Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி – 2

அத்தியாயம் 2

“என்ன அண்ணா காலேஜ் எனக்கு நீ போற மாதிரி சீக்கிரமா ரெடி ஆகிட்ட” என்றாள்

 

“ஹும் ஆமா நான் உன்ன காலேஜ்ல விட வரேன் சோ ஒன்லி” அனுயாவோ என்ன ஆயிற்று இவனுக்கு என்று யோசித்தால் விடை இல்லை…

 

கல்லூரி வளாகத்தில் மெர்சிடர்ஸ் பென்ஸ் கார் நுழைந்து உள்ளே செல்லும் வேளையில் கார்த்திக் திவ்யாவை தேடினான். அவள் ஒரு வகுப்பில் லேட்சர் எடுத்துகொண்டிருந்தாள். அவளைக் கண்டவன் தன் அழகான பல்வரிசைக் காட்டி சிரித்தான். அவள் அவன் புன்னகையில் தன்னை மறந்தால் அவன் அவளைக் கண்டுக்கொண்டான்.”என்ன திவி எனக்காகதான் வெயிட் பண்றிங்க போல ” என்றான். அவளும் “ஆம்” என்று தன் கூற்றை ஆமோதித்து பின்பு “இல்லை” என்றாள். ஆஹான் இல்லையா ,இல்லையே நீங்க பொய் சொல்றிங்கன்னு அப்பட்டமா தெரியுது” என சே கண்டுக்கொண்டானே என்று பதறினாள்.

 

“கண்கள் உன்னை தேடும்போது சுற்றும் மறந்தேன்….

உன் புன்னகையில் என்னை நானே மறந்தேன்”…..

 

அடுத்து வந்த நாட்களில் இருவரும் நல்ல நண்பர்கள் என்னும் போர்வைக்குள் தங்கள் காதலை வெளிக்காட்டாமல் இருந்தனர்(உண்மையை எத்தனை தான் மூடினாலும் ஒருநாள் வெளியில் வந்து தானே ஆகவேண்டும் பார்க்கலாம்)

 

திவ்யா தன் தந்தையுடன் வெளியே வந்த வேலை கார்த்திக்கை சந்திக்க நேர்ந்தது. “அவன் பார்க்கும் போதெல்லாம் ஒன்லி பேக்கிரௌண்ட் சாங்”என்ன அவளது நிலைமையோ பரிதாபம் அவனை ஒதுக்கவும் முடியாமல் தவித்தாள்.

 

“என்ன திவி” இந்த பக்கம் “என்ன திவியா”என அவள் மனதில் நினைத்தாள்.

 

என்ன இன்னைக்கு ஸ்பெஷல் சூப்பரா இருக்கிங்க என, தன்னிலை உணர்ந்து  நீங்க ஒரு நல்ல டாக்டர்கிட்ட கண் செக்கப் போங்க என்றாள்.

 

அட அட நல்ல ஜோக் நான் நாளைக்கு சிரிக்கிறேன் என்றான். அவள் முறைத்தாள் ஹே கூல் கூல் என திவ்யாவின் அப்பா அருகில் வரவும் “வணக்கம்” என்றான். திவ்யா கார்த்திக்கை அறிமுகப் படித்தினால் மூவரும் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டு சிறிது நேரம் சென்று அவ்விடத்தை விட்டு கிளம்ப ஆயத்தமானார்கள்.

 

கார்த்திக் முழுவதும் மும்பை காலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தவன் எப்போழுதும் அவனை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.காதல் என்றும் அவனை நெருங்கியதே இல்லை அவன் வர விட்டதுமில்லை ஆனால் திவ்யாமேல் காதல் கொண்டான் (சொல்லியும் அழகையும் பார்த்து வருவதோ காதல் அல்ல மனதை பார்த்து வருவதே காதல் அந்த நோடி புரிந்தது)

 

கார்த்திக்கிற்கு வீடு வந்தது கூட தெரிய வில்லை.அவன் தூங்க செல்ல திவ்யா அவனை இம்சித்தால் “ஹேய் என் செல்ல ராட்சசி ,ஏன்டி இப்படி இம்ச பண்ற நீ மட்டும் இங்க இருந்த நடக்கிறது வேற சரி எப்பவும் போல ஒரு முத்தம் கொடு …நோ இன்னைக்கு மட்டும்  லிப்சல ஓகே வா ” என்று அவள் புகைப்படத்தை அலைபேசியில் வைத்துக்கொண்டு ஏதோ அவளே நேரில் இருப்பதுப்போல் நினைத்துக்கொண்டு உரையாடினான்….பேபி ஐ லவ் யூ என்றான்….(ஐயோ யாரு பெத்த புள்ளையோ இப்படி அர்த்த ராத்திரியில் பொலம்புதே) .சட்டேன்று  அவன் மூளையில் மின்னல் வெட்ட அவன் யோசித்தான் அவளுக்கு வேறு காதல் ஏதாவது இருந்தால் நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது என்று எண்ணி அந்தெண்ணத்தை பின்னுக்கு தள்ளினான்.

 

அவளது வீட்டிலோ மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பிக்க …அப்போது அவள் அம்மா கூறுகையில் அதிர்ந்தாள்…சட்டேன்று “நான் இருக்குறது பாரமா இருக்கா” என்று கேட்டே விட்டாள். ஆனால் அவளுக்கு விளங்கவில்லை தான் ஏன் அவ்வாறு கேட்டோம் என்று.

 

அடுத்த நாள் கார்த்திக் ஒரு திட்டம் தீட்டினான்,அவளுடைய தன் மீதான காதலை அறிய… அப்படி என்ன திட்டமாக இருக்கும்….

 

வரும் அத்தியாயத்தில் காணலாம்…

 

“மலர்களை அள்ளி வந்து … மகிழ்வுடன் கையில் தந்து மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன்”…..

 

 

 

 

 
Comments are closed here.

error: Content is protected !!