கனல்விழி காதல் – 71
9551
21
அத்தியாயம் – 71
அதிவேகமாக விரட்டிக் கொண்டு வரப்பட்ட கார் வீட்டுவாசலில் வந்து நின்ற போது மதுரா கதிகலங்கிப் போயிருந்தாள். அவள் காரில் இருப்பதையே பொருட்டப்படுத்தாமல், பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வேகநடை போட்டு வீட்டிற்குள் சென்றான் தேவ்ராஜ். வீட்டிற்குள் போகாமல் இப்படியே எங்காவது ஓடிவிடலாமா என்றிருந்தது அவளுக்கு. ஆனால் எங்கு ஓட முடியும்! விட்டுவிடுவானா…! – பெருமூச்சுடன் உள்ளே சென்றாள். ஹால் அமைதியாக இருந்தது. மேல செல்ல பயமாக இருந்தது. அவன் இருப்பானே! சிந்தனையோடு சோபாவில் அமர்ந்தாள்.
அரைமணி நேரம்… இல்லை ஒரு மணிநேரம் கூட ஆகியிருக்கும்… வெளியே இருள் சூழ துவங்கிவிட்டது. தன்னுடைய வாழ்க்கையும் எங்கோ காரிருளுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பது போல் தோன்றியது மதுராவிற்கு. அப்போதுதான் இராஜேஸ்வரி மாடியிலிருந்து கீழே இறங்கிவந்தாள். அவள் முகம் இறுகியிருந்தது. ‘மாயா என்னவெல்லாம் சொன்னாளோ!’ – மதுராவின் மனம் கலங்கியது.
“அவதான் அறிவுக்கெட்டத்தனமா ஏதோ பண்ணிட்டா… நீயும் அதை இவ்வளவு பெரிய பிரச்சனையாக்கணுமா?” என்றாள் உள்ளடக்கிய கோபத்துடன்.
‘இதுதான் மாமியார் புத்தியா! இதுவே இவங்க பொண்ணுக்கு நடந்திருந்தா இப்படித்தான் பேசுவாங்களா!’ என்றிருந்தது மதுராவிற்கு. பதில் சொல்லாமல் மெளனமாக நிற்கும் மருமகளை பார்த்து, “உன்ன விபரமான பொண்ணுன்னு நினச்சேன்…” என்றாள் வருத்தத்துடன். மதுராவிற்கு வாய் துடித்தது.
“என்னோட இடத்துல அவங்க இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பாங்க?” என்றாள் எரிச்சலுடன்.
“இதைவிட மோசமா எதையாவது செஞ்சு இன்னும் ரெண்டு குடும்பத்தையும் பிரிச்சு விட்டிருப்பா… ஆனா நீ மாயா இல்ல… மதுரா. எங்க போச்சு உன்னோட பொறுமை?” – ஆற்றாமையுடன் கேட்டாள்.
“எவ்வளவு பொறுக்க முடியும்?” – உதட்டை கடித்துக் கொண்டாள் மதுரா. கண்களில் கண்ணீர் திரண்டது. உடனே இராஜேஸ்வரியின் மனம் அவள் பக்கம் சாய்ந்தது. “சரி சரி அழாத… உன்ன யாரு தப்பா நினைக்க முடியும்! இவ சொன்னதை நம்பி ஓடிப்போன அவன் ஒரு முட்டாள். விட்டு தள்ளிட்டு வேலையைப்பாரு. இப்படி மூக்கை உறிஞ்சிகிட்டு இருந்தேன்னா தேவ் வேற கடுப்படிப்பான். ஆமாம்… அங்க வீட்டுக்கு வந்து என்ன பண்ணினான்? சத்தம் எதுவும் போடலையே! குட்டிமாவ கொடுக்கமாட்டேன்னு துருவன் எதுவும் வம்பு பண்ணினானா?” – விபரம் கேட்டாள்.
மதுராவின் முகம் மாறியது. அதில் தெரிந்த துக்கத்தைக் கண்டு, “என்ன மது ஆச்சு? சண்டை போட்டுட்டானா? துருவனுக்கும் இவனுக்கும்தான் பிரச்சனை இல்லாம ஓடிக்கிட்டு இருந்துச்சு. இப்போ அதுவும் கெட்டு போச்சா!” என்று புலம்பினாள்.
“இல்ல… துருவன் பாய் கூட ஒண்ணும் பிரச்சனை பண்ணிக்கல”
“பின்ன?”
“திலீப் பாய்… திலீப் பாயை… நல்லா அடிச்சிட்டாரு…” – விசும்பினாள்.
“அடிச்…சுட்டா…னா!” – அதிர்ந்தாள் இராஜேஸ்வரி. சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “இந்த மாதிரி எதுவும் நடந்துடக் கூடாதுன்னு தான் நான் பயந்தேன்” என்றாள். மதுராவின் முகம் மேலும் சுருங்கியது.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்டெர்க்காம் ஒலித்தது. எடுத்து பேசிய இராஜேஸ்வரி மருமகளிடம் ரிசீவரை நீட்டினாள். மதுராவிற்கு புரிந்தது… அழைப்பது தேவ்தான்… நடுக்கத்துடன் வாங்கி, “ஹலோ” என்றாள்.
“மேல வா…” – அதிகாரமாய் ஒலித்தது அவன் குரல். மிரட்சியுடன் ரிசீவரை தங்கியில் வைத்துவிட்டு கையை பிசைந்தாள்.
“என்னவாம்?” – இராஜேஸ்வரி.
“கூப்பிட்டாரு”
“கோவமா இருக்கான். ஏதாவது பேசினான்னா பேசிட்டு போகட்டும்னு விட்டுடு… காதுல வங்கிக்காத” – அவள் கூறிய அறிவுரை எதுவும் மதுராவின் காதில் விழவில்லை. மனமெல்லாம் பயம் காட்டுப்பூண்டு போல் மண்டிக் கிடந்தது. மருமகளின் வெளிறிய முகத்தைக் கண்டு, “இங்க வா…” என்று அவளை சமையலறைக்கு அழைத்து சென்று ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொடுத்து அருந்தச் சொன்னாள். மதுரா வேண்டாம் என்று மறுத்தாள். பாலெல்லாம் அருந்தும் நிலையிலா அவள் இருக்கிறாள்!
“வெறும் வயிறோட போயி அவனை எப்படி சமாளிப்ப? இதை கொஞ்சம் குடிச்சிட்டு போ… காட்டுமிராண்டி பயகிட்ட வாயைக் கொடுக்காம, என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போட்டுட்டு படுத்துடு… காலையில பேசிக்கலாம்” என்று அறிவுரை கூறி கட்டாயப்படுத்தி அந்த பாலை அருந்தவைத்து, அவளை மாடிக்கு அனுப்பினாள்.
மதுரா அறையில் நுழையும் போது தேவ்ராஜ் அவளுக்கு முதுகுக்காட்டி டெரஸ் பக்கம் திரும்பி நின்றுக் கொண்டிருந்தான். இவள் வந்ததை அவன் கவனிக்கவில்லையா அல்லது கண்டுகொள்ளவில்லையா என்று தெரியவில்லை. திரும்பிப் பார்க்கவே இல்லை…
சற்று நேரம் நின்று பார்த்த மதுரா ‘ம்க்கும்…’ தொண்டையை செருமினாள். அப்போதும் அவன் திரும்பவில்லை.
“கூப்பிட்டீங்களே…” – மெல்ல முணுமுணுத்தாள்.
“ஏன் இவ்வளவு நேரம்?” – இறுகிய குரலில் அழுத்தமாகக் கேட்டான்.
“அத்தை பேசிகிட்டு இருந்தாங்க” – சட்டென்று திரும்பி அவளை கூர்ந்து பார்த்தான்.
ஜிவு ஜிவுவென்று சிவந்திருந்த முகத்தையும் மிதக்கும் கண்களையும் பார்த்த மாத்திரத்திலேயே குடித்திருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டாள் மதுரா. உள்ளே குளிர் பரவியது. வறண்டுபோன உதட்டை ஈரப்படுத்திக் கொண்டாள்.
“ஓ! அத்தை…பேசிட்டு இருந்தாங்க… ம்ம்ம்… குட்…” – போலி பாராட்டுடன் அவளை கூர்ந்து பார்த்தான். அவன் கண்களை சந்திக்க முடியாமல் கீழே குனிந்து கொண்டாள் மதுரா. குனிந்திருந்த அவள் தலையை வெறித்துப் பார்த்தபடி, “நமக்கு கல்யாணம் ஆகி எள்ளளவு நாள் ஆச்சு?” என்றான்.
ஏன் அந்த கேள்வியை கேட்கிறான் என்று புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்த மதுரா, “எட்டு மாசம்…” என்றாள் மெல்லிய குரலில்.
“சோ… இந்த எட்டுமாசத்துக்கு உன்கிட்ட எந்த வேல்யூவும் இல்ல… ரைட்?” – தளர்ந்த குரலில் கேட்டான்.
“இல்ல… நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க…” – “ப்ச்… ப்ச்….” – கையை உயர்த்தி தலையை குறுக்காக ஆட்டினான். அவள் சொல்வது எதையும் அவன் நம்ப தயாராக இல்லை என்பது போல் இருந்தது அவனுடைய பாவம். பார்க்க மிகவும் சோர்வாகத் தெரிந்தான். முகமும் உடலும் வியர்வையில் நனைந்திருந்தது. நெற்றியை நீவியபடி கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்.
“தலையை பிடிச்சுவிடு…” – அவள் தயங்கினாள். அவளை நிமிர்ந்து பார்த்தான். கையை பிசைந்துக் கொண்டு அசௌகரியமாக நிற்கும் மனைவியைப் பார்த்து அவனுக்கு எரிச்சல் மண்டியது.
“தலையை… பிடிச்…சுவிடுன்னு… சொன்னேன்….” – அதட்டினான். பயந்து போன மதுரா பதட்டத்துடன் அவன் தலையை பிடித்துவிட்டாள்.
“ஏமாற்றம்… வெறுப்பு… தொரத்துது… ஓடறேன்… வேகமா ஓடறேன்… வாழ்க்கை பூரா ஓடறேன்… ஓடிக்கிட்டே இருக்கேன்… அது என்னை தொரத்திக்கிட்டே இருக்கு… ஓடறேன்… தொரத்துது…. தொரத்துது ஓடறேன்… ஓடிக்கிட்டே…. இருக்கேன்…” புலம்பிக் கொண்டே முகத்தை உயர்த்தி அவளுடைய கையில் தன் கன்னத்தை பதித்து கண்களை மூடினான். இதமான உணர்வு அவன் மனதை வருடியது.
“ம்ம்ம்… எவ்வளவு சாஃப்ட்டான கை!” – அவளுடைய கையை பிடித்து முத்தமிட சென்றவன் சடாரென்று அதை தூக்கியெறிந்துவிட்டு அவளை கொடூரமாகப் பார்த்தான்.
“அவனும் கிஸ் பண்ணியிருப்பான்ல…” – வெறுப்பை உமிழ்ந்தது அவன் பார்வை. “அவனும் இந்த கையை பிடிச்சிருப்பான்… அவனும் கிஸ் பண்ணியிருப்பான்…”
“தேவ்… தப்பா பேசாதீங்க” – மதுராவின் குரல் நடுங்கியது. சட்டென்று எழுந்து அவள் தோள்களை பிடித்து உலுக்கியவன், “எட்டு மாசம்… எட்டு மாசம் என்கூட வாழ்ந்த வாழ்க்கையை, ஒரே நிமிஷத்துல மறக்கடிச்சுட்டான்னா… உங்களுக்குள்ள எதுவுமே இல்லன்னு சொல்றியா! சொல்லு… எந்த அளவுக்கு போச்சு உங்க ரிலேஷன்ஷிப்… சொல்லு….” – கைகளிரண்டும் இற்றுவிடும் போல் வலித்தது அவளுக்கு.
“விடுங்க… தேவ்… ப்ளீஸ் விடுங்க…” – அவனிடமிருந்து தப்பித்துக்கொள்ள அவள் கடுமையாக போராடும் போது அவளை உதறித்தள்ளினான். சுவற்றில் சென்று மோதியவள் அழுதுகொண்டே, “உங்களோட முட்டாள்தனமான பேச்சை நிறுத்துங்க. நீங்க நினைக்கற மாதிரி பொண்ணு நா இல்ல… நா இ…ல்…ல….” என்று கத்தினாள். பொறுக்க முடியவில்லை அவளால்.
சற்று நேரம் அவளை ஆழ்ந்து பார்த்தான்… கண்களை பார்த்தான்… கண்ணீரை பார்த்தான்… பார்த்துக் கொண்டே சொன்னான்… “நம்பறேன்… நீ தப்பு பண்ணியிருக்க மாட்ட… நா நம்பறேன்… ஆனா உன்னோட ஹார்ட்… அதுல நா இல்லையே மதுரா…!” – பரிதாபமாகக் கேட்டான். கரகரத்து உடைந்த அவன் குரல் திடீரென்று கடினமானது… “அவன்தான்… அவனுக்குத்தான் அங்க இடம்… ஐ நோ… ஐ நோ வெ…ரி வெல்…”
“ஐ…. நோ… வெ…ரி வெல்…” – பேசும் பொழுதே கண்களைத் துடைத்தான்.
‘அழுகிறானா!’ – மதுராவின் மனம் பதறியது.
“தேவ்…” – “டோன்ட்… டோன்ட் ட்ரை டு மேக் மீ ஃபூல்” – சுட்டுவிரல் நீட்டி கடுமையாக எச்சரித்தான். அவள் கீழே குனிந்து கொண்டு விசும்ப அவன் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
“மதுரா… ஹேய்… மது…ரா…” – தோள்களை பிடித்து உலுக்கினான். “பாரு… என்னை பாரு… லுக் அட் மீ” – அவளை அதட்டி தன்னை பார்க்க வைத்தான். கண்கள் நான்கும் சந்தித்துக் கொண்டன.
“உனக்கு எதுவும் தெரியலையா! என்னை பார்க்கும் போது எதுவும் தோணலையா?” – அவனுடைய பிடி இறுக அவள் முகம் வலியில் சுருங்கியது. அதை வேறுவிதமாக புரிந்துக் கொண்டான் தேவ்ராஜ்.
“ஆங்… பிடிக்கல… என்னை உனக்கு பிடிக்கல… என்னோட முகம் உனக்கு பிடிக்கல… என்னோட கேரக்டர் உனக்கு பிடிக்கல… முரடன்… பிடிவாதம் பிடிச்சவன்… ஈகோ பிடிச்சவன்… மா…ன்…ஸ்டர்… யாருக்கு பிடிக்கும்…! யாருக்கும் பிடிக்காது…! ஆனா எனக்கு உன்ன பிடிக்கும்… ரொம்ப… ஏன் புரியல உனக்கு? ஏன் உனக்கு புரியல யூ ப்ளடி ……………” – மென்மையாக ஆரம்பித்தவன் கடுமையான சத்தத்தில் சகிக்க முடியாத கெட்டவார்த்தையோடு முடித்தான். அவளுடைய கைகளில் பதிந்திருந்த அவனுடைய பிடி பலமடங்கு அதிகமாக இறுகியது. எதுவுமே அவளுக்கு தெரியவில்லை. அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது… நெஞ்சுக்குழி கனத்தது… இருவேறுபட்ட எதிர்மறை உணர்வுகள் அவளை ஆட்டிப்படைக்க அசைவற்று அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உனக்கு புரியல… புரியாது… நீதான் உன்னோட அம்மா.. அப்பா… அண்ணன்… அப்டியே கூட்டுக்குள்ளேயே… இருந்தியே! உன்னால என்னை புரிஞ்சுக்க முடியாது…” – முகத்தை துடைத்துக் கொண்டான். தலையை கோதினான். மறைக்க நினைக்கும் தன்னுடைய வலிகள் எல்லாம் அவளிடம் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை அவனால் தடுக்க முடியவில்லை.
“உன் அண்ணன்… அந்த திலீப்… ஹி ஐஸ் வெரி லக்கி… எல்லாத்துலேயும்…. ஹி ஐஸ் வெரி லக்கி… என் தங்கச்சி… அவனுக்காக தலை கீழ நின்னா… ஆனா நீ… என் கண்ணு முன்னாடியே! என் கண்ணு முன்னாடியே அந்த கிஷோர் கூட…” – முடிக்க முடியவில்லை அவனால். குரல் உடைந்தது…
“நீ மட்டும் ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை… எனக்கு தேவராஜ் தான் வேணுன்னு சொல்லியிருந்தேன்னா… நீ கற்பனையில் கூட நினைச்சுப்பார்க்க முடியாத அளவுக்கு இந்த தேவ் உன்ன… ப்ச்… ப்ச்… அதெல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டாம்… தெரிஞ்சுக்கக் கூடாது… உனக்கு அந்த தகுதி இல்ல…” – கத்திவிட்டு டெரஸ் பக்கம் திரும்பி நின்றுக் கொண்டான்.
சற்று நேரம் தான் அவளிடமிருந்து முகத்தை திருப்ப முடிந்தது அவனால்… ஓரிரு நிமிடத்திலேயே மீண்டும் அவளிடம் வந்தான்… அவளுடைய முகத்தை கைகளில் ஏந்தினான். போதையில் மிதக்கும் அவனுடைய கண்கள் மிரட்சியில் மருண்ட அவள் விழிகளோடு கலந்தது.
“ஹேய்… லுக் அட் மீ… என் கண்ண பாரு… இந்த கண்ணு… இந்த கண்ணு உன்ன மணிக்கணக்கா ஃபாலோ பண்ணும்… நீ… நீ… ஒரு தரம் கூட திரும்பி பார்க்கலேயே மதுரா… இங்க… இங்க தொட்டுப்பாரு…” – அவளுடைய கையைப் பிடித்து தன்னுடைய நெஞ்சில் வைத்தான்.
“துடிக்குதா…? துடிக்குதுல்ல…? இந்த ஹார்ட் உன்ன நெனச்சு நெனச்சு எத்தனை நாள்…. எத்தனை நாள் அப்படியே வெடிக்கற மாதிரி….” தொடர்ந்து பேச முடியவில்லை அவனால். அலற வேண்டும் போலிருந்தது. அகங்காரம் விடவில்லை… கட்டுப்படுத்திக் கொண்டான். சற்று நேரத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் புலம்பினான்.
“ஒரு தரம் கூட நீ என்னை நினச்சுப் பார்க்கல… அந்த கிஷோர் மேல பைத்தியம்… பைத்தியமா சுத்திக்கிட்டு இருந்த…” – குரல் கரகரத்தது. கண்ணீர் கசிந்தது.
“ஆனா நா… உங்க ரெண்டு போரையும் சேர்த்து பார்த்து உள்ளுக்குள்ள எரிஞ்சுக்கிட்டிருந்தேன். செத்துக்கிட்டுருந்தேன்…” – திடீரென்று ஆக்ரோஷப்பட்டான்.
“என் பக்கம் நீ திரும்பவே… என்னோட காதலை நீ பார்க்கவே இல்ல… யூ வேர் ஜஸ்ட் பிளைண்ட்… யூ வேர் ஜஸ்ட் கிரேஸி அபௌட் யுவர் ஃபியான்ஸி” – கண்களை ஒற்றைவிரலால் துடைத்துக் கொண்டான்.
“தேவ்…”
“நோ… என்னை முட்டாளாக்கணும்னு நினைக்காத மதுரா… உன்னால முடியாது”
“தேவ் ப்ளீஸ்… கிஷோர் எனக்கு வீட்ல பார்த்த பையன்”
“அதனால? அதனால உன்னோட மனசுல அவனை ஏத்துக்கிட்ட… இல்ல?”
“வேற என்ன நான் பண்ணியிருக்கணும்?”
“அந்த திலீப்… அவன்… உன்னோட அப்பா அம்மா… எல்லாரும் அவனை உன் மனசுல திணுச்சுட்டாங்க…”
“தேவ்…”
“நீ… நீ அந்த கிஷோரை மறந்துதான் ஆகணும்… விட மாட்டேன்… நீ மறக்கற வரைக்கும் விடமாட்டேன்”
“நினைச்சாதானே தேவ் மறக்கறதுக்கு?” – அவளுடைய கேள்வி அவன் கருத்தில் பதியவில்லை.
“உன் அப்பாம்மா செஞ்சதை நானும் செய்வேன்… உன்ன கட்டாயப்படுத்துவேன்… உம்மனசுக்குள்ள என்னை திணிப்பேன்…”
“ஏற்கனவே நீங்க எம்மனசுல இருக்கீங்க தேவ்…” – “ஹா… ஹா… ஹா…” – அறையே அதிர்ந்தது அவனுடைய வெடி சிரிப்பில்.
“ரியலி?” – சிரித்து முடித்துவிட்டு அவளை கூர்மையாகப் பார்த்தான்.
“எ…எஸ்…” – அந்த பார்வை அவளை அச்சுறுத்தினாலும் இழுத்துப் பிடித்த தைரியத்துடன் தலையை ஆட்டினாள்.
“தென் ஷோ மீ…”
“தேவ் ப்ளீஸ்…”
“ஷோ மீ மதுரா… உம்மனசுல நா எவ்வளவு ஆழமா இருக்கேன்னு எனக்கு தெரியணும்” – அவனுடைய பார்வை தீவிரமாக மாறியது. மதுரா மெல்ல அவனிடம் நெருங்கினாள். அவன் முகத்தை கைகளில் தாங்கி நெற்றியில் இதழ்பதித்தாள். இமைமூடி அவள் இதழொற்றலை உள்வாங்கி கொண்ட தேவ்ராஜ், மெல்ல கண்விழித்து அவள் கண்களை பார்த்தான். ‘அவ்வளவுதானா?’என்று கேட்டது அந்த பார்வை. நெற்றியில் ஆரம்பித்த அவளுடைய பயணம் கண்கள், கன்னங்கள் கடந்து இதழ்களில் வந்து முடிந்த போது அவனுடைய ஐயிரு விரல்கள் அவள் மேனியை சிலிர்க்கச் செய்தன.
21 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
adei dev unaku enathan venum pavam madhura intha padu paduthura
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
அட போங்க பா. படிக்காம இருக்க முடியலை. He would have loved மது but still dileep mela avanukku irukura enmity ithalam vida athigam. Avana bharathi love panavum மதுவும் இவன love pananum gra ego pola😡
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Athu ego illa pa …. Love 😍
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Dev asathitan Nithya, Didn’t expect this reaction from him. Nice turn in the story
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vetrigarama Dev lovea sollitan pa
Ini Madura eppa solla poralo
Ippave Kanna ketuthe
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
The way Dev render his feelings is really good.But what happen to Madura’s feelings.Will she be silent after so much torture?thanks for a super update.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lovela kuda gethu. Nathunga dev 👍
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Super ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daiiii…. Enna lol ahh… Un kathalai nee solla matta ava kathalai nee purinjukka matta… Ana madhu va ஆக்ரோஷமா காதலிப்ப ..அடிங்க … 8 masam vaazhnthu nee purinjukkitiya avala…. Poda neeyum un lovevum 😜😜
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
அருமையான கதை. ஆனால் ஒரு சின்ன நெருடல் மதுராவை ரொம்பவே காதலிப்பதாக சொல்லும் தேவ் தன் தங்கையை திலீப் திருமணம் செய்துக்கலைனா தான் மதுராவை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் தான் சொன்னான் அதனால் தான் கிஷோரை மதுராவின் அப்பா நிச்சயம் செய்தார். தங்கைக்குத்தான் முன்னுரிமை அதிகம் கொடுத்திருக்கான். பாரதி திலீபை வேணாம்னு சொன்ன பிறகுதானே மதுராவை திருமணம் செய்து கொள்ள ஒத்துகிட்டான். ஒருவேளை திலீப் பாரதியை திருமணம் செய்ய உறுதியாக மறுத்திருந்தால் தேவ்ராஜூம் மதுராவை திருமணம் செய்ய மறுத்திருப்பான் என்று தான் அப்போதைய நிகழ்வுகள் உணர்த்துகிறது. திருமணத்திற்கு முன் தேவராஜின் பேச்சிற்க்கும் இப்போதைய அவன் பேச்சிற்க்கும் ஒத்துப்போகலியே.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
எதிர்பாராத திருப்பம் தேவின் உணர்வு பிரவாகம்….அவன் தன் நேசத்தையும் ஆக்ரோஷமாகவே வெளிப்படுத்தும் விதம் அருமை….மது மீட்டெடுப்பாளா….அவனும் தன்னவளை புரிந்துகொள்வானா….அடுத்த கனல்விழிக்காக ஆவலுடன்…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ஹப்பா இப்பவாவது வாய் விட்டு சொன்னானே…. நல்ல கதை அருமையா எழுதுறீங்க
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
very super ud. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kaadhalai kooda ivvalavu muratudhanamava solvan muradan but appavum indha paithiyakaran avalayum kishorayum inaichi vachi pesuratha vidalaye loosu
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Chanceless mam semma…… Luv sollumbodhu kooda evulo terror ah soldronga semma…. Very much impressed…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi mam
பெரிய பகுதியாக தருவதாக சொன்னீர்களே எங்கே மீதியை காணோம்,அப்பா ஒருவழியாய் தேவ் தன்னுடைய மதுரா மீதான காதலை மதுராவிடம் சொல்லிவிட்டார்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hey dev baby luva sollitan so sweet… Dev luv solra style kooda azhagu than sis.. appo sis ini deva romantica pakalama
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ஹே பட்டுக்குட்டி காதலை சொல்லிடுச்சு…..சுவர் உடைஞ்சிடுச்சு…..மதுபேபி ஏன் குழந்தையப் பத்தி சொல்லல…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Very emotional epi
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
காதல கூட இப்படி கரடு முரட சொல்ல தம்ம தேவ்பாயால் தான் முடியும்
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
sariyana kovam varuthu enakku ethuthan long update ah pongappa neenga remba mosam
Nice update by the way