Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-15

கார்த்திக்கும் திவ்யாவும் காரில் பயணம் செய்ய இருவரிடமும் பேச்சின்றிப் போக அவன் அவள் முகத்தினைப் பார்க்க அவளோ பாதையில் பார்வை பதிக்க, இருவரும் வீட்டிற்கு வந்தனர், வீட்டிற்கு வந்த பின்பும் திவ்யாவின் மௌனம் தொடர்ந்தது அன்று மட்டும் மில்லை, அவள் கல்லூரிக்கு  வேலைக்கு சென்ற பின்பும் தொடர்ந்தது அவள் கார்த்திக் முகத்தைப் பார்த்து இன்றுடன் ஒரு வாரம் சென்றிருக்க.

அன்று கார்த்தி ஆபிஸ் முடிந்து மாலை சீக்கிரம் வர அவர்கள் அறையில் திவ்யா இல்லாததைக் கண்டு தேட, அவன் தன் அன்னையிடம் கேட்க ” இல்லபா காலேஜ்கு தான் போனா இன்னும் வரலையே” என அவன் அவள் எண்ணிற்கு அழைக்க அவளோ தன் அலைபேசியை சைலன்டில், போட்டு விட்டு முருகன் சன்னதியில் தன் மனம் முழுவதும் குழப்பங்கள் ஆழ்ந்திருக்க மனம் உருக கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் வேலையில், கோவில் வாயிலில் கார் வந்து நின்றதையோ தன் கணவன் வந்ததையோ அறியாமல் கண்கலங்கி இறைவனை வேண்டினாள் மூடியிருக்கும் இமைகள் நடுவே கண்ணீர் வழிந்துக் கொண்டிருக்க” கடவுளே என்னையும் என் மாமா வையும் எந்த நேரத்திலையும் சோதிக்காத” என்று தன் மனதில் உள்ள பாரத்தை இறைவனிடம் இறக்கி வைத்தால்…

கார்த்திக்கின் மனம் ஏதோ செய்ய அவனும் இறைவனை வேண்டிக் கொண்டு, திவி என்றான் திவி என்ற ஒற்றைச் சொல்லோடு கண்கள் தாமாக திறக்க அவனை எதிர்க் கொள்ள முடியாமல் திரும்பி நிற்க அவனின் மனம் அவனுக்கு புரியால் இல்லை ஆனால் அவளின் பாரா முகம் அவனும் கோபம் வரவைக்க, “வா வீட்டுக்கு போலாம்” என சிறு தலையசப்புடன் அவனுடம் சென்றாள்…

மாறுநாள் ரிசப்ஷன் “கிரே” கலர் கோர்ட் கைமணிக் கட்டில் டைமண்ட் பதித்த ரோலக்ஸ் வாட்ச் கழுத்தில்  செய்யின் வலது கையில் பிளாட்டினம் பிரேஸ்லட் காலில் “லுஃபர் ஷ்யூ” என்று தன் ஆறடி உயரத்திற்க்கு  சற்று குறையால் அவன் அணிந்திருந்த வண்ணம் அவன் ஆண்மைக்கே உரிய கம்பீரத்தில் அவன்  பேரழகனாக தோற்றினான் அவன் தன்னை தயார் செய்துக் கொண்ட பின்பு திவ்யாவை தேடினான் , அவளைக் கண்டு தன் பார்வையை வேறு ஏங்கும் திரும்மாமல் அவள் அழகிள் அவன் மயங்கி நிற்க அதே  கிரேக் கலர் கற்கள் பதித்த விலை உயர்ந்த சில்க் ஷிப்பான் புடவை அவள் நிரத்தை அழகாக காட்ட எளிமையாக அலங்காரம் செய்யப் பட்டிருந்தாலும் இன்று அவன் கண்களுக்கு மிக அழகாக தெரிந்தால் ஆம் சும்மா பார்த்தால் சுமாறாக இருக்கும் கண்கள்  தன் காதல் முழுவதையும் தன்னையும் அவள் மனதில் சுமந்திருந்தவளை காணுகையில் அவள் அவன் கண்களுக்கு தேவதையாக காட்சியளித்தால்…

அங்கே அவள் நிலமையோ பறிதாபம் மிட்டாய் கடையை பார்ப்பதுப் போல் வாயை பிளந்துக் கொண்டு பார்த்துவைத்தாள் அவன் அவள் தோலை தொட்ட பின்பே தன் சுயநினைவிற்கு வந்தாள் அவனோ ” என்ன குட்டிமா நான் சூப்பரா இருக்கேனா உன்னோட அளவுக்கு இல்லனாலும் ஒகேதான ” கூற அவள் பதில் பேசாமல் இருக்க அவளை தன் புறம் வலுக்கட்டாயமாக இழுத்து இப்போ என்ன ஆச்சினு இப்படி என்கிட்ட பேசி இதோட ஒன் வீக் ஆகபோது நான் இறங்கி வந்தாலும் நீ இறங்கி வரமாட்டல” என்று கோபமாக பேசி அறைவிட்டு வெளியேறினான்…

கௌரி திவ்யாவை அழைத்துச் செல்ல உள்ளே வரும் வேலையில் அவள் அழுதுக்கொண்டிருப்பதை பார்த்தார் ‘திவிம்மா என்னாச்சி என்று அருகிள் வர ஒன்றும் மில்லை அத்த என்று தன் கண்ணீரை மறைக்க அவரோ “பொய் சொல்ற” என்று அவளை அருகில் அழைக்க அவளோ தன் மனகுமறலை யாரிடம் கொட்டமுடியாமல் கௌரியின் தோலில் சாய்ந்து அழுதாள் “திவிம்மா நானும் ஒருவாரமா உன்ன பாக்குறன் நீ நியா இல்ல என்னம்மா ஆச்சி” என ” அத்தை நான் வந்து சொல்றேன்” என்றாள்…

அவரோ ஏதோ சொல்லமுடியாத பிரச்சனையோ என்று அதற்கு மேல் அவளிடம் எதும் கேட்கால் சரிமா கிளம்பலாமா என்று அவளை அழைத்துக் கொண்டு மண்டபத்திற்கு சென்றனர்…

அங்கோ திவ்யாவின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை…

நன்றி தோழமைளே 

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி

 

 
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Ennappa ippati panringappa kuttiya potutinga😂 but very nice