்துவிட்டான். ஆனால் மதுராவை எப்படி மன்னிப்பது! – ‘இந்த பிரச்சனை எவ்வளவு சீரியஸானது என்று அவளுக்கு தெரியும். தெரிந்திருந்தும், அந்த ராஸ்கல் பாரதியை சந்திக்க அனுமதித்திருக்கிறாள்… அதை நம்மிடமிருந்து மறைத்தும் இருக்கிறாள்… ஏன்? – இந்த கேள்வியை அவரிடம்தான் கேட்க வேண்டும். ஆனால் இப்போது நாம் இருக்கும் கொதிநிலையில் அவளை பார்த்தால் நிச்சயம் ஏதேனும் ரசாபாசமாகிவிடும். எனவே அவளை பிறகு பார்த்துக்கொள்ளலாம்… இப்போது இன்னொரு முக்கியமான ஆளை கவனிக்க வேண்டும்’ என்று எண்ணி அலைபேசியை எடுத்தான்.

 

********************

தேவ்ராஜின் அலைபேசி தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது. திரையில் சிரித்துக் கொண்டிருக்கும் அவள் முகத்தை பார்க்கும் பொழுதே பற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு. மூன்று முறை அடித்து ஓய்ந்த அலைபேசி நான்காவது முறையாக மீண்டும் ஒலித்த போது இண்டர்காமை தட்டி ரஹீமை அழைத்து, அவனிடம் போனை நீட்டி, “மீட்டிங்ல இருக்கேன்னு சொல்லு” என்றான் வெடுவெடுப்பாக. நெற்றியை நீவியபடி கோபமாக அமர்ந்திருக்கும் முதலாளியை குழப்பமாக பார்த்துக் கொண்டே, தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றினான் ரஹீம்.

 

வெளியே செல்ல வேண்டும் என்று தயாராக இருக்கும்படி கூறிய கணவன், குறிப்பிட்ட நேரம் கடந்து வெகுநேரமாகியும் வரவில்லையே என்கிற கவலையில் அவனுக்கு அலைபேசியில் அழைத்தாள் மதுரா. அவன் எடுக்கவே இல்லை… கடைசியாக ரஹீம் எடுத்து, “சார் மீட்டிங்ல இருக்காங்க மேம்” என்று அவளுக்கு விபரம் கூறினான்.

 

“ஓகே… மீட்டிங்முடிஞ்சதும் கால் பண்ண சொல்லுங்க” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள். ஒருமணிநேரமாகியும் தேவ்ராஜிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நகத்தை கடித்தபடியே மேலும் அரைமணிநேரம் காத்திருந்தாள். அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அலைபேசியை எடுத்து அவனுக்கு தொடர்புகொள்ள முயன்றாள். ரிங் சென்றுகொண்டே இருந்தது. அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து அலுத்து போனாள்.

 

‘என்னவாக இருக்கும்! ஏன் நம்முடைய அழைப்பை இப்படி புறக்கணிக்கிறான்! ஏதேனும் தெரிந்திருக்குமோ!’ – குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது. பதட்டத்துடன் நகத்தை நடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் மருமகளை கனிவோடு பார்த்த இராஜேஸ்வரி, “வேலையா இருந்திருப்பான். இன்னொருதரம் வேணுன்னா போன் பண்ணி பாரேன்” என்று அறிவுரை கூறினாள். அதன்படி மீண்டும் ஒரு முறை அவனுடைய எண்ணிற்கு டயல் செய்தாள் மதுரா. அடித்துக் கொண்டிருந்த அழைப்பொலி ஓய்வதற்கு சற்று முன் அழைப்பை ஏற்று, “சொல்லு…” என்றவனின் குரல் இறுகிப்போயிருந்தது.

 

அந்த குரல் அவளை நெருடியது. ஆனால் ‘வேலை டென்ஷனா இருக்கும்…’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக்க கொண்டு, “சீக்கிரம் வந்துருவேன்னு சொன்னீங்களே!” என்றாள் தயக்கத்துடன். அவனுடைய வேலை நேரத்தில் தொல்லை செய்கிறோமோ என்கிற தயக்கம்.

 

‘அதற்கு தகுந்தாற்போல் அவனும், “பிஸியா இருக்கேன். வர லேட் ஆகும்” என்றான்.

 

“ஓ! வெளியே போகலாம்னு சொல்லியிருந்தீங்க. அதான் கேட்டேன்”

 

“அதெல்லாம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம். எனக்காக நீ வெயிட் பண்ண வேண்டாம்” – ஒட்டாத தொனியில் அவன் பேசுவது மதுராவை உறுத்தியது. ஆனால் அவளால் காரணம் கேட்க முடியவில்லை. ‘ஒருவேளை கிஷோரை பார்த்தது தெரிந்திருக்குமோ!’ – சந்தேகமாக இருந்தது. அந்த சந்தேகம் அவளுக்குள் பயத்தை ஏற்படுத்தியது. எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

 

இரவு வெகு தாமதமாக வீட்டிற்கு வந்த தேவ்ராஜ் மனைவியிடம் முகம் கொடுத்து பேசவில்லை. தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு படுத்துவிட்டான். மறுநாளும் அதே கதைதான். அவளை ஏறிட்டு கூட பார்க்காமல் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான். இரண்டு நாட்கள் நீடித்தது இந்த கண்ணாமூச்சிச்சி ஆட்டம். அவனிடம் பேச முயன்று… தோன்று… கலைத்துப் போனாள் மதுரா. அவனுடைய கோபமும் விலகலும் அவளை அலைக்கழித்தது. எரிமலை போல் எந்நேரமும் சீறி கொண்டிருக்கும் அவனை கண்டாலும் பயம் காணாவிட்டால் ஏக்கம். – கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கக் கூட தோன்றவில்லை அவளுக்கு. இந்த நேரத்தில் தானா இந்த பிரச்சனை வரவேண்டும்! முகம் கொடுத்துக் கூட பேசாதவனிடம் எப்படி இதை சொல்வது! மதுராவின் மனம் கலங்கிப் போயிருந்தது.

 

கணவனின் திடீர் விலகல் மதுராவை குழப்பவில்லை. அவளுக்குத்தான் தெள்ள தெளிவாக புரிந்துவிட்டதே! அந்த கிஷோரை சந்தித்துவிட்டு வந்தது எப்படியோ தெரிந்துவிட்டது. அதனால்தான் இப்படி பாராமுகம் காட்டுகிறான். ஆனால் அவள் வேண்டுமென்றா அவனை போய் சந்தித்துவிட்டு வந்தாள்! எதேர்ச்சையாக நடந்த சந்திப்புத்தானே! அதற்கு அவள் மீது கோபப்படுவது எப்படி நியாயமாகும்? – மதுரா தன் பக்க நியாயங்களை சேகரம் செய்து கொண்டிருந்த போது, ‘எதேர்ச்சையாக நடந்த சந்திப்புதான். அதை ஏன் நீ முன்பே உன் கணவனிடம் சொல்லவில்லை?’ என்று மனசாட்சி குறுக்கு கேள்விக்கு கேட்டது. அவளிடம் பதில் இல்லை.

 

‘பயத்தில்தான் என்றாலும்… மறைத்துவிடலாம் என்று எண்ணியது குற்றம்தானே? இதை எப்படி சரிசெய்ய போகிறோம்!’ – உள்ளங்கைகள் கூசின. முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் அரும்பின. இதயம் வேகமாக துடித்தது.

 

‘நடந்ததையெல்லாம் அவனிடம் சொல்லிவிட வேண்டும். நம் மீது தவறு இல்லை என்பதை அவனுக்கு புரியவைக்க வேண்டும். புரிந்துகொள்வானா! கோபத்தை கைவிட்டு நாம் சொல்ல வரும் செய்தியை காது கொடுத்து கேட்பானா!’ – பயம் கலந்த எதிர்பார்ப்போடு கணவனின் வரவுக்காகக் காத்திருந்தாள் மதுரா.

 

காரின் ஹெட்லைட் வெளிச்சம் கேட்டில் தெரிந்தது. ‘வந்துவிட்டான்…’ – பதட்டத்துடன் எழுந்தாள்.

 

தேவ்ராஜ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே மதுராவின் பார்வை அவனை பின்தொடர்ந்துக் கொண்டிருந்தது. அவன் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு படுக்கைக்கு வந்த போது, “தேவ்…” என்றாள் மெல்ல. அவளை திரும்பிப் பார்த்த தேவ்ராஜ், ‘என்ன’ என்று வாய்திறந்து கேட்கவில்லை.

 

“ஐம் சாரி” – மெல்ல முணுமுணுத்தாள். அவன் முகத்தில் கடுமை கூடியது. பதில் சொல்லாமல் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.

 

“ப்ளீஸ்… தேவ் என்கிட்ட பேசுங்க… நீங்க இப்படி என்னை அவாய்ட் பண்ணறது ரொம்ப கஷ்ட்டமா இருக்கு” – மன்றாடினாள்.

 

அவள் இப்படி தனக்காக உருகுவது அவன் மனதிற்கு இதமாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காகவெல்லாம் அவள் செய்த தவறை மன்னித்துவிட முடியாதே. அவள் பாரதியை தவறாக வழிநடத்தினாளா இல்லையா என்பது அடுத்த கேள்வி… நடந்ததை அவள் நம்மிடம் சொல்லியிருக்க வேண்டாமா? எப்படி சொல்லாமல் இருந்தாள்! – இளகிய மனம் மீண்டும் இறுகியது.

 

“நா செஞ்சது தப்புதான் தேவ்… அன்னைக்கே உங்ககிட்ட சொல்லியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்… ஐம் சாரி… இப்போ நா உங்ககிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும் தேவ். ப்ளீஸ் என்னை பாருங்க…” கெஞ்சினாள்.

 

“டயர்டான இருக்கேன்… பேசாம படு…” என்றான் சற்றும் இளகாமல்.

 

“நான்தான் சொல்றேன்ல தேவ்… எனக்கு எதுவுமே தெரியாது. நா பத்திரிக்கையை கூட பார்க்கல. சோனிக்காகத்தான் கல்யாணத்துக்கு போனேன். ஆனா அங்க கிஷோர் மாப்பிள்ளையா இருப்பான்னு எனக்கு எப்படி தெரியும்? ப்ளீஸ் புரிஞ்சுக்…” – “வாட் த ஹெல் யூ ஆர் டாக்கிங் அபௌட்?” – சீற்றத்துடன் போர்வையை விலக்கிவிட்டு விருட்டென்று எழுந்து அமர்ந்தான் தேவ்ராஜ்.

 
19 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  tamilarasi senthilkumar says:

  eppo than rendu perum free a irupanga .eppo parthalum fight .so sad paavam mathura


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  janani kannan says:

  Romba kuty ud-ya kudukuringa


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jayashree swaminathan says:

  as usual you rock with your narration.thanks for the update


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you.. 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  மதுரா தேவ்விடம் திட்டு வாங்குவதற்காகத்தான் பிறந்து வளர்ந்திருப்பாரோ,எப்போ பார்த்தலும் திட்டு வாங்கிக்கொண்டு,ஆனால் இப்போ தேவ் எதற்காக தன்மேல் கோபமாய் இருக்கின்றார் என்று தெரியாமல் இப்படி உளறி வைத்துவிட்டாரே,ஆனால் இப்போது சொன்னதும் நல்லதிற்காகத்தான் ,எப்படியோ திட்டு விழப்போகின்றது பாரதி முகேஷ் சந்திப்பிற்காக அத்தோடு இதையும் சேர்ந்து வாங்கிவிட்டால் போச்சு ,இல்லாவிடில் கிஷோர் விடயம் தெரியவரும்போது அதற்காக இன்னொரு முறையல்லவா திட்டு வாங்கணும்.

  நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   அநியாயமா பேசுறீங்களேப்பா… இன்னிக்கு தேவ் திட்டவே இல்ல… எவ்ளோ பொறுமையா பிரச்னையை தவிர்க்க முயற்சி பண்ணினான்… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  HAYOOOOOOO MADHU IPDI SOTHAPITEEYYYYYYYY


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Ugina…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  seline seline says:

  very nice


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  Muthakeye solli irukalam madhura….enna seiyapirano Dev🙁


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Hathi… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sow Dharani says:

  அடேய் தேவ் அவளே பயத்தில் எதை முன்ன சொல்ல எதை பின்ன சொல்லணும் அப்படினு தெரியாம ஒளரிக்கிட்டு இருக்கா…..இதுல நீ வேற கத்தி கூப்பாடு போடு….

  மாயா உனக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் போட்டுகுடுகிற friends இருக்கங்களோ


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   ஹா ஹா… ஆமாம்… அவளே பயத்துல உளர்றா… இவன் வேற… 😀


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Riy Raj says:

   மாயாகிட்டையே கேக்கலாமா …..


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Madhu solla vantha mukkiyamana vishayam .. Happy news ? … Adappavi solrathai konjam porumaiya than kelenda


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   //Happy news?// May be… 😉

   Thank you pa…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Priya says:

  nice.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you…