Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kanalvizhi 77

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 77

அத்தியாயம் – 77

வாழ்க்கையில் யாரெல்லாம் அதிகமான விமர்சனத்துக்கு உள்ளாகிறார்களோ… அல்லது யாருடைய வாழ்க்கை கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகிறதோ அவர்களையெல்லாம் கவனித்துப் பார்த்தால் அவர்களிடமெல்லாம் ஒரு கோபமிருக்கும். எந்த நேரத்தில் எதை சொல்லி யார் நம்மை காயப்படுத்துவார்களோ என்கிற பயம் இருந்துக் கொண்டே இருக்கும். அந்த பயம் பல நேரங்களில் கோபமாக வெளிப்படும். அந்த கோபமே அவர்களுடைய கேடயம். தன்னுடைய மென்மையான உடலை பாதுகாத்துக்கொள்ள தனக்குத்தானே ஒரு கடுமையான ஓடை உருவாக்கிக்கொள்ளும் ஆமை. அது போல இவர்களும் தங்களுடைய மென்மையான மனதை மற்றவர்களுடைய சொல்லடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தனக்குத்தானே ஒரு ஓடை உருவாக்கிக்கொள்கிறார்கள். அந்த ஓடுதான் அவர்களை பாதுகாக்கிறது. அப்படி ஒரு ஓட்டுக்குள் தான் தேவ்ராஜும் பதுங்கியிருந்தான்.

தந்தையின் நெறிதவறிய வாழ்க்கை, அவனுடைய ஒழுக்கத்தை கேள்விக் குறியாக்கியது. அவர் தன்னுடைய வாழ்க்கையில் வைத்துக்கொண்ட சர்ச்சை தீ அவனையும் தீண்டிப் பார்த்தது. அந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க அவன் தன்னை சுற்றி ஒரு அகழியை அமைத்துக் கொண்டான். அதை தாண்டி அவனால் வெளியே வர முடியவில்லை… ஆனால் மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் அகழிக்கும் இல்லை… ஆமை ஓட்டுக்கும் இல்லை அல்லவா! அவன் மனம் மதுராவை தேடி ஓடியது.

அகழிக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்த தேவ்ராஜ், அவளாவது தன்னை நாடி வருவாளா என்று எதிர்பார்த்தான். அவளோ கிஷோர் பக்கம் சாய்ந்துவிட்டாள். அவளாக எடுத்த முடிவு அல்ல என்று தெரிந்தும்… பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்திருக்கிறாள் என்று புரிந்தும்… அவன் மனம் வலிக்கத்தான் செய்தது. அந்த வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள தன்னுடைய கேடயத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். கோபத்தை கொட்டினான்.

அவனுக்கு தெரிந்தது… அல்லது தெரிந்ததாக அவன் நினைத்துக் கொண்டிருப்பது என்னவெனில், மதுராவுக்கு பிடித்த மாதிரி அவன் இல்லை. அவனால் மாறவும் முடியாது. அதே சமையம் அவளுடைய பிடித்தமின்மையை… விலகலை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இந்த முரண்பாட்டை கையாள அவனுக்கு கோபம் தான் கைகொடுத்தது.

அவளை உருட்டி மிரட்டி தனக்கு பிடித்த மாதிரி நடக்கச் செய்தான். அவளுடைய பேச்சும் காதலும் உண்மை அல்ல என்று அவனுக்கு தெரிந்தாலும், அந்த பொய்க்காக ஏங்கும் பரிதாப நிலையில்தான் அவன் இருந்தான். அதற்கும் வேட்டு வைத்தது அன்று அவன் செவியை எட்டிய செய்தி.

திலீப்பின் கடுமையான முயற்சியால் கிஷோருக்கு பெயில் கிடைத்துள்ளது. அவனை பின்னாலிருந்து வலியுறுத்தியது மதுரா என்று தெரிந்த போது. துக்கமும் வேதனையும் அவன் மனதை அழுத்தியது. ரணவேதனை என்று சொல்வார்களே! அப்படி ஒரு வேதனை அவன் மனதை பிழிந்தது. அவனுடைய விருப்பத்திற்கும்… உணர்வுகளுக்கும் அவள் கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதானா! – அவனுடைய முகம் இறுகியது. கோபமும் ஆத்திரமும் கிளர்ந்தெழுந்தது. கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ‘நமக்கு பிடிக்காது என்று தெரிந்தும் திலீப்பை கூட்டு சேர்த்துக் கொண்டு கிஷோருக்கு உதவி செய்திருக்கிறாள். அதற்கு என்ன அவசியம்? அவன் யார் இவளுக்கு…!’ ­- உள்ளே இருக்கும் மிருகம் உறுமியது.

அன்று வழக்கத்தைவிட வெகு விரைவாகவே வீட்டுக்கு வந்துவிட்டான் தேவ்ராஜ். முகம் கருத்து களையிழந்து போயிருந்தது. உடல் வியர்வையில் குளித்திருந்தது. சிவந்திருந்த கண்களில் ஒருவித தீவிரம் தெரிந்தது… அல்லது வெறி என்று கூட சொல்லலாம்… மகனைக் கண்டு துணுக்குற்ற இராஜேஸ்வரி, “என்னப்பா? ஏதாவது பிரச்சனையா?” என்றாள்.

தாயின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தவன், “மதுரா எங்க?” என்றான்.

“வெளியே போயிருக்கா. ஏம்ப்பா?”

“ஓ! எப்ப போனா?”

“காலையில”

“ரைட்…” – சோபாவில் அமர்ந்தான். உடை மாற்றவில்லை… ரெப்ரெஷ் செய்யவில்லை… வேட்டைக்காரன் போல் அவன் அப்படி அமர்ந்திருப்பது இராஜேஸ்வரியின் வயிற்றை கலக்கியது. தன்னுடைய அறைக்குச் சென்று ரகசியமாக மருமகளுக்கு தொடர்புகொள்ள முயற்சி செய்தாள். முயற்சி மட்டும்தான் செய்யமுடிந்தது. ஏனென்றால் மதுராவின் அலைபேசி அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

‘எங்க போயி தொலைஞ்சா!’ – பலமுறை முயற்சி செய்துவிட்டு எரிச்சலுடன் வெளியே வந்து, “டிரஸ் சேஞ்சு பண்ணிக்கிட்டு வாயேம்ப்பா… காபி கொண்டு வரேன்” என்று அவனுடைய மனநிலையை மாற்ற முயன்றாள்.

“வேண்டாம்… ஐம் ஆல்ரைட்… நீங்க உள்ள போங்க… ரெஸ்ட் எடுங்க…” – ரிமோட்டை கையிலெடுத்து டிவியை போட்டான். திரையில் ஏதோ ஓடிக் கொண்டிருந்தது. அவனுடைய கவனம் அதில் இல்லை என்பது அவனுடைய வெறித்த பார்வையிலேயே தெரிந்தது.

நேரம் ஓட ஓட தேவ்ராஜின் முகம் ஜிவுஜிவுவென்று சிவந்துக் கொண்டிருந்தது. இராஜேஸ்வரி வயிற்றில் நெருப்பைக் கட்டி கொண்டு, உள்ளேயும் வெளியேயுமாக நடந்து கொண்டிருந்தாள்.

கிஷோர் வீடு வந்து சேரும்வரை தோழிக்கு துணையிருந்து தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள் மதுரா. ஒருவேளை பெயில் கிடைக்காமல் போய்விட்டால் உடைந்து போய்விடுவாளே என்கிற பயமிருந்தது அவளுக்கு. திலீப் போன் செய்து நல்ல செய்தியை சொன்ன பிறகுதான் அவளுக்கு மூச்சே வந்தது. அதன்பிறகு சற்று நேரத்திலேயே ஆண்கள் இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். அவர்களிடம் கேஸ் நிலவரத்தைப் பற்றி கேட்டு விவாதித்துவிட்டு அவள் வீட்டுக்கு வந்த போது சூரியன் முற்றிலுமாக மறைந்துவிட்டான்.

‘எப்பவும் தாமதமாக வீட்டுக்கு வரும் தேவ் இன்றைக்கு பார்த்து சீக்கிரம் வந்துவிட்டானே!’ – கணவனுடைய காரை பார்த்து எச்சில் விழுங்கியவள் சற்று தயக்கத்துடன் தான் வீட்டுக்குள் நுழைந்தாள். தேவ்ராஜ் டிவி பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பது ஓரக்கண்ணில் தெரிய, அந்த பக்கம் திரும்பாமலே மாடிக்கு செல்ல எத்தனித்தாள்.

“ஏய்…” என்கிற கடுமையான குரல் அவளை தடுத்தது. அந்த ‘ஏய்’ என்ற வார்த்தையும்… அவனுடைய தொனியும்… பச்சை மிளகாயை கடித்தது போல் சுர்ரென்றிருந்தது மதுராவிற்கு.

“டைம் என்ன?” – அவனுடைய குரலில் தெரிந்த மாற்றமும்.. மிதக்கும் கண்களும் அவளுக்குள் எச்சரிக்கை மணியை அடிக்க, சற்று நிதானித்தாள்.

“மேடம் இவ்வளவு நேரம் எங்க போயிட்டு வர்றீங்க?” – ஏளனம் தெறித்தது அவன் குரலில்.

“ஃபிரண்ட பார்க்க” – மெல்ல முணுமுணுத்தாள்.

“ஃபிரண்ட பார்க்கவா… இல்ல அவ புருஷனை பார்க்கவா?” – விஷத்தை கக்க அவன் எப்பவும் தயங்குவதே இல்லை என்பதை இன்னொருமுறை நிரூபித்தான். செவியில் வந்து பாய்த அமிலம் அவள் இதயத்தை பொசுக்கியது. வெறுப்புடன் அவனைப் பார்த்தாள். கட்டுப்படுத்த முடியாத கோபம் ஆட்கொள்ள,

“ரெண்டு பேரையும்தான்” என்று அழுத்தமாகக் கூறினாள். தேவ்ராஜின் முகம் பயங்கரமாக மாறியது. பட்டென்று அவள் கன்னத்தில் அடித்தான். வேலையாட்களெல்லாம் திரும்பிப் பார்த்தார்கள். கன்னத்தை தாங்கிப் பிடித்தபடி அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் மதுரா. அவமானத்தில் குன்றியது அவள் மனம். கண்களில் திரண்ட கண்ணீர் கன்னத்தை நனைத்தது.

“மேல போ…” – சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தான். என்ன அதிகாரம்!

கோபமும் ஆற்றாமையும் உந்தித்தள்ள, “சந்தேகமா? என்னைய சந்தேகப்படறீங்களா… இல்ல உங்களை நீங்களே சந்தேகப்படறீங்களா?” என்றாள் நடுங்கும் குரலில்.

சுருக்கென்று தைத்தது அவளுடைய கேள்வி. அதிலிருந்த உண்மை அவனைச் சுட்டது. அவளை தவறானவள் என்று அவன் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனாலும் ஒரு பாதுகாப்பின்மையும் பயமும் அவன் மனதில் உறைந்து போயிருந்தது. அது ஏன் என்று எண்ணிப் பார்த்தால்… சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் அவனுக்குள் ஒரு தாழ்வுமனப்பான்மை இருப்பதை அறிந்துகொள்ளலாம். அந்த தாழ்வுமனப்பான்மைதான் தன்னைவிட அந்த கிஷோர் ஏதோ ஒருவிதத்தில் உயர்ந்தவன் என்று எண்ண வைத்தது. அந்த தாழ்வுமனப்பான்மைதான் அவனுடைய கோபத்திற்கு வித்திட்டது. தெரிந்தோ தெரியாமலோ மதுரா அதை சுட்டிக்காட்டிவிட்டதில் திகைத்துப் போனான் தேவ்ராஜ்.

தனிமையில் அவன் கொடுத்த அத்தனை இன்னல்களையும் சகித்துக் கொண்டவளுக்கு, வேலைக்காரர்களுக்கு முன் அவன் கைநீட்டி அடித்துவிட்டதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “நீங்க கிஷோரைப் பார்த்து பயப்படறீங்க… பொறாமைப்படறீங்க… அதான் அவனை துரத்தித் துரத்தி அடிக்கிறீங்க. அவனை பழிவாங்குறீங்க” என்று படபடத்தாள்.

“அவனை பத்தி நா யோசிக்கவே இல்ல… எனக்கும் அந்த கேஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உன்கிட்ட இதை எத்தனை தடவ சொல்றது?” – எரிந்து விழுந்தான்.

“ஹா… குழந்தைகூட நம்பாது இந்த பொய்யை…” – அலட்சியமாக தலையை சிலுப்பியவள் மறுநொடியே வலியில் முகம் சுளித்தாள். அவளுடைய மெல்லிய கரம் அவனுடைய இரும்புப் பிடியில் சிக்கியிருந்தது.

“சோ… நா சொல்றது பொய்… அந்த ஃபிராட் சொல்றது உண்மை… ம்ம்ம்?” – பளபளக்கும் கண்களுடன் அடி குரலில் உறுமினான்.

“தேவ்… கையை விடுங்க…” – அவனுடைய பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடினாள். கை ஒடிந்துவிடும் போலிருந்தது. கண்களில் கண்ணீர் திரண்டது… “தேவ் ப்ளீஸ்…” – அவள் குரல் உடைந்தது.

“பதில் சொல்லு…” – இரக்கமற்ற இராட்சசனாய் மாறியிருந்தான்.

“என்ன… என்ன பதில்…? ஸ்… ஆ… ப்ளீஸ்…” – தவித்தாள்.

“சொல்லு… இப்ப யார் பேச்சை நம்புற…?” – பல்லைக்கடித்தான். பிடி மேலும் இறுகியது.

“ஆஆ…” – துடித்துப் போய்விட்டாள். மணிக்கட்டு எலும்பு முறிந்து போய்விட்டது என்று தோன்றியது. மனதில் மிஞ்சியிருந்த தைரியம் முற்றிலும் அற்றுப் போய்விட வெடித்து அழுதாள்.

“ஸ்பீக் அவுட்…” – கத்தினான்.

“உங்… உங்கள… உங்களைத்தான் நம்….நம்பறேன்… நம்பறேன்… நம்…ப…றேன்… ஐயோ…”

“அப்புறம் ஏன் அங்க போன?” – பிடி லேசாக தளர்ந்தது.

“ஐம் சாரி… சாரி… தேவ் ப்ளீஸ்… வலி…க்குது… ஆ… விடுங்க”

“எனக்கும் வலிச்சது மதுரா… இப்பவும் வலிக்குது…” – சட்டென்று இழுத்து அவளை கீழே தள்ளினான். நிலைகுலைந்துபோய் சோபாவில் விழுந்தாள் மதுரா.

“அவ்வளவு தைரியமா?” – தன் ஆறடி உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று உறுமினான். கோழிக்குஞ்சு போல் சோபாவில் நுடங்கி கிடந்த மதுராவின் உடல் குலுங்கியது.

“கிஷோர்… திலீப்… சோனியா… எல்லாரையும் பத்தி யோசிக்கற… என்னை பத்தி எப்ப யோசிக்க போற?”

“அந்த திலீப் என்ன பெரிய ……….ஆ? டாமிட்… இதுவரைக்கும் அவனை எதுவும் பண்ணனும்னு எனக்குத் தோணல… ஆனா இப்ப தோணுது… அந்த கிஷோர் திலீப்… ரெண்டு போரையும் சேர்த்து வச்சு அப்டியே…” – “தே…வ்…” – இராஜேஸ்வரியின் அதட்டல் அவனுடைய ஆங்கார பேச்சில் குறுக்கிட்டது.

மருமகளுக்காகக் காத்திருந்துவிட்டு அப்போதுதான் உள்ளே சென்றாள். இவள் வந்ததும் தெரியவில்லை. இவர்கள் சண்டைப் போட்டுக் கொண்டதும் தெரியவில்லை. ரெஜினா மட்டும் உள்ளே வந்து தகவல் கொடுக்காவிட்டால் இன்னமும் கூட தெரிந்திருக்காது.

வெறிபிடித்தவன் போல் இவன் கண்டதையும் கத்தி கொண்டிருக்க மதுரா சோபாவில் குப்புறக் கிடந்தாள்.

“என்னப்பா பேச்சு இது? தினமும் இந்த வீட்ல ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டே இருக்கணுமா?” – கண்டிப்புடன் கேட்டாள்.

“நா எந்த பிரச்சனையையும் உள்ள கொண்டு வர்றது இல்ல… இவ… உங்க மருமக… இவளை கேளுங்க… என்ன… பண்ணினான்னு கேளுங்க… என்னை ஹர்ட் பண்ணிகிட்டே இருக்கா… கேளுங்க அவளை…” – பேச்சில் மாற்றம் தெரிந்தது. இழுத்து இழுத்து சற்று குளறிப் பேசினான்.

“சரி நா கேட்டுக்கறேன். நீ உள்ள போ…”

“நோ… நா போமாட்டேன். எம்முன்னாடியே கேளுங்க. எங்க போயிட்டு வந்தான்னு கேளுங்க…”

“எனக்கு இன்னைக்கு தெரிஞ்சாகணும். அவ மனசுல என்ன இருக்குன்னு எனக்கு இன்னைக்கு முழுசா தெரிஞ்சாகணும். ஏய்… எந்திரிடி… எந்திரி…” – அவளிடம் நெருங்கினான். அவனைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய இராஜேஸ்வரி, ஏதோ தோன்ற சட்டென்று மருமகள் பக்கம் திரும்பினாள். அவளிடம் அசைவு தெரியவில்லை. எக்குத்தப்பாக விழுந்துக் கிடப்பது போல் தோன்றியது. சட்டென்று மகனை உதறிவிட்டு மருமகளிடம் பாய்ந்தாள்.

“மதுரா… மது… மதூ…” – எழுப்பினாள்… அவள் எழவில்லை என்றதும் தானே அவளை திருப்பினாள்… “ஐயோ…! கடவுளே!” – வீடே அதிர்ந்தது அவளுடைய பெருங்குரலில். சட்டென்று திரும்பிய தேவ்ராஜின் இதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது. ரெத்தம்… அவ்வளவு ரெத்தம்.. எப்படி! சோபாவில் தானே! – ஒன்றுமே புரியவில்லை.

“ம…மது… ம்ம…மதூ…” – நாகுழற… உடல் நடுங்க மனைவியிடம் விரைந்தான்.

“தொடாதடா… தொடாத அவளை… தொடாத…” – மகனை வெறுத்து விரட்டினாள் இராஜேஸ்வரி. அதற்குள் வீடே கூடிவிட்டது. ஒருவர் ஈரத்துணியை எடுக்க… இன்னொருவர் மருந்தை எடுக்க… தேவ்ராஜை ஒதுக்கி ஓரமாகத் தள்ளிவிட்டு, மயங்கி கிடந்தவளுக்கு அவசர அவசரமாக முதலுதவி செய்யப்பட்டது.

“ஏய்… நகரு… நகரு எல்லாரும்… ஷி இஸ் மை வைஃப்… மூவ்…” – அவளை சூழ்ந்திருந்த மனித வளையத்திற்கு வெளியே நின்று அதட்டினான்… புலம்பினான்… ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. அனைவருடைய கவனமும் மதுராவின் மீதே இருந்தது.

“என்ன தேவ் பாய் இப்படி பண்ணீட்டிங்க? அவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல… கண்ணு முழிக்கவே மாட்டேங்கிறா…” – மாயா பயத்துடன் தமையனிடம் பாய்ந்தாள்.

“கண்ணு முழிக்க மாட்டேங்கிறாளா! நோ… அவளுக்கு ஒண்ணும் இல்ல… இப்படி கூட்டமா சுத்தி நின்னுட்டு இருந்தா எப்படி முழிப்பு வரும்… லெட் மீ டாக் டு ஹர். என்னோட குரல் கேட்டா முழிச்சுப்பா… ஷி வில் பி ஆல்ரைட்… எல்லாரையும் நகர சொல்லு… விலகி போகச்சொல்லு…” அவன் தங்கையிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டம் விலகியது. யாரோ ஒருவன் மதுராவை தூக்க முற்பட்டான்.

“ஏய்… டோன்ட்… டோன்ட் டேர் டு டச் ஹர்…” – அவளை தொட துணியாதே என்று அவ்வளவு போதையிலும் விழிகள் சிவக்க கர்ஜித்தான். அவன் பயந்து பின்வாங்கினான்.

“ஷி இஸ் மை வைஃப்… அவளுக்கு ஒண்ணும் இல்ல… மது… மதூ… கெட் அப்…” – தள்ளாட்டத்துடன் மனைவியிடம் நெருங்கினான்.

“டேய்… போடா அந்த பக்கம்… ஏய்… நீ தூக்கு… சீக்கிரம் ஹாஸ்ப்பிட்டல் கொண்டு போகணும். ட்ரைவர் வண்டியை ரெடி பண்ணிட்டானா?” – இராஜேஸ்வரியின் குரல் ஆளுமையுடன் ஒலிக்க, உடனடியாக மதுரா காரில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாள்.

32 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Bavan Mala says:

  Hello Sis.
  Superb update..thank u.

  Profile photos..enna tv serial ???
  Ounga story kku yetha maathiri nalla selection😉

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Deepa I says:

   I also need who photo sid

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Bavan Mala says:

    Hii Deepa
    It s a tv serial from Pakistan ” Bashar Momin”

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Niveta Mohan says:

  Hair sis.. Kutties epping irukanga.. Fever sari agitu thaane…

  Dev.. Enna kaariyam pannita…. …
  Madhu baby ku yethum aagituma sis…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kani Ramesh says:

  Ena sis ipadi agiduchi… madhura vum deva purinjika try panala ivanum avakita express panala… hmmm baby ku ethavathu agiduma sis romba kastama epi

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jayashree swaminathan says:

  Oh god! What a beast he is!

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Suganya Samidoss says:

  மிகுந்த சிரமங்களுக்கிடையேயும் கதையில் தொய்வில்லாமல் வழங்கயிருக்கின்றீர்கள் நித்யா. அருமை. Take care of your children’s health. Thank you

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  வாரிசை அழிச்சிட்டானா?…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ambika V says:

  Dev villana parkka poranga ellorum 😁

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  HOOOOOOO PAWAM
  NICE UD

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Hi sis kuttys eppati irukkangappa utampukku paravalaiya and super epic

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  தேவ்வின் மனநிலை மாறுவதற்கான திருப்புமுனை சம்பவம் இதுவா,வருத்தமான பதிவு.

  நன்றி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Reena thayan says:

  Hello friend how is your children hope they are oaky
  Dev eppa drink pannan vanthathula erunthu veliyathane erunthan
  maduravukku eppadi adipaddichchu
  Thank you for the update

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Kuttys eppadi itukaga nithya .. ippo ok vaa

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Paravalla Lakshmi…Fever ok… Cold mattum irukku…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Tharani Rajan says:

  குழந்தைகள் நலமா? இந்த சமயத்திலும் உங்களது பதிவு என்னை நெகிழ வைத்தது

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Nalamaaga ullaargal. Mikka Nandri thozhi

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Maha Sri says:

  Pls don’t say baby got aborted

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Kandippa… adhu madhirinadakkaadhu…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Deepa I says:

  How is ur children sis? Madhu pavam
  Why he do this to her love madura? Revil the truth to madura tht dev loves her as soon sis. Waiting for ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   They are gud now… Next epi lerundhu diff Dev and diff Madhura…

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma Deepak says:

    Wow that’s nice to hear sis.. take care of kids..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
     admin says:

     Thank you Uma… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Radha Karthik says:

  It’s very hurting mam…. Even for story I couldn’t read this kind of incidents….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   I understand.. Sorry for hurting you…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Priya says:

  அட கடவுளே பாவம் மது😭😭😭

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  Aiyo madhura ku enna achi nu theriyaleye…..oru velai karu kalainji irukumo😢

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   No… That will never happen…

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    I too wish that would never happen

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vinayagam Subramani says:

  மிக்க நன்றி..
  இந்த பதிவுக்கு.. உங்கள் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் .
  தேவ் உன் கோபத்தின் விலை என்ன என்று பார்த்தாயா???மது பாவம்..விருவிருப்பான பதிவு.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   குழந்தைகள் நலமாக உள்ளார்கள்… நன்றி தோழி…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jansi r says:

  Omg

error: Content is protected !!