Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-12

கார்த்திக்கின் குடும்பம் குலதெய்வ கோவிலுக்கு கிளம்பி சென்றனர்,குடும்பத்தில் மூத்த தலைவர் ஏவ இரண்டு பெண்கள் சமைக்க துணைக்கு வந்த நண்பர்கள் கூட்டம்  கார்த்திக்கை கேளி கிண்டல் செய்ய கண்கள் தன் மனயாளை தேட, அங்கு புடவையை மடித்து இடுப்பில் சோருக்கி வேர்த்து விறு விறுக்க தன் பணியை செய்ய, கௌரியிடம் சிரித்துக் கொண்டு பேசும் அழகை அவனுக்கு காண பொறாமை கொண்டான், அவன் கண்கள் சற்று கீழே இறங்கி அவள் மெல்லிடை அழகாக தெரிய அவன் அவள் அருகில் சென்றான்…

“மாமா என்ன பண்ரிங்க இது பொது இடம் மாமா 

என்ன எது பொது இடம், இது என்னோட இடம் “என்று அவள் இடுப்பை சுட்டிக்காட்டி வெளியே தெரிந்த அவள் இடை தெரியா வண்ணம் சேலையை இழுத்து விட்டான்… அவளோ அவன் செய்ததைப் பார்த்த பின்பு, சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வைத்தால்,”சிரிக்கிரியா ராட்சசி நைட் வச்சிக்குறேன் உனக்கு தண்டனை இருக்கு” என அவன் தண்டனைகள் தான் அறிந்தவை என்று முகம் சிவந்தாள்…

குல தெய்வத்திற்கு படைத்து விட்டு வீடு திரும்பினர்…. அவர்கள் அவர் அவர் அறைக்கு உறங்க சென்றனர்… திவ்யா தங்களின் அறைக்கு சென்றால் உடல் அலுப்பு தீர குளித்து முடித்தாள்,  பின்பு கார்த்திக் அவளுடன் சேர்ந்து குளித்து இரவு உடைக்கு மாறி இருவரும் உறங்க சென்றனர்… அவன் அவளை நாட, அவள் கலைப்பாக இருந்ததைக் கண்டு…

சரிடா தூங்கலாமா என்று அவளை தன் மார்பில் படுக்க வைத்துக் கதைப் பேச, அவளை சிறிது நேரத்தில் நித்ரா தேவி அவளை தழுவ, அவன் பேச அவளிடம் அசைவு இன்றிபோக அவளைக் கண்டான் அவள் நன்றாக உறங்கியிருப்பதைக் கண்டு, அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டு உறங்க முயன்றான்…

“குட்டிமா நான் ஆஃபீஸ் போகனும் ப்ளீஸ் கொஞ்சம் சீக்ரமா ரெடி பண்ணுடா” என்றான்…

“இதோ வந்துட்டன் மாமா, இந்தாங்க” என அவளை புன்னகையுடன் எதிர்க் கொண்டு அலுவலகம் சென்றான்… அவனை அனுப்பிவிட்டு அத்தை வேலை யெல்லாம் முடிஞ்சாட்சி என ” ஏம்மா எல்லா வேலையும் இழுத்துப் போட்டுன்டு செய்யுற, என்றார் அத்தை நான் ”  வேலைக்கு போற வரைக்கும் நான் கொஞ்சம் பிசியா இருக்கேன் அத்த, வேலைக்கு நெக்ஸ்ட் வீக்தான் ஜாய்ன் பண்ணனும், அத்த அவருக்கிட்ட நீங்க கொஞ்சம் சொல்றிங்களா, நான் பழையபடி வேலைக்கு போறேன்” என இறஞ்சினாள்…

சரி திவ்யா நான் “கார்த்திக் கிட்ட பேசுறேன், அவள் புன்னகையுடன் தன் தலையசைப்பை கொடுத்து விடைப்பெற்றாள், சுந்தரம் கௌரியிம் ” கௌரி ரிசப்ஷன் அடுத்த வாரம் வைக்கலாம்னு இருக்கேன் கௌரி பசங்க வரட்டும் ஈவ்னிங் பேசிக்கலாம் டைம் அவங்களுக்கு கன்வீனியன்ட்டா இருக்கானு கேட்டுக்களாம்” சரிங்க சாய்ந்தரம் பேசிக்கலாம் அனைவரும் உணவு அருந்திவிட்டு கோழி தூக்கம் போட சென்றனர்…

மாலை கார்த்திக் அலுவலகத்தில் இருந்து வரும் வேலை திவ்யா தன்னை அலங்காரம் செய்துக் கொண்டு அவன் வரவிற்காக காத்திருந்தாள், கார்த்திக்கின் மெர்சிடஸ் பென்ஸ் வரும் ஓசைக் கேட்டு  தன் பார்வையை திருப்பினாள் அவனுடன் அருகிள் உட்கார் திருந்த பெண்ணைக் கண்டாள்…

நெற்றியில் முடிச்சு விழ யோசிக்கும் முன் கார்த்திக் திவ்யாவை எதிர்க் கொண்டு தன் அலுவல் பையை நீட்டி தன் அம்மாவை அழைத்தான், அவர் வந்த வேலையில் அந்த பெண் அத்தை என்று அவளை கட்டிக் கொள்ள …

அங்கு நடக்கும் நிகழ்ச்சி என்ன என்பது புரியாமல் பார்க்க கார்த்திக்கு கௌரியும் திவ்யாவை எதிர் கொண்டனர்

“குட்டிமா இவ எங்க மாமா பொண்ணு, நான் சொல்வேன்’ல பாம்பேல தாராவில இருக்காங்கனு அவங்கதான்” என்றான்…

திவ்யா அவளை  நோக்கி கைகூப்பி வணக்கம் என்றாள் …

மையூரி முகத்தில் அருவருப்பு வர திவியைக் கண்டு முகம் சுளித்தாள், திவ்யாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட .

கௌரியும் திவிம்மா” இவ என் அண்ணன் பொண்ணு பேரு மையூரி இவளுக்கு ஒரு அண்ணன் இருக்கான், அவனும் பாம்பேல நமக்கு பிஸ்னஸ் இருக்குள்ள , அதுல பாதி ஷேர் அவந்தான் பாத்துக்குறான், அவன் பேரு ரோஷன் குமார், நெக்ஸ்ட் வீக் இங்க வரங்கா, உங்க ரிசப்ஷன்கு” என்றாள்…

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி
3 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Ohhhh pirachchanai mayuri uruvil aarampiththuvittatha ini kathai nalla pokum.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Ss exactly friend…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dhivya Bharathi says:

  Comments please friends…

error: Content is protected !!