Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இரும்பின் இதயம் – 20 – END

அத்தியாயம் – 20

வீடு முழுக்க எரிந்து நல்ல சேதம் ஏற்ப்பட்டுவிட்டது. அவர்கள் மூவரும் எந்த காயமும் இல்லாமல் உயிர் பிழைத்ததே அதிசயம் என்ற அளவுக்கு வீட்டில் எதுவும் மிஞ்சவில்லை. சாருமதியின் தந்தைக்கு அடித்த சரக்கெல்லாம் இறங்கிவிட்டது. ‘அந்த சனியனை போட்டுக்கிட்டு வந்து படுத்ததால உயிரே போயிருக்குமே… இனிமே அந்த எழவ தொடவே கூடாது’ என்று முடிவெடுத்துக் கொண்டார்.

 

“மாமா… அத்தை… கார்ல போய் ஏறுங்க…”

 

“இல்ல மாப்பிள்ளை… இதை இப்படியே எப்படி போட்டுட்டு வர்றது…?”

 

“இங்க என்ன மிஞ்சியிருக்கு கிளம்புங்க… நாளைக்கு காலையில வந்து பார்த்துக்கலாம்…” என்று அவன் முடிவாக சொன்னதும் கிளம்பிவிட்டார்கள்.

 

வீட்டிக்கு போகும் போதே தெரிந்த மருத்துவருக்கு போனில் தொடர்பு கொண்டு செய்தி தெரிவித்துவிட்டு மூவரையும் அழைத்து சென்று லேசாக ஏற்ப்பட்டிருந்த காயங்களுக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீட்டிற்கு அழைத்து சென்றான்.

 

காரில் அமர்ந்திருந்த ஜெயச்சந்திரனின் முகம் இறுக்கமாக இருந்தது. கொஞ்சம் தவறியிருந்தால் சாருமதியின் நிலை என்ன…? நினைக்கவே அவனுக்கு நடுக்கமாக இருந்தது. எவ்வளவோ குற்றங்களையும் மோசமான சம்பவங்களையும் பார்த்தவன் தான்.

 

ஆனால் அது எல்லாவற்றையும் போல் இதை அவனால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ‘தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்’ என்று சொல்வார்கள். அது போல் ஜெயச்சந்திரனுக்கு இந்த சம்பவத்தை நினைத்தாலே நெஞ்சு நடுங்கியது…

 

“கந்தசாமி… அத்தைக்கும் மாமாவிர்க்கும் என்ன தேவை என்று பார்த்து செய்… மாமா நீங்க இந்த ரூம் ‘யூஸ்’ பண்ணிக்கோங்க. ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க…” என்று சொல்லிவிட்டு சாருமதியை கையோடு அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.

 

மாடியறைக்கு சென்றதும் அங்கு மூலையில் போடப்பட்டிருந்த சோபாவில் சாருமதி சோர்வாக அமர்ந்தாள். ஒரே இரவில் என்னவெல்லாம் நடந்துவிட்டது. அப்பாவும் அம்மாவும் உயிரோடு இருப்பதே நம்ப முடியாத அதிசயமாக இருந்தது சாருமதிக்கு.

 

அவள் நினைவுகள் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கும் போதே, ஜெயச்சந்திரன் அவளுடைய காலடியில் அமர்ந்து அவளுடைய மடியில் முகம்புதைத்துக் கொண்டான்.

 

சாருமதிக்கு ஆச்சர்யம்… ஜெயச்சந்திரனா இது…? அவள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதே அவளுடைய ஒரு கை அவனுடைய முதுகை வருட மறு கை முடியை கோதியது.  அப்போதுதான் அவள் அதை உணர்ந்தாள்.

 

ஜெயச்சந்திரனுடைய உடல் லேசாக குலுங்கியது. அவள் மடி நனைந்து ஈரமானது. ‘அழுகிறானா…? ஜெயச்சந்திரனா…? என் கணவனா…? எனக்காகவா…?’ அவளால் நம்ப முடியவில்லை.அவள் பிரம்மிப்பாக ஜெயச்சந்திரனின் முதுகை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரத்தில் நிமிர்ந்து எழுந்து எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியில்  அமர்ந்து சாருமதியின் கண்களை பார்த்த ஜெயச்சந்திரன் சிறிது நேரத்திக்கு முன் அழுதான் என்று யாராலும் சொல்ல முடியாது. கண்கள் மட்டும் சிவந்திருந்தது. மற்றபடி முகத்தை வெகுவாக இயல்பாக்கிக் கொண்டிருந்தான்.

 

குரலை கொஞ்சம் கனைத்து சரி செய்து கொண்டு ஜெயச்சந்திரன் பேசினான். “ஏன் இப்படி பண்ணின சாருமதி…? ஏன் வீட்டை விட்டு போன? ஏன் என்னை உதறி தள்ளிவிட்டு போன? ஏன் தாலியை தூக்கி எறிஞ்சிட்டு  போன…? சொல்லு…?” என்று அழுத்தமாக கேட்டான்.

 

அவள் அவனை பார்த்து மலங்க விழித்தாள். இன்று நடந்த பல சம்பவங்களில் அவளுக்கு எல்லாமே ஒரு நிமிடம் மறந்துவிட்டது.

 

“இன்னிக்கு உனக்கு ஏதாவது ஆகியிருந்தா… நான்… நான்… என்னை… எப்படி…” வார்த்தைகள் வராமல் தடுமாறினான். தொண்டை அடைத்தது. அதை செருமி சரி செய்துகொண்டு பேசினான்.

 

“அன்னிக்கு என்கிட்ட நீ சண்டைபோடும் போது ‘என் மனசுல நீ இல்லைன்னு’ சொன்ன… எத வச்சு அப்படி முடிவு பண்ணின சாருமதி…?”

 

“தினமும் வீட்டுக்கு வரும்போது பூ வாங்கிட்டு வர்றது… வாரம் ஒரு சினிமாவுக்கு அழைச்சிட்டு போறது… மாசம் ஒரு கிபிட்… செல்ல பேர் சொல்லி கூப்பிட்றது… கண்ணே மணியேன்னு கொஞ்சுறது… இப்படியெல்லாம் மட்டும் தான் காதலை வெளிப்படுத்தனுமா…?

 

இப்படி தான் காதலை வெளிப்படுத்தணும் என்றால் எனக்கு என்னோட காதலை வெளிப்படுத்த தெரியல சாருமதி… எனக்கு வரல… நான் என்ன செய்யட்டும்…

 

உனக்காக இதெல்லாம் நான் முயற்சி பண்ணி செஞ்சா அது என்னோட குணத்துக்கு இயல்பா இருக்காது… நாடகத்தனமா இருக்கும்… அதுமாதிரி நடிக்க எனக்கு முடியல…

 

அதுக்காக எனக்கு உன் மேல காதலே இல்லன்னு நீ முடிவு பண்ணிடுவியா…? என்னை விட்டுட்டு போயிடுவியா…? எப்படி உன்னால முடிஞ்சுது…?” என்று கேட்டுவிட்டு நாற்க்காலியிலிருந்து எழுந்து ஜன்னல் பக்கம் போய் வெளியே பார்த்தான். வெளிக்காற்றை ஆழமாக சுவாசித்தான். பின் சாருமதியிடம் திரும்பினான்…

 

“நானும் என்னோட காதலை வெளிப்படுத்தினேன் சாருமதி… எவ்வளவு வேலை இருந்தாலும் எவ்வளவு பசித்தாலும் வீட்டுக்கு வந்து உன் கையாள தான் இரவு உணவு சாப்பிடுவேன்… அது ஏன்…?

 

என் முன்னாடி என்னோட மேல் அதிகாரிகள் கூட குரல் உயர்த்தி பேசமாட்டாங்க… ஆனால் நீ என்கிட்ட சண்டை போட்டு என்னை திட்டும் போது நான் சிரித்துக்கொண்டே போய்விடுவேனே… அது எப்படி என்னால் முடிந்தது…?

 

என்னுடைய ATM கார்டை உன்னிடம் கொடுத்துவிட்டு இந்த வீட்டின் பொறுப்பை முழுவதுமாக உன்னிடம் ஒப்படைத்துவிட்டு, என் செலவுக்கு நான் உன்னிடம் பணம் கேட்டு வாங்கிக்கொண்டு போவேனே… அது எதனால்…?

 

இது எல்லாமே உன் மேல எனக்கிருக்கும் காதலால் மட்டும் தான் சாத்தியம் சாருமதி… ஆனால் உனக்கு புரிவது போல் என்னுடைய காதலை வெளிப்படுத்தாதது தப்பு தான்… மன்னிச்சுடு சாருமதி… என்னை மன்னிச்சுடு…” அவன் குரல் லேசாக கம்மியது.

 

சோபாவில் அமர்ந்து அவன் பேசுவதை பிரம்மிப்பாக கேட்டுக் கொண்டிருந்தவள் எழுது ஓடிவந்து அவனுடைய மார்பில் முகம் புதைத்து அவனை கட்டிக்கொண்டாள். கண்கள் கண்ணீரை கொட்டியது.

 

என்ன வேண்டும் அவளுக்கு…? இதை விட அவளுக்கு வேறு என்ன வேண்டும்…? அவளுடைய கணவனின் ஒவ்வொரு செயலிலும் காதல் இருந்திருக்கிறது. இவள் தான் அதை புரிந்துகொள்ளாத மடச்சியாக இருந்திருக்கிறாள். என்னவெல்லாம் செய்துவிட்டாள்…? அவனை எப்படியெல்லாம் வேதனை படுத்திவிட்டாள்…?

 

சிறு குழந்தை ஆரம்பத்தில் பேச்சுவராமல் தடுமாறுவது இயல்புதான். அது தப்பும் தவறுமாக பேசும் போது அதை ரசிக்கிறோமே… அதே போல் தானே இவனும். அன்பை அனுபவிக்காதவன். இப்போதுதான் புதிதாக அன்பின் சுவையை அனுபவித்து அதை மற்றவர்க்கும் கொடுக்கிறான். அப்படிபட்டவன் அவனுடைய அன்பை வெளிப்படுத்த தெரியாமல் தடுமாறும்போது அதற்காக அவனை விட்டுவிட்டு ஓடிவிட்டோமே…

 

அவளுடைய அழுகை நிற்காமல் தொடர்த்து… “மன்னிச்சுடுங்க… என்னை மன்னிச்சுடுங்க… நான் தான் உங்களை புரிஞ்சுக்கல… சாரி…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஜெயச்சந்திரனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்தது…

 

அவன் சாருமதியை அனைத்துக் கொண்டு நின்றான். அவனுடைய வயிற்றில் ஏதோ முட்டியது. அசையாமல் அப்படியே நின்று பார்த்தான். மீண்டும் முட்டியது.  சாருமதியை விளக்கி நிறுத்தி மகிழ்ச்சியும் குழப்பமுமாக பார்த்தான்.

 

“ஏய்… என்னவோ என் வயிற்றில் பட்டதே..”

 

அவள் வெட்கமாக சிரித்தாள். “ஆறு மாசம் ஆச்சுல்ல… அதுதான் உங்க பையன் ‘ஏன் இவ்வளவு நாள் என்னை பார்க்க வரவில்லை’ என்று கேட்டு உங்களை உதைக்கிறான்…” என்றாள்.

 

“ஹேய்… நிஜமாவா… ம்ம்… நிஜமாவா சொல்ற… பேபி இப்பவே அசையுமா…?” என்று கேட்டு மீண்டும் கையால் தொட்டுப் பார்த்தான்.

 

அவனுடைய ஆர்வத்தையும் ஆசையையும் பார்க்கும் போது ‘இவனுக்கா நம் மீது காதல் இல்லை என்று நினைத்தோம் ‘ சாருமதிக்கே சந்தேகம் வந்தது.

 

“ஹேய்… ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு… இதோ வர்றேன்…”   என்று சொல்லிவிட்டு சென்று பீரோவை திறந்து அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த தாலிக்கொடியை எடுத்துவந்தான்.

 

அதை பார்த்ததும் சாருமதிக்கு குற்றவுணர்வாக இருந்தது. தலை குனிந்துக் கொண்டாள்.

“சாருமதி….” என்று அழைத்து அவள் நிமிர்ந்து பார்த்ததும் தன் கையில் இருந்த தாலிக்கொடியை அவளிடம் காட்டினான்.

 

“சாரி… சாரிங்க… ப்ளீஸ் மன்னிச்சுடுங்க…” என்றாள். லேசாக மீண்டும் கண் கலங்கியது.

 

அவன் சிரித்துக்கொண்டே அவளுக்கு அதை அணிவித்துவிட்டான். அவள் முகத்தை கையில் ஏந்தி நெற்றியில் இதழ்பதித்தான்.

 

அப்போதுதான் சாருமதிக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. அதை பற்றி ஜெயச்சந்திரனிடம் கேட்டும்விட்டாள்.

 

“ஏங்க… அன்னிக்கு  ஒரு பொண்ணுக்கு நடு ரோட்ல ‘flying kiss’ கொடுத்துகிட்டு இருந்தீங்க…” என்று சண்டைக் கோழியாக மாறினாள். அவளுக்கு சந்தேகம் எல்லாம் இல்லை… சும்மா ‘லுல்லல்லாய்…. ஒரு ஊடல்…’

 

அவனுக்கு குழப்பம்…”என்னைக்கு… யாருக்கு…?” என்று அவனும் குழப்பமாகவே கேட்டான்.

 

“அது தான் அன்னிக்கு… எனக்கு ஜுரம் கூட வந்ததே…” என்று ஆரம்பித்து அந்த சம்பவத்தை அவனுக்கு விளக்கினாள்.

 

அதை கேட்டவன் வாய்விட்டு சத்தமாக சிரித்தான். “ஹா… ஹா… சாருமதி… அதை பார்த்துட்டு தான் உனக்கு ஜுரம் வந்ததா… ஹா… ஹா…” என்று மீண்டும் மீண்டும் சிரித்தான்.

 

அவன் சிரிப்பதை பார்த்துவிட்டு  “ஏன் சிரிக்கிறீங்க… ” என்ற கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்தான். “ஹா… ஹா… ஹையோ… ஹா….ஹா…”

 

அவள் பக்கத்தில்  இருந்த தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள். அவன் அதை லாவகமாக பிடித்து அருகில் வைத்துவிட்டு அன்று நடந்ததை சிரிப்பினுடே சொல்லி முடித்தான்.

 

அவள் அசடு வழிந்தாள். அதை பார்த்தும் அவன் மீண்டும் சிரித்தான். “இவ்வளவு அழகா சிரிக்க தெரிந்தவர் தான் சிரிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்களா…?” என்று செல்லம் கொஞ்சிக்கொண்டே கேட்டாள்.

 

“சிரிக்க மாட்டேன்னு அடமெல்லாம் பிடிக்கல மதி… அது எனக்கு…” அவன் ஏதோ விளக்கம் சொல்ல முனைய… அவள் அவனை அவசரமாக தடுத்தாள்.

 

“வெயிட்… வெயிட்… வெயிட்… இப்போ என்ன சொன்னீங்க…?”

 

“எப்போ…?”

 

“இப்போ… இப்போதான்…”

 

“சிரிக்க மாட்டேன்னு அடமெல்லாம் பிடிக்கலன்னு சொன்னேன்.”

 

“அதுக்கப்புறம்…”

 

“அப்புறம் தான் நீ சொல்ல விடலையே…”

 

“இல்ல சொன்னீங்க…”

 

“என்ன சொன்னேன்…?” அவன் புரியாமல் கேட்டான்.

 

“சிரிக்க மாட்டேன்னு அடமெல்லாம் பிடிக்கல ‘மதி’ன்னு  சொன்னீங்க… ”

 

இப்போதும் அவனுக்கு புரியவில்லை. அது தான் நான் முதல்லேயே சொன்னேனே…

 

“உங்களுக்கு புரியலையா…”

 

“இல்லையே…”

 

“நீங்க என்னை ‘மதி’ன்னு கூப்பிடீங்க…”

 

அப்போதுதான் அவனும் அதை உணர்ந்தான். இப்போது அவன் அசடு வழிந்தான்.

 

“அது தானா வந்தது… ஹி… ஹி… நான் முயற்சி பண்ணி கஷ்ட்டப்பட்டு… எல்லாம் சொல்லல…  ஹி… ஹி…”

 

அவன் மாறிக்கொண்டிருக்கிறான் என்று உணர்ந்தவள் சிரித்துக்கொண்டு அவனோடு நெருங்கி அமர்ந்துக் கொண்டாள். அவன் அவளை அனைத்துக் கொண்டான். இப்படியே பேசி பேசி உறங்காமல் அந்த இரவை கழித்தார்கள்.

——————————————————————————————–

சாருமதியின் பெற்றோர் யாரிடமும் கடன் வாங்காதவர்கள். அவர்கள் மருமகனிடமும் கை நீட்ட தயாரில்லை. அதனால் ஜெயச்சந்திரன் வங்கியில் கடன் வாங்கி அவர்களுடைய வீட்டை பழுது பார்த்து இரண்டு கார்களும் வாங்கிக் கொடுத்தான்.

 

ஒரு ‘ட்ராவல்ஸ்’ ஆரம்பித்து அதை சாருமதியின் தந்தை பார்த்துக் கொண்டார். அவர் இப்போது குடியை சுத்தமாக விட்டுவிட்டார். அதனால் வருமானம் ஓரளவு போதுமானதாக இருந்தது. வங்கிக்கடனை அடைக்கவும் வீட்டு செலவுக்கும் சரியாக இருந்தது. அவளுடைய அம்மாவும் தையல் தைப்பதை விடவில்லை. எனவே அவர்கள் சிரமம் இல்லாமல் வாழ முடிந்தது. கடைசி காலத்திலாவது அவளுடைய அம்மாவுக்கு கணவனை பற்றிய கவலை இல்லாமல் வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது.

 

சாருமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்க்கு சூர்யா என பெயரிட்டார்கள். அந்த குழந்தை அவர்களுக்கு மகிழ்ச்சியை குறையாமல் அள்ளி அள்ளி கொடுத்தது.

 

ஜெயச்சந்திரனுடைய வாழ்க்கையில் குற்றவாளிகளை வேட்டையாடும் பனி தொடர்ந்து கொண்டே இருந்தாலும், வாசற்படிக்கு வெளியிலேயே ASP ஜெயச்சந்திரனை விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது சூர்யாவின் தந்தையாகவும் சாருமதியின் கணவனாகவும் மட்டுமே நுழைவது எப்படி என்பதை அவனும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டிருந்தான்.

 

இரும்பின் இதயத்தில் இடம் பிடித்து அதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்ட சாருமதி தன் கணவன் மற்றும் குழந்தையுடன்  வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்தாள். கணவனுக்கும் அந்த கலையை கற்றுக்கொடுத்தாள். இனி அவர்கள் வாழ்வில் இன்பம் மட்டுமே நிறைந்திருக்கும்….

 

-நிறைவடைந்தது.
9 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  pavithra E says:

  kovathula kuda kadhal eruku nu yarum purinjikarathu ella mam ana unga kathai arputham irumbin idhayam nu thalaipuu romba poruthama erukku irumbu kuda neruppu pata athu valainthu koduthu than poguthu iruboda kadhal nerupu mala azhaga eruku ungal kadhai romba mokka potutan pola


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya Karthigan says:

   😀 😀 en kadhaiyai vida periya mokkai illa… Thanks Pavithra… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pavithra Vadivelu says:

  Short but sweet


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Selvalakshmi Suyambulingam says:

  Nice Story.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Uma Maheswari says:

  Nice short and sweet story


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nithya L says:

  Nice story


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Bindu Sara says:

  NYC story


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  SUPERRRRRRR


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sudhakar Sundarachari says:

  Arumaiyana story Sis……. but seekiram finish ayidichinu thaan kavaliya irukku. Anyhow Jayachandran, Charumathi n Suriya will be in our hearts.

error: Content is protected !!