கனல்விழி காதல் – 72
9495
22
அத்தியாயம் – 72
அன்று காலை ஆறு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் வந்து அடைந்துக் கொண்டான் தேவ்ராஜ். நேற்று நடந்ததெல்லாம் மங்கலான காட்சிகளாய் அவன் நினைவுகளில் நிழலாடின. எதுவும் தெளிவாக நினைவில்லை. போதையில் அவளிடம் எதை உளறினோம் எதை விட்டோம் என்று யோசித்து யோசித்து தலைவலிக்கத் துவங்கிவிட்டது. மேஜையிலிருந்த ஆவி பறக்கும் கறுப்புக் காபியை எடுத்து சுவைத்தான். கசந்தது… அதை விரும்பி அருந்தினான்.
இன்டெர்க்கம் ஒலித்தது பேசியவனுக்கு, மாயா பார்க்க வந்திருப்பதாக செய்தி கிடைத்தது. கெஸ்ட் ரூமில் காத்திருந்த தங்கையை தேடித் சென்று பார்த்தான். இருவரும் தனிமையில் ஒரு மணிநேரம் பேசினார்கள். வெளியே வரும் போது மாயாவின் கண்கள் சிவந்திருக்க தேவ்ராஜின் முகம் இறுகியிருந்தது.
நேற்று நடந்த அனைத்தும் கனவு போல் இருந்தது மதுராவிற்கு. அவன் வீட்டிற்கு வந்து திலீப்பை அடித்துப்போட்டுவிட்டு, அவளை இழுத்துக்கொண்டு வந்த வேகத்திக்கிற்கு கொலையே செய்துவிடுவான் போலிருந்தது. ஆனால் அவன் அப்படி எதுவும் செய்யவில்லை… கோபப்பட்டான்… வெறுப்பை கொட்டினான்… ஆற்றாமையோடு பேசினான்… இவை அனைத்தையும் தாண்டி இன்னொரு விஷயத்தையும் வெளிப்படுத்தினான். – கனலை கக்கும் அவன் விழியில் காதலைக் கண்டாள் மதுரா.
அவள் மனம் பரபரத்தது. உள்ளுக்குள் ஓர் இன்ப படபடப்புத் தோன்றியது. இத்தனை நாட்கள் பட்ட கஷ்டமெல்லாம் துட்சமாய் மறந்து போய்விட அவனுடைய காதல் மட்டும் பொக்கிஷமாய் அவள் நெஞ்சில் நிறைந்தது. தோட்டத்தில் மலர்ந்திருக்கும் ரோஜாக்களெல்லாம் தனக்காகவே மலர்ந்திருப்பதாகத் தோன்றியது. தனக்குள் உதித்திருக்கும் முத்தை எண்ணி தன் ஆலிலை மணிவயிற்றை தொட்டுப்பார்த்துக் கொண்டாள். முகத்தில் கீற்றாய் தோன்றியது புன்னகை. அதே நேரம் வெறுப்பை உமிழும் பார்வையோடு தன்னை கடந்துசெல்லும் பாரதியைக் கண்டு அவளுடைய மலர்ந்த புன்னகை கருகியது.
வெறுப்பெனும் தணலில் தகித்தவளை குளிர்விப்பது போல் கேட்டில் தேவ்ராஜின் கார் நுழைந்தது. நெற்றியில் புரண்ட சிகையை அவசரமாக காதோரம் ஒதுக்கிவிட்டு, ஏற்கனவே சரியாக இருந்த ஆடையை மீண்டும் ஒருமுறை சரி செய்து கொண்டு, மலர்ந்த முகத்தோடு அவனை எதிர்நோக்கினாள்.
அலைபேசியில் பேசியபடியே காரிலிருந்து இறங்கியவன் அவளை கவனிக்கவில்லையோ… அல்லது கண்டுகொள்ளவில்லையோ… தோட்டத்துப் பக்கம் திரும்பாமலே வீட்டிற்குள் நுழைந்தான்.
உடனே அவனை பின்தொடர தயங்கி சற்று தாமதித்து இயல்பாக உள்ளே செல்வது போல் வீட்டிற்குள் சென்றாள். ஆதிராவை கையில் தூக்கிக் கொஞ்சியபடி மாடிக்குச் சென்றவன் நேராக மாயாவின் அறைக்குள் நுழைந்தான். மதுராவின் முகம் வாடியது. வெளியே வரும் போது நிச்சயம் நல்ல மனநிலையில் இருக்க மாட்டான் என்று அவள் உள்மனம் கூறியது.
மெளனமாக தன்னுடைய அறைக்குச் சென்றவள் டெரஸிற்கு சென்று கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்தாள். பத்து நிமிடம் கழித்து அறைக்கு திரும்பிய தேவ்ராஜ், கல்லோ மண்ணோ… என்று அவளை பொருட்படுத்தாமல் கோட்டை கழட்டிப் போட்டுவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
தன் போக்கில் தன்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் கணவனை வியப்புடன் நோக்கினாள் மதுரா. நேற்று அவன் பேசியதெல்லாம் கனவோ என்று தோன்றும் அளவிற்கு பழையபடி உர்ரென்றிருந்தான். அவள் உள்மனம் சொன்ன செய்தி பொய்க்கவில்லை என்று தோன்றியது அவளுக்கு.
மெல்ல அவனிடம் நெருங்கியவள், “காலையில சீக்கிரம் கிளம்பீட்டிங்களா? நா உங்களைப் பார்க்கவே இல்ல…” என்று வலிய பேச்சு கொடுத்தாள்.
அவள் பேசுவது காதில் விழவே இல்லை என்பது போல் அலைபேசியை காதுக்கு கொடுத்தான் தேவ்ராஜ். அடுத்த அரைமணிநேரம் அவன் அலைபேசியில் பிஸியாக இருக்க, அவன் பேசி முடிக்கட்டும் என்று மதுரா காத்திருந்தாள்.
அவன் பேசி முடிக்கவும் இரவு உணவிற்கான நேரம் நெருங்கவும் சரியாக இருந்தது. திட்டமிட்டு செய்கிறானோ என்கிற சந்தேகம் அவளுக்குள் எழத்தான் செய்தது. ஆனால் அதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்றைய நினைவில் இனிமைகண்ட மனம் அதிலிருந்து வெளியே வர மறுத்து அடம்பிடித்தது.
உணவு மேஜையில் சகோதரிகளோடு கலகலப்பாக பேசிய தேவராஜ் மதுராவிடம் ஒரு வார்த்தைக்கு கூட பேசாமல் அவளை தனிமைப்படுத்தினான். அந்நியர்கள் மத்தியில் அமர்ந்திருப்பது போல் உணர்ந்த மதுராவிற்கு உணவு தொண்டைக் குழிக்குள் இறங்க மறுத்தது. சிரமப்பட்டு உள்ளே தள்ளினாள்.
“என்ன ஆச்சு உனக்கு… ஏன் இப்போல்லாம் சரியா சாப்பிடறது இல்ல?” – மருமகளிடம் விசாரித்தாள் இராஜேஸ்வரி.
உணவை கையிலெடுத்த தேவ்ராஜ் ஒரு நொடி தயங்கினான். ஒரே ஒரு நொடி மனைவியிடம் சிதறிய கவனத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டான். உணவுவேளை முடியும் வரை அவன் மதுராவின் பக்கம் திரும்பவே இல்லை.
இரவு உணவிற்குப் பிறகு மதுரா மாடிக்கு செல்லவில்லை. அவள் மனம் துவண்டு போயிருந்தது. மீண்டும் அவனை துரத்திக் கொண்டு போய் மேலும் காயப்பட்டுக்கொள்ள விரும்பாமல் தோட்டத்துக்கு வந்து சற்று நேரம் உலாத்தினாள். டெரஸில் அமர்ந்தபடி அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் தேவ்ராஜ்.
மதுரா மாடிக்கு வந்த போது இரவு உடையிலிருந்து வேறு உடைக்கு மாறியிருந்தான். எங்கோ வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. “தேவ்… உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” – மௌனத்தை உடைத்தாள்.
“இப்போ முடியாது… வெளியே போறேன். வந்ததும் பேசலாம்” – இறுகிய குரலில் முணுமுணுத்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.
அவன் வீடு திரும்பிய போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. இரவு விளக்கின் வெளிச்சம் படர்ந்திருந்த அறையில், கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள் மதுரா. சற்று நேரம் அவள் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்ராஜ். மாயாவை நினைக்க நினைக்க அவன் மனம் எரிந்தது. ‘அப்பா… அப்பா…’ என்று அலறும் ஆதிராவின் குரல் அவன் செவியில் மோதியது. அவனுடைய முகத்தில் கடுமை கூடியது.
“மதுரா….” – வேகமாக அதட்டி எழுப்பினான். சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த மதுரா, “என்ன?” என்றாள் மிரட்சியுடன். நாசியை தீண்டிய மதுவின் நெடியில் முகத்தை சுழித்தாள்.
“எழுந்திரு…” – கட்டளையிட்டான். அதிலிருந்த ஆளுமை அவளை புரட்டிப்போட்ட உடனே போர்வையை விலக்கிவிட்டு எழுந்தாள்.
“ஏதோ சொல்லணும்னு சொன்னியே… சொல்லு…” – மிதக்கும் அவன் விழிகளை பார்த்துத்தான் அந்த இனிய செய்தியை அவள் வெளிப்படுத்த வேண்டுமா! இதற்காகத்தான் காத்திருந்தாளா? இல்லை… அவளுக்கு விருப்பம் இல்லை.
“நாளைக்கு பேசிக்கலாம் தேவ்… நீங்க படுங்க” – மென்மையாகக் கூறினாள்.
தேவ்ராஜின் பார்வை கூர்மையாக அவள் முகத்தில் படிந்தது. “சோ… அவ்வளவு ஈஸியா உன்னால எதையும் என்கிட்ட ஷேர் பண்ண முடியல?” என்றான்.
அவன் விதண்டாவாதத்திற்கு இழுக்கிறான் என்பது அவளுக்கு நன்றாக புரிந்தது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்கிற நினைவில், திரும்பிச் செல்ல எத்தனித்தாள். அவள் கையைப்பிடித்து இழுத்துத் தடுத்தான் தேவ்ராஜ்.
“கேள்வி கேட்டா பதில் சொல்லணும்… திமிரெல்லாம் காட்டக்கூடாது” என்றான். அவளுக்கு ஆயாசமாக வந்தது.
“என்ன வேணும்?” – சோர்வுடன் கேட்டாள்.
“நீ என்ன பேசணும்னு சொன்ன?”
“இப்படி குடிச்சிட்டு வந்தா எப்படி பேச முடியும்?” – எரிச்சலுடன் கேட்டவளை குறுகுறுவென்று பார்த்தவன், “வாட் அபௌட் கிஷோர்? குடிக்க மாட்டானா?” என்றான் ஏளன இளிப்புடன்.
எத்தனை முறை அடிபட்டாலும் அதே வலிதான்… மதுராவின் முகம் கன்றி சிவந்தது.
“கிஷோரை நா மறந்துட்டேன். உங்களுக்குத்தான் மறக்க முடியல” என்றாள்.
“ஓ! மறந்ததனால தான் நேத்து உன்னோட வீட்டுக்கு ஓடுனியா?”
“அந்த விஷயத்துல அண்ணி பண்ணினது தப்பு. அவங்க என்னோட கேரக்டரை கேள்விக் குறியாக்கியிருக்காங்க. என்னை அவமானப்படுத்தியிருக்காங்க… புரியலையா உங்களுக்கு… இல்ல தப்புப்பண்ணினது உங்க தங்கச்சிங்கறதுனால தப்பை என்மேல திருப்புறீங்களா?” – படபடவென்று பொரிந்தாள்.
அவள் கண்களை நேருக்கு நேர் சற்று நேரம் சந்தித்தவன், “மாயா மேல எந்த தப்பும் இல்ல… ஷி ஐஸ் இன்னொசென்ட்…” என்றான்.
அவனுடைய நியாயமற்ற கூற்றில் அதிர்ந்தாள் மதுரா. ‘இப்படி கூட ஒருவனால் பேச முடியுமா!’ என்றிருந்தது அவளுக்கு. கோபமும் ஆத்திரமுமாக அவள் அவனை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “இட்ஸ் ஆல் மை பிளான்…” என்றாள் பிசிறற்ற குரலில். மதுராவின் கண்கள் தெறித்து விழுந்துவிடும் போல் விரிந்தன.
“வாட் யூ மீன்!” – குரலே எழும்பவில்லை அவளுக்கு.
“எஸ்…. இட்ஸ்… ஆ…ல் மை பிளான்…. யூ கட் இட் நௌ?” – சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லை அவன் குரலில். சற்று நேரம் அவளுக்கு எதுவுமே புரியவில்லை. அவனை பார்த்துக் கொண்டே நின்றவளுக்கு பேச்சே வரவில்லை.
“என்ன?” – அவள் முகத்திற்கு நேராக கையை அசைத்து அவளுடைய கவனத்தை ஈர்த்தான். தலையை இடமும் வலமுமாக ஆட்டி மறுத்தவள்,
“இல்ல… பொய் சொல்லறீங்க… ங்க தங்கச்சி மேல தப்பு இல்லன்னு ப்ரூப் பண்ணறதுக்காக இப்படி சொல்லறீங்க. நா உங்கள நம்ப மாட்டேன்… நம்ப மாட்டேன்…” என்றாள் பதட்டத்துடன். உதடுகள் மட்டும் தான் இந்த வார்த்தையை சொல்லிக் கொண்டிருந்தனவே தவிர அறிவு அவன் செய்திருப்பான் என்று எடுத்துக் கூறியது. அதை ஏற்றுக்கொள்ள அவள் உள்ளம் மறுத்தது. கண்களில் கண்ணீர் மணிகள் உதிர்ந்தன. இதயம் தவித்தது. மூச்சுக்காற்று உள்ளே செல்ல மறுத்தது.
அவளுடைய கண்ணீரையும் போராட்டத்தையும் பார்த்துக் கொண்டு உணர்வுகளற்ற கர்சிலைப் போல் நின்றவன், “எல்லாமே உண்மை… நா சொன்னதை தான் மாயா செஞ்சா” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“ஏன்?” – உடைந்த குரலில் வெளிப்பட்ட ஒற்றை வார்த்தை அவள் உள்ள குமுறலை வெளிச்சம் போட்டது.
அவன் சற்று நேரம் அவளை பார்த்தான். பிறகு நிதானமாகச் சொன்னான், “எனக்கு என்ன வேணுமோ அதை நான் எடுத்துப்பேன்… பை ஹூக் ஆர் க்ரூக்…” – மீசையை முறுக்கி புன்னகைத்தான். நொறுங்கிப் போனாள் மதுரா.
அவனிடம் கத்த வேண்டும்… சத்தம் போட வேண்டும்… நியாயம் கேட்க வேண்டும் என்று ஏதேதோ தோன்றியது. ஆனால் துரும்பைக் கூட அசைக்க முடியாத நிலையில் செயலற்று நின்றாள். திகைப்பிலிருந்து மீள அவளுக்கு சில நிமிடங்கள் பிடித்தது. அதற்குள் அவன் மெத்தையில் சாய்ந்துவிட்டான்.
இப்படி ஒரு துக்கத்தை அவள் மனம் இதுவரை அனுபவித்ததில்லை. நெஞ்சை அடைப்பது போன்ற உணர்வு… ஏனென்றுதான் அவளுக்கு புரியவில்லை. ஒரு இராட்சசனிடமிருந்து இப்படிப்பட்ட செயல்கள்தான் வெளிப்படும். இதில் ஆச்சர்யப்படவும் துக்கப் பாடவும் என்ன இருக்கிறது! அவளுக்கு புரியவில்லை… மனதின் பாரமும் குறையவில்லை.
எதையோ இழந்துவிட்டது போன்றதொரு உணர்வு… எதிலோ ஏமார்ந்துவிட்டது போன்றதொரு அழுத்தம் உள்ளத்தை குடைந்தது. அப்படியா இந்த எட்டு மாதத்திற்குள் அவன் மீது அன்பையும் நம்பிக்கையையும் மலை போல் குவித்துவிட்டாள்! ஆமாம் என்று தான் தோன்றியது… இல்லையென்றால் இப்படி வலிக்காதே! நெஞ்சை அழுத்திக் கொண்டாள்.
நேற்று அவன் பேசியதெல்லாம் இப்போது அவள் நினைவில் வந்தது… அவன் கண்களில் காதல் தெரிந்ததாக நினைத்துக் கொண்டாளே! முட்டாள் பெண்… இராட்சசனுக்கு எப்படி காதல் வரும்? – விரக்தியாக புன்னகைத்தாள்.
கொலை செய்வது போல் அவளுடைய உயிர்மூச்சை இறுக்கிப் பிடித்துவிட்டு… வாழ்க்கை கொடுத்த தியாகி போல் தன்னை சித்தரித்துக் கொண்டான். அது மட்டுமா… எத்தனை முறை குத்திக் காட்டினான்! இன்று கூட கிஷோரின் பெயரை இழுத்தானே! மனம் உறுத்தவில்லையா அவனுக்கு! – எப்படி உறுத்தும். மனம் என்கிற ஒன்று இருந்தால் தானே உறுத்துவதற்கு… – மெத்தையை அடைத்துக் கொண்டு மல்லார்ந்துக் கிடைக்கும் அந்த மதுரை வீரனை இமைக்காமல் பார்த்தாள் மதுரா. அவன் மீது கொண்டிருந்த ஆசை அன்பு காதலெல்லாம் வெறுப்பாக மாறிவிட்டது போல் தோன்றியது. முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளுக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை… ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு அவளை பிடிக்காது… பார்க்கும் போதெல்லாம் எரிந்து விழுவான்… கொஞ்சமும் மதிக்க மாட்டான்… பிறகு ஏன் அவளை திட்டம் போட்டு சதி செய்து திருமணம் செய்து கொண்டான்! அதற்கான அவசியம் என்ன? – இந்த கேள்வி அவள் மனதில் எழும் போது – ‘பாரதி’ என்னும் பெயர் மின்னல் போல் மூளையில் பளிச்சிட்ட, கசந்த புன்னகை தோன்றியது அவள் முகத்தில்.
‘இந்த திருமணத்திற்கு பாரதிதான் காரணமென்றால் நேற்றைய அவனுடைய உளறலுக்கு காரணமென்ன…?’ – எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்… இதற்கு பின்னும் நிச்சயம் ஏதேனும் கபடமான திட்டம் தான் இருக்கக் கூடும். எச்சரிக்கை உணர்வோடு கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள் மதுரா.
22 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
தேவ் அவ உன்னோட வாரிசை சுமக்குறா …..அதை உன்கிட்ட சொல்ல time பாத்தா நீ அவளோட மனஸையே கொன்னுட்டு இருக்க….. அப்புறம் விஷயம் தெரிஞ்ச பிறகு என்கிட்ட ஏன் சொல்லல அப்படினு கத்தி கூப்பாடு போடுவ……உன்னை திருத்தவே முடியாது
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
அவன் எப்பவும் அப்படி தானே…. என்ன செய்ய …. மது தான் சரி செய்யனும்….
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
very super update. eagerly waiting for your next update
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
👿👿👿👿👿👿👿
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Dev maya kaga poi solrana… epo sis rendu peru life um smootha pogum
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Madhu pavam dei dev nee mattum nimmathiya thoonguran Evan edhuvenunalum pannalama 👿👿👿
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi mam
திருமணத்தின் பின் மதுராவுக்கு நிம்மதி என்பதே இல்லாமல் போய்விட்டது.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ivan raatchasan thaan , ava enna solla vara nu ketka kooda porumai illaiyaa.. poi solla kudikiraan avvalavu thaan.. avanukkulum menmai , kaadhal ellam irukku .. aana paala pona rendu thangatchingai ivanai nimmathiya irukka vida maattaanga pola..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Madhura ku suyamariyathaiye ilayaa? Evalavu kevalam padutha mudiyumo avalavum panitu kadhal nu oru reason sonna apdiye urugi karainchuduvala?
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
nice ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ore moochula padichu mudichuten. I love Dev 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Maaps namaku ivan vendam da….kadaisila naama mental ah sutthanum
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
No mappi. Naan fix agitten. Oru tadavai fix aana en peche nane keka matten 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நீ நடத்துமா நடத்து
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Very pity on madhura.dev ready for the opposite reaction
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nice update Pavam Madhura Dev Yentha Eppadi Sierran eppa tha propose Panna adukkala Eppadi aiyo suspense thanga mudiyala pa next update yeppo Varum
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thanks for a nice update.Hero is arrogant
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
How cruel he is….ratchashan
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
No no babyma.. Dev oru murattu kulanthai 🙂 titta koodathu aravanaichu poganum 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Its true……
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நீங்க தான் கொஞ்சிக்கனும் அவன😏
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Divorce pannittu poganum