Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

கனல்விழி காதல் - 67

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 67

அத்தியாயம் – 67

“வாட் த ஹெல் யூ ஆர் டாக்கிங் அபௌட்?” என்று சீற்றத்துடன் எழுந்து கடுமையாக முறைக்கும் கணவனை கலவரத்துடன் பார்த்தாள் மதுரா. திருதிருவென்று விழிக்கும் மனைவியை கடுப்புடன் பார்த்தான் தேவ்ராஜ்.

“எந்த கிஷோர்? யூ மீன்…” என்று சொல்ல வந்ததை முடிக்காமல் அவன் இழுக்க, இவள் ‘ஆம்’ என்பது போல் மேலும் கீழுமாக தலையை ஆட்டினாள்.

“அவனோட கல்யாணத்துக்குத்தான் போயிட்டு வந்திருக்கியா?” – பற்களை நறநறத்தான்.

“எனக்கு தெரியாது தேவ்… அங்க போன பிறகுதான்…” – “அது எப்படி தெரியாம போகும்? இன்விடேஷன்லதான் எல்லாம் தெளிவா போட்டுருக்குமே?” – அவளை இடைவெட்டி சிடுசிடுத்தான்.

“நா பார்க்கல…” – அவளுடைய தேன் குரல் கரகாரத்தது. மனைவியை வெறித்துப் பார்த்தான் தேவ்ராஜ். அவள் பொய் சொல்கிறாள் என்று நினைக்கவில்லை. ஆனால் ‘அப்படி என்ன அலட்சியம்…’ என்கிற எரிச்சல் மேலிட்டது. அதோடு இன்னொரு சந்தேகமும் தோன்றியது. அந்த நொடியே அவன் முகத்தில் ஒரு சின்ன பதட்டம் தோன்றி மறைந்தது. அவள் முகத்தில் தோன்றும் உணர்வுகளை துல்லியமாக கவனித்தபடி, “அவன்… உன்கிட்ட ஏதாவது பேசினானா… இல்ல பேச ட்ரை பண்ணினானா?” என்றான்.

“ம்ஹும்… இல்ல… ஆங்… சோனி இன்ட்ரோ பண்ணினா… அப்போ ஒரு ஹாய்… அவ்வளவுதான்… உடனே கிளம்பிட்டோம்…”- அவள் சொல்வதையெல்லாம் இறுகிய முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவன், “இன்ட்ரோ வேற? சொல்ல வேண்டியதுதானே உன் ஃபிரண்ட்கிட்ட… அவன் யாருன்னு…” பல்கலைக் கடித்தான்.

மதுராவின் கண்களில் முணுக்கென்று கண்ணீர் திரண்டது. “இதுல எதுவுமே என்னோட மிஸ்டேக் இல்ல…” என்றாள். அந்த வார்த்தை அவனை சுருக்கென்று தைத்தது. ஒரு நொடி அவளை கனிவாக பார்த்தவனின் முகம் மறு நொடியே கடினமாக மாறியது. சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், “இதெல்லாம் அன்னைக்கே சொல்லியிருந்தேன்னா உன்மேல எந்த மிஸ்டேக்கும் இல்லைன்னு நானும் ஒத்துக்கிட்டிருப்பேன்” என்றான் நக்கலாக. கீழுதட்டை கடித்துக் கொண்டு தலைகுனிந்தாள் மதுரா.

“சோ… நீ செஞ்ச தப்பை மறைக்க… பாரதிக்கு ஹெல்ப் பண்ணியிருக்க… ரைட்?”

‘வாட்! என்ன சொல்றான்! முகேஷ் மேட்டரும் தெரிஞ்சிடுச்சா! கடவுளே!’ – சட்டென்று நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். அங்கே ஒரு உணர்வும் இல்லை… என்ன நினைக்கிறான் என்று எதையும் அவளால் ஊகிக்க முடியவில்லை. “இல்ல தேவ்… நா… அப்படி நினைக்கல… ஆனா…” என்று ஏதோ விளக்கம் சொல்ல முற்பட்டாள்.

“இட்ஸ் ஆல் கிரிஸ்டல் க்ளீயர்… உன்னோட பொயை மறைக்க அவ ஹெல்ப் பண்ணியிருக்கா… அவளோட பொயை மறைக்க நீ ஹெல்ப் பண்ணியிருக்க… கிவ் அண்ட் டேக்… கொடுக்கல் வாங்கல்… தட்ஸ் இட்…” என்றான் எரிச்சலுடன்.

“அந்த மாதிரி இல்ல தேவ்… நா கொஞ்சம் பயந்துட்டேன்… அதான்…” – தடுமாறினாள்.

“ஓ ரியலி…!” – அதீதமாக ஆச்சர்யப்பட்டான். அவன் குரலில் விரவியிருந்த ஏளனம் மதுராவின் மனதை வாட்டியது.

“பொய் சொல்ல பயம் இல்ல… ஆனா உண்மையை சொல்ல பயமா இருந்துச்சு… குட்…” வஞ்சமாக பாராட்டினான்.

“ஐம் சாரி…”

“எதுக்கு…”

“என் தப்புதான்…” – அவளை முறைத்துப் பார்த்த தேவ்ராஜ், “பாரதி அந்த முகேஷ்கிட்ட பழகறது எவ்வளவு ரிஸ்க்கான விஷயம்னு உனக்கு புரியுதா? அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க மனசு எவ்வளவு கஷ்ட்டப்படும்னு நீ யோசிச்சு பார்த்தியா? ஏன் அவளை நீ தடுக்கல? என்கிட்டயாவது சொல்லியிருக்கணும்ல?” என்றான்.

“அவன்தான் மோனிகாவோட தம்பின்னு எனக்கு ரொம்ப லேட்டா தான் புரிஞ்சது… உடனே கிளம்பிட்டோம்… அதோட நா பாரதிக்கு அட்வைஸ் கூட பண்ணினேன். ஆனா என்னால உங்ககிட்ட கம்பளைண்ட் பண்ண முடியல”

“ஏன்?”

“ஏன்னா நீங்க கோவப்படுவீங்க” – ஓரிரு நொடிகள் அவள் முகத்தை பார்த்த தேவ்ராஜ், “என் கோவத்தைவிட இது முக்கியமான இஷு…” என்றான்.

‘உண்மைதான்…’ – “சாரி…” – மெல்ல முணுமுணுத்தாள்.

“ஐ டோன்ட் வாண்ட் யுவர் சாரி… இந்த விஷயத்துல நீ இன்னும் பொறுப்பா நடந்திட்டிருந்திருக்கணும்” என்று கூறிவிட்டு அவளிடமிருந்து விலகி டெரஸிற்கு சென்றான். தான் சொல்ல நினைத்திருந்த விஷயத்தை சொல்ல முடியாமல் போய்விட்ட ஏக்கத்துடன், கணவனின் முதுகை கலங்கிய கண்களுடன் பார்த்தபடி நின்றாள் மதுரா.

***********************

அன்று படுக்கையிலிருந்து எழவே முடியவில்லை மதுராவிற்கு. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. கை காலெல்லாம் வலுவிழந்து துவண்டது… கடந்த சில நாட்களாகவே அவளால் சரியாக உணவருந்த முடியவில்லை. நேற்று இரவு உறக்கமும் இல்லாமல் போய்விட்டது. படுக்கையில் விழுந்தால் எங்கோ பறப்பது போல் கிடைகொடுக்கவில்லை. குமட்டலும் தலைசுற்றலும் படுத்தி எடுத்தது. கோபமாக டெரஸிற்கு சென்றவன் அங்கேயே படுத்துவிட்டானோ என்னவோ தெரியவில்லை… அவள் விழித்திருக்கும் வரை உள்ளே வரவே இல்லை. கவனிப்பார் யாருமின்றி… தானே விழுந்து எழுந்து சமாளித்து அவள் கண்ணயரும் போது மணி மூன்று.

வெகு சிரமப்பட்டு கால்களை தரையில் ஊன்றி குளியலறையை நோக்கி அடியெடுத்து வைத்தாள். விழுந்துவிடுவோமோ என்று தோன்றியது. அறையில் கிடந்த மேஜையையும் சோபாவையும் பிடியாகக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். பிரஷை கையில் எடுத்ததும் மீண்டும் குமட்டல்… குடலே பிடுங்கி கொண்டு வெளியே வந்துவிடும் போலிருக்க… விசும்பினாள். ‘மூணு நாளாதான் ஒண்ணும் சாப்பிடலையே இன்னும் என்னதான் உள்ள இருக்கு… வெளியே வர…’ – எரிச்சலுடன் நினைத்துக் கொண்டாள்.

‘இதெல்லாம் எப்படி சமாளிக்கறது! எல்லாருக்கும் இப்படித்தான் இருக்குமா…!’ சந்தேகம் தோன்றியது. யாரிடமாவது கேட்கலாம் என்றால் இந்த விஷயத்தை சொல்லியாக வேண்டும்… ஆனால் இந்த லூசு பிடித்த மனம், முதலில் அவனிடம்தான் சொல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறது… அவன் கேட்டால்தானே… கையில் எடுத்த பிரஷை எரிச்சலுடன் தூக்கியெறிந்துவிட்டு, விரலில் சிறிதளவு பேஸ்ட்டை எடுத்து பல் துலக்கினாள். அதற்கே இரண்டு முறை… ‘உவ்வே…’

கலைத்துப் போய் அவள் குளியலறையிலிருந்து வெளியே வரும் போது ஆக்ரோஷமாக அவளை எதிர்கொண்டாள் பாரதி.

“இப்போ திருப்தியா? நா என்ன தப்பு பண்ணினேன் உனக்கு? எதுக்கு இப்படி என்னை சுத்தி சுத்தி அடிக்கிற? உன்னாலதான் என்னோட நிம்மதி போச்சு. உன்னாலதான் என்னோட சந்தோஷம் போச்சு… உன்னாலதான் என்னோட வாழ்க்கையே நாசமா போச்சு… இன்னமும் ஏன் என்னை அசிங்கப்படுத்தற? அன்னைக்கு உனக்கு நேராதானே நா முகேஷ் கூட பேசுனேன். ஏதாவது தப்பா பேசினேனா? எதுக்கு தேவ் பாய்கிட்ட என்னைய பத்தி தப்பா சொன்ன? சொல்லு… எதுக்கு இப்படி பண்ணின?” – படபடவென்று பொரிந்துக் கொட்டும் பாரதியை திகைப்புடன் பார்த்தாள் மதுரா.

“என்ன பாரதி! எனக்கு ஒண்ணும் புரியலையே! என்ன சொல்ற?” – ஏற்கனவே பலகீனமாக இருந்த மதுரா பாரதியின் அதீத கோபத்தில் துவண்டுபோனாள்.

“நடிக்காத… அன்னைக்கு நாம காபி ஷாப்லேருந்து வெளியே வரும் போது நீ என்ன சொன்ன?”

“என்ன சொன்னேன்?”

“முகேஷ் என்னை பார்க்க வந்தது தேவ் பாய்க்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமான்னு என்னை மிரட்டுனல்ல…”

“மிரட்டுனேனா!”

“ஆமாம்… நீ மிரட்டுனா… மிரட்டுனா மாதிரியே தேவ் பாய்கிட்ட மாட்டியும் விட்டுட்ட… இப்போ முகேஷ் ஹாஸ்ப்பிட்டல் பெட்ல இருக்கான். எல்லாம் உன்னாலதான். என்னோட சந்தோஷத்தை குழி தோண்டி புதைக்குறதுக்குன்னே வந்து வாச்சிருக்கியா நீ?”

“என்ன இப்படியெல்லாம் பேசற? நா அவர்கிட்ட எதையும் சொல்லல…”

“ப்பா… என்ன ஆக்ட்டிங்…! கண்ணுக்கு முன்னாடி எல்லாம் க்ளீயரா இருக்கும் போதே இப்படி பொய் சொல்ற…”

“பாரதி… திஸ் இஸ் த லிமிட்… போதும். உனக்கு ஏதாவது கஷ்டம்னா, அதை போயி உன்னோட தேவ் பாய்கிட்ட சொல்லு… சும்மா எங்கிட்ட கத்தாத”

“செய்றதையெல்லாம் செஞ்சுட்டு கோபம் வேற வருதா உனக்கு… வரும் வரும்… ஏன் வராது… உன்னோட லட்சணம் தெரிஞ்சுதான் அந்த கிஷோர் ஓடிட்டான். அந்த அவமானத்துலேருந்து உன்ன காப்பாத்தினது என்னோட தேவ் பாய்ல்ல… கோவம் வரத்தான் செய்யும்” – அவள் கக்கிய விஷத்தில் துடித்துப் போனாள் மதுரா. முகம் சூடாகி சிவந்துவிட்டது… உடம்பெல்லாம் வெடவெடவென்று நடுங்கியது. கோபமோ… அழுகையோ… உள்ளே ஏதோ ஒரு உணர்வு ஆழிப்பேரலை போல் பொங்கியது.

“எவ்வளவு கன்னிங்கா பழிவாங்கற… உன்ன போயி தேவ் பாய் எப்படி… ச்சை…” – அற்ப பத்தரை பார்ப்பது போல் அவளை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினாள் பாரதி.

17 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Radha Karthik says:

  Then the reason behind madhura marriage drop is dev?????????? Pesa vitta dhana Ava pesuva…… Hmm…..

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Jaya Bharathi says:

  Too interesting episodes.

  who is that guy in the picture….
  too suitable

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jayashree swaminathan says:

  Very interesting update.Poor heroine.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vijaya muthukrishnan says:

  very interesting ud. eagerly waiting for your next ud

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  தொடரும் துன்பங்கள்.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  அடுத்தவரை பேசவிடாமல் தாங்களாகவே ஒரு முடிவெடுத்து வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதில் அண்ணனையும் தங்கச்சியையும் அடிச்சுக்க ஆளே இல்லை ,என்னவொரு ஒற்றுமை போங்க.

  நன்றி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sow Dharani says:

  பாரதி விஷயத்தில் இன்னும் கொஞ்சம் பொறுமையா handle பண்ணுங்க தேவ் …… நீங்க வேண்டாம் வேண்டாம் னு சொல்ல பாரதி முகேஷ் கிட்ட நெருங்குவா….

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Aaha .. Dev en tension aaguran … Enna solliduvan kishor nu paya paduran .. Something wrong

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Reena thayan says:

   Avan than kishora oda vaichchano?????? yarukku theriyum

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Happa … Ponna ithu .. Ippadi niruppai kottitu porale

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  seline seline says:

  super

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  I hate that Bharathi

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  nice ud ssi
  barathykku periya adi vilunthaathan puthi varumoooooo……….ipdi akklum thangaiyum madhuvayyya kayaraangaaaaa

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ambika V says:

  Bharthi kannathula nalu adi vaikkanum pola erukku dev family eppadi than

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  Wow madhura undagi irukala? 1st avankitta sollanumnu aasaipadra ivan kaeta dhaana….Bharathi ku romba thimir….ivalai mudhalla adakanum

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sasi Kala says:

  Nice epi…Who is this guy in this pic pa?

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  barathy ruban says:

  Nice update pa.