Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 28

அத்தியாயம் – 28

சாப்பிட்டு முடித்த அடுத்த நொடி உஷா தொடங்கினாள்.,

 

“எழில் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்”

 

எழில் தர்மசங்கடமாய் ‘அமைதி’யையும், அம்மாவையும் பார்த்தான்.

 

“எழில் உஷாவை வெளியக் கூட்டிட்டு போ!  போய் எல்லாத்தையும் சொல்லு. நாம எதுக்காக இங்க இருக்கோம், உஷாவை ஏன் இங்க கொண்டு வந்தோம், லாயர்கிட்ட இருந்து என்ன எதிர் பார்க்கிறோம்., சகலத்தையும் சொல்லு.

அதன் பிறகு உஷாவை அவ வீட்ல விட்டுட்டு வா”

 

எதுவும் பேசாமல், அம்மாவிடம் மட்டும் தலையாட்டிவிட்டு, “வா உஷா போகலாம்” என எழுந்தான். மந்திரத்தில் கட்டுண்டவள் போல் உஷாவும் பின்னாலேயே சென்றாள்.

 

சென்னைப் பல்கலைக்கழக மரநிழல். எதிர்புறமுள்ள மெரீனாவிலிருந்து வந்த கடற்காற்று தாலாட்டியது.

 

“உஷா, நீ என்னை லவ் பன்றியா?”

 

படக்கென எழில் இப்படிக் கேட்பான் என உஷா கொஞ்சம் கூட நினைக்கவில்லை. வீட்டில், என்ன சொல்லச் சொல்லி அனுப்பினால், இவன் என்ன கேட்கிறான்…

 

“இதையா அங்க கேக்க சொன்னாங்க”

 

“இதுக்கு நீ சொல்ற பதில்லதான் இருக்கு, நான் எந்த அளவு உன்கிட்ட சொல்லலாம்ங்கறது”

 

“நீ என்ன நினைக்கிற எழில்”

 

“ஒரே வார்த்தைல சொல்லனும்னா, நான் உன்னை நினைக்கிறேன் உஷா. ஆனா, அது நடக்காது, கஷ்டம்னு எனக்கு தெரியும். அடிப்படையிலையே, உங்க பழக்க வழக்கம் வேற, எங்க பழக்க வழக்கம் வேற”

 

” பழக்க வழக்கத்த அடிப்படையா வச்சுத்தான், மனித இனம் வளர்ந்துருக்கனும்னா, அது அப்படியே இருந்துருக்க வேண்டியதுதான் எழில். உன் மனசத் தொட்டு சொல்லு, என் எண்ணம் உனக்கு தெரியாதுன்னு”

 

” தெரியும் உஷா, இருந்தாலும் வாயால சொல்லாம எப்படி!?”

 

“உனக்கே இது அபத்தமா தெரியல. மனசுதான் எழில் பேசும். அதனாலதான், இந்த உலகத்ல இன்னும் அன்பு நிறைஞ்சிருக்கு. மனசு ஊமையா இருந்து, என்னதான் கத்தினாலும் அதுல ஒரு பிரயோஜனமுமில்ல”

 

“பேசுறதுக்கு நல்லா இருக்கும் உஷா ஆனா, நடைமுறைனு வரும் போது….

 

” எழில், உனக்கு என்னை பிடிக்கலைனா, நேரடியா சொல்லலாம்”

 

“பிடிக்கலையாவா… ஹஹ ஹ உலகத்துலையே, கடத்தி தூக்கிட்டு வந்த பொண்ணுகிட்ட, அதுவும் நாலு மணி நேரத்துல உயிரையே ஒப்படைச்ச ஒருத்தன் நானாதான் இருப்பேன்”

 

” தெரியும் எழில், என்னை விட்டுட்டு நீ போகும்போது அந்த கண்ல அதை நான் பாத்தேன். அதே கதைதான இங்கையும். இப்பவாவது சொல்லு, யார் நீங்கள்?”

 

“உத்திரமேரூர் பக்கத்துல, பூங்குளம்ங்கறது எங்க கிராமம். உனக்கு சமைச்சு போட்டாங்களே, அவங்க எங்க அம்மா. அமைதியா இருந்தாரே அவர் எங்க அண்ணன் அருண். நாம வந்த போது கதவை திறந்தாங்களே அவங்க எங்க வருங்கால அண்ணி., மிகப் பெரிய கோடீஸ்வரரோட ஒரேப் பொண்ணு. எனக்கும் எங்கண்ணனுக்கும் ஒரே பொண்ணு இருக்குற வீடா கிடைச்சுருக்கு. உனக்கு காபி கொடுத்தாங்களே அவங்க என்னோட தங்கை மாதிரி. மாதிரி என்ன தங்கையே தான். அவங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்னா… எங்கண்ணன் படிச்ச காலேஜ்ல….” என்று தொடங்கி அனைத்தையும் சொன்னான்.

சொல்லிவிட்டு கேவி கேவி அழுதான்.

 

” கூட பொறந்த தங்கச்சி இருந்துருந்தா கூட அவ்வளவு பாசமா இருந்துருப்பாளாங்கறது சந்தேகம்தான். ஒரு சின்ன உதாரணம் சொல்றேன் பாரேன்., எங்கம்மாவ அடிக்கடி ‘ ஆத்தா நீ கல்லு கணக்கா, இருந்தா நா எப்படி என்  அண்ணன்களோட இருக்கறது. உனக்கு எதுனா ஒடம்பு சொகமில்லன்னாதான், எங்காத்தா என்னைய இங்க விடும். ரெண்டு நாளைக்கு மேல, நீ நல்லாருந்த நானே மருந்து வச்சுபுடுவேன். சாக்றத’ னு சொல்லும். அந்த அளவுக்கு எங்க மேல பாசம். அந்த பச்ச புள்ளைய, பூவை…. தாங்க முடியாமல் கேவினான் எழில்.

 

கண்களில் தாரை தாரையாக கண்ணீரை வழிய விட்ட படி எழிலைத் தேற்ற வழியின்றி தவித்தாள் உஷா!

 

 

தன்னை கன்ட்ரோல் செய்து, எழில் தொடர்ந்தான்…

“எங்க அண்ணன் பல விஷயத்தை மனசுல நினைச்சுருக்கு. அதெல்லாம் சாதாரணமா எல்லோராளையும் நடத்திட முடியாது. போலீஸ் லெவெல்ல, நீதிமன்றங்கள் லெவல்ல, சட்டத்தின் இண்டு இடுக்குல, தேவையான தகவல்களை தேவையான நேரத்துல கைல கிடைக்க, இப்படி பல வழிகள்ல திறமையும் அனுபவமும் உள்ள மனிதர் வேண்டும். முக்கியமா அவர் மனிதரா இருக்கனும். இதை எல்லாத்தையும் முழுமையா கொடுக்கற தகுதி உங்கப்பாட்ட இருக்கு. உங்கப்பாக்கு கொடுத்த லெட்டர்ல எங்களுக்கு நடந்த கொடுமைகளக் கூட ஒரு வேளை எங்கண்ணன் குறிப்பிட்டுருக்கலாம். ஒருவேளை உங்கப்பா மறுத்துட்டா, அட்லீஸ்ட் எங்களுக்கு தேவையான தகவல்களோட நாங்க விலகிப்போம். ஆனா, உங்கப்பா போலீஸ்ல எங்கள காமிச்சு கொடுத்துடக் கூடாதுல்ல, அதுக்காக ஒரு பாதுகாப்புக்காக, வார்னிங்கா, உன்னை கடத்துனது எங்களுக்கு உபயோகமா இருக்கும். சுருக்கமா சொன்னா உங்கப்பாதான் எங்க திட்டத்துக்கு அடித்தளம். அதான் உன்னை கடத்த இவ்வளவு மெனக்கெடல். இப்ப புரியுதா, நான் ஏன் உன்னை லவ் பன்றியானு கேட்டேன்னு.

உங்கப்பாவை, எங்கண்ணனுக்கு தேர்ந்தெடுத்து கொடுத்தது எங்க அண்ணி. அவங்கப்பாவிற்கு, உங்கப்பா மூலமா கேஸ் நடந்துருக்கு. அப்போ அவங்க வீட்டுக்கு, உங்கப்பா அடிக்கடி வந்துருக்கார். அவர் குணத்தை பாத்து அண்ணன்ட்ட சொல்லிருக்காங்க. ஆனா, எனக்கு ஒரு தேவதை கிடைப்பானு அவங்க நினைச்சுருக்க மாட்டாங்க. எங்க அண்ணியோட அப்பாவும் ரொம்ப செல்வாக்கான ஆள். அரசாங்க லெவல்ல எங்களுக்கு உதவி தேவைப்பட்டா செய்ய போறது அவர்தான். அதுவுமில்லாம, எவ்வளவு வேணா செலவு பண்ண அவர் தயாராகவும் இருக்காரு.

 

” உங்கண்ணன் என்னதான் மனசுல நினைச்சுருக்காரு”

 

” தெரியல… எங்களுக்கே நாளைக்குதான் தெரியும். உங்கப்பாட்டருந்து கிடைக்கிற தகவலை வச்சுத்தான்னு நினைக்கிறேன். நீ எனக்கான உஷாவா இருக்கறதும், எங்களுக்கான உஷாவா இருக்குறதும் உன் இஷ்டம். தி பால் இஸ் இன் யுவர் கோர்ட்”

 

உஷா தீர்மானமாய் சொன்னாள்., ” எங்கொழுந்தனார்க்கு உதவி செய்றதா தீர்மானிச்சுட்டேன். எங்கப்பா, மறுத்தாலும் அவரை வழிக்கு கொண்டு வர்ரதுக்கு நானாச்சு. நீங்க கவலையே படாதீங்க”

 

“ஆண்டவன்தான் எங்கம்மாவுக்கு ரெண்டு நல்ல மருமகளைக் கொடுத்துருக்கான். உனக்கு ரொம்ப நன்றி உஷா”

 

“ச்சீப்., போடா”! என்றால் பொய்க் கோபத்துடன்.
Comments are closed here.

error: Content is protected !!