கனல்விழி காதல் – 84
10276
47
அத்தியாயம் – 84
தேவ்ராஜின் பிடிவாதம் மாயாவின் மனதிற்கு உவப்பானதாக இல்லை. என்ன நடக்குமோ என்கிற பயத்துடன் மதுராவை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டிருந்தாள். பிரபாவதி அவளை வாக்கிங் போய்விட்டு வரலாம் என்று அழைத்தால் கூட மருத்துவமனைக்குத்தான் கிளம்புகிறார்களோ என்று பயந்து நடுங்கினாள். ஆனால் மதுரா வீட்டை விட்டு எங்கும் கிளம்பும் மனநிலையில் இல்லாதது அவளுக்கு சற்று அமைதியைக் கொடுத்தது. அந்த அமைதிக்கும் ஆயுட்காலம் ஐந்து நாட்கள் தான். ஆறாவது நாள்தான் அந்த பூகம்பம் வெடித்தது.
காலை எழுந்ததிலிருந்தே பிரபாவதி சுறுசுறுப்பாக இருந்தாள். மருத்துவமனைக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தாள் போலும். இறுகிய முகத்தோடு ஒரே இடத்தில் அமர்ந்திருந்த நரேந்திரமூர்த்தி மனைவியை அழைத்து, “மதுராகிட்ட பேசிட்டியா?” என்றார்.
“டெய்லி பேசிக்கிட்டுதானே இருக்கேன்… அவளுக்கு தெரியும்”
“இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போறோம்னு தெரியுமா?” – எறிந்துவிழுந்தார்.
நினைத்ததை நடத்தி முடிப்பதற்காக எதையும் செய்யலாம்… அடங்கிப் போவதானாலும் சரி… அதட்டி அடக்குவதானாலும் சரி… நேரத்திற்கு தகுந்தாற் போல் சூட்சமமாக நடந்துகொள்ள வேண்டியதுதான் என்கிற தெளிவோடு, “சொல்லிடறேன்…” என்று அடக்கி வாசித்துவிட்டு மகளைத் தேடி வந்தாள்.
வழக்கம் போல் மதுரா கட்டிலில் சுருண்டுக் கிடந்தாள். அவளை எழுப்பி அமரவைத்து, “இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகணும் மது. எழுந்து குளி” என்றாள்.
“ம்ம்ம்….” – கால்களை கட்டி கொண்டு அமர்ந்தவளுக்கு எழ வேண்டும் என்கிற எண்ணமே இல்லை.
“இன்னைக்கு எல்லாம் முடிஞ்சிடும். இன்னையோட அவனை தலை முழுகிட்டு எப்பவும் போல சந்தோஷமா… கலகலப்பா இருக்க ட்ரை பண்ணு” – அவள் பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
“என்ன மது…? எழுந்து போயி குளி…” – பிரபாவதி தூண்டினாள். மதுரா மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள்.
“மது… எந்திரிடா… டைம் ஆச்சு பாரு… பத்து மணிக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் இருக்குல்ல…” – மதுரா புரண்டுப் படுத்து தாயை பார்த்தாள்.
“இன்னைக்கு கிளீயர் பண்ணியாகணும்” – தாய் என்ன சொல்கிறாள் என்பது மதுராவுக்கு நன்றாகவே புரிந்தது. அவளுடைய பார்வையில் ஒரு தீவிரம் வந்தது. தன் வயிற்றை தொட்டுத் தழுவி உள்ளே இருக்கும் உயிரை உணர்ந்தாள்.
“ஐ வாண்ட் திஸ்…” – மூன்றே வார்த்தைகள்… எளிமையான வார்த்தைகள்… அந்த நேரத்தில் பிரபாவதியின் மூச்சையே நிறுத்திவிடும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக மாறியது.
“என்னடி சொல்ற?” – இடிவிழுந்தது போல் அதிர்ந்துபோனவளின் விழிகள் தெறித்தன.
“ஐ வாண்ட் மை பேபி…” – மீண்டும் தெளிவாகக் கூறிவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.
“மது… பைத்தியம் மாதிரி பேசாத. எந்திரி முதல்ல” – மகளை அதட்டி உலுக்கி எழுப்பி அமரவைத்தாள். தாயின் பதட்டம் மதுராவின் சிந்தனையை தூண்டியது.
“வாட்ஸ் ராங்?” – அலுப்புடன் கேட்டாள்.
“எல்லாமே தப்பாதான் இருக்கு. உனக்கு இந்த குழந்தை வேண்டாம்…”
“எனக்கு வேணும்” – மதுராவின் குரலில் அழுத்தம் கூடியது.
“வேணுன்னு இப்ப சொன்னா எப்படி? ஒரு வாரமா மாத்திரை சாப்பிட்டு இருக்க. ஏதாவது ஊனம் கீனமா பிறந்து தொலைச்சுச்சுன்னா என்ன செய்வ? பேசாம ஹாஸ்ப்பிட்டலுக்கு கிளம்பு” – கோபத்துடன் அதட்டினாள்.
“மாத்திரையா! ஊனமா…! என்ன மாத்திரை? என்ன ஊனம்?” – புரிந்தும் புரியாத நிலையில் அவள் முகம் வெளிறி உடல் நடுங்கியது.
மகள் வயிற்றிலிருக்கும் குழந்தையின் மீது எந்த பற்றும் இல்லாமல், “உன் வயித்துல இருக்கறதை சிதைக்கறதுக்கு ஒரு வாரமா நீ மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு இருக்க” என்றாள்.
“நோ….” – உச்சஸ்தாதியில் அலறினாள் மதுரா. “இது உண்மை இல்ல… நா நம்ப மாட்டேன்… நம்…ப மாட்…டேன்…” – கடுங்கோபத்துடன் கத்தினாள்.
அவளுடைய திடீர் மனநிலை மாற்றத்தில் சற்று அதிர்ந்தாலும் சமாளித்துக் கொண்டு மகளை அணைத்துப் பிடித்து, “பாரு மது… எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகற… ஒண்ணும் இல்ல… ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…” என்று அவளை அமைதிப் படுத்திவிட்டு, “பாதி கிணறு தாண்டிட்டோம். இப்போ முடியாதுன்னு சொன்னா எப்படி?” என்றாள்.
“இல்லம்மா… நா எந்த மாத்திரையும் சாப்பிடல. என் குழந்தைக்கு ஒண்ணும் இல்ல…” – கண்களில் கண்ணீர் பெறுக பரிதாபமாக கூறினாள்.
“நான்தானேடா கொடுத்தேன். எனக்குத் தெரியாதா… அம்மா உன் நல்லதுக்…” – “ச்சீ…” – தாயை உதறிவிட்டுஎழுந்து ஒதுங்கி நின்றாள். முகத்தில் அருவருப்புடன் கூடிய வெறுப்பு படர்ந்தது.
“தேவையில்லாம ரியாக்ட் பண்ணுற நீ… ஜஸ்ட் டென் மினிட்ஸ்… எல்லாத்தையும் டாக்டர் பார்த்துப்பாங்க… உன் லைஃபுக்கு இதுதான்…” – “ஏன்? ஏன் இப்படி செஞ்ச?” – பாய்ந்துச் சென்று அவள் தோளை பிடித்து உலுக்கினாள். வெறிபிடித்து போல் ஆக்ரோஷமாக மாறினாள்.
“மது…! நா சொல்றத கொஞ்சம்…” – “எங்குழந்தையை கொலை செஞ்சுட்டியா! யூ ப்ளடி கில்லர்… ஹௌ டிட் யூ டூ திஸ்…! ஹௌ… டிட்… யூ….!!! உன்ன கொல்ல போறேன்… கொல்ல போ…றே…ன்… ஆஆஆஆ… மை பே…பி….” – வெறி பிடித்தவள் போல் அவளை பிடித்து உலுக்கி, பின்னால் தள்ளிவிட்டு தரையில் சரிந்து மண்டியிட்டு கத்தினாள்… கதறினாள்… கண்ணீர்விட்டாள்.
அவள் போட்ட சத்தத்தில் வீடே அதிர்ந்தது. அரண்டு போன நரேந்திரமூர்த்தி “என்…ன ஆ….ச்சு?” என்றபடி தடதடப்புடன் மகளுடைய அறைக்கு ஓடிவந்தார். நொடி பொழுதில் அங்கே குழுமிவிட்ட துருவன், திலீப், மாயா மற்றும் தேஜா அனைவரும், ஹிஸ்டீரியா பேஷண்ட் போல் கத்திக் கொண்டிருக்கும் மதுராவைக் கண்டு அதிர்ந்தார்கள். யாருக்கும் எதுவும் புரியவில்லை.
மகள் தள்ளிவிட்ட வேகத்தில் நிலை தடுமாறிப்போய் கட்டிலில் விழுந்த பிரபாவதி அவளுடைய ஆக்ரோஷத்தைக் கண்டு திகைத்து திக்பிரம்மை பிடித்தது போல் விழுந்த இடத்திலேயே கிடந்தாள். நடப்பது எதையும் அவளால் நம்பவே முடியவில்லை. மதுராவின் வார்த்தை வன்மையும் ஒருமை விளிப்பும் நிஜமென்று நினைக்கக் கூட முடியவில்லை.
“மது…!” – நரேந்திரமூர்த்தி மகளை நெருங்க முயன்றார். “நோ….” – சுட்டுவிரல் நீட்டி கத்தினாள். “கிட்ட வராத… என்கிட்ட வராத…” – வெறுப்புடன் தூர விலகினாள்.
“மது!!!” – நம்பமுடியாத ஆச்சர்யத்துடன் மகளை பார்த்தார்.
‘மது… மது…’ என்று அவர் அழைத்தாலும் அவர் எதிரிலிருந்து கூச்சல் போடுவது அவருடைய அன்பு மகள் மதுராவே அல்ல என்று தோன்றியது அவருக்கு. மதுரா எப்படி இப்படியெல்லாம் பேசுவாள்! பயம்… பதட்டம்… படபடப்பு எல்லாம் சேர்த்துக் கொண்டு அவருடைய இரத்த அழுத்தத்தை எக்குத்தப்பாக உயர்த்தியது.
“மதும்மா…” “மது…” – “நா சொல்றதை கேளு…” – “கொஞ்சம் அமைதியா இரு…” – துருவனும் திலீப்பும் தங்கையை சமாதானம் செய்ய முயன்று அவளை நெருங்கினார்கள். அவ்வளவுதான்… பெரும் பேய் ஒன்று பிடித்துக் கொண்டது போல் ஆட்டமாய் ஆடினாள்.
“கோ அவே… கிட்ட வராதீங்க… ஆல் ப்ளடி கில்லர்ஸ்… டோண்ட் கம் நியர் மீ… கோ அவே… கோ…” – காட்டுக்கத்தாக கத்தியபடி கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி அடித்தாள். மேஜையில், அலமாரியில் இருந்த பொருட்களையெல்லாம் உருட்டிவிட்டாள். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த சித்திரங்களையெல்லாம் போட்டு உடைத்து ரகளை செய்தாள். தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டாள். காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு பெருகுவது போல் கட்டுடைந்த அவளுடைய உணர்வுகளைக் கண்டு அங்கிருந்த மொத்தபேரும் விக்கித்துப்போனார்கள். அவளை சமாதானம் செய்யும் வழியறியாது செயலற்று நின்றார்கள். கண்முன் நடந்து கொண்டிருக்கும் கலவரத்தைக் கண்டு உறைந்து போன மாயாவிற்கு இன்னமும் கூட விஷயத்தை முழுதாக புரிந்துக்கொள்ள முடியவில்லை.
‘அபார்ஷன் வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்வதுதானே! எதற்காக இப்படி கத்துகிறாள்!’ – குழம்பி நின்றாள். அவளுடைய குழப்பத்திற்கு விடைகொடுத்தார் நரேந்திரமூர்த்தி.
“எத்தனை தரம் சொன்னேன். கேட்டியா? அவகிட்ட சொல்லாம எந்த கருமத்தையும் கொடுக்காத கொடுக்காதேன்னு சொன்னேன்… இப்ப என்ன செய்ய போற?” – மனைவியிடம் சீறினார். பதில் சொல்ல முடியாமல் கலங்கி நின்றாள் பிரபாவதி. கத்திக்கத்தி தொண்டை வறண்டு… உடம்பிலுள்ள சக்தியெல்லாம் வடிந்து… தளர்ந்து மயங்கி தரையில் சரிந்தாள் மதுரா.
“மதூ….!!!” – பாய்ந்து ஓடி தங்கையை தங்கினார்கள் சகோதரர்கள். அனைவரும் பதட்டத்துடன் அவளை நெருங்கினார்கள். பழந்துணிபோல் தரையில் துவண்டுக் கிடந்த தங்கையை தூக்கி மெத்தையில் கிடத்தினான் துருவன். அவளை அந்த நிலையில் பார்க்க சகிக்காமல் அவன் மனம் வேதனையில் துவண்டது. திலீப்பின் உள்ளம் உறுமியது. யார் மீது பாய்வது என்று புரியாமல், “என்னம்மா பண்ணி தோலைச்சீங்க? ஏன் இப்படி நடந்துக்கறா?” என்று தாயிடம் பாய்ந்தான்.
கொலை வெறியோடு நரேந்திரமூர்த்தி மனைவியை முறைத்துப் பார்க்க, அவருடைய பார்வையை புறக்கணித்துவிட்டு, “தேஜா, டாக்டருக்கு போன் பண்ணு” என்று அடுத்த செயலில் இறங்கினாள்பிரபாவதி.
“டாடி… என்ன நடக்குது இங்க?” – திலீப்பின் கேள்விக்கணை தந்தையை நோக்கி பாய்ந்தது. அவர் அனைத்தையும் புட்டுப்புட்டு வைத்தார்.
“வாட்ஸ் ராங் வித் யூ ம்மா… அவகிட்ட கேட்காம நீங்களா ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தீங்க? இதுமட்டும் அவனுக்கு தெரிஞ்சா…” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் சட்டென்று நிறுத்திவிட்டு மாயாவைப் பார்த்தான். கையில் சூலம் மட்டும்தான் இல்லை. காளி அவதாரம் எடுத்தவள் போல் அக்கினிப் பிழம்பாக நின்றுக் கொண்டிருந்தாள். அவளுடைய சுட்டெரிக்கும் பார்வை பிரபாவதியை பொசுக்கியது.
திலீப்பை தொடர்ந்து அனைவருடைய பார்வையும் மாயாவின் பக்கம் திரும்பியது. திலீப் துருவனைப் பார்த்தான். கண்களால் கெஞ்சினான். அவளை சமாளிக்கும்படி தம்பி கூறுவது அண்ணனுக்கு புரியத்தான் செய்தது. சில நாட்களுக்கு முன்பு இதே பிரச்னையை அவள் அவனிடம் கொண்டுவந்த போது பட்டுக்கத்தரித்தது போல் பேசி துண்டித்துவிட்டவன் இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் இதைப் பற்றி பேசுவான்! ஆனால் பேசாமலும் இருக்க முடியாது.
“மாயா… இட்ஸ்… இட்ஸ் கோயிங் டு பி ஆல்ரைட்… ரிலாக்ஸ் ஓகே… ரிலாக்ஸ்… எனக்கும் இப்பதான்… ஓகே… தெரியாம நடந்துடிச்சு… சரியாயிடும்…” – என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறி கொட்டினான்.
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் கையிலிருந்த அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள்… ‘தேவ்ராஜ்…’ – ‘சொல்லிவிடுவாளோ! – அனைவரும் அவளை டென்ஷனோடு பார்த்துக் கொண்டிருக்க, அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ…”
“……………..” – மாயாவிற்கு பேச்சு வரவில்லை.
“ஹலோ… மாயா…” – தேவ்ராஜின் குரல் அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
“என்ன ஆச்சு? எனிதிங் ராங்? ஆர் யு ஆல்ரைட்?”
“………………………….”
“மது எப்படி இருக்கா? மாயா… என்ன ஆச்சு மதுக்கு…?” – அவன் குரலில் பதட்டம் தெரிந்தது. “ஹேய்… வாயத் தெறந்து பேசு… மாயா… இஸ் ஷி ஓகே?” – கத்தினான்.
“நோ… நல்லா இல்ல… மதுரா இங்க நல்லா இல்ல… உங்க குழந்தையும் நல்லா இல்ல… அபார்ஷன் பண்ணறதுக்கான மாத்திரையை ஒரு வாரமா சாப்பிட்டுட்டு இருந்திருக்கா… அவளுக்கே தெரியாம… என்ன செய்ய போறீங்க? அவளோட முடிவை தெரிஞ்சுக்க ஆசைபட்டிங்களே… இதுதான் அவளோட முடிவு… அவளுக்கே தெரியாத முடிவு.. போதுமா… இன்னும் ஏதாவது தெரியனுமா?”- உடைந்து போய் அனைத்தையும் அனைவருக்கும் முன்பாகவே கொட்டினாள்.
அந்த பக்கத்திலிருந்து ஓரிரு நிமிடங்கள் எந்த சத்தமும் வரவில்லை… பிறகு, “இஸ் ஷி ஓகே?” – மீண்டும் அந்த கேள்வியை கேட்டான். குரல் உடைந்து கரகரத்தது.
“இருக்கா… பைத்தியக்காரி மாதிரி கத்திக்கத்தி மயங்கிக்கிடக்கறா…” – தமையனுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நினைத்ததாலோ என்னவோ வெகு தீவிரமாய் அனைவரையும் எதிர்க்க துணிந்துவிட்டாள் மாயா.
47 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
இன்னிக்கு கண்டிப்பா அப்டேட் போட்டுடுங்க
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
இன்றைய அத்தியாயம் இன்னும் முடிக்கவில்லை. எழுதிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. காத்திருக்க வேண்டாம் தோழிகளே… முடிந்த அளவு விரைவாக பதிவிட முயற்சிக்கிறேன். நன்றி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
adutha ep eppo varum
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
innikku varum Pavithra…. but time solla mudiyaadhu…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ok nithya mam. this story is really touching to my heart. unga writingla feelins, love,emotion ellamae iruku. vallkaila nadukura mathiri etharthama iruku.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
😭😭😭😭😭 akka semma episode super
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நன்றி திவ்யா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
சூப்பர்ப். ..உங்க ரைடிங் ஸ்டைலை பாராட்ட இந்த எபி படிச்சா போதும் நித்யா😎
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
மனதிற்கு இதமான வார்த்தைகள்… நன்றி உமா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
sad ud

நன்றி தோழி…

best episode…!☺️👍👌

Hi mam
அம்மா பாசமும் தேவ் மேலுள்ள வெறுப்பும் பிரபாவதிக்கு கண்ணை மறைத்துவிட்டது,அதே அம்மா பாசம் மதுராவுக்கும் இருக்கும்தானே.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நிச்சயம் இருக்கும்… நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Wow…. story is going really good
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you so much Nithya Karthik… 🙂
I’m Nithya Karthigan… you are Nithya Karthik… Nice…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
பிரபாவதி ஆணவத்துக்கு சரியான பதிலடி. இனிமேல் மகள் அவளிடம் சரியாய் பேசுவாளா என்ன?
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
கதையோட்டத்தில் தெரியும் தோழி… பின்னூட்டத்திற்கு நன்றி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
pls babya abort panidathiga.awaga lifeku anda baby mukiyam
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
இப்போவாச்சும் தேவ் வருவானா?
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
வருவான் க்கா… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
hai nitya,
anal adikuthu……………….
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hey prabha manasu onnu irukka unakku Enna kaariyaam pannita ORU vaarthai ore vaarthai madhu kitta keturkkalam
Dev Enna PANNA pora ippo
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
மருத்துவர்கக்கிட்ட கூட்டிட்டு போறப்ப மதுக்கிட்ட கேட்ட பிரபாவதி மாத்திரை கொடுக்கும் போது கேக்க வேண்டியதானே இதனால மது உயிருக்கும் ஆபத்து வரலாமுனு தெரியாத எல்லாம் பிரபாவதியின் சுயநலம்
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
மருத்துவர்கிட்ட போகலாமான்னு கேட்கலை…போகணும் கிளம்புன்னு தான் சொல்லறா… தான் செய்வதெல்லாம் மகளின் நன்மைக்குத்தான் என்பது அவளுடைய எண்ணம். அதை மகள் மறுக்க மாட்டாள் என்பது நம்பிக்கை…
பின்னூட்டத்திற்கு நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Suspense la heart attack vandhurumnu pola mam…… Mudiyala….. Even if it is a story baby is an emotion don’t kill it mam…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
பின்னூட்டத்திற்கு நன்றி தோழி… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
No i hate these type of momos
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
பின்னூட்டத்திற்கு நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ithanai prachanaikum kaaranam prabha avanga than.. Dev kitta arambichathu avan kozhanthaikum athey nilai.. Save them..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
பின்னூட்டத்திற்கு நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
மது 😭😭😭தேவ் இரண்டுபேரும் பாவம்
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
பின்னூட்டத்திற்கு நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
குழந்தைக்கு என்ன ஆச்சு?? பிரபாவதயால் தான் எல்லாம்
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
பின்னூட்டத்திற்கு நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Wow its goosepimples moment fr sis…i lik madhu reaction…avala suthi ena nadakuthunu theriyathapa avalule theriyama intha prabavathy senja velaiku ipa madhu kasta padura pavam enacho…Dev ini ena seiya poran…maya ipathan crkta decision eduthruka
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
கதையின் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தீர்கள் என்பதில் நான் மகிழ்கிறேன் தோழி. பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Very interesting , please save the baby
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
பிரபா சுயநலம்…சுயரூபம் வெளியே வருதோ…
பக்கி பொண்டாட்டி வாயால தெரிஞ்சுக்கணும் என்று நீ பணயம் வைத்தது உன் வாரிசை…முட்டாள், மூடன், மூர்க்கம்…போடாங் ….
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நன்றி பொன்ஸ் அக்கா..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
குழந்தைக்கு எதுவும் ஆகி இருக்க கூடாது….please…திக் திக்னு இருக்கு…

நன்றி ஹத்தி…