Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-5

அத்தியாயம் 5

வீட்டிலோ திவ்யாவின் தந்தைக்கு தெரிய அவளிடம் பேச வேண்டும் என காத்திருந்தார். கோவிலை விட்டு வெளியில் வந்து கார் நோக்கி இருவரும் செல்கையில்  திவ்யாவின் தந்தை நண்பர் சந்தானம், இருவரையும் பார்த்த செய்தி கூற வீடே அமைதியில் ஆழ்ந்தது.

 

கார் கிளம்பி ஒரு இடத்தில் கார்த்திக் நிறுத்த, “திவ்யா ஏங்க இங்க நிறுத்தினிங்க” என்றாள்.

 

“திவ்யா நீ இன்னைக்கு என்ன கொல்ரடி, ப்ளிஸ் டி ஒரு கிஸ்டி” என்று வினவ, அவள் முகம் சிவந்தாள்.

 

அவள் மௌனமே சம்மதம் என தூது விட அவன் அவள் இதழ் நோக்கிக் குனிந்தான்.

 

நீண்ட நேரம் நீடித்த முத்தத்தால் அவளுக்கு மூச்சுமுட்ட, அவனிடமிருந்து விலகினாள். அவள் முகத்தை ஆராய்ந்த வண்ணம், அவன் கைகள் சற்று எல்லை மீற அவள் மயக்கத்திலிருந்து மீண்டாள்.

“மாமா இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்” என்று அவள் தடுக்க,தன் உணர்வை அடக்கிக் கொண்டு,பெருமூச்சு ஒன்றை வெளியில் விட்டு காரை எடுத்தான்.

 

போகும் போதே, “திவி லேட் பண்ணாதடி ப்ளிஸ் டி சிக்ரமா மேரேஜ் பண்ணிக்கலாம்… இப்படியே போச்சுன்னா ரொம்ப கஷ்டம் டி எனக்கு… இன்னைக்கு கண்ட்ரோல் பண்ணிட்டேன், பட் எப்பவும் இதே மாதிரி இருக்கமாட்டேன், வீட்டுல போய் பேசு… எங்க வீட்டுல ஓகே பட் உங்க வீட்டுல தான்…” என்று இழுத்தான்.

 

ஆம் கார்த்திக் திவ்யாவை காதலித்து ஒரு மாதம் இருக்கும் முன்பே சென்று அவன் வீட்டில் காட்ட எல்லோருக்கும் பிடிக்கவவே ஒப்புக்கொண்டனர்.

 

அனுயா சும்மாவே மேம் மேம் என்பாள்… இப்பவோ அண்ணி வேற நன்றாகவால் பிடித்துக்கொண்டு அலைந்தாள்.

 

கார்த்திக் அம்மா கௌரிக்கும் அப்பா சுந்தரத்திற்கும் மிகவும் பிடித்துப் போனது.தாங்கள் தேடினாலும் இப்படி பட்ட பெண் கிடைப்பாளா என்பது சந்தேகமே, என முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர்.

 

திவி தன் வருங்கால மாமனார் மாமியார் காலில் விழுந்து வணங்கினாள்.

 

கார்த்தி அவளை வீட்டில் விட்டுவிட்டு சென்றான். வீட்டில் நுழையும் போதே ஏதோ சரியில்லை  என நினைத்தாள். அவள் அம்மாவோ அழுதுக் கொண்டிருந்தார்,” அம்மா ஏன் அழரிங்க என்றாள்  திவ்யா.

 

“ஏம்மா இன்னைக்கு நீ எங்க போன?” என்றார் அப்பா. திவ்யா அதிர்ந்தாள்.

 

“உண்மையை சொல்லு” என்றார் அப்பா.

 

“ஆம் நான் கார்த்திக்கை காதலிக்கிறேன்…  அவங்க வீட்டுல ஓகே நம்ம வீட்டுலதான் ப்ளீஸ்பா ஓகே சொல்லுங்க” என்றாள்.

 

அவருக்கு  கோபம் தலைக்கேற விட்டுப்பிடிக்க வேண்டும் என எண்ணி “திவிம்மா நான் அந்த பையன்ட்ட பேசனும் அப்புறம் தான் என்னோட முடிவு” என்றார்.

 

திவ்யாவோ அலைபேசியில் அவனை தொடர்புக் கொண்டு பேசினாள். அவன் நாளை வருவதாக கூறினான்.

 

அடுத்த நாள் மாலைகார்த்திக் திவ்யா வீட்டிற்கு வந்தான். திவி அப்பாவிடம் தன்னை அறிமுகம்  செய்துக்கொண்டு, தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் தொழிலையும் கூறினான்.

அவன் செல்வ செழிப்பை பற்றி யோசித்த, அவள்  தந்தையின் முடிவு என்னவாக இருக்கும் என்று வியாழன் பார்ப்போம்…

ப்ரியசகி தொடரும்…..

 


Tags:


Comments are closed here.